Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓரு போராளியின் ஆக்கம்

Featured Replies

ஓரு போராளியின் ஆக்கம்

அன்றும் வழமைபோல் அதிகாலை 5.00 மணி. தனது சகாக்களை எல்லோரையும் தனது வழமையான எழுந்து வாடா தம்பி இந்த நாடு இருக்குது உன்னை நம்பிஇ நீ எழுந்தால் விலங்கு தெறிக்கும் எங்கள் தமிழினம் நிமிர்ந்து நடக்கும் என்ற பாடலுடன் துயிலெமுப்பிக் கொண்டிருந்தான். பாடலைக் கேட்டு அனைவரும துள்ளியெழுந்து; காலைக்கடனை முடித்துக் கொண்டு அவசரம் அவசரமாக புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தனர். இடையில் போராளி இனியவன் பொறுப்பாளரிடம் வந்து அண்ணே என்ர இடத்தில கிராமப் படைக்கான பயிற்ச்சிக்கு எல்லோரும் ஒத்துழைத்திருக்கிறார்கள்.; இண்டைக்கு நீங்கள் ஒருக்கா வரவேணும் அவர்களோடு கதைக்க வேண்டும.; எனக்கு ஒரு சின்னப் பிரச்சினை ஒன்று. எப்படிச் சமாளிப்பதென்று தெரியவில்லை. அதுதான் நீங்கள் கட்டாயம் வரவேண்டும் என்று தயங்கித்தயங்கி; கேட்டான். சின்னப்பிரச்சனையோ அது என்ன பிரச்சனை? இல்லையண்ணே கிராமப்படை பயிற்;ச்சி எல்லாம் நிறைவாக முடித்தாச்சு. கிராமப்படைக்கான பயிற்சி முடித்தவர்களில் ஆண்களை மட்டும் எல்லைப்படைக்கு எடுக்கினம். பெண்களை ஏன் எடுக்கிறியள் இல்லை என்று சில அம்மாக்கள் ஒரே சண்டையாக்கிடக்கு ஓ இதுவா பிரச்சனை. இதுக்கு நான் ஏன்தம்பி நீதான் சமாளிக்க வேண்டும். அம்மாக்களுக்குச் சொல்லு கட்டாயம் எடுப்பம் என்று. தேவை ஏற்பட்டால் எல்லோரும் துவக்குத் து}க்கத்தானே வேண்டும். இண்டைக்கு நான் வரமுடியாதடா தம்பி. உமக்குத் தெரியும தானேஇ; இன்று புதன்கிழமை வழமையாக எமது செயலகத்தில் மக்கள் சந்திப்பு. து}ர இடங்களிலிருந்து எல்லாம் மக்கள் வருவினம். எனவே இன்று நான் எப்படி அப்பன் வாறது. மீன்குஞ்சுக்கு நானா நீந்தக் கற்றுக்கொடுக்கிறது சிரித்தபடியே விடை பெற்றுச்சென்றான் இனியவன். வேகமாக காலைககடன் முடித்துக்கொண்டு மக்களைச் சந்திக்க தயாராகினான் பொறுப்பாளன். ஒருவர் இருவர், மூவர் என்று மக்களைச் சந்திக்கும் கொட்டலாக நிறைந்து கொண்டிரந்தது. வரதன் அம்மக்களுக்கு hP கொடுத்தாச்சோ. வந்து கொண்டிருக்கினம். ஒருத்தரும் தவறக்கூடாது ஓம் அண்ணா பிரச்சனை இல்லை என்றபடி நீங்கள் hP எடுக்கேல்லை என்றவனைப் பார்த்து ஓம் எடுக்கிறன் என்றவன் hPயைக் கையில் எடுத்தபடி மக்களிடம் சென்றான்;. எல்லா அம்மாக்களும் எழுந்து வாங்கோ தம்பி வாங்கோ என்றபடி வரவேற்றனர். இருங்கோ அம்மாக்கள் இருங்கோ இதென்ன பழக்கம் எங்களைக் கண்டிட்டு நீங்கள் எழும்பக்கூடாது. ஏன் என்றால் நீங்கள் தான் இங்கே பெரியாக்கள் தேச விடுதலைக்காக போராளிகளாக, மாவீரர்களாக் பிள்ளைகளைக் கொடுத்த உன்னதமானவர்கள் யாரைக்கண்டு யார் எழும்புவது என்று எண்ணிய படியே இருங்கோ இருங்கோ

ஒவ்வொருவருக்கும் மிக அருகில் சென்று ஏனம்மா உங்களுக்கு என்ன பிரச்சனை? ஒரு அம்மா தம்பி என்ரை மூன்றாவது வெளிக்கிட்டு இன்றைக்கு மூன்று வருசமடா எங்கே நிற்கிறான். எப்படி நிக்கிறானேர். இப்ப எல்லாப்பக்கமும் வெடிகேக்குது ஒரு நாள் கூட லீவிலையும் வரலே; அதுதான்ரா தம்பி சும்மா இருந்து யோசிச்சு விசராய்க்கிடக்குது. இவரும் எல்லைப்படைக்குப் போய் ஒன்பது நாளாய்ப்போச்சு. உன்னட்டை வந்தால் கொஞ்சம் ஆறுதலாய் இருக்கும் என்று அம்மா கூறி முடிக்க பக்கத்தில் இருந்த இன்னொரு அம்மா ஏற்கனவே ஒருத்தன் மாவீரனாப் போயிட்டான் நேற்று மற்றவனும் போட்டான் இனி எங்களைப் பார்க்க என்று யார் இருக்கினம் அடுத்தவ தம்பி வீரச்சாவு அடைந்து ஒருவருசமடா. சனிக்கிழமை திதி. உன்னோட நிற்கிற எல்லாரையும் அனுப்பு. நீயும் கட்டாயம் ஒரு இடையிலே வந்திட்டுப்போ இப்படியாக ஒவ்வொரு அம்மாக்களும் ஒவ்வொரு விடயமாக சொல்லிக் கொண்டு இருக்கும் போது இடையிலே எட் தம்பி; எங்கள் இடத்திற்கு இண்டைக்கு நீ வருவாய் என்று உவன் தம்பி இனியவன் சொன்னவன.; நீ வரவே இல்லை அதுதான் உன்னட்ட ஒரு முக்கியமான அலுவல் கதைக்க வந்தனான் அப்ப அம்மா தருமபுரமே இருக்கிறியள் ஓமடாதம்பி தருமபுரத்தில மாலிகா குடியருப்பிலே இருக்கிறனான்.

அதுசரி அது என்னண்டு உனக்குத் தெரியும். இல்லை அம்மா காலையில் தான் தம்பி இனியவன்; கதைத்தவன சொல்லிமுடிக்க முன் அம்மா தொடங்கினாள். நான் கேட்கிறன் தலைவர் இன்டைக்கு வீட்டில அகப்பை பிடித்துக் கொண்டு கிளிப்பிள்ளைகளாக் இருந்த எங்கட பொம்பிளைப் பிள்ளைகளை எல்லாம் புலிப்;பிள்ளைகளாக்கி, அவனைக்கண்டிட்டு தலைவிரி கோலமாக ஓடின எங்கட பிள்ளைகளை விடுதலைப்புலி பெண்களாக்கி உலகம் மூக்கில் விரல வைக்கிற மாதிரி தன்மானத்தோட தலை நிமிர்ந்து நிக்கேக்க நீங்கள் எங்களை ஏன் எல்லைக்கு அனுப்பக்கூடாது. ஏன் நாங்கள் உவங்களச் சுடமாட்டமே, நாங்கள் சுட்டால் துவக்குச் சுடாதோ இல்லைக் கேட்கிறன். நாங்களும் போக வேண்டும் தனிய ஆம்பிளையள் மட்டுமில்லை எல்லைப்படைக்கு பொம்பிளைகளும் போக வேணும் ஓயாமல் அம்மா ஒரு முழக்கம் முழங்கி ஓய்ந்தாள். சிரித்தபடி சுடமாட்டியள் என்று யார் சொன்னது. கட்டாயம் சந்தர்ப்பம் வரும் போகலாம். நான் அனுப்புவன் என்று அம்மாவைச் சமாதானப்படுத்தவும் அம்மாவின் கண்கள் கண்ணீரால் நிரம்ப உதடுகள் பதபதத்தபடி மெல்லிய விம்மலோடு தொடர்ந்து பேசினாள். தம்பி நான் தெய்வானை. என்ற புரிசன் சிவராசா எனக்கு ஒரே ஒரு மகனடா அவனுக்கு சிவகுமார் பெயரடா 9 வயது. நாங்கள் பரந்தன் குமரபுரத்தில இருந்தனாங்கள் உந்தக் கொல்லையில போவான்;கள் ஆனையிறவில் இருந்து அடிக்கிற செல்மழைக்க எல்லாம் தப்பித்தப்பி வீட்டை விட்டிட்டு வெளிக்கிடுறதே இல்லை என்று வீPட்டோட இருந்தம.; இவர் சரியான பயந்த மனுசன் உவங்களின்ர செல் ஒரு நாளைக்கு எங்கட முத்தத்தில விழேக்க தான் உனக்குப் புத்திவரும் அதுக்கு முன்ன நீ வரமாட்டாய் என்று என்னைப்; பேசுவர். நான் அவரை ஆறுதல்படுத்துவன். எங்கட அம்மாக்களை எல்லாம் முந்தி மலையகத்தில் இருந்தவை அங்கே நடத்த சிங்களக் கலவரத்தில் சிங்கள காடையர்களால் அடித்து விரட்டப்பட்டுத்தான் இங்க வந்தவை. இங்கேவந்தும் இன்னும் எங்களுக்கு என்று ஒரு காணி இல்லை யாழ்ப்பாணத்து துரைஐயாவின்ர காணி ஒன்றிலைதான் நாங்கள் ஒருவீடு கட்டி இருந்தனாங்கள். ஆனையிறவு ஆமி அங்கேயும் ராணுவ நடவடிக்கை என்று வெளிக்கிட்டான் தம்பி உடுத்த உடுப்போட ஒன்டுமே எடுக்கேல கால்போன போக்கில ஓடிவந்தம் இப்ப மாலிகா குடியிருப்பில எங்கட பிள்ளையள் (இயக்கம்) காலேக்கர் காணி தந்து அதில உந்த தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தைக் கொண்டு ஒரு ஓலைக் குடிசையும் போட்டுத் தந்திருக்குது.

இனியாவது நாங்கள் நின்மதியாய் இருக்கலாமோ என்டால் அவன் இஞ்சையும் வரமாட்டான் என்று சொல்ல என்ன உத்தரவாதமிருக்கு அந்த மனிசனும் என்ன செய்யுறது எந்தப் பக்கப் பிரச்சனை என்று பார்க்கிறது நாங்கள் என்டாலும் ஒன்றாய் நின்று அந்த மனிசன்ரை கையைப் பலப்படுத்தவேணும் அம்மா கூறும் வரை அவளுடைய கதையை மிக ஆழமாக மனதில் பதித்தபடி அம்மா ஓமம்மா அப்படித்தான் நாங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்தமென்றால் அவன் எந்த மூலைக்கு நீங்கள் ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம். இப்ப உங்கட ஊர்ப்பக்கம்தான் சண்டை துவங்கியிருக்கு கிராமியப்படைக்கு நிறைய வேலை இருக்கு முதல்ல அதைச் செய்யுங்கோ பிறகு நான் சொல்லுறன். ஒருவாறு அம்மாவைச் சமாதானப்படுத்திவிட்டேன் என்று எண்ணியடி நிமிர்ந்தவனைப்பார்த்து அது சரி கிராமியப்படைக்கு என்ன முக்கியமான வேலை பொறுப்பாளர் கூறுகின்றபோது ஒவ்வொன்றாக விழிகளை உயர்த்தியபடி கேட்டிருந்த அம்மா நீண்ட ஒரு பெருமூச்சுடன் நான் இனியவனுக்கூடாக என்னுடைய வேலைகள் எல்லாம் செய்கிறேன். அப்ப நான் போட்டுவாறன் என்றபடி விடைபெற்றாள். அம்மா போகிற வேகத்தைப் பார்த்தபடி கிராமியப்படை எங்கட மக்கள் எப்படி எல்லாம் இந்தப்போருக்கு முகம் கொடுக்கினம் களமுனையில நிக்கிற போராளிகளுக்கு உலர்உணவு சேகரித்தல், காயப்பட்ட போராளிகளுக்கு ஏற்ப்பட்ட குருதியிழப்பை ஈடுசெய்ய மக்களிடம் நிலமையை விளக்கி இரத்ததானம் செய்யக்கூடிவர்களை இனங்கண்டு அவசரமாக தேவைப்படும் இடத்திற்கு அவர்களை அழைத்து வந்து இரத்ததானம் செய்வது, இவற்றை விட களமுனையில காயப்பட்ட போராளிகளைப் பராமரித்தல் இப்படி பல பின் தளவேலைகள் கிராமியப் படையாக எங்களுடைய மக்கள் எவ்வளவு பெரிய வேலைகளை சுமந்தார்கள் குறிப்பாக எல்லைப்படை என்றால் நு}ற்றிற்கு 80மூவீதமானர்கள் குடும்பஸ்தர்கள் இந்த குடும்பத் தலைவர்களில் அதிகமானவர்கள் அன்றாடம் கூலி வேலைக்குப் போனால்த்தான் அன்று அவன் வீட்டில் அடுப்பெரியும். இவர்கள் எல்லைப்படையாக தமது பத்துநாள் பணிக்குச் செல்வதென்றால் அந்தப்பத்து நாளுக்கும் அவர்களின்; குடும்பம் நினைக்கவே நெஞ்சு கனக்கும்.

என்ன செய்வது கிராமப் படையிடையே தோற்றம் பெற்ற போர் எழுச்சிக்குழு வீடுவீடா அரிசி, சிறுதொகை நிதி என்று சேகரிக்கும். அதிலும் மறக்க முடியாத சம்பவங்கள் நிறையநிறைய அரிசி சேகரிக்கும் போர் எழுச்சிக்குழு ஒவ்வொரு வீட்டிற்கும் ஒவ்வொரு சொப்பிங் பாக் கொடுத்திருப்பார்கள். வீட்டில உலையிலே அன்றைதினம் கஞ்சிக்காகத்தான் அரிசி போடுவதானாலும் அதில ஒருபிடி இந்தச் சொப்பிக் பாக்கிலும் விழும் இப்படியாக சிறுகச் சிறுக சேகரித்து பத்தாம் நாள் பக்குவமாக போர் குழுவின் கையில் கொடுப்பார்கள். எல்லைக்குப் போனவன் திரும்பிவரும்வரை மூச்சைப் பிடித்திருக்க இந்த அரிசி அக்குடும்பங்களுக்கு ஆதார தேவதையாக ஆகி நிற்கும் எல்லைக்குப் போகிற போது ஒவ்வொரு குடும்பத்தலைவர்கள் அண்ணை போட்டுவாறம் நான்வரும் வரை வீடு கவனம் ஒருவன் கூறுவான். அடுத்தவன அண்ணை; மூத்தவனுக்கு மலேரியா நேற்றுத்தான் மருந்தெடுத்தது கவனம். அண்ணை; என்ரை அவளுக்கு இதுதான் தலைப்பிரசவம் இதுதான் மாதமும் கவனம். இப்படியாக ஒவ்வொரு சுழற்சிக்கும் அவர்கள் செல்கின்ற போதெல்லாம் மிகக் கவனமாகவே கேட்டுக் கொண்டு அவர்கள் சென்றபின் அவர்கள் திரும்பிவரும் வரை அந்தக் குடும்பங்களின் சுமைகளை தானும் ஒருவனாக சுமந்து கொண்டு வெடி கேட்கின்ற போதெல்லாம் யார் யாரோ எவர் எவரோ சீச்சி அப்படி ஒன்றும் நடக்காது என்ரை சனத்திற்கு ஒன்றும் நடக்கக்கூடாது என்று எண்ணியபடி பொறுப்பாளர் பார்த்து நின்றால் போனவர்கள் தங்கள் கடமை முடித்து திரும்பி வருவார்கள். வந்தவர்கள் ஒரு கிழமைக்கு கடும் சோகமாக காணப்படுவார்கள். ஏன் அண்ணை போகேக்க நல்ல உசாராக சந்தோசமாக போனீர்கள் போய்வந்து ஏன் இப்படி. நீள இழுந்து நெடுமூச்சு விட்டபடி இல்லைத்தம்பி களமுனையில எங்கட பிள்ளையள் என்ன சாப்பாடு தம்பி நாங்கள் எவ்வளவு பரவாய் இல்லை. கஞ்சியும் கத்தரிக்காயும் சிலவேளை மரவள்ளிக்கிழங்கும் சே.. எவ்வளவு கஸ்டங்களை எல்லாம் எங்களுக்காக இந்தப் பிளளைகள் சுமக்குதுகள்.

கிராமத்திலே வேகம் வேகமா இந்த செய்தி அடிபடும் போர் எழுச்சிக் குழுவிடம் முட்டை மாவென்றும் பொரித்த உணவுப் பண்டங்கள் என்றும் அவசரம் அவசரமாக ஒன்று சேர்ந்து வேகம் வேகமாக வாகனங்களில் ஏற்றிக் கொண்டு கிராமியப் படையும், போர் குழுவும் களமுனைக்கு கொண்டு சென்று தங்களின் கைகளில் தங்கள் போராளிப் பிள்ளைகளுக்கு உணவு ஊட்டி கட்டி அனைத்து முத்தமிட்டு கண்ணீர் மல்க கதை பேசும். உங்களால தான், நீங்கள் கண்விழித்து காவல் காப்பதால் தான், நாங்கள் ஊரில வீட்டில நிம்மதியாய் து}ங்கினம். இப்படியான பணிகளை எல்லாம் மிக நேர்த்தியாக தெய்வானை அம்மாவும் செய்து வந்தாள். பெண்களையும் எல்லைப்படைக்குச் சேர்க்கிறார்கள் என்றதும் வேகமாக வந்த தெய்வானை அம்மா ஆனந்தகூத்தாடினார். இனி இவர் என்ன செய்யப்போறார் பாப்பம் என்னண்டு எங்களை மறிக்கப்போறார். அம்மா அழுத்தம் திருத்தமாக பேசினாள். மிக நேர்த்தியாக இளசுகளுடன் தானும் ஒருத்தியாக எல்லைப்படைப் பயிற்ச்சி பெற்றவள் பெண்பிள்ளைகளுடன் எல்லைப்படையாக தங்கள் பணியினை தொடங்கினாள். இப்ப அம்மாக்கள் இல்லை அடுத்தமுறை அதுக்கடுத்தமுறை என்று பலதடவைகள் பொறுப்பாளர் தெய்வானை அம்மாவை எல்லைப்படைக்கு அனுப்பாது கிராமிய படைக்கான பணியை செய்யுமாறு வேண்டினான்;. ஒருநாள் காலையில் எல்லைப்படை பெண்கள் அணி புறப்படத் தயாராகிறது தெய்வானை அம்மாவும் நீளக்கால்; சட்டையும் சேட்டும் அணிந்தபடி தலையைச் சீவி இரட்டைப்பின்னல் போட்டு புலிப்பெண்பிள்ளைகள் போல் புலித்தாயும் புறப்பட ஆயத்தமானாள்;. இன்றும் பொறுப்பாளர் சொன்னான் அம்மா! அம்மா!! அவள் எதையும் காதில் வாங்காது இண்டைக்கு என்னை யாரும் மறிக்கேலாது. நான் போறது போறதுதான் கள்ளமான ஒரு கோவத்தை வரவழைத்துக்கொண்டு பொறுப்பாளரின் பக்கம் பாராமலே புறப்படுவதுதான் என்ற இறுமாப்புடன் காணப்பட்டாள்.

அம்மாவிடம் தோற்றுப் போன பொறுப்பாளர் அணித்தலைவரிடம் அம்மா அடம்பிடிக்கிறாள் பிரச்சனை இல்லை அம்மாவைக் கூட்டிப்போங்கோ முன்னரனுக்கு விடவேண்டாம். சரியோ பின்னுக்கு உணவு எடுத்துக் கொடுத்தல். நீராகாரம் கொடுத்தல் என பல பின்தள வேலைகளுண்டு தானே. சரி கவனம் போட்டு வாங்கோ வெற்றிக்களிப்புடன் டேய் தம்பி அம்மா பிள்ளையில கோவிப்பனே சும்மா ஒரு இதுதான்ரா கையசைத்தபடி விடைபெற வழி அனுப்பிவிட்டு வெறித்த முகத்துடன் வாகனம் புறப்பட்ட திசையில் வாகனம் தன் கண்ணில் இருந்து மறையும் வரை தன்னை மறந்து நின்ற பொறுப்பாளரை அண்ணை வாங்கோ என்றான் வரதன் தன்னைச் சுதாகரித்துக்கொண்டு தன் கடமைக்கு தயாராகினான் பொறுப்பாளர், நாட்கள் மூன்று நகர்ந்து விட்டது. தெய்வானை அம்மாவிடமிருந்து ஒரு கடிதம் மகனிடம் கொடுக்கும்படி பொறுப்பாளர் முகவரியிட்டு தம்பியும் வாசிக்கமாட்டான். இவரும் வாசிக்கமாட்டார் தம்பிக்கு கடிதத்தை வாசித்துக் காட்டவும். வரதன் ஏறுங்கோ என்றபடி மாலிpகா குடியிருப்பு நோக்கி புறப்பட்டது. மோட்டார் சைக்கில் சிவராசா அண்ணரின் வீடு இதுதானே என்றபடி உள்ளேநுளைந்தபோது நல்ல மதுபோதையில் மிதந்தார் சிவராசா அண்ணர். அண்ணே என்ன இது ஏன் இப்படி சீ எவ்வளவு சரியில்லை மகன் எங்கே என்றதும் முற்றத்தில் நின்ற நாவல் மரத்தில் சிரித்தபடி அம்மா எப்ப வருவா அம்மா வாறாவோ என்று பார்த்துக்கொண்டு நிக்கிறான். இதில இருந்து பார்த்தால் து}ரத்தில் வரவே எனக்குத் தெரியும் இடையில நான் ஓடிப்போய் மறைந்து நின்று டோம் என்று சத்தம் போடுவன் அம்மா பயந்துபோவா என்று கூறியபடி இறங்கி வந்தான். வந்தவனின் தலையை வருடியபடி அம்மா இன்னும் ஒரு கிழமையில் வந்திடுவா இபபபிள்ளைக்கு கடிதம் கொடுத்து விட்டவ அதுதான் கொண்டுவந்தனாங்கள். கடிதத்தை வாசிக்கட்டோ இல்லை நீங்கள் வாசிப்பீர்களோ தயங்கித்தயங்கி இல்லை இல்லை நீங்கள் வாசியுங்கோ. சரிவாசிக்கிறன். கவனமாய் கேட்கவேணும் என்ன? அன்புள்ள அப்பாவுக்கும் என்ரை அன்பு மகனுக்கும் நான் நலம் நீங்களும் நலமே இருக்க புளியம்பொக்கனை நாகதம்பிரான் துணை புரிய வேண்டுகிறேன்.

அப்பா நீங்கள் கவலைப்படக்கூடாது. நான் இல்லை என்று கடுமையாய்க் குடிக்கக்கூடாது. பிள்ளை கவனம் நான் ஒரு கிழமையில் வந்திடுவன் தம்பி கவனம், உங்களோட வைச்சுக்கொண்டு படுங்கோ.

மேலும் மகனுக்கு அப்பன் அம்மா இன்னும் ஒரு கிழமையில் வந்திடுவார் குழப்படி விடாமல் இருக்கவேணும். கிணத்தில் தண்ணி அள்ளக்கூடாது. குளப்பக்கம் போகக்கூடாது. அப்பாவுடைய சொல்லுக்கேக்க வேணும் அச்சாப்பிள்ளையாய் இருக்கவேணும். அம்மா வந்திடுவேன் நன்றி. அன்புள்ள அம்மா மனைவி கடிதம் வாசித்து முடிந்தது அப்பாவும் பிள்ளையு மாக சேர்ந்து சிறிது நேரம் மௌனமாக நின்றனர். தலைகுனிந்தபடி நிலத்தில் விரல்களைக்கோடுபோட்டபடி இருந்த சிவராசா அவர்கள் தலையை நிமிர்;த்தி தன்ரை ஆசைக்கு ஒருக்கபோக வேணும் என்று சண்டை போட்டுக்கொண்டுதான் போனய் வரட்டும். இனி விடமாட்;டான். கடசிவரையும் இனிவிடுவதே இல்லை. நல்லவிசயமண்ணே இனி அவவை விடவேண்டாம் விடக்கூடாது வேறு என்ன என்ன சமைத்தனீங்கள் இரவுக்குமாக சேர்த்து சோறு ஆக்கினான் சைக்கிளில்ல வந்தவங்களிட்டை சூடை மீன் கிலோ வேண்டினன் மதியம் தம்பி சாப்பிட்டிட்டான் நான் சாப்பிடுவன். பிரச்சினை இல்லை. அது சரி நீங்கள் சாப்பிட்டீங்களா ஓம் அண்ணை இப்ப. இப்ப தான் வாற வழியிலே வீரச்சாவு அடைந்த முரளியின்ரை நாற்பத்தி ஐந்தாம் நாள் அங்கே சாப்பிட்டிட்டு வந்தம் சரி வேறு என்ன ஒன்றுக்கும் யோசிக்காதேங்கோ நாங்கள் போட்டு வாறம் தம்பி கவனம் என்றபடி விடைபெற்றுச் சென்றான் பொறுப்பாளர்.

மறுநாள் காலையிலை 9.00 மணியிருக்கும் குமரன், குமரன் திலீபன் தொலைத்தொடர்புச் சாதனம் அலறியது. இளந்தேவன் பதிலளித்தான் ஓமோம் குமரன் தான் சொல்லுங்கோ (குமரன் என்பது செயலகத்தின் குறியீட்டுப் பெயர்) குமரன் என்னெண்டால் பொறுப்பாளருக்கு சொல்லுங்கோ. உங்கட இடத்தில இருந்து வந்த எல்லைப் படையில் ஒரு அம்மா வீரச்சாவு, இரவு நடந்த நேரடி மோதலிலே சிவராசா தெய்வானை, மாலிகா குடியிருப்பு, தருமபுரம், பின்னேரம் வித்துடல் கிடைக்கும். வீட்டிற்கு தெரியப்படுத்தி வீரச்சாவு நிகழ்வுக்கான ஒழுங்குகளை செய்யுங்கோ. இளந்தேவன் துடிதுடித்தபடி பொறுப்பாளரிடம் ஓடி வந்தான். வேகமாக ஓடி வந்தவனைப் பார்த்து என்ன தம்பி இப்படி ஓடி வாறியள் என்ன விசயம் ஏதும் முகத்தை கூர்ந்து கவனித்தான் இல்லை அண்ணை எங்கட எல்லைப் படையில .. எல்லைப் படையில மேலே ஏதும் பேச முடியாதவனாக கையிலே இருந்த ஒரு விபரத்தினை நீட்டியவன் உதட்டைக் கடித்தபடி வேகமாக திரும்பினான். அவன் கொடுத்த விபரத்தை பார்த்ததும் பொறுப்பாளர் விக்கித்து நின்றார். சிறிது நேர அமைதிக்குப் பின்னால வரதன் வரதன் பலமாக கத்தினான் இந்தா இந்த விபரத்தைப் பார் அண்ணே நேற்றுத்தானே நாங்கள் போட்டு வந்தனாங்கள், அடக்கடவுளே இது என்ன கொடுமை இப்ப என்னண்டு போறது சிவராசா அண்ணை இதைத் தாங்கமாட்டார் பாவம் பெடியன்.

அவன் என்ன செய்யப் போறான் ஓயாமல் புலம்பிய வரதனைப் பார்த்து தன்னை நிதானப்படுத்தி சுதாகரித்துக் கொண்டு தம்பி என்ன செய்யிறது நாங்கள்தானே முகங்கொடுக்க வேண்டும். எங்கே சுபாவையும் ராஜனையும் கூப்பிடு. ஏற்கெனவே இந்த நிகழ்வினை எல்லாம் கவனித்துக் கொண்டுநின்ற இருவரும் என்னண்னே எப்ப வருமாம் வித்துடல் இன்று பின்னேரம் வருமாம் நீங்கள் வீட்டிற்குப் போய் தெரியப்படுத்துவதுடன் எல்லா ஒழுங்குகளையும் கவனமாகச் செய்யுங்கோ. சரியா? விடைபெற்றச் சென்றார்கள்; சுபாவும் ராஜனும் .; வீரச்சாவு நிகழ்வு என்றால் வீட்டிற்குத் தெரியப்படுத்தும் பணி இவர்களுடையது. இவர்கள் இருவரும் போராளிகளாக இல்லாத போதிலும் மிகுந்த அர்ப்பணிப்போடு தங்கள் கடமை செய்வார்கள். பல சந்தர்ப்பங்களில் வீரச்சாவு என அறிவிக்கச்சென்று அடிவாங்கி காயப்பட்டவர்கள். வித்துடலை வீட்டிற்குப் பக்குவமாக எடுத்துச்சென்று கொடுப்பதுடன் மாவீரர் துயிலும் இல்லத்திலே விதைக்கின்றவரை ஓயாமல் உழைத்தவர்கள். இன்றும் தங்கள் கடமைக்குப் புறப்படும்போதே பொறுப்பாளர் சொன்னார் போகிறார்கள் அடிவிழுதோ. உதைவிழுதோ ஆனாலும் ஆகவேண்டியதை அப்படியே செய்வார்கள்.

மாலை வேளை 4.00 மணியளவில் வித்துடல் பேளையைச் சுமந்தபடி கன்ரர் வாகனம் செயலகத்தின் முன்னால் வந்து நிற்கவும் எதிhபார்த்துக் காத்திருந்த பொறுப்பாளர் வரதன் பெட்டியைத் திறந்து பாருங்கோ விபரம் எல்லாம் சரிபாருங்கோ என்றவன் அம்மா போகின்றபோது தன்னுடன் போட்ட சண்டையினை இரைமீட்டு இரைமீட்டு அசைபோட்டான். பைத்தியம் பிடித்தவன்போல ஏதோ தன்னுடைய செவிகளுக்குமட்டும் கேட்கும்படி சொல்லிக் கொண்டிருந்தான். ஓ. அம்மாவின் சாவு ஒரு தனிமனித சரித்திரம் இல்லை ஒரு இனத்தின் விடுதலைக்காக இந்த மண்ணிலே பிறந்த ஒவ்வொரு தனிமனிதனும் தான்தான் செய்ய வேண்டிய பணியினைச் செவ்வனே செய்துமுடித்துவிட்டு நின்மதியாகத் து}ங்கிறாள் அம்மா முடிந்து போகவில்லை. தொலைந்து போகவில்லை. ஒரு இனம் உயிர்வாழ வேண்டும் என்பதற்காக தன்னுடைய உயிரைக் கொடுத்துள்ளாள். ஒரு இனத்தினுடைய உயிர்ப்பாதுகாப்பிற்காக ஓரு உன்னதமான ஈகம் செய்திருக்கிறாள். தனக்குத்தானே சமாதானம் சொன்னவன் சரிசரி எல்லாம் சரிதானே வரதன் மோட்டார் சைக்கிளை எடுங்கோ வாகன சாரதியைப் பார்த்து தம்பி நாங்கள் முன்னுக்குப் போறம் பின்னாலை நீங்கள் வாங்கோ.

மெதுமெதுவாக வருகின்ற வாகனத்தின் வேகத்திற்கு ஏற்றாப்போலை மோட்டார் சைக்கிளை செலுத்தினான் வரதன். மாலிகா குடியிருப்பினை நெருங்குகின்றபோது வெளிவீதி இருபக்கமும் தோரணங்களால் மஞ்சள் சிவப்புக் கொடிகளால் மக்கள் தங்கள் கிராமத்தை அலங்கரித்து வைத்திருந்ததார்கள். வீடு நெருங்க நெருங்க நெஞ்சுக்குள்ளே இனம் புரியாத ஒரு வேதனையால் துடிதுடித்துப் போனான் பொறுப்பாளர், வீட்டை நெருங்கியதும் மெதுவாக சற்றது}ரத்திலே இறங்கியவன் அம்மாவின் வீட்டுப்படலை நெருங்கியதும் எங்கிருந்தோ புயல் வேகமாக சிவராசா அண்ணன் தனது தலையிலே ஓங்கிஓங்கி அடித்து கொண்டு ஓடிவந்தான். பொறப்பாளரைப் பார்த்து ஐயோ ஐயகோ நேற்றுத்தானே வந்தனீங்கள் இண்டைக்கு இப்படிக் கொண்டு வாறியளே தன்பலம்காட்டி பொறுப்பாளர் நெஞ்சிலே தனது இரு கைகளாலும் மளமளவென்று குத்திக்குத்தி கதறி அழுதான்;. இனி என்ன செய்யப்போறம் அண்ணே எங்கள் இரண்டு பேரையும் இப்பிடி நடுத்தெருவில் விட்டிட்டு அவமட்டும் நிம்மதியாயப் போட்டாவே. அடியை நிறுத்தி இறுக அணைத்தபடி பொறப்பாளரின் நெஞ்சிலே முகம் புதைத்து தேம்பித் தேம்பி அழுதவனை மெதுவாக முதுகினை வருடியபடி அண்ணே அழாதேங்கோ அழாதேங்கோ நாதளதளக்கச் சிவராசா அண்ணனை ஆறதல்படுத்திய பொறுப்பாளரின் இடுப்பினை இன்னொரு பிஞ்சுக்கைகள் இரண்டு கட்டிப்பிடித்தது. மாமா என்னமாமா அம்மாவுக்கு என்ன நடந்தது மாமா ஒரு கையால் குழந்தையின் தலையை வருடிக்கொண்டு விக்கித்த படிநின்றான். வித்துடல் பேளையை இறக்கி நால்வர் சுமந்துவந்து வீட்டமுற்றத்தில் அமைக்கப்பட்ட பந்தலுக்குக் கொண்டுவந்து பெட்டியை இறக்கும்போது வானைப்பிளக்க ஓவென்று அலறும் அவல ஓசை தெய்வம் எங்கட தெய்வம், என்ரை தெய்வம் சத்தம்கேட்டுத் திடுக்கென்ற சிவராசா அண்ணனும் மகனுமாக பந்தலில் வைக்கப்பட்டிருந்த வித்துடலை நோக்கி விரைந்து ஓடினார்கள் வித்துடல் தெரியாதவாறு அம்மாவின் தாயாரும் சகோதரிகளும் கட்டி அணைத்தபடி கதறி அழுதுகொண்டிருக்க அப்பாவும் பிள்ளையுமாக வித்துடலருகே விடுங்கோ எங்களைவிடுங்கோ என்னைப் பாக்கவிடுங்கோ என்ரை தெய்வத்தைப் பாக்கவிடுங்கோ ஐயோ ஏனணை இப்பிடிச் செய்தனீ எங்களைத் தனியவிட்டிட்டு நீமட்டும் நிம்மதியாய் போக எப்பிடியனே உனககு மனம் வந்தது.

ஐயோ என்னாலை ஏலாது ஐயோ ஐயோ என்று அலறியவன் மூச்சடங்கி விழிமேல செருக மெதுவாக சோர்ந்து விழுந்தவனை உறவுகள் தாங்கிப்பிடித்து ஒரு ஓரமாக படுக்கவைத்து காற்றுப்படும்படி கவனப்படுத்தினார்கள். இதுவரை அம்மாவைப்பார்த்து வாயிலை வந்தபடி எல்லாம் சொல்லிச் சொல்லி அழுத அவளின் ஒரே ஒரு செல்லக்குழந்தை தேம்பித்தேம்பி அம்மா நான் குழப்படி விடமாட்டன், குழத்திற்குப் போகமாட்டன், ஒழுங்காகப் பள்ளிக்கூடம் போவன் எழும்புங்கோ அம்மா என்ரை அம்மாவல்லே எழுங்புங்கோ அம்மா என்னை ஒருக்காப் பாருங்கோ அம்மா என்றவன் தந்தை மயங்கி விழுந்ததைக் கண்டதும் மேலும் வீரிட்டான். அப்பா அப்பா அப்பாவும்.. அம்மா அப்பா அப்பாவும் முகத்தைத் தடவித்தடவி அழுதான் எழும்புங்கோ அப்பா அம்மாவை என்னோடை கதைக்கச் சொல்லுங்கோ அப்பா!

பார்த்திருந்த மக்கள் கூட்டம் தங்களைக் கட்டுப்படுத்தமுடியாது விக்கித்து விக்கித்து தேம்பி அழுதனர். பல வீரச்சாவுகளைப் பல சோகங்களைத் தாங்கி நடந்துவந்த பயணத்திலே இது ஒரு புதுவிதமானது. இதுவரை பல வீரச்சாவுகள் அத்தனையும் இளைஞர்கள், யுவதிகள் ஆனால் இந்தவீரச்சாவு இன்னொருவிதமானது.

சங்ககால இலக்கியங்களிலே புறநானு}ற்றுத் தாயைக் கேள்விப்பட்டிருக்-கிறோம். முதல்நாள் போரிலே தந்தை, மறுநாள் போரிலே கணவன், போர் முழக்கம் ஓயவில்லை தன் ஒரே குழந்தையையும் போருக்கு அனுப்பினாள். இது வரலாறு சொல்லும் பாடம், ஆனால் இன்று எம் சந்ததியினரின் எதிர்காலம் ஒளிமயமானதாக இருக்க வேண்டும் நாம்பட்ட துன்பதுயரங்கள் எங்களுடனே முடியட்டும். தமிழர்களின் வரலாற்றிலே ஈழத்தமிழ்ப் பெண்களென்றால் யார் என்று ஒரு பரணி எழுதிவிட்டாள். தெய்வானை புருசனை, பிள்ளையைப் போருக்கு அனுப்பினாள் புறநானு}ற்றுத் தாய், பிள்ளைக்காக தமிழ் மக்களுக்காக தன்னுயிரை ஈந்தாள் தமிழீழத் தாயிவள். மாலதி மூட்டிய தீயினிலே தாயிவள் தானும் சேர்ந்து கொண்டாள். மனதிற்குள் ஆயிரம் எண்ண அலைகள் மேலிட அடுத்து நடக்க வேண்டியவற்றிற்கு ஆயுத்தமாயினர் போராளிகளும் பொறுப்பாளர்களும்.

மறுநாள் காலை 10.00 மணி அலங்கரிக்கப்பட்ட ஊர்த்தியிலே அம்மா தெய்வானையின் வித்துடல், அமைதியாக மிக அமைதியாக வீதியிலே ஊர்வலமாக குடியிருப்பு மக்கள் புடைசூழ மாவீரர் நினைவுமண்டபம் நோக்கி நகர்ந்தது. பல்லாயிரக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலி தான் நேசித்த மக்களின் தான் கூடிக்குலாவித்திரிந்த தோழியரின் இறுதி அஞ்சலி தன் தாயின் தன் உடன்பிறப்புக்களின் தன் கணவனின் ஓ தான் ஈன்றெடுத்த தவப்புதல்வனின் இறுதி அஞ்சலி மலரால், மலர்மாலைகளால் நிறைந்த வித்துடல் பேழை வீதியின் இருபக்கமும் வீட்டு வாசல்களில் விளக்கேற்றி வித்துடலின் காலடியில் மலர்;சொரிந்து வீரத்தாயினை விடைகொடுத்து வழி அனுப்ப நிறைந்தது வீதி எங்கும் மக்கள் வெள்ளம் விடைபெற்ற தாயிவளை விதைத்தோம் நாம் துயிலும் இல்லத்தில் விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்திலா? விதைத்தோம் இல்லை தமிழ் மக்களின் இல்லங்களில் தமிழ் மக்களின் உள்ளங்களில் விதைத்தோம் விடிகின்ற தேசம் புலர்ந்திடும்போது மலர்கின்ற தமிழீழத்தில் மானத்தாயின் மாண்பினைக் காண்போம்

புலிகளும் மக்களுமாக தம்பலம்காட்டித் தம்மை அழிக்கவந்த பகைவனுக்கு நல்லபாடம் புகட்டினர், கிராமப்படை என்றும், எல்லைப்படை என்றும், போர் எழுச்சிக்குழு என்றும் தலைவரின் கரங்களுக்கு ஆதார துணையாக பணியாற்றினார். சத்ஜெய என்றும், ஜெயசுக்குறு என்றும்,; தீச்சுவாலை என்றும் பகை எடுத்த அனைத்து நடவடிக்கைகளையும் புலிகளுடன் வன்னிமக்கள் போர்க்கோலம் புூண்டு முறியடித்தனர், எதிரியின் ஆக்கிரமிப்புப் பிரதேசங்களில் உள்ளமக்களும் பொங்குதமிழ் என்றும், சங்கே முழங்கு என்றும் தமிழ் எங்கள் உயிர் அந்த உயிரே பிரபாகரன் என்றும் பொங்கி எழுந்து புலிகளின் போருக்கு புதுவேகமூட்டினர். புலம்பெயர்ந்த உறவுகளும், சர்வதேச அரங்கிலே புலிகளின் போரென்பது தமிழீழ விடுதலைப்புலிகள் வாழ்வதற்கான போரல்ல. அது அனைத்துத் தமிழ்மக்களினதும் மொழியைப் பாதுகாப்பதற்கான போர், தமிழ்நிலத்தை மீட்பதற்கான போர், தமிழினம் தன்மானத்தோடு, சுயமரியாதையோடு, சுயகௌரவத்தோடு தலைநிமிர்ந்து வாழ்வதற்கான போர் என்று தாம்வாழும் அனைத்து நாடுகளிலும் போர்முழக்க மிட்டனர். சர்வதேசமும் விழித்துக் கொண்டது. தமிழ்மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு ஒரு பெரும் சக்தியாகப் புலிகள்தான் தமிழ்மக்களின் ஏகப்பிரதிநிதிகள், புலிகளே மக்கள், மக்களே புலிகள் என்று உரத்துப்பறை சாற்றினர். தலைவர் பிரபாகரனின் போர்வியுூகம் ஓயாத அலையாக உருவெடுத்ததால் பகை பணிந்து இன்று போர் நிறுத்தம், பேச்சவார்த்தை, சமாதானம் எத்தனை நாளைக்கு இத்தனை வேசம் வரலாற்றை மீட்டபடியே இன்றும் எம்மக்கள் எது எப்போது எந்தவடிவத்தில் வந்தாலும் தாய்க்கோழியாகத் தலைவன் பிரபாகரன் எமைக்காப்பான் என்ற எண்ணத்தோடு இன்றும் எம்மக்கள்.

காலம் உருண்டோடியது. பொறுப்பாளரும் பணிநிலை மாற்றம்பெற்று இரண்டு ஆண்டுகள் ஆயிற்று. பழைய நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருந்தான். திடீரென எதையோ உணர்ந்தவனாக தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வேகமாகப் புறப்பட்டான். தெய்வானை அம்மாவின் துணைவனும், அவவின் செல்லக்குழந்தையின் நினைவுமாக அவர்களின் வீட்டுக்குச் சென்றவன் வீட்டில் யாரும் இல்லை என்ன இது எங்கே போயிருப்பார்கள் அயலில் உள்ளவர்களை விசாரித்தான். தம்பிஅவள் போனதோடை அந்தாள் ஒரே குடியடா, பெடியனைக் கொண்டுபோய் சின்னத்துரையின் வீட்டில் மாடு மேய்க்க விட்டிருக்கு, கதை சொல்லிமுடியுமுன் எங்கே அந்த சின்னத்துரையின் வீடு. இப்ப சிவராசா அண்ணன் எங்கே நிற்பார். ஏக்கத்துடன் கேட்டான். பொறுப்பாளர் பதில்கேட்டு விரைந்து சென்றான். நல்ல நிறைவெறியில் கள்ளுக்கொட்டில் ஒன்றில் கண்டுகொண்டான். நா தடுமாறியபடி த..ம்பி…. வாங்கோ என்றவனை அணைத்தபடியே வெளியே கூட்டிவந்து அண்ணை இது என்ன கோலம், சீச்சீ உங்களை நம்பித்தானே தெய்வானை அக்கா .. இடைமறித்த சிவராசா அண்ணன் அவதான் போயிட்டாவே என்ரை சரசுவதி எங்களை விட்டிட்டு விம்ம்pனான். தனனைச் சுதாகரித்துக்கொண்டு அண்ணே அழதேங்கோ தம்பி எங்கே நான் அவனை உடனே பார்க்க வேணும் வாங்கோ ஏறுங்கோ மோட்டார் சைக்கிளில் ஏறி அமர்ந்த கொண்டு ஏதேதோ எல்லாம் சொல்லிப் புலம்பியபடி பாதை காட்டினான். சின்னத்துரையின் வீட்டை நெருங்கினோம். கையிலே ஒரு சிறிய றேடியோவுடன் காற்சட்டை தெரியாதபடி அவனுக்கு அளவில்லாத ஒரு கசங்கிய சேட்டும் போட்டபடி நின்றான் அந்தச்சிறுவன். அப்பாவுடன் வந்த பொறுப்பாளரைக் கண்டதும் மெதுவாகத் தலையைக் குனிந்படி அருகே வந்தவனைத் தன்னோடு இறக அணைத்துக் கொண்டான் பொறுப்பாளர், பார்தம்பி பாருங்கோ தம்பி தெய்வா இருந்தால் இப்பிடி நடக்குமே சிவராசா அண்ணன் சிணுங்கினான்; வாருங்கோ அண்ணை வாருங்கோ என்று வரவேற்றார் சின்னத்துரை இவன்தான் தம்பி இப்ப என்ரை மாடுகளைப் பார்க்கிறான். மாதம் 450 ரூபா காசு கொடுக்கிறன்.

  • தொடங்கியவர்

பேச்சை இடையில் நிறத்தியவன் பொறப்பாளரின் முகத்தைப்பார்த்து ஏதோ புரிந்தவனாக ஏன்ஏன் தம்பி கூட்டிக்கொண்டு போகப்போறியளோ கொண்டுபோய் என்ன செய்யப்போறியள் பொறுப்பாளர் நிமிர்ந்து அண்ணை கோவிக்காதேங்கோ இது உங்கட பிழையில்லைஇ எங்கட பிழைஇ எங்கட தலைவர் தனிய எங்கட சனத்தை அழிக்கவாற எதிரியோட மட்டும் சண்டைபோடவில்லை. அப்பா. அம்மா இல்லாத அனாதைகளாகத் தமிழீழத் தேசத்தில் யாரும் இருக்கக்கூடாதுஎன்று செஞ்சோலைஇ அறிவச்சோலைஇ புனிதபுூமிஇ பாரதி இல்லம்இ குருகுலம்இ காந்தி இல்லம் இப்படி எத்தனை இடமெல்லாம் உருவாக்கி எங்கட மக்களுக்காகத்தானே ஒருதாயாகி அன்போடு அரவணைத்துப் பார்க்கிறார். அதில ஒரு இடம் இவனுக்கம் உண்டு. நான் இனி இவனை இங்கே விட்டிட்டுப்போக மாட்டன். தயவுசெய்து என்னுடன் அனுப்புங்கோ என்று முகத்தைத் திருப்பி சிவராசா அண்ணனைக் கேட்கவும் சிவராசா அண்ணன் மகனைப்பார்த்து போகப்போறியே என்று கேட்கவும் பொறுப்பாளரை இறுக அணைத்தபடி தம்பி ஓம் நான் மாமாவோடை போகப்போறன் என்றான் தம்பி சிவகுமார். மட்டற்ற மகிழ்வோடு அவர்களிடம் இருந்து விடைபெற்றவன் இருவரையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிவந்து சிவராசா அண்ணனை வீட்டில் விட்டிட்டு தம்பி அப்பாவிடம் சொல்லிப்போட்டு வா என்றான். தகப்பன் குனிந்து முகத்தைக் கொடுக்க இரண்டு கன்னங்களிலும் தனது பிஞ்சுமுகம் புதைத்து முத்தமிட்டுச் சிறகுவிரித்த பறவையாக ஒரு புதுத்தெம்புடன் ஓடிவந்து பொறுப்பாளருடன் புறப்பட்டான். முகாம்வரும்வரை தம்பி நீபடிக்க வேணுமடா நல்லாப்படிச்சு பெரிய மனிதனாக வரவேணுமடா தலைவர் மாமா இரக்கிறார். நீ ஒருத்தருக்கும் பயப்படக்கூடாது என்று அறிவுரை கூறியபடி முகாமுக்குவந்து நின்று சக போராளிகளிடம் இவருக்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் ஒழுங்கு செய்யும்படி பணித்துவிட்டு மிகவேகமாக விரைந்து சென்று தமிழர் புனர்வாழ்வுக்கழகம் நடத்தும் காந்தி இல்லத்தில் அவனை இணைப்பதற்கான அனுமதியை அதன் நிறைவேற்றப் பணிப்பாளர் திரு. கே. பி. றெஜியிடம் அவனது வரலாற்றைகூறி அனுமதி பெற்றுவந்து சிவகுமாரை அழைத்து தம்பி நீங்கள் காந்தி இல்லம் சிறுவர் இல்லத்தில் நின்று படிக்கப் போறியள். மாமா அடிக்கடி அங்கே வருவேன்.

பிள்ளை கவனமாக நின்று படிக்க வேணும். சரியோஇ ஓம் மாமா நான் படிக்க வேணும் சிரித்தபடி தலையை ஆட்டி ஆட்டிப் பதிலளித்தான். இன்று அவன் ஆண்டு ஏழு படிக்கும் மாணவனாக காந்தி இல்லத்தில் ஒருவனாகப் படிக்கின்றான். திடீரென ஒருநாள் பொறுப்பாளரிடம் ஒருவன் வந்து நின்றான். அண்ணே வணக்கம்இ நான் தமிழ்ச்செல்வனிடம் இருந்து வருகிறேன் ஓம் தெரியும் என்ன விசயம் இல்லயண்ணே எங்கடை தலைவர் எல்லைப்படையில் வீரச்சாவடைந்த தெய்வானை அம்மாவின் மகன் இப்ப என்ன செய்கிறார் என்று விளக்கமாக அறிக்கை கேட்டிருக்கிறார். அதுதான் வீட்டைபோன நாங்கள் நீங்கள் கூட்டிவந்ததாக இழுத்தபடி முடித்தான். ஓமோம் கூட்டிவந்திருக்கிறேன். அவன் இப்ப. கதையைச்சொல்லி அவனை அனுப்பியதும் திகைத்து நின்றான். பொறுப்பாளர் தலைவருக்கு இருக்கின்ற இத்தனை வேலைச்சுமைகளுக்குள்ளேயும் அந்த அம்மாவின் வீரச்சாவு அவளுடைய மகன் இப்ப என்ன செய்கிறான் என்று அவர் கேட்டுள்ளாரே உண்மையிலே மக்கள் மிகவும் கொடுத்துவைத்தவர்கள் இப்படி ஒரு தலைமையைப் பெறுவதற்கு கோடானகோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும். இவருடைய காலத்தில் தமிழினம் நிச்சயமாக விடுதலை பெற்றே தீரும். தமிழ்பேசும் அனைத்து மக்களுக்கும் தாயாகித் தமிழினத்தை அழிக்கவரும் பகைவனுக்கு தீயாகிஇ எம்தலைவன் உள்ளவரை அஞ்சற்க என்றபடி எழுந்து சென்றான் பொறுப்பாளன்.

நிதர்சனம்

அருமையான ஆக்கத்தை இங்கு இனைத்தமைக்கு நன்றி நர்மதா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.