Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரத்தமிழ் மகள் செங்கொடிக்கு, வீரவணக்கம்! தீப்பந்தம் ஏந்திய 'செங்கொடிகள்' தீக்கிரையாதல் கூடாது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[Wednesday, 2011-08-31 11:15:03]

CTF_france150.jpg

உலகத் தமிழரின் நெஞ்சை உலுக்கும் வகையில் தமிழகத்தில் காச்சிபுரத்தில் மீண்டும் ஒரு தீக்குளிப்பு. முருகன், சாந்தன், பேரறிவாளன் என்கின்ற, தமிழ் உறவுகளைக் காப்பாற்ற, தமிழ்த்தாய் மடி பிறந்த வீரத்தங்கை செங்கொடி தன் இளமை உயிரைத் தீயில் கரைத்துள்ளாள். அண்ணன்களைக் காப்பாற்ற, இந்த இளந்தங்கை, தன்னை தீக்கு தின்னக்கொடுத்த பெருந்தியாகம், உலகத் தமிழ் இனத்தின் இதயத்தைக் கனப்படுத்திவிட்டது. விழிகளை ஈரப்படுத்திவிட்டது.

உறுதியும், உணர்வும், வீரமும், தியாகமும் நிரம்பப்பெற்ற, விறல்வேங்கை வழிவந்தவளாய், தன் இனத்துக்காய், தன் மொழிக்காய் தன்னை முழுமையாக அர்ப்பணித்து விட்ட வீரத்தமிழ் மகள் செங்கொடிக்கு எமது வீரவணக்கம்.

முள்ளிவாய்க்கால் பேரவலகாலத்தே, அந்தக் கொடுமைகளைத் தடுத்து நிறுத்தி எம்இனத்தைக் காக்க, தமிழகத்திலும், வெளியேயும், எத்தனையோ தீக்குளிப்புகள், உயிர் அர்ப்பணிப்புகள், தற்தியாகங்கள், உறுதி தளராத போராட்டங்கள், வெகுசன எழுச்சிகள் என பலவற்றை தமிழினம் நடத்தியது. தமிழகத்தில் மட்டும், வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வழியில் பதினைத்து தமிழ் உயிர்கள், தங்களை விலையாகக் கொடுத்து இந்திய அரசிடம் நீதிகேட்டன. ஏமாற்றங்களே இறுதியில் மிஞ்சின.

நாற்பதினாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களைத் துடிக்கத் துடிக்கப் பலியெடுத்த, இந்த நூற்றாண்டின் அசிங்கமான, வெறுக்கத்தக்க, காட்டுமிராண்டித்தனமான தமிழின அழிப்பின் பங்காளியாக இந்தியா கைகாட்டப்படுகின்றது. இந்த உண்மையை, பச்சைத் துரோகத்தை ஜீரணிக்கமுடியாமல் தமிழர்கள் நாம் தவிக்கின்றோம். தமிழ் உணர்வாளர்களால் மேற்கொள்ளப்படும் புனிதமான இத்தகு உயிர்த்தியாகங்கள், தமிழினத்துக்கு எதிராக திட்டமிட்டு நகரும் சக்திகளிடத்தே, எந்த மாறுதல்களையம், தளர்வுகளையும் ஏற்படுத்தாது என்பதைப் புரிந்துகொள்வோம்.

இனஉணர்வும், உறுதியும், தியாக மனப்பான்மையும் கொண்ட செங்கொடி போன்ற அற்புதங்கள், இந்த இனத்திற்கு என்றைக்கும் தேவையானவை. இந்த இனத்தை வாழவைக்கவேண்டியவை. இந்த இனத்திற்கு வழிகாட்ட வேண்டியவை.

தமிழ் இனத்திற்கு விடுதலையையும், சகல சுதந்திரங்களையும் பெற்றுக்கொடுக்கின்ற பெரும் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கவல்ல, உருக்குறுதிவாய்ந்த தூய்மையாளர்கள் ஒருபோதும் தங்களை அழித்துக்கொள்ளக்கூடாது என்பதே, உலகத் தமிழ் இனத்தின் உருக்கமான வேண்டுகோள்.

கையில் தீப்பந்தம் ஏந்தி இனத்திற்கு வழிகாட்டியடி அடிமை இருளகற்றி, விடுதலை ஒளி ஏற்றவல்ல 'செங்கொடிகள்' ஒரு போதும் தீக்கிரையாகக்கூடாது என்று மறுபடி மறுபடி வேண்டுகின்றோம். அன்புத் தங்கை செங்கொடியின் புகழ், தமிழர் வரலாற்றில், பெருமையுடன் வாழும். மூவர் உயிர்காக்க தொடர்ந்து போராடுவோம். வெல்வோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

http://www.seithy.com/breifNews.php?newsID=49144&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.