Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சி மக்களுக்கு சேவையாற்ற வந்துள்ள சென்னை றோட்டரிக் கழகம்

Featured Replies

சொத்துக்களையும், சொந்தங்களையும் இழந்து அங்கங்கள் அவயவகங்களையும் இழந்து நொந்து கிடக்கும் எமது சொந்தங்களின் கண்ணீர் துடைக்க எமது அந்நிய நாட்டு சொந்தங்களில் சிலர் இலங்கை வந்திருந்தனர்.

அவர்களை அணுகி கிளிநொச்சி மக்களின் நிலைபற்றி கேட்டபோது அவர்கள் கண்டதில் கேட்டதில் சின்ன சின்ன துளிகளே இவை, கடந்த மாதம் தமிழ்நாடு சென்னை றோட்டரிக்கழகம் சென்னை றோட்டரிக்கழகம் 3230 இன் சார்பில் நால்வர் அடங்கிய குழுவொன்று கிளிநொச்சிக்குச் சென்றிருந்தது.

அங்கு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது சொந்தங்களின் நிலைமைகளை பார்த்து அவர்களின் தேவைகள் பல பற்றி கேட்டறிந்ததுடன் கை, கால்களை இழந்தவர்களில் 42 பேர்களது அளவுகளை எடுத்துச் சென்றார்கள். செயற்கை கை, கால்களை பொருத்துவதற்காக.

இவ்வாறு கிளிநொச்சிக்கு வந்து எமது சொந்தங்களுக்கு செயற்கைக் கால்களையும் கைகளையும் பொருத்தித்தருவதாக கூறிச் சென்றவர்கள் கடந்த வாரம் மீண்டும் இலங்கை வந்ததுடன் 42 பேர்களுக்கும் செயற்கை கை, கால்களை கொண்டு வந்ததுடன் அவர்களுக்கு அதனை பொருத்தியுள்ளார்கள்.

கால், கைகளை இழந்தவர்கள் எதனையும் செய்ய முடியாத செயலிழந்தவர்களா போய்விடக் கூடாது என்ற உயரிய நோக்கத்துடன் சென்னை மாவட்ட றோட்டரி கழகத்தினர் மேற்கொண்ட இந்த நற்பணியால் 42 பேர் மீண்டும் புதுவாழ்வை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளனர்.

இம்மாதம் இரண்டாம் திகதி சென்னை மாவட்ட றோட்டரி கழகம் 30 பேர் கொண்ட குழுவொன்று இலங்கை வந்தது. இலங்கை வந்து வன்னிக்குச் சென்று இரண்டு நாட்கள் தங்கியிருந்து அம்மக்களின் பல்வேறு பிரச்சினைகள் பற்றி கேட்டறிந்துள்ளது.

அந்தச் சந்தர்ப்பத்தில் அனேகமானோர் தம்முடன் இயல்பாக பேவதற்கு அஞ்சியதாகவும் அவர்களின் கண்களில் அச்சம் தெரிந்ததாகவும் றோட்டரிக் கழக மாவட்ட ஆளுநர் சம்பத்குமார் தெரிவித்தார்.

சம்பத்குமார் மேலும் தெரிவிக்கையில், நாம் 42 செயற்கை கை, கால்களை கொடுத்ததுடன் இன்னும் 106 பேருக்கு செயற்கை கால்களை கொடுப்பதற்காக அவர்களிடமிருந்து அளவெடுத்துள்ளோம். அதே போன்று 300 பேருக்கு மூக்குக் கண்ணாடிகள் வழங்குவதற்கும் ஏற்பாடு செய்துள்ளோம்.

அதனடிப்படையில் எதிர்வரும் மாதம் இறுதிக்குள் நாம் மீண்டும் கிளிநொச்சிக்கு வரும் போது இன்னும் 106 பேருக்கு செயற்கை கை, கால்களையும் 300 பேருக்ககு மூக்குக் கண்ணாடிகளையும் வழங்குவோம்.

கிளிநொச்சியில் கை, கால்களை இழந்தவர்களில் அதிகமானவர்கள் பெண்களாகவே இருந்தார்கள். அத்தோடு அப்பகுதிகளில் 18க்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட ஆண்களை மிகவும் அரிதாகவே காண முடிந்தது.

எமது இந்த சேவையானது கிளிநொச்சி பகுதியுடன் நின்று விடாது முல்லைத்தீவு போன்ற பகுதிகளுக்கும் தொடரும். அதற்கான ஏற்பாடுகளை நாம் மேற் கொள்ளவுள்ளோம். இம்முறை மக்களின் தேவைகள் பலவற்றை நாம் இனம் கண்டு கொண்டோம். அதனை சென்னை சென்று எமது கழகத்துடன் பேசி அதற்கு எவ்வாறு உதவ முடியுமென தீர்மானிப் போம்.

பாதிக்கப்பட்டவர்களில் சிலர் தமக்கு வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்கு தொழில் பயிற்சிகள் வேண்டுமென்றனர். அவ்வாறானவர்களுக்கு எவ்வாறு அதனை பெற்றுக்கொடுப்பது என்பது பற்றியும் ஆராயவுள்ளோம்.

இலங்கை தமிழர்களுக்கு உதவுவதற்கு இந்தியாவில் பலர் தயாராகவுள்ளார்கள்.

அதற்கான அனுமதியே முதலில் வேண்டும்.

இப்போது இலங்கை அரசாங்கத்தின் அனுமதியுடன் அப்பகுதிக்குச் சென்று அம்மக்களுக்கு உதவ முடிந்துள்ளதையிட்டு மகிழ்ச்சி கொள்கிறோம். அதேபோன்று இன்னும் பல சேவைகளை செய்வதற்கான அனுமதி எமக்கு கிடைக்குமென நம்புகின்றோம்.

இம்முறை நாம் 30 பேர் கொண்ட குழுவுடன் கிளிநொச்சிக்கு சென்றோம். எமது குழுவில் 18 வைத்திய நிபுணர்களும் வந்திருந்தனர். அவர்களில் மிகவும் பிரபல்யமான ஒரு வைத்தியர் சுரேஷ். இவர் உலக புகழ்பெற்ற அல்ட்ரா சவுண் ஸ்கேனர் சிகிச்சை செய்பவர். இவர் அந்த ஸ்கேனர் இயந்திரத்துடனேயே எம்முடன் வந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எமது வைத்தியர்கள் குழுவானது கிளிநொச்சி மக்களுக்கான கண் பரிசோதனை செய்ததுடன் மருந்துகளையும் வழங்கியது. இது போன்ற சேவைகள் இம்மக்களுக்கு கட்டாயமாக வாழங்கப்பட வேண்டும். கிளிநொச்சி பகுதி மக்களுக்கு சுகாதர மற்றும் அடிப்படை வதிகள் மிகவும் மந்த கதியிலேயே கிடைப்பதை காண முடிந்தது.

அத்தோடு அம்மக்கள் உளரீதியாக மிகவும் பாதிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளார்கள். இலங்கை அரசாங்கம் அனுமதிக்குமானால் அவர்களுக்கு உளவியல் ரீதியான சிகிச்சைகளையும் வழங்கலாம்.

அடுத்தடுத்த தடவைகள் வரும் போது அதற்கான முயற்சிகளையும் எடுக்க எத்தனித்துள்ளோம். ஏனென்றால் அவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப உள காதாரம் மிகவும் தேவையாகவுள்ளது.

http://akkinikkunchu.com/new/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.