Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலிகாமம் வடக்கில் 24 கிராமங்களுக்குத் தடை செய்யப்பட்ட பிரதேசங்கள் என்ற புதிய பெயர் :

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வலிகாமம் வடக்கில் 24 கிராமங்களுக்குத் தடை செய்யப்பட்ட பிரதேசங்கள் என்ற புதிய பெயர் :

13 செப்டம்பர் 2011

வலிகாமம் வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள 24 கிராமங்களுக்குத் தடை செய்யப்பட்ட பிரதேசங்கள் என்ற புதிய பெயர் அரசால் சூட்டப்பட்டுள்ளது.

ஏற்னெவே அதியுயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் உத்தியோகபூர்வமாக தமிழரின் காணிகள் பறிக்கப்பட்டுள்ள நிலையில், வடக்கின் சில பிரதேசங்களுக்கு இவ்வாறு தடை செய்யப்பட்ட பிரதேசம் எனப் பெயர் சூட்டப்பட்டிருப்பதானது மேலும் பல காணிகள் பறிபோவதற்கு அறிகுறியாக அமைந்துள்ளது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு விசனம் தெவித்துள்ளது.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட எம்.பி.யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகையில்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்குமிடையில் இதுவரையில் நடைபெற்று வந்த ஒவ்வொரு பேச்சுவார்த்தைகளின் போதும் அதி உயர் பாதுகாப்பு வலயங்களினால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் அதனால் மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற துன்பங்கள் குறித்தும் நாம் மிகத் தெளிவாக எடுத்துக் கூறி வந்துள்ளதுடன் அதி உயர் பாதுகாப்பு வலயங்களை நீக்கி அந்தப் பிரதேசங்களில் மக்களை குடியேற்றுமாறும் வலியுறுத்தியே வந்துள்ளோம்.

எனினும் இதற்கு அரசாங்கத்திடமிருந்து நேர்மையான பதிலை இதுவரையில் எதிர்பார்க்க முடியாதிருக்கின்றது. ஆயினும் இதற்கான அழுத்தங்கள் எம்மிடத்திலிருந்து மட்டுமல்லாது பல கோணங்களில் இருந்தும் வந்து கொண்டு தான் இருக்கின்றன.

திருகோணமலையில் சம்பூரில் பத்தாயிரம் ஏக்கர் காணி அதியுயர் பாதுகாப்பு வலயமாக அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டிருக்கின்றது. இதனால் இங்கிருந்த 6000 பொது மக்கள் நிர்க்கதியாகியுள்ளனர். எல்லாவற்றையும் இழந்த இந்த மக்களை உரிய வகையில் மீள் குடியேற்றுவதற்கான திட்டம் அரசாங்கத்திடம் இல்லை.

இதேபோல் யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் இவ்வாறு மக்கள் சென்று வாழ முடியாத வகையில் பல பிரதேசங்கள் அதி உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் கையகப்படுத்தப்பட்டு அங்கிருந்த வீடுகள் கோ யில்கள் பாடசாலைகள் உட்பட பல்வேறு கட்டிடங்களும் விவசாய நிலங்களும் அழிக்கப்பட்டு விட்டன.

அதி உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் வடக்கு கிழக்கில் சுமார் இரண்டு இலட்சம் பேர் வரையில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் அந்தந்தப் பிரதேசங்களில் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்கான அனுமதி மறுக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர்.

இவ்வாறான நிலையில் வடக்கில் தடை செய்யப்பட்ட பிரதேசங்கள் என சில பகுதிகள் பெயரிடப்பட்டு வருகின்றன. அதி உயர் பாதுகாப்பு வலயம் எனும் போது அது வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு அறிவித்தல் விடுக்கப்படுகின்றது. ஆனால் தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்ற புதிய பெயர் சூட்டலுக்காக எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவித்தலும் கிடையாது.

இதனடிப்படையில் வலிகாமம் வடக்கு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட 24 கிராமங்கள் பொதுமக்களின் நடமாட்டத்துக்கு தடை செய்யப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

அதி உயர் பாதுகாப்பு வலயமெனில் அது நீக்கப்படுவதற்கும் மக்கள் அங்கு குடியமர்த்தப்படுவதற்கும் சாத்தியங்கள் அமைந்து வரும் என்று எதிர்பார்க்க முடியும். ஆனாலும் தடை செய்யப்பட்ட பிரதேசங்கள் என பெயரிடப்படுவதானது சந்தேகத்துக்குரியதாகும்.

ஏற்கனவே அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்கென வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழ் மக்களுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது தடை செய்யப்பட்ட பிரதேசங்கள் எனப் பெயரிடுவதானது மேலும் பல காணிகளைப் பறிப்பதற்கான அறிகுறியாகவே தெரிகின்றது. வடக்கு கிழக்கில் தமிழரின் காணிகளை சுவீகரிப்பதற்கு இவ்வாறு பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/67100/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.