Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேசத்தின் கோரிக்கைகளைக் கணக்கெடுக்காத இலங்கை மீது கனடா சீற்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

canada-150x150.jpg

யுத்தம் நிறைவடைந்து இரு வருடங்கள் நிறைவடைந்துள்ள போதிலும் சர்வதேச சமூகம் வலியுறுத்தி வரும் சில விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் புருஸ் லெவி தெரிவித்துள்ளார். சமதானத்தையும், அபிவிருத்தியை ஏற்படுத்த மெய்யாகவே அரசாங்கம் அக்கறை காட்டினால் குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குவது தொடர்பான விவகாரத்தை உதாசீனம் செய்ய முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

கனடாவின் பிரதமர் ஸ்டீவன் ஹார்பர் அண்மையில் வெளியி;;ட்ட கருத்து தொடர்பில் இலங்கை ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குவது தெடர்பில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்தி குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்படாவிட்டால் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் சிக்கல் நிலைமை உருவாகும்.

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு நடைபெறுவதற்கு இன்னமும் இரண்டு ஆண்டு கால அவகாசம் இருப்பதாகவும், குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பிரதமர் வலியுறுத்தி வருவதாகவும் புருஸ் லெவி குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilthai.com/?p=26785

பொதுநலவாய உச்சிமாநாடு : கனேடிய பிரதமரின் கருத்துக்கு இலங்கை ஏமாற்றம்

2018 ஆம் ஆண்டு இலங்கையில் பொதுநலவாய உச்சிமாநாட்டை இலங்கையில் நடத்துவது குறித்து கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் தெரிவித்த கருத்துக்கு இலங்கை தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது.

2009 ஆம் ஆண்டு ட்ரினிடாட் அன்ட் டுபாகோவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டின்போது, 2013 ஆம் ஆண்டு உச்சிமாநாட்டை இலங்கையில் நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில் 2013 ஆம் ஆண்டு உச்சிமாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகள் ஏற்கெனவே ஆரம்பமாகியுள்ள நிலையில் இவ்விவகாரத்தை மீண்டும் கிளறுவது முறையற்றது என கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெய்ர்ட்டிடம் இலங்கை உயர் ஸ்தானிகர் சித்ராஞ்சனி வாகீஸ்வரா தெரிவித்துள்ளார்.

கனேடிய நாடாளுமன்ற தூதுக்குழுவொன்றை இலங்கை;கு அனுப்புவதன் சாத்தியம் குறித்தும் ஆராயப்பட்டதாக கனடாவிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் விவகாரத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லையாயின் பொதுநலவாய உச்சிமாநாட்டுக்காக தான் இலங்கைக்கு செல்லப்போவதில்லை என கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் கடந்த வாரம்கூறியமை குறிப்பிடத்தக்கது .

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/27977-2011-09-16-12-39-44.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.