Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூதங்கள் இடம்மாறலாம்……

Featured Replies

பூதங்கள் இடம்மாறலாம்……

கிறீஸ் பூதங்களின் அட்டகாசம் இன்னமும் குறைவடையவில்லை. சட்டத்தை கையிலெடுத்தால் தண்டிக்கப்படுவரென அரசு கூறுகிறது. அதேவேளை, பாதிக்கப்படும் பெண்களுக்கு எவ்வாறு உதவி செய்வது என்பது குறித்து சிந்திக்க வேண்டுமென சிலர் ஆலோசனை வழங்குகின்றார்கள்.

தற்போது இந்தப் பூத விவகாரம், 18 ஆவது மனித உரிமைகள் பேரவையிலும் எதிரொலித்துள்ளது.

மனித உரிமை மீறல் மற்றும் போர்க் குற்ற விவகாரத்தோடு பூதங்களும் இணைந்து விட்டன.

அது மட்டுமின்றி நிபுணர் குழு அறிக்கை என்கிற பூதம், மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு இலங்கை அரசை அச்சுறுத்த ஆரம்பித்துள்ளது.

இந்த முறை தப்பிப் பிழைத்தாலும் வருகிற வருடம் மார்ச் மாதம் வரை, இப்பூதம் இலங்கை ஆட்சியாளர்களை துரத்தியபடியே இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

விசாரணைப் பூதத்தை விரட்ட ஐ.நா. மனித உரிமைப் பேரவைக்கு அனுப்பப்பட்ட மந்திரிகள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் மத்தியில் பரப்புரை யாகங்களைச் செய்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் சர்வதேச மனித உரிமைச்சங்கங்களும் சுயாதீன அனைத்துலக விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றன.

“வரும் ஆனால் வராது’ என்று இழுபறி நிலையில் இருந்த நிபுணர் குழுவின் அறிக்கையை மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பித்துவிட்டு, தனது கடமை முடிந்து விட்டதென பான் கீ மூனும் ஒதுங்கிவிட்டார்.

இனி நடைபெறப் போவது இராஜதந்திரப் போர். பேரவையில் இருக்கும் 47 நாடுகளை வென்றெடுக்கும் போர் ஆரம்பமாகப் போகிறது.

இருப்பினும் மார்ச் மாதத்திற்கு முன்பாக ஐ.நா. சபையை ஆக்கிரமிக்கும் முக்கிய விடயமாக பலஸ்தீனப் பிரச்சினை இடம்பிடிக்கக் கூடிய ஏது நிலைகள் காணப்படுகின்றன.

கிழக்கு ஜெரூசலத்தை தலைநகராகவும், 1967 ஆம் ஆண்டு வரை தம் வசம் இருந்த எல்லைகளைக் கொண்ட பலஸ்தீன தனி அரசிற்கான பிரேரணை ஒன்றினை இம்மாத இறுதியில் பாதுகாப்புச் சபையில் முன் வைக்கப் போகிறது பலஸ்தீன விடுதலை இயக்கம். (பி.எல்.ஓ.)

அமெரிக்க மத்தியஸ்திலான பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கையிழந்த நிலையில், தனி நாட்டுக் கோரிக்கை ஒன்றின் ஊடாக அழுத்தத்தைக் கொடுத்து காத்திரமான பேச்சுவார்த்தையில் ஈடுபட (பி.எல்.ஓ.) முயற்சிப்பதாக மேற்குலக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஆகவே, பாதுகாப்புச் சபையில் அமெரிக்கத் தரப்பினர் வெட்டு வாக்கினைப் பிரயோகித்து பிரேரணையை முறியடித்தாலும் ஐ.நா. பொதுச் சபைக்கு இதனைக் கொண்டு செல்ல பலஸ்தீன அமைப்பு முயற்சிக்கும்.

இதில் பெரும்பான்மையான சர்வதேச நாடுகளின் ஆதரவு பலஸ்தீனர்களுக்கும் கிடைக்கும் அதேவேளை, இவ்விவகாரத்தில் இராஜதந்திர தோல்வியினை முகங் கொடுக்க வேண்டிய நிலைக்கு அமெரிக்கா தள்ளப்படலாம்.

இஸ்ரேலினை அங்கீகரித்த அரபுலகின் முக்கிய இரண்டு நாடுகளான எகிப்தும் துருக்கியும் பலஸ்தீன தனி அரசுக்கு ஆதரவாக இருப்பதைக் கவனிக்க வேண்டும்.

இந்நிலையில் இலங்கை விவகாரத்தில் எவ்வாறான நிலைப்பாட்டினை அமெரிக்கா எடுக்குமென்பதை எதிர்வு கூற முடியாது.

பலஸ்தீன விவகாரத்தால் போர்க் குற்ற விசாரணை பின் தள்ளப்படக் கூடிய நெருக்கடி நிலை ஏற்படலாம். இவை தவிர, ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை விவகாரம் சூடு பிடித்திருக்கும் நிலையில் நிபந்தனையற்ற ஆதரவினை வழங்கும் சீனா குறித்து பகிரங்கமாக புகழத் தொடங்கியுள்ளது இலங்கை அரசு.

அத்தோடு ஆபிரிக்க ஒன்றிய நாடுகளின் ஆதரவு தமக்குப் பரிபூரணமாக இருப்பதாகவும் நம்பிக்கை தெரிவிக்கின்றார் இலங்கை வெளிநாட்டமைச்சர். மனித உரிமைப் பேரவையிலுள்ள 47 நாடுகளில் 39 நாடுகள், போர்க் குற்ற விசாரணைக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதாகவும் விளம்பரப்படுத்தப்படுகிறது.

அதேவேளை, கிழக்கு மற்றும் தெற்காசிய விவகாரங்களிற்கான அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக்கின் இலங்கை விஜயத்தையும் அதன் போது அவர் தெரிவித்த கருத்துகளையும் மேற்குலகத் தலையீடாகக் காண்பிக்கும் வகையில் பரப்புரைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அத்தோடு மேற்குலகிற்கு எதிரான நாடுகளின் ஆதரவினைப் பெற்றுக் கொள்வதற்கு இப்பரப்புரை பயன்படுமென இலங்கை அரசு கணிப்பிடுகிறது.

போர்க் குற்ற விசாரணை முன்னெடுக்கப்படுவதனைத் தடுப்பதற்கு சில நாடுகளின் ஆதரவினை இலங்கை அரசு வேண்டி நின்றாலும் வெளிநாட்டு நேரடி முதலீடு என்கிற விடயத்தில் மேற்குலகு முதலீட்டாளர்களிலேயே இலங்கை அதிகம் தங்கியிருப்பதைக் கவனிக்க வேண்டும்.

யுத்தம் முடிவடைந்தாலும் இராணுவ நிர்வாக மயமாக்கல் என்பதனை நோக்கி இலங்கை நகர்ந்து செல்வதாகக் கருதும் பன்னாட்டு நிதி நிறுவனங்கள், இலங்கையில் முதலிடுவதற்கு தயக்கம் காட்டுவதை சில புள்ளி விபரங்கள் வெளிப்படுத்துகின்றன.

இவ்வருட முதல் ஆறு மாதங்களில் வெளிநாட்டு நேரடி முதலீடாக (FDI) 413 மில்லியன் டொலர்களையே இலங்கை பெற்றுள்ளது. ஓ.ஈ.சீ.டி. (OECD) வெளியிட்ட அபாயகரமான நாடுகளின் பட்டியலில் (Country Risk Classification Report) அங்கோலா, ஜோர்ஜியா, உகண்டா மற்றும் ஈரான் என்பவற்றோடு ஆறாவது தரத்தில் இலங்கையும் சேர்க்கப்பட்டுள்ளது.

அத்தோடு அரசியல் ஸ்திரத் தன்மையற்ற அபாயகரமான நாடுகளின் வரை படமொன்றினை வெளியிட்டுள்ள ஏ.ஓ. என் (AON) அமைப்பானது, தனது அறிக்கையில் இலங்கை தொடர்பாக மூன்று விடயங்களை குறிப்பிடுகிறது.

அதில் வேலை நிறுத்தப் போராட்டம், கலகம் மற்றும் அமைதியற்ற சூழல் என்பவற்றோடு வழங்கல் பாதையிலுள்ள இடையூறுகள், அரச கடன்களை மீளச் செலுத்துவதிலுள்ள நெருக்கடிகள் குறித்து சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

ஆகவே இத்தகைய ஆய்வுகள் வெளிப்படுத்தும் செய்திகளினால் அச்சமடையும் முதலீட்டாளர்கள், தமது முதலீடுகளிற்கான பாதுகாப்பு குறித்து கவலையடைகிறார்கள். ஸ்திரமற்ற நாடுகளில் மேற்கொள்ளப்படும் முதலீட்டிற்கான காப்புறுதி உத்தரவாதமும் கேள்விக்குள்ளாக்கப்படும்.

இலங்கையின் ஆட்சிக் கட்டமைப்பு அதிகாரங்கள் யாவும் ஜனாதிபதி, அவரின் சகோதரர்கள் மற்றும் இராணுவத்தினரிடமே தற்போது உள்ளதாக அண்மையில் சர்வதேச நெருக்கடி குழு (International Crisis Group) வெளியிட்ட அறிக்கையால் மேற்குலக முதலீட்டாளர்கள் நிச்சயம் அதிர்ச்சியடைந்திருப்பார்கள்.

ஆட்சி பீடத்தை நோக்கி போர்க் குற்ற விசாரணை என்கிற பெரும் பூதம் கட்டவிழ்த்து விடப்படுகையில், தற்போதைய உலகப் பொருளாதார நெருக்கடி நிலையால் தடுமாறும் முதலீட்டாளர்கள், இலங்கைக்குப் பதிலாக பாதுகாப்பான வேறு இடம் நோக்கியே நகர்வார்கள்.

தற்போது ஐரோப்பாவிலும் பொருளாதார நெருக்கடிகள் தீவிரமடைந்துள்ளன.

கிரேக்க தேசமானது வங்குரோத்து நிலையை எப்போது அடையும் என்பதற்கான நாள் குறித்து விவாதமும் நடைபெறுகிறது. யூரோ நாணயத்தை பயன்படுத்தும் நாடுகளை இணைத்து யூரோ முறிகளை (EURO BOND) அறிமுகப்படுத்தலாம் என்கிற ஆலோசனை தீவிரமாகப் பரிசீலிக்கப்படுகிறது.

ஐரோப்பாவில் பொருண்மிய நிலையில் முதலாவது இடத்திலுள்ள ஜேர்மனிக்கு இம் முறியை உருவாக்குவதில் உடன்பாடில்லை.

யூரோ முறிகளின் அறிமுகம், வரவு செலவுத் திட்டத்தில் மேற்கொள்ளப்படும் நிதிச் சிக்கன நடவடிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தி, முறிகளினூடாக பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்கலாமென்கிற கற்பிதத்தை, பாதிக்கப்பட்ட நாடுகளில் உருவாக்கி விடுமென்பதே ஜேர்மனியின் வாதம்.

ஆயினும் யூரோ முறிகள் விநியோகிக்கப்பட்டால் அதற்கான முழுப் பொறுப்பினை அதிலுள்ள 17 நாடுகளும் பகிர்ந்து கொள்ள வேண்டும். இதுதான் ஜேர்மனி நாட்டின் பிரச்சினை.

அதேவேளை இத்தாலிய அரச முறிகளை வாங்குவதற்காக அந்நாட்டின் நிதியமைச்சரோடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் சீனாவும் யூரோ முறிகளையே தமது முதல் தெரிவாக ஏற்றுக் கொள்ளுமென எதிர்பார்க்கலாம்.

சீன முதலீட்டுக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் லூ ஜிவெய் (Lou Jiwei) இத்தாலியோடு தொடர்ச்சியாக உரையாடினாலும் இந்த முறிக் கொள்வனவிற்கு அப்பால், யூரோ வலயத்திலுள்ள பாரிய பன்னாட்டு கம்பனிகளுடன் இணைந்து (MERGER) கொள்வதற்கே சீனா முதலீட்டாளர்கள் விரும்புகின்றார்கள்.

ஐரோப்பாவின் மூன்றாவது பெரிய பொருளாதார பலம் கொண்ட நாடான இத்தாலியின் மொத்த கடன், வருடாந்த மொத்த உள்ளூர் உற்பத்தியின் (GDP) 120 சதவீதமாகும்.

யூரோ நாணயத்தை ஏற்றுக் கொண்டால் குறைந்த வட்டியில் இலகுவாகக் கடன் வாங்கலாமென்று அதனை ஏற்றுக் கொண்ட கிரேக்க தேசத்தின் கடனளவு, மொத்த உள்ளூர் உற்பத்தியின் 130 சதவீதமாகும்.

ஆகவே இக்கடன் தொல்லையிலிருந்து மீள, தனது வெளிநாட்டு நாணயக் கையிருப்பில் 3.2 ரில்லியன் டொலர் பெறுமதியான யூரோ சொத்துக்களை வைத்திருக்கும் சீனாவினை நம்பியிருக்கிறது நெருக்கடிக்குள்ளாகும் சில ஐரோப்பிய நாடுகள்.

இவை தவிர சீனாவின் கையிருப்பில் 1.17 ரில்லியன் டொலர் அமெரிக்க கடன்கள் இருக்கும் அதேவேளை, ஐரோப்பிய நாடுகளின் முறிகளை வாங்கிக் குவித்தால் யூரோ நாணயம் ஸ்திரமடைவதோடு, சீன -ஐரோப்பிய வர்த்தகமும் மேம்படுமென சீன பொருளியலாளர்கள் கருதுகின்றனர்.

இப்போக்குகளை உன்னிப்பாக அவதானிக்கும் இலங்கை ஆட்சியாளர்கள், இனவழிப்பு குற்றச்சாட்டு மற்றும் பொருளாதார நெருக்கடி போன்றவற்றிலிருந்து தன்னைக் காப்பாற்றும் ஒரே நாடு சீனாவாக இருக்க முடியுமென்று எண்ணுகிறது.

ஆனால் கடாபியை ஆதரித்த சீன தேசம், இன்று லிபியாவின் தேசிய இடைக்கால சபையினை அங்கீகரித்த செய்தியை இன்னமும் இலங்கை சரிவர புரிந்து கொள்ளவில்லை போல் தெரிகிறது.

http://www.alaikal.com/news/?p=82663

  • தொடங்கியவர்

பொதுவாக எழுத்தப்படும் செய்திக்குறிப்புக்கள், ஆய்வுகள் ஒரே கோட்டிலேயே பயணிப்பவையாக இருக்கும்.

இந்தக்கட்டுரை பல சர்வதேச விடயங்களை இணைத்து எமது தாயக பிரச்சனையை அலசியுள்ளது வித்தியாசமாக உள்ளது,

யதார்த்தமாயும் உள்ளது.

இன்று, முன்னெப்போதும் இல்லாத மாதிரி எமது பிரச்சனை சர்வதேசமயமாக்கப்பட்டுள்ளது.

எனவே இந்தியா - சீனா என்ற வட்டத்திற்கு அப்பால் வைத்தே சிதிக்கவேண்டிய தேவை எமக்கும் உள்ளது.

சாவகச்சேரி, கல்வயலில் நடந்தது என்ன? கிறீஸ் பூதம் கதை சொல்லும் இராணுவம்

news

எங்கள் முகாம் பகுதியை அண்டி அடர்ந்த பற்றைக்காடு. அங்கே மறைந்து ஒளிந்திருந் தான் நிர்வாணக் கோலத்தில் இளைஞன் ஒருவன்.

அவ்வழியே வந்த படையினரைக் கண்டு பதுங்கியிருந்த இளைஞன் தலைதெறிக்க ஓடினான். இராணுவமுகாம் பகுதியை நோக்கியே அவன் ஓடினான்.

இவ்வாறு கிறீஸ் பூதம் பாணியில் நேற்றைய தினம் காலை சாவகச்சேரி, கல்வயல் பகுதியிலுள்ள 11 ஆவது இராணுவத் தளத்துக்கு அருகில் நடந்த சம்பவத்தை விவரித்தார் அதன் பொறுப்பதிகாரி கேணல் ஹேமரத்ன.

இந்த இளைஞனை மடக்கிப் பிடித்தனர் எமது படையினர். இளைஞனின் பெயர் இராமையா காண்டீபன் (வயது 26). சாவகச்சேரி, சங்கத்தானைப் பகுதியைச் சேர்ந்தவர். இவரை நாம் சாவகச்சேரிப் பொலிஸாரிடம் ஒப்படைத்து விட்டோம் என்றும் கேணல் குறிப்பிட்டார்.

சம்பவம் குறித்து அவர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் இருந்தவாறு விவரித்தார்.

அவர் கூறியதாவது:

11 ஆவது இராணுவ படைத் தளத்துக்குப் பின்புறமாகவுள்ள அடர்ந்த பற்றைக்குள் இளைஞர் ஒருவர் நிர்வாணமாக சந்தேகத்துக்கிடமான முறையில் ஒளித்திருந்தார்.

கல்வயல் வீதி வழியாக இராணுவத்தினர் சென்று கொண்டிருந்த போது இன்று காலை 7.30 மணியளவில் (நேற்று) அந்த இளைஞர் பற்றைப் பகுதியில் இருந்து இராணுவ முகாமை நோக்கி நிர்வாணமாக ஓடினார் அதனை அவதானித்த இராணுவத்தினர் அவரை மடக்கிப் பிடித்தனர்.

பிரஸ்தாப இளைஞர் சாவகச்சேரி சங்கத்தானையைச் சேர்ந்தவர் எனத் தெரிய வந்தது. அந்தப் பற்றைக்குள் அந்த இளைஞரின் சைக்கிள், ரீசேட், அரைக் காற்சட்டை ஆகியன மீட்கப்பட்டுள்ளன. உடனடியாக இளைஞர் சாவகச்சேரிப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து சாவகச்சேரிப் பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் தொடர்பு கொண்டபோது

இராணுவ பொறுப்பதிகாரியினால், முகாமை அண்டிய பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடியதாக இளைஞர் ஒருவர் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அந்த இளைஞர் மீதான விசாரணைகளை மேற்கொண்டு வருகிறோம்.

அவர் உளரீதியான பாதிப்புக்கு உட்பட்டவராக இருக்கலாம் எனக் கருதுகிறோம். அவரை சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியுள்ளது. அந்த அறிக்கையின் பிரகாரம் அவர் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார். என்றார்.

பொலிஸ் நிலையத்துக்கு வந்திருந்த பிரஸ்தாப இளைஞரின் சகோதரரிடம் என்ன நடந்தது என்று கேட்டபோது அவர் சொன்னார்:

சங்கத்தானை அரசடியில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக காண்டீபன் சைக்கிள் திருத்தும் கடையை நடத்தி வருகிறார். இவரை கல்வயல், சாவகச்சேரி, சங்கத்தானை போன்ற பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு நன்றாகத் தெரியும்.

இன்று காலை 8.30 மணியளவில் (நேற்று) சாவகச்சேரியிலுள்ள வி.எம்.கே என்ற கிறேசருக்கு கற்தூண் எடுப்பதற்குச் செல்வதாக வீட்டில் கூறிவிட்டுச் சைக்கிளில் சென்றார்.

அவரை இராணுவம் வழி மறித்து தாக்கியுள்ளது. அதனை நேரில் பார்த்த ஒருவர் எனக்கு தொலைபேசி மூலம் தகவல் தந்தார்.

உடனேயே சம்பவ இடத்துக்குச் சென்றேன். காண்டீபன் துவாய்த் துண்டு மட்டும் அணிந்த நிலையில் இருந்தார். இராணுவமே காண்டீபன் அணிந்திருந்த ஆடைகளைக் களைந்து விட்டுத் தாக்கியதைப் பலரும் அவதானித்துள்ளனர் என்றார்.

பலாலி படைத் தலைமையகத்தின் ஊடகப் பிரிவின் ஏற்பாட்டில் யாழ். நகரிலுள்ள இராணுவ சிவில் அலுவலகத்துக்கு நேற்று செய்தியாளர்கள் அழைக்கப்பட்டு அங்கிருந்து இராணுவத்தினர் தமது வாகனத்தில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கும் ஏற்றிச் சென்றதுடன் சம்பவ இடத்துக்கும் கூட்டிச் சென்றனர்.

இதேவேளை, பிடிபட்ட இளைஞரை நேரில் காண்பிக்கு மாறு செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு 11 ஆவது இராணுவ படைப்பிரிவு பொறுப்பதிகாரியும் சாவகச்சேரி பொலிஸ் பொறுப்பதிகாரியும் மறுத்து விட்டனர்.

இது இவ்வாறிருக்க, பிரஸ்தாப இளைஞன் நேற்றுப் பிற்பகல் யாழ். போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டார்.

இது தொடர்பாக சட்ட வைத்திய அதிகாரியிடம் கேட்டபோது:

இராமையா காண்டீபன் என்ற இளைஞன் எந்த விதமான மன நோய்க்கும் உட்பட்டிருக்கவில்லை எனத் தெரியவந்துள்ளது என்றார்.

http://onlineuthayan...313564519152416

Edited by Nellaiyan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.