Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏன் பொங்குதமிழ் - தமிழீழ மக்கள் பேரவை பிரான்ஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் பொங்குதமிழ் - தமிழீழ மக்கள் பேரவை பிரான்ஸ்

fr-makalperavai-f.jpg

என்றும் ஈழத்தமிழர்களின் போராட்டத்தை தீர்கதரிசனமாக முன் கூட்டியே கூறியவர் ஈழத்தமிழர்களின் தேசிய தலைவர். ஈழதமிழர்களின் விடுதலை போராட்டத்தை முன்னகர்த்தி செல்லும்படி எமது தேசிய தலைவர் இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டு மாவீரர் தினவுரையில் கூறியிருந்தார்.

முள்ளிவாய்காலில் சிறிலங்கா அரசு எல்லாம் முடிந்து விட்டது என்று கூறி வெற்றிவிழா கொண்டாடிய நேரத்தில், முள்ளிவாய்காலில் தமிழ் இன அழிப்பின் உச்சகட்டம், சிறிலங்கா சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து தமிழர்களுக்கு இழைத்த கொடுமைகள், படுகொலைகளுக்கு இதுவரைகாலமும் கண்மூடி பார்த்து கொண்டிருந்த உலக நாடுகள், ஊடகங்கள், சில மனிதநேய அமைப்புகள் இன்று முள்ளிவாய்காலில் உலகத்தின் கண்களை மூடுவதாக நினைத்து வன்னி போர்நிலத்திலிருந்து ஐக்கிய நாடுகள் சபைகளின் நிறுவனங்கள், மனித நேய அமைப்புகள், செஞ்சிலுவை சங்கம் மற்றும் ஊடகங்கள் எல்லோரையும் வெளியேற்றி விட்டு செய்த தமிழினப் படுகொலைகள், இன்று அதே ஊடகங்கள், அதே மனித நேய அமைப்புகள், ஐக்கிய நாடுகள் சபையின் மனித நேய அமைப்புகள் மற்றும் பல உலக நாடுகளால் சிறி லங்கா அரசு சர்வதேச விசாரணைக்குள் உட்படுத்தப்பட வேண்டும் என்ற நிலை உருவாக்கி இருக்கிறது.

இன்று சிறிலங்கா சிங்கள அரசுகள் சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து தமிழர்களுக்கு இழைத்த கொடுமைகள், இன சுத்திகரிப்பு, படுகொலைகளுக்கு எல்லாம் சேர்த்து வைத்தது போல் முள்ளிவாய்காலில் செய்த போர் குற்றம், மனித நேயத்திற்கு எதிரான குற்றத்திற்கு பதில் சொல்ல முடியாமல், இந்திய, சீனா, ரஷ்யா மற்றும் பல அணிசேரா நாடுகளின் தயவில் தப்பிக்கொண்டிருகிறது.

அதே நேரத்தில் தமிழனின் பலவீனம் அறிந்த சிங்கள அரசுகள் அன்றிலிருந்து இன்றுவரை பல அரச தந்திரங்கள், கீழ்த்தரமான தந்திரங்களை பயன்படுத்தி எவ்வாறு தமிழர்களை பிரித்ததோ அதே போல் இன்றும் தமிழர்களை கொண்டே சில கட்டமைப்புகளை உருவாக்கி, சில தமிழர்களை மக்களிடையே ஊடறுத்து, பல ஊடகங்களை பணம் வீசி தன்னுடமையாக்கி தமிழ் மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தி தன்னை உலக அரசிகளிடமிருந்து காப்பாற்றும் செயற்பாட்டில் இறங்கி நிற்பதை கண்டு கொண்டு நாம் பேசாமல் இருந்தால், முள்ளிவாய்காலில் இத்தனை தியாகங்கள் செய்து தம் இன்னுயிர்களை, தமிழ் நிலம் பாதுகாக்க தம் இரத்தத்தை இரைத்த தமிழ் மக்களுக்கு நாம் செய்யும் துரோகம் ஆகும்.

தமிழ் இளைஞ்சர்கள் ஆயுதம் ஏந்தி போராடி வன்னி மண்ணையும், கிழக்கு ஈழத்திலும் ஒரு நடை முறை அரசை நடாத்தி கொண்டிருந்த நேரத்தில், ராணுவத்தின் பிடியில் இருந்த யாழ்ப்பான பிரதேசத்தில், யாழ்ப்பான பல்கலைகழக மாணவர்கள் பொங்கி எழு தமிழா என்று பாரதிதாசன் எழுதியது போல் "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிஜமெனச் சங்கே முழங்கு" என்ற கூற்றுக்கு அமைய தமிழர்களை பொங்கி எழ வைத்தார்கள்.

இன்று உலக நாடுகள் பல சிறி லங்கா அரசு, சர்வதேச விசாரணைக்குள் உட்படுத்தப்பட வேண்டும் என்று வெறும் பேச்சளவில் கூறிக்கொண்டிருக்கிறது, அதே நேரத்தில் நாடு என்றளவில் அந்த நாட்டை பாதுகாக்க இந்திய, சீனா, ரசியா மற்றும் சில அணிசேரா நாடுகள் சிறிலங்காவை பாதுகாத்து கொண்டிருகிறது. நாட்டை பாதுகாக்கும் இந்த நாடுகள் குற்றமிழைத்த அரசு என்று தெரிந்து கொண்டும் தமிழர்களின் (மக்களின்) பாதுகாப்பை அதே அரசின் கையிலேய கொடுத்திருக்கிறது, அந்த அரசோ இன்றும் தொடர்ந்து தமிழர் நில பறிப்பு, சிங்கள மயப்படுத்தல், புத்தமயப்படுதல், தமிழன அழிப்பு என்று தாம் தொடங்கிய திட்டத்தை தொடர்ந்து கொண்டிருகிறது.

இந்த நிலையில் நாம் என்ன செய்யவேண்டும்!

எவ்வாறு அன்று சிங்கள பிடியில் இருந்த தமிழ் மக்கள் "தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு" என்று எழுந்தார்களோ, அதே போல் அவர்களின் குரலாக நாம் இன்று உலகெங்கும் வாழும் தமிழர்கள், உலக தமிழர்களாக, சர்வதேசத்திடம் பேசிக்கொண்டிருந்தது போதும், அங்கே ஒரு இனம் அழிந்து கொடுத்திருக்கிறது என்பதையும், அமெரிக்க சுற்று பயணம் புறப்பட்டிருக்கும் தமிழ் தேசிய கூட்டப்பைபினரிடமும், சிறிலங்கா அரசு செய்த தமிழ் இனப்படுகொலைக்கு, தமிழர்க்கு நீதி கிடைக்கும் நேரமிது, இந்த சந்தர்ப்பத்தை நாம் சரியான முறையில் பயன்படுத்தவேண்டும் என்ற செய்தியையும், தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் என்பதை வலியுறுத்த உலக தமிழர்கள் பொங்கி எழும் நேரமிது, ஐரோப்பாவில் ஜெனிவாவில் ஆரம்பித்த இந்த போராட்டம் உலகெங்கும் பரவவேண்டும்.

"தென்றிசையைப் பார்கின்றேன் என் சொல்வேன் என்றன் சிந்தையெல்லாம் தோள்களெல்லாம் பூரிக்கு தடா

அன்றலர்ந்த லங்கையினை ஆண்ட மறத்தமிழன் ஐயிரண்டு திசைமுகத்தும் தன் புகழை வைத்தோன்.........

விழ்ச்சியுரும் தமிழினத்தில் எழுச்சி வேண்டும், விசை ஒடிந்த தேகத்தில் வன்மை வேண்டும்,

சூழ்ச்சிதனை வஞ்சகத்தைப் பொறமை தன்னை தொகையாக எதிர் நிறுத்தி தூள் தூளாக்கும்

காழ்ச்சிந்தை மறச்செயல்கள் மிகவும் வேண்டும், கடல் போல் செந்தமிழை பெருக்கவேண்டும்"

என்ற பாரதிதாசனின் கூற்றுக்கு அமைய கனடா வாழ் தமிழர்கள் எல்லோரும் ஒன்றாக தமிழ் இனத்திற்கு தீமை இளைத்தவர்களை கூண்டில் ஏற்ற தமிழர்கள் விடுதலை அடைய பொங்கியெழு தமிழா! தமிழ் இனத்திற்கு கின்னல் விளைவித்ததால் சங்கே முழங்கு என்று பொங்கி எழட தமிழா!

இது தமிழனின் காலம், இந்த நேரத்தை நாம் சரியாக சிந்தித்து பயன்படுத்தவேண்டும், இன்று தமிழர்களின் உரிமை போராட்டத்தை சிதைக்க சிறி லங்கா அரசும், இந்திய அரசின் சில பகுதியினரும் பலரை எம்மிடையே விட்டு அன்று போல் இன்று எம்மை மீண்டும் ஒரு முள்ளிவாய்காலுக்கு இட்டு செல்ல முயற்ச்சிகள் செய்கிறார்கள், அதை புரிந்து கொண்டு கனடிய தமிழர்கள், அமெரிக்க தமிழர்கள் துணிச்சலுடனும் ஒற்றுமையுடனும் செயற்பட வேண்டியநேரமிது.

தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு

மின்னஞ்சல்: mte.france@gmail.com

http://www.vannionli...-post_5242.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போதைய இளையோர் நல்ல புத்திசாலிகள். அவர்களிடம் இந்த ஸ்ரீ லங்கா சீனியர் பாட்சா ஒன்றும் பலிக்காது.

தமிழரும் மேற்கத்தைய நாடுகளில் எல்லாவற்றையும் பார்த்து கற்றுவிட்டார்கள். பிச்சை கார நாட்டுக்கூட்டத்தின் சுத்துமாத்துகளை உடனே நம்ப தயாராக இல்லை.

பிரித்தானியாவில் குரோசரி கடை வைச்சிருக்கிரவன் ஸ்ரீ லங்காவின் வருட வருமானத்திலும் பார்க்க கூட உழைக்கிறான்.

சும்மா சிங்கள சொறி நாய்கள் குலைத்தால் அருண்டுவிடுவதா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.