Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவில் நீதிக்கான நடைப்பயணம் தொடங்கியது !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

London_TGTEwalk291011_150.jpg

பிரித்தானிய மக்களிடமும், பிரித்தானிய அரசாங்கத்திடமும் நீதி கேட்டு, மன்செஸ்டர் நகரில் இருந்து லண்டன் மாநகரம் வரையிலான 'நீதிக்கான நடைப்பயணம்' இன்று சனிக்கிழமை (29-10-2011) தொடங்கியது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதியான ஜெயசங்கர் முருகையா அவர்களினால் தொடங்கப்பட்ள்ள இந்த நடைப்பயணத்தில் குமார், சிவச்சந்திரன், தேவன் ஆகிய விடுதலைச் செயற்பாட்டாளர்களும் இணைந்துள்ளனர்.

இன்று முதல் 7-11-2011 வரைக்குமாக அமையவுள்ள இந்த நடைப்பயணம் ஐந்து கோரிக்கைகளை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படுகின்றது.

* ஈழத்தமிழர்களின் மீதான சிறிலங்கா அரச பயங்கரவாதிகளின் இனப்படுகொலையையும், போர்க்குற்றங்களையும், மானுடத்திற்கு எதிரான குற்றங்களையும் விசாரிப்பதற்காக ஒரு சுயாதீனமான, நீதியான, சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்படல் வேண்டும்.

* ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதோடு, தமிழீழத்தில் சர்வதேச சமுகத்தின் மத்தியஸ்தத்துடன் கூடிய ஒரு சர்வசன வாக்கெடுப்பு நடாத்தப்படல் வேண்டும்.

* ஈழத்தமிழர்களை ஒரு முற்றான இன அழிப்பிலிருந்து காப்பாற்றும் முகமாகவும், சிங்கள பேரினவாத அரச பயங்கரவாதத்தின் கொடுமைகளை ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வரும் ஈழத்தமிழர்களுக்கு நிவாரணம் அளிக்கும் முகமாகவும், தமிழீழத்தில் ஈழத்தமிழர்களின் தனியாட்சி உரிமையினை அங்கீகரிக்க வேண்டும்.

* சிறிலங்காவின் கொடுஞ்சிறைகளினுள்ளே அடைபட்டு, துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்து ஈழத்தமிழ் பொதுமக்களும், முன்னாள் போராளிகளும் உடனடியாக விடுதலை செய்யப்படல் வேண்டும்.

* தமிழீழத்தில் சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் யாவும் உடனடியாக நிறுத்தப்படுவதோடு, அனைத்து ஈழத்தமிழர்களும் அவர்களது சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தப்படல் வேண்டும்.

மேற்குறிப்பிட்டுள்ள கோரிக்கைகள் அடங்கிய மனு நீதிக்கான நடைப்பயணத்தின் போது பிரித்தானியப் பிரதமரிடமும், அமைச்சர்களிடமும் மற்றைய நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் கையளிக்கப்படவுள்ளது.

இதேவேளை நீதிக்கான நடைப்பயணத்தில் சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழீழன அழிப்பின் காணொளிச் சாட்சியங்கள் திறந்த வெளியரங்குகளில் திரையிட்டு காண்பிக்கபடவுள்ளன.

மேலும் ஐந்து கோரிக்கைகளுக்கும் ஆதரவு திரட்டும் நோக்கில் நடைப்பயணத்தின் போது பிரித்தானிய மக்களிடம் கையெழுத்தும் சேகரிக்கப்படவுள்ளது.

இந்தக் கையெழுத்துப் பிரதிகள் பிரித்தானிய அரசாங்கத்திற்கும், ஏனைய சர்வதேச மற்றும் மனித உரிமைகள் அமைப்புக்களுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

மற்றும் ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டத்தினை நியாயப்பாடுகளை வலியுறுத்தி துண்டுப் பிரசுரங்களும் நடைப்பண வழியெங்கிலும் விநியோகிக்கபடவுள்ளன.

நாதம் ஊடகசேவை

London_TGTEwalk291011_411_001.jpg

London_TGTEwalk291011_411_002.jpg

London_TGTEwalk291011_411_003.jpg

London_TGTEwalk291011_765_004.jpg

http://www.seithy.com/breifNews.php?newsID=51436&category=TamilNews&language=tamil

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதியான ஜெயசங்கர் முருகையா அவர்களினால் தொடங்கப்பட்ள்ள இந்த நடைப்பயணத்தில் குமார், சிவச்சந்திரன், தேவன் ஆகிய விடுதலைச் செயற்பாட்டாளர்களும் இணைந்துள்ளனர்.

நடந்த போர்குற்றங்கள், தொடரும் இனவழிப்புக்கள் - இவை பற்றி தாயக மக்களின் குரல்களாக புலம்பெயர் மக்களே உள்ளனர். அவர்களுக்காக பரப்புரை செய்து குரல்கொடுக்கும் உங்களுக்கு நன்றிகள்.

  • 2 weeks later...

நீதிக்கான நடைப்பயணம் பிரித்தானிய பிரதமர் அலுவலகம் முன் நிறைவடைந்தது !

தமிழர்களின் நியாயமான விடுதலைப் போராட்டத்தை முன்னிறுத்தி பிரித்தானிய மக்களிடமும், பிரித்தானிய அரசாங்கத்திடமும் நீதி கேட்டு முன்னெடுக்கப்பட்ட நீதிக்கான நடைப்பயணம் லண்டனில் நிறைவடைந்துள்ளது.

பிரித்தானிய பிரதமர் அலுவலக வாசல்தலத்தின் முன் நிறைவுகண்ட இந்த நடைப்பயணம் மன்செஸ்டர் நகரில் இருந்து 29-10-2001 அன்று தொடங்கியிருந்தது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதியான ஜெயசங்கர் முருகையா அவர்களோடு இந்த நடைப்பயணத்தில் குமார், சிவச்சந்திரன், தேவன் ஆகிய விடுதலைச் செயற்பாட்டாளர்களுடன், அயர்லாந்து நாட்டவரான பொல் அவர்களும் இணைந்திருந்தார்.

நடைப்பயண செயல்வீரர்களை பெருந்திரளானவர்கள் ஒளிவிளக்கேந்தி வரவேற்றனர்.

ஐந்து கோரிக்கையடங்கிய 'நீதிக்கான நடைப்பயண மனுவை' பிரதமர் அலுவலகத்திடம் கையளிக்கப்பட்டது.

உலகத் தமிழர் பேரவைத்தலைவர் அருட்தந்தை இமானுவேல், பிரித்தானிய தமிழர் பேரவைத் தலைவர் சுகந்தகுமார், அரசியல் ஆயவறிஞர் பி.ஏ.காதார், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரித்தானிய கிளைப் பிரதிநிதி கலாநிதி ரவி,ஊடகவியலாளர் தினேஸ், கறோ நகரசபை உறுப்பினர் சுரேஸ் கிருஸ்ணா, மனிதநேய தமிழர் அமைப்பு பிரதிநிதி சேனன், பிரித்தானிய தமிழர் ஒன்றிய இணைப்பாளர் ரஞ்சன், தமிழ் இளையோர் அமைப்பு பிரதிநிதி விமல், தமிழர் அமைப்பு பிரிதிநிதி ஞானம், அக் நௌவ் பிரதிநிதி ரிம் மார்டீன் ஆகிய அமைப்பு பிரிதிநிதிகளுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் வெளிவிவகாரத்துறை அமைச்சர் தணிகாசலம் தயாபரன், மாவீரர் குடும்ப- முன்னாள் போராளிகள் நலம்பேணல் அமைச்சர்- துணைப் பிரதமர் உருத்திராபதி சேகர், பெண்கள் - முதியோர் - சிறுவர் விவகாரத்துறை அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ், நிதித்துறை துணை அமைச்சர் இஜேந்திரா நடராஜா ஆகிய மக்கள் பிரிதிநிதிகளும் உரைநிகழ்த்தினர்.

நா.த.அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனின் உரையினை, துணைப்பிரதமர் உருத்திராபதி சேகர் அவர்கள் வாசித்தார்.

நீதிக்கான நடைப்பயணத்துக்கு உறுதுணை வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் தனது நன்றியைத் ஜெய்சங்கர் முருகையன் அவர்கள் எடுத்துரைத்தார்.

நீதிக்கான நடைப்பயணத்தின் கள ஒருங்கிணைப்பினை யோகி அவர்களும், தொழில்நுட்ப ஒருங்கிணைப்பினையும் சுயே சுயாதரன் அவர்கள் மேற்கொண்டிருந்தனர்.

நீதிக்கான நடைப்பயணத்தின் ஐங்கோரிக்கைகள் :

- ஈழத்தமிழர்களின் மீதான சிறிலங்கா அரச பயங்கரவாதிகளின் இனப்படுகொலையையும், போர்க்குற்றங்களையும், மானுடத்திற்கு எதிரான குற்றங்களையும் விசாரிப்பதற்காக ஒரு சுயாதீனமான, நீதியான, சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்படல் வேண்டும்.

- ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதோடு, தமிழீழத்தில் சர்வதேச சமுகத்தின் மத்தியஸ்தத்துடன் கூடிய ஒரு சர்வசன வாக்கெடுப்பு நடாத்தப்படல் வேண்டும்.

- ஈழத்தமிழர்களை ஒரு முற்றான இன அழிப்பிலிருந்து காப்பாற்றும் முகமாகவும், சிங்கள பேரினவாத அரச பயங்கரவாதத்தின் கொடுமைகளை ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வரும் ஈழத்தமிழர்களுக்கு நிவாரணம் அளிக்கும் முகமாகவும், தமிழீழத்தில் ஈழத்தமிழர்களின் தனியாட்சி உரிமையினை அங்கீகரிக்க வேண்டும்.

- சிறிலங்காவின் கொடுஞ்சிறைகளினுள்ளே அடைபட்டு, துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்து ஈழத்தமிழ் பொதுமக்களும், முன்னாள் போராளிகளும் உடனடியாக விடுதலை செய்யப்படல் வேண்டும்.

- தமிழீழத்தில் சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் யாவும் உடனடியாக நிறுத்தப்படுவதோடு, அனைத்து ஈழத்தமிழர்களும் அவர்களது சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தப்படல் வேண்டும்.

நாதம் ஊடகசேவை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.