Jump to content

புலிகளும், இந்தியப் பாதுகாப்பும் - 2


Recommended Posts

பதியப்பட்டது

புலிகளும், இந்தியப் பாதுகாப்பும் - 2

national4mv.gif

தமிழ் ஈழம் அமைவதற்கு கடந்த காலங்களில் தடையாக இருந்த, தொடர்ந்து தடையாக இருக்கின்ற சில பிரச்சனைகள் பற்றி இந்தப் பதிவிலும், அடுத்து வரும் பதிவுகளிலும் எழுத முனைந்துள்ளேன்

sl5mq.gif

இலங்கை எப்பொழுதுமே இந்தியாவிற்கு தலைவலியாகவே இருந்து வந்திருக்கிறது. இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் 1971ல் நடந்த போரின் பொழுது பங்களாதேஷ் (கிழக்கு பாக்கிஸ்தான்) செல்லும் பாக்கிஸ்தான் விமானங்கள் எரிபொருள் நிரப்புவதற்கு இலங்கையில் தான் தரையிறங்கின. அன்றைக்கு தொடங்கிய இலங்கை மீதான இந்தியாவின் அவநம்பிக்கை குறையவேயில்லை. பின் நாளில் இந்தியாவின் பாதுகாப்பிற்கு இலங்கை அச்சத்தை ஏற்படுத்துமோ என்ற சந்தேகம் வலுப் பெற்றுக் கொண்டே இருந்தது. சிங்கள அரசும் இந்த சந்தேகத்தை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தியது. குறிப்பாக அமெரிக்காவின் ஜெனரல் வால்டர்ஸின் இலங்கைப் பயணம். வால்டர்ஸ் இந்திய எதிர்ப்பு உணர்வு கொண்டவர். அமெரிக்க இராணுவ மற்றும் உளவு அமைப்புகளின் பிரதிநிதியாக இந்தியா அவரை கருதியது. அவர் இலங்கைக்கு இஸ்ரேல் மற்றும் அமெரிக்க இராணுவ உதவிகளை பெற்று தர முயலுவதாக அப்பொழுது நம்பப்பட்டது. இந்தியா இலங்கை போராளிக் குழுக்களுக்கு வழங்கிய ஆதரவை அமெரிக்கா தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முனைந்தது.

அமெரிக்காவை நோக்கி நகர்ந்த இலங்கையின் பார்வை தவிர 1980களில் வேகமாக வளர்ந்த இலங்கையின் பொருளாதாரமும் இந்திய உளவு நிறுவனமான ராவிற்கு எரிச்சலை ஏற்படுத்தியது. தெற்காசியாவில் உள்ள நாடுகளில் மத்தியில் இந்தியாவின் ஆளுமையை நிலைநாட்டும் நோக்கத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த இருந்த ரா, இலங்கை மீது தன் கவனத்தை திருப்பியது.

இலங்கையில் அப்பொழுது நிலவிய சூழலும் ராவிற்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது.

இலங்கையில் இந்தியாவின் தலையீட்டை இரண்டு கோணங்களில் பார்க்கலாம்

- ஒன்று இலங்கையில் எழுந்த இனப்பிரச்சனை தமிழகத்தை அப்பொழுது தொந்தளிக்கச் செய்தது. இலங்கைப் பிரச்சனையில் தமிழர்களுக்கு சாதகமான நிலையை அன்று இந்தியா எடுத்திராவிட்டால் தமிழகத்தில் இந்தியாவிற்கு எதிரான உணர்வுகள் வெடித்திருக்கும்.

- மற்றொன்று இலங்கை பாக்கிஸ்தான் - அமெரிக்கா பக்கம் சாய்ந்து விடுமோ என்ற அச்சம். அவ்வாறு சாயும் பட்சத்தில் இலங்கையில் நிலை கொள்ளக் கூடிய அமெரிக்கப் படைகள் இந்தியாவிற்கு தெற்கில் ஒரு நிரந்தர தலைவலியாக மாறிவிடக்கூடிய சூழ்நிலை இருந்தது. இந்த பிரச்சனைகளில் இருந்து மீள வேண்டுமானால் அந் நாட்டை சீர்குலைப்பதும், வளர்ந்து வரும் இலங்கையின் பொருளாதாரத்தை குறைப்பதும் முக்கியமானது என ரா கருதியது.

எனவே தமிழ் போராளிக்குழுக்களுக்கு இந்தியா ஆயுதப் பயிற்சி அளிக்கத் தொடங்கியது. இதில் இந்தியாவிற்கு பல நன்மைகள் இருந்தன. இலங்கை அரசை போராளிக் குழுக்கள் மூலமாக மிரட்டலாம். இலங்கையில் தீவிரவாத பிரச்சனையை வளர்ப்பதன் மூலம் அந் நாட்டின் பொருளாதாரத்தையும் சீர்குலைக்கலாம். அதே சமயத்தில் தமிழகத்தில் உள்ள தமிழ் மக்களிடம் இந்தியா ஈழத் தமிழர்களிடம் அனுதாபம் கொண்டுள்ளதாக காண்பிக்கலாம்.

இந்தியா தனது இந்த நோக்கத்தில் வெற்றியை பெற்றது. தமிழ் போராளிக் குழுக்களுக்கு ஆதரவு தரும் அதே வேளையில் தமிழ் ஈழம் அமைந்து விடக்கூடாது என்பதிலும் இந்தியா கவனமாகவே இருந்தது. அதற்கு காரணம் இலங்கை இரண்டு துண்டாகும் பட்சத்தில் அதில் ஏதேனும் ஒரு நாடு இந்தியாவிற்கு எதிராகவே இருக்கும் என்ற அச்சம். உலகச் சூழ்நிலையும் அவ்வாறு தான் இருந்தது. சோவியத் யுனியன், அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளிடையே ஒரு நாட்டுடன் சார்பு நிலையை வளர்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் அன்றைக்கு பல நாடுகளுக்கு இருந்தது.

இவை தவிர தமிழ் ஈழம் அமைந்தால் தமிழகத்தில் அது போல தீவிரவாதம் எழக் கூடும் என்ற அச்சமும் இந்தியாவிற்கு இருந்தது. தமிழகத்தில் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இருந்து வந்த தமிழ் மொழி உணர்வும் அதற்கு ஒரு காரணம்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் தன்னுடைய பாதுகாப்பிற்கும், இறையாண்மைக்கும் எந்த சேதமும் விளைந்து விடக்கூடாது என்ற நோக்கிலேயே இலங்கை குறித்தான இந்திய நிலைப்பாடு இருந்தது.

"Inter-state relations are not governed by the logic of morality. They were and they remain an amoral phenomenon.."

இலங்கைப் பிரச்சனையில் குட்டையை குழப்பியவர்களில் முக்கியமானவரான ஜெ.என்.தீக்ஷத் இலங்கைப் பிரச்சனையில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து எழுதும் பொழுது இப்படித் தான் கூறினார். இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளில் நியாயம், நேர்மை போன்றவற்றை எதிர்பார்க்க முடியாது என்பது தான் தீக்ஷ்த்தின் வாதம். இந்தியா, இலங்கை பிரச்சனையில் மேற்கொண்ட நிலைப்பாடு எவ்வாறு நியாயத்திற்கு புறம்பாக இருந்தது என்பதற்கு இதை விட வேறு யாரும் ஓப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட முடியாது.

flagbookletfigure12004ih.jpg

இலங்கை அரசுக்கு எதிர் நடவடிக்கையாக, இலங்கை அரசுக்கு பிரச்சனை கொடுக்கும் பொருட்டும், தன்னுடைய தனிப்பட்ட சுயநலத்திற்காக மட்டுமே இலங்கை போராளி குழுக்களுக்கு இந்தியா ரா மூலமாக பயிற்சி அளிக்க தொடங்கியது. இதில் தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா முயற்சி எடுத்தது என்பதெல்லாம் வெளிவேஷம். தமிழகத்து மக்களை நம்ப வைக்க போடப்பட்ட வேடம். இப் பிரந்தியத்தில் இந்தியாவின் பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சியில் ஈழத்தமிழர்கள் பகடைக்காய்களாக்கப்பட்டனர் என்பது தான் உண்மை. அது தான் ஜெ.என்.தீக்ஷத் கூறும் amoral phenomenon.

இலங்கை போராளிக் குழுக்களை தங்களுடைய கூலிப்படைகளாக மாற்றுவது, இலங்கை அரசை போராளிக் குழுக்கள் மூலம் மிரட்டி தன் வழிக்கு கொண்டு வருவது, இந்து மகா சமுத்திரத்திலும் தெற்காசியாவிலும் தான் மட்டுமே வல்லரசு, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இங்கு இடமில்லை என்பதை வெளிக்காட்டுவது இவையே இந்தியா 1980களில் இலங்கை விஷயத்தில் கொண்ட கொள்கை.

இந்தியா அனைத்து போராளிக் குழுக்களையும் தன்னுடைய கூலிப்படைகளாவே மாற்றியது. மாலத்தீவில் ரா மேற்க்கொண்ட நடவடிக்கைகளுக்கு இலங்கை போராளிக் குழுக்களை பயன்படுத்திக் கொண்டது. ராவின் செல்லப் பிள்ளைகளாக ஈழப் போராளிக் குழுக்கள் மாறின.

ஆனால் இந்தியாவின் எண்ணம் விடுதலைப் புலிகள் விஷயத்திலும், அதன் தலைவர் பிரபாகரன் விஷயத்திலும் தவறாகிப் போனது. இந்திய-இலங்கை ஓப்பந்தத்தின் பொழுது கூட விடுதலைப் புலிகள் தங்கள் சொல்படி கேட்கும் கிளிப் பிள்ளைகளாக இருப்பார்கள் என்று ரா எண்ணியது. அப்போதைய ரா அமைப்பின் தலைவர் வர்மா, ராஜீவ் காந்தியிடம் "these are boys whom we know and with whom we have been in touch and so they will listen to us" என்று கூறினாராம் (Assignment Colombo - By JN Dixit)

அவ்வாறு இல்லாமல் எதிர்த்தாலும் எளிதில் நசுக்கி விடலாம் என்று ரா கருதியது.

ஆனால் இந்தியாவின் எண்ணம் நிறைவேற வில்லை. அதற்கு முக்கிய காரணம் பிரபாகரன் தமிழ் ஈழம் என்பதை வெளிப்பூச்சாக பேசுவதில்லை. தமிழ் ஈழம் அமைத்தே தீருவது என்ற உறுதியான நிலையை எக் காலத்திலும் பிரபாகரன் சமரசம் செய்து கொண்டதில்லை. தன்னுடைய அதே உறுதிப்பாட்டுடனே தமிழ் ஈழத்தை அடையும் லட்சிய வேட்கையுடனே விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உள்ளவர்களையும் அவர் உருவாக்கினார்.

விடுதலைப் புலிகளை கடுமையாக எதிர்த்த ஜெ.என்.தீக்ஷ்த்தே அவரது Assignment Colombo என்ற புத்தகத்தில் இவ்வாறு கூறுகிறார்

The LTTE's emergence as the most dominant and effective politico-military force representing Tamil interests was due to the following factors:

First, the character and personality of its leader V Prabhakaran who is disciplined, austere and passionately committed to the cause of Sri Lankan Tamils's liberation. Whatever he may be criticised for, it cannot be denied that the man has an inner fire and dedication and he is endowed with natural military abilities, both strategic and tactical. He has also proved that he is a keen observer of the nature of competitive and critical politics. He has proved his abilities in judging political events and his adroitness in responding to them.

Secondly, he has created a highly disciplined, and dedicated cadres, a manifestation of which is inherent in what is called the 'cyanide cult.' Each regular member of the LTTE carries a cyanide pill and is pledged to committing suicide rather than being captured by the enemy.

The third factor is the cult and creed of honesty in the disbursement and utilisation of resources. Despite long years spent in struggle, the LTTE cadres were known for their simple living, lack of any tendency to exploit the people and their operational preparedness.

The fourth factor has been the LTTE's ability to upgrade its political and military capacities including technological inputs despite the constraints imposed on it by Sri Lankan forces and later by India.

The fifth factor is a totally amoral and deadly violent approach in dealing with those the LTTE considers as enemies.

The sixth factor is Prabhakaran's success in gathering around him senior advisers with diverse political, administrative and technological capacities, which contributed to effective training of his cadres, optimum utilisation of the military equipment which he had, and the structuring of an efficient command and control system.

தன்னுடைய "Island of Blood" என்ற புத்தகத்தில் பிரபாகரனை மிக அதிகபட்சமாக சந்தித்த பத்திரிக்கையாளர் என்று சொல்லப்படும் இந்திய பத்திரிக்கையாளர் அனிதா பிரதாப் இதேக் கருத்தை கூறுகிறார். இலங்கைப் பிரச்சனையின் ஆரம்ப காலங்களில் இந்தியாவில் இருந்த பிரபாகரனை சந்தித்த அனிதா, பிற போராளிக் குழுக்களின் தலைவர்களை விட பிரபாகரனிடம் மட்டுமே தமிழர் உரிமை குறித்த தீவிரத்தையும், தமிழ் ஈழத்தை அடைந்தே தீருவது என்ற லட்சியத்தையும் கண்டதாக தெரிவிக்கிறார்.

.. The other thing about Pirabakaran that made a deep impression on me was his unwavering commitment to the cause of Eelam. It was deep -rooted, non-negotiable convication.

...My encounters with the LTTE guerrillas and their prodigious literature convinced me that Pirabhakaran was the man to watch out for. Compared to the other Tamil groups, the LTTE cadres were clearly superior. They exuded an aura of single-minded devotion to their cause

விடுதலைப் புலிகள் இயக்கம் எக் காரணம் கொண்டும் தமிழ் ஈழத்திற்காக சமரசம் செய்து கொண்டதில்லை. தமிழ் ஈழத்திற்கான பாதையில் எதிர்ப்பு வந்த பொழுதெல்லாம் அதனை எதிர்த்தே போரிட்டிருக்கிறார்கள். அனிதா பிரதாப்பிற்கு ஆரம்ப காலங்களில் அளித்த பேட்டிகளில் பிரபாகரன் ஒன்றை தெளிவு படுத்தியிருந்தார்.

நான் எதிர்காலத்தில் இந்தியாவை எதிர்த்து போரிட நேரலாம் என்று அனிதா பிரதாப்பிற்கு 1984ல் அளித்த பேட்டியிலேயே பிரபாகரன் கூறியிருந்தார். இது 1984ல் நிலவிய சூழலில் அனிதாவிற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏன் இவ்வாறு கூறுகிறீர்கள் என்று கேட்ட பொழுது "ஏனெனில் இந்தியாவில் 6 கோடி தமிழர்கள் இருக்கிறார்கள். இந்தியா தமிழ் ஈழம் அடைய அனுமதிக்காது" என்று பிரபாகரன் கூறினார்.

இந்தியா தமிழ் ஈழத்திற்கு எதிராக மாறிய பொழுது இந்தியாவை எதிர்த்து போரிடவும் பிரபாகரன் தயங்கவில்லை. நாளை அமெரிக்கா தன்னுடைய படைகளை களமிறக்கினாலும், அமெரிக்காவை எதிர்ப்பார். ஏனெனில் தமிழ் ஈழம் என்பது அவருக்கு deep -rooted, non-negotiable convication.

இந்தியாவிற்கு தன்னுடைய இறையான்மை, பாதுகாப்பு போன்றவை முக்கிய நோக்கமாக இருப்பதால் தமிழ் ஈழத்தை எதிர்த்து.

அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன ?

அமெரிக்காவிற்கு தமிழ் ஈழம் குறித்தோ, சிங்கள் இனவாதம் குறித்தோ எந்தக் கவலையும் இல்லை.

அமெரிக்காவிற்கு கடந்த காலங்களில் இந்தியாவிற்கு எதிராகவும் தெற்காசிய பிராந்தியத்தில் அமெரிக்கா நிலை கொள்ளக் கூடிய ஒரு இடமாகவும் இலங்கையை கருதி வந்துள்ளது. குறிப்பாக 1984/85ல் அமெரிக்கா "Voice of America" என்னும் ஒளிப்பரப்பு நிறுவனத்தை இலங்கையில் நிறுவ முயற்சி எடுத்தது. இதனை இராணுவ உளவு வேலைகளுக்கு அமெரிக்கா பயன்படுத்தும் என்று இந்தியா எண்ணியது. குறிப்பாக தன்னுடைய இராணுவ நிலைகளை கண்காணிப்பதற்கு அமெரிக்கா முயலுவதாக இந்தியா கருதியது. இது தவிர திருகோணமலை துறைமுகத்தில் அமெரிக்கா தன்னுடைய கடற்படை தளத்தை அமைக்க முயற்சித்தது. இதுவும் இந்தியாவிற்கு அச்சத்தை ஏற்படுத்தியது.

இவ்வாறான நிலையில் இந்தியா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுமே இலங்கை அரசாங்கத்துடன் நெருக்கத்தை ஏற்படுத்தவே முனைந்தன. 1985லேயே போராளிக் குழுக்களுக்கு உதவிகளை இந்தியா நிறுத்தியது. இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியது.

இலங்கையுடன் தமிழர்களுக்கான ஒப்பந்தம் என்ற போர்வையில் இந்தியா தன்னுடைய பாதுகாப்பை வலுப்படுத்த ஜெயவர்த்தனேவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. இரு நாடுகளுக்கிடையே பரிமாறிக் கொள்ளப்பட்ட கடிதங்கள் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கத்தை வெளிப்படுத்தின

இவையனைத்துமே தமிழ் ஈழத்திற்கு எதிராகவே கடந்த காலங்களில் அமைந்தன. பிராந்திய வல்லரசும், உலக வல்லரசும் தமிழர்களுக்கு எதிராகவே இருந்தன.

ஆனால்.....

தற்பொழுது உலக நிலை மாறி வருகிறது. கொள்கைகளும் மாறி வருகின்றன. நாடுகளின் வெளியுறவு கொள்கை மாறி வருகிறது. இந்தியா அமெரிக்கா இடையே பொருளாதார இணக்கம் ஏற்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தமிழ் ஈழத்திற்கு எதிரான இந்தியாவின் நிலையிலும், அமெரிக்காவின் நிலையிலும் மாற்றம் ஏற்படுமா ?

கடந்த காலங்களில் பிராந்திய முக்கியத்துவமுள்ள பகுதியாக இருந்தது போன்று இலங்கை இப்பொழுதும் இருக்கிறதா ?

விடுதலைப் புலிகளின் நோக்கம் சமரசத்திற்கு இடமில்லாத தமிழ் ஈழம் மட்டுமே. தமிழ் ஈழத்தை பிரபாகரனால் அமைக்க முடியுமா ?

நன்றி:தமிழ்சசி

http://thamizhsasi.blogspot.com/2006/01/2.html

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விசுகர்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி  எலான் மஸ்க்  என சொல்கிறார்கள்.எதற்கும் அடக்கி வாசியுங்கள். 😂 
    • மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை, ஊழல் ஒழிப்பு, சட்டமா அதிபர் திணைக்களம்: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு இம்மூன்றையும் மறுசீரமையுங்கள் - ஜனாதிபதியிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்     (நா.தனுஜா) நாட்டில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை சீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் செயற்திட்டப் பணிப்பாளர் பாஸில் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்களில் பிரதானமாகக் கருத்திலெடுக்கப்படவேண்டிய மூன்று மறுசீரமைப்புக்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன். நாம் கடந்த பல வருடகாலமாக இலங்கையில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சி குறித்து தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். நீண்டகாலமாக நீங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலும், கடந்த தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டிலும் இவ்விடயம் உள்வாங்கப்பட்டதுடன், சிறந்த ஆட்சியியல் நிர்வாகக்கட்டமைப்பை நிறுவுதல் எனும் பொது நோக்கத்தின் அடிப்படையில் பலர் ஒன்றிணைந்தனர். எனவே கடந்த 50 வருடங்களில் முதன்முறையாக வரலாற்று ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசியல் தன்முனைப்பு வெளிப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.  இவ்வாறானதொரு பின்னணியில் முதலாவதாக மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் தினந்தோறும் மேல்நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் முறையான விதத்தில் மறுசீரமைக்கப்படவேண்டும். குறிப்பாக குற்றங்களுக்கு விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மையொன்று நிலவும் பட்சத்தில், நாட்டின் ஒட்டுமொத்த குற்றவியல் சட்ட நடைமுறைகளும் சீர்குலைவடையும். இலங்கையில் தற்போது அவ்வாறானதொரு நிலையே காணப்படுகின்றது. மிகப்பாரதூரமான வழக்குகள் மேல்நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது அவசியமாகும். குற்றவியல் வழக்குகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இடமாற்றம் செய்யப்படுவதானது, அவ்வழக்கு விசாரணைகள் தாமதமடைவதற்கு வழிகோலியுள்ளன. நிர்வாக ரீதியான சிக்கல்கள் காரணமாக வழக்கு விசாரணைக்கான திகதிகள் அடிக்கடி மாற்றியமைக்கப்படுவதனால் வழக்குகள் பல வருடகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றன. எனவே அரசியல் தன்முனைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனை என்பவற்றின் ஊடாக இச்செயன்முறையை ஆக்கபூர்வமான விதத்தில் மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இரண்டாவதாக ஊழல் மோசடிகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தக்கூடியவாறான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அதன்படி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கான குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து தெரிவு செய்யும் தற்போதைய நடைமுறையைக் கைவிடவேண்டும். மாறாக குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்படுவதுடன், அவர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் தொடர்பற்ற முற்றிலும் சுயாதீனமானவர்களாக இருக்கவேண்டும்.  மூன்றாவதாக சட்டமா அதிபர் திணைக்களம் மறுசீரமைக்கப்படவேண்டும். 1978 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு ஏற்புடையதும், தன்னிச்சையான செயற்பாடுகளுக்குப் பெரிதும் இடமளிக்கக்கூடியவகையிலும் ஸ்தாபிக்கப்பட்ட கட்டமைப்பான சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தமுடியாது. எனவே இக்கட்டமைப்பு அவசியமான மறுசீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.     
    • Dee Dee Simon Sings "And I'm Telling You I'm Not Going" | Auditions | AGT 2024    
    • யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு!     யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை ஞாயிற்றுக்கிழமை (22) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.  அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://jaffnazone.com/news/47018#:~:text=யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட,5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.&text=இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார்.  
    • தனங்கிளப்பு பகுதியில் சட்டவிரோதமாக பனை மரங்கள் தறிப்பு!     தனக்கிளப்பு பகுதியில் 25க்கும் மேற்பட்ட அனுமதியற்ற சட்டவிரோத பனை மரங்கள் தொடர்ச்சியாக தறிக்கப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து  பனை அபிவிருத்தி சபையால் சாவகச்சேரி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . குறித்த சம்பவம் தொடர்பில் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவன் தெரிவிக்கையில், தனங்கிளப்புப் பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத பனை மரங்கள் வெட்டப்படுவதாக பனை அபிவிருத்திச் சபைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது. முறைப்பாட்டின் அடிப்படையில் எமது உத்தியோத்தர்கள் குறித்த இடத்திற்கு விஜமம் மேற்கொண்ட நிலையில் அங்கு 25க்கும் மேற்பட்ட பனை மரங்கள் தறிக்கப்பட்டமை அவதானிக்கப்பட்டதுடன் கனகர இயந்திரங்கள் குறித்த பகுதியில் கொண்டுவரப்பட்டமையும் நேரடியாக அவதானிக்கப்பட்டது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இள வயது பனைகள் பல தறிக்கப்பட்டும் அடிப்பாகங்கள் எயியூட்டப்பட்ட நிலையிலும் காணப்பட்டது. சம்பவம் தொடர்பில் நெல்லியடியைச் சேர்ந்த காணி உரிமையாளர் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் வழக்கு தாக்கல் செய்வதாக உறுதியளித்தனர். பனை மரங்களை வெட்டுவதற்காக எடுத்துவரப்பட்ட கனகர இயந்திரங்களை முறைப்பாட்டில் பதிவு செய்யுமாறு எமது உத்தியோகத்தர்கள் வலியுறுத்திய நிலையில் சாவகச்சேரி பொலிசார் ஏற்க மறுத்துள்ளனர். இந்த சட்ட விரோத செயற்பாடுகளுடன் சாவகச்சேரி பொலிசாருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்த நிலையில் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாகன இலக்கங்களை முறைப்பாட்டில் பதியாவிட்டால் மேலிடத்தில் முறைப்பாடு செய்ய வேண்டி வரும் எனக் கூறிய நிலையில் முறைப்பாட்டை ஏற்பதாக தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.  சட்ட விரோத பனை மரங்கள் தறிக்கப்பட்டால்  0779273042 பண்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை தர முடியும் என பனை அபிவிருத்திச் சபை தலைவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/201922  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.