Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்மக்களின் நம்பிக்கையை கூட்டமைப்பு தக்க வைத்துக்கொள்ள வேண்டும்

Featured Replies

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமெரிக்க விஜயம் தென்னிலங்கையில் பெரும் உணர்வலைகளையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கூட்டமைப்பு அமெரிக்காவுடன் எது குறித்துப் பேசப் போகின்றது என்பது தமிழ் மக்களுக்கே தெரியாது. அது மாத்திரமல்ல, அமெரிக்காவுக்குத் தெரியாத இலங்கை விவகாரம் இருக்குமா? என்பது கூட சந்தேகமே. எனினும், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் முதற் கொண்டு பல தரப்பினர் கூட்டமைப்பினரின் அமெரிக்க விஜயத்தை இனவாதமாக்கி இலங்கையின் இறைமைக்கு எதிராக கூட்டமைப்பும் அமெரிக்காவும் சதி செய்வதாகவும் தென்னிலங்கை மக்களுக்கு பூதாகரமாக்கி குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றனர்.

போதாததற்கு சிங்கள ஆங்கில நாளிதழ்களும் இந்த இனவாதத்திற்கு எண்ணெய் வார்த்து தென்னிலங்கை மக்களை அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப இனவாத கவசத்தால் இறுக மூடி வைத்துப் போர்த்தியுள்ளனர்.

தமிழ்ப் பத்திகை ஆசியர்களைச் சந்திக்கும் போதெல்லாம் இன வாதத்தை மாத்திரம் மீண்டும் புதுப்பித்துவிடாதீர்கள் என்ற வேண்டுகோளை அரச உயர்பீடம் தொடர்ச்சியாகக் கேட்டுக் கொள்கிறது.

ஆனால், தென்னிலங்கையில் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை சிங்கள மக்களிடையே தொடர்ந்தும் பேணும் வகையில் அராங்கத்தில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சிகளும் ஏன் அமைச்ர்களும் செயற்படுவதைத் தடுக்கும் நிலையில் அரசாங்கம் இல்லையா? அல்லது இத்தகைய போக்கு தனக்குத் தேவை என்ற வகையில் கண்டும் காணாதது போல் இருக்கின்றதா? என்று தமிழ் மக்கள் கேள்வி எழுப்புவதில் நியாயம் உள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளைத் துடைத்தெறிந்துவிட்டதாக மார்தட்டிக் கொண்டிருக்கும் தென்னிலங்கை ஜனநாயக வழியில் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு தொடர்ந்தும் புலிச் சாயம் பூசி பிரசாரத்தை முன்னெடுப்பது ஏன்?

அப்படியானால் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடை செய்தது போல் கூட்டமைப்பினரையும் முடக்கி விடுவதற்கான தென்னிலங்கை நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக இந்தப் பிரசாரப் போர் முன்னெடுக்கப்படுகின்றதோ என்ற கேள்வி எழும்புகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் தனி நாட்டுக் கோரிக்கையை முன் வைத்துப் போராடினர் என்பது உண்மைதான். ஆனால், புலிகள் தனி நாட்டுக் கோரிக்கையில் இருந்து கீழிறங்கி சமஷ்டி முறையிலான ஆட்சி முறைக்கு இணங்கி ஒஸ்லோ உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர் என்பதை தென்னிலங்கை மறந்திருக்க நியாயமில்லை.

அப்படியானால் தமிழர்களின் உரிமை; அரசியல் அபிலாஷை, தமிழர்களின் இருப்பு, சுய கௌரவம், பாதுகாப்புக் குறித்து பேசுவதையும் இனவாதமாக்கி இலங்கையின் இறைமைக்கு எதிரானது என்று தென்னிலங்கை சிங்களத் தலைமைகளும் பேரினவாத சக்திகளும் குளறுவது, செயற்படுவது சரியாயின் தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமையைக் கொடுக்க மறுப்பதும் அதிகாரப் பரவலாக்கலுக்கு இணங்காததும்; தமிழ் மக்களின் சுய கௌரவம் பாதுகாப்புக் குறித்து கிஞ்சித்தும் கணக்கில் எடுக்காது தமிழ் மக்கள் இந்த நாட்டில் இருந்து விட்டுப் போகட்டும். ஆனால், சிங்களவர்களுக்கு சமனானவர்கள் அல்ல என்ற தென்னிலங்கையின் நிலைப்பாடு இனவாதமாகாதா என்பதை சர்வதேச சமூகம் தீர்மானிக்கும் காலம் வந்துவிட்டதாக தமிழ் மக்கள் கூறுகின்றனர்.

சமாதான உடன்படிக்கையை மேற்கொண்டு அதனை ஒரு பேச்சுவார்த்தைப் பொறியாக்கி பேசிப் பேசியே காலத்தைக் கடத்தி விடுதலைப் புலிகளை அழித்தது போன்று பேச்சுவார்த்தை என்ற போர்வையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் இழுத்து அவர்களையும் தமிழர்களது வரலாற்றில் இருந்து அழித்துவிடும் திட்டங்களே தற்போது அரங்கேற்றப்படுவதாக தமிழ் மக்கள் சந்தேகிக்கின்றனர்.

விடுதலை புலிகளுடன் பேசிப் பேசியே காலத்தைக் கழித்து தருணம் வரும்போது காலை வாரியது போல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் காலை வாரிவிடுவதற்கு அரச தரப்பினருக்கு இது அவ்வளவு ஒன்றும் கடினமான காரியமல்ல.

கூட்டமைப்பின் தலைமைத்துவம் சரியான தருணத்தில் சரியான முடிவினை எடுக்கும். நாம் விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்று கூறுவதெல்லாம் அவர்கள் சார்ந்தவர்களைக் குஷிப்படுத்தலாம் , ஆனால், 90 வீதத்துக்கு அதிகமான தமிழ் மக்கள் கூட்டமைப்பினரிர் இவ்வாறு பேசிப் பேசியே இறுதியில் கூழ் பானைக்குள் விழுந்த பல்லி போல் ஆகிவிடுவாரா? என்ற அச்சத்தில் உள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளை எவ்வாறு அழித்து தமிழினத்துக்குள் ஒரு தலைமைத்துவ வெறுமையை தென்னிலங்கை ஏற்படுத்தியதோ அது போன்றதொரு நிலைமையை தற்போதும் உருவாக்கிவிட தென்னிலங்கை காய்களை நகர்த்தி வருகின்றது. அதாவது தமிழ் மக்களை அரசியல் தலைமையின்றி, அரசியல் உரிமை இன்றி அநாதைகளாக இந்த நாட்டில் வாழ வைப்பதும் நாங்களே மேய்ப்பர்கள் என்பதை பிரகடனப்படுத்துவதுமே தென்னிலங்கை சக்திகளின் கனவாக இருக்கின்றது. இதனை நோக்கியதாகவே தென்னிலங்கை சக்திகளின் அனைத்து செயற்பாடுகளும் உள்ளன. இதனை தமிழ் மக்கள் நன்கு அறிவர்.

எனவே தான், அழிவின் மத்தியிலும் சம்பலில் இருந்து உயிர்த்தெழுந்த பீனிக்ஸ் பறவை போல் நாடாளுமன்றத் தேர்தலிலும், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களிலும் தமிழ்த் தேசியத்திற்காக வாக்களித்து தமது அரசியல் அபிலாஷை குறித்த செய்தியை மிகத் தெளிவாக தென்னிலங்கை சக்திகளுக்கும் சர்வதே சமூகத்திற்கும் உணர்த்தியுள்ளனர்.

தமிழ் மக்களைப் பொறுத்து தமது அரசியல் அபிலாஷைகளை அடைந்து கொள்வதற்கு விடுதலைப் புலிகளை எவ்வாறு கருவியாகப் பயன்படுத்தினரோ அது போன்று தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் பயன்படுத்துகின்றனர்.

அதாவது தமிழர்களின் உரிமைக்காக ஆயுதப் போராட்டத்துக்குத் துணை நின்ற தமிழ் மக்கள் தான் இன்று அஹிம்சை வழியிலான போராட்டத்துக்கும் துணை நிற்கின்றனர். இதனை தென்னிலங்கை சக்திகள் புரிந்து கொண்டால் .அதே வேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்கும் பயணத்தில் தோற்றுப் போகுமாக இருந்தால் மாற்றுத் தலைமை குறித்து தமிழ் மக்கள் தீர்மானம் எடுக்கத் தயங்கமாட்டார்கள் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புரிந்து கொள்ள வேண்டும்.

அந்த வகையில் மக்களின் நம்பிக்கையைத் தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்வது என்பது கூட்டமைப்பினன் செயற்பாடுகளிலேயே தங்கியுள்ளது முதலில் கூட்டமைப்பினரின் ஒற்றுமை காப்பாற்றப்பட வேண்டும். கூட்டமைப்பின் தலைமைப் பீடம் கூட்டமைப்பு என்ற கட்டுக் கோப்பை விட தமிழரக் கட்சி என்ற தலைமைத்துவத்தில் அதிக நாட்டம் கொள்வதாகக் குற்றச்சாட்டுக்கள் எழத் தொடங்கிவிட்டன.

தமிழ்த் தலைமைகளிடையிலான சிறுபேதமே போதும் அதனைப் பூதாகரமாக்கி மிகக் கச்சிதமாகக் காய்களை நகர்த்தி பெரும் பிளவுகளை உருவாக்கிவிடும் சக்தியையும் சாணக்கியத்தையும் தென்னிலங்கை சக்திகள் கொண்டுள்ளன. இதற்கு நாட்டில் பல கட்சிகள் பலிக்கடாவாகியுள்ள மகால வரலாற்றுப் பதிவுகள் பல உண்டு.

இந்த ஒரு நிலைக்கு கூட்டமைப்பும் ஆளாக வேண்டுமா? என்பதை கூட்டமைப்பின் தலைமைப் பீடமே தீர்மானிக்க வேண்டும்.

ஊடகங்களில் தொடர்ச்சியாக வெளிவரும் செய்திகள் கூட்டமைப்பு பிளவை நோக்கிப் பயணிப்பதாகவே உணர்த்தி நிற்கின்றன. இது உண்மை இல்லை என்று கூட்டமைப்பு கூறுமாக இருந்தால் அது தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்வதாகவே அமையும்.

கூட்டமைப்பின் அமெரிக்க விஜயம் அமெரிக்காவின் அழைப்பை ஏற்று இடம் பெறுவதாகக் கூறுவதில் எவ்வித உண்மையும் இல்லை. இது அமெரிக்காவின் அழைப்பின் பேரில் இடம் பெற்றதல்ல என்பதை அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் உறுதி செய்கின்றனர். ஆனால் கூட்டமைப்பினரின் விருப்பத்திற்கமைய சந்திப்புகள் இடம்பெறும். எம்மைச் சந்திக்க வருபவர்களை வரவேற்பது எமது பண்பு என்றும் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் தெரிவித்ததை இங்கு குறிப்பிட விரும்புகின்றோம்.

இத்தகைய விஜயங்களை கூட்டமைப்பு என்றோ செய்திருக்க வேண்டும். காலம் தாழ்த்தி நடமுறைப்படுத்தப்படுகின்றது. பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட தோல்விகளைத் தவிர, வேறு எதனைக் கூட்டமைப்பு சுமந்து கொண்டு அமெரிக்கா செல்கிறது என்பது பற்றித் தெரியவில்லை. அரச தரப்பினருடனான பேச்சுவார்த்தையின் போது தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யக் கூடியதான தீர்வுப் பொதியை முன் வைத்து அதன் பெறுபேறுகளுடன் அமெரிக்க, கனடா விஜயங்கள் அமைந்திருக்குமாக இருந்தால் அது பிரயோசனமாக இருந்திருக்கும் என்பதை தமிழ் மக்களின் சார்பில் கூட்டமைப்பினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றோம்.

எனவே, முதலில் இன விவகாரத்திற்கான தீர்வினை முன் வைத்து அது குறித்த நியாயத்துடன் சர்வதேச சமூகத்தின் முன் போய் நில்லுங்கள். அரச தரப்பும் தென்னிலங்கையும் உங்களுக்கு செவி செய்விக்கும் நிலை உருவாகும்.

http://akkinikkunchu.com/new/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"இலங்கையின் இறைமைக்கு எதிராக கூட்டமைப்பும் அமெரிக்காவும் சதி செய்வதாகவும் தென்னிலங்கை மக்களுக்கு பூதாகரமாக்கி குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றனர்."

அமெரிக்காவை எதிர்ப்பது போல் ஒரு முட்டாள் தனமான செயல் இருக்குமா?

ஸ்ரீ லங்கா காரன் சேம் சைட் கோல் அடிக்கும்போது நாம் ஊக்குவிக்கவேண்டும்.

"தமிழீழ விடுதலைப் புலிகளை எவ்வாறு அழித்து தமிழினத்துக்குள் ஒரு தலைமைத்துவ வெறுமையை தென்னிலங்கை"

அண்ணா பல இளைய அரசியலில் தலைமுறைகளை வெளிநாடுகளில் வளர்த்துவி

ட்டவர்.

அவர்கள் இப்போது இந்த வெற்றிடத்தை மிக விரைவாக அடைத்து வருகிறார்கள்.

இந்த இளையோர் வெளிநாடுகளில் வளர்ந்து உறுதி, நேர்மை, சாணக்கியம் பூண்டவர்கள் மற்றும் மிக முக்கியமாக குழுக்களாக வேலை செய்ய கூடியவர்கள்.

இவர்கள் தம்மை பற்றி இணையதளங்களில் பீற்றியோ, குய்யோ முறையோ என்று புலம்பாமல் அலுவலை குடுப்பவர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.