Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவை ஏமாற்றும் ஸ்ரீலங்காவின் முயற்சியை

Featured Replies

கனடாவை ஏமாற்றும் ஸ்ரீலங்காவின் முயற்சியை

எதிர்க்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

செவ்வாய்க்கிழமை, 01 நவம்பர் 2011 00:11

எங்களுக்குள் பிளவு இல்லை எல்லாமே நலமாக உள்ளது தமிழர்கள் எமது மக்கள் அவர்கள் சுக துக்கங்களில் நாம் பங்கு கொள்கிறோம் எனும் தோரணையில், கனடிய மக்களையும்,கனடிய அரசியல்வாதிகளையும் ஏமாற்றுவதற்காக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீலங்கா அரசு கனடாவின் ரொரன்ரோ நகரில் தீபாவளித் திருநாள் கொண்டாட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது. இக் கொண்டாட்ட நிகழ்வுக்குக் கனடியத் தமிழ் வர்த்தகர்கள், கனடாவின் முக்கிய அரசியல்வாதிகள் எனப் பலருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்காவின் மனித உரிமை மீறல்களுக்கெதிராகவும், இறுதி யுத்தத்தின்போது மகிந்த அரசு புரிந்த போர்க்குற்றங்களுக்கெதிராகவும் சர்வதேச அரங்கில் எழுந்து வருகின்ற குரல்களை அடக்குவதற்காகவும், குறிப்பாக அண்மைக் காலமாகக் கனடிய அரசு எடுத்து வந்துள்ள தமிழர் சார்பான நிலைப்பாடடினைத் தகர்க்கு முகமாகவும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.கடந்த முப்பது ஆண்டு காலமாக தமிழீழ மக்களின் நியாயமான விடுதலைப் போராட்டத்தைப் பயங்கரவாதச் சாயம் பூசி 20 இற்கும் மேற்பட்ட நாடுகளின் உதவியுடன் நசுக்கிய ஸ்ரீலங்கா, தமிழர் விடயத்தில் தொடர்ச்சியாக இன்று வரை சர்வதேசத்தை ஏமாற்றி வந்துள்ளது. இந்நிலயில் கனடியப் பிரதமரின் அண்மைக்காலக் கூற்றுக்களால் மருண்டிருக்கும் ஸ்ரீலங்கா அரசு கனடிய அரசை ஏமாற்றுவதற்காக இவவருட தீபாவளிப் பண்டிகையைப் பெரும் பொருட் செலவில் கனடாவில் கொண்டாட திட்டமிட்டதன்படி இந்நிகழ்வு ஏற்பாடாகியுள்ளது.

தமிழீழம் ஒன்றையே தாரக மந்திரமாகக் கொண்டு புலம் பெயர் தமிழ் மக்களின் வாக்குப் பலத்தால் உருவாக்கப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இந்நிகழ்வைப் பகிஷ்கரிக்குமாறு புலம் பெயர் கனடியத் தமிழ் மக்களை நோக்கி அறைகூவல் ஒன்றை விடுத்துள்ளது. இது தொடர்பில் கனடியத் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடு கடந்த தமிழீழ மக்களின் பிரதிநிதிகள்

நொவெம்பர் 6ம் திகதி ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணிக்கு

1133 Leslie Street, North York, Ontario M3C 2J6

எனும் முகவரியில் அமைந்துள்ள,இந் நிகழ்வு நடைபெறும் இடமான

கொரியன் கலாச்சார மண்டபத்திற்கு முன்பாக மாபெரும் எதிர்ப்புப் பேரணி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.இவ் எதிர்ப்புப் பேரணியில் கனடியத் தமிழ் மக்கள் பல்லாயிரக் கணக்கில் திரண்டு, ஸ்ரீலங்காவின் ஏமாற்று வித்தைக்கு இனிமேலும் சர்வதேசத்தையும் கனடாவையும் பலியாக விடமாட்டோம் என்ற செய்தியை உலகுக்கு உரத்துக் கூற வேண்டும் என்று இந்நிகழ்வின் ஏற்பாடுகளில் தம்மை அர்ப்பணித்துள்ள நாடு கடந்த தமிழீழ அரசின் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் ஏற்பாடுகளில் செயலாற்றி வரும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடிய பாராளுமன்ற உறுப்பினர்களான, நிமால் விநாயமூர்த்தி,சியான் சின்னராஜா,வின் மகாலிங்கம், ஆகியோருடன் ரொரன்ரோ பெரும்பாகத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஏனைய நா.க.த.அ. பாராளுமன்ற உறுப்பினர்களும் பொது மக்களை

அலையலையாக வந்து இந்த எதிர்ப்புப் பேரணியில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந் நிகழ்வு தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் அனைத்துலக வெளிவிவகாரத்துறை அமைச்சர் தணிகாசலம் தயாபரன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், “எம் தாயகத்தில் எம் தமிழ் மண்ணைப் பறிப்பதோடு தமிழ் இன ஒழிப்பை தொடர்ச்சியாக மேற்கொள்கின்ற சிறீலங்கா அரசு கனடாவில் தீபாவளி விழா கொண்டாட்டத்தை இங்குள்ள தமிழர்களையும் கனடிய அரசியல் வாதிகளையும் அழைத்து கொண்டாடுவது என்பது தமிழர்களை மட்டும் அல்ல உலகத்தினையும் ஏமாற்றுகின்ற ஒரு முயற்சி ஆகும்.”

“இச் சுழலில் கனடாவில் வாழுகின்ற எம் தமிழ் மக்கள் இக் கொலைகாரக் கும்பலுடன் எவ்வாறு கூடி விழா எடுத்து மகிழ முடியும்? மாறாக அதை "விழா எடுத்து வீழ்ந்த வரலாறாக மாற்ற" இந்த விழாவைப் புறக்கணிக்க வேண்டியது தமிழ் மக்களின் கடமை என்பதை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தி நிற்கின்றது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிகழ்வு சம்பந்தமான தொடர்புகளுக்கு

647-822-8062

  • தொடங்கியவர்

மாபெரும் எதிர்ப்புப் பேரணி

Date: 2011-11-06 at 4:00 pm

Address: Korean Cultural Centre, 1133 Leslie Street, North York, ON Canada

நாடு கடந்த தமிழீழ அரசு தலைமையில் கனடிய ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகம் முன்னெடுக்கும் மாபெரும் எதிர்ப்புப் பேரணி. உள்நாட்டுத் தமிழ் இனக்கொலையை மூடி மறைக்க வெளிநாட்டுத் தமிழரோடு தீபாவளிக் கொண்டாட்டம். கனடாவில் ஸ்ரீலங்கா அரசின் நயவஞ்சகச் செயற்பாடு. போருக்குப்பின் இலங்கையில் முல்லைத் தீவிலும் வவுனியாவிலும் யாழ் பல்கலைக் கழகத்திலும் சாத்வீகப் போராட்டம் வெடித்துள்ளது. மஹிந்த ராஜபக்ச,பாலித கோகன்ன,திசர சமரசிங்க ஆகியோருக்கெதிரான காவல்த்துறை விசாரணைகள் அவுஷ்திரேலியாவில் முடுக்கி விடப்பட்டுள்ளன.அங்கு நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தில் இலங்கைப் பிரச்சனையைக் கொண்டுவர வல்லரசுகள் கனடாவையும் அவுஷ்திரேலியாவையும் முன்னிறுத்தியுள்ளன.ஸ்ரீலங்கா தண்ணி காட்ட நினைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை அமெரிக்கா முழு அரச மட்டத்தில் அமெரிக்காவுக்கே அழைத்துப் பேசுகிறது. கனடாவும் அவர்களை அழைத்துப் பேசுகிறது. இந்தியாவும் மிகப்பெரியளவான அழுத்தத்தைக் கொடுக்கிறது. மகிந்தவுக்கான அமெரிக்க நீதிமன்ற அழைப்பாணை நிலுவையில் உள்ளது.எந்த நாட்டுக்குப் போனாலும் பிடியாணை வந்துவிடும் போலுள்ளது.

ஸ்ரீலங்கா அரசிற்கு எதிரான போர்க்குற்றங்கள் சர்வதேச நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை மிகக் காத்திரமாகச் சர்வதேசத்தால் முன்வைக்கப் பட்டுள்ளது. சீனாவால் மட்டும் இலங்கையைக் காப்பாற்றிவிட முடியாத நிலை உள்ளது. சர்வதேச அழுத்தங்களால் திணறிப் போயுள்ள ஸ்ரீலங்கா அரசு தம்முடன் தமிழர் கூடிக்குலாவுகிறார்கள்,பிரச்சனை எதுவுமில்லை என்று வெளி உலகுக்குக்காட்ட தமிழரோடு தீபாவளி கொண்டாடி கும்மாளம் போட்டு உலகை ஏமாற்றச் சதி செய்கிறது.புலம்பெயர் தமிழரிடையே ஆசைகாட்டி அவர்களைக் கூறு போட்டு சிதைத்து அழித்துவிட கங்கணம் கட்டி நிற்கிறது. தமிழா இப்போது தூங்கிவிட்டால் தப்பாமல் அழிந்துபோவாய். காலத்தின் கட்டாயக் கடமை.கடல் போன்ற தமிழர் கூட்டமாய் ஒன்றுகூடிக் குரல் கொடுப்போம். சிறிலங்காவின் பொய்முகத் திரையைக் கிழித்தெறிவோம்.திரண்டு வாருங்கள்.

Contact:

Phone: 416 494 4777, 416 888 1128

http://www.tamilcanadian.com/events/index.php?list=details&id=199

  • தொடங்கியவர்

ஈழத்தமிழினத்தை பூண்டோடு அழிக்கும் வகையில் கொடூர நடவடிக்கைகளை மேற்கொண்டு ஓரளவுக்கு வெற்றியும் கண்ட இனவாத சிங்கள அரசானது போர்க்குற்ற நடவடிக்கைக்கான தண்டனையில் இருந்து தப்பிக் கொள்வதற்காக நடாத்தும் போலி நாடகமான தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்ட்த்திற்கு கனடிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் அழைப்பினை அனுப்பி வைத்துள்ளது.

இவ் விழாவில் கலந்து கொள்ளாது இவ்விழவினைப் பகிஸ்கரிக்குமாறு வேண்டி உங்கள் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், அரசியல் வாதிகளுக்கும்கடிதம் எழுதுமாறு பொதுமக்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கின்றோம்.

இவ் விழாவானது

1133 Leslie Street, North York, ON M3C 2J6 இல் அமைந்துள்ள

கொரியன் கலாசார மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்படுகின்றது. இவ் விழாவினைப் பகிஸ்கரிக்கு முகமாக மேற்படி இட்த்தில் ஒரு பேரணியும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இப் பேரணியிலும் மக்கள் அனைவரும் பங்கு கொண்டு சிறீலங்கா அரசின் போலி நாடகத்தினை உடைத்தெறியவேண்டும் எனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது கனடாவாழ் தமிழ் மக்களைக் கேட்டுக் கொள்கின்றது.

இடம்:கொரியன் கலாச்சார மண்டபத்திற்கு முன்பாக

1133 Leslie Street, North York, ON M3C 2J6

காலம்: நவெம்பர் 6, 2011 ஞாயிற்றுக் கிழமை பி.ப. 4:00 மணி

  • தொடங்கியவர்

Canadian Tamils boycott Sri Lankan government’s Diwali celebration …..They strongly say “Diwali is not for war criminals”

386273_10150409400602491_500812490_8343764_864008041_n.jpg

389304_10150409401337491_500812490_8343770_1311526793_n.jpg

நண்பரின் முகநூலில் இருந்து

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.