Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வருகிறது தேர்தல்! வட மாகாண சபை பதவி வெற்றிடங்களுக்கு 348 பட்டதாரிகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வருகிறது தேர்தல்! வட மாகாண சபை பதவி வெற்றிடங்களுக்கு 348 பட்டதாரிகள்!

Published on November 8, 2011-10:06 am

வடக்கு மாகாண சபையில் நிலவும் பட்டதாரி பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கு 348 பட்டதாரிகளுக்கு வடமாகாண பொது நிர்வாக செயலகம் நியமனக் கடிதங்களை வழங்கியுள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்படும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

நவம்பர் மாதம் 14 ஆம் திகதி திங்கட்கிழமை சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் பதவிப்பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளும் வகையில் இந்த நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டதை அடுத்து முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கான நியமனக் கடிதங்களும் அடுத்த சில தினங்களுக்குள் வழங்கப்பட்டு அவர்களும் 14ஆம் திகதி பதவி ஏற்பதற்கு வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் தி.இராசநாயகம் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபையின் பட்டதாரி வெற்றிடங்களை நிரப்பும் திட்டத்தின் கீழ் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 80 பட்டதாரி களுக்கும் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த 70 பட்டதாரி களுக்கும் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.மன்னார் மாவட்டத்தை சேர்ந்த 71 பட்டதாரிகளுக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந“த 53 பட்டதாரிகளுக்கும், வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 74 பட்டதாரிகளுக்கும் விரைவில் நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன.

நியமனக்கடிதங்களைப் பெற்றுக் கொண்டவர்கள் எதிர்வரும் டிசெம்பர் 13 ஆம் திகதிக்கு முன்னர் மேற்படி கடமையை பொறுப்பேற்கத் தவறும் பட்சத்தில் இந்த நியமனம் தானாகவே இரத்துச் செய்யப்பட்டதாகிவிடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உரிய முறையில் நியமனங்களை ஏற்றுப் பதவிப் பொறுப்புக் களை ஏற்றுக் கொள்ளாதவர்களின் வெற்றிடங் களுக்கு காத்திருப்போர் பட்டியலில் இருந்து பொருத்தமான வர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.மேற்படி நியமனம் வழங்குவதற்கான போட்டிப் பரீட்சை கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதில் 5100 பட்டதாரிகள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.

எதிர்வரும் ஆண்டின் முற்பகுதியில் வடமாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இவ்வாறான முனைப்புக்கள் அரசியலுக்கான வாக்குறுதிகள், வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படும் என்பது தெரிந்ததே.

http://www.saritham.com/?p=40247

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.