Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க்குற்றச்சாட்டுகளை வெற்றிகரமாகச் சமாளித்து விட்டாராம் மகிந்த – மகன் நாமல் பெருமிதம்

Featured Replies

[ வெள்ளிக்கிழமை, 11 நவம்பர் 2011, 02:39 GMT ] [ நித்தியபாரதி ] Namal.jpgசிறிலங்கா மீது சுமத்தப்பட்டுள்ள யுத்தக் குற்றச்சாட்டுக்கள், 2018 இல் இடம்பெறவுள்ள பொதுநலவாய விளையாட்டுப் போட்டியை நடத்தும் வாய்ப்பைப் பெறுவதற்கு பிரச்சினையாக இருக்காது என்று சிறிலங்கா அதிபரின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.

‘inside the games‘ இணையத்தளத்துக்கு கரிபியன் தீவான சென்.கிற்ஸ் அன் நெவிசில் அளித்துள்ள தனிப்பட்ட செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கடந்த மாதம் பேர்த்தில் இடம்பெற்ற பொதுநலவாய அமைப்புத் தலைவர்களின் உச்சி மாநாட்டைத் தொடர்ந்து இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை மற்றும் அவுஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்ட்ஆகிய இரு இடங்களில், எங்கு 2018 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியை நடத்துவது என்பதைத் தீர்மானிப்பதற்கான வாக்களிப்பு தற்போது இடம்பெறும் பொதுநலவாய அமைப்பின் விளையாட்டுச் சம்மேளனத்தின் பொதுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் பெறுபேறு இன்று அறிவிக்கப்படவுள்ளது.

Namal%20rajapaksha.jpg

அம்பாந்தோட்டையில் போட்டிகளை நடத்துவதற்கு ஆதரவு திரட்டுவதற்காக சென்.கிற்ஸ் அன் நெவிஸ் தீவில் சிறிலங்கா நடத்திய களியாட்ட இரவு விருந்தில் நாமல் ராஜபக்சவும், மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலும்.

சிறிலங்காவில் 26 ஆண்டுகாலமாகத் தொடர்ந்த உள்நாட்டுப் போர் 2009 இல் தமிழ்ப் பிரிவினைவாதிகளைத் தோற்கடித்ததன் மூலம் வெற்றி கொள்ளப்பட்ட போது, சிறிலங்கா இராணுவப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பான விவகாரம் அண்மையில் இடம்பெற்ற பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டின் போது அதிகம் விவாதிக்கப்பட்டது.

இதற்கு சில நாட்களின் பின்னர் தற்போது இந்த அமைப்பின் விளையாட்டுப் போட்டியை எங்கு நடத்துவது என்பதைத் தீர்மானிப்பதற்கான வாக்களிப்பு கரிபியன் தீவில் நடைபெறுகின்றது.

சிறிலங்கா இராணுவப் படைகள் பல பத்தாயிரக்கணக்கான பொதுமக்களைக் கொலை செய்ததால் பேர்த்தில் இடம்பெற்ற மாநாட்டிற்கு வருகை தந்திருந்த சிறிலங்கா அதிபர் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், பொதுநலவாய அமைப்பின் உறுப்புரிமையிலிருந்து சிறிலங்கா விலக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

எவ்வாறிருப்பினும், 2013 இல் நடைபெறவுள்ள பொதுநலவாய அமைப்பின் அடுத்த உச்சி மாநாட்டை சிறிலங்காவில் மேற்கொள்வதற்கான தமது அங்கீகாரத்தை பேர்த்தில் கலந்து கொண்டிருந்த இதன் தலைவர்கள் வழங்கியிருந்தனர்.

'பேர்த்தில் இடம்பெற்ற உச்சி மாநாட்டில், பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாட்டுத் தலைவர்கள் அனைவரும் 2013 இல் இந்த மாநாட்டை சிறிலங்காவில் நடாத்துவதென்று ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இதன் மூலம் சிறிலங்கா மீது முன்வைக்கப்பட்ட யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்பது தெளிவாகியுள்ளது' என மகிந்த ராஜபக்சவின் மகன் தெரிவித்துள்ளார்.

'பேர்த்தில் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அதில் கலந்து கொண்டிருந்த நாட்டின் தலைவர்கள் பல கடினமான கேள்விகளை எழுப்பியிருந்தனர். இதற்கான திருப்திகரமான பதில்களை எனது தந்தையார் வழங்கினார்'

'இந்தப் போர்க்குற்றச்சாட்டுத் தொடர்பான கேள்விகளுக்குத் தெளிவான பதிலைத் தெரிவிக்காது விட்டிருந்தால் அடுத்த உச்சி மாநாட்டை நாங்கள் சிறிலங்காவில் நடத்தியிருக்க முடியாது'

'இது பொதுநலவாய மாநாட்டின் உச்சி மாநாட்டிற்குப் போதுமானதாக இருந்ததால், தற்போது நடைபெறும் இந்த அமைப்பின் விளையாட்டுச் சம்மேளனத்தின் பொதுக்கூட்டத்திற்கும் போதுமானதாக இருக்க வேண்டும்'

'ஆகவே இது 2018 இல் அம்பாந்தோட்டையில் விளையாட்டுப் போட்டிகளை மேற்கொள்வதற்குப் பிரச்சினையைத் தரமாட்டாது. ஆனால் நாங்கள் இங்கே தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டியுள்ளது'

'இது விளையாட்டு, அரசியலல்ல. விளையாட்டு விளையாட்டாகவும், அரசியல் அரசியலாகவும் இருக்க வேண்டும். இவ்விரண்டையும் கலக்க முயற்சிக்கக் கூடாது' எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

2018 இல் அம்பாந்தோட்டையில் விளையாட்டை மேற்கொள்வதற்கான தீர்மானத்தை வலுப்படுத்துவதற்கான குழுவில் வேகப்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் உட்பட பலர் ராஜபக்சவால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கரிபியன் தீவில் மேற்கொள்ளப்படும் வாக்களிப்பில் சிறிலங்காவின் அம்பாந்தோட்டை நகரம் வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளதாகவும், இதற்காக இதுவரையில் சிறிலங்காவிற்காக வாக்களிப்பதற்காக 71 வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

'எமது முயற்சி தொடர்பாக தான் பெருமிதம் கொள்வதாக நான் இங்கு வருவதற்கு முன்னர் எனது தந்தையார் என்னிடம் கூறினார்.

இப்போட்டிக்கான அரங்கம் மற்றும் பிற வசதிகளை சரியாக அந்த நேரத்தில் எங்கள் வழங்க முடியும்' எனவும் அவர் தெரிவித்தார்.

'இப் போட்டியை சிறிலங்காவில் நடத்துவதன் மூலம் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையை குறிப்பாக அம்பாந்தோட்டை மக்கள் பெரும் பயனடைய முடியும்' எனவும் முரளிதரன் தெரிவித்தார்.

'இங்கு மிகவும் ஏழ்மைப்பட்ட தாழ்ந்த வருமானத்தைப் பெறும் மக்கள் வாழ்கின்றனர். ஆனால் பொதுநலவாய அமைப்பின் போட்டிகள் இந்தப் பிரதேசத்திற்கு மிகச் சிறந்த சேவையை வழங்கும்' எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

'அம்பாந்தோட்டையில் 2018 இல் பொதுநலவாய அமைப்பின் போட்டிகளை நடத்துவதன் மூலம் 100,000 வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட முடியும். அத்துடன் 8 பில்லியன் டொலர்கள் பெறுமதியான பொருளாதார செயற்பாடுகளை இங்கு உட்புகுத்த முடியும்'

'கோல்ட்கோஸ்ற் மிகப் பலமான இடம் என்பது எமக்குத் தெரியும். ஆனால் 2018 இல் இப்போட்டிகளை நடத்துவதற்கான அனைத்து வசதிகளையும் எங்களால் உரிய நேரத்தில் செய்து முடிக்கப்படும்' எனவும் முரளிதரன் தெரிவித்தார்.

http://www.puthinappalakai.com/view.php?20111111105023

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.