Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குவைத்தில் உயிரிழந்த இலங்கைப் பெண்ணின் உடல் உறுப்புக்கள் மாயம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குவைத்தில் உயிரிழந்த இலங்கைப் பெண்ணின் உடல் உறுப்புக்கள் மாயம்!

Published on November 14, 2011-12:16 pm

குவைத் நாட்டில் பணிப்பெண்ணாக கடமையாற்றிக் கொண்டிருந்த இலங்கை கலாவாவி – விஜிதபுர – புதிய புலியங்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளம் பெண் கடந்த மாதம் 31ம் திகதி திடீரென மரணமானார்.

இவருடைய சடலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு பிரேத பரிசோதனைகள் செய்யப்பட்ட போது அவருடைய உடலில் இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட அவயவங்கள் இல்லாது காணப்பட்டதாக தெரியவந்துள்ளது.

நீர்கொழும்பு வைத்தியசாலையின் பணிப்பாளர் ஏ.தயாபாலவினால் கடந்த 11ம் திகதி பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது குவைத்திலேயே குறித்த பெண்ணின் உள் உறுப்புக்கள் அகற்றப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

உள் உறுப்புக்கள் அகற்றப்பட்டமை குறித்து குவைத் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையிலோ வேறு ஆவணங்களிலோ குறிப்பிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 வயது சிறுமியின் தயாரான ஸ்ரீமாலி குமாரிகா குணவர்த்தன அநுராதபுரத்தில் உள்ள குவைத் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் ஊடாக கடந்த வருடம் ஏப்ரல் 23ம் திகதி குவைத் சென்றுள்ளார்.

குவைத்தில் வீடொன்றில் பணிபுரிந்துக் கொண்டிருந்த வேளையில் கடந்த 31ம் திகதி திடீரென உயிரிழந்ததாக தொலைபேசி ஊடாக பிரிதொரு இலங்கை பணிப்பெண் மூலமே அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பெண்ணின் மரணம் குறித்து விசாரணை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

குவைத்திலுள்ள இலங்கை தூதரகம் ஊடாக விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக பணியகத்தின் செயற்பாட்டு பணிப்பாளர் நனில் கம்லத் குறிப்பிட்டார்.

http://www.saritham.com/?p=40761

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப..இனி...குவைத்திலை சவூதியிலை இருக்கிற மூனாக்களுக்கு......கிட்னி...அங்கையிஞ்சை பிரச்சனையெண்டால்.....இலேசானவழியொண்டு இருக்கெண்டுறியள்:::::::::::::::::::::: :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.