Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சம்பந்தன் காணிக்கொள்ளையில் ஈடுபட்டுள்ளார் - டக்ளஸ் குற்றச்சாட்டு

Featured Replies

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழ் மக்களின் காணிகளை கொள்ளையடித்துள்ளமை தொடர்பில் இணையத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளதாக ஈபிடிபியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்ட விவாதத்தில் இன்று (30) பாராளுமன்றில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் உரையாற்றியவை வருமாறு:-

கௌரவ சபாநாயகர் அவர்களே!....

இதுவரை கால மனித குல வரலாறுகள் யாவும் பல்வேறு இடர்களுக்கு மத்தியிலும் மாற்றங்களையே கண்டு வந்திருக்கிறது. வியக்கத்தக்க முன்னேற்றங்களையே அடைந்து வந்திருக்கிறது.

இதற்கு, அழகிய எங்கள் இலங்கைத்தீவும் விதி விலக்கானது அல்ல. இன்று நாம் மாற்றங்களை கண்டிருக்கின்றோம்.

இந்த மாற்றங்கள் கடந்த காலங்களை விடவும் பல முன்னேற்றங்களை அடைந்து வருகின்றது.

மாற்றத்தை விரும்பும் தமிழ் பேசும் மக்களும் தமது உயரிய வாழ்வின் இலட்சியங்களை நோக்கி, அதற்கான பாதையில் அடியெடுத்து வைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

யுத்தமும், இரத்தமுமாக அமைதியற்று, அவலப்பட்டு, இருட்டில் கிடந்த எமது தேசம் இன்று நிம்மதிப்பொருமூச்சு விட்டு நிமிர்ந்து நிற்கிறது.

இப்போது இங்கு பிணங்கள் இல்லை. ரணங்கள் இல்லை. எல்லாமே இங்கு ஒழிந்து முடிந்து விட்டன.

எங்கள் தேசம் தன் கருவறையில் சுமந்திருந்த சமாதானக்குழந்தையை பிரசவித்து விட்டது. சமாதானம் இங்கு பூப்பூத்திருக்கிறது.

நாம் விரும்பும் சமாதானம் என்பது வெறுமனே யுத்தம் இல்லாத பூமி மட்டுமல்ல.இரத்தம் சிந்தாத மனித வாழ்வு மட்டுமல்ல.

சகல இன சமூக மக்களும் அமைதியான எங்கள் இலங்கைத்தீவில் சமவுரிமை சுதந்திரத்தோடு முகமுயர்த்தி நிமிர்ந்து நிற்கும் சூழலே நாம் விரும்பும் சமாதானமாகும்.

எமது இலங்கைத்தீவின் ஆட்சியதிகாரத்தில் பங்கெடுத்திருக்கும் ஓர் அமைச்சராக நான் இருப்பினும், தமிழ் பேசும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு ஜனநாயகப் பிரதிநியாகவும், தமிழ் கட்சி தலைவர்கள் மத்தியில் தமிழ் மக்களின் அதி கூடிய விருப்பு வாக்குகளை பெற்று மக்களின் அங்கீகாதை;தை பெற்ற நிலையிலும் இந்த சபையில் நான் நிற்கின்றேன்.

அமைச்சரவை அந்தஸ்து உள்ள ஒரு அமைச்சர் என்ற வகையில் ஒட்டு மொத்த இலங்கை தீவின் அரசியல் பொருளாதார சமூக விடயங்கள் குறித்தும் பேச வேண்டிய கடமை எனக்குண்டு.

ஆனாலும்,... எமது தமிழ் பேசும் மக்களை தவறான வழிமுறையில் இதுவரை வழிநடத்தி வந்த சுயலாப தமிழ் தலைமைகளின் வெறும் கற்பனாவாத சிந்தனைகளை உணர்ந்து, சுய லாப தமிழ் தலைமைகளால் எதையுமே பெற்றுத்தராத, பேரிழப்புகளை மட்டுமே எமது மக்களுக்கு இது வரை பெற்றுத்தந்த துயரங்களையும், அவலங்களையும் கருத்தில் கொண்டு... தமிழ் பேசும் மக்களுக்கு சரியானதொரு வழிகாட்டலை வழங்க விரும்பி, இந்த சபையில் நான் தமிழ் பேசும் மக்களின் சில பிரச்சினைகள் குறித்தே பிரதானமாக உரையாற்ற விரும்புகின்றேன்.

கௌரவ சபாநாயகர் அவர்களே!....

அரசியல் மக்களை பிரித்து வைக்கிறது. பொருளாதாரம் மக்களை ஒன்றிணைக்கின்றது. எமது நாட்டின் தேசிய இனப்பிச்சினை என்பது பொருளாதார ஏற்றத்தாழ்வுகளில் இருந்தே தொடக்கி வைக்கப்பட்டது.

இலங்கைத்தீவை ஆட்சி செய்து வந்த காலனியாதிக்கவாதிகளால் திட்டமிடப்பட்ட பிரித்தாளும் சூழ்ச்சியாகவே இது ஆரம்பிக்கப்பட்டது.

1948 ஆம் ஆண்டில் காலனியாதிக்க வாதிகளின் கைகளில் இருந்து எமது இலங்கைத்தீவு விடுவிக்கப்பட்ட நிலையில், அன்றில் இருந்து இலங்கை இந்திய ஒப்பந்தம் வரை மாறி மாறி ஆட்சிக்கு வந்திருந்த அன்றைய அரச தலைவர்களும் தவறானதொரு அரசியல் வழிமுறையினையே தொடர்ந்தும் கடைப்பிடிருந்து வந்திருக்கிறார்கள்.

சிங்கள சகோதர மக்களுக்கும், தமிழ் முஸ்லிம் மக்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் திட்டமிட்டு தூண்டி விடப்பட்டன.

ஆனாலும், இவைகள் குறித்து பேசுகின்ற தார்மீக உரிமையினை சுயலாப தமிழ் அரசியல் தலைமைகள் இழந்து விட்டன.

காரணம், தமது தேர்தல் வெற்றிக்காக, வாக்குகளை அபகரிப்பதற்காக இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பினரே தமிழ் இனவாத வெறியை அடிக்கடி ஊட்டி, எமது மக்களை உசுப்பேற்றி விடுவதும், தமிழ் மக்கள் வீதிக்கு வரும் போது, மக்களை நடுத்தெருவில் கைவிட்டு, தமது குடும்பங்களோடு நாட்டை விட்டு ஓடியும் விடுகின்றார்கள்.

அப்பாவி மக்களை பலிக்களத்திற்கு கொல்லக்கொடுத்து விட்டு தாம் மட்டும் உலக நாடுகளெங்கும் உல்லாச பயணம் நடத்தி வருகின்றனர்.

இவர்களால் தூண்டி விடப்பட்ட அப்பாவி மக்கள் அவலங்களை சுமந்து நின்றார்கள். ஆனால் இவர்களது குடும்பங்களோ வெளிநாடுகளில் ஆடம்பர வாழ்வு நடத்துகின்றார்கள்.

1956 ஆம் ஆண்டில் இந்த நாட்டில் தனிச்சிங்கள சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் இந்த நாட்டில் வாழுகின்ற தமிழ் பேசும் மக்கள் இரண்டாம் தர பிரஜைகளாக ஆக்கப்பட்டனர்.

ஆனாலும், இவைகள் குறித்தும் பேசுகின்ற தார்மீக உரிமையை சுயலாப தமிழ் அரசியல் தலைமைகள் அன்றே இழந்து விட்டன.

காரணம்,... அன்று தனிச்சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்ட போது அன்றைய நாடாளுமன்றத்தில் பருத்தித்துறை நாடளுமன்ற உறுப்பினரான இருந்த இடதுசாரி தலைவர்களில் ஒருவரான பொன் கந்தையா அவர்கள் அதற்கு ஒரு மாற்று யோசனை ஒன்றையும் தெரிவித்திருந்தார்.

தமிழ் மக்கள் சிங்களத்தை கற்பது என்றால், சிங்கள மக்களும் தமிழ் மொழியை கற்க வேண்டும் என்றும் தீர்க்கதரிசனமான தெரிவித்திருந்தார்.

இந்த கருத்தை அன்று நாடாளுமன்றத்திலும், அதற்கு அப்பாலும் இருந்த சிங்கள தலைவர்கள் பலரும் வரவேற்றிருந்தனர்.

ஆனாலும், அன்றைய தமிழ் அரசியல் தலைமைகள் அதை ஏற்றிருக்கவில்லை. எதிர்த்தார்கள்.

சிங்களம் கற்பது தவறு என்று சாதாரண தமிழ் குடிமக்களுக்கு உணர்ச்சி பொங்க போதனைகள் நடத்தி விட்டு. தாம் மட்டும் இரகசியமாக சிங்களம் கற்றுக்கொண்டார்கள். தமது சுயலாபங்களுக்காக தமது பிள்ளைகளை மட்டும் சிங்களம் கற்பிக்க வைத்தார்கள்.

சிங்களம் கற்க விடமாட்டோம் என்று அன்று அடம் பிடித்த மூத்த தமிழ் தலைவர்கள் இன்றும் சரளமாக சிங்களம் பேசிக்கொண்டிருக்கின்றார்கள். இதை இல்லை என்று யாரும் மறுப்பார்களா?....

அமரர் பொன் கந்தையா அவர்களது தீர்க்கதிசனங்களை அன்றைய தமிழ் தலைமைகள் ஏற்றிருந்தால். இன்று எமது தமிழ் பிஞ்சுகளும், பெற்றோர்களும் இலங்கையில் உள்ள இரு மொழிகளையும் கற்பதற்கு மாறாக புலம்பெயர்நாடுகளெங்கும் சென்று அந்தந்த நாடுகளில் உள்ள பல மொழிகளையும் பொருளாதார காணங்களுக்காகவும், கல்வி வசதிகளுக்காகவும் கற்க வேண்டிய நிரப்பந்தம் உருவாக்கியிருக்காது.

இன்று எமது ஜனாதிபதி மகிந்த ராஐபக்ச அவர்கள் 2012 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் தமிழ் மக்கள் சிங்களத்தை கற்பதற்கும், சிங்கள மக்கள் தமிழ் மொழியை கற்பதற்குமான நிதியினை ஒதுக்கியிருப்பதை நான் இந்த இடத்தில் வரவேற்கின்றேன்.

அதே வேளை எவரும் செய்யத் துணியாத செயலாக ஜக்கிய நாடுகள் சபையில் தமிழ் மொழியிலும் பேசி வருவதை இந்தச் சந்தர்ப்பத்தில் இந்த சபையில் மீண்டும் எனது மக்களின் சார்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

மாறி மாறி ஆட்சிக்கு வந்திருந்த அன்றைய இலங்கை அரச தலைவர்களால் பண்டா செல்வா ஒப்பந்தம், டட்லி செல்வா ஒப்பந்தம் என்பன கிழித்தெறியப்பட்டன.

ஆனாலும் இவைகள் குறித்து பேசும் தார்மீக உரிமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இழந்து விட்டனர்.

காரணம், இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் இருந்து எமது மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட அனைத்து ஒப்பந்த முயற்சிகளையும், சுயலாப தமிழ் தலைமைகளே உடைத்து சிதை;திருக்கின்றார்கள்.

இலங்கை இந்திய ஒப்பந்தம் என்பது தமிழ் மக்களுக்கு கிடைத்திருந்த அரியதொரு வாய்ப்பாகும். ஆனாலும் சுயலாப தமிழ் தலைமைகள் தமது அடங்காத யுத்த ஆசைகளுக்காகவும், அடைய முடியாத விருப்பங்களுக்காகவும் அதை ஏற்க மறுத்து அப்பாவி தமிழ் மக்களை யுத்தத்திற்கு பலிகொடுத்திருக்கிறார்கள்.

அன்று இலங்கை இந்திய ஒப்பந்தத்தை தமிழ் மக்களின் உரிமைக்காக சரிவரப்பயன்படுத்த விரும்பாமல், அப்பாவி மக்களின் மண்டைகளை நோக்கி தமது துப்பாக்கிகளை குறி வைத்து சுட்டு வெறி தீர்த்த குழுத்தலைவர்கள், இன்று தமிழ் மக்களின் உரிமைப்பிரச்சினை குறித்து நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள்.

தமிழ் மக்களின் மன விருப்பங்களை ஏறி மிதித்து, அதில் நின்று சாம்பல் மேட்டு சாம்ராச்சியம் நடத்தியவர்கள் மனித உரிமைகள் குறித்து சாத்தான்கள் போல் வேதம் ஓதுகின்றார்கள்.

கௌரவ சபாநாயகர் அவர்களே!....

அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாகவும், தமிழ் மக்களின் உரிமைக்காக இளைஞர் யுவதிகள் தங்களது உயிர்களை அர்பணம் செய்ததாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தமிழ் மக்கள் மீது பரிதாபப்படுவதுபோல் பாசாங்கு செய்து முதலைக்கண்ணீர் வடித்து இந்த சபையில் உரையாற்றியிருக்கிறார்கள்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு முன்னர் புலிகள் இயக்கத்தில் இருந்து மரணித்த உறுப்பினர்களின் தொகை ஆக மொத்தம் 652 போர்கள் மட்டுமே. இதை புலிகளே அன்று உரிமை கோரியும் இருந்தனர்.

தவிர்க்க முடியாத ஒரு சூழலில் இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு முந்திய உரிமைப்போராட்டத்தில் நானும் தலைப்பாத்திரமேற்று செயற்பட்டிருக்கின்றேன்.

அனாலும், புலிகள் அமைப்பில் இருந்து மரணித்த அன்றைய 652 உறுப்பினர்களின் இழப்போடும், நான் அங்கம் வகித்த ஈ.பி.ஆல்..எல்.எவ் உட்பட ஏனைய அமைப்புகளில் இருந்தும் மரணித்த நூற்றுக்கானக்கான உறுப்பினர்கள், மற்றும் பொதுமக்ளின் இழப்போடும் இந்த நாட்டின் யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும்.

ஆனாலும், அந்த ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து அடங்காத யுத்தவெறியினால் எமது தமிழ் இளைஞர் யுவதிகளில் 30 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பலிகொடுக்கப்பட்டிருக்கிறார்கள். அப்பாவி மக்களும் பலி கொடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

இலங்கை இந்திய ஒப்பந்தம், முன்னாள் ஐனாதிபதி பிரேமதாசா புலிகள் பேச்சு வார்த்தை, முன்னாள் ஐனாதிபதி சந்திரிகாக குமாரணதுங்க புலிகள் பேச்சு வார்த்தை, முன்னாள் பிரதமர் ரணில் விக்கரமசிங்க புலிகள் பேச்சு வார்த்தை, அதன் பின்னர் இறுதியாக மகிந்தராஐபக்ச அவர்களது இன்றைய அரசாங்கத்துடனான பேச்சு வார்த்தை....

இவ்வாறு கிடைத்த அரிய வாய்ப்புகள் யாவும் யாரால் உதாசீனம் செய்யப்பட்டன என்பதை இந்த சபையின் ஊடாக நான் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை நோக்கி கேட்கின்றேன்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை தொடர்ந்து நான் தொடர்ச்சியாக கேட்டு வந்திருக்கின்றேன்.

அழிவு யுத்தம் எதையும் பெற்றுத்தராது.... அது எமது மக்களை நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தும். எமது இளைஞர் யுவதிகளை பலியெடுக்கும், அப்பாவி மக்களை கொன்று பசி தீர்க்கும். ஆகவே அவவே அரசியல் தீர்வின் மூலம் அடைய வேண்டிய .இலக்கினை பெறுவோம், யுத்தத்தை கைவிட்டு வாருங்கள் என்று நான் பகிரங்கமாகவே கோரிக்கை விடுத்திருந்தேன்.

அன்றிலிருந்து இன்று வரை அழிவு யுத்தத்தை நிறுத்தி அரசியல் தீர்வுக்கு வாருங்கள் என்று எமது மக்களை அழிவுகளில் இருந்து காப்பதற்காக அறை கூவி வந்த எமக்கு தமிழ் மக்களின் அவலங்கள் குறித்தும், நடந்து முடிந்த அழிவகள் குறித்தம் பேசுவதற்கு தார்மீக உரிமை உண்டு என்று கூறுகின்றேன்.

ஆனாலும், அழிவு யுத்தத்தை ஆதரித்து வந்த சுயலாப தமிழ் அரசியல் வாதிகள் தமிழ் மக்களின் அழிவுகள் குறித்து எந்த முகத்தோடு பேசி வருகின்றார்கள்?...

எமது தமிழ் இளைஞர் யுவதிகளை பலாத்காரமாக அழிவு யுத்தத்திற்கு அள்ளிக்கொடுத்து விட்டு, அழிவுக்கு ஊரார் விட்டு பிளளைகளை ஆட்சேர்க்கும் பணிகளில் ஈடுபட்டு விட்டு அதற்கு பரிகாரமாக தாம் மட்டும் தமது குடும்பங்களோடு தப்பித்துக்கொண்டவர்களே இன்று இந்த சபையில் தமிழ் மக்களின் அழிவுகள் குறித்து நீலிக்கண்ணீர் வடித்து வருகின்றார்கள்.

நான் இந்த சபையின் ஊடாக தமிழ் தேசிய கூட்மைப்பை நோக்கி சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகின்றேன்.

பண்டா செல்வா ஒப்பந்தம் என்றும் டட்லி செல்வா ஒப்பந்தம் என்றும் கிழித்தெறியப்பட்ட வரலாறுகளை நீங்கள் கூறி வருகின்றீர்கள். ஏற்றுக்கொள்கின்றேன்.

முன்னாள் ஐனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க அவர்கள் கொண்டு வந்திருந்த தீர்வுத்திட்டத்தை நாடாளுமன்றத்தில் இருந்த எதிர்க்கட்சிகளோடு இணைந்து நீங்கள் தீயிட்டு எரிக்கவில்லையா?....

அந்த தீர்வுத்திட்டத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் நடத்திய வீதி ஆர்ப்பாட்ட பேரணியில் எந்த முகத்தோடு நீங்கள் கலந்து கொண்டு தமிழ் மக்களுக்கான தீர்வை எதிர்த்து கோசம் எழுப்பியிருந்தீர்கள் என்று கேட்கின்றேன்.

எல்லா மக்களும் சரி சமனானவர்களே என்ற தனது விருப்பங்களையும், கொள்கையினையினையும் முன்னிலைப்படுத்தி 2012 ஆம் ஆண்டிற்கான இந்த வரவு செலவு திட்த்தித்தினை இந்த சபையில் ஜனாதிபதி மகிந்த ராஐபக்ச அவர்கள் சமர்ப்பித்திருக்கிறார்.

எதிர்க்கட்சி வரிசையில் இருப்பவர்கள் ஆளும் கட்சியின் யோசனைகளை எதிர்த்தே தீர வேண்டும் என்ற உங்களது வழமையான சுயலாப சம்பிரதாயங்களை அடிப்படையாக கொண்டு இன்று இந்த வரவு செலவு திட்டத்தை முன்னின்று எதிர்ப்பது உங்களில் யார் என்ற போட்டியில் ஈடுபட்டு வருகின்றீர்கள்.

நீங்கள் ஒரு அணியாகவே இருந்து கொண்டு யார் உங்களில் தமிழ் தேசிய வாதிகள் என்பதை புலம்பெயர் தமிழ் மக்களுக்கு காட்டுவதற்காகவும், உங்களில் யார் தமிழ் இனவாதத்தை பேசி தமிழ் மக்களின் வாக்குகளை அபகரித்து நடாளுமன்ற நாற்காலிகளை கைப்பற்றி உங்களது சுக போகங்களை அனுபவிதித்து விடலாம் என்ற போட்டியில் ஈடுபட்டு வருகின்றீர்கள்.

தமிழ்த் தேசியம் என்பது வெறுமனே தமிழ் இன உணர்ச்சிகளை மட்டும் ஊட்டிவிட்டு மக்களை வீதிக்கு இழுத்து விட்டு நீங்கள் மட்டும் நாட்டை விட்டே ஓடிப்போய் ஒளிந்து கொள்ளும் கோழைத்தனம் அல்ல.

கட்டிய வேட்டி கசங்காமல், உடுத்த உடுப்பின் மடிப்பும் கசங்காமல், வியர்வை சிந்தாமல் உலக நாடுகளின் உல்லாச விடுதிகளில் படுத்துறங்கும் சோம்பேறித்தனமும் அல்ல.

அது, எமது மக்களுக்காக குரல் கொடுத்து எமது மக்களுக்காக மக்களுடனேயே வாழ்ந்து அவர்களது இன்ப துன்பங்களிலும் பங்கெடுப்பாதாகவே இருக்க வேண்டும்.

யுத்த காலத்தில் சோறில்லை என்று அழுத சாதாரண குடி மக்களின் குரலுக்கு செவி சாய்க்க விரும்பாமல், அன்றாட அவலங்களில் சிக்கி தவித்த மக்களின் துயரங்களை போக்க முடியாமல் மேல்நாட்டு பஞ்சணைகளில் அடிக்கடி படுத்துறங்கினீர்கள்.

அதற்காகவே தமிழ் மக்களின் அரசியலுரிமை பிரச்சினையினையை காரணமாக வைத்து இன்று வரை நீங்கள் அமரிக்கா, கனடா, பிரித்தானியா, பிரான்ஸ், சுவிஸ் என்று உலகத்தை சுற்றி உங்கள் உல்லாசத்தை நடத்தி வருகின்றீர்கள்.

இலங்கையில் மழைபெய்கிறது.... நீங்கள் அமரிக்காவில் சென்று குடை பிடிக்கின்றீர்கள். அமெரிக்காவிலும், கனடாவிலும் இருந்து எமது மக்களுக்காக என்ன வாங்கி வந்தீர்கள்?...

அங்கிருந்து எமது மக்களுக்காக என்னதொரு நல்ல செய்தியை கொண்டு வந்தீர்கள்?....

சீஸ் பேர்கரும், சிக்கன் பேக்கரும், பிச்சாவும், நீங்கள் விரும்பும் உற்சாக பானமும் உல்லாச விடுதியும் நன்றாக இருந்தது என்று உங்கள் குடும்பங்களோடு கூடிச்சிரித்து மகிழ்ந்து சொன்ன செய்திகளை தவிர தமிழ் மக்களுக்காக எதை சுமந்து வந்தீர்கள்?...

வெளிநாட்டு ராஐதந்திரிகளும், அங்குள்ள மக்கள் பிரதிநிதிகளும் இங்கு வந்தார்கள். யாராக இருப்பினும் இலங்கை அரசுடன் பேச்சு நடத்தியே தமிழ் மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று சொல்லி விட்டு போகிறார்கள். ஆனால், நீங்கள் மட்டும் தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமற்றுவதற்காக வெளிநாடுகளில் இருந்து அரசியல் தீர்வை இறக்குமதி செய்து தருகிறோம் பாருங்கள் என்ற தோரணையில் தொடர்ந்தும் ஊடகங்களுக்கு அறிக்கை விடுத்து வருகின்றீர்கள்.

இது வரை காலமும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைக்கு எதிராகவும், பொருளாதார மீட்சிக்கு தடையாகவும் சில தடைகள் இருந்து வந்தன.

ஒன்று, இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு பின்னரான அழிவு யுத்தம். அது இன்று ஜனாதிபதி மகிந்த ரர்ஐபக்ச அவர்களது செயற்திறனால் முடிவிற்கு கொண்டு வரப்பட்டு விட்டது.

இன்னொன்று உறுதியானதும், துணிச்சலானதுமான அரசியல் தலைமையற்ற நிலைமை. அதுவும் இன்று ஜனாதிபதி மகிந்த ராஐபக்ச அவர்களால் இலங்கைத்தீவில் வாழும் சகல மக்களுக்குமான தலைமையாக அவரால் அந்த வெற்றிடம் நிரப்பப்பட்டுள்ளது.

இதற்கு உதாரணம்.... இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட 13 திருத்தச்சட்மே நடை முறைக்கு சாத்தியமான தீர்வு என நாம் அனைத்து அரச தலைவர்களிடமும் எடுத்துரைத்து வந்திருந்த போதும், அதை துணிச்சலோடு யாரும் முன்னெடுக்க வந்திருந்ததில்லை. தமிழ் அரசியல் தலைமைகளின் சுயலாப எதிர்ப்பபை காரணம் காட்டியும், அதிகாரம் உள்ளவரை ஆட்சியில் இருந்து விட்டு போவோம் என்ற பொறுப்பற்ற தன்மையாலும் பல்வேறு அரச தலைவர்களும் எமது நடை முறை சார்ந்த கோரிக்கைகளை கருத்தில் எடுத்து செயற்பட்டிருக்கவில்லை.

ஆனாலும் ஐனாதிபதி மகிந்த ராஐபக்ச அவர்களே நாம் எடுத்துரைத்த நடை முறைச்சாத்தியமான அரசியல் தீர்வை நடைமுறைப்படுத்து முன்வந்திருக்கிறார்.

இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பினராகிய நீங்களும் கூட அரசாங்க உயர் மட்ட பிரதிநிதிகளோடு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் குறித்து பேச ஆரம்பித்திருக்கிறீர்கள்.

ஆனாலும், நாடாளுமன்றத்தில் நீங்கள் உரையாற்றும் போது சிங்களம் எமது மக்களுக்கு எந்த தீர்வையும் தரப்போவதில்லை என்று இன வாதம் பேசி வேறொரு முகத்தை காட்டுகின்றீர்கள்.

இதில் எதை தமிழ் பேசும் மக்கள் நம்புவது?.... உங்களது உணர்ச்சிவசப்பட்ட நாடாளுமன்ற உரைகளையா?...அல்லது ஊடகங்களில் வெளிவரும் உங்கள் வீரஅறிக்கைகளையா?.அல்லது ..உங்களது வெளிநாட்டு பயணங்களையா?... அல்லது இன்று மாகாண அதிகாரங்கள் குறித்து அரசாங்கத்துடன் பேசிக்கொண்டிருப்பதையா?...எத்தனை முகங்களை பலருக்கும் நீங்கள் காட்டி வருகின்றீர்கள்?...

நான் உங்களோடு போட்டிஅரசியல் நடத்த விரும்பவில்லை. அரசியலுரிமை பிரச்சினைக்கு தீர்வு காண விரும்பி ஐனநாயக வழிக்கு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வந்தால் நான் புலிகளோடு மாற்று அரசியல் நடத்திக்கொண்டிருக்க மாட்டேன் என்று அன்று பகிரங்கமாகவே சொல்லி வந்தது போல,.. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய உங்களுக்கும் கூறி வைக்கின்றேன். நீங்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக மன விருப்பங்களோடு வந்தால். நான் உங்களோடு மாற்று அரசியல் நடத்திக்கொண்டிருக்க மாட்டேன்.

எமக்கு இந்த நாடாளுமன்ற நாற்காலிகள் தேவையில்லை. தேர்தலும் தேவையில்லை. உங்களது தலைமையில் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைத்து அது சரி வர நடக்கின்றதா என்பதை நான் அரசியலில் இருந்து விலகி எங்காவது ஒரு ஓரத்தில் நின்று அவதானித்துக் கொண்டிருப்பேன்.

ஆனால், நீங்கள் அதற்கு தயாராக இல்லை. உங்களது சொந்த சலுகைகளுக்காக மட்டும் அரசாங்கத்தோடு குனிக்குறுகி, வளைந்து, நெழிந்து, பல்லிழித்து பக்குவமாக பேசுகின்றீர்கள். அதற்காக அரசாங்கத்தின் பின்கதவுகளை சப்தமின்றி மெதுவாக தட்டுகின்றீர்கள்.

இப்படி பேசி உங்களது சொந்த சலுகைகளை பெறும் போது மட்டும் நீங்கள் நினைத்ததை குனிந்து நின்று சாதித்து விடுகின்றீர்கள்.

ஆனாலும், தமிழ் மக்களின் அரசியலுரிமை பிரச்சினை குறித்து பேசும் போது மட்டும்பூமியில் இருந்து ஆகாயம் வரைக்கும் நெருப்பாக துள்ளி குதிக்கிறீர்கள்.

நீங்கள் அரசாங்கத்தோடு நெருப்பாக துள்ளிக்குதித்தாலும், உங்கள் மீது ஜனாதிபதி மகிந்த ராஐபக்ச அவர்கள் விருப்பம் கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணமே தெரியாமல் கொழும்பில் வளரும் உங்களது பிள்ளைகளுக்கு அல்லது வெளிநாடுகளில் வாழுகின்ற உங்கள் பிள்ளைகளுக்கு யாழ்ப்பாணம் அழைத்துச் சென்று அங்குள்ள நிலவரங்களை உங்கள் பிள்ளைகளுக்கு காட்டுங்கள் என்று ஐனாதிபதி அவர்களே உங்களுக்கு அன்பாக சொன்ன அவரது நற்பண்புகளை நான் மதிக்கின்றேன்.

அந்தளவிற்கு நீங்கள் ஜனாதிபதி அவர்களிடம் தனிப்பட்ட ரீதியாக நன்மதிப்பை பெற்றிருக்கிறீர்கள். குடும்ப உறவுகளை வளர்த்திருக்கிறீர்கள்.

இந்த உறவை அரசியல் ரீதியாகவும் வளர்ப்பதற்கு ஜனாதிபதி அவர்கள் ஆசைப்படுகின்றார். தயவு செய்து அதற்கு முன்வாருங்கள்.

ஜனாதிபதி மகிந்த ராஐபக்ச அவர்கள் ஆட்சிக்கு வந்திருந்த போது வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களோடு தான் நேரில் பேசி தமிழ் மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்கு தீர்வு காணத்தயார் என்று தனது விருப்பத்தை வெளிப்படையாக தெரிவித்திருந்தவர்.

அதை நான் அன்று பகிரங்கமாகவே வரவேற்றிருந்தேன். ஆனால் அந்த விருப்பங்களை அமரர் வேலுப்பிள்ளை பிரபகாகரன் அவர்கள் ஏற்றிருக்கவில்லை.

இவ்வாறான ஜனாதிபதி அவர்கள் உங்களோடும் பேசி தமிழ் மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்கு தீர்வு காண விரும்புகின்றார். அதற்கான பொறுப்பை நானே ஏற்கிறேன்.

இன்று நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கான யோசனை சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நீங்களும் அங்கம் வகிப்பதன் மூலம் எமது மக்களின் அரசியலுரிமைக்கு தீர்வு காணும் இலக்கு நோக்கி முன்னேறலாம்.

இலங்கையை ஆசியாவின் மலர்ந்துவரும் ஆச்சரியமாக மாற்றுகின்ற தொலைநோக்கினை மையமாகக் கொண்டே 2012 ம் ஆண்டு வரவு செலவுத்திட்டம் அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் நாம் கடந்த கால யுத்தத்தின் மூலம் அழிந்து சிதைந்து போன எமது மக்களின் வரலாற்று வாழ்விடங்களை தூக்கி நிறுத்த முடியும்.

ஆனாலும், நீங்கள் ஒத்துழைத்து வருவீர்களோ இல்லையோ அரசியல் தீர்வும், அபிவிருத்தி பணிகளும் தமிழ் மக்களின் வாழ்வியலில் நடைமுறை யதார்த்தங்களாக நிகழத்தான் போகின்றன.

இந்த வரவு செலவுத்திட்டமானது இலங்கையின் பாரம்பரியங்களையும் விழுமியங்களையும் அடிப்படையாகக் கொண்டதாகவும் அனைவருக்கும் சமவாய்ப்பு, கிராமத்தைக் கட்டியெழுப்புதல், தொழில் முயற்சியாண்மை மிக்க பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்தல் போன்ற மக்களை மையப்படுத்திய பொருளாதார சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டதாகவும் காணப்படுகின்றது.

இந்த சம வாய்ப்பையும், கிராமங்களை கட்டியெழுப்பும் திட்ங்களையும் ஏற்று நாம் அழிந்து போன எமது தேசத்தை கிராமங்கள் தோறும் புதிதாக கட்டியெழுப்புவோம். எமது அரசின் பொருளாதார கொள்கைளயானது சந்தைப் பொருளாதார சிந்தனைகளிலிருந்து வேறுபட்டவையாகும். சந்தைப் பொருளாதாரத்தை மிகையாக நம்பியிருப்பதும் அதிகரித்த அரச தலையீடும் பாதிப்பானவை என்பதை உலகம் கற்றுக் கொண்டுள்ளது.

´மகிந்த சிந்தனை – எதிர்காலத்திற்கான தொலைநோக்கு´ கிராமத்தை மையமாகக் கொண்ட அபிவிருத்தி உபாயத்தின் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய சமமான பொருளாதார அபிவிருத்தியினையும் தேசிய அபிவிருத்தி அபிலாசைகளை நிறைவு செய்யக் கூடியதுமான ஒரு அபிவிருத்தியை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது.

உலக பொருளாதார நெருக்கடிகளிற்கு மத்தியில் இலங்கையின் பொருளாதாரம் 8 சதவீத பொருளாதார வளர்ச்சியினை 2010ஃ2011 ம் ஆண்டுகளில் அடைந்துள்ளது. கிராமங்களை மையமாகக் கொண்ட அபிவிருத்தி முன்னெடுப்புக்கள் மூலம்- வாழ்வெழுற்சியின் மூலம் (திவி நெகும)pபணவீக்கமானது 5 சதவீதமாகக் குறைவடைந்துள்ளது. வேலையின்மை 5 சதவீதமாகவும் வறுமை 8.9 சதவீதமாகவும் குறைவடைந்திருப்பது அபிவிருத்தியின் பலாபலன்கள் பின்தங்கிய பிரதேசங்களிற்கு சென்றிருப்பதை வெளிப்படுத்துகின்றது. ´

முன்பு 1000 அமெரிக்க டொலரிற்கும் குறைவாகவிருந்த தலா வருமானம் இன்று 2,800 அமெரிக்க டொலராகவுள்ளது. 2016 ம் ஆண்டில் தலா வருமானத்தை 4000 அமெரிக்க டொலராக ஆக்குவது மகிந்த சிந்தனை இலக்காகும்.

நாணய பெறுமதியிறக்கம் 3 சதவீதமாக பெறுமதியிறக்கம் செய்வதன் மூலம் இலங்கையின் ஏற்றுமதி பொருட்கள் வெளிநாடுகளில் போட்டியிடக் கூடிய வாய்ப்பினை ஏற்படுத்த கூடியதாக அமைகின்றது.

உல்லாச பயணிகளின் வருகை மூலமான வருமானத்தை 1 பில்லியனாக அதிகரிக்க இலக்கிடப்பட்டிருப்பது சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கான அரசின் முன்னுரிமையை எடுத்துக்காட்டுகின்றது. குறிப்பாக வடக்கு கிழக்கு உல்லாச அபிவிருத்தி துரித கதியில் நடைபெறுவதால் அப்பகுதி மக்களின் வாழ்வாரத்தை மேம்படுத்த பெரிதும் உதவும். சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் எமது பொருளாதாரத்தின் முதுகெலும்பாகக் காணப்படுகின்றது.

இது தொடர்பான வருமானவரி 10மூ மாகக் குறைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான வங்கிக் கடன்கள் அதிகரிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான வங்கிக் கடன் வட்டிவீதம் குறைக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் வங்கி, இலங்கை வங்கி, கிராமிய அபிவிருத்தி வங்கி கிளைகளில் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சி பிரிவுகள் உருவாக்கப்பட்டும் கடன்கள் வசதிப்படுத்தப்பட்டும் சிறுதொழில் முயற்சி மறுசீரமைப்பு தொடர்பான கடன் வழங்கல்களிற்கு அரச உத்தரவாதம் 50மூ வழங்கப்படுவதுடன் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளை மேலும் சக்திப்படுத்த, ரூபா 500 மில்லியனிற்கும் குறைவான வருடாந்த புரள்வினைக் கொண்ட சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளை ஆரம்பிக்க முன்னர் ஏற்பட்ட செலவினங்களை முதலாம் வருட வருமானத்திலிருந்து கழிப்பதன் மூலம் வரிச்சலுகை வழங்க முன்மொழியப்பட்டிருப்பதுடன்

வரவேற்ககூடியது காலாண்டு புரள்வு ரூபா 100 மில்லியனிற்கும் குறைவாகக் கொண்ட சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளிற்கு பொருளாதார சேவைக் கட்டணத்திலிருந்து விலக்களிக்கப்பட்டிருப்பதுடன், இதனை விரிவாக்கும் வகையில் ரூபா 500 மில்லியனிற்கும் குறைந்த காலாண்டு புரள்வைக் கொண்ட சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளிற்கு ரூபா 100 மில்லியன் வரை பொருளாதார சேவைக் கட்டணத்திலிருந்து விலக்களிக்கப்பட்டிருப்பதுடன் இத்துறையை மேலும் விரிவாக்குவதற்கான முன்மொழிவாகவும்,ச சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் தொடர்பாக ரூபா 50 மில்லியனிலிருந்து ரூபா 300 மில்லியன் வரையிலான முதலீடுகளிற்கு 4-6 வருடம் வரிவிடுமுறையினை விரிவாக்குவதற்கான முன்மொழிவுகள் வைக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கதாகும்.

நீண்ட கால யுத்த சுமைகளால் பாதிக்கப்பட்டிருந்த வடக்கு கிழக்கு மக்களுக்கு விரைவான பாரிய முன்னேற்றற்திற்கு இவை அமையும் என்பதில் எவ்வித ஜயமும் இல்லை. அந்த வகையில் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் சார்பாக ஜனாதிபதி அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். மேலும் அச்சுவேலியில் மீண்டும் ஆரம்பிக்க இருக்கின்ற கைத்தொழில் பேட்டையாளருக்கும் மற்றும் வவுனியாவில் அமைந்திருக்கும் கைத்தொழில் பேட்டையாளருக்கும் மற்றும் மட்டக்களப்பில் அமைய இருக்கும் கைத்தொழில் பேட்டையாளருக்கும் இது உறுதுணையாக அமையும் என்பது உறுதி.

பால், பச்சைத் தேயிலை, கறுவா மற்றும் லேட்ரக்ஸ் றப்பர் டுயவநஒ இறப்பர் என்பவற்றில் ஈடுபடும் தொழில் முயற்சிகளிற்கு தேசத்தைக் கட்டியெழுப்பும் வரியிலிருந்து (Nடீவு) விலக்களிக்கப்பட்டுள்ளது.

103 புடவைக் கைத்தொழிலை ஊக்குவிப்பதற்காக நூல் மற்றும் உபகரணங்களிற்கு இறக்குமதி வரிச்சலுகை வழங்கப்படவுள்ளது. நூல் இறக்குமதி தொடர்பாக இறக்குமதி தொடர்பான வரிகள் தீர்வைகள் யாவும் விலக்களிக்கப்படும். மேலும் சுங்கத் தீர்வை, பெறுமதி சேர்க்கப்பட்ட வரி என்பன இத்தொழில் முயற்சியை நவீனமயமாக்குவதற்கான உபகரணங்களை கொள்வனவு செய்யும் பட்சத்தில் விலக்களிக்கப்படும். மேலும் இந்த துறை சம்பந்தமான வரிமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டு புடவைக் கைத்தொழிலை பொருளாதாரத்தில் சக்திமிக்க ஒரு துறையாக மாற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

யுத்தத்தினால் நலிவுற்ற வடக்கு கிழக்கு மாகாணங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வடக்கு கிழக்கில் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர், வடக்கு கிழக்கு மக்களும் தேசிய அபிவிருத்தி நீரோட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். வடக்கு கிழக்கு மாகாணங்களில் உற்பத்திச் செயற்பாடுகள் அதிகரிக்கும் போக்கினை பதிவு செய்திருப்பது சமாதானத்தின் பலன்களைப் பிரதிபலிக்கின்றது.

வடமாகாணத்தின் பொருளாதார வளர்ச்சி வீதம் 23 சதவீத வளர்ச்சியினைப் பதிவு செய்திருப்பதுடன் இது தேசிய பொருளாதார வளர்ச்சி வீதமான 8 சதவீதத்தினைவிட உயர்வாகக் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. தெற்கு,கிழக்கு ரஜரட்ட மற்றும் வடக்கில் நான்கு ஏற்றுமதி வலையங்களை உருவாக்குதல், விதை அபிவிருத்தி, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கல் சேவைகளை உருவாக்குதல், ஏற்றுமதி வலையங்களில் அரிசி ஆலைகளை உருவாக்குபவர்களிற்கு வரிச்சலுகை அளித்தல் போன்றன வரவேற்கதக்கன.

அரச காணிகள் தனியாரிற்கு 30 வருட குத்தகைக்கு வழங்கப்படும் பட்சத்தில் அவை ஒரு வருடத்திற்குள் பாவிக்கப்படுதல் வேண்டும். ஆரசாங்க பிரதம மதிப்பீட்டாளரின் பெறுமதியின் அடிப்படையில் குத்தகைப் பெறுமானம் நிர்ணயிக்கப்படும். ஒரு வருடத்திற்கு பயன்படுத்தப்படாத காணிகள் மீளெடுக்கப்பட்டு சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களிற்கு வழங்கப்படுவது காணிப் பயன்பாட்டினை அதிகரிப்பதற்கான ஒரு செயற்திறனான வரவு செலவுத் திட்ட முன்மொழிவாகும்.

மும்மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்ற சமூகம் ஒன்றைக் கட்டியெழுப்பி சமூக ஒருங்கிணைப்பை ஏற்படுத்த முன்மொழியப்பட்டிருக்கும் பிரேரணை வரவேற்கத்தக்கதாகும். இது இனங்களுக்கிடையே சமத்துவத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை

ஒரு மில்லியன் வீட்டுத் தோட்டங்களை மேம்படுத்தல் - கொல்லைப்புற பொருளாதாரம் - மரக்கறி, பழவகை மற்றும் பூச்செடிகளை உருவாக்கல்,கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு மற்றும் மீன்பிடி துறைகளை விருத்தி செய்தல், தொழில் முயற்சிக் கிராமங்கள் - மனை அடிப்படைக் கைத்தொழில்கள் முயற்சிகளுக்கு கடன் திட்டங்களை விரிவாக்குவதன் மூலம் நிலைத்து நிற்கக்கூடிய மனைப்பொருளாதார கைத்தொழில் அலகுகளை உருவாக்குவதற்கு வசதியளித்தல்.

2012 ம் ஆண்டு வரவு செலவுத்திட்டம் பின்வரும் பிரதான விடயங்களையும் கரிசனை காட்டப்படும் துறைகளையும் உள்ளடக்கியுள்ளது. உணவுப் பாதுகாப்பும் மனைப் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதலும் - வாழ்வு எழுச்சி தேசிய நிகழ்ச்சித்திட்டம் (திவி நெகும) இது எல்லா மாவட்டங்களிலும் அமுல்படுத்தப்படும். இதற்குடாக மீள்குடியேற்ற மக்களும் வறுமைக்குகோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் சமுர்த்தி பயனாளிகள் மிகவும் பயனடைவர் இவர்களது வாழ்வாதாரம் மேம்படுத்தப்படுவதுடன் உறுதிப்படுத்தப்படும் அந்த மக்களின் சார்பில் ஜனாதிபதி அவர்களுக்கு நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.

தொழில்முயற்சிசார் பொருளாதாரம் ஒன்றினைக் கட்டியெழுப்புதல் மிகவும் பின்தங்கிய கிராமங்களை அபிவிருத்தி செய்தல், பாரம்பரிய கைவினைக் கைப்பணிக் கிராமங்களை விருத்தி செய்தல் 100 மில்லியன் ஒதுக்கீடு மாத்தறை, மாத்தளை மற்றும் கண்டி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல், (வீதி வலையமைப்பு, குடிநீர், நீர்ப்பாசனம், அனைவருக்கும் மின்சாரம், புகையிரதப்பாதை மற்றும் உள்நாட்டு விமான நிலையங்கள், தகவல் தொழினுட்பம் மற்றும் தொலைதொடர்பு சேவைகள்), ஆரோக்கியமான சமுதாயம் ஒன்றினைக் கட்டியெழுப்புதல், திறன் அபிவிஅறிவுசார் சமூகம் ஒன்றினைக் கட்டியெழுப்புதல்திறன்,

அபிவிருத்தியை நோக்கிய கல்வி திறன்களை அடிப்படையாகக கொண்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் அபிவிருத்தி, மூலப்பொருள் ஏற்றுமதிக்குப் பதிலாக பெறுமதி சேர்க்கப்பட்ட பொருட்களின் ஏற்றுமதி – தேயிலை, இறப்பர், தெங்கு மற்றும் கறுவா ஆரம்ப மூலப்பொருட்களாகவன்றி பெறுமதி சேர்க்கப்பட்ட முடிவுப் பொருட்களாக ஏற்றுமதி செய்தல்,

மேற்குறிப்பிடப்பட்ட வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுப்பதுடன் வறுமையைக் குறைத்து சமூக அபிவிருத்தியை ஏற்படுத்தி, இலங்கையை 135 ஆசியாவின் மலர்ந்துவரும் ஆச்சரியமாக மாற்றுகின்ற மகிந்த சிந்தனை- எதிர்காலத்திற்கான தொலைநோக்கில் குறிப்பிடப்பட்ட இலக்கினை அடைவதற்கு வழிவகுக்கும் ஒரு வரவு செலவுத் திட்டமாக இதனை நோக்கலாம். கௌரவ சபாநாயகர் அவர்களே!....

பன்றிக்கு முன்பாக முத்தை போட்டாலும். பன்றிக்கு முத்தின் அருமை தெரியாது என்பார்கள். பன்றி முத்தை ஒரு போதும் நாடாது. அது சேற்றையே நாடிச்செல்லும்.

அது போலவே,... தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு முன்பாக பொருளாதார அபிருத்தி என்ற முத்தை போட்டாலும் சரி, அரசியல் தீர்வு என்ற முத்தை போட்டாலும் சரி, அவர்கள் சுயலாப அரசியல் என்ற சேற்றையே நாடிச்செல்வார்கள்.

கடந்த காலங்களை விடவும் முன்னேற்ற கரமானதொரு வரவு செலவுத்திட்டம் ஐனாதிபதி மகிந்த ராஐபக்ச அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

யுத்தத்தில் இருந்து மீண்டெழுந்து வந்த எமது தேசம் மெல்லொன எழுந்துதான் நடக்க வேண்டியுள்ளது.

நாடுதழுவிய ரீதியில் மொத்த தேசத்தையே பொருளாதார ரீதியில் தூக்கிநிறுத்தும் உயரிய திட்டங்களை இந்த வரவு செலவு திட்டம் கொண்டிருக்கிறது.

பசித்தவனுக்கே முதலில் உணவு தேவை என்பது போல். தேவை உள்ளவர்களுக்கே அபிவிருத்தியில் அதிக கவனம் தேவைப்படுகின்றது..

இந்த வரவு செலவு திட்டத்தை சகலரும் ஏற்றுக்கொள்வதன் மூலம் அழிந்து போன தமிழ் பேசும் மக்களின் வாழ்விடங்களை நோக்கியும் எமது பொருளாதார அபிவிருத்திகளை நகர்த்திச்செல்ல முடியும்.

இதை உணரமுடியாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்த வரவு செலவு திட்டத்தை வழமைபோல் எதிர்த்து வருகின்றனர்.

யார் எதிர்த்தாலும் வரவு செலவுத்திட்டம் பொரும்பான்மை பலத்தோடு நிறைவேற்றப்படப்போகின்றது. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் பங்கெடுப்பதின் மூலம் தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி அபிவிருத்தி முதற்கொண்டு அரசியல் தீர்வு வரை முன்னேறி செல்ல முடியும் என நான் நம்புகின்றேன்.

அபிவிருத்தியும், அரசியல் தீர்வும் பெற்று தமிழ் மக்கள் தலை நிமிர்ந்து விட்டால் நரம்புகளை முறுக்கேற்றி உணர்ச்சி பொங்க பேசுவதற்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் போய்விடும் என்ற ஏக்கத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இருக்கின்றது...

தமிழ் மக்களின் வாக்குகளை அபகரித்து நாடாளுமன்ற நாற்காலிகளை நிரப்பி தமது சுக போகங்களை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக தமிழ் மக்களை தலை நிமிராமல் தொடர்ந்தும் வைத்திருப்தே தமிழ் தேசிய கூட்டமைப்பின் வழமையான கொள்கை. கும்பி கூழுக்கு அழுகின்றது. கொண்டை பூவுக்கு அழுகின்றது. இதே போலவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரச்சினைகள் வெறு. தமிழ் மக்களின் பிரச்சினைகள் வேறு என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தொடர்ந்தும் மெய்ப்பித்து வருகின்றார்கள்.

காலம் எவருக்காகவும் காத்திருக்காது. சீப்பை ஒழித்தாலும் கலியாணம் நடக்கும்.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஓடுகின்ற நீரோட்டத்தில் சேர்ந்தோடினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் தமிழ் மக்களின் அரசியலுரிமை பிரச்சினை தீர்வுக்கு பங்களித்தவர்கள் ஆவார்கள்.

இதன் மூலமே இது வரை இழந்த இழப்புகளை நாம் ஈடு செய்ய முடியும். மடிந்த போன தமிழ் மக்களுக்காக, எமது இளைஞர் யுவதிகளுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கண்ணீர் சிந்துவது உண்மையானால்,

இழப்புகளை சொல்லி உணர்ச்சி பொங்க பேசுவது வாக்குகளை அபகரிப்பதற்காக வேசதாரிகள் போடும் நாடகம் போல் இல்லை என்றால்... நாம் இழந்து போனவர்களின கனவுகளை நிறைவேற்ற மன விருப்பங்களோடு ஜதார்த்த பூர்வாக சேர்ந்துழைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முன்வரவேண்டும்.

இல்லை என்றால், கடந்து போன வரலாற்றில் எங்கும் நடந்தது போல், இனி வரும் வரலாறும் பாடங்களை கற்பிக்கும்.

தமிழ் மக்களின் மன விருப்பங்களை ஏற்காமல், அவர்களது கனவுகளை மதிக்கமால் கற்பனைத்தேரில் ஏறி வெறும் பூச்சியங்களை மட்டும் தேடி ஓடிக்கொண்டிருப்பவர்களை வரலாறு ஓரத்தில் ஒருநாள் ஒதுக்கி வைக்கும். இத்துடன் எனது உரையை நான் முடிக்கின்றேன்.

நன்றி!...

http://akkinikkunchu.com/new/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.