Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடல் மட்டம் உயர்ந்தால் மட்டக்களப்பின் கரையோரத்தின் 20 சதவீதம் நீரில் மூழ்கலாம்?!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

kallady_bridge1-150x150.jpg

விஞ்ஞானிகளின் எதிர்வு கூறலுக்கு அமைய எதிர்வரும் 2040ஆம், 2050 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் கடல் மட்டம் உயருமானால் மட்டக்களப்பு நகர கரையோரத்தின் 20 சதவீதமும் நீர்கொழும்பு நகர கரையோரத்தில் 15 சதவீதமும் மூழ்கும் அபாயம் உள்ளதாக மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் கட்டிட வடிவமைப்பு பீடத்தின் தலைவரான பேராசிரியர் பி.கே.எஸ் மகாநாம கூறினார்.ஐ.நா.வின் மனித குடியிருப்பிற்கான திட்டத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலம் இது கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுத் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வரண்ட வலயம், ஈர வலயம் என்ற அடிப்படையில் முறையே மட்டக்களப்பு மற்றும் நீர்கொழும்பு ஆகிய கரையோர நகரங்கள் தெரிவு செய்யப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

“விஞ்ஞானிகளின் எதிர்வுகூறலுக்கு அமைவாக 2040, 2050ஆம் ஆண்டுகளில் கடல் மட்டம் உயருமானால் மட்டக்களப்பு நகர கரையோரத்தில் 20 சத வீதமும் நீர்கொழும்பு நகர கரையோரத்தில் 15 சத வீதமும் மூழ்கும் அபாயம் உள்ளது. இருப்பினும் 100 சதவீதம் இப்படி நடக்கும் என்று கூற முடியாது. கால நிலை மாற்றங்களின் தாக்கம் ஏற்படலாம். அல்லது ஏற்படாமலும் போகலாம்.

ஏனைய கரையோர நகரங்களிலும் இப்படியான தாக்கங்கள் இருக்கலாம். ஆனால், அங்கு எவ்வித ஆய்வுகளும் மேற்கொள்ளவில்லை. இதனை தடுப்பதற்குரிய செயல்திட்டமொன்று எங்களால் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் நிதிப்பிரச்சினை அதற்கு தடையாக இருக்கின்றது.

எனினும், நோர்வே உதவ முன் வந்துள்ளது. இந்த நிதி கிடைக்குமானால் முற்றாக இல்லாது விட்டாலும் இந்த நகரங்களில் ஓரளவாவது செயற்றிட்டததை எங்களால் மேற்கொள்ள முடியும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.saritham.com/?p=42741

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.