Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்கலாம்

Featured Replies

பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்கலாம்: திஸ்ஸ

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தில் உள்ளடக்க முடியும். எனவே அரசாங்கம் பேச்சுக்களில் விரிசல் ஏற்படுத்திக் கொள்ளாது நிரந்தர தீர்வொன்றிற்காக கூட்டமைப்புடன் இணைந்து முன்னகர வேண்டும் என்று அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

வடக்கு மற்றும் கிழக்கை மீள் இணைப்பது குறித்து தற்போது பேசுவதில் அர்த்தமில்லை. ஆகவே இரு தரப்பும் இணக்கப்பாட்டின் அடிப்படையில் விரைவான தீர்வொன்றுக்கு வர வேண்டும். இழுத்தடிப்பதால் யாருக்கும் பயனேற்படப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தொடர்ந்தும் கூறுகையில்,

அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தை கடந்த செவ்வாய்க்கிழமை அரசுக்கும் தமிழ் தேசியக் கூட்மைப்புக்கும் இடையில் நடைபெற்றது. இதில் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் குறித்து கூட்டமைப்பினரால் பேசப்பட்டுள்ளது. மேற்கூறிய இரு அதிகாரங்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என அரச தரப்பு நிராகரித்துள்ளது.

எவ்வாறாயினும் அதிகாரப் பகிர்வில் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் முக்கியமானவையாகவே நோக்கப்படுகின்றது. தேசிய அரசியல் அமைப்பில் 13ஆவது திருத்தச் சட்டத்தில் அதிகாரப் பகிர்வு யோசனைகளில் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. எனவே தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் மேற்கூறிய இரு அதிகாரங்களையும் தீர்வுத்திட்டத்தில் உள்ளடக்க முடியும் என்பதே எனது நிலைப்பாடாகும்.

வடக்கு மற்றும் கிழக்கை மீள் இணைப்பது குறித்து பேச்சுவார்த்தைகளில் தற்போது பேசுவது உகந்த விடயமல்ல. ஏனெனில் நிலையான தீர்வுக்கு இதனை விட முக்கியமான பல விடயங்கள் உள்ளன. தேசிய பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வு முக்கியமான விடயமாகும். இதன் உள்ளடக்கம் குறித்தே கடந்த காலங்களில் சர்வகட்சிக் குழுவிலும் பேசப்பட்டது.

எனவே தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லாத வகையில் இனப்பிரச்சினைக்கான தீர்வையும் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களையும் வழங்க முடியும் என்பதே எனது நம்பிக்கையெனக் கூறினார்.

http://www.alaikal.com/news/?p=90373

Edited by akootha

இவ்வசனங்களை பார்த்து உணர்ச்சி வசப்பட்டு விடாதீர்கள் ... சிங்களவன் தீர்வை வழங்க முற்படுகிறான் என்று!!!! ... உந்த கொம்யுனீஸம் பேசி இனவாதிகளுடன் பதவிக்காக ஒட்டி இருக்கும் பேராசிரியரை, இனப்பிரட்சனை தீர்வு விடத்தில் சிங்களம் கழட்டி கனகாலம் ஆகின்றது!! ,,, பாவம் எங்கேயோ ஒரு மூலையில் தமிழ் ஊடகங்களுக்கு சவுண்ட் விட்டிருக்குது, அவ்வளவுதான்!

... உந்த பேராசிரியர் இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் லண்டன் வந்து இங்குள்ள மா.க.மாக்களின் பிரமுகர்களுடன் றீகொன்சிலீயேசன் தொடர்பாக மீட்டிங் ஒன்று வைத்தவராம். யாரோ ஒன்று அங்கு போனதில், தட்டுத்தடுமாறி இனப்பிரட்சனைக்கு தீர்வு எவ்வாறு வைக்கப்போகிறீர்கள் என்று கேட்டவுடன், முக்குத்தடுமாறி மழுப்பி இறுதியில் பொருளாதார அபிவிருத்திதான் தீர்வு என்றாராம் ... இந்த மாக்ஸிஸவாதி!!!!!!!!

Edited by Nellaiyan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.