Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீங்கள் இன்னும் திருந்தவில்லையா..?

Featured Replies

நீங்கள் இன்னும் திருந்தவில்லையா..? வேண்டாம் போலித் தீர்வு கூட்டமைப்பு

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு பொலிஸ், காணி அதிகாரங்களைத் தரமுடியாது என்று அரசு நேற்றுத் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அந்த அதிகாரங்களை வலியுறுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவதில் பயன் ஏதும் இல்லை என்றும் அரசு தெரிவித்துள்ளது. அந்த அதிகாரங்கள் தரப்படாவிட்டால் அப்படியொரு தீர்வே வேண்டாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது.

“பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது; ஒருபோதும் வழங்கவும் மாட்டோம்” என்று அடித்துக் குறிப்பிட்டார் அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பு நேற்று அரச திணைக்களத்தில் நடைபெற்றது.

அரசுடனான பேச்சில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காணி, பொலிஸ் அதிகாரங்களைக் கோருகின்றது என்றும் அரசு அவற்றை வழங்க ஒருபோதும் முன்வராது என்பதால் தொடர்ந்தும் பேச்சு நடத்துவது காலத்தைக் கடத்தும் செயல் என்றும் கெஹலிய தெரிவித்தார்.

இந்தியாவில் சோனியாவுக்கு நடந்த சம்பவத்தை இதற்கான உதாரணமாக அவர் குறிப்பிட்டார். “தனது சொந்த மாநிலத்துக்குச் செல்லச் சோனியா அம்மையார் அனுமதி பெறவேண்டி இருக்கிறது. முன்னாள் முதல்வர் ஒருவர் அவரது சொந்தப் பொலிஸாராலேயே கீழே தள்ளப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டார். அத்தகைய சம்பவங்கள் இடம்பெற இடமளிக்கமாட்டோம்” என்றார் ரம்புக்வெல.

கூட்டமைப்பின் கருத்து

ரம்புக்வெலவின் இந்த அறிவிப்புக் குறித்து கருத்துத் தெரிவித்த தமித் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன், அந்த அதிகாரங்கள் வழங்கப்படாத ஒரு தீர்வு தேவையே இல்லை என்று கூறினார். எனினும், இந்த விடயத்தைக் கூட்டமைப்புக்கு அரசு உத்தியோகபூர்வமாக இன்னும் தெரிவிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். “கூட்டமைப்புடன் பேச்சில் ஈடுபட அரசு விரும்பவில்லை என்றால் அதனை நேரடியாக, பகிரங்கமாக அரசு அறிவிக்கலாம். அதனை விடுத்து, எம்மைப் பேச்சுக்கு அழைத்துக் கொண்டு ஊடகங்களில் இவ்வாறு அதைத் தர முடியாது; கூட்டமைப்பு புலிகளைப் போன்று நடக்கின்றது என்று கருத்துக் கூறிக்கொண்டிருப்பதை ஏற்க முடியாது” என்றார் அவர்.

http://www.alaikal.com/news/?p=91725

Edited by akootha

  • தொடங்கியவர்

திம்புவில் எல்.ரி.ரி.ஈ. கையாண்டதைப் போன்ற உபாயத்தை த.தே.கூ. கையாள்கிறது: அரசு

பொலிஸ், காணி அதிகாரங்களைக் கோரி காலத்தை விரயமாக்கக்கூடாது எனவும் உத்தேச நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் மூலம் பேச்சுவார்த்தை நடத்துமாறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் அரசாங்கம் கோரியுள்ளது.

நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பாக கூறிய அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மிகவும் எதிர்மறையான நிலைப்பாட்டில் உள்ளததாகவும் அரசாங்கம் கலந்துரையாடத் தயாரில்லாத விடயங்களில் அதிகார பரவலாக்கத்தை வலியுறுத்தி நிற்பதாகவும் தெரிவித்தார்.

திம்புப் பேச்சுவார்த்தை மேசையிலிருந்து எல்.ரி.ரி.ஈ. வெளியேறியபோது அவ்வியக்கம் கையாண்டதைப் போன்ற உபாயத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கையாள்கிறது எனவும் அவர் கூறினார்.

அரசாங்கம் 31 பேர் கொண்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிக்கும். இதற்காக 19 பேரின் பெயர்களையும் அறிவித்துள்ளது. ஆனால் த.தே.கூட்டமைப்பு தனது அங்கத்தவர்களின் பெயர்களை இதுவரை அறிவிக்கவில்லை. அரசாங்கத்துடன் த.தே.கூட்டமைப்பு அவர்களின் அபிலாஷைகள் தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

1985 ஆம் ஆண்டு திம்புப் பேச்சுவார்த்தை மேசையிலிருந்து எல்.ரி.ரி.ஈ. வெளியேறியபோது கையாண்டதைப் போன்ற உபாயத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கையாள்கிறது.

த.தே.கூட்டமைப்பின் எதிர்மறையான மற்றும் கடும்போக்கு நிலைப்பாடு காரணமாக அதனுடன் பேசுவது கடினமானது. யுத்தம் முடிந்தமையும் சமாதானம் உதயமாகியமையும் தமிழ் மக்களுக்கு எந்த நிவாரணத்தையும் வழங்கவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறுகிறது. அது உண்மையல்ல. வடக்கில் சமாதானம், சட்டம் ஒழுங்கு, அபிவிருத்தியில் 5 சதவீத முன்னேற்றம் ஏற்பட்டதாக ஏற்றுக்கொள்வதற்கும் த.தே.கூ. மறுக்கிறது' அமைச்சர் ரம்புக்வெல்ல கூறினார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக சில மேற்குல நாடுகள் சாதகமான கருத்தை வெளியிட்டுள்ளமை உற்சாகமளிப்பதாகும் எனவும் அவர் தெரிவித்தார். சிலர் அரசாங்கம் இந்த அறிக்கையை அரசாங்கம் வெளியிடாது எனக் கூறினார்கள். ஆனால் ஆனால் குறுகிய காலத்தில் ஆணைக்குழுவுடன் சிபாரிசுகளுடன்கூடிய அறிக்கையை அரசாங்கம் வெளியிட்டுள்ளளது.

தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்துக்காக ஆணைக்குழுவின் அறிக்கையை அமுல்படுத்துவதற்கு அரசாங்கத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைக்க வேண்டும் எனவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கூறினார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/33144-2011-12-22-19-19-20.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.