Jump to content

நேற்று - இன்று - நாளை

Recommended Posts

பதியப்பட்டது

நேற்று - இன்று - நாளை

நேற்று

1982ம் வருடம் ஈராக்கிற்கும் ஈரானிற்கும் இடைவிடாத போர் நடந்து கொண்டிருக்கும் வருடம். ஈரானை ஒழித்துக்கட்ட அமேரிக்கா ஈராக்கிற்கு வேண்டிய அத்தனை கெமிகல் மற்றும் ராணுவ ஆயுதங்களை வழங்கிக் கொண்டிருந்தது.

இச்சூழலில் சதாம் ஹுசைன் துஜைல் எனும் இடத்திற்கு தனது புடை சூழ சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். சுற்றுப்பயணத்தின் போது அவரது வாகனத்தின் மீது துப்பாக்கி குண்டுகளால் அப்பகுதியில் வாழும் ஒரு சில ஷியாக்களால் தாக்கப்படுகிறார். திடீரென தாக்கப்பட்டாலும் தகுந்த பாதுகாப்புடன் வந்த சதாமின் காவலாளிகள் திருப்பித் தாக்கினர். உடனடியாக சதாமின் நேஷனல் கார்டு பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டருடன் வந்து துஜைலில் இருந்த மக்களை தாக்க, 150க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர். இந்நிகழ்ச்சி ஈராக்கிகளை தவிர்த்து மற்ற யாருக்கும் தெரியாமல் போனது, குறிப்பாக அமேரிக்கா கண்டு கொள்ளவே இல்லை.

இன்று

2005ம் வருடம் அமேரிக்க வீரர்கள் ஈராக், சிரியாவின் பார்டர் பகுதியில் ரோந்து சுற்றிக் கொண்டிருக்குபோது சாலையோரத்தில் பதுக்கி வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்து ஐந்து அமேரிக்க வீரர்கள் மரணமடைகிறார்கள். உடனே அமேரிக்க ஈராக்கின் ராணுவத் தலைமை அமேரிக்க ஹெலிகாப்டர்களை அனுப்பி அப்பகுதியின் இரு கிராமங்களில் குண்டுமழை பொழிகிறது. 70 பேர்களுக்கு மேல் கொல்லப்பட்டார்கள். அதில் இதுவரை 39 அப்பவிகள் கொல்லப்ப்ட்டதாக தகவல்.

நேற்று சதாம் நடத்திய கொலைகளுக்காக இன்று குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரிக்கப்படுகிறார்.

நாளை

இன்று அமேரிக்க ராணுவம் நடத்திய கொலைகளுக்காக நாளை அமேரிக்கா அதிபர் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரிக்கப்படுவாரா?

Posted

நாளை

இன்று அமேரிக்க ராணுவம் நடத்திய கொலைகளுக்காக நாளை அமேரிக்கா அதிபர் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரிக்கப்படுவாரா?

******************************

அதெப்படி முடியும். அவர் அ அ மெ மெரிக்கா அதிபர்ர்்்்்்்் எல்லோ?

அவர் அ அ மெ மெரிக்கா அதிபர்ர்்்்்்்் எல்லோ.. :arrow: அப்பிடின்னா என்ன அவருக்கு தலைல ரண்டு கொம்பா முளைச்சிருக்கு..? :shock: :twisted:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவர் அ அ மெ மெரிக்கா அதிபர்ர்்்்்்்் எல்லோ.. :arrow: அப்பிடின்னா என்ன அவருக்கு தலைல ரண்டு கொம்பா முளைச்சிருக்கு..? :shock: :twisted:

ஜயய்யோ!! அப்ப அவருக்கு முளைக்கவில்லையா!! :shock: :shock:

Posted

இல்லை..அவரும் சாதாரண மனிதன் தானே என்று சொல்ல வந்தன்..அவருக்கு கொம்பொன்றும் முளைத்து அற்புத மனிதரல்லவே.. :evil:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி நாரதர்!!

உடனே எனக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்பதற்காக கஸ்டப்பட்டமைக்கு!! :wink: :P

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.