Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீதியில் சென்றவர்களை மோதிய சிங்களச் சாரதியைக் காப்பாற்றிய படை அதிகாரி! விசுவமடுவில் சம்பவம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

SLK.Army_.2-150x150.jpg

முல்லைத்தீவு விசுவமடுவில் சுற்றுலாச் சென்ற சிங்களவர்களின் பேருந்து ஒன்று வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயம் அடைந்திருக்கின்றனர்.இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

இன்று முற்பகல் 9மணியளவில் விசுமடு 12ஆம் கடைப்பகுதியில் திருப்பதி என்பவர் தனது பிள்ளையுடன் பயணித்துக்கொண்டிருந்தார். அவ்வேளை எதிரே வந்த சிங்களவர்களை ஏற்றிய சுற்றுலாப் பேருந்து திருப்பதி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியிருக்கின்றது. சம்பவத்தில் திருப்பதியும் அவரது பிள்ளையும் படுகாயம் அடைந்ததுடன் மோட்டார் சைக்கிளும் மோசமாகச் சேதமடைந்திருக்கின்றது.

சம்பவம் இடம்பெற்றதை அடுத்து அங்கு விரைந்த இராணுவ அதிகாரி ஒருவருவரும் சிப்பாய்களும் சிங்களவர்களைக் காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததுடன், அந்தப் பகுதியில் நின்றிருந்த இளைஞர்களை மிரட்டியதுடன் அவர்கள் வைத்திருந்த கைத் தொலைபேசிகளையும் பறித்து அவற்றில் சம்பவம் தொடர்பிலான புகைப்படங்கள் ஏதாவது இருக்கின்றனவா? என்று பரிசோதித்துமிருக்கின்றனர்.

விபத்துச் சம்பவம் தொடர்பிலான சட்ட நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளவிடாது தடுத்து நிறுத்திய அந்தப் பகுதிக்குப் பொறுப்பான மேஜர் பெற்றீஸ் என்ற இராணுவ அதிகாரி பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டினையும் வழங்க வேண்டாம் என்று தெரிவித்து தென்பகுதி பேருந்தினைத் தொடர்ந்து செல்வதற்கு அனுமதித்திருக்கின்றார்.

சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் மீது மோதிய பேருந்தின் இலக்கம் NWNA – 5534 என்பதாகும் என்று சம்பவத்தினை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

http://www.saritham.com/?p=45898

ம்ம்ம்ம்.... கேக்கிறதுக்கு ஒரு நாதியில்லாத கேனப்பயலுகளாக இருக்கிறோம்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.