Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருகோணமலையில் பிரபல வர்த்தகர் ஒருவர் சுடப்பட்டுள்ளார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலையில் இன்று இரவு வர்த்தகர் ஒருவர் சுடப்பட்டுள்ளார். இவர் கடுமையான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

விகாரைவீதியில் தனது காரில் சென்றுகொண்டிருக்கும் போது இனம்தெரியாதவர்களால் சுடப்பட்ட இவர் மூதூர் மல்லிகைத் தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட 47 வயதுடைய ராஜகோபால என குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். பிரபல வர்த்தகரான இவர் மீதான கொலை முயற்சிக்கு காரணம் அறியப்படவில்லை. இவரது சகோதரர் நடேசபிள்ளை கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டவர் என தெரியவருகிறது.

அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்ட்டுள்ள ராஜகோபால் திருமலையில் பிரபல விடுதி ஒன்றையும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள், மற்றும் வியாபார ஸ்தலங்களையும் கொண்டிருந்தவர் என தகவல்கள் கூறுகின்றன. அருகில் காவல் நிலையங்கள், முகாம்கள் என பாதுகாப்பு நிறைந்த இந்தப் பகுதியில் சைலன்ஸ்ர் போடப்பட்ட துப்பாக்கியால் இவர் சுடப்பட்டதாக குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இவருடன் மற்றும் ஒருவரும் சுடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றபோதும் மேலதிக தகவல்களை பெற முடியவில்லை.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/72212/language/ta-IN/article.aspx

லண்டனில் வசித்து வந்த வர்த்தகர் மீது திருகோணமலையில் துப்பாக்கிச் சூடு

திருகோணமலையில் பிரபல வர்த்தகர் ஒருவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமமைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை பொலிசார் தெரிவித்தனர்.

இன்று(03.01.2012) இரவு 9 மணியளவில் திருகோணமலை விகாரை வீதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. மூதூர் மல்லிகைத் தீவு பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல வர்த்தகரான கந்தையாக ராஜகோபால் (வயது 38) என்பவரே இத் இத்துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

குறித்த நபர் தனது உல்லாச பயணிகள் விடுதியிலிருந்து தனது மற்றுமொரு வர்த்தக நிலையமான எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு செல்லும் வழியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றது.

மூதூர், மல்லிகைத்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர் எனவும் லண்டனில் தொழில் ரீதியாக குடும்பத்துடன் வசித்து வருபவரும், மூன்று பிள்ளைகளின் தந்தையும் ஆவார் எனவும், லண்டனிலிருந்து ஒரு மாதத்திற்கு முன்னரே திருகோணமலை வந்ததாகவும் தெரியவருகின்றது.

குறித்த நபர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான நடேசப்பிள்ளையின் கடைசித் தம்பி என்பதுடன் இவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

sl_shoting_01.jpg

sl_shoting_02.jpg

sl_shoting_03.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.