Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை: சர்வமதத் தலைவர்கள் வரவேற்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை: சர்வமதத் தலைவர்கள் வரவேற்பு

எந்தவொரு வெளிநாட்டையும் திருப்திப்படுத்த தயாரிக்கப்பட்ட அறிக்கையல்ல : சங்கைக்குரிய பெல்லம்வில விமலரத்ன தேரர்

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையினை மதத் தலைவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றிருக்கிறார்களென பேராசிரியர் சங்கைக்குரிய பெல்லம்வில விமலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

அபேயராம புராண விகாரையில் ஊடகவியலாளர்களை நேற்றுச் சந்தித்த சங்கைக்குரிய தேரர் இவ்வாணைக்குழுவின் அறிக்கை இந்நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வை ஏற்படுத்துவதற்கு ஏற்புடைய வகையில் அமைந்திருக்கின்றது என்று கூறினார்.

இவ்வாணைக்குழுவின் அறிக்கை ஐக்கிய நாடுகள் அமைப்பையோ ஐரோப்பிய யூனியனையோ அல்லது வேறு எந்த வெளிநாட்டையோ திருப்திப்படுத்தக்கூடிய வகையில் தயாரிக்கப்படவில்லை என்று கூறினார்.

உலகில் உள்ள நான்கு பிரதான மதங்களை சார்ந்த மக்கள் எங்கள் நாட்டில் வாழ்கின்றார்கள். பல நூற்றாண்டுகளாக இந்த மதங்களைச் சார்ந்த மக்கள் எங்கள் நாட்டில் சகோதரர்களாக நட்புறவுடன் வாழ்ந்திருக்கிறார்கள். ஆயினும் கடந்த 30 ஆண்டுகால பயங்கரவாத யுத்தத்தினால் மக்களிடையே இருந்து வந்த நட்புணர்வு ஓரளவு பாதிக்கப்பட்டிருந்த இணக்கப்பாடும் ஏற்பட்டிருக்கின்றது என்றும் சங்கைக்குரிய விமலரத்ன தேரர் தெரிவித்திருக்கின்றார்.

இந்த நாட்டு மக்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுலாக்குவதற்கு தங்கள் பூரண ஒத் துழைப்பை அரசுக்கு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். சில தீவிரவாதிகள் இவ் ஆணைக்குழுவின் அறிக்கையை எதிர்ப்பதைக்கண்டு மக்கள் மனம் தளர்ந்துவிடாது அரசாங்கத்துக்கு இன்றைய சூழ்நிலையில் பக்கபலமாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

இந்து சமயத்தின் சார்பில் கருத்துத் தெரிவித்த குருக்கள் கே. சர்மா; 30 ஆண்டுகால யுத்தத்தின் பின்னர் நாட்டில் இன்று சமாதானம் நிலைத்திருக்கின்றது என்றும் யுத்தத்தின் போது வடக்குக் கிழக்கைச் சேர்ந்த மக்கள் எதிர்நோக்கியிருந்த பிரச்சினைகள் இன்று முற்றாக நீங்கிவிட்டது. சகல தரப்பு மக்களின் கருத்துக்களை அடிப்படையாக வைத்தே நல்லிணக்க ஆணைக்குழு இவ்வறிக்கையை தயாரித்திருக்கிறது. எனவே அவ்வறிக்கையில் உள்ள சிபாரிசுகளை அரசாங்கம் உடனடியாக நிறைவேற்றுவது அவசியம் என்றும் கூறினார்.

சங்கைக்குரிய மாதுருவாவே சோபித தேரர்; யுத்தம் முடிவடைவதற்கு சில தினங்களுக்கு முன்னர் இராணுவத்தினர் மேற்கொண்ட மனிதாபிமான செயற்பாடுகள் குறித்து சர்வதேசத்தில் கவனம் திரும்பியிருந்தது என்றும், அது குறித்து தருஸ்மன் அறிக்கையின் தவறான கருத்தை உள்ளடக்கக்கூடிய வகையில் இவ் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

அந்தக் கடைசி நாட்களில் நடந்த நிகழ்வுகள் பற்றி எவருக்குமே தெரியாது என்று தெரிவித்த சங்கைக்குரிய தேரர், அப்போது அங்கு வாழ்ந்த மக்கள் அளித்த சாட்சியங்களை அடிப்படையாக வைத்தே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கின்றது என்றும் எனவே இவ்வறிக்கையில் தவறு காண்பதற்கு சில சக்திகள் எடுக்கும் முயற்சிகளை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறினார்.

இது குறித்து தகவல் தெரிவித்த வணக்கத்துக்குரிய பிதா மேர்வின் பெர்னாண்டோ நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை இந்நாட்டு மக்களின் நிலைப்பாட்டை அங்கீகரித்திருக்கின்றது என்றும் இவ்வறிக்கை மக்களின் உண்மையான பிரச்சினைகளை அங்கீகரித்து பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் நீதியையும் நியாயத்தினையும் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற கருத்தையும் வலியுறுத்தியிருக்கின்றது என்றும் கூறினார். எனவே, மதத் தலைவர்களாகிய நாம் ஒரு தார்மீக சமுதாயத்தை உருவாக்குவதற்கு எங்களின் பூரண பங்களிப்பை வழங்குவது அவசியம் என்றும் கூறினார்.

வணக்கத்துக்குரிய பிதா எபனீசா ஜோசப்; தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பிரதிபலிக்கக்கூடிய வகையில் இந்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்ககப்பாட்டுக்குரிய அறிக்கை அமைந்திருக்கின்றது என்றும் இந்த ஆணைக்குழுவின் அறிக்கை நாட்டை முன்னேற்றப் பாதையில் வழிநடத்திச் செல்வதற்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக அமைந்துள்ளது என்றும் கூறினார்.

மெளலவி எம்.எஸ்.எம். தாஸிம் ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையில்; முஸ்லிம் சமுகமும் இஸ்லாமிய மதத் தலைவர்களும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் சிபாரிசுகளை நிறைவேற்றுவதற்கு தங்கள் பூரண ஆதரவை அளிக்கிறார்கள் என்று கூறினார். 2009 ஆம் ஆண்டில் எல்.ரீ.ரீ. அரச படைகளினால் அடக்கி ஒடுக்கப்பட்டதை அடுத்து எழுந்துள்ள அமைதியான சூழலில் மக்களின் நியாயபூர்வமான பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதற்கான அவசியத்தை உணர்ந்து அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் சொன்னார்.

மதங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த காங்கிரஸ் அமைப்பு கடந்த 15 வருடங்களுக்கும் கூடுதலாக இலங்கையில் சகல இன மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.