Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா எந்த நேரத்திலும் இலங்கை சார்பாகவே செயற்படும்-பீரிஸ்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

gl-peris-100x100.jpg

இந்தியா எந்த நேரத்திலும் இலங்கை சார்பாகவே செயற்படும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுடனான சந்திப்பையடுத்து வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு காண நியமிக்கப்படவுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெயர்கள் முன்மொழியப்பட வேண்டும்.

இலங்கை – இந்தியா ஆகிய இரு நாடுகளுக்குமிடையில் பொருளாதார, புவியியல் மற்றும் கலாசார ரீதியில் நீண்ட கால உறவு காணப்படுகின்றது. இந்த உறவு எதிர்காலத்தில் அதிகரிக்கும்.

அரசியல் விவகாரம் உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் இரு நாடுகளும் திறந்த மனதுடனேயே பேசி வருகின்றன. இதனால் இலங்கை மீது இந்தியா அதிக நம்பிக்னை கொண்டுள்ளது.இந்திய வெளிவிவகார அமைச்சராக எஸ்.எம்.கிருஷ்ணா நியமிக்கப்பட்ட பின்னர் இரண்டாவது தடவையாக இலங்கை வந்துள்ளார்.

இவர் இலங்கை விஜயம் மேற்கொண்ட சமயங்களில் முக்கிய நகரங்களான யாழ்ப்பாணம், காலி, ஹம்பாந்தோட்டை, மதவாச்சி, கிளிநொச்சி, வவுனியா ஆகிய இடங்களுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் என அவர் குறிப்பிட்டார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே.காந்தா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

http://www.saritham.com/?p=48018

சீனாவின் கடலாதிக்கத்தைக் கட்டுப்படுத்த மேற்குலகம் உண்மையில் விரும்பினால், முதலில் இந்திய தேசம் சில நூற்றாண்டுகளுக்கு முன்புவரை இருந்த மாதிரி தனித்தனி இராச்சியங்களாக மாற வேண்டும்.

தற்போது ஹிந்தியக் காட்டுமிராண்டிகளின் கைகளில் சிக்கியிருக்கும் ஹிந்டியாவை மேற்குலகம் நம்பினால் ஏமாந்து போவது திண்ணம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.