Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடிய தேசிய தமிழர் அவை

Featured Replies

கனடிய தேசிய தமிழர் அவை : 2011ஆம் ஆண்டு செய்தவை

Edited by akootha

  • தொடங்கியவர்

முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்னராக தாயக / புலம்பெயர் மக்களின் நலன்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட அமைப்புக்களில் ஒன்று கனடிய தமிழர் தேசிய அவை.

ஜனநாயக பண்புகளை வளர்ப்பது மூலம் ஒரு தெளிவான திடகாத்திரமான அடித்தளத்தை நிறுவுவது இந்த அமைப்பின் ஒரு முக்கிய பண்பாகின்றது. அந்த வகையில் இந்த அமைப்பின் ஒரு கூட்டத்தின் ஒளிப்பதிவு:

http://www.youtube.com/watch?v=_9HwvE2J9Y0&feature=youtu.be

  • தொடங்கியவர்

தமிழ் கலாச்சார மண்டபத் திட்டத்தை (Tamil Cultural Center) முன்னெடுப்பதற்கான கனடியத் தமிழர் தேசிய அவையின் அறிவித்தல்!

எம் தாய்த் தமிழீழத்தில் வரலாற்று விழுமியங்கள் முற்று முழுதாக சீரழிக்கப்படுகின்ற இக் கொடுமையான காலப்பகுதியில், அதனைத் தடுக்க வேண்டிய கட்டாயத்தில் புலம் பெயர் தமிழர்களாகிய நாம் இருக்கின்றோம். இதன் முன்னோடியாக, தமிழர் இன அழிப்பை சான்று கூறும் நினைவு மண்டபத்தை அமைப்பதற்கான திட்டத்தினை கனடியத் தமிழர் தேசிய அவையினாராகிய

நாம் முன்னெடுக்கவுள்ளோம்.

இவ்வேலைத் திட்டத்தின் அங்கமாக தமிழர் கலாச்சார நினைவு மண்டபத்தை கனடாவில் கட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தமிழர்கள் செறிவாக வாழும் ஒவ்வொரு பிரதேசங்களிலும் சிறிய கலாச்சார நினைவு மண்டபங்களையும் அமைக்கவுள்ளோம்.

எம் மக்கள் அனைவரும் ஓரிடத்தில் ஒன்று கூடி, எமது வரலாற்று சின்னங்களையும், அதை காக்க உயிர் நீத்த எம் இனிய உறவுகளை நினைவு கூறும் நினைவாலயமாக இத்திட்டம் அமையப்பெறவிருக்கின்றது. எதிர் காலத்தில், தமிழர் கலை, கலாச்சாரத்தை பேணும் காப்பிடமாக இந்த மண்டபம் இருக்கும். இதன் மூலம், எம்மவர் நிகழ்வுகளை பாரம்பரிய முறைப்படி நடாத்தும் ஓரிடமாக இந்த கலாச்சர மண்டபம் திகழும்.

இந்த மண்டபத்தின் ஆக்கப்பணிகளும், நிர்வாக அமைப்பும் ஒவ்வொரு தமிழர்களும் அறிந்துக்கொள்ளத் தக்க வகையில் வெளிப்படையான முறையில் நிர்வகிக்கப்படும். இந்த உயரிய திட்டம், எம் பெரும்பாலான உறுப்பினர்களால் சனநாயக முறைப்படி அங்கீகரிக்கப்பட்டு, இதற்கான முதற்கட்டப்பணிகளும் ஆரம்பிக்கப்ட்டுள்ளன.

இத் திட்டத்தை ஆக்கபூர்வமான முறையில் முன்னெடுக்க உங்கள் அனைவரினதும், உயரிய பங்களிப்பை எதிர்பார்த்து நிற்கின்றோம். தமிழர்களாகிய எமது கலாச்சார மண்டபத்துக்கான உங்கள் அனைத்து பங்களிப்புக்களையும் செய்வதற்கு, எமது தலைமைக் காரியாலயத்துடன் தொடர்பு கொள்ளவும்.

Edited by akootha

நன்றி அகூதா இணைப்பிற்கு. கனடிய தமிழர் தேசிய அவையின் செயற்பாடுகள் மிகவும் காத்திரமானவையாகவே உள்ளன. இவ்வாறு இங்குள்ள ஒவ்வொரு அமைப்பும், மற்றைய அமைப்புகள் செய்யும் செயற்பாடுகளில் குறுக்கிடாமல், புதிய ஒரு பாதையில் தங்கள் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்பதே இங்குள்ள தமிழர்களின் விருப்பமாக உள்ளது. ஒவ்வொரு அமைப்பும் ஒவ்வொரு செயற்பாடுகளில் தம்மை ஈடுபடுத்தும்போது நிறையவிடயங்களை குறுகிய காலவெளியில் நாம் செய்யக்கூடியதாக இருக்கும். இன்னும் நிறையப் பாதைகள் நாம் பயணிக்கப்படாமலேயே இருக்கின்றன.

  • தொடங்கியவர்

நன்றி அகூதா இணைப்பிற்கு. கனடிய தமிழர் தேசிய அவையின் செயற்பாடுகள் மிகவும் காத்திரமானவையாகவே உள்ளன. இவ்வாறு இங்குள்ள ஒவ்வொரு அமைப்பும், மற்றைய அமைப்புகள் செய்யும் செயற்பாடுகளில் குறுக்கிடாமல், புதிய ஒரு பாதையில் தங்கள் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்பதே இங்குள்ள தமிழர்களின் விருப்பமாக உள்ளது. ஒவ்வொரு அமைப்பும் ஒவ்வொரு செயற்பாடுகளில் தம்மை ஈடுபடுத்தும்போது நிறையவிடயங்களை குறுகிய காலவெளியில் நாம் செய்யக்கூடியதாக இருக்கும். இன்னும் நிறையப் பாதைகள் நாம் பயணிக்கப்படாமலேயே இருக்கின்றன.

உண்மை அகரன். இங்கே மூன்று அமைப்புக்கள்; நாடு கடந்த அரசு, கனேடிய தமிழர் பேரவை,. கனடிய தமிழர் தேசிய அவை என உள்ளன. மூன்றும் முரண்படாமல் பயணிக்க வேண்டிய தேவைகள் உள்ளன, முடிந்தவரை அதற்கு உதவி செய்வோம்.

நிச்சயமாக! இதைவிட CHRV என்ற அமைப்பு உள்ளது. இது இலங்கையில் நடந்த நடைபெறுகின்ற மனித உரிமை மீறல்கள் போன்றவற்றை கனடிய மக்கள் மற்றும் அரசிடம் கொண்டுசெல்லும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். வருகின்ற மாசிமாதம் 1ம் திகதிகூட ஒரு மாநாடு இடம்பெறவுள்ளது. இவர்களின் இணையத்தளம்:

http://www.chrv.ca/index.php

இதைவிட இளைஞர்கள் தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் கனடிய தமிழர் இளையோர் ஒன்றியம் ஆகியவற்றுடன் இணைந்து சில வேலைத்திட்டங்களைச் செய்யமுடியும்.

TYO CANADA: http://www.canadatyo.org/tyo/?

CYTA: http://www.ctya.org/

  • தொடங்கியவர்

Tamil Youth Leadership Retreat

Date: 2012-01-29 at 9:00 am

Address: 5310 Finch Ave. East, Unit 10, Scarborough, ON Canada

Details: National Council of Canadian Tamils (NCCT) celebrates and marks Tamil Heritage Month with the launch of Tamil Youth Leadership Retreat For Tamil youth ages 16-21:

Topics that will be covered: · Identity and Self-Esteem · Understanding Our Roots · Leadership Styles · Communication Skills.

Only 30 Spots Available! Registration required! Register Early to Avoid Disappointment.

Contact:

Name: National Council of Canadian Tamils

Phone: 416 646 7624

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.