Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை செல்கின்றார் ஒபாமாவின் விஷேட தூதுவர்

Featured Replies

இலங்கை செல்கின்றார் ஒபாமாவின் விஷேட தூதுவர்! - நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து ஆராய்வார்!!

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் போர்க்குற்ற விவகாரங்களுக்கான விஷேட தூதுவர் Stephen Rapp உயர்மட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்குச் செல்விருப்பதாக வொஷிங்டன் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.

ஜெனிவாவில் எதிர்வரும் பெப்ரவரி மாதத்தின் இறுதிப்பகுதியில் ஆரம்பமாகவுள'ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடருக்கான ஒரு முன்னோடியாகவே இவரது விஜயம் இடம்பெறவிருப்பதாகவும் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உட்பட முக்கிய அரசாங்கத் தலைவர்களையும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் குடியியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களையும் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவுள்ள Stephen Rapp, சிறிலங்கா அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக முக்கிய கவனத்தைச் செலுத்துவார் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க ஜனாதிபதியின் போர்க்குற்ற விவகாரங்களுக்கான தூதுவராகப் பணியாற்றும் Stephen Rapp, 2007ஆம் ஆண்டு ஜனவரியில் சியரா லியோனுக்கான (Sierra Leone) விஷேட நீதிமன்றத்தில் வழக்குத் தொடுநராகப் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சியரா லியோனில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் பெருமளவு கொடூரங்களுக்குப் பொறுப்பானவர் என லைபீரியாவின் முன்னாள் ஜனாதிபதி சார்ள்ஸ் ரெயிலர் மற்றும் ஏனையவர்கள் மீது வழங்குத் தாக்கல் செய்யப்படுவதற்கு இவரே பொறுப்பாக இருந்தார்.

ஜெனிவாவில் மார்ச் மாதத்தில் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடருக்கு முன்னோடியாகவே இவரது விஜயம் இடம்பெறவிருக்கின்றது.

இந்தக் கூட்டத் தொடரில் உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு மறுத்திருக்கும் சிறிலங்கா அரசாங்கம், அதற்கு எதிராகக் கொண்டுவரக்கூடிய தீர்மானங்களை முறியடிப்பதற்கு ஏனைய நாடுகளின் ஆதரவையும் கோரிவருகின்றது.

இந்நிலையில், இந்த விஜயத்தின் போது உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை Stephen Rapp விமர்சனத்துக்கு உள்ளாக்குவதுடன், இந்த விடயத்தில் சம்பந்தப்பட்டவர்களுடனும் அது தொடர்பாக பேச்சுக்களை முன்னெடுப்பார் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையிலான போரின் இறுதிப் பகுதியில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என சிறிலங்கா அரசாங்கத்தை அமெரிக்கா தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது.

2009ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், சட்டவிரோதமான கொலைகளில் சிறிலங்கா அரசாங்கம் சம்பந்தப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. கைது செய்யப்பட்ட தமிழர்களை சிறிலங்கா அரசாங்கத்தின் படைகள் படுகொலை செய்வதை உறுதிப்படுத்தும் காணொளி நாடாக்களும் கிடைத்திருப்பதாகவும் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=31a44a41-b930-41ec-a146-8c6ed714e2e0

  • தொடங்கியவர்

போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை பொறிமுறை அவசியம்! - ஹோவர்ட் பேர்மன்

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணை அவசியமென அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் சட்டபை உறுப்பினர் ஹோவர்ட் பேர்மன் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றங்களை இழைப்போர் மற்றும் மனித உரிமைகளை மீறுவோரை பொறுப்புக்கூற வைக்க வேண்டிய கடப்பாடு சிறிலங்கா அரசாங்கத்துக்கு உள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க செனற் சபையின் வெளிநாட்டு விவகாரச் செயற்குழுவில் இடம்பெறும் உயர்நிலை குடியரசுக் கட்சியின் சட்டசபை உறுப்பினராக விளங்குகின்ற ஹோவர்ட் பேர்மன், சிறிலங்காவின் உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்பட்டதனை வரவேற்றுள்ள அவர், இவ்வறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அதிகரப் பரவலாக்கம், மொழிக் கொள்கை, ஆளுமைச் சட்டம், பேச்சுச் சுதந்திரம் போன்றவற்றை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

இத்தகைய நடவடிக்கைகள் இலங்கையில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், ஜனநாயத்தை வலுப்படுத்தவும் உதவியாக அமையும் என அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகள் மேற்கொள்ளப்படாததையிட்டு அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், இலங்கையில் இடம்பெற்ற கடந்த முப்பது வருட போரின் போது மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு சுயாதீனமான சர்வதேச பொறிமுறைக்கு இடமளிக்குமாறு அவர் சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

நம்பகரமான விசாரணையும், குற்றங்களுக்கு பொறுப்புக்கூறும் கடப்பாட்டை ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் மட்டுமே இலங்கையில் நீடித்த நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் என ஹோவர்ட் பேர்மன் தெரிவித்துள்ளார்.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=adc94f43-3bc4-4aa4-8f67-c5813a6e4d66

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.