Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் இராணுவத்தால் அச்சுறுத்தப்படுகின்றனர் - பிபிசி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

release%20-%20ltte.jpg

புனர்வாழ்வு பெற்று தற்போது மீளவும் சமூகத்துடன் இணைக்கப்பட்டு வடக்கில் வாழும் முன்னாள் புலி உறுப்பினர்களை அரசியற் செயற்பாடுகளில் ஈடுபடாமல் தூர விலகி இருக்குமாறு, சிறிலங்கா இராணுவம் அச்சுறுத்தி வருவதாக உள்ளுர் அரசியல்வாதிகள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக மக்கள் போராட்ட இயக்கத்துடன் [Peoples Struggle Movement - PSM)] இணைந்து செயற்படவேண்டாம் என முன்னாள் புலி உறுப்பினர்களிடம் சிறிலங்கா இராணுவம் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக, வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவரான MK சிவாஜிலிங்கம், பிபிசி சந்தேசியாவிடம் தெரிவித்துள்ளார்.

"இது அவர்களின் அரசியல் உரிமையை மறுப்பதாக உள்ளது" எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஜே.வி.பி யிலிருந்து பிரிந்து சென்ற அமைப்பே மக்கள் போராட்ட இயக்கமாகும்.

எதுஎவ்வாறிருப்பினும், சிறிலங்கா இராணுவத்தினர் இக்குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

புனர்வாழ்வு பெற்று விடுதலையாகிய முன்னாள் போராளிகளின் செயற்பாடுகளை சிறிலங்கா காவற்துறையினர் கண்காணித்துவரும் அதேவேளையில், இவர்களின் விடுதலைக்குப் பின்னர் இவர்கள் தொடர்பான எந்தவொரு செயற்பாடுகளிலும் சிறிலங்கா இராணுவத்தினர் ஈடுபடவில்லை என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிகால் ஹப்புவாராய்ச்சி, பிபிசி சிங்களசேவையிடம் தெரிவித்துள்ளார்.

"சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுத் துறையினரின் கண்காணிப்பின் கீழ் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்" என திரு.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமையானது தற்போது வன்னி மற்றும் யாழ் குடாநாடு முழுமைக்கும் பரவியுள்ளது.

"இவ்வாறு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் ஒரு தொகுதியினர் வாரத்தில் ஒரு தடவையும் மற்றைய தொகுதியினர் மாதத்தில் ஒரு தடவையும் சிறிலங்கா இராணுவ முகாமிற்குச் சென்று அறிக்கையிட வேண்டும் என நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்" எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சிவாஜிலிங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறிலங்கா இராணுவத்தால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகலாம் என்ற பீதியினால் இவர் இது தொடர்பான குறிப்பிட்ட சில விபரங்களைத் தர மறுத்துவிட்டார்.

எவ்வாறிருப்பினும், இப்பிரச்சினை தொடர்பாக உள்ளுர் ஊடகங்களோ அல்லது உள்ளுர் தலைவர்களோ இராணுவத்திடம் முறைப்பாடு செய்யவில்லை என பிரிகேடியர் ஹப்புவாராய்ச்சி குறிப்பிட்டுள்ளார்.

"விடுவிக்கப்பட்ட முன்னாள் தமிழ்ப் புலி உறுப்பினர்கள் மீது சிறிலங்கா காவற்துறையினர் ஒரு ஆண்டு முழுமையும் கண்காணிப்பை மேற்கொள்வது உண்மையானதாகும்" என பிரிகேடியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

"விடுவிக்கப்பட்ட உறுப்பினர்கள் தேவையற்ற ஏதாவது விடயங்களில் ஈடுபட்டால், அவர்கள் தொடர்பாக அத்தியாவசிய நடவடிக்கை எடுப்பதற்காகவே இவ்வாறு சிறிலங்கா காவற்துறையினர் அவர்களைக் கண்காணிக்கின்றனர்" எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

"அவர்களை சிறிலங்கா காவற்துறையினர் கண்காணிப்பது பிழையல்ல. ஆனால் அவர்களின் நாளாந்த வாழ்வில் அச்சுறுத்தலைச் சந்திப்பதால், இவ்வாறான தேவையான செயற்பாடுகளை மேற்கொள்வதை அவர்கள் நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகின்றனர்" எனவும் திரு.சிவாஜிலிங்கம் மீளவும் வலியுறுத்தியுள்ளார்.

"சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் முன்னாள் புலி உறுப்பினர்கள் யாராவது ஈடுபட்டால் அவர்கள் மரணத்தைச் சந்திக்க வேண்டிவரும் என அச்சுறுத்தப்பட்டுள்ளனர்" எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

http://www.puthinapp...?20120124105433

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.