Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுதந்திர தினத்தன்று விடுதலை செய்யப்படவுள்ள 4000 பேரில் தமிழ் அரசியல் கைதிகளையும் உள்ளடக்குங்கள்

Featured Replies

சுதந்திர தினத்தன்று விடுதலை செய்யப்படவுள்ள 4000 பேரில் தமிழ் அரசியல் கைதிகளையும் உள்ளடக்குங்கள் ஜனாதிபதிக்கு அரிய நேத்திரன் எம். பி. கடிதம்

இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விடுதலை செய்யவுள்ள 4000 சிறைக்கைதிகளில் இலங்கையின் சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய நடவடிக்கையெடுக்க வேண்டும் என மட்டக்களப்பு உறுப்பினர் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எதிர்வரும் நான்காம் திகதி நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு 4000 அரசியல் கைதிகள் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்படவுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம். இது தொடர்பில் மிக மகிழ்ச்சியடைகிறோம்.

ஒரு நாட்டின் ஜனநாயக ஐக்கிய குடியரசின் ஜனாதிபதி என்ற அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதற்கான அதிகாரம் அந்த நாட்டின் ஜனாதிபதிக்கு மட்டுமே உள்ளது.

அதனடிப்படையில் இன்று இலங்கையின் பல பாகங்களிலும் உள்ள தமிழ் அரசியல் கைதிகளும் இந்தப் பொது மன்னிப்பு விடுதலையின் உள்ளடக்கப்படுவார்கள் என்று தமிழ் மக்கள் பெரும் எதிர்ப்பார்புடன் உள்ளனர்.

இந்த நாட்டில் யுத்தம் முடிவுற்று மூன்று ஆண்டுகள் கடந்து விட்ட போதிலும் பல்வேறு சிறைகளில் அரசியல் கைதிகளாகவுள்ளோர் தொடர்பில் இதுவரையில் எதுவித நடவடிக்கையும் எடுக்காமை தொடர்பில் தமிழர் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் மக்களும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது.

இன்று சிறைகளில் நூற்றுக்கு மேற்பட்ட அங்கவீனர்களும் 37 பெண்களும் கைக்குழந்தைகளுடன் மூன்று பேருமாக ஒட்டு மொத்தமாக 1000 க்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் உள்ளனர்.

தற்போது இந்த நாட்டில் யுத்தம் முடிவுக்கு வந்து சுமுகமான நிலை நிலவும் இந்த வேளையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்வது தொடர்பில் ஜனாதிபதியாகிய நீங்கள் நடவடிக்கைகள் எடுப்பீர்கள் என்று நம்புகின்றோம்.

இன்று சிறைகளில் உள்ளவர்களின் குடும்பங்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து வருவதுடன் சிலர் தங்களது குடும்பங்களையும் இழந்த நிலையில் உள்ளனர்.

சிறு குற்றங்கள் செய்தோர், தண்டப்பணம் விதிக்க முடியாதோர், குற்றம் புரிந்தோர் நன்னடத்தை அடிப்படையில் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்படும் போது எதுவித குற்றமும் புரியாமலும் சந்தேகத்தின் அடிப்படையிலும் தண்டனை விதிக்கப்பட்டு தண்டனைக் கைதிகளாக 15, 20 வருடங்களாக சிறையில் உள்ளோரை விடுதலை செய்வதில் எதுவித தயக்கங்களையும் காட்டக் கூடாது.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இன்று உலக நாடுகள் கூட பெரும் எதிர்ப்பார்ப்புடனே உள்ளனர். நாங்களும் எதிர்ப்பார்ப்புடனேயே உள்ளோம்.

இதில் எதுவித ஏமாற்றமும் இன்றி இந்த நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சிறந்த முடிவை எடுப்பீர்கள் என நம்புவதாகவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.thinakkural.com/news/all-news/jaffna/9943-----4000-----------.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.