Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடியத் தமிழருக்குப் புதிய பரிமாணம் கொடுத்த கனடியத் தமிழர் பேரவையின் ஐந்தாவது ஆண்டு பொங்கல் இரா விருந்து:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

CTC-pongal210112_357_150.jpg

ஆண்டுதோறும் சிறப்படைந்து வரும் கனடியத் தமிழர் பேரவையின் பொங்கல் இரா விருந்து இவ்வாண்டும் சிறப்பாக நடைபெற்றது. இசுகாபரோவில் அமைந்துள்ள கிரான்ட் பாக்கசு விருந்து மண்டபம் சனவரி 21, 2011 சனிக்கிழமை மாலை 3 மணியளவிலேயே களை கட்டத் தொடங்கிவிட்டது.

கனடியத் தமிழர் பேரவையின் தொண்டர் பலர் விழா ஏற்பாடுகளைக் கவனித்திட அப்போதே கூடியிருந்தனர். 5:30 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்தும் மாலை 5:00 மணியளவிலேயே மண்டபம் நிறைந்து காணப்பட்டது.

இன்முகத்தோடு ஒருவரையொருவர் வாழ்த்தி விழாவுக்கு வந்திருந்த நூற்றுக்கணக்கான பிற கனடியக் குமுகத்தவர்களோடு முதன்மை விருந்தினரும் மதிப்பிற்குரிய விருந்தினரும் காணப்பட்டனர்.

மதிப்புக்குரிய விருந்தினராக ஒன்ராறியோ மாகாண முதல்வர் திரு. டால்ரன் மக்கன்றி அவர்கள் கலந்து கொண்டார். விழாவில் முழுமையாகக் கலந்து கொள்ள அவரால் முடியாதபோதும் வரவேற்பு நேரத்திற் பல விருந்தினரைச் சந்தித்துத் தனிப்பட்ட முறையில் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

கனடியத் தமிழர் பேரவையின் தலைவர் திரு. உமாசுதன் அவர்கள் வரவேற்புரை வழங்கிய போது கடந்த ஆண்டின் பணிகள் பற்றி விளக்கி, தொடந்தும் ஒன்று பட்டு உழைப்போம் என்கிற வேண்டுகோளையும் விடுத்தார். துணைத் தலைவர் செல்வி வனிதா நாதன் அவர்கள் விழா இறுதியில் நன்றியுரை வழங்கினார்.

CTC-pongal210112_009.jpg

CTC-pongal210112_357_002.jpg

முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு. சுமந்திரன் அவர்கள் விழாவில் சிறப்புரை வழங்கினார். முக்கியத்துவம் வாய்ந்ததும் தாயகத்தின் உண்மை நிலையை எடுத்துக் காட்டுவதுமாக அமைந்த அவரது உரை பல முக்கிய செய்திகளை கனடாத் தமிழருக்கு வழங்கியது. கூடவே கனடிய அரசுக்கு சிறி லங்கா தொடர்பான அவர்களது நிலை குறித்து நன்றியும் தெரிவித்தார்.

அனைத்து அரச தரப்பிலிருந்தும் உறுப்பினர்கள் கலந்து கொண்டதோடு பிரதமர் மதிப்பிற்குரிய திரு. இசுடீபன் காப்பர் அவர்களது தனிப்பட்ட வாழ்த்துச் செய்தியும் எடுத்து வரப்பட்டது. ஏயெக்சு பாராளுமன்ற உறுப்பினர் திரு. கிறிசு அலக்சான்டர் அவர்கள் கனடிய அரசு சார்பில் உரையாற்றினார். ஒன்ராறியோ மாகாண அரசு சார்பாக மதிப்புக்குரிய குடிவரவு மற்றும் நாட்டுரிமை அமைச்சர் திரு. சார்ள்சு சூசா அவர்கள் உரையாற்றினார்.

CTC-pongal210112_367_003.jpg

CTC-pongal210112_403_004.jpg

அவரது உரையில் கனடியத் தமிழர் பேரவை கடந்த பல மாதங்களாகத் தங்களுடன் தைத் திங்களை மரபுத் திங்களாக மாகாண அளவில் அறிவிக்க வேண்டுமெனப் பேச்சு வார்த்தை நடாத்துவதாகவும் இந்த வேண்டுகோளை ஏற்றுச் சனவரி மாதத்தை மாகாண அளவிலே தமிழ் மரபுத் திங்களாக அறிவிக்க தாங்கள் வழி செய்வோம் என்ற செய்தியையும் அவர் வெளியிட்டார். ரொறன்ரோ நகர சபை சார்பில் நகர சபை உறுப்பினர் திரு. மைக்கல் தொம்சன் அவர்கள் உரையாற்றினார். நகர முதல்வரின் வாழ்த்துச் செய்தியையும் ரொறன்ரோவில் தமிழ் மரபுத் திங்கள் ஏற்றுக்கொண்ட செய்தியையும் அவர் எடுத்து வந்திருந்தார்.

CTC-pongal210112_001.jpg

CTC-pongal210112_005.jpg

விழாவின் முக்கிய நிகழ்வாக இரண்டு விருதுகள் வழங்கி மதிப்பளிக்கப் பட்டது. தொடர்ந்து இவ்வாண்டு கனடியத் தமிழர் நிதி சேர் நடை மூலம் சர்வதேச மன்னிப்புச் சபைக்குச் சேர்க்கப்பட்ட $50,000 டொலர்கள் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

தமிழ் வண் தொலைக்காட்சி ஊடாகவும் இணையத்தளம் மூலமாகவும் இவ்வாண்டின் நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்டன. கனடாவில் தமிழ்க் குமுகத்தின் வளர்சியையும் தன்னார்வத் தொண்டரின் உழைப்பையும் குமுக அக்கறையளரின் ஒத்துழைப்பையும் பெரிதும் காட்டி நின்றது இவ் விழா. சந்திப்புகள், உரைகள், ஆடல் நிகழ்வுகள், விருந்து பரிமாறல் மற்றும் நெகிழ்வான விருந்தினரின் உணர்வுகளோடு இனிதே முடிவுக்கு வந்தது நிகழ்வு.

CTC-pongal210112_006.jpg

CTC-pongal210112_007.jpg

விருதுகள் விபரம்:

சிறந்த சேவையாளர் விருது:

தமிழரின் தோழரும் என் டி பி (NDP) கட்சியின் தலைவராகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் சிறந்த மக்கள் சேவையாளராகவும் விளங்கிய மதிப்பிற்குரிய திரு. Jack Layton அவர்கள்

மாற்றங்களை ஏற்படுத்தும் தலைவர் விருது:

1986ஆம் ஆண்டு நியு பவுண்டான்ட் (Newfoundland) கடற்கரையில் ஏதிலிகளாய் வந்து தவித்த 155 தமிழர்களின் உயிர் காத்த அற்லான்ரிக் றீப் கப்பலின் Captain Gus Dalton அவர்கள்

http://www.seithy.co...&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.