Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் தொடர்பில் சிறிலங்காவின் நிலைப்பாடு என்ன? - ஹில்லரி கிளின்டன் கேள்வி!

Featured Replies

நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் தொடர்பில் சிறிலங்காவின் நிலைப்பாடு என்ன? - ஹில்லரி கிளின்டன் கேள்வி

நல்லிணக்கம், பொறுப்புக்கூறும் கடப்பாடு மற்றும் வடமாகாணத் தேர்தல் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஹில்லரி கிளின்டன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், இவை தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக எதிர்வரும் மார்ச் மாதத்தில் வொஷிங்டனுக்கு வருமாறு சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸூக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில், வொஷிங்டனின் உயர் மட்டத்திலிருந்து வந்திருக்கும் இந்த அறிவித்தல் சிறிலங்கா அரசாங்கத்தை அதிர்ச்சியடையச் செய்திருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜெனிவா கூட்டத் தொடரில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிரான தீர்மானம் ஒன்று கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், அதற்கு முன்னதாக நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தில் ஆக்கபூர்வமான யோசனைகளை முன்வைப்பதற்கான ஒரு சந்தர்ப்பத்தை சிறிலங்கா அரசாங்கத்துக்கு வழங்க அமெரிக்கா தீர்மானித்திருப்பதாகவும், அதற்காகவே சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் அழைக்கப்பட்டிருப்பதாகவும் இராஜதந்திர வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்தப் பின்னணியிலேயே நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் மற்றும் வடமாகாண சபைக்கான தேர்தலை நடத்துதல் என்பவற்றில் சிறிலங்கா அரசாங்கம் எவ்வாறான அணுகுமுறையைக் கொண்டுள்ளது என்பதையிட்டு ஆராய்வதற்கு மார்ச் மாதத்தில் வொஷிங்டனுக்கு வருமாறு ஹில்லரி கிளின்டன் சிறிலங்காவின் அமைச்சர் பீரிஸை அழைத்திருக்கின்றார்.

அதேவேளை, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் அடுத்த கூட்டத் தொடரில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிரான தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதில் அமெரிக்கா உறுதியாக இருக்கின்றது. சம்பந்தப்பட்ட தரப்புக்களின் அழுத்தங்கள் அதிகரித்திருப்பதால் இவ்விடயத்தை தாம் முன்னெடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்திருக்கின்றது.

இந்தத் தீர்மானம் தொடர்பான கடிதம் ஒன்று சிறிலங்கா வெளிவிவகாரஅமைச்சர் பீரிஸிடம் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தினால் கடந்த வெள்ளிக்கிழமை கையளிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் போர்க்குற்ற விவகாரங்களுக்கான விஷேட தூதுவர் ஸ்டிபன் ரப் (Stephen Rapp) இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு அடுத்தவாரம் கொழும்புக்கு விஜயம் செய்யவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

http://www.pongutham...22-d40eae9e1e51

  • தொடங்கியவர்

இணையத்தளம்: http://www.state.gov/j/gcj/

அதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் போர்க்குற்ற விவகாரங்களுக்கான விஷேட தூதுவர் ஸ்டிபன் ரப் (Stephen Rapp) இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு அடுத்தவாரம் கொழும்புக்கு விஜயம் செய்யவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.