Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மியான்மரிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்வாரா மகிந்த ராஜபக்ச?

Featured Replies

மியான்மரிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்வாரா மகிந்த ராஜபக்ச?

[ புதன்கிழமை, 01 பெப்ரவரி 2012, 01:58 GMT ] [ நித்தியபாரதி ] mahinda-rajapaksa-than-shwe2.jpgமியான்மார் மீது அமெரிக்காவாலும், மேற்குலக நாடுகளாலும் போடப்பட்டிருந்த பொருளாதாரத் தடையை, தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி சீனா தனது நலனை மேம்படுத்துகின்றதே தவிர, இந்நாடுகளால் போடப்பட்ட பொருளாதாரத் தடையை நீக்குவதில் அது ஒருபோதும் உதவப்போவதில்லை என்பதை மியான்மாரின் ஜெனரல் நன்கு உணர்ந்து கொண்டார்.

இவ்வாறு கொழும்பில் இருந்து வெளியாகும் Ceylon today நாளேட்டில் உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள பத்தியில் கூறியுள்ளார். இந்தப் பத்தியை ‘புதினப்பலகை‘க்காக மொழியாக்கம் செய்துள்ளவர் ‘நித்தியபாரதி‘.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச விரைவில் பர்மா [மியன்மார்] செல்லவுள்ளார். சிறிலங்காவில் யுத்தம் முடிவிற்குக் கொண்டு வரப்பட்ட பின்னர், சிறிலங்கா அதிபர் முதன் முதலில் தனது அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்ட நாடு மியான்மாராகும்.

mahinda-rajapaksa-than-shwe.jpg

மியான்மார் அரசாங்கத்தைத் தலைமையேற்று நடத்திய இராணுவ ஆட்சியாளரான ஜெனரல் Than Shew இன் அழைப்பிற்கிணங்க சிறிலங்கா அதிபர் அங்கு சென்றமையானது, அனைத்துலக மனிதஉரிமைகள் அமைப்புக்களாலும், மேற்குலக சக்திகளாலும், அமெரிக்காவாலும் கடுமையான மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.

சிறிலங்கா அதிபர் மியான்மாருக்கான தனது பயணத்தை மேற்கொண்டிருந்த காலப்பகுதியில், ஆங் சாங் சூகி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். ஆனால் அப்போது ஆங்சாங் சூயியை சிறிலங்கா அதிபர் சென்று பார்வையிட்டிருக்கவில்லை.

ஆனாலும் அப்போது மியான்மாரை ஆட்சி செய்த ஜெனரல் Than Shew வை சிறிலங்காவிற்கு வருகை தருமாறு மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த அழைப்பை ஏற்ற ஜெனரல் Than Shew சிறிலங்கா வந்திருந்த நவம்பர் 12, 2009 அன்று, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தான் இராணுவ சேவைகளிலிருந்து விலகி அரசியற் செயற்பாடுகளுக்குள் நுழையவுள்ளதாகத் தெரிவித்து சிறிலங்கா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

ஜெனரலின் வருகையும், பொன்சேகாவின் இராணுவ சேவையிலிருந்து விலகுவதற்கான பதவிவிலகல் கடிதமும் ஒரே நேரத்தில் நிகழ்ந்ததென்பது தற்செயலானதாகும். மியான்மார் ஜெனரலை வரவேற்க வேண்டியிருந்தமையே பொன்சேகாவின் இறுதி இராணுவச் செயற்பாடாக இருந்தது.

mahinda-rajapaksa-than-shwe1.jpg

இதன் பின்னர் மகிந்த ராஜபக்ச தேர்தல் ஒன்றை நடத்தி அதில் வெற்றி பெற்றுக் கொண்டதுடன், இரண்டாவது தடவையாக நாட்டின் அதிபராகப் பதவியேற்றுக் கொண்டார்.

மியான்மாரின் இராணுவ ஆட்சியாளர், ஆங் சாங் சூகியை வீட்டுக்காவலில் வைத்தது போன்று, சிறிலங்கா அதிபரும் சரத் பொன்சேகாவை சிறையிலடைத்தார்.

மியான்மார் ஜெனரல் சிறிலங்காவுக்கான தனது பயணத்தை மேற்கொண்ட வேளையில் அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்களுக்கு உட்பட்டார்.

வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஆங் சாங் சூகியை விடுதலை செய்து, நாட்டில் ஜனநாய ஆட்சியை நடத்துமாறு Than Shew மீது ஐக்கிய நாடுகள் சபை, மேற்குலக ஐரோப்பிய சக்திகள், அமெரிக்கா மற்றும் அனைத்துலக மனித உரிமைகள் அமைப்புக்கள் என்பன பெரும் அழுத்தங்களை மேற்கொண்டன.

அத்துடன் மேற்குலக நாடுகளால் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையால் மியான்மார் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியிருந்தது. இவ்வாறானதொரு சூழலில், சீனாவால் வழங்கப்பட்ட உதவி மட்டுமே மியான்மாரிற்கு பெரும் ஆதரவாக இருந்தது.

இதேபோன்றே சிறிலங்காவை உலக நாடுகள் பல எதிர்த்தபோதும் அதற்குத் துணையாக இருந்த நாடு சீனா எனக் கருதப்படுகின்றது.

மியான்மார் மீது அமெரிக்காவாலும், மேற்குலக நாடுகளாலும் போடப்பட்டிருந்த பொருளாதாரத் தடையை சீனா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி தனது நலனை மேம்படுத்துகின்றதே தவிர, இந்நாடுகளால் போடப்பட்ட பொருளாதாரத் தடையை நீக்குவதில் சீனா ஒருபோதும் உதவப்போவதில்லை என்பதை மியான்மாரின் ஜெனரல் நன்கு உணர்ந்து கொண்டார்.

சீனா தமது நாட்டின் நிலைப்பாட்டைப் பயன்படுத்தி தம்மீது ஏறி சவாரி செய்வதை உணர்ந்து கொண்ட மியான்மாரின் ஆட்சிப் பீடம், தமக்கான சிறந்த நலன்களை அடைந்து கொள்வதற்காக அமெரிக்காவுடனும், மேற்குலக நாடுகளுடனும் நட்பைப் பேணவேண்டும் என்பதை நன்கு உணர்ந்து கொண்டன.

இதன் முதற்கட்டமாக, மியான்மாரின் ஜெனரல் நாடாளுமன்ற மற்றும் அரச அதிபர் தேர்தல்கள் மேற்கொள்ளப்படும் என உறுதிப்பாடு வழங்கினார்.

இந்நிலையில் முதலில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஆங்சாங் சூகியை விடுதலை செய்த பின்னரே இத்தேர்தல்கள் நடாத்தப்பட வேண்டும் என அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் விரும்பின.

ஆனால் மியான்மாரில் அரச அதிபர் தேர்தல் நடத்தப்பட்டு ஓய்வுபெற்ற இராணுவ ஜெனரல் ஒருவர் நாட்டின் அதிபராக நியமிக்கப்படும் வரை ஆங் சாங் சூகியை விடுதலை செய்வதை ஜெனரல் Than Shew தள்ளிப் போட்டார்.

துர்நடத்தைகளைக் கட்டவிழ்த்து விட்டமை மற்றும் தேர்தல் விதிமுறைகளை மீறியமை போன்றவற்றிற்காக ஜெனரல் Than Shew மீது அமெரிக்கா, மேற்குலக நாடுகள் மற்றும் மனிதஉரிமைகள் அமைப்புக்கள் என்பன குற்றம்சாட்டின.

ஜனநாயக ஆட்சியை நாட்டில் கொண்டு வருவதற்கு நீண்டகாலம் எடுக்கும் என ஜெனரல் பதிலளித்தார். எவ்வாறிருப்பினும் அதிபர் தேர்தல் முடிந்த பின்னர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஆங்சாங் சூகியை ஜெனரல் Than Shew விடுதலை செய்தார்.

பர்மாவில் ஜனநாயக ஆட்சி முறைமை நடைமுறைக்கு வந்து கொண்டிருப்பதற்கான முதலாவது நகர்வாக இதனை அமெரிக்காவும், மேற்குலகமும் கவனத்திற் கொண்டது. அத்துடன் இம்மாற்றத்தை இந்நாடுகள் சிறிது பாராட்டிக் கொண்டன.

எனினும், பர்மாவில் ஊடகங்கள் மீதான தடைகள் பகுதியளவில் எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசியற் கைதிகளின் ஒரு தொகுதியினர் விடுவிக்கப்பட்ட போதிலும், ஆங் சாங் சூகியின் அரசியல் எதிர்காலம் என்பது நிச்சயமற்ற ஒன்றாகவே தொடர்ந்தும் உள்ளது.

விடுதலை செய்யப்பட்ட ஆங்சாங் சூகியுடன் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தொலைபேசி மூலம் கலந்துரையாடியதுடன், இவரை நேரில் சென்று பார்வையிட்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்காக அமெரிக்க வெளியுறவுச் செயலர் கிலாரி கிளின்ரனையும் அனுப்பி வைத்திருந்தார்.

அத்துடன் சூகியைப் பார்வையிடுவதற்காக பிரித்தானியாவின் வெளியுறவுச் செயலர் வில்லியம் ஹேக்கும் பர்மாவிற்கு பயணம் செய்திருந்தார்.

இவ்வாறான முன்னேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்ற வேளையில், ஆங்சாங் சூகியின் அரசியல் நகர்வுகள் எவ்வாறுள்ளன என்பது தெட்டத் தெளிவாகியுள்ளன. இவர் தனது அரசியற்கட்சியைப் பதிவு செய்து நாடாளுமன்றிற்குள் நுழைவதற்காகக் காத்திருக்கிறார்.

அமெரிக்க அதிபரின் பிரதிநிதியாக பர்மாவிற்குச் சென்ற கிலாரி கிளின்ரன் ஆங்சாங் சூகியைச் சந்தித்து அரசியற் செயற்பாடுகளுக்குள் மீளவும் ஈடுபடுமாறு அழைப்பு விடுத்துள்ளமையானது முக்கிய விடயமாகப் பார்க்கப்படுகின்றது.

இவ்வாண்டின் ஏப்ரல் மாதமானது மியன்மாரிற்கு மிக முக்கிய மாதமாக அமைந்துள்ளது. தற்போது எஞ்சியுள்ள ஏனைய அரசியற் கைதிகள் விடுதலை செய்யப்பட்டால், இவ்வாண்டு ஏப்ரல் 04 இல் மியான்மார் மீதான பொருளாதாரத் தடையை நீக்க முடியும் என பிரித்தானிய வெளியுறவுச் செயலர் தெரிவித்துள்ளார்.

மியான்மாரில் நடைபெறவுள்ள தேர்தல்கள் நீதியாகவும், நேர்மையாகவும் மேற்கொள்ளப்படுகின்றதா என்பதையும், இதன் மூலம் ஆங்சாங் சூகி நாடாளுமன்றிற்குள் செல்வதற்கான வாய்ப்பைப் பெற்றுக் கொள்வாரா என்பதையும் அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் மிக நுணுக்கமாக, நெருக்கமாக அவதானிக்கும்.

சிறிலங்கா அதிபர் முதலில் மியன்மாருக்குச் சென்ற போது, மேற்குலக நாடுகளினதும் ஜனநாயக சுதந்திரத்திற்கும் எதிராக இராணுவ ஆட்சி நடத்தப்பட்டது. அந்த வேளையில் சீனா மட்டுமே மியான்மாருக்கு உதவி செய்து கொண்டிருந்தது.

இந்தத் தடவை சிறிலங்கா அதிபர் மியான்மாருக்கான தனது அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளும் போது அங்கே சீனச் செல்வாக்கால் தூக்கி வீசப்பட்டிருந்த ஆனால் தற்போது அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளால் ஆதரவளிக்கப்படுகின்ற ஜனநாயக ஆட்சி நடைபெறுவதைக் காண்பார்.

மியான்மாரில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் மிகப் பிரதானமாகக் கவனிக்கப்படுகின்ற ஆங்சாங் சூகியை, மகிந்த ராஜபக்ச இந்தத் தடவை மியான்மாருக்கான தனது பயணத்தை மேற்கொள்ளும் போது சந்தித்துக் கலந்துரையாடுவாரா இல்லையா என்பது நிச்சயமற்றதாகும்.

மியான்மாரிலிருந்து அதிபர் ராஜபக்ச சிறிலங்காவிற்கு திரும்பி வந்த பின்னர், அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்களிலிருந்து தப்பிப்பதற்காக, மியான்மார் ஜெனரல்கள் ஆங்சாங் சூகியை விடுதலை செய்தது போன்று, சரத் பொன்சேகாவையும் விடுதலை செய்வது தொடர்பாக சிந்திப்பாரா என்பது ஊகிக்க வேண்டிய விடயமாக உள்ளது.

அத்துடன் சீனாவை மட்டும் சார்ந்திருப்பதானது சிறிலங்காவிற்கு பெரும் தடையாக இருக்க முடியும் என்பதையாவது மகிந்த ராஜபக்ச ஏற்றுக் கொள்வாரா அல்லது இல்லையா என்பதும் சிந்திக்க வேண்டிய பிறிதொரு விடயமாக உள்ளது.

http://www.puthinapp...?20120201105489

சீனாவின் உற்ற தோழனாக இருந்த மியான்மார் இன்று மேற்குலகத்தை நோக்கி வேகமாக நகருவது போன்று சிங்களமும் மாறுமா? என்பது மகிந்த குடும்பத்திலும் அவர்கள் எவ்வளவு காலம் ஆட்சியில் இருப்பார்கள் என்பதிலும் தங்கியுள்ளது. தாங்கள் ஆட்சியில் இருக்க மக்களை சந்தோசமாக சிங்கள மக்களை வைத்திருக்கவேண்டும், அதற்கு தேவையான பணத்தை சிங்களத்திற்கு சீனா வழங்கிக்கொண்டே இருக்கும் வரை ( மியான்மார் இலங்கையை விட மூன்று மடங்கு மக்கள் தொகை கூடிய நாடு) , இந்த உறவு தொடரும். அதுவே தமிழர் தரப்புக்கும் நல்லது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.