Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொறுப்புக்கூறும் விவகாரத்தில் கவனம் செலுத்துக! - ஐ.நா.வுக்கு மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை

Featured Replies

பொறுப்புக்கூறும் விவகாரத்தில் கவனம் செலுத்துக! - ஐ.நா.வுக்கு மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை

அத்துடன், இவ்விகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழு கவனத்தைச் செலுத்த வேண்டும் எனவும் நியூயோர்க்கைக் தளமாகக் கொண்டியங்கும் மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

ஜெனிவாவில் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 19வது கூட்டத் தொடர் தொடர்பில் ஆணைக்குழுவின் உறுப்பு நாடுகளுக்கு அனுப்பி வைத்திருக்கும் கடிதத்திலேயே மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

இலகையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் பதிலளிக்கும் கடமைப்பாட்டை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றாமல் இருப்பது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழு கவனத்தைச் செலுத்த வேண்டிய அவசியத்தையும் மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியிருக்கின்றது.

'போரின் இறுதி மாதத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டமை மற்றும் காயமடைந்தமை தொடர்பில் உரிய முறையில் விசாரண மேற்கொள்ளப்பட்டன என்பதை உறுதிப்படுத்த வேண்டிய தனித்துவமான அமைப்பாக மனிதவுரிமைகள் ஆணைக்குழு உள்ளது என மனிதவுரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜெனிவாவுக்கான பிரதிப் பிரதிநிதி பிலிப்பி டாம் (Philippe Dam) தெரிவித்துள்ளார்.

'ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழு அமைக்கப்பட்ட பின்னர் இடம்பெற்றிருக்கும் மிகவும் மோசமான மனித உரிமை மீறல் சம்பவமான இது தொடர்பில் விசாரணை நடத்தத் தவறுவது மனிதவுரிமைகள் ஆணைக்குழு ஆரம்பிக்கப்பட்டதன் அடிப்படையையே தகர்ப்பதாக அமைந்துவிடும்' எனவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

'ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு அவரால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு வழங்கிய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும்' என ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவைக் கோரியிருக்கும் பிலிப்பி டாம், 'சிறிலங்கா படைத்தரப்பினராலும், விடுதலைப் புலிகள் அமைப்பினாலும் போர்ச் சட்டங்கள் மோசமான முறையில் மீறப்பட்டுள்ளமை தொடர்பில் நம்பகமான குற்றச்சாட்டுக்களை நிபுணர்கள் குழு வெளிப்படுத்தியிருக்கின்றது' எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கறள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகளை மேற்கொள்வதற்கு சுயாதீன சர்வதேச பொறிமுறை ஒன்றை உருவாக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழு பரிந்துரைத்திருந்தமை குறித்தும் மனிதவுரிமைகள் கண்காணிப்பகத்தின் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இப்போர்க்குற்றங்கறள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறுவதற்கு சிறிலங்கா அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை சிறிலங்கா படைத்தரப்பினரை பாதுகாத்துள்ளதுடன், நிபுணர்கள் குழு உறுதிப்படுத்திய மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களையும் கவனத்தில் கொள்ளவில்லை என மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவால் நல்லிணக்க முயற்சிகள் குறித்து பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், 'சிறிலங்கா அரசாங்கத்திடம் இருந்து நீதியோ அல்லது பொறுப்புக்கூறும் கடமைப்பாடோ வெளிப்படும் என எதிர்பார்க்க முடியாது. பாதிக்கப்பட்டவர்களின் துன்பங்களைத் துடைப்பதாக சர்வதேச நடவடிக்கையே அமைந்திருக்கும்' எனவும் மனிதவுரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜெனிவாவுக்கான பிரதிப் பிரதிநிதி பிலிப்பி டாம் தெரிவித்துள்ளார்.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=70839fd9-6322-4690-bff5-273c3d41d417

  • தொடங்கியவர்

இலங்கைப் போர்க் குற்றங்கள் குறித்து ஒஸ்ரேலியா குரல் கொடுக்கவேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகம் கேட்டுள்ளது.

இலங்கையில் புரியப்பட்ட போர்க் குற்றங்களுக்கு பொறுப்புக்கூறப்படவேண்டியமை குறித்து ஒஸ்ரேலியா குரல் கொடுக்கவேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்தது.

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்தியத்திற்கான பிரதிப் பணிப்பாளர் எலெய்ன் பியர்சன் (Elaine Pearson) த ஒஸ்ரேலியன் ஏட்டில் அது குறித்துப் பத்தி ஒன்றை எழுதியுள்ளார்.

இலங்கை விவகாரம் தொடர்பாக ஒஸ்ரேலியா கொண்டுள்ள நிலைப்பாடு, அங்கு தமிழர்கள் படகுகளில் செல்வதன் காரணமாகவும், அதனைத் தடுப்பதற்கு இலங்கை அரசின் ஆதரவைப் பெறுவதற்கு முற்பட்டுள்ளமையாலும் குழப்பமானதாக உள்ளதாக பியர்சன் தெரிவிக்கிறார்.

ஆனால், அத்தகைய பிரச்சினையை எதிர்கொள்ளும் கனடா, இலங்கை குறித்து உறுதியான கருத்தை வெளியிடுவதாக அவர் சுட்டிக் காட்டுகிறார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் மகாநாடு அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், ஒஸ்ரேலியா அது குறித்து முன்னின்று செயற்படவேண்டுமெனவும், சுதந்திரமான அனைத்துலக விசாரணை ஒன்றிற்கான தேவை குறித்து ஆராயவேண்டுமெனவும் பியர்சன் குறிப்பிடுகிறார்.

சிரியா, லிபியா ஆகிய நாடுகள் குறித்து கருத்து பலமான கருத்தை வெளியிட்ட ஒஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் கெவின் றட், இலங்கை குறித்தும் அத்தகைய நிலைப்பாட்டை எடுக்கவேண்டுமென அவர் தெரிவிக்கிறார்.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=10970

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.