Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உண்மை, நீதி, நேர்மையை நிலைநாட்டுங்கள் – பான் கீ மூனுக்கு ஒரு மடல்

Featured Replies

Edward2.jpgசிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறுவதற்கான அழுத்தத்தைப் பிரயோகித்து, நேர்மையை நிலைநாட்டுவதிலும், உண்மை, நீதி, நிலையான மீளிணக்கப்பாடு போன்றவற்றுக்கு ஏங்கித் தவிப்பவர்களுக்காக – தலைமைத்துவ ஆளுமையைப் பயன்படுத்திக் கொள்ளும்படி ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனிடம் கேட்டுக்கொண்டுள்ளார், சிறிலங்காவின் அமைதிக்கும் நீதிக்குமான பரப்புரை அமைப்பின் தலைவர் எட்வேர்ட் மொரிமர்.

பிரித்தானியாவைத் தளமாக கொண்டியங்கும் huffingtonpost ஊடகத்தில் எழுதியுள்ள பகிரங்க மடலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

செயலாளர் நாயகம்,

ஐக்கிய நாடுகள் சபை,

நியூயோர்க்,

NY 10017

அன்பிற்குரிய செயலாளர் நாயகம் அவர்கட்கு,

சிறிலங்காவில் பொறுப்புக் கூறல் விவகாரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் வல்லுனர் குழுவின் அறிக்கை தொடர்பாக கடந்த 2011, யூன் 02 நாள் என்னால் எழுதப்பட்ட திறந்த மடலிற்குப் பின்னர் தற்போது நான் இதனை எழுதிக் கொள்கிறேன்.

நான் முன்னைய மடலை எழுதியதன் பிறகு, ஐ.நா வல்லுனர் குழுவின் அறிக்கையை நீங்கள் ஐ.நா மனிதஉரிமைகள் சபையின் தலைவருடன் பகிர்ந்து கொண்ட தங்களின் நகர்வானது எம்மை மிக்க மகிழ்வில் ஆழ்த்தியது.

ஆனால்,மனிதஉரிமைகள் சபையின் தலைவர் அவ் அறிக்கையை உரிய விதத்தில் சபையின் கவனத்திற்குக் கொண்டு வரவில்லை என்பது எமக்கு வருத்தத்தை அளிக்கின்றது. இவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள உண்மையான பரிந்துரைகள் இன்னமும் சிறிதளவில் கூட நடைமுறைப்படுத்தப்படவில்லை எனத் தோன்றுகின்றது.

இதற்கும் மேலாக, ‘இது ஐ.நா வின் அதிகாரபூர்வ ஆவணம் இல்லை’ என்பதைச் சுட்டிக்காட்டிய சிலரால், இவ் அறிக்கை மட்டுமல்ல, இதனைத் தயாரித்த வல்லுனர்கள் மீது கூட தொடர்ச்சியான பழிப்புரைகள் மேற்கொள்ளப்படுவதை நாம் புரிந்து கொள்கின்றோம்.

அதாவது சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்வதை நோக்காகக் கொண்டு, தங்களால் நியமிக்கப்பட்ட வல்லுனர் குழுவால் தயாரிக்கப்பட்ட இவ் அறிக்கையானது ‘ஐ.நா வின் அதிகாரபூர்வ ஆவணம்’ என்பதையும், இக்குழுவானது ஐ.நாவின் அமைப்பு முறைமைக்குள் உருவாக்கப்பட்ட ஒன்று என்பதையும் செயலாளர் நாயகம் ஆகிய தாங்கள் வெளிப்படையாக விளக்கம் ஒன்றை வழங்கி, இவ் அறிக்கை தொடர்பாக ஏற்கனவே உள்ள தவறான கற்பிதங்களைத் திருத்தியிருந்தால், சிறிலங்கா தொடர்பான பொறுப்புக்கூறல் விவகாரத்தை வெளிக்கொணரும் ஆரோக்கியமான கலாச்சாரத்திற்காக பாடுபடும் எல்லாத் தரப்பினர்களுக்கும் அது மிகப் பெறுமதி மிக்க ஒன்றாக அமைந்திருக்கும்.

வல்லுனர் குழுவின் அறிக்கையின் பரிந்துரைகள் மூன்று வெவ்வேறு குழுக்களை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்டுள்ளன. அதாவது ஐக்கிய நாடுகள் சபை, அனைத்துலக விசாரணை அமைப்புக்கள் மற்றும் சிறிலங்கா அரசாங்கம் ஆகிய மூன்று தரப்பினரும் நடைமுறைப்படுத்த வேண்டிய பரிந்துரைகள் அவ் அறிக்கையில் வரையப்பட்டுள்ளன. ஆனால் இப்பரிந்துரைகள் எவையும் இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் சிறிலங்கா அரசாங்கம் தவறிழைத்தமையானது, மே 26, 2009 அன்று தங்களாலும், சிறிலங்கா அதிபர் ராஜபக்சவாலும் மேற்கொள்ளப்பட்ட கூட்டு உடன்படிக்கையின் சரத்தை மீறியதையே தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றது.

ஐக்கிய நாடுகள் சபையைக் கருத்திற் கொள்ளும் போது, வல்லுனர் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை உள்ளக ரீதியில் மீளாய்வு செய்வதற்காகத் தங்களால் நியமிக்கப்பட்ட Ms Thoraya Obaid, தனது பணியை ஆரம்பிக்க முடியாத நிலையிலிருந்தமையும், இதனால் இவர் தனது இப்பணியைக் விட்டமையும் எம்மை மிகவும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.

மிகத் தேவைப்பாடுடைய இவ் அறிக்கை தொடர்பான மீளாய்வைப் பூர்த்தி செய்வதற்கான புதிய நிகழ்ச்சி நிரலையும், ஒழுங்குபடுத்தல்களையும் அறிந்து கொள்வதில் நாம் மிகவும் ஆர்வமாக உள்ளோம்.

‘சம காலத்தில் மேற்கொள்ளப்படக் கூடிய பின்வரும் செயற்பாடுகளை உள்ளடக்கிய நோக்கத்தைக் கொண்ட சுயாதீன அனைத்துலகப் பொறிமுறை ஒன்றை உடனடியாக உருவாக்குமாறு’ நாங்கள் உங்களிடம் ஏற்கனவே கோரியிருந்தோம். அதனையே இங்கே மீண்டும் வலியுறுத்திக் கேட்பதுடன், தங்களிடம் பரிந்துரைக்கப்படும் விடயங்களில் இது மிக முக்கிய பரிந்துரையாக உள்ளது என்பதையும் இங்கு

குறிப்பிட்டுக் கொள்கிறேன்.

01. சிறிலங்கா அரசாங்கத்தால் தேசிய அளவில் உருவாக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவானது நீதியான, பயனுள்ள விசாரணைகளை மேற்கொண்டுள்ளதா என்பதை கண்காணித்து மதிப்பீடு செய்வதுடன், அதன் விசாரணை முடிவுகள் தொடர்பாக ஒழுங்குமுறையில் செயலாளர் நாயகத்திற்கு கருத்துக்கள், ஆலோசனைகள் வழங்கல்.

02. சிறிலங்கா அரசாங்கத்தால் தேசிய அளவில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் நீதியான மற்றும் பயனுள்ள வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதைக் கருத்திற் கொண்டு யுத்த மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ளுதல்.

03. வல்லுனர் குழு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ஏனைய அமைப்புக்களால் சேகரிக்கப்பட்ட தகவல்கள் உள்ளடங்கலாக, சிறிலங்காவின் இறுதிக்கட்ட யுத்தத்துடன் தொடர்புபட்ட அனைத்துத் தகவல்களும் ஒன்று திரட்டப்பட்டு பொருத்தமான எதிர்காலப் பயன்பாட்டிற்காக பாதுகாத்து வைத்தல்.

இப்பரிந்துரையை உடனடியாக நிறைவேற்றுமாறு 133 நாடுகளைச் சேர்ந்த இதனுடன் சம்பந்தப்பட்ட 12,000 இற்கும் மேற்பட்ட நபர்களின் கோரிக்கையை எமது இணையத்தளம் ஊடாக தங்களின் பொது மின்னஞ்சலிற்கு அனுப்பி வைத்திருந்தோம்.

ஆனால் இதுவரை இது தொடர்பில் எவ்வித முன்னேற்றத்தையும் எங்களால் பார்க்க முடியவில்லை.

இவ்வாறானதொரு மேன்மைமிக்க அறிக்கை தொடர்பாக தாங்கள் தங்களுக்கான கடப்பாட்டை அதாவது கட்டளையை வழங்காததால், இதில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுவதைத் தாங்கள் எவ்வாறு உறுதிப்படுத்திக் கொள்வீர்கள் என்பதை எண்ணி நாம் மிக கவலையடைகின்றோம்.

சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறுவதற்கான அழுத்தத்தைப் பிரயோகித்து, நேர்மையை நிலைநாட்டுவதிலும், உண்மை, நீதி, நிலையான மீளிணக்காப்படு போன்றவற்றிற்காக ஏங்கித் தவிப்பவர்களிற்காக தாங்கள் தங்களது தலைமைத்துவ ஆளுமையைத் தொடர்ந்தும் பேணுவீர்கள் என்பதில் நாம் மிக்க நம்பிக்கை கொண்டுள்ளோம்.

அன்புடன்,

எட்வேர்ட்

Edward Mortimer CMG

Chair, the Sri Lanka Campaign for Peace and Justice

28 Charles Square,

London,

N1 6HT

www.eelampress.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.