Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவத்திடம் சரணடைந்த 553 பேர் காணாமல் போயுள்ளனர்!

Featured Replies

ராணுவத்திடம் சரணடைந்த 553 பேர் காணாமல் போயுள்ளனர்! விநாயகமூர்த்தி (M.P) தகவல்

போர்க் காலத்தில் காணாமல்போன யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 553 பேர் குறித்த பெயர் விபரங்கள் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக கூறியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி, இவ்வாறு கிடைத்துள்ள முறைப்பாடுகளின்படி காணாமல் போனவர்களில் பெரும்பாலானவர்கள் குடும்பத்தவர்களால் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டபின்னர் காணாமல் போயுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தத்தின்போது காணாமல் போனவர்கள் குறித்த 553 முறைப்பாடுகள் கடந்த ஜனவரி மாதத்தில் மாத்திரம் கிடைக்கப்பெற்றிருப்பதாக கூறியுள்ள கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி, வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்கள் குறித்தும் அதிகளவு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அப்பாத்துரை விநாயகமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளதாவது;

"யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் காணாமற் போனவர்கள் குறித்த விபரங்களை பதிவு செய்யும் நடவடிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்து வருகின்றது. இவ்வாறு காணாமற் போனோர் தொடர்பான விபரங்களை பதிவு செய்யுமாறு விடுக்கப்பட்டட வேண்டுகோளை தொடர்ந்து கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் 31 வரையிலான காலப்பகுதிக்குள் யாழ். குடாநாட்டை சேர்ந்த 553 பேர் காணாமற்போனமை குறித்து உறவினர்கள் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர்.

இவர்கள் தங்களது குடும்பத்தவர்கள் காணாமற் போனமை குறித்த விபரங்களை குறிப்பிட்டுள்ளதுடன் இதற்கு ஆதாரமாக சத்தியக் கடதாசிகளையும் சமர்ப்பித்துள்ளனர். இவர்களில் அதிகமானவர்கள் தாங்கள் நேரடியாக இராணுவத்திடம் ஒப்படைத்த குடும்பத்தவர்களை பின்னர் ஒரு போதும் பார்க்கவில்லை என தெரிவித்துள்ளனர். இது தவிர இந்த முறைப்பாடுகளில் அனேகமானவை இராணுவத்தால் நேரடியாக கைது செய்யப்பட்டமை மற்றும் வெள்ளை வானில் கொண்டு செல்லப்பட்டமை தொடர்பாகவே உள்ளது.

அரசடி சந்தி, வட்டுக்கோட்டை, மாவடி, உடுவில், கொம்மாந்துறை, சாவகச்சேரி, ஈச்சமோட்டை, தெல்லிப்பழை உட்பட பல இடங்களில் வைத்து இவர்கள் காணாமற் போயுள்ளதாக உறவினர்கள் முறையிட்டுள்ளனர். இது தவிர இராணுவத்தால் கைது செய்யப்பட்டும் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டும் வெள்ளை வானில் கடத்தப்பட்டும் இவர்கள் காணாமற் போயுள்ளனர்.

தமது உறவினர்களை இனந்தெரியாதவர்கள் வீட்டிற்குள் புகுந்து தூக்கிச் சென்றதாகவும் இராணுவ சீருடையில் வந்தவர்களே இவ்வாறு செய்ததாகவும் முறையிடப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தமது கணவரை வட்டுவாகலிலுள்ள இராணுவத்தினரிடம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி ஒப்படைத்ததாகவும் அதன் பின்னர் அவரைக் காணவில்லை எனவும் முறையிட்டுள்ளார்.

இதேபோன்று ஈச்சமோட்டை வீதியை சேர்ந்த சிவசுப்பிரமணியம் ஜெயச்சந்திரன் மற்றும் சித்திரவேல் லிங்கராசா என்ற இருவரையும் உறவினர் ஒருவர் வட்டுவாகலில் உள்ள இராணுவ அதிகாரிகளிடம் கையளித்ததாகவும் பின்னர் அவர்கள் இருவரிற்கும் என்ன நடந்தது என்பது தெரியவில்லை என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஊரெழுவை சேர்ந்த பெண்மணியொருவர் தனது கணவரை ஊரெழு இராணுவத்தினர் கைது செய்ததாகவும் படை முகாம் அதிகாரி சமாதானத்திற்கு பின்னர் அவர்களை விடுவோம் என தெரிவித்ததாகவும் ஆனால் அதன்பின்னர் அவரை காணவில்லை எனவும் முறைப்பாடு செய்துள்ளனர் என தெரிவித்தார்.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=c2bf4bc6-09ab-40cd-9584-2c4e60a84095

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.