Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவுக்கு செல்ல முயன்று டோகோ நாட்டில் கைதியாகி நாடு திரும்பியவரின் கதை

Featured Replies

கனடாவுக்கு செல்ல முயன்று டோகோ நாட்டில் கைதியாகி நாடு திரும்பியவரின் கதை

ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகளுக்கு சட்டரீதியான முறையில் ஆட்களை அனுப்புவதாகக் கூறி பல லட்சம் பணத்தை பெற்றபின் ஏதாவது ஒரு நாட்டில் இறக்கிவிட்டு பணத்தைச் சூறையாடுபவர்களிடமிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள் என கடனடாவுக்கு அனுப்பப்படுவதாக கூறி டோகோவில் கைவிடப்பட்டு அந்நாட்டுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டபின் நாடு திரும்பியுள்ள மட்டக்களப்பு செங்கலடியைச் சேர்ந்த ஒருவர் தெரிவிக்கிறார்.

கனடாவை நோக்கிய தனது பயணத்தின்போது ஏற்பட்ட தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

மட்டக்களப்பு செங்கலடியைச் சேர்ந்த நான் படித்துப் பட்டம் பெற்று 5 வருடங்களாகியும் வேலைகள் எதுவும் கிடைக்கவில்லை. திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. பொருளாதாரப் பிரச்சினை உட்பட பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வாழ்க்கையை நடத்திவநதேன். எனது நண்பர் ஒருவர் மூலமாக கனடாவுக்கு வேர்க் பேமிற மூலமாக செல்ல முடியும் என அறிந்து கொண்டேன். அவரூடாக கொழும்பில் அந்த முகவரைச சந்தித்தேன். அவர் சட்டரீதியாக கனடாவுக்கு வேலை அனுமதிப்பத்திரம் பெற்றுத் தருவதாகச் சொன்னார். 25 லட்சம் பணம் தர வேண்டும் என்றும், அரைவாசி முதலில் தரவேண்டும் என்றும் மிகுதி கனடா சென்று உழைத்துத் தர வேண்டும் என்றும் ஆசைவார்த்தை காட்டினார்.

அதன்படி நான் கடந்த வருடம் யூலை மாதம் கொழும்பில் மெடிக்கல் எடுத்து கடவுச்சீட்டையும் பெற்றுக் கொண்டார். அதன் பின்னர் ரிக்கட் போடுவதற்குப் பணம் கேட்டு ஒன்றரை லட்சம் ரூபா பணமும் கொடுத்தேன். அவர் விட்டுக்குப் போகமாறும் பின்னர் தான் அழைப்பதாகவும் கூறினார்.

பின்னர் செப்ரம்பர் மாதம் 28ஆம்திகதி விமானப் பயணம் என்று கூறி 26ஆம்திகதி தொலைபேசியில் தெரிவித்தார். அத்துடன் டொலர் எடுக்க வேண்டும் பணம் ஒழுங்கு செய்து வருமாறும் கூறினார். அதன்படி 5 லட்சம் ரூபா பணத்துடன் ஒக்ரோபர் 28ஆம் திகதி காலையில் கொழுமபு சென்று டொலர் மாற்றிக் கொண்டேன். இரவு 12 மணிக்கு பிளைட். அதனால் 2 மணி நேரத்துக்கு முன்னர் விமான நிலையத்தின் முன்னால் வாருங்கள் என்று கூறினார்.

அதன்படி சென்றேன். அங்கு இன்னும் 5 பேர் நின்றனர். அவர்களுடன் எனக்கும் விசா பேப்பரும் டிக்கட்டும் தந்தார். என்னிடம் உள்ள டொலரைப் பற்றிக் கேட்டார். 380 டொலரைக் கொடுத்தேன். அது போதாது என்றுஎன்னுடன் சண்டையிட்டார். அடகு வைத்துத்தான் இவ்வளவு கொண்டு வந்திருக்கிறேன் மிகுதியை பிறகு தருகிறேன என்று கூறினேன்.

விமான நிலையத்தினுள் சென்று போடிங் பாஸ் எடுத்தோம் அது மும்பையின் விமான நிலையத்திற்கானது.அங்கிருந்து எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா விமான நிலையத்திற்குச் சென்றோம். பின்னர் அங்கிருந்து ஒக்ரோபர் 29ஆம் திகதி இரவு 3 மணியளவல் டோகோ (Togo) விலுள்ள லூமி எயார்போட் சென்றடைந்தோம்.

ஆறு நாள் விசா தந்தார்கள், அங்கு வீ.ஐ.பி ஐ.டியுடன் நின்ற ஒருவர் வீ.ஐ.பி. பக்கத்தால் வரும்படி கூறினார. நாங்கள் அதன்படி செய்தோம். அங்கிருந்து அந்த நாட்டுக்காரர் ஒருவரின கார் ஒன்றில் ஏற்றப்பட்டு, கிராமப்புறமான வீடு ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விடப்பட்டோம்.; அங்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தகுடும்பம் ஒன்று இருந்தது. அதில் 4 பெண்கள் இரண்டு ஆண்கள், 3 குழந்தைகள் இருந்தனர். அவர்களும் எங்களைப் போல் வந்தவர்கள் என்பது பின்பு தெரிந்தது.

கொழும்பில் வைத்து தொலைபேசிகளைத் பறித்து எடுத்து விட்டதனால் டோகோ வந்த பின்னர் வீட்டுக்கோ எங்கோ தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்தது. மலேசியாவில் உள்ள ஒருவருக்கூடாக கொண்பிரன்ஸ் மூலமாக எங்களது வீட்டுக்கு ஒருதடவை பேசத்தந்தார்கள். அப்போது நாங்கள் வந்து சேர்ந்து விட்டோம் என்று சொல்வதற்கு மாத்திரமே அந்த அழைப்பு ஏற்படுத்தப்பட்டுத் தரப்பட்டது.

இந்த வீட்டில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இருந்து வந்தோம். அங்கு இரண்டு வேளை அல்லது ஒரு வேளைதான் உணவுகள் கிடைத்தன. தண்ணீர்த்தட்டுப்பாடு எனப்பல பிரச்சினைகளை எதிர் கொண்டோம்.

அங்கு வாயில் கதவு மூடப்பட்டு யாரும் வெளியில் போக முடியாத படி வைத்திருந்தார்கள். அந்த வீட்டுக்குப் பொறப்பாக இருந்தவர் எங்களிடமுள்ள டொலர்களை பெற்று கணக்குகளை எழுதிக் கொண்டார். வாங்கவில்லை.

அடுத்தடுத்து மொத்தமாக 45 பேர் வந்து சேர்ந்தனர். 4 குழந்தைகள், 5 பெண்கள் உட்பட ஏனையவர்கள் ஆண்களாகும். ஒரு குடும்பத்தில் 4 மாதக் கர்ப்பிணி ஒருவரும் இருந்தார். ஒரு தடவை அவருக்கு கடும் சுகவீனம் ஏறபட்டது அதன் போது வைததியரைக் கூட அழைத்துவரவில்லை. அதனால் அவருக்கு அபோர்சன் ஆகிவிட்டது. அதன்பின்னரும் அவருக்கு மேலும் உடலுக்கு முடியாது போனதால் ஒரு வைத்தியரைக் கொண்டுவந்து சிகிச்சை செய்தார்.

நவம்பர் மாதம் 18ஆம்திகதி எங்களது வீட்டுக்கப் பொறுப்hன சப் ஏஜண்ட் வந்து 20 ஆம் திகதி கானாவுக்கு செல்வதாகவும் அங்கிருந்து கனடாவுக்கு கப்பல் மூலம் செல்வதபகவும கூறி டொலர்களை பெற்றுக் கொண்டார். அப்போதுதான் கப்பலில் பயணம் செய்வது குறித்து எனக்குத் தெரியும்.

19ஆம் திகதி வாகனம் வருவதாகவும் அதன் பின்னர் கானா நாட்டிற்குச் சென்று கப்பல் பயணம் என்று அவர் சொல்லிச் சென்றார். ஆனால்; 20ஆம் திகதி அதிகாலை 3.15 மணிக்கு டோகோ பொலிசார் எங்களது வீட்டைச் சுற்றி வளைத்துக கொண்டார்கள். அப்போது நாங்கள் அனைவரும் வீட்டினுள் அங்கும் இங்கு ஒளித்துக் கொண்டோம். வீட்டின் கதவைத்திறக்கும் படி சொன்னார்கள் ஆனால் நாங்கள் திறக்கவில்லை. பொலிஸார் மதில்களால் ஏறி உள்ளே வந்து எங்களைக் கைது செய்தார்கள். எங்களை விசா முடிந்து அவர்களுடைய நாட்டில் தங்கியிருப்பதற்காக கைது செய்வதாகக் கூறினார்கள்.

அங்கிருந்து ரக் வண்டிகளில் ஏற்றிச் சென்று அவர்களுடைய முகாம் பகுதியின் நடுவேயுள்ள சரியாகப் பயன்படுத்தாத விளையாட்டு மைதாபனத்தில் தங்க வைத்தார்கள். அது குடிவரவு குடியகல்வுப் பிரிவின் முகாம் என்று நினைக்கிறேன். அவர்கள் பிரஞ்சு மொழியே பேசினார்கள். ஆங்கிலம் ஓரளவுக்குத் தெரியும்.

எங்களைக் கைது செய்ததன் பின்னர் வேறு 5 வீடுகளில் தங்கியிருந்த ஆட்களையும் கைது செய்து அழைத்து வந்தார்கள் இப்போது மொத்தமாக 209 பேர் இருந்தோம். இதில் 11 குழந்தைகளும் அடங்கும்.

அங்கு மழைக்காலமில்லாமல் குளிரும் பனியுமான காலம் என்பதால் பெண்கள் மைதானத்தின் அரங்கத்திற்கு கீழும், ஆண்கள் மரங்களுக்குக் கீழும் தங்கினோம். அங்கு சாப்பாடு இரண்டு ரேம் தான் கிடைத்தது. அந்த நாட்டின் வழமை அப்படித்தான். 11 மணிக்கும 4 மணிக்கும் நாங்கள் முகாம் பொறுப்பாளரிடம் பேசி எங்களுடைய விடயங்களைச் சொன்னதன் பின்னர் அவர் ஐ.சி.ஆர்.சீ.க்கு அறிவித்தார்கள். பின்னர் ஐ.சி.ஆர்.சி. வந்தது.

அதன் பின்னர் அவர்கள் 3 நாளுக்குரிய பொருள்களைக் கொடுத்து பாத்திர பண்டங்களையும் கொடுத்தார்கள.; நாங்கள் அதன் பின்னர் சமைத்துச் சாப்பிட்டோம். ஐக்கிய நாடுகள் அமைப்பு வந்தது. அந்த நாட்டின் சேர்ச் அமைப்பகள், எனப் பல அமைப்புகளும் எங்களை வந்து சந்தித்தது. நவம்பர் 20ஆம் திகதி முதல் 2012 ஆம்ஆண்டு ஜனவரி 4ஆம் திகதி வரை அங்கு முகாமிலேயே இருந்தோம்.

ஐக்கிய நாடுகள் அமைப்பினர் இலங்கையில் இப்போது பிரச்சினைகள் இல்லை. நீங்கள் நாட்டுக்குப் போகலாம் தானே என்று கேட்டார்கள். அத்துடன் பிரச்சினைகளை ஐ.ஓ.எம். அகதிகள் நிறுவனத்திடம் எங்களது பிரச்சினைகளைச் சொல்லுமாறு கூறினார்கள்.

அதன் பின்னர் ஐ.ஓ.எம்மிடம் விபரங்களைக் கொடுத்தோம். அவர்கள் எங்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்து பின்தான் நாட்டுக்கு வர முடிந்தது.

நாங்கள் கைது செய்யப்பட்டு உள்ளே இருக்கும் போது இங்கிருந்து ஆட்களை எடத்துக் கொண்டே இருந்தார்கள். விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 4 பேர் நாங்கள் கைது செய்யப்பட்டு சில நாட்களில் கொண்டு வரப்பட்ட போது அதனை அறிந்து கொண்டோம். ஆனால் அது குறித்து யாரும் தகவல்களை நாட்டுக்கு அறிவிக்க முடியாத நிலையில் இருந்தோம்.

எங்களுடன் கைது செய்யப்பட்டவர்களுடன் வீடுகளுக்குப் பொறுப்பான சப் ஏஜண்டுகளும் இருந்ததனால் சில வேளைகளில் அவர்கள் ஏஜன்சியுடன் தொடர்பு கொண்டு எங்களை விடுதலை செய்வதாகவும், அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாகவும் தெரிவித்தனர்.

அதே நேரம் நாட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டாம் என்றும் கூறினார்கள். அவ்வாறான பிரச்சினைகளால் சண்டைகள் கூட வந்திருக்கின்றன.

ரோகோ, கானா,மாலி, பெனின் உள்ளிட்ட நான்கு இடங்களில் 480 பேரக்கும் மேற்பட்டவர்கள் தற்போதும் உள்ளனர். இதில் மட்டக்களப்பு, வாழைச்சேனை, வந்தாறுமூலை, திருக்கோவில், செங்கலடி, எனப் பல பிரதேசங்களைச் சேர்நதவர்களும் உள்ளனர்.

நாங்கள் கைது செய்யப்பட்டு 2 மாதங்களுக்குப ;பின்னரும் ஆட்கள் வந்திருக்கிறார்கள். 209 பேரில் 150க்கும் மேற்பட்டவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே.

இவர்களில் அந்த நாட்டுப் பொலிசாருக்கு பணம் கொடுத்து ஓட முயற்சித்த ஒருவர் சிறையில் உள்ளார். அதே நேரம் நாட்டுக்குத் திரும்ப விரும்புபவர்களைத் தடுக்க முயன்றவர்கள் இருவரும் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் சப் ஏஜண்டுகளாக இருந்த 4 பேர் தப்பி ஓடியுள்ளனர் அவர்கள் கைது செய்யப்படவில்லை.

அங்கிருந்த காலத்தில் நம்மவர்கள் மது அருந்திவிட்டு முகாமிலுள்ள பொலிஸ் காரர்களது வீடுகளுக்குச் சென்று தகாத உறவுகளில் ஈடுபட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. அதனால் ஐ.சி.ஆர்.சி எயிட்ஸ் சம்பந்தமான விளக்கங்களைக் கொடுத்தது. அத்துடன் முகாம் பொறுப்பதிகாரியும் விளக்கங்களைக் கொடுத்தார்.

சப் ஏஜண்டுகளின் யோசனைகளாலேயே இவ்வாறான நடவடிக்கைகளில் சிலர் ஈடுபட்டனர். முதல் தடவையில் நாங்கள் 9 பேர் நாட்டுக்கு வந்தோம். பின்னர் 28பேர் வந்தோம். இதுவரை 67 பேர் மெடிக்கல் போட்டிருக்கிறார்கள். மிகுதியானவர்கள் காத்திருக்கிறார்கள். ஐ.சி.ஆர்.சி தான் மெடிக்கல் செய்து தருகிறது. அங்கிருக்கும் காலத்தில் மருத்துவ உதவிகள் உள்ளிட்ட சகல உதவிகளையும் செய்துதந்தது. அதற்காக நன்றி தெரிவிக்க வேண்டும்.

ஐ.ஓம்.எம். எங்களுக்கு கைச்செலவுக்குப் பணமும், தொழில் முயற்சிக்கு உதவியும், கடன் வசதியும் செய்து தருவதாகச் சொன்னது. அதற்கு ஏற்ப நாட்டுக்குத்திரும்பினோம். எல்லா வகையிலும் உதவிகள் செய்து ஐ.ஓ.எம்முக்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் நாம் நன்றி தெரிவிக்க வேண்டும்.

டோகோவில் விசா முடிந்து இருந்தது தவிர, எந்தப்பிரச்சினையும் இல்லாது எங்களை அவர்களுடைய நாட்டிலிருந்து அனுப்பிவைத்தது போல், எங்களது நாட்டிலும் சட்டரீதியற்ற முறையில் வெளிநாடு செல்வதால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து நல்ல விளக்கங்களைத் தந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள வேண்டும். அதே நேரம், சட்ட ரீதியற்ற முறையில் இவ்வாறு ஆட்களை அனுப்புபவர்களிடமிருந்து பாதுகாப்பாக இருங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.