Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவாவில் ஆதரவைப் பெற சிறிலங்கா ஏற்பாடு செய்த ஒன்றுகூடல் நிகழ்வு! முக்கிய நாடுகள் புறக்கணிக்க முடிவு

Featured Replies

ஜெனிவாவில் ஆதரவைப் பெற சிறிலங்கா ஏற்பாடு செய்த ஒன்றுகூடல் நிகழ்வு! முக்கிய நாடுகள் புறக்கணிக்க முடிவு

ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் உறுப்பு நாடுகளின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் நோக்குடன் சிறிலங்கா அரசாங்கம் ஜெனிவாவில் நாளை மறுதினம் ஏற்பாடு செய்துள்ள விசேட ஒன்றுகூடல் நிகழ்வை முக்கியமான பல நாடுகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடர் இம்மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நேற்று கொழும்பிலிருந்து ஜெனிவாவுக்கு பயணமாகியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் கலந்து கொள்ளும் உறுப்பு நாடுகளின் இராஜதந்திரிகளைச் சந்திப்பதற்கான விசேட ஒன்று கூடலில் கலந்து கொண்டு சிறிலங்காவுக்கான ஆதரவைத் திரட்ட பீரிஸ் திட்டமிட்டிருந்தார்.

ஆனால், லத்தீன் அமெரிக்காவின் சில நாடுகளும், ஆபிரிக்க நாடுகள் சிலவும் இந்த ஒன்றுகூடலில் கலந்து கொள்ளாதிருக்கத் தீர்மானித்துள்ளதாக தெரிய வருகின்றது.

ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தை ஆதரிக்கவுள்ளதாலேயே, சிறிலங்கா அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள விசேட ஒன்றுகூடல் நிகழ்வில் இந்நாடுகள் கலந்து கொள்ளாதிருக்கத் தீர்மானித்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள் காட்டி கூறப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தை முறியடிப்பதற்கான ஆதரவை லத்தீன் அமெரிக்க மற்றும் ஆபிரிக்க நாடுகளிடம் இருந்து பெறுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் அண்மையில் மேற்கொண்டிருந்த முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்ததாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகியிருந்தன.

அத்துடன், பொறுப்புக்கூறும் விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து செயற்படுமாறு லத்தீன் அமெரிக்க நாடுகள் சிறிலங்காவின் தூதுக்குழுவினரிடம் கூறியிருந்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

அதேவேளை, ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் தொடர்பில் நடுநிலை வகிப்பதற்கு ஆசியாவின் சில நாடுகள் தீர்மானித்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இதனிடையில், ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் தனக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தை வெற்றி கொள்வதற்காக இந்தியாவின் ஆதரவைப் பெற்றுக் கொள்ள சிறிலங்கா அரசாங்கம் தீவிர முயற்சிகளையும் மேற்கொண்டிருந்தது.

இத்தகையதொரு நிலையில், இவ்விகாரம் தொடர்பில் இந்தியா எத்தகையதொரு நிலைப்பாட்டை எடுக்கும் என்பது தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் எதுவும் வெளிவராத போதிலும், அந்நாடு சிறிலங்காவுக்கு சார்பான ஒரு நிலைப்பாட்டையே எடுக்கும் என இராஜதந்திர வட்டாரங்களை மேற்கொள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 19வது கூட்டத் தொடரில் எதிர்கொள்ளக்கூடிய நெருக்கடிகளையும், அழுத்தங்களையும் சமாளிக்கும் வகையில் சிறிலங்கா அரசாங்கத்தின் 52 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு கலந்து கொள்ளவுள்ளது.

இக்கூட்டத் தொடரில் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், அமைச்சர்கள் மகிந்த சமரசிங்க, நிமால் சிறிபால டி சில்வா, ரவூப் ஹக்கிம், றிசாத் பதியுதீன், அனுர பிரியதர்சன யாப்பா, ஜோன் செனிவிரத்ன, டிலான் பெரேரா, மற்றும் சஜின் வாஸ் குணவர்த்தன உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=7afce5d9-231a-4f3b-89fc-be5c9e806e24

  • தொடங்கியவர்

சிறீலங்கா அமைச்சர் ஜிஎல்.பீரிஸ் சிங்கள அரசு இழைத்த மாபெரும் தவறுகளை அறிந்தவர். ஆனாலும் சிங்கள இனவாதத்தின் பதவி பட்டங்களுக்காக மயங்கி தொடர்ந்து அநீதியின் பக்கம் நிற்பவர் என்ற கருத்து நிலவுகிறது. இந்த நிலையில் அவசர அவசரமாக ஜெனீவா போன அவர் நடாத்தவிருந்த கூட்டம் முன்னைய காலங்களைப் போல பயன்தரவில்லை.

மூழ்கும் ஒருவனை காப்பாற்றப் போய் தானும் மூழ்கும் அவல நிலைக்கு இந்தியா வரவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சிறீலங்கா தரப்பு சில தினங்களுக்கு முன்னர் டெல்கிக்கு கொடுத்த வாக்குறுதிகள் பயனளிக்க வாய்ப்புள்ளன. ஆனால் டெல்கியை தவிர சிறீலங்காவை கருத்தில் எடுக்க மற்றைய நாடுகள் முன்வராது என்பது ஜெனீவாவில் தெரிய வரும்.

http://www.alaikal.com/news/?p=97619

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.