Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"நாங்கள் வீழப் பிறந்தவர்களல்ல வாழப்பிறந்தவர்கள் என்பதை நிரூபிக்க ஜெனீவாவை நோக்கி ஒன்றிணைந்த தமிழராய் பொங்கியெழுந்து கடலென திரண்டு வாரீர்"

Featured Replies

peerani_20110528_1388279387.jpgபுரட்சிகரமான தமிழ் உறவுகளே.இது தூங்குவதற்கான நேரமல்ல. ஒன்று திரண்டு உன் வரலாற்று கடமையை நிறைவேற்றும் நேரமிது.

உனக்காக வீழ்ந்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களது கனவுகளை நிறைவேற்றும் நேரமிது. உனது உடன் பிறந்த உனது உடம்பில் ஓடுகிற அதே தமிழ்ரத்தம் ஓடுகிற உனது சகோதரர்களை கூண்டோடு அழித்தவனை குற்றவாளிக்கூண்டில் ஏற்றும் நேரமிது. மறக்காகாதீர்கள்.

எம் அருமை உறவுகளே. வருகின்ற 05.03.2012 அன்று ஜெனீவா ஐநாப்பொதுமன்றத்தின் முன்றலிலே நெருப்புத்தமிழன் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலிலே நடைபெற இருக்கின்ற பேரணியில் உணர்வுள்ள அனைத்துத் தமிழனும் பங்குபற்றவேண்டும். ஏனென்றால் உலகத்தமிழர்களுக்கு இது மாபெரும் பேரணி மட்டுமல்ல. உலகத்தமிழனின் 60 ஆண்டுகாலப்போராட்டத்தின் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டுவதற்கான தொடக்கமுமாகும். ஜெனீவாவில் நடைபெறவிருக்கின்ற ஐநா மனித உரிமைக்கூட்டத்தொடரில் இலங்கைக்கெதிரான தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கான அனைத்து அறிவிப்புகளும் வெளியாகியிருக்கின்றன. இலங்கை அரசுக்கான அனைத்துக்கதவுகளும் நாளுக்குநாள் அடைப்பட்டுக்கொண்டே வருகின்றன. இந்த நேரத்தில் தான் தமிழன் தன்னை புரட்சியாளனாக உருவாக்கிக்கொள்ளவேண்டும்.

எமக்காக உலகநாடுகள் குரல் கொடுக்க வரும் போது அவர்களுக்கு நாம் முண்டுகொடுத்து எம் தியாக தீபம் திலீபன் கூறியதுபோல மக்கள் புரட்சியாக வெடிக்கவேண்டும். அதற்கான தருணமும் இதுவே. பல நாள் வேட்டையாடாமல் இருந்துவிட்டு காலம் கனிந்த போது வேட்டையாடும் புலிபோல பாய்ந்தெழுந்து வரவேண்டும்.

ஜெனீவாவில் இம்மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடர் அரசாங்கத்துக்கு பெரிதும் கலக்கத்தையும் குழப்பத்தையும், அதேவகையில் என்றுமில்லாத வகையில் சர்வதேசரீதியில் பாரிய இராஜதந்திரநெருக்கடிகளை சந்தித்திருக்கிறது. இதேவேளையில் உள்நாட்டிலும் விலைவாசி உயர்வு, சம்பளப்பிரச்சனை, வாழ்க்கைச்செலவு அதிகரிப்பு போன்றவற்றால் அரசாங்கத்தின் மீது மக்கள் மிகவும் வெறுப்படைந்திருக்கிறார்கள். இந்த நிலையில் அரசாங்கம் பாரிய பின்னடைவையும், மும்முனை அழுத்தங்களையும் எதிர்கொண்டிருக்கிறது. இருந்தாலும் அரசாங்கம் நேரில் மக்களிடம் செல்ல பயப்பட்டு கடும் போக்காளர்களையும், இனவாதிகளையும் ஏவிவிட்டிருக்கிறது என்பது மட்டும் புலனாகிறது. இதேவகையில் இலங்கையிலும் ஆர்ப்பாட்டங்கள் நிகழ்வுகள் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகவே காணப்படுகிறது. இதனை நாம் முறியடிக்க எம்மினத்தை அழித்தவனை நீதிக்கு முன்னால் நிறுத்த நாம் இந்ந ஆயுதம் ஏந்தா ஜனநாயகப்போரில் பங்குபற்றவேண்டும்.

கடந்த சில நாட்களாக இலங்கைக்கு அதிர்ச்சிக்குமேல் அதிர்ச்சி வந்து கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஐநா செயலருக்கு ஆலோசனை வழங்கும் குழுவில் இருந்து தமிழர்களை கொன்றுகுவித்ததில் முன்னின்று செயற்பட்ட இராணுவத்தளபதி சவேந்திர சில்வா அவர்களை அந்தக்குழு நீக்கியது. இதில் என்ன பகிடி என்றால் இவர் சென்ற முதல் கூட்டத்திலே இவரை எவரும் பொருட்படுத்தவில்லை. அதேநேரம் சவேந்திர சில்வாவுக்கு ஒரு பொறுப்பும் கூட வழங்கப்படவில்லை. இதிலிருந்து சில வேளைகளில் இவர் உண்மையிலேயே இந்தக்குழுவுக்கு தெரிவுசெய்யப்பட்டாரா என கேள்வியெழுகிறது. இது இவ்வாறிருக்க இவரது நியமனம் தொடர்பில் பல அரசசார்பற்ற அமைப்புக்கள் கடும் கண்டனம் தெருவித்தன. இதனால் கடந்த சில நாட்களில் பல அதிரடி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.சவேந்திரசில்வா இந்தக்குழுவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இது இலங்கைக்கு மிகுந்த அவமானத்தையும்,பயத்தையும் கொடுத்துள்ளது. ஆனாலும் இவர் தான் பதவிநீக்கம் செய்யப்படவில்லை என்று ஊடகங்களுக்கு சொல்லிவருவது தான் நகைப்புக்குரியதாக இருக்கிறது.

இதனையும் விட நாளுக்கு நாள் அமேரிக்கா கொண்டு வர இருக்கும் இந்த தீர்மானத்திற்கு பல நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. முதலில் கனடா, ஐரோப்பிய நாடுகளும், சில நாடுகள் தனித்தனியாகவும் ஆதரவு தெருவித்து வருகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரித்தானியாவும் வெளிப்படையாக அறிவித்திருக்கின்றது. இந்த தீர்மானத்தை ஆபிரிக்க நாடுகளும் வரவேற்றிருக்கின்றன.

அதேவகையில் பல மனித உரிமை அமைப்புக்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும் இதற்கு ஆதரவு தெருவித்திருக்கின்றன. மனித உரிமைகள் மற்றும் அமைதியை நிலைநாட்டுவதற்கான உலகப் புகழ்பெற்ற நிறுவனமான த எல்டர்ஸ் (the el-Ders) அமைப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் அங்கத்துவ நாடுகளிடம் அவசர வேண்டுகோளொன்றை விடுத்திருக்கிறது. அதுவும் இந்த தீர்மானதுக்கு சாதகமாகத்தான். உலகமே எமக்காக போராட ஜெனீவா வரும் போது நீ கட்டிலில் மூடிக்கடிப்போர்த்து படுத்தால் எப்படி இதனை நிறைவேற்ற முடியும். எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் கூறியது போல எமக்கான சுவாசத்தை நாமே சுவாசிப்பது போல எமக்கான உணவை நாமே தேடித்தேடி உண்பது போல எமக்கான போராட்டங்களையும் நாமே மேற்கொள்ள வேண்டும்.

எம் அருமை உறவுகளே

நாம் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லையெனில் எமக்கான உரிமையும், எமக்கான நாடும் நாம் இவ்வளவு காலமாக போராடிய போராட்டமும் வீணடைந்துவிடும். எந்த இலட்சியத்துக்காக தலைவன் பின் அணிதிரண்டு நின்றோமோ அந்த இலட்ச்சியத்தின் முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறோம். எமக்கான நிலத்தை எனது அன்னை தேசத்தை தர மறுப்பவனுக்கெதிராக போராட நீங்கள் வரவேண்டும். இது ஆயுதம் ஏந்திய யுத்தம் அல்ல அகிம்சை யுத்தம். இறிதிக்கட்ட போரில் உனது தந்தையை உனது தாயை உன் கண்முன்னாலே சுட்டுவீழ்த்தியவனை பழிவாங்க நீ வரவேண்டும். உனது உறவுகளை உடல்களை ஊனமாக்கி ஒரு நேர சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் சாகின்ற நிலமைக்கு தள்ளியவனை நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள். உனது அக்காமாரை, தங்கைமாரை கதறக்கதற கற்பழித்தவனை கருவறுக்க நீ வர வேண்டும்.

உனது அன்னை தேசத்தை உனது சொர்க்க பூமியான தமிழீழத்தை மயான பூமியாக மாற்றியவனை அழிக்க நீ வரவேண்டும். உனது அன்னை பூமி உன்னை நோக்கி கதறி அழுகிறாள். ஜெனீவாவில் நடக்கும் போராட்டத்துக்கு செல்லடி செல்லடா என உனக்கு உன் அன்னை பூமி அறைகூவல் விடுக்கிறாள். உனது அன்னையைக் காப்பாற்ற நீ அறப்போரில் பங்குபற்ற வேண்டும். ஒவ்வொரு கல்லறைகளும் உனக்கான விட்டுச்சென்ற பணிகளை ஞாபகப்படுத்துகின்றன. இனியும் ஏன் தயக்கம். மாவீரர்கள் கண்ட கனவுகளையும், எனது தலைவன் உருவாக்கிய தேசத்தையும் கட்டியெழுப்ப ஒன்றிணைந்த தமிழனாய் தொடந்தும் போராடுவோமாக.

ஈழதேசம் இணையத்திற்காக உங்கள் ஈழப்பிரியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.