Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு கிடைத்த இராஜதந்திர அடி!

Featured Replies

ஐ.நாவில் அமெரிக்கா வெற்றி கண்டது! இலங்கைக்கு கிடைத்த இராஜதந்திர அடி!

UN-us_win.JPGஐ.நா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை, தீர்மானமாக நிறைவேற்றியுள்ளது. இலங்கை அரசாங்கம் மாபெரும் இராஜதந்திரச் தோல்வியைச் சந்தித்துள்ளது.

கடந்த 4 வாரங்களாக, உலகத் தமிழர்களின் எதிர்பார்ப்புக்கு மட்டுமல்ல, இலங்கைத் தீவை மையப்படுத்திய உலக அரசியல் வெளியிலும், இப்பிரேரணை விவகாரம் முக்கிய விடயமாக மாறியிருந்தது.

இந்நிலையில் இன்று ஐ.நா கூட்டத் தொடர் அமர்வில் கடும் வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் இந்தப் பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

அமெரிக்காவின் பிரேரணையினை 24 நாடுகள் ஆதரித்தும், 15 நாடுகள் எதிர்த்தும் வாக்களித்துள்ளன.

8 நாடுகள் வாக்கெடுப்ப்பில் பங்கெடுக்கவில்லை.

அமெரிக்காவின் இந்தப் பிரேரணையினை தோற்கடிக்க இலங்கை பல்வேறு வழிமுறைகளையும் தீவிரமாக கையாண்ட போதும், இன்றைய வாக்கெடுப்பில் இலங்கை கண்டுள்ள தோல்வி, சிங்கள தேசத்துக்கு கிடைந்த மாபெரும் இராஜதந்திரத் தோல்வியாக பலரும் கருதுகின்றனர்.

முள்ளிவாய்க்கால் பேரவலம் எனும் மாபெரும் வரலாற்றுத் பெருந்துயரை சுமந்து நிற்கும் ஈழத்தமிழினத்திற்கு கிடைத்த, சிறு ஒத்தடமாக இந்தத் தீர்மானத்தை உலகத் தமிழர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில் கடந்த பல வாரங்களாக, ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடரினை மையப்படுத்தி பல இராஜதந்திரச் செயற்பாடுகளை மேற்கொண்டு வந்த, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவா்கள் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கை தொடர்பில் ஒரு சுதந்திரமான விசாரணைப் பொறிமுறையொன்றின் அவசியத்தினை தமிழர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், இன்று ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையானது, அதனை நோக்கிச் செல்வதற்குரிய ஒரு வாய்ப்பாகவும், முதல்படியாகவும் கொள்ளலாம் என தெரிவித்தார்.

அத்தோடு, ஐ.நா நிபுணர் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு, தமிழர்கள் தொடர்சியாக குரல் எழுப்புவதோடு, சனநாயகரீதியாகவும், வலிமையான இராஜதந்திரச் செயற்பாடுகள் ஊடாகவும், இதனை தொடர்சியாக நாங்கள் வலியுறுத்துவோம் எனவும் மேலும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவினால் கடந்த 07-03-12அன்று சமர்பிக்கப்பட்டுள்ள பிரேரணையின் வரைவு :

தீர்மான வரைபு: இலங்கையில் நல்லிணக்க மேம்பாடும் பொறுப்புக் கூறுதலும் (06-03-12)

ஐக்கிய நாடுகள் சாசனம், சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம், மனித உரிமைகளுக்கான அனைத்துலக உடன்படிக்கைகள் மற்றும் பிற தொடர்புடைய விதிகளுக்கு அமைவாக...

பயங்கரவாதத்திற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் அனைத்தும் சர்வதேச விதிகளுக்கு அமைவாக இருப்பதை உறுதிப்படுத்தும் உறுப்பு நாடுகளது கடமைக்கு அமைவாகவும், குறிப்பாக பொருத்தமான சர்வதேச மனித உரிமைகள், பாதுகாப்பு, மனிதாபிமான விதிகளுக்கு அமைவாகவும்...

இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் முடிவுகளையும் பரிந்துரைகளையும் மற்றும் இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் இவ்வறிக்கை வழங்கிய பங்களிப்பை ஏற்றும்..

சட்டத்திற்கு முரணாக மேற்கொள்ளப்பட்டதாக கருதப்படும் படுகொலைகள் மற்றும் காணாமற் போதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளையிட்டு பக்கசார்பற்ற விசாரணை மேற்கொள்ளுதல், வடக்கிலிருந்து இராணுவத்தை விலக்குதல், காணி தொடர்பான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான பாரபட்சமற்ற பொறிமுறையை உருவாக்குதல், தடுத்து வைத்தல் தொடர்பான கொள்கைகளை மீளாய்வு செய்தல், சுயாதீனமான சிவில் சமூக கட்டமைப்புகளை பலப்படுத்துதல், மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குதல் மூலம் இனப்பிரச்சனைக்கான தீர்வைக் காணுதல், அனைவரதும் கருத்து வெளிப்பாட்டு உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல், சட்ட ஆட்சி முறை தொடர்பான சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல் போன்ற விடயங்கள் சார்ந்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்வைத்துள்ள ஆக்கபூர்வமான பரிந்துரைகளை வரவேற்று...

சர்வதேச சட்ட விதிகள் தீவிரமாக மீறப்பட்டமை குறித்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு போதுமான அளவு கவனம் செலுத்தவில்லை என்பதையும் கவனத்திற்கொண்டு..

1. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள ஆக்கபூர்வமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதுடன் நீதி, பொறுப்புப் கூறுதல், சகல இலங்கையர்க்கும் இடையிலான நல்லிணக்கம் போன்றவற்றை உறுதிப்படுத்த, பொருத்தமானதும் நம்பிக்கையானதுமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும் சட்டரீதியான கடமைகளையும் பொறுப்புக்களையும் நிறைவேற்றவும் சிறிலங்கா அரசைக் கோருதல்.

2. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட மற்றும் தொடர்ந்து எடுக்கப்படவுள்ள விபரங்கள் உள்ளிட்ட, விரிவான செயற்திட்டத்தை விரைந்து முன்வைக்குமாறும், சர்வதேச சட்டவிதிகள் மீறப்பட்டமை குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து கவனம் செலுத்துமாறும் சிறிலங்கா அரசாங்கத்தைக் கோருதல்.

3. மேற்சொன்ன திட்டங்களை நடைமுறைப்படுத்தவதற்குரிய ஆலோசனைகளையும் தொழில்நுட்ட உதவிகளையும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தை வழங்குமாறும் இலங்கை அரசாங்கத்தை இதனை ஏற்றுக்கொள்ளுமாறும் வேண்டுவதுடன் இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையகத்தின் 22 வது கூட்டத்தொடரில் வழங்கப்பட்ட உதவிகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தை வேண்டுதல்.

http://news.lankasri.com/show-RUmqyDRWPdix5.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.