Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரசாலினி தன் புன்னைகை இழந்து போனது ஏனோ – குளோபல் தமிழ் செய்திகள்

Featured Replies

பிரசாலினி தன் புன்னைகை இழந்து போனது ஏனோ – குளோபல் தமிழ் செய்திகள்

25 மார்ச் 2012

passport_CI.jpg

பிரசாலினி 9 வயது நிறைந்த சின்னஞ் சிறு குழந்தை.க்கு பெப்ரவரி 18 ஆம் திகதி அன்று காலையும் வழமையான விடியல்கள் போலவே இனிமையாக மலர்ந்திருந்தது. அன்றுதான் தனது முடிவுக்கு பிள்ளையார் சுழி இடப்போகிறது என்பதை அந்தப் பாலகி அறிந்திருக்க மாட்டாள்.

அன்று காலை நித்திரை விட்டெழுந்த பிரசாலினி வயிறு நோவினால் முடியாமல் இருப்பதாக கூறினாள். இந்த வயிறு நோ அவளுக்கு கடந்த 6 மாதமாக இடையிடையே சாதாரணமான நோவுடன் இருந்து வந்தது. ஏற்கனவே இரு நாட்களாக காய்ச்சலும் சில சமயம் வாந்தியும் இருந்தது. கூடவே வயிறு நோவும் இருந்து வந்ததால் பெற்றோர் அவளை கொழும்பின் பிரபல வைத்தியசாலையின், குழந்தைகள் வைத்திய நிபுணர்டம் காட்டி மருந்து எடுத்து வருவதற்காகக் கூட்டிச் சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு கூறியுள்ளார்.

பின்னர் இரத்தப் பரிசோதனைகள், சிறுநீர்ப் பரிசோதனைகள் ஸ்கான் பரிசோதனை என்பவை மேற்கொள்ளப்பட்டன. இரத்தப் பரிசோதனையில் அவளின் இரத்தத்தில் infection மிகவும் உயர்வாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. எனினும் வயிறு நோ இருப்பதால் குழந்தைகள் சத்திரசிகிச்சை நிபுணர் ஒருவர் வயிற்றைப் பரிசோதிக்க வேண்டுமென டாக்டர் கூறியுள்ளார். அன்று (18ந் திகதியே ) மாலை 4 மணியளவில் குழந்தைகள் சத்திரசிகிச்சை நிபுணர் வயிற்றைப் பரிசோதித்து விட்டு அவளிற்கு அப்பென்டிசைட்டிஸ் ஒப்பரேசன் உடனடியாகச் செய்ய வேண்டும், இல்லாவிடில் அப்பென்டிக்ஸ் வெடித்து உயிருக்கு ஆபத்தாகி வீடும் எனக் கூறியுள்ளார். பெற்றோரும் உயிராபத்தைக் கருதில் கொண்டு ஒப்பரேசனுக்குச் சம்மதித்துள்ளனர். ஆனால் சத்திரசிகிச்சை முடிந்த பின்னர் அந்த சத்திரசிகிச்சை நிபுணர் தான் நினைத்த அளவிற்கு அப்டிபென்டிக்ஸ் infection ஆகவில்லை எனக் கூறியுள்ளார். எனவே இதிலிருந்து இந்த ஒப்பரேசன் உடனடியாகச் செய்ய வேண்டிய ஒன்றல்ல என்பது உறுதியாகியுள்ளது.

dance1.jpg

மறுநாள் 19ம் திகதி காலையிலேயே கைகளின் கீழ்ப் புறத்திலும் கால்களின் அடிப்பாகத்திலும் சிவப்பாக Rashes பரவத் தொடங்கியது. பின்னர் வாய் சிவந்து கண்களும் சிவந்து காணப்பட்டுள்ளது. இப்படியான குணங்குறிகள் “Kawasaki” என்கின்ற நோய்க்குரியவை போலுள்ளது எனக் கூறி இதனை உறுதிப்படுத்த டாக்டர் அழைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சாதாரண வாட்டிலிருந்து பிரசாலினி மருத்துவ தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு (M.I.C.U) மாற்ற்ப்பட்டார். இரவு 11 மணியளவில் டாக்டர் சென்று பார்த்துவிட்டு “Kawasaki” இற்கு உரிய சிகிச்சையை உடனடியாக ஆரம்பிக்கும்படி கூறிச் சென்றுள்ளார். ஆனால் M.I.C.U ல் இருந்த டாக்டர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. எனினும் பெற்றோர் உடனடியாக Treatment ஐ ஆரம்பிப்பதற்காக அவர்களுடன் கதைத்து முயற்சிகள் மேற்கொண்டும் முடியாமல் போய்விட்டது. Madam இல்லை 2 நாட்களுக்குள் Treatment செய்யலாம் எனக் கூறித் தட்டிக் கழித்துள்ளனர்.

மறுநாள் காலை 20ந் திகதி) டாக்டர் அவர்கள் சென்று பிரசாலினியைப் பார்த்த பின்பே குறிப்பிட்ட மருந்து தம்மிடம் இல்லை வெளியில் இருந்து பெற்றுக் கொடுக்குமாறு கூறியுள்ளார். மிகவும் விலை கூடிய மருந்தாக இருந்தும் அதனைப் பெற்றுக் கொடுத்துள்ளனர். திங்கள் மதியம் 12 மணியளவில் ஏற்றத் தொடங்கிய 9 போத்தல் மருந்தும் மறுநாள் 21 ஆம் திகதி காலையிலேயே முடிவடைந்துள்ளது. ஆனால் அம்மருந்து ஏறத் தொடங்கியதில் இருந்து இரவும் அவள் நித்திரை கொள்ளவில்லை. Restless ஆக இருந்துள்ளார். செவ்வாய் 21 ஆம் திகதி காலையில் இருந்து தனக்கு மூச்சுவிட கடினமாக உள்ளதாகவும் கூறியுள்ளார். ஆனால் டாக்டர்கள் அதனைப் பொருட்படுத்தவில்லை. சாதாரணமாக மூச்சு விடுவதைப் போல் அல்லாது அவளுக்கு சற்று வேகமாகவே மூச்சுப் போய் வந்துள்ளது. அவ பயப்படுகிறா அதனால்த் தான் இப்படி மூச்சு விடுகிறா எனக் கூறியுள்ளனர்.

செவ்வாய்க் கிழமை மீண்டும் காச்சல் உயர்வாகி உள்ளது. “Kawasaki” மருந்து கொடுக்கும் போது ஒரே நேரத்தில் கொடுக்க வேண்டிய அஸ்பிறீன் குளிசையை செவ்வாய் மதியம்தான் கொடுத்துள்ளனர். அன்று மாலை 5 மணியளவில் டாக்டர் சென்று பார்த்து விட்டு பயத்தினால்தான் அவவிற்கு மூச்சு இவ்வாறுள்ளது. எனவே அவளை சாதாரண வார்டிற்கு மாற்றுமாறு கூறிச் சென்றுள்ளார். இப்படியான நிலமையில் பிரசாலினி தனது பெற்றோரிடம் இது Sick room தன்னை வெளியில் கொண்டு போகும்படி கூறியுள்ளாள். அதன் பின் சோடா அருந்தி கதைத்துக் கொண்டிருந்தார்.

yoga1.jpg

திடிரென மாலை 6.30 அளவில் அவரது pressure குறைவடைய ஆரம்பித்துள்ளது. அதன் பின்னர் Septicemia ஏற்பட்டுள்ளது.Treatment செய்கிறோம் என்று சொல்லி பெற்றோரையும் பிள்ளையுடன் நிற்க விடாமல் வெளியே போகுமாறு கூறிவிட்டு பலவகையான ஊசிமருந்துகளை ஏற்றியுள்ளனர். இரவு 10.30 மணியளவில் சிகிச்சை பயனளிக்கவில்லை. பிரசாலினி இறந்து விட்டாள் என Madam கூறியுள்ளார். இறந்ததற்கான காரணம் Septic shok எனக் குறிப்பிட்டுள்ளனர்.

Septicemia நோய் ஏற்பட்டுள்ள ஒருவருக்கே Septic shok இறுதியில் ஏற்படுகிறது. எனவே பிரசாலினிக்கு ஏற்பட்ட நோய் Septicemia என்பது தெளிவாகிறது. Kawasaki நோய்களது குணங்கள் குறிகளை இணையங்களில் பார்க்கும் போது பிரசாலினிக்கு ஏற்பட்ட நோய் Septicemia என்பது டாக்டர் அல்லாத சாதாரண மக்களுக்கே புலனாகிறது. அத்துடன் பொதுவாக Septicemia நோய் உள்ள ஒருவருக்கு உடலில் புண் அல்லது வெட்டுக் காயங்கள் ஏற்படும் போது Infection இரத்தத்தில் ஏற்படுவதாக அறிகிறோம். எனவே இந்தப் பாலகியைப் பொறுத்தவரை அப்பன்டிகஸ் இல்லாத நிலையில் வயிறு வெட்டிய போதே பிழையான treatment இற்கு அடித்தளமிடப்பட்டுள்ளது. போல் தெரிகிறது.

இன்நிலமையில் பின்வரும் வினாக்கள் எழுகின்றன.

1) எதற்காக அப்பன்டிசைட்டிஸ் இல்லாத போது வயிறு வெட்டப்பட்டது. இதைச் சரியாக உறுதி செய்ய வேறு பரிசோதனைகள் இல்லையா? வயிறு வெட்டப்படாவிடின் இந் நிலமை நேர்ந்திருக்காதா?

2) Kawasaki குரிய Treatment கொடுக்கப்பட்டிருக்க வேண்டுமா? நோய் இல்லாத நிலையில் கொடுக்கப்பட்ட மருந்தினால் பக்க விளைவுகள் ஏற்பட்டு இருக்குமா?

3) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அன்றே ளநிவiஉஅயை எனத் தீர்மானிக்கக்கட்டு அதற்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்தால் இந்த முடிவு நேர்ந்திருக்காதா?

4) மருத்துவர்களதும் உதவியாளர்களதும் கவனக் குறைவால் இது ஏற்பட்டதா? அல்லது அவர்கள் கவனமாக இருந்தும் இந்த முடிவு ஏற்ட்டுள்ளதா?

5) வெளிநாடுகளில் மருத்துவம் கற்று முறையாக உள்ளகப் பயிற்சி இல்லாத நிர்வாகத்திலும், அவசர சிகிச்சைப் பிரிவுகளிலும் தொழில் பார்ப்பவர்கள் பொறுப்புணர்வற்று செயற்படுகிறார்களா?

6) இதற்காகத் தான் உள்ளுர் வைத்தியர்கள் வெளிநாட்டில் இருந்து கற்கையை முடித்து பணியைத் தொடங்குபவர்களுக்கு எதிராக போராடுகிறார்களா?

7) இப்போது பிரசாலினியின் பெற்றோர் மட்டும் அல்ல பல பெற்றோர்களுக்கு உள்ள பிரச்சனை தமது குழந்தைகள் சுகவீனமுற்றால் எந்த வைத்தியசாலைக்கு கொண்டு செல்வது? எந்ந வைத்தியரிடம் காட்டுவது?

இந்திய வைத்தியசாலைக் குழுமம் ஒன்றிடம் இருந்த இந்த வைத்தியசாலையை நெருக்குதல்களை கொடுத்து வாங்கிய ஆளும் சகோதர் அன் கம்பனி தமது கட்டுப் பாட்டுள் வைத்திருக்கிறது. அதனால் இந்த வைத்தியசாலையில் உயிருடன் சென்றவர் பின் பிணமாக வெளியில் கொண்டு வரப்பட்டாலும் ஏன் எதற்கு என்று யாரும் கேட்க முடியாது. உள்ளே போனவர் போன இடத்தில் மூச்சு திணறி தானாக மரணித்தார் என்று சொன்னால் ஆம் அப்படித்தான் மரணித்திருக்க முடியும் என அவர்கள் சொல்வதனைத் தான் கேட்கமுடியும்.

குழந்தைகளின் சிரிப்பில் நல்லுலகைக் காணும் உலகம் இது. ஆனால் கவனக் குறைவாலும் அதனை தட்டிக் கேட்க முடியாத நிலையாலும் இப்படி எத்தனை குழந்தைகள் புன்னகை இழந்தனவோ?

  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியர்களின் பொறுப்பற்ற,விவேகமற்ற செயல்களால்,முடிவுகளால் தான் சிறுமியின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது. அத்தோடு மேற்படி வைத்தியர்களின் விவேகமற்ற முடிவுகள் இவர்களின் தொழிற்திறமையை கேள்விக்குறியாக்குகிறது.

1) எதற்காக அப்பன்டிசைட்டிஸ் இல்லாத போது வயிறு வெட்டப்பட்டது. இதைச் சரியாக உறுதி செய்ய வேறு பரிசோதனைகள் இல்லையா? வயிறு வெட்டப்படாவிடின் இந் நிலமை நேர்ந்திருக்காதா?

மூன்றாவது வருடத்திலேயே இதற்கான காரணங்களையும் சொதனைகளையும் படிக்க ஆரம்பித்து விடுவார்கள்

TOTAL BLOOD COUNT

CT SCAN

X-RAY

​ URINE ANALYSIS (EXCLUDE THE URINARY TRACT DISEASE)

(PREGNANCY TEST இங்கை தேவைப்படாது)

Septicemia நோய் ஏற்பட்டுள்ள ஒருவருக்கே Septic shok இறுதியில் ஏற்படுகிறது

Septicemia இது ஒரு கிருமிதொற்று (infectious) or toxins (தமிழ் தெரியேலை) குருதியில் அதிகரிப்பதால் ஏற்படும் நோய் இன்னொரு நோயோடு அதன் தாகம் அதிகரிப்பதால் வரும் இங்கு அந்த நோய் appendicitis ஆக அவர்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது mild(non suppurative) appendicitis உடன் வேறு நோய் இருந்திருக்கலாம் அதை இவர்கள் கவனிக்காது விட்டிருக்கலாம்

சாதரணமாக ஒரு நோய் கண்டறியபட்டால் அதற்கான மருதுவதையே முதலில் செய்வார்கள் அதில் இவர்கள் காலம் தாழ்த்தி இருக்க கூடும்

தொடரான மருத்துவ பரிசோதனைகள் மூலம் மட்டுமே உறுதி செய்து கொள்ளலாம் இதில் தவறு எங்கு நடந்தது என்பது அங்கு கடமையாய் வேலை செய்தவர்களுக்கு மட்டுமே தெரியும்

"பொறுப்புணர்வற்று செயற்படுகிறார்களா"

பொறுப்புணர்வுக்கு தனிப்பட்ட மனித உணர்வும் ஆரம்ப கல்வியும் குடும்ப சமூக உணர்வும் காரணமே தவிர வெளிநாட்டுக்கல்வி அல்ல இதற்கு யாழ் களமே சிறந்த உதாரணம்

தவறான மருத்துவத்திற்கு கல்வி காரணமாகலாம் அனால் வெளிநாட்டில் கல்வி கற்றவர்கள் மீது குற்றம் சாட்டுவதற்கு காரணம் இதில் ஏதுவாக இல்லை காரணம் வெளிநாட்டில் கல்வி கற்ற மாணவர்கள் இலங்கையில் வேலை செய்வதற்கு இலங்கையில் கல்வி கற்ற மாணவர்களை விட அதிக பெறுபேறு எடுக்க வேண்டும்

இலங்கையில் கல்வி கற்றவர்களுக்கு 30% வெளிநாட்டில் கல்வி கற்றவர்களுக்கு 45%

மேலும் 3 வருடங்களுக்கு இன்னொருவரின் மேற்பார்வையிலேயே வேலை செய்கிறார்கள் அத்துடன் இவர்களின் விகிதாசாரம் மிக குறைவு இலங்கையில் படிதவர்களோடு ஒப்பிடும போது

Edited by கருணை நிழல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.