Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனீவா சோதனை

Featured Replies

ஜெனீவா சோதனை

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பிலும் அத்தீர்மானத்துக்கு எதிராக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும் விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடொன்று இன்று திங்கட்கிழமை முற்பகல் கொழும்பில் நடைபெற்றது.

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஜெனீவா சென்ற இலங்கை தூதுக்குழுவுக்கு தலைமை தாங்கிய அமைச்சர் மஹிந்த சமரசிங்க மற்றும் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ரவூப் ஹக்கீம், றிஷாட் பதியுதீன், அநுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்டோர் இந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டுள்ளதை படங்களில் காணலாம்.

GL01(2).jpg

http://www.tamilmirr...6-10-41-04.html

மேற்கு நாடுகளிலுள்ள தூதரங்களை மூடுவதற்கும் ஜெனீவா தீர்மானத்திற்கும் தொடர்பில்லை: ஜீ.எல்.பீரிஸ்

மேற்குலக நாடுகள் சிலவற்றிலிருந்து தூதரகங்களை மூடும் தீர்மானத்துக்கும் ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கடந்தவாரம் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கும் தொடர்பில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேற்குலக நாடுகளிலுள்ள சில தூதரகங்களை ஆபிரிக்க நாடுகளுக்கு மாற்றும் தீர்மானமானம் ஜெனீவா பிரேரணை நிறைவேற்றப்படுவதற்கு முன்னரே மேற்கொள்ளப்பட்டிருந்தது என இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார்.

ஐரோப்பிய நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரங்கள் சிலவற்றை மூடிவிட்டு, போலந்து, நெதர்லாந்து, ஆஸ்திரியா, நோர்வே, சுவீடன் நாடுகளுடனான விவகாரங்களை மேற்பார்வை செய்வதற்கு ஒரேயொரு தூதரகத்தை மாத்திரம் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. எனினும் பிரிட்டன், ஜேர்மனி, பிரான்ஸ், மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தூதரகங்கள் தொடர்ந்தும் இருக்கும் எனவும் மூடப்படும் தூதரகங்களுக்கு பதிலாக ஆபிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க, ஆசிய நாடுகளில் தூதரகங்கள் திறக்கப்படவுள்ளதாகவும் அச்செய்திகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் கூறுகையில், 'எம்மிடம் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான வளங்களே உள்ளன. இவ்வளங்கள் வியூக முக்கியத்துவமுள்ள இடங்களுக்கு பகிரப்பட வேண்டும். உதாரணமாக ஆபிரிக்காவில் எமக்கு நான்கு தூதரகங்களே உள்ளன. எனவே அங்கு கவனம் செலுத்தப்பட வேண்டுமென நாம் கருதுகிறோம். இது ஜெனீவா பிரேரணைக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட தீர்மானமாகும்' என்றார்.

இதேவேளை, ஜெனீவா பிரேரணை குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்த கருத்தின் பின்னர், ஜெனீவாவில் ஏற்பட்ட பதற்றத்தை தணிப்பதற்கு இந்திய தூதுக்குழுவினர் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்திய பிரதமர் எழுதிய கடிதும் குறித்தும் செய்தியாளர்கள் வினவினர். அப்போது, இந்த முயற்சிகளில் அல்லாமல் இறுதி வாக்கெடுப்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என அமைச்சர் பீரிஸ் பதிலளித்தார்.

அத்தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்கும் இந்திய நாடாளுமன்றத்தில் பிரதமர் கூறியதன் பின்னர் அவர்கள் என்ன நடவடிக்கை மேற்கொண்டார்கள் என்பது பிரச்சினையில்லை. இறுதி வாக்கெடுப்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அந்த உரையின் நேரம், தன்மை, வலிமை என்பன ஜெனீவாவில் புலப்படக்கூடிய மாற்றத்தை ஏற்படுத்தியது என அவர் கூறினார்.

இந்தியாவின் தீர்மானம் அதிர்ச்சியாக அமைந்ததாகவும் இந்நடவடிக்கையினால் இலங்கை அரசாங்கம் ஏமாற்றமடைந்தாகவும் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் கூறினார்.

http://www.tamilmirr...6-10-49-27.html

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

கக்கீம் ...முதலாளி ...பங்கு கேட்க..எங்கு போகலாம் யொசிக்கிரார் போல....

  • தொடங்கியவர்

கக்கீம் ...முதலாளி ...பங்கு கேட்க..எங்கு போகலாம் யொசிக்கிரார் போல....

ஜெனீவா தீர்மானம் வென்றாலும் தோற்றாலும் இவர்களின் சிங்களத்துடனான இணக்க அரசியல் / தமிழர்களுக்கு எதிரான பிணக்க அரசியலும் தொடருகின்றன. ஜெனீவா தீர்மானம் / நல்லிணக்க ஆணைக்குழு சரத்துக்கள் அமுல்படுத்தப்பட்டால் இவர்கள் அணுகுமுறையில் மாற்றங்கள் வரலாம்.

  • தொடங்கியவர்

படிப்பினைகள் ஆணைக்குழு அதன் அதிகார வரம்பைத் தாண்டிச் சென்றுள்ளதென இலங்கை அரசு தெரிவித்தது.

டிப்பினைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் குறித்து சர்வசன வாக்கெடுப்பு நடத்தும் நோக்கம் இல்லையென இலங்கை அரசு அறிவித்தது.

செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அமைச்சர் நிமால் ஸ்ரீபால டி சில்வா, படிப்பினைகள் ஆணைக்குழு, அதன் அதிகார வரம்பைத் தாண்டிச் சென்றுள்ளதாக குறிப்பிட்டார்.

இந்த நிலையில், ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பாக, அது குறித்துக் கவனமாக ஆராயப்படுமென அவர் தெரிவித்தார். பரிந்துரைகள் முழுவதையும் நடைமுறைப்படுத்த முடியாதெனவும், இயலுமானவற்றைத்தான் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

படிப்பினைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுமென இலங்கை அரசு பல தடவைகள் அறிவித்துள்ள நிலையில், தற்போது அதற்கு முரணாக கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

படிப்பினைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படவேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் கூட்டத்தொடரிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=11515

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.