Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு எதிரான தீர்மானம் அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது – ரஸ்யா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

russia.jpg

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டது என ரஸ்யா சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கைக்கு எதிரான தீர்மானம் பேரவையின் நன்மதிப்பிற்கு ஏற்பட்ட களங்கமாகவே ரஸ்யா கருதுகின்றது என இந்தியாவிற்கான ரஸ்ய தூதுவர் அலெக்ஸான்டர் கடாகின் தெரிவித்துள்ளார்.

நாடுகளின் அடிப்படையில் ஏன் திடீரென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏதேனும் ஓர் நாட்டின் மீது மற்றுமொரு நாடு அழுத்தங்களை பிரயோகிப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை இலங்கையின் சகவாழ்வுக்கு, சர்வதேச தலையீடுகள் மூலம் அச்சுறுத்தல்கள் ஏற்படக் கூடாது என இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் விளடீமீர் மிகாயலோவ் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளை தோற்கடிக்க இலங்கை அரசாங்கத்திற்கு, ரஷ்ய பெரும் உதவிகளை வழங்கியது. இந்த நிலையில், இலங்கையில் தேசிய ரீதியாக சகவாழ்வை ஏற்படுத்த இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். இதன் போது, இலங்கையின் கோரிக்கைக்கு அமைய, ரஷ்ய நட்பு ரீதியான உதவிகளை வழங்கும்.

மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்தும் உரிமை இலங்கைக்கே உள்ளது. அவ்வாறான விசாரணையின் போது, இராணுவ தலையீடுகள் இருக்கக் கூடாது. அத்துடன் மனித உரிமை மீறல் என்ற விடயம் அரசியல் மயப்படுத்தக் கூடாது எனவும் அதனை ரஷ்ய எதிர்ப்பதாகவும் ரஷ்ய தூதுவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

http://www.eeladhesa...lle-nachrichten

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செசென்யா,  ஆப்கானிஸ்தான் ஜெநோசைட்களை நிறைவேற்றிய அனுபவம் பேசுது.

இலங்கைக்கெதிராக வாக்களித்த இந்தியாவுக்கு ரஸ்யா கண்டனம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கெதிரான பிரேரணைக்குஇ இந்தியா ஆதரவாக வாக்களித்தமை தொடர்பாக ரஷ்யா கண்டனம் வெளியிட்டுள்ளது.

புதுடில்லியில் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதேஇ இந்தியாவுக்கான ரஷ்ய தூதுவர் எலக்ஷேன்டர் எம். கடாகின் இதனைத் தெரிவித்துள்ளார்.

இச்சந்தர்ப்பத்தில் நேரடியாக இந்தியாவை விமர்சிக்காத போதிலும்இ இந்தியா இந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தமைஇ அரசியல் ரீதியான நோக்கத்தை அடிப்படையாக கொண்டது என சுட்டிக்காட்டினார்.

இன்னொரு நாட்டின் சுயநிர்ணய உரிமையில் மற்றுமொரு நாடு தாக்கம் செலுத்துவதை ரஷ்யா ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

http://news.lankasri.com/show-RUmqyDRcPdgx5.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.