Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரிட்டன் ஆயுதங்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்தததை ஜோன் ஸ்னோ உறுதிபடக்கூறுகின்றார்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

பிரிட்டன் ஆயுதங்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்தததை ஜோன் ஸ்னோ உறுதிபடக்கூறுகின்றார்.

Posted by சோபிதா on 12/07/2011 in செய்தி

சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய இலங்கையின் கொலைக்களங்கள் இதயத்தை பிழியும் அதிர்ச்சியான ஆவணப் படம் என பிரித்தானிய இன்டிபென்டன்ட் பத்திரிகை செய்திவெளியிட்டுள்ளது. போர்க்குற்றங்களின் ஆதாரமாகவும் மனிதத்துவத்திற்கு எதிரான குற்றச் செயல்களாகவும் நீதியைப் பெற்றுக்கொள்வதற்காக இந்தக் குற்றங்களை இழைத்தோரைக் கொண்டுவருவதற்கான வலுவான விடயமாகவும் இது இருப்பதாக இந்த ஆவணப்படத்தை சமர்ப்பித்த ஜோன் ஸ்னோ விபரித்திருக்கிறார் என்று பிரிட்டனின் த இன்டிபென்டன்ட் பத்திரிகையில் ஜோடிமக்லின் டயர் எழுதியுள்ளார்.

தமிழர்களின் துன்பங்கள் பற்றி நாம் ஏன் கவனம் செலுத்த வேண்டும் என்ற கேள்வியுடன் ஜோடி மக்லின் டயரின் கட்டுரை த இன்டிபென்டன்ற்றில் வெள்ளிக்கிழமை பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

2009 ஏப்ரலில் லண்டனில் பாரியளவில் இடம்பெற்ற தமிழர்களின் ஆர்ப்பாட்டங்களை நான் ஞாபகத்தில் கொள்கிறேன். இன படுகொலை இடம்பெறுவதாக பலர் கருத்துத் தெரிவித்தனர். நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கான தமிழ் சமூகம் பாராளுமன்ற சதுக்கத்தில் ஒன்றுகூடியது. பல தடவைகளில் பாராளுமன்றத்தின் சபைகள் முற்றுகைக்குள்ளாகின. வாரக்கணக்காக தமிழ்ச் சமூகம் சதுக்கத்தில் தங்கியிருந்தது. தமது குடும்பங்கள் எதிர்கொண்டுள்ள துன்பங்கள், அழிவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக அவர்கள் அங்கு குழுமியிருந்தனர். சில இரவுகளில் நானும் சதுக்கத்தில் உறங்கியிருக்கிறேன். குளிர்காற்றும் பனித்துளி நிறைந்த புல்வெளியிலும் அவர்கள் தீர்க்கமான உறுதிப்பாட்டுடன் குழுமியிருந்ததை காண முடிந்தது.

உலகின் வல்லமைவாய்ந்த நாடுகள் பலவற்றின் தந்திரோபாயமான ஆதரவை இலங்கை அரசு பெற்றுள்ளது என்று ஜோன் ஸ்னோ கூறுகிறார். மோதல் சூனிய வலயம் என்று அழைக்கப்பட்ட பகுதிக்குள் பொதுமக்கள் மீது ஷெல் தாக்குதல் தொடர்ச்சியாக நடத்தப்பட்டது என்பதை தொலைக்காட்சி கமராக்களில் ஏற்றுக்கொள்வதற்கு ஐ.நா. அதிகாரிகள் இப்போது அதிகளவு விருப்பத்தைக் கொண்டிருக்கின்றனர். பொதுமக்கள் சிறிய பகுதிகளுக்குள் நெரிசலாகக் காணப்பட்டனர். அவர்களை பாதுகாக்க முடியவில்லை.

இழப்புகளை அதிகரிக்கும் நோக்கத்தைக் கொண்டதாக இலங்கை இருந்ததாக ஆவணப்படத்தில் சாட்சியங்கள் பல கூறுகின்றன. மருத்துவ மனைகள் இலக்குவைக்கப்பட்டிருந்தன. காயமடைந்தோருக்கு உதவ முயற்சித்தோரும் இலக்காக்கப்பட்டனர். காஸாவில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையின் போது இஸ்ரேலிய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தந்திரோபாயத்தை ஒத்ததன்மை கொண்டதாக இது அமைந்திருந்தது.

இஸ்ரேலின் கிபீர் குண்டு வீச்சு விமானங்கள் இலங்கைக்குக் கிடைத்திருந்ததாக ஆவணப் படம் குறிப்பிடுகிறது. பொதுமக்களின் துன்பங்களை வெளிப்படுத்திய இந்த ஆவணப்படத்தை ஜோன்ஸ்னோவும் சனல் 4 உம் பகிரங்கப்படுத்தத் தீர்மானித்திருந்தன. ஆனால், இவற்றை ஏன் பிரிட்டிஷ் பொதுமக்களுக்குக் காண்பிக்க வேண்டுமென டெய்லி டெலிகிராவ் பத்திரிகைக்கான நிகழ்ச்சியில் செரீனா டேவிஸ் கேட்கிறார். தமிழ் மக்களின் துன்பத்திற்கு நாங்கள் பொறுப்பைக் கொண்டிருக்கவில்லையென அவர் வாதிடுகிறார். அவர்கள் மற்றொரு நாட்டின் உறுப்பினர்கள் எனவும் உலகின் மற்றொரு பக்கத்தில் உள்ளவர்கள் என்றும் முன்னாள் காலனியாக இருந்த இடத்தைச் சேர்ந்தவர்கள் உரிமை கோர முடியாதென்றும் அவர் கூறுகிறார்.

ஆகவே, நாங்கள் ஏன் கவனத்தில் கொள்ள வேண்டும். இதற்கு சில காரணங்களைக் கூறுகிறேன். முதலாவதாக 2009 இல் த டைம்ஸ் பத்திரிகையில் ஜெரமி பேஜ் செய்தியொன்றை வெளியிட்டிருந்தார். இலங்கை அரசாங்கத்திற்கு வர்த்தக விற்பனைக்காக பிரிட்டிஷ் அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியிருந்ததாகவும் கவச வாகனங்கள், இயந்திரத் துப்பாக்கிகள், தன்னியக்க பிஸ்டல்கள் உட்பட 13.6 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ஸுக்கும் அதிகமான தொகை விற்பனைக்கு அனுமதி வழங்கியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். தமிழ்ப் புலிகளுடனான யுத்தத்தின் இறுதி மூன்று ஆண்டு காலப்பகுதியில் இந்த விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதேவேளை, கொலைக் களங்கள் ஆவணப்படத்தில், பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்தததை ஜோன் ஸ்னோ உறுதிபடக்கூறுகின்றார். இந்த ஆயுதங்கள் தமிழ்ப் பொதுமக்களுக்கும் புலிகளுக்கும் இடையில் வேறுபாட்டை கண்டு கொண்டிருப்பது கடினமானதாகும். சகலரையும் கொன்று முடித்துவிடு என்று அந்த ஜோன் ஸ்னோவால் காண்பிக்கப்பட்ட ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக மோதலிலிருந்து தப்பி வெளியேறும் தமிழர்கள் நடத்தப்படும் விடயத்தை நாம் பரிசீலனைக்குக் கொள்ள முடியும். எமது வரிப்பணத்தினால் தயாரிக்கப்பட்ட சன்னங்களிலிருந்தும் தப்பி அவர்கள் பிரிட்டனுக்கு புகலிடம் நாடி வருகின்றனர்.

சனல் 4 ஆவணப்படத்தை வெளியிட்ட அதே தினத்தில் 40 இலங்கையர்கள் பிரிட்டனிலிருந்து நாடு கடத்தப்பட இருந்தனர். இலங்கை தொடர்பான உள்நாட்டு அமைச்சின் சொந்த அறிக்கையின் பிரகாரமே திருப்பி அனுப்பப்படுவதாக செய்தி ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது. யுத்தம் முடிவடைந்த போதிலும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்வதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன், காணாமல் போதல் நீதி விசாரணைக்குப் புறம்பான கொலைகள், கைதுகள், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு கட்டுப்பாடுகள் ஆகியவையும் இந்த அந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்தன.

பாராளுமன்ற சதுக்கத்தில் முகாமிட்டிருந்த தமிழ் மக்களை நான் பேட்டி கண்டேன். 2009 ஏப்ரலில் நான் அவர்களைச் சந்தித்தேன். வானம் இருளாக இருந்தது. கடும் குளிரான காலநிலை காணப்பட்டது. எனது கமராவை இளைஞர் ஒருவர் உற்றுப்பார்த்தார். அதன் பின் அவர் “இது உங்களின் குடும்பங்களாக இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?’ என்று என்னிடம் கேட்டார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.eelampress.com/2011/07/29944/

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.