24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
இலச்சினையில் யாழை உள்ளடக்குவது அவசியமற்றது. இங்கு சிலர் குறிப்பிடதுபோல் யாழ் என்பது வேறான அர்த்தத்தைக் கொடுக்கலாம். அத்துடன் பணப் பரிமாற்றம் செய்யப்படுவதால் சட்டச் சிக்கல்கள் உருவானால் அதற்கு யாழ் பொறுப்பேற்க முடியாது. முன்பு யாழில் உருவாக்கப்பட்டு பின்னர் தனியாகச் செயற்பட்ட நேசக்கரம் அமைப்பு போலவே தாயக உதவித் திட்டத்தில் பங்குகொள்ளும் உறுப்பினர்களின் தகவல் பரிமாற்றங்களுக்கான களமாக யாழ் உள்ளது. முன்னோடியும் எதிர்காலத்தில் வளர்ந்து தனியாகச் செயற்படலாம். தனிப்பட்ட முறையில் இலச்சினை தொடர்பான எனது கருத்து: இலங்கையைக் கை ஒன்று தாங்குவது போல் உள்ளது இலங்கை முழுவதுக்குமான உதவி செய்யும் அமைப்பு போல் காட்டியிருந்தாலும் இது வட கிழக்குக்கு மட்டுமானது. இலங்கை அவசியமானதா ? மலையகம் ஏன் தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளது ? செஞ்சிலுவையின் இலச்சினையை அவர்களின் அனுமதி இல்லாமல் பயன்படுத்த முடியுமா (நிறம் மாற்றப்பட்டிருந்தாலும்) ? புறா அமைதியையும் சமாதானத்தையும் குறிக்கிறது. இது அவசியமா ? செஞ்சிலுவை சின்னத்தை எடுத்துவிட்டால் இலச்சினை சுகாதார உதவியைப் பிரதிபலிப்பதாக இல்லை என்று தோன்றுகிறது. மக்கள் - சுகாதாரம் - உதவி ஆகிய மூன்றையும் பிரதிபலிப்பதாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
-
உக்ரைனுக்கான அமெரிக்க பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்த ஆவணம் கையொப்பமிடத் தயாராக உள்ளது என்று ஜெலென்ஸ்கி கூறுகிறார்.
2014 இல் கிரிமியால், பிரித்தானிய / அமெரிக்கா நீர்மூழ்கிகளை தரிக்க வைத்து, அந்த பகுதி ரஷ்யா கடல் இணைப்பை வெட்டுவோம் என்று எல்லோரும் உக்கிரன், us, uk, நேட்டோ, மேற்கு படம் காட்ட வெளிகிட்டு. (அதை பேச்சுவார்தையால் தீர்ப்போம் என்ற ரஷ்யாவின் முனைப்பை உதாசீனப்படுத்தி) இப்பொது ஒடேசா வை இழந்து தரையால் கட்டிடப்பட்ட நாடக உக்கிரைன் மாற இருக்கும் தருணத்தில், சேலன்ஸ்கிக்கு சுடலை ஞானம் பிறந்து இருக்கிறது. (அதை இந்கர் ராஜாதிகந்திரம் என்று சொல்வோர் சிலரும் உள்ளனர், சில கற்பனை கதைகளுடன்). ஒரு விதத்தில் வரலாறு மீட்கிறது, ஒட்டோமான் அரசை எப்படி ருசியா (அதுக்கு அந்த அச்சுறுத்தலை) மேவியது என்பதை பார்த்தல், இப்பொது நடப்பது மிகுந்த வேறுபாடு இல்லை. ஒட்டோமான் அரசுக்கு ஒப்பானது நேட்டோ.
-
ஈரான் போராட்ட வன்முறை : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,126 ஆக அதிகரிப்பு
ஈரான் போராட்ட வன்முறை : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,126 ஆக அதிகரிப்பு 27 Jan, 2026 | 12:47 PM ஈரானிய நாணயமான ரியால், அமெரிக்க டொலருக்கு எதிராக வரலாற்றிலேயே மோசமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. கடந்த டிசம்பர் 28ஆம் திகதி, ஒரு அமெரிக்க டொலருக்கு நிகரான ஈரானிய ரியால் மதிப்பு 1.42 மில்லியனாக சரிந்துள்ளதாக சர்வதேச நிதி சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கடும் நாணய வீழ்ச்சி, ஈரானில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கி அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டனர். போராட்டங்களை கட்டுப்படுத்த முயன்ற பொலிஸார் பல இடங்களில் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதுடன், பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல்கள் வெடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சில பகுதிகளில் இந்த மோதல்கள் வன்முறையாக மாறியுள்ளன. நிலைமை மேலும் மோசமடைந்ததையடுத்து, ஈரான் மத்திய வங்கியின் ஆளுநர் முகமது ரெசா ஃபர்சின் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அமெரிக்காவின் தொடர்ச்சியான பொருளாதாரத் தடைகள், அதிகரித்த பணவீக்கம் மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பெற்ரோல் விலை மாற்றம் ஆகியவையே தற்போதைய நெருக்கடிக்கு பிரதான காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன. தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்களால் ஈரானில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நிலைமையை கட்டுப்படுத்த அரசாங்கம் பல பகுதிகளில் இணைய சேவையையும் துண்டித்துள்ளது. இதனிடையே, ஈரானில் ஏற்பட்ட வன்முறைகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,000-ஐ கடந்துள்ளதாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், இதுவரை 6,126 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இன்னும் பலர் காணாமல் போயுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் எச்சரித்துள்ளனர். நிலைமை சீரடைய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ள போதிலும், ஈரானின் அரசியல் மற்றும் பொருளாதார எதிர்காலம் குறித்து உலக நாடுகள் கவலையுடன் கவனம் செலுத்தி வருகின்றன. https://www.virakesari.lk/article/237133
-
இன்று தனது 77 ஆவது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்தியா!
இந்தியாவின் 77வது குடியரசு தின நிகழ்வில் நாமல் ராஜபக்ஷ உரை! 27 Jan, 2026 | 02:20 PM இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள கலிங்கா தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனத்தில் (KIIT) நடைபெற்ற இந்தியாவின் 77வது குடியரசு தின விழாவில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ உரையாற்றியுள்ளார். இதன்போது, நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டதாவது, 2022ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போதும், 'டிட்வா' சூறாவளி பாதிப்பின் போதும் இந்தியா வழங்கிய உதவிகளுக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி. பேரிடர் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணிகளில் இருந்து இந்தியாவின் முன்னேற்றங்களை இலங்கை கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். இதன்போது, இந்தியா மற்றும் இலங்கை இடையே நிலவும் கிரிக்கெட் விளையாட்டு மற்றும் கலாசாரத் தொடர்புகளையும் நாமல் நினைவு கூர்ந்தார். விளையாட்டுத் துறையில் இளம் தலைவர்களை உருவாக்குவதற்கு இந்தியாவுக்கு பாராட்டையும் தெரிவித்தார். தலைமைத்துவம் என்பது பதவி அல்ல; அது ஒரு பொறுப்பு. பொதுவான இலக்குகளை அடைவதற்காக மற்றவர்களை ஊக்குவிக்கும் ஒரு செயல்முறை என மாணவர்களிடையே நாமல் கூறினார். https://www.virakesari.lk/article/237145
-
கிளிநொச்சியில் ரயில் விபத்தில் முதியவர் பலி!
கிளிநொச்சியில் ரயில் விபத்தில் முதியவர் பலி! 27 Jan, 2026 | 02:49 PM கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உதயநகர் பகுதியில் திங்கட்கிழமை (26) இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சைக்கிளில் புகையிரத கடவையை கடக்க முட்பட்ட முதியவர் ஒருவர், அனுராதபுரம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ்ராணி ரயிலுடன் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி ஆனந்தபுரம் சேர்ந்த 82 வயதுடைய முதியவரே பரிதாபகரமாக உயிரிழந்தார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/237150#google_vignette
- Today
-
யாழில் இந்திய குடியரசு தினம்!
அவர்களை உருவாக்கியவர்கள் யார் ?
-
காசாவில் போர் முடிவுக்கு வருகிறதா? : 251 பணயக்கைதிகளும் மீட்பு - இஸ்ரேல் அதிரடி அறிவிப்பு
காசாவில் போர் முடிவுக்கு வருகிறதா? : 251 பணயக்கைதிகளும் மீட்பு - இஸ்ரேல் அதிரடி அறிவிப்பு 27 January 2026 காசாவில், 843 நாட்களாக நீடிக்கும் போருக்கு மத்தியில், 251 பணயக் கைதிகளும் அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இறுதியாக, இஸ்ரேலிய இராணுவ வீரர் ரான் கிவிலியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இதன் மூலம், காசாவில் இருந்த 251 பணயக் கைதிகளும், உயிருடனும் உடலங்களாகவும் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். இந்தநிலையில், அமெரிக்கா, எகிப்து, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் பங்களிப்புடன் சர்வதேச அமைதிகாக்கும் படை காசாவில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ட்ரம்பின் சர்வதேச அமைதி திட்டத்தின் மேற்பார்வையில் காசாவை மீண்டும் கட்டியெழுப்பும் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://hirunews.lk/tm/443029/is-the-war-in-gaza-coming-to-an-end-251-hostages-rescued-israel-announces-action
-
யாழ்ப்பாண கோட்டை மீளமைப்பு தொடர்பில் சுமந்திரன் நேரில் ஆய்வு!
யாழ்ப்பாண கோட்டை மீளமைப்பு தொடர்பில் சுமந்திரன் நேரில் ஆய்வு! இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் M. A. சுமந்திரன், முன்னாள் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான செலஸ்ரின் அவர்களின் வேண்டுகோளின் பேரில் நேற்று (26) யாழ்ப்பாணக் கோட்டையைப் பார்வையிட்டார். 16 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்கள் கட்டிய இந்தக் கோட்டை, பின்னர் டச்சு மற்றும் பிரித்தானியர் காலனிய ஆட்சியில் விரிவுபடுத்தப்பட்டது. பல போர்களும், நீண்டகால அலட்சியமும் காரணமாக கோட்டை பெருமளவில் சேதமடைந்துள்ளது. கோட்டையின் உள்ளே அமைந்துள்ள Our Lady of Miracles (அற்புத மாதா) ஆலயம் காலப்போக்கில் ஏற்பட்ட சேதத்திலிருந்து இதுவரை சரியான முறையில் புதுப்பிக்கப்படவில்லை. ஆலயத்தின் சிதிலமடைந்த பகுதிகள் இன்றும் தெளிவாகக் காணப்படும் நிலையில் உள்ளது. புத்தசாசன அமைச்சின் கீழ் செயல்படும் தொல்லியல் துறை, கோட்டையின் உண்மையான எல்லைகளைத் தாண்டி பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள நிலங்களில் கட்டுமானங்களை மேற்கொண்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. யாழ்ப்பாண மாநகர சபைக்கு சொந்தமான முற்றவெளி விளையாட்டு மைதானம், முனீஸ்வரன் ஆலயம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், உள்ளூராட்சி அல்லது பொதுமக்களுடன் ஆலோசனை செய்யாது எல்லைச் சுவர்கள் அமைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்பட்டுள்ளது. கோட்டையை வரலாற்று அடையாளத்துடன் மீளமைக்க அரசு, முன்னாள் காலனிய நாடுகள், யாழ்ப்பாண மாநகர சபை மற்றும் யாழ்ப்பாண மக்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், கோட்டை வடக்கு மாகாணத்தின் முக்கிய சுற்றுலா தளமாக மேம்படுத்தப்பட வேண்டும் சுமந்திரன் அவர்களிடம் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் செலஸ்டின் அவர்கள் வலியுறுத்தினார். கடந்த சில வாரங்களில் கோட்டையின் வரலாற்றுச் சுவர்களிலிருந்து தூரமாக அமைக்கப்பட்டிருந்த Concrete தூண்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். பல மத மற்றும் பல பண்பாட்டு மரபுகள் இணைந்துள்ள வரலாற்றுத் தளங்களை புத்தசாசன அமைச்சின் கீழ் உள்ள தொல்லியல் துறை நிர்வகிக்கக் கூடாது; சுயாதீனமாக செயல்பட வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. இக்கருத்துகளை சுமந்திரன் அவர்கள் பொறுமையாகக் கேட்டு, கோட்டையின் பராமரிப்பில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடனும் கலந்துரையாடினார். https://adaderanatamil.lk/news/cmkw75asj04gto29n74r9shmn
-
ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் போராட்டத்தால் பதற்றம்
ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் போராட்டத்தால் பதற்றம் தமது சேவையை நிரந்தரமாக்குமாறு கோரி ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆரம்பித்துள்ள சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போது, பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது. இன்று (27) காலை அவர்கள் "நீதியின் மரணம்" எனக் குறிப்பிட்டு சவப்பெட்டியொன்றை எரித்ததுடன், அதனை உடனடியாக அகற்றுமாறு பொலிஸார் அறிவித்தனர். அத்துடன், இந்த உண்ணாவிரதப் போராட்டத்தினால் நடைபாதை தடைப்படுவதாக பொலிஸார் தெரிவித்ததையடுத்து, போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் தர்க்க நிலை ஏற்பட்டது. 7 வருடங்களாக பாடசாலைகளில் கற்பித்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள தங்களை ஆசிரியர் சேவையில் நிரந்தரமாக்குமாறு வலியுறுத்தி, ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று நேற்று (26) காலை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தது. எவ்வாறாயினும், அதற்கு முறையான பதில் கிடைக்காத காரணத்தினால் போராட்டக் குழுவின் நான்கு உறுப்பினர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் போராட்டத்தால் பதற்றம்தமது சேவையை நிரந்தரமாக்குமாறு கோரி ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆரம்பித்துள்ள சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போது, பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்
-
'கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்' தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்
'கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்' தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம் மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து, முன்னேற்ற புதிய சட்டம் மற்றும் அதிகார சபை நிறுவப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். டித்வா சூறாவளியால் சேதமடைந்த மதத் தலங்களை புனரமைப்பதற்கான 'கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்' தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று (27) முற்பகல் கம்பளை, தொரகல, பீகொக் ஹில் குடியிருப்பின் ஸ்ரீ போதிருக்காராம விஹாரையில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். அனர்த்தத்தைத் தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மத, கலாசார மற்றும் தொல்பொருள் தலங்கள் சேதமடைந்தன. அந்த இடங்களில் தேவையான புனரமைப்புப் பணிகளை உடனடியாகத் தொடங்கி அவற்றை முன்னர் இருந்த நிலைக்கு மீளக் கட்டியெழுப்புவதற்கான அனைத்து புனரமைப்புப் பணிகளையும், குறித்த இடங்களின் தொல்லியல் பெறுமதியைப் பாதுகாக்கும் வகையில் மகா சங்கத்தினர் உட்பட ஏனைய மதத் தலைவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து, முன்னேற்ற புதிய சட்டம் மற்றும் அதிகார சபை நிறுவப்படும் என்றும், கிராமப்புற வறுமையை ஒழிக்கவும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் அரசாங்கம் தற்போது அதிக பணிகளைச் செய்து வருவதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, முதலாம் தரத்திற்கான புதிய கல்வி மறுசீரமைப்புகள் 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், வரலாற்றில் முதல்முறையாக, இந்த பெப்ரவரி மாதத்தில் தோட்டத் தொழிலாளர்கள் 1,750 ரூபா நாளாந்த சம்பளம் பெறுவார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இவை அனைத்திற்கும் மத்தியில் சிறந்த மனித உறவுகளைக் கொண்ட ஒரு சமூகம் தேவை என்றும், அரச அதிகாரிக்கும் சேவைகளைப் பெற்றுக்கொள்ள வருகின்ற மக்களுக்கும் இடையிலான உறவு, மகா சங்கத்தினருக்கும் நிர்வாக சபைக்கும் இடையிலான உறவு, பாடசாலை ஆசிரியர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான உறவு உட்பட இந்த அனைத்து உறவுகளும் இன்று வீழ்ச்சிக்கு உள்ளாகி விட்டன என்றும், நாட்டை சமூக ரீதியாகக் கட்டியெழுப்ப, இந்த உறவுகள் அனைத்தும் மீண்டும் சிறந்த முறையில் பேணப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியதுடன், மகா சங்கத்தினர் உட்பட மதத் தலைவர்களுக்கு இந்த விடயத்தில் பெரும் பங்கு உண்டு என்றும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார். https://adaderanatamil.lk/news/cmkwc8s3m04hdo29nwrehsjm7
-
கருத்து படங்கள்
- பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஹெரோயினுடன் கைது
பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஹெரோயினுடன் கைது. பதுளை பொலிஸ் பிரிவின் குற்றத் தடுப்புப் பிரிவில் கடமையாற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் உத்தியோகத்தரிடமிருந்து 4 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அம்பகஸ்துவ பிரதேசத்தில் வைத்து அம்பகஸ்துவ பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இவர் சிக்கியுள்ளார். சம்பவம் தொடர்பில் அம்பகஸ்துவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2026/1461687- யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்களை சந்தித்த சர்வதேச இராஜதந்திரிகள்!
யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்களை சந்தித்த சர்வதேச இராஜதந்திரிகள்! பல்வேறு சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புகளின் பங்களிப்புகாக யாழ் மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களாகப் பணியாற்றும் பெண் அரசியல் தலைவர்களை சர்வதேச இராஜதந்திரிகள் நேற்றையதின்பம் (26) சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இலங்கைக்கான கனடா உயர் ஸ்தானிகர், மாலைதீவு உயர்ஸ்தானிகர் மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டம் UNDP துணை வதிவிடப் பிரதிநிதி ஆகியோரே குறித்த கலந்துரையாடலை முன்னெடுத்தனர். இதன்போது திறந்த மற்றும் சிந்தனைக்கான இடத்தை உருவாக்கல், பெண்களின் தலைமை பற்றிய உரையாடல், பொது அலுவலகங்களில் பெண்கள் நுழைவதற்கும் மற்றும் நிலைநிறுத்துவதற்கும் பெண்கள் தொடர்ந்து எதிர்கொள்ளும் தடைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இதன்போது பெண்களின் அரசியல் பங்கேற்பை முன்னேற்றுவதற்கு ஒத்துழைப்புக் கூட்டாண்மை மூலம் ஆதரவு அமைப்புகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவமும் உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1461683- பாதிரியார் ஒருவரைத் தாக்கிய சம்பவம்: பொலிஸ் அதிகாரிகள் மீண்டும் விளக்கமறியலில்!
கத்தோலிக்க பாதிரியாரை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஆறு பொலிஸ் அதிகாரிகளும் பணி நீக்கம்! கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, கம்பஹா பிராந்திய குற்ற விசாரணைப் பணியகத்தின் மோட்டார் சைக்கிள் படைப்பிரிவைச் சேர்ந்த 6 பொலிஸ் அதிகாரிகளும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் நேற்று (26) கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். அத்துடன், 29 ஆம் திகதி அடையாள அணிவகுப்பு நடத்தவும் நீதவான் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையிலேயே குறித்த சந்தேகநபர்கள் 6 பேரும் இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கத்தோலிக்கப் பிரிவின் கட்டுப்பாட்டில் உள்ள கொட்டதெனியாவவில் உள்ள ஒரு பண்ணையில் உதவி தோட்ட நிர்வாகியாகப் பணிபுரியும் அருட்தந்தை, திப்பிட்டிகொட தேவாலயத்தில் வழிபாட்டை நடத்திவிட்டுத் திரும்பும் போதே தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தின் போது குறித்த அருட்தந்தையை மோட்டார் சைக்கிள் போக்குவரத்து பிரிவைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கடுமையாகத் தாக்கிய நிலையில் அவர் நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2026/1461737- சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத வெளிநாட்டு பிரஜைகளிடம் வாகனங்களை கொடுப்பவர்களுக்கு சட்ட நடவடிக்கை
சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத வெளிநாட்டு பிரஜைகளிடம் வாகனங்களை கொடுப்பவர்களுக்கு சட்ட நடவடிக்கை. சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத வெளிநாட்டு பிரஜைகளிடம் வாகனங்களை செலுத்த கொடுக்கும் வாகன உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மாஅதிபர் டபிள்யு. ஜி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார். பொலிஸ் ஊடகப் பிரிவில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் இதனை தெரிவித்துள்ளார். நாட்டில் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், வீதி விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2026/1461768- லட்டு கொடுத்து குழந்தையைக் கடத்திய நபர்!
லட்டு கொடுத்து குழந்தையைக் கடத்திய நபர்! இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில், தன் குழந்தையுடன் தன் தாய் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த பெண்ணொருவருக்கு மயக்க மருந்து கலந்த லட்டு கொடுத்து நபர் ஒருவர் அவரது குழந்தையைக் கடத்திச் சென்றுவிட்டதாக பொலிசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்திலுள்ள அலிஹார் என்னுமிடத்திலிருந்து தன் 10 மாதக் குழந்தையுடன் தன் தாய் வீடான ஜார்க்கண்டுக்கு புறப்பட்டுள்ளார் . இதனிடையே ரயிலில் பயணித்துக்கொண்டிருந்த ஒருவர் அவருக்கு லட்டு ஒன்றைக் கொடுத்துள்ளார். இது தன் தாய் தன் கைப்பட செய்தது என்று கூறிய அந்த நபர், உதவியாக அவரது குழந்தையையும் தன் கையில் வாங்கிவைத்துக்கொண்டுள்ளார். சிறிது நேரத்தில் சுயநினைவிழந்துவிட்ட பெண், பின்னர் நினைவு திரும்பும்போது அந்த நபரையும் அவரிடமிருந்த தன் குழந்தையையும் காணவில்லை என்பதை புரிந்துகொண்டுள்ளார். இந்நிலையில் தன் குழந்தையைக் கடத்திச் சென்றுவிட்டதாக, அப்பெண், பொலிசாரிடம் புகாரளித்துள்ள நிலையில், CCTV கமெராக்களை ஆய்வு செய்த பொலிசார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://athavannews.com/2026/1461761- கொழும்பு பிரபல பாடசாலை மாணவனுடன் 3 ஆசிரியைகள் உல்லாசம்: வீடியோவால் சர்ச்சை
என்னுடைய கண்ணில், இந்த வீடியோ காட்சிகள் இன்னும் படவில்லை. 😂 சில வேளை... பொய் செய்தியாக இருக்குமோ. 🤣- இந்தியா - ஐரோப்பிய ஒன்றியத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்!
இந்தியா - ஐரோப்பிய ஒன்றியத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்! இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (Free Trade Deal) இறுதி செய்துள்ளன. இது இந்தியாவின் பரந்த சந்தையை ஐரோப்பிய ஒன்றியத்திற்குத் திறந்துவிடுவதுடன், உலகப் பொருளாதாரத்தில் சுமார் கால் பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பிரம்மாண்டமான பொருளாதாரக் கூட்டமைப்பை உருவாக்குகிறது. பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளதாகவும் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய வர்த்தகச் செயலாளர் ராஜேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய ஓன்றிய தலைவர் அன்டோனியோ லூயிஸ் சாண்டோஸ் டா கோஸ்டா ஆகியோர் டெல்லி வந்துள்ளதுடன், அங்கு இந்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவிலிருந்து வரும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் அழுத்தங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் உலகின் ஏனைய நாடுகளுடன் தங்களது மூலோபாய மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்த முனைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmkw9cw3d04h4o29n8adprqxz- 2025 ஆம் ஆண்டின் சிறந்த பயணப் புகைப்படக் கலைஞர் போட்டிக்கான முடிவுகள் அறிவிப்பு!
2025 ஆம் ஆண்டின் சிறந்த பயணப் புகைப்படக் கலைஞர் போட்டிக்கான முடிவுகள் அறிவிப்பு! உலகின் பல்வேறு மூலைகளில் உள்ள கலாசாரம், இயற்கை மற்றும் வாழ்வாதாரப் போராட்டங்களை அழகியலோடு வெளிப்படுத்திய ‘ஆண்டின் சிறந்த பயணப் புகைப்படக் கலைஞர்’ போட்டிக்கான முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு விருது பெற்ற புகைப்படங்கள் வெறும் காட்சிகளாக மட்டுமன்றி, வலிமையான கதைகளைச் சொல்லும் சாட்சியங்களாக அமைந்துள்ளன. சுமார் 160 நாடுகளைச் சேர்ந்த அமெச்சூர் மற்றும் தொழில்முறை புகைப்படக் கலைஞர்களிடமிருந்து 20,000 க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. 23 ஆவது ஆண்டாக நடைபெறும் இந்தப் போட்டியில், அசல் தன்மைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டது. செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட படங்களைத் தவிர்க்கும் பொருட்டு, வெற்றியாளர்கள் அனைவரும் தங்களது கெமராவின் அசல் கோப்புகளை சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. 16 சர்வதேச நிபுணர்கள் அடங்கிய குழு, புகைப்படக் கலைஞரின் பெயர் தெரியாத வண்ணம் இந்தத் தேர்வை மிகவும் நேர்மையாக நடத்தியுள்ளனர். இந்த விருதுபெற்ற புகைப்படங்கள் விரைவில் லண்டனில் உள்ள கண்காட்சியில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படவுள்ளன. https://athavannews.com/2026/1461615- வெறுப்புணர்வின் வெளிப்பாடு
வெறுப்புணர்வின் வெளிப்பாடு லக்ஸ்மன் அனுராதபுரம் ஸ்ரீ மகா போதியைக் கடந்து வழிபாட்டிற்காக யாழ்ப்பாணத்திற்கு வருவது 'வெறுப்பு' காரணமாகவே, ஒவ்வொரு 'போயா' தினத்திலும் யாழ்ப்பாணத்தின் ஓரிடத்தில் கூடிக் காணி கேட்டுப் போராடுவதும் வெறுப்புணர்வினாலேயே, இவ்வாறு போராடுபவர்களுக்கு அந்த இடத்தில் உண்மையில் காணிகள் இருக்கிறதா என்று ஆராயுமாறு புலனாய்வுப் பிரிவினருக்குத் பணிப்புரை விடுத்துள்ளேன் என்று ஜனாதிபதி அனுர யாழ்ப்பாணத்தில் கூறியிருந்தார். இதிலுள்ள மூன்று விடயத்தையும் ஒன்றாகவும் பார்க்கலாம். வெவ்வேறாகவும் விளக்கத்துக்குட்படுத்தலாம். ஆனால் இது தையிட்டி விகாரையை மையப்படுத்தியதாக மட்டுமே நகர்த்தப்பட்டு வருகிறது என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கொழும்பில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவைத் தவிர்த்து வடமாகாண பொங்கல் விழாவுக்காக யாழ்ப்பாணம் சென்றிருந்தமை பெரும் விமர்சனத்துக்குரியதாக இருந்தது. அங்கு நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசிய வெறுப்புணர்வு தொடர்பான விடயம் நாட்டில் களேபரமாக மாறி வருகிறது. பௌத்தமே முதன்மையான நாட்டில், விகாரைகளுக்கு வழிபாட்டிற்காக வருகை தரும் பௌத்தர்கள் மனதில் குரோத்துடன் வருகிறார்கள் என்ற கருத்துப்பட பேசியிருந்தார். அவர் இந்தக் கருத்தை வாபஸ் பெறுவாரா? இல்லையா? என்பது ஒருபுறம் இருக்க நாட்டின் முன்னாள் ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் உட்பட பல அரசியல் தலைவர்களும் ஜனாதிபதிக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் நிலை உருவாகி வருவதனை அவதானிக்க முடிகிறது. ஆனால்,ஒரு நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்கிறது என்பது மாத்திரம் வெளிப்படை. அதேநேரத்தில், அவருடைய கருத்துக்கு ஆதரவான கருத்துக்களும் வெளிவராமலில்லை. அது அவர்களுடைய அரசியலாகவும் இருக்கலாம். ஆனால், பௌத்தம் என்பது மனித குலத்துக்கு, அதன் வாழ்வியலுக்குத் தேவையான பல்வேறு நல்ல விடயங்களைக் கற்பிக்கின்ற ஒருமார்க்கம் என்ற அடிப்படையில் ஜனாதிபதி தனது கருத்தை முன்வைத்திருக்கலாம் என்ற அளவீட்டில் கடந்து போய்விட யாரும் தயாரில்லாத நிலை காணப்படுகிறது. இது மிக மோசமானதே. இலங்கையின் கடந்த கால வரலாறு ஜே.வி.பியின் இரண்டு ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகளுக்கும். தமிழ் மக்களின் சுய நிர்ணயப் போராட்டத்துக்கும் உட்பட்டிருக்கிறது. ஜே.வி.பி. தமது போராட்டத்தில் தோற்று, மண்டியிட்டு தற்போது அரசியல் ரீதியாக நாட்டைக் கைப்பற்றியிருக்கிறது. அதே நேரத்தில், தமிழ் மக்களின் ஆயுத ரீதியான போராட்டம் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. சுய நிர்ணய உரிமைக் கோரிக்கையுடன் அரசியல் ரீதியான போராட்டம் தொடர்ந்த வண்ணமிருக்கிறது. இந்த நிலையில் ஜே.வி.பி. தலைமையில் நடைபெறுகின்ற தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் தலைவரான ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெளியிடும் கருத்துக்கள் அரசாங்கத்தின் கருத்துக்களே என்ற வகையில் யாழ்ப்பாணத்தில் அவர் வெளியிட்ட கருத்தும் அரசின் கருத்தே என்பது மாத்திரம் உறுதியானது. அந்த வகையில்தான், ஜனாதிபதிக்கு எதிரான கருத்துக்கள் வெளியாவது, அவருக்கெதிராக நடவடிக்கை எடுக்கும்படி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்வதும் நடைபெற்று வருகின்றன. நாட்டில் நடைபெற்ற 'அரகலய' போராட்டம் ஒரு ஜனாதிபதியைப் பதவியிலிருந்து தப்பியோட வைத்திருந்தது. அதன்பின்னர் இலங்கை வரலாற்றில் நடைபெறாத பாராளுமன்றத் தெரிவுமூலம் நாட்டுக்கு ஜனாதிபதி ஒருவர் தெரிவானார். பின்னர் யாரும் எதிர்பார்த்திராத வகையில் பெரும்பான்மை தேசியக் கட்சிகளை மேவியவகையில் ஜனாதிபதியாக ஜே.வி.பியின் தலைவரான அனுரகுமார திசாநாயக்க தெரிவானார். அவர் பெரும்பான்மையற்ற வகையில் தெரிவானார் என்பது வேறுகதை. அதனையடுத்து நடைபெற்ற தேர்தலில் அவரது கட்சியே பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்திருக்கிறது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்போம், புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம். ஊழலற்ற நாட்டை உருவாக்குவோம். போதையற்ற நாட்டை எதிர்கால சந்ததிகளிடம் கையளிப்போம் என பல கோசங்களுடன் ஆட்சியைப் பொறுப்பேற்ற தேசிய மக்கள் சக்தி ஒருவருடத்தைக் கடந்த ஆட்சியில் சற்றுத் தீவிரமாகச் செயற்படுவதாகவே மக்கள் உணரத் தொடங்கியிருக்கின்றனர். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி அதிகாலையில் எழுந்து யாழ்ப்பாணத்தின் பிரதான வீதியில் உடற்பயிற்சிகளில் ஈடுபட்டார். சாதாரண மக்களுடன் உரையாடினார். இவையெல்லாம் சாதாரணமான செயற்பாடுகளாகப் போயின. அங்கு அவர் பேசிய பேச்சு விமர்சனத்துக்குள்ளானது. உண்மையில் ஜே.வி.பியின் செயற்பாடுகள் விமர்சிப்பதற்கும், ஆராய்வதற்கும் ஏற்ற வகையில் இருந்தாலும், சற்று வித்தியாசமுடனேயே இருக்கிறது என்று மக்கள் சிந்திக்கின்றனர். இருந்த போதிலும், ஏற்கெனவே அமைச்சுப் பொறுப்புக்களுடன் சிறிது காலம் இருந்த அனுபவம் உள்ளதாக ஜே.வி.பி. இருந்தாலும், தற்போதைய ஆட்சி சற்று வித்தியாசமானது என்பதனை அவர்கள் மறந்து விடுகிறார்களாக என்று எண்ணத் தோன்றுகிறது. அந்த ஒழுங்கில்தான், பௌத்தத்தை முதன்மைப்படுத்தியதான நாட்டில் ஜனாதிபதியும், அரசாங்கமும் அதனை அவமதிக்கிறது என்ற அரசியல் தரப்பினரது முன்வைப்புக்கள் தவறல்ல. ஆனால், இனவாதமற்ற, மத வாதமற்ற நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கம் கொண்ட இந்த அரசாங்கத்தின் செயற்பாட்டில் இந்த விமர்சனங்கள் பட்டை தீட்டலாக அமையக்கூடும். ஆனால், வங்குரோத்தாகியிருந்த நாட்டை, ஆட்சிக்கு வந்தவுடன் ஜனாதிபதி மீட்டெடுத்துவிட்டார் என்று கூறுமளவிற்கு நாடு மீட்சி பெறவில்லை என்பது மாத்திரம் உண்மை. காங்கேசன்துறை தையிட்டி திஸ்ஸ விஹாரைப் பிரச்சினை இன்னமும் முடிவுக்கு வரவில்லை. திருகோணமலையில் விகாரை அமைக்க முயன்ற பிக்குகள் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். வடக்கு கிழக்கின் பல பகுதிகளிலும் தொல்பொருள் தரப்பினர் தமது அடையாளங்களை நிறுவி வருகின்றனர். அது பிரச்சினையாகிக் கொண்டும் இருக்கிறது. தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் இப்போது தொடங்கியதல்ல. இது கடந்த ஆட்சிக்காலத்திலேயே தொடங்கி விட்டது. தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிக்குள் அடாத்தாக அமைக்கப்பட்டதே அந்த விகாரை என்பது அம் மக்களது போராட்டம். அதேபோன்று, தொல்பொருள் சின்னங்கள் நிறுவுதலும் நாட்டின் அடிப்படைச் சட்டத்தின் அடிப்படையில் நடைபெறுகிறது. பல்வேறு இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டதும் கடந்த ஆட்சிக் காலங்களிலேயே ஆகும். இருந்தாலும் பிரச்சினைகள் இந்த ஆட்சிக் காலத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த இடத்தில்தான், வடக்கு கிழக்கில் பௌத்தத்தை நிலைநாட்டத் துடிக்கும் பிக்குகளினதும் பௌத்த மதவாதச் சிந்தனையும் தமிழ் மக்களது விடயத்துக்குள் உரசிக் கொள்கின்றன என்று கூறலாம். திஸ்ஸ விஹாரை என்பது கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலம் வரை செல்லும் நீண்ட வரலாற்றைக் கொண்ட ஒரு பௌத்த விகாரையாகும். தேவநாம்பியதிஸ்ஸ மன்னன் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் இந்த விகாரை, கனிஷ்டதிஸ்ஸ, வோஹாரிகதிஸ்ஸ போன்ற மன்னர்களால் அபிவிருத்தி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தொன்மை வாய்ந்த புனிதத்தலம் வடக்கின் யுத்த காலத்தில் பாழடைந்து போனது என்ற நிலைமையொன்று உருவாகிறது. இந்த விகாரை யுத்தக் காலத்திற்கு முன்னர் செயற்பாட்டில் இருந்ததா? என்ற கேள்வியும் இருக்கிறது. இருந்தாலும். இதற்கென ஒதுக்கப்பட்ட நிலம் ஒன்று இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் திஸ்ஸ விஹாரைக்குச் சொந்தமான காணி தொடர்பான ஆவணங்கள் தம்மிடம் இருப்பதாகவும் நாகதீப விகாரையின் விகாராதிபதி வணக்கத்திற்குரிய நவந்தகல பதுமகித்தி ஹிமி தெரிவித்திருக்கிறார். ஆனால், அவரே தற்போது வாகாரை அமைந்திருக்கும் இடம் அதற்குரிய இடமல்ல என்றும் கூறியிருக்கிறார். எவ்வாறானாலும், போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன திஸ்ஸ விகாரை விவகாரம் அரசாங்கத்தால் சுமுகமாகத் தீர்க்கப்பட்டேயாகவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்றாலும், நாட்டில் பௌத்த மத்துக்கெதிராக ஜனாதிபதி கருத்து வெளியிட்டிருப்பதாக உருவாகியிருக்கும் பிரச்சினை திஸ்ஸ விகாரையால்தான் உருவானதென்று மட்டுப்படுத்திவிட முடியாது. இது காலங்காலமாக இருந்து வருவதேயாகும். அடிப்படையில் ஊட்டப்பட்டதாக இருக்கின்ற இந்த மனோநிலையை மாற்றியமைப்பதானது சிறு முயற்சியால் குறிப்பிட்ட காலத்தில் களைந்துவிடக்கூடியதல்ல என்பது உண்மையானதே. இருந்தாலும், வடக்கைப் பிரதானமாக மையப்படுத்தியதாகவே நகரும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அரசியல் செயற்பாட்டில் வடக்கு மக்களின் மனங்களை வென்றால் தமிழ் மக்களின் மனங்களையும் வென்றுவிடலாம் என்பது ஒரு எடுகோளாகும். அந்தவகையில், நடைபெறும் ஒரு அரசியலாக ஜனாதிபதியின் இந்த பௌத்த்துக்கு எதிரான என்று சொல்கின்ற கருத்தையும் நாம் கடந்துவிட முயலவேண்டும். எவ்வாறானாலும், 2009இல் யுத்தம் முடிவடைந்த கையோடு இராணுவ முகாம் இருந்த காணியில் இராணுவத்தினரால் தையிட்டி திஸ்ஸ விஹாரை கட்டப்பட்டது. பௌத்த பிக்கு ஒருவரை அழைத்து வந்து அங்கே தங்க வைக்க இராணுவம் நடவடிக்கை எடுத்தது. இந்த நடவடிக்கை தேசிய ரீதியில் முக்கியமானது. திஸ்ஸ விஹாரையை மீண்டும் நிறுவுவது இராணுவத்தின் ஒரு தேசியப் பணியே தவிர, அது ஒரு வெறுப்புணர்வுச் செயலல்ல என்ற சிந்தனை பெரும்பான்மை மக்களிடம் இருக்கையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கருத்து அவருடைய அரசியலாலேயே முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டும். இருந்தாலும் அந்தக் கருத்துக்கெதிராக உருவாகிவருகின்ற எதிர்ப்பலையானது வெறுப்புணர்வின் வெளிப்பாடென்றே முடிவுக்கு வரவும் வேண்டும். ஜனாதிபதி தனது கருத்தை வாபஸ் பெறுவாரா என்பதைப் பொறுத்தே அதற்கான முடிவும் கிடைக்கும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வெறுப்புணர்வின்-வெளிப்பாடு/91-371589- கொழும்பு பிரபல பாடசாலை மாணவனுடன் 3 ஆசிரியைகள் உல்லாசம்: வீடியோவால் சர்ச்சை
மாணவனுடன் 3 ஆசிரியைகள் உல்லாசம்: வீடியோவால் சர்ச்சை கொழும்பில் உள்ள ஒரு பிரபலமான பாடசாலை மாணவ தலைவருக்கும், பாடசாலையில் கற்பிக்கும் மூன்று பெண் ஆசிரியர்களுக்கும் இடையிலான நெருங்கிய உறவு மற்றும் சமூக ஊடகங்களில் பரவும் உறவின் வீடியோ காட்சிகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்விச் செயலாளர் நலகா கலுவேவா அப் பாடசாலையின் அதிபருக்கு பணித்துள்ளார். சமூக ஊடகங்களில் பரவும் வீடியோ காட்சிகள் குறித்து கல்வி அமைச்சு மிகுந்த கவனம் செலுத்தியுள்ளது என்றும் செயலாளர் கூறினார். சம்பவம் தொடர்பாக அதிபர் சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு, இது தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நலகா கலுவேவா கூறினார். அறிக்கை சமர்ப்பிக்கப்படும் வரை பெண் ஆசிரியர்களை இடைநீக்கம் செய்வதோ அல்லது வேறு எந்த ஒழுங்கு நடவடிக்கையோ எடுக்க முடியாது என்றும் செயலாளர் கூறினார். கொழும்பில் உள்ள அந்தக் கல்லூரியின் தலைமை மாணவர் என்று கூறிக்கொள்ளும் மாணவன், அவ்வப்போது அந்தக் கல்லூரியில் மூன்று பெண் ஆசிரியர்கள் மற்றும் மற்றொரு மாணவரின் தாயுடன் வீடியோ அழைப்புகளைச் செய்வதும், அவர்கள் நிர்வாணமாக பல்வேறு செயல்களில் ஈடுபடுவதும் போன்ற காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. https://www.tamilmirror.lk/செய்திகள்/மாணவனுடன்-3-ஆசிரியைகள்-உல்லாசம்-வீடியோவால்-சர்ச்சை/175-371627- தடை செய்யப்பட்ட தொழிலை நிறுத்த கால அவகாசம் கோரி வடமராட்சி கிழக்கில் சில கடற்தொழிலாளிகள் போராட்டம்!
தடை செய்யப்பட்ட தொழிலை நிறுத்த கால அவகாசம் கோரி வடமராட்சி கிழக்கில் சில கடற்தொழிலாளிகள் போராட்டம்! adminJanuary 27, 2026 யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு கடலில் உழவு இயந்திரத்தை பயன்படுத்தி கரை வலை தொழில் செய்ய தம்மை அனுமதிக்க வேண்டும் என கடற்தொழிலாளர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உழவு இயந்திரத்தில் இணைக்கப்பட்டுள்ள வீஞ்சு முறையிலான கரைவலைத் தொழிலை மேற்கொள்ள கடந்த காலத்தில் நீரியல்வளத் திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அரசாங்கத்தின் காலத்தில் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது எனவும் , உழவு இயந்திரம் உள்ளிட்ட தொழில் உபகரணங்களை தாம் பல இலட்ச ரூபாய் செலவில் வாங்கியுள்ளமையால் , தமக்கு கால அவகாசம் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அதேவேளை , வடமராட்சி கடற்பகுதியில் , வெளிமாவட்டங்களை சேர்ந்த கடற்தொழிலாளர்கள் வாடி அமைத்து தங்கி நின்று, உழவு இயந்திரங்களை பயன்படுத்தி , கரை வலை தொழில் செய்வதனால் , வடமராட்சி கிழக்கு பூர்வீக கடற்தொழிலாளர்கள் பலர் கரைவலை இழுக்கும் தொழில் இழந்துள்ளனர் உழவு இயந்திரங்கள் ஊடாக கரை வலை தொழில் செய்யும் போது , அனுமதிக்கப்பட்ட தூரத்தினை விட அதிக தூரம் சென்று வலைகள் இடப்படுவதால் , அப்பகுதியில் தொழில் செய்யும் வடமராட்சி கிழக்கு மீனவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதுடன் , இயந்திரம் மூலமான கரை வலை தொழிலால் , கடல் வளங்கள் அழிக்கப்படுவதுடன் , கடற்கரையில் உள்ள தாவரங்கள் கூட அழிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வரும் நிலையில் , இம்முறையே உழவு இயந்திரம் ஊடாக கரை வலை தொழில் செய்வதற்கு தடை விதித்து அதனை இறுக்கமாக கடற்தொழில் நீரியல் வளத்துறையினர் கண்காணித்து வருகின்றனர் இந்நிலையிலேயே உழவு இயந்திரம் ஊடாக கரை வலை தொழில் செய்வதனை நிறுத்த கால அவகாசம் கோரி சில கடற்தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2026/227571/- ஓய்வூதிய கொடுப்பனவை இரத்து செய்தால் அரசியல்வாதிகள் ஊழல் மோசடியில் ஈடுபடுவார்கள் - உதய கம்மன்பில
பெரிய கண்டுபிடிப்பு. ஓய்வூதியம் கொடுக்கும் போது… ஊழல் செய்யாமலா இருக்கிறார்கள்.- இலங்கை சுதந்திர நாளை கரி நாளாக வலியுறுத்தி வடக்கு கிழக்கில் நடைபெறவுள்ள பேரணிக்கு வலுச்சேர்க்குமாறு தாயக செயலணி அமைப்பினர் கோரிக்கை
சுதந்திர தினத்தை “கரி நாள்” எனப் பிரகடனம் செய்து வடக்கு–கிழக்கில் போராட்டம்: பொதுமக்களை அணிதிரட்டும் யாழ். பல்கலை மாணவர்கள் Published By: Vishnu 27 Jan, 2026 | 03:56 AM இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4 ம் திகதியை கரி நாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கில் போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அதற்கு பொதுமக்களை அணி திரட்டி வலுச்சேர்க்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு இன்று சென்ற மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் அங்குள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கங்கள், பொது அமைப்புகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் எதிர்வரும் சில தினங்களுக்கு வடக்கு கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களுக்கும் சென்று போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் குறித்த கலந்துரையாடலை முன்னெடுக்கவுள்ளனர். தமிழர் தேசத்தின் மீது நூற்றாண்டு கடந்தும் சூழ்ந்துள்ள பேரினவாதத்தீயிலிருந்து தமிழர் தாயகத்தை காத்திடவும், தலைமுறைகள் தாண்டிய இனத்தின் இருப்பிற்காகவும் வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டத்திலும் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் குறித்த போராட்டம் நடைபெறவுள்ளது. https://www.virakesari.lk/article/237095- ஓய்வூதிய கொடுப்பனவை இரத்து செய்தால் அரசியல்வாதிகள் ஊழல் மோசடியில் ஈடுபடுவார்கள் - உதய கம்மன்பில
ஓய்வூதிய கொடுப்பனவை இரத்து செய்தால் அரசியல்வாதிகள் ஊழல் மோசடியில் ஈடுபடுவார்கள் - உதய கம்மன்பில 26 Jan, 2026 | 06:20 PM (இராஜதுரை ஹஷான்) 1970ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் பாராளுமன்றத்துக்கு முன்பாக இருந்து ஐந்து ரூபா கடன் பெற்றார்கள். இதன் பின்னரே பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்தால் அரசியல்வாதிகள் தமது எதிர்காலத்தை கருத்திற்கொண்டு ஊழல் மோசடியில் ஈடுபடுவார்கள் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சிக் காரியாலயத்தில் திங்கட்கிழமை (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, தவறான எடுத்துக்காட்டாகவே பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் பிரபல்யமான தீர்மானத்தை எடுத்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் தீர்மானம் ஏன் எடுக்கப்பட்டது? ஏனைய நாடுகளில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதிய கொடுப்பனவு வழங்கப்படுகிறதா? ஏன் என்பதை ஆராயாமல் ஊழலை ஊக்குவிக்கும் வகையில் இந்த ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 1947 முதல் 1970 வரை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் 1970ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தார்கள். அதன் பின்னர் பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்கு முன்பாக இருந்து பாராளுமன்றத்துக்கு வருபவர்களிடம் ஐந்து ரூபா கடன் கேட்பார்கள். இதனை கண்டு தமது எதிர்கால நிலைமையின் அச்சுறுத்தல் மற்றும் ஊழல் ஆகியவற்றை கருத்திற்கொண்டு 1977ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதேபோல் சுதந்திர கல்வியின் தந்தையான கண்ணங்கர தான் வாழ்வதற்கு வழியில்லாமல் மாதாந்த கொடுப்பனவை வழங்குமாறு கோரி பிரதமர் டட்லி சேனாநாயக்கவுக்கு கடிதம் எழுதிய பிரபல்யமாக கதையும் உள்ளது. முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் அமைச்சரவை உறுப்பினராக இருந்த அமைச்சர் விமலா கண்ணங்கர வாழ்வில் இறுதி காலத்தில் வீட்டு வாடகை கூட செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். அவர் தமது சொந்த காணியை அரசாங்கத்துக்கு நன்கொடையாக வழங்கியிருந்தார். நாட்டுக்காக சேவையாற்றிய பலர் இன்றும் இந்த ஓய்வூதிய கொடுப்பனவில் தான் வாழ்கிறார்கள். பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்தால் சேவையில் உள்ள போது அரசியல்வாதிகள் ஊழல் மோசடி செய்து எதிர்காலத்துக்கு தேவையான நிதியை சேகரித்துக் கொள்வார்கள். ஆகவே பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்யும் தவறான தீர்மானத்தை எடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார். https://www.virakesari.lk/article/237078 - பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஹெரோயினுடன் கைது
Important Information
By using this site, you agree to our Terms of Use.