24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
சர்வதேச தாய்மொழி தினம் 2026 - பிரதம அதிதியாக பிரதமர் ஹரிணி
மொழிசார் பாரம்பரியத்தைப் பாதுகாப்பது கலாசாரப் பொறுப்பு மட்டுமல்ல, உலகின் பன்முகத்தன்மையைப் பேணுவதற்கான கூட்டு அர்ப்பணிப்புமாகும் - பிரதமர் 13 Mar, 2026 | 05:29 PM மொழிசார் பாரம்பரியத்தைப் பாதுகாப்பது என்பது ஒரு கலாசாரப் பொறுப்பு மட்டுமல்ல, எமது உலகின் பன்முகத்தன்மையைப் பேணுவதற்கான ஒரு கூட்டு அர்ப்பணிப்புமாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய, 2026 சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு இன்று (13) கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய கலை அரங்கில் நடைபெற்ற விசேட நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். இந்நிகழ்வு 'மொழிகள் இணைக்கின்றன; பன்முகக் குரல்கள், பகிரப்பட்ட மனிதநேயம்' (Languages Unite: Diverse Voices, Shared Humanity) எனும் தொனிப்பொருளில் நடைபெற்றது. இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கை கல்வி அமைச்சு ஆகியன இணைந்து ஐக்கிய நாடுகள் சபை, இலங்கை சாரணர் சங்கம் மற்றும் இலங்கை பெண் சாரணர் சங்கம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன. 2026 சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட ஓவியம், கட்டுரை மற்றும் குறும்படப் போட்டித் தொடர்களில் வெற்றிபெற்ற பாடசாலை மாணவர்களுக்கான சான்றிதழ்களும் விருதுகளும் இதன்போது பிரதமரால் வழங்கி வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், சர்வதேச தாய்மொழி தினம் என்பது மொழி, அடையாளம் மற்றும் மரியாதை ஆகியவற்றுக்கு இடையிலான ஆழமான தொடர்பை நினைவூட்டும் வலிமையானதொரு நாளாக அமைகின்றது. இந்த உலகளாவிய நினைவுகூரலானது பங்களாதேஷ் மக்கள் குடியரசின் தொலைநோக்கு சிந்தனையுடனான முயற்சியினால் உருவானதாகும். பங்களாதேஷின் இந்த முன்னெடுப்பானது, ஒரு தேசிய நினைவுகூரலை மனிதகுலத்தின் மொழிசார் பாரம்பரியத்தைக் கொண்டாடும் உலகளாவிய இயக்கமாக மாற்றியுள்ளது. இலங்கையின் மொழிப் பன்முகத்தன்மை எமது பல்லினப் பாரம்பரியத்தின் செழுமையைப் பிரதிபலிக்கிறது. இந்தப் பன்முகத்தன்மையானது முகாமைத்துவம் செய்யப்பட வேண்டிய ஒரு சவாலாகப் பார்க்கப்படாமல், மதிக்கப்பட வேண்டிய மற்றும் போற்றப்படவேண்டிய ஒரு பலமாகப் பார்க்கப்படவேண்டும். நாம் மொழி உரிமைகளைப் பாதுகாக்கும்போது, சமூக நல்லிணக்கத்தை வளர்க்கிறோம். பன்மொழிக் கல்வியை ஊக்குவிக்கும்போது, வருங்கால சந்ததியினரை பலப்படுத்துகிறோம். ஒருவருக்கொருவர் தமது சொந்த மொழிகளில் செவிமடுக்கும்போது, ஒருவருக்கொருவர் மனிதநேயத்தை உறுதிப்படுத்துகிறோம். பிளவுகள் எளிதில் வேரூன்றக்கூடிய இக்காலகட்டத்தில், மொழிப் பன்முகத்தன்மை மீதான மரியாதை, ஒத்துணர்வு மற்றும் ஒத்துழைப்பிற்கான ஒரு பாலமாக அமையும். தொழில்நுட்பம் வளர்ந்துள்ள டிஜிட்டல் யுகத்தில், இணையவெளியில் மொழிப் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து நாம் சிந்திக்கவேண்டும். உலகில் ஆயிரக்கணக்கான மொழிகள் இன்று அழியும் நிலையில் உள்ளன. கல்வி, தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ரீதியான ஆக்கபூர்வமான முயற்சிகள் இல்லையெனில், பல மொழிகள் மௌனமாகிவிடும் அபாயம் உள்ளது. எனவே, மொழிசார் பாரம்பரியத்தைப் பாதுகாப்பது என்பது ஒரு கலாசாரப் பொறுப்பு மட்டுமல்ல, எமது உலகின் பன்முகத்தன்மையைப் பேணுவதற்கான ஒரு கூட்டு அர்ப்பணிப்புமாகும். பல்லினத்தன்மை, கலாசாரப் புரிதல் மற்றும் மக்களுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துதல் போன்ற பகிரப்பட்ட அர்ப்பணிப்புகளுடன் இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான நட்பு மற்றும் ஒத்துழைப்பு தொடர்ந்து வளர்ந்து வருகிறது என பிரதமர் மேலும் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் Andalib Elias, பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி, பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்திரி, இலங்கை மற்றும் மாலைதீவுக்கான FAO பிரதிநிதி விமலேந்திர சரண், இலங்கை பெண் சாரணர் சங்கத்தின் தலைமை ஆணையாளர் கலாநிதி குஷாந்த ஹேரத், இராஜதந்திரிகள், இலங்கை சாரணர் மற்றும் பெண் சாரணர் சங்க உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார் https://www.virakesari.lk/article/240885
-
ஈரான் உச்ச தலைவர் குறித்து தகவல் வழங்கினால் 10 மில்லியன் அமெரிக்க டொலர் பணப் பரிசு – அமெரிக்கா அறிவிப்பு
ஈரான் உச்ச தலைவர் குறித்து தகவல் வழங்கினால் 10 மில்லியன் அமெரிக்க டொலர் பணப் பரிசு – அமெரிக்கா அறிவிப்பு Published By: Digital Desk 1 14 Mar, 2026 | 11:51 AM ஈரானின் புதிய உச்ச தலைவர் குறித்து தகவல் வழங்குபவர்களுக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர் பணப் பரிசு வழங்கப்படும் என அமெரிக்க அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு, ஈரான் நாட்டின் புதிய உச்ச தலைவராகக் கருதப்படும் மொஜ்தபா காமேனி மற்றும் அந்நாட்டு இராணுவ பிரிவான இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தொடர்பான தகவல்களை பெறுவதற்காக வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி, மொஜ்தபா காமேனி, துணை தலைமை அதிகாரி அலி அஸ்கர் ஹுஜாசி, மற்றும் பாதுகாப்புப் படைத் தலைவர் அலி லாரிஜானி ஆகியோரின் இருப்பிடத்தைப் பற்றிய நம்பகமான தகவல்களை வழங்குபவர்களுக்கு இந்த வெகுமதி வழங்கப்படும். உலகம் முழுவதும் பயங்கரவாத நடவடிக்கைகளை திட்டமிட்டு செயல்படுத்துவதாக குற்றச்சாட்டு முன்வைத்து அவர்களின் புகைப்படங்களையும் அமெரிக்கா வெளியிட்டுள்ளது. இதற்கிடையில், கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி தெஹ்ரான் நகரில் நடைபெற்றதாக கூறப்படும் அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டு தாக்குதலில் முன்னாள் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அவர் தற்போதைய தலைவர் மொஜ்தபா காமேனியின் தந்தை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் பின்னணியில் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈராக் நாட்டின் மேற்குப் பகுதியில் அமெரிக்காவின் எரிபொருள் நிரப்பும் இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி நொறுங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 6 வீரர்களில் 4 பேர் உயிரிழந்ததாக அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், அந்த விமானம் தங்களது தாக்குதலால் வீழ்த்தப்பட்டதாக ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது. எனினும், இந்த விபத்து எதிரிகளின் தாக்குதலால் ஏற்பட்டதல்ல என்றும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருக்கலாம் என்றும் அமெரிக்க இராணுவம் விளக்கம் அளித்துள்ளது. இதற்கிடையில், ஈரானுக்கு எதிராக வரும் நாட்களில் மிகவும் கடுமையான இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமெரிக்க ஜனாதிபத டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/240933
-
இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் உலக வங்கி கூடுதல் கவனம் - தென்னாசியாவுக்கான உப தலைவர்
இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் தொடர்பில் உலக வங்கி கூடுதல் கவனம் - உலக வங்கியின் தென்னாசியாவுக்கான உப தலைவர் 13 Mar, 2026 | 04:21 PM இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் தொடர்பில் உலக வங்கி கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதாக யாழ் வந்த உலக வங்கியின் தென்னாசியாவுக்கான உப தலைவர் ஜோஹன்னஸ் சுட் தெரிவித்தார். உலக வங்கியின் தென்னாசியாவுக்கான உப தலைவர் ஜோஹன்னஸ் சுட் தலைமையிலான உயர்மட்டக் குழுவினருக்கும், வடக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான அதிகாரிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (13) நடைபெற்றது. இந்த சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் தொடர்பில் உலக வங்கி தற்போது கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது எனவும் தனது இந்தக் களப் பயணத்தின்போது, வடக்கு மாகாணத்தில் எவ்வாறான வளங்களும் வாய்ப்புகளும் காணப்படுகின்றன என்பதை நேரடியாக அறிந்துகொள்ள முடிந்ததாக தெரிவித்தார். மேலும், இலங்கைக்கான உலக வங்கியின் உதவிகள் பிரதான 5 துறைகளின் கீழ் அமையவுள்ளன எனக் குறிப்பிட்ட அவர், முதற்கட்டமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள இத்திட்டங்கள் தொடர்பில் இம்மாதம் 31ஆம் திகதி நடைபெறவுள்ள உலக வங்கியின் முகாமைத்துவக் குழுக் கூட்டத்திலேயே இறுதித் தீர்மானம் எட்டப்படும் எனவும் சுட்டிக்காட்டினார். இவ்விசேட கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் (திட்டமிடல்), யாழ். மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளர், யாழ். மாநகர சபை ஆணையாளர், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/240890
-
இஸ்ரேல் - கட்டார் - துபாய் - அபுதாபி மீது ஈரான் தாக்குதல்
ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகில் ஏவுகணைத் தாக்குதல் Mar 14, 2026 - 10:55 AM ஈராக்கின் பாக்தாத்தில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரக வளாகத்திலுள்ள ஹெலிகொப்டர் தளத்தின் (Helipad) மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈராக் அரசாங்க நிறுவனங்கள் மற்றும் பல வெளிநாட்டுத் தூதரகங்கள் அமைந்துள்ள அதிஉயர் பாதுகாப்பு வலயமான 'கிரீன் சோன்' (Green Zone) பகுதியிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து, அமெரிக்கத் தூதரக வளாகத்திற்குள்ளிருந்து கரும்புகை வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், இந்தத் தாக்குதல் அல்லது அதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து பாக்தாத்திலுள்ள அமெரிக்கத் தூதரகம் இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை. https://adaderanatamil.lk/news/cmmpvs2z50005356pa8afmt5a
-
ஈரானின் கார்க் தீவில் அமெரிக்கா குண்டு வீச்சு : உலக எண்ணெய் சந்தையில் பதற்றம் அதிகரிப்பு
ஈரானின் கார்க் தீவில் அமெரிக்கா குண்டு வீச்சு : உலக எண்ணெய் சந்தையில் பதற்றம் அதிகரிப்பு Published By: Priyatharshan 14 Mar, 2026 | 10:10 AM ஈரான் நாட்டின் முக்கியமான எண்ணெய் உற்பத்தி மையமாகக் கருதப்படும் கார்க் தீவு (Kharg Island) மீது அமெரிக்கா சக்திவாய்ந்த குண்டுவீச்சு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து பல்வேறு இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், பதிலடி தாக்குதல்களை ஈரானும் வளைகுடா பிராந்தியத்தில் மேற்கொண்டு வருவதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடும் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் சர்வதேச வர்த்தகமும், குறிப்பாக எண்ணெய் சந்தையும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஈரானின் மிக முக்கியமான தீவு நகரமாகக் கருதப்படும் கார்க் தீவு மீது அமெரிக்கா சக்திவாய்ந்த குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தீவு, ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கான முக்கிய மையமாக விளங்குவதுடன், நாட்டின் சுமார் 90 சதவீத எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகள் இங்கிருந்தே நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவிக்கையில், ஈரானின் முக்கியமான இராணுவ இலக்குகள் கார்க் தீவில் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அதேவேளை, அந்த தீவில் உள்ள எண்ணெய் உள்கட்டமைப்புகளை அழிக்காமல் இருக்க தாம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், ஹார்மூஸ் நீரிணை வழியாக கப்பல்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் செல்வதற்கு ஈரான் அல்லது வேறு யாரேனும் இடையூறு ஏற்படுத்தினால், அந்த முடிவை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், “உலகம் இதுவரை பார்த்திராத அளவுக்கு சக்திவாய்ந்ததும் நவீன தொழில்நுட்பத்துடனும் கூடிய ஆயுதங்கள் அமெரிக்காவிடம் உள்ளன. நாங்கள் தாக்க விரும்பும் எந்த இலக்கையும் பாதுகாக்கும் திறன் ஈரானிடம் இல்லை” என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானின் முக்கியமான எண்ணெய் உற்பத்தி மையமாக விளங்கும் கார்க் தீவில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த தாக்குதல், உலகளாவிய எண்ணெய் விநியோகம் மற்றும் மத்திய கிழக்கு பாதுகாப்பு நிலைமை மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என சர்வதேச ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். https://www.virakesari.lk/article/240925
-
ஈரானுக்கு எதிரான போரிலிருந்து விலகிய இத்தாலி!
ஈரானுக்கு எதிரான போரிலிருந்து விலகிய இத்தாலி! Mar 14, 2026 - 10:48 AM ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் முன்னெடுக்கும் கூட்டு இராணுவ நடவடிக்கைகளுக்கு இத்தாலி இனி ஆதரவு வழங்காது என அந்த நாட்டின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார். இத்தாலி பாராமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது, மத்திய கிழக்கிலிருந்து தனது நாட்டுப் படைகளை மீளப்பெறவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். மத்திய கிழக்கிற்கு எதிரான போரில் இத்தாலி ஒருபோதும் பங்காளியாக இருக்காது எனவும், ஈரானுக்கு எதிரான போரில் இத்தாலி பங்கேற்காது எனவும் அவர் அங்கு மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். https://adaderanatamil.lk/news/cmmpv6i680004356pxug82e9s
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
“எங்கள் ஒவ்வொரு இரத்தத் துளிக்கும் பழி தீர்க்கப்படும்” – அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை! Published By: Digital Desk 1 14 Mar, 2026 | 10:45 AM மத்திய கிழக்கில் அமெரிக்காவுடன் தொடர்புடைய அனைத்து எண்ணெய் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகளையும் தாக்கி அழிப்போம் எனவும் “நாங்கள் சிந்தும் ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும் பழி தீர்க்கப்படும்” எனவும் ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்டு வரும் தாக்குதல்கள் காரணமாக மத்திய கிழக்குப் பகுதியில் கடும் பதற்ற நிலை உருவாகியுள்ளது. இதற்கு பதிலடியாக ஈரானும் வளைகுடா நாடுகளை நோக்கி தாக்குதல்களை மேற்கொண்டு வருவதால், சர்வதேச அளவில் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் பாதிக்கப்படுகின்றன. இந்த மோதல் காரணமாக உலகளாவிய வர்த்தக நடவடிக்கைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக மத்திய கிழக்குப் பகுதியிலுள்ள கடல் வழிப் போக்குவரத்து மற்றும் எண்ணெய் விநியோகத்தில் இடையூறுகள் ஏற்படும் அபாயம் குறித்து சர்வதேச வட்டாரங்கள் கவலை வெளியிட்டுள்ளன. இந்நிலையில், ஈரானின் புதிய தலைவராகக் கருதப்படும் மொஜ்தபா கமேனியின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை என்று இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஈரான் கடந்த நாள் முதல் தனது தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. அதற்கு பதிலடியாக அமெரிக்காவும் இராணுவ நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது. இந்த சூழலில், ஈரானின் மிக முக்கியமான தீவு நகரமாக விளங்கும் கார்க் தீவு மீது அமெரிக்கா சக்திவாய்ந்த குண்டு தாக்குதலை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த டொனால்ட் டிரம்ப், கார்க் தீவில் உள்ள முக்கியமான இராணுவ இலக்குகள் அனைத்தும் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதேவேளை, அந்த தீவில் உள்ள எண்ணெய் உள்கட்டமைப்புகளை திட்டமிட்டு அழிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், யாரேனும் ஹார்மூஸ் நீரிணை வழியாக கப்பல்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் பயணிப்பதைத் தடுக்க முயன்றால், இந்த முடிவை உடனடியாக மறுபரிசீலனை செய்ய நேரிடும் எனவும் எச்சரித்துள்ளார். மேலும், உலகம் இதுவரை கண்டிராத அளவுக்கு சக்திவாய்ந்த மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆயுதங்கள் அமெரிக்காவிடம் உள்ளதாகவும், தாங்கள் குறிவைக்கும் எந்த இலக்கையும் பாதுகாக்கும் திறன் ஈரானிடம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், மத்திய கிழக்கில் அமெரிக்காவுடன் தொடர்புடைய அனைத்து எண்ணெய் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகளையும் தாக்கி அழிப்போம் என ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. “நாங்கள் சிந்தும் ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் பழி தீர்க்கப்படும்” என ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், மத்திய கிழக்கில் போர் சூழ்நிலை மேலும் மோசமடையும் அபாயம் நிலவுகிறது. ஈரானின் மொத்த எண்ணெய் உற்பத்தியின் சுமார் 90 சதவீதம் கார்க் தீவு பகுதியிலிருந்தே நடைபெறுகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதால், மத்திய கிழக்கில் பதற்ற நிலை மேலும் தீவிரமடைந்துள்ளதாக சர்வதேச அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல் உலகளாவிய எண்ணெய் சந்தைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/240927
-
84 ஈரானிய மாலுமிகளின் உடல்களை ஈரானிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க உத்தரவு!
ஈரானிய மாலுமிகளின் சடலங்களை ஏற்றிய விமானம் மத்தளவிலிருந்து புறப்பட்டது Mar 13, 2026 - 11:29 PM இலங்கைக்கு தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்கு உள்ளான 'IRIS DENA' கப்பலில் பலியான 84 ஈரான் மாலுமிகளின் சடலங்களை ஏற்றிய விமானம் ஈரான் நோக்கிப் புறப்பட்டுள்ளது. மத்தள விமான நிலையத்திலிருந்து இன்று (13) இரவு 09.29 மணியளவில் இந்த விமானம் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள ஈரான் தூதரகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ், உயிரிழந்த மாலுமிகளின் உடல்களை அனுப்பிவைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. கடந்த மார்ச் மாதம் 04ஆம் திகதி காலி துறைமுகத்திலிருந்து 40 கடல் மைல் தொலைவில் இந்த ஈரான் கப்பல் விபத்துக்குள்ளானதுடன், அதில் சுமார் 180 பேர் இருந்தமை கண்டறியப்பட்டது. பின்னர் இதிலிருந்து மீட்கப்பட்ட 35 பேர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட டொர்பிடோ (Torpedo) ரக ஏவுகணை மூலம் சர்வதேச கடற்பரப்பில் வைத்து குறித்த ஈரான் கப்பல் மூழ்கடிக்கப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட்டர் ஹெக்செத் பின்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmmp7akps000f356p5y6enni0
- Today
-
நான் ரசித்த விளம்பரம் .
- இரசித்த.... புகைப்படங்கள்.
- போரை ஆதரித்த இரானியர்கள் இப்போது சந்தேகப்படும் விஷயம் என்ன?
இது அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான போர் அல்ல. இந்த நிலையில்.... புட்டினும் ரஷ்ய மக்களும் அமைதியாக தூங்கி ஒவ்வொரு நாட்களையும் இரசித்து வாழ்கின்றார்கள்.தாம் உண்டு.தம் வேலை உண்டு. உக்ரேன் மீதான சின்னஞ்சிறு சேட்டைகள் உண்டு.😎 பட்டுப்பாதையின் குறுக்கே வந்தவர்கள் அவஸ்தை படுகின்றார்கள். ஈரான் போர் வேண்டாம் என்றாலும் போர் நிற்காது.😁 அனைவருக்கும் ஒரு அரோகரா🙏- ஈரானுக்கு எதிரான போர் - அமெரிக்காவுக்கு ஏற்பட்ட செலவு
அமெரிக்காவிட்டையும்,ஐரோப்பாவிட்டையும் இல்லாத காசே? 11 பில்லியன் அவங்கள் பின்னேரம் கோப்பி,தேத்தண்ணி குடிக்க செலவழிக்கிற காசு. 😎 அவங்களை அசைக்கேலாது கண்டியளோ....- இந்தியாவிடம் எரிபொருள் கோரிய இலங்கை
ஐம்பது வருடத்திற்கும் மேலாக அதுதானே நடக்கின்றது.சிங்களம் இந்தியாவை நோக்கி காறித்துப்பும் போது...... நம்ம ரமில் பொலிற்ரிக்கஸ் கூலிங்கிளாஸ் போட்டுக்கொள்வார்கள்.- அதிமுகவில் இணைந்தார், நாம் தமிழர் கட்சி காளியம்மாள் - பழனிசாமி முன்னிலையில் ஐக்கியம்!
அத்திவாரத்தை விட்டுச்செல்லும் மனநிலையில் இருப்பவர்கள் தொடர்ந்து கட்சியில் இருந்தும் பயனில்லை. இப்படியான நடவடிக்கைகள் தமிழினத்திற்கு புதிதும் அல்ல. இலங்கை தமிழ் அரசியலிலும் இராசதுரை மற்றும் ஊர்காவல்துறையார் நல்ல உதாரணங்கள். அதே போல் கருணா,பிள்ளையான் போன்றோரின் நடவடிக்கைகளும் தகும். காளியம்மாள் தலைவர் படம் தாங்கிய புத்தகத்தை அதிமுக காரியாலத்திற்கு எடுத்துச்செல்லாமல் தவிர்த்திருக்கலாம். கொள்கை இல்லாதவர்களுக்கு தலைவர் படம் அரசியல் வியாபாரப்பொருள் அல்ல.- இந்தியாவிடம் எரிபொருள் கோரிய இலங்கை
தாங்கி கொள்வார்கள் சிறிலங்கா காறி துப்பினாலும்- Yesterday
- மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமனம்
வாழ்த்துக்கள். எனது தந்தையாரின் கல்லூரி. நேர்மையானவராய் இருப்பார் என நம்புகிறேன்.- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
விஜை பாஜக கூட்டணியில் சேர்கிறார்…அதனால்தான் இன்று இதயதெய்வம் திரிஷா அண்ணியார் டெல்லி கிளம்பினார் என பரபரக்கிறது சென்னை. “பாசிச பாஜக கொள்கை எதிரி”… இத கேட்டு சில்லறயெல்லாம் சிதற விட்டேன் என்று நினைக்கத்தான் 😂- அதிமுகவில் இணைந்தார், நாம் தமிழர் கட்சி காளியம்மாள் - பழனிசாமி முன்னிலையில் ஐக்கியம்!
பிஸ்கெட் போட்டவரை எந்நாளும் மறக்காது😂. சந்தித்து விட்டு, பத்திரிகையாளர் முன் வாசலில் நிற்பதால் பின் கதவால் தப்பி ஓடினவர். சீமானின் முதல் பெரிய வியாபாரம் ஜெக்கு #இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என பிரச்சாரம் செய்ததுதான். அதை ஏற்பாடு செய்தவர் சசி.- அதிமுகவில் இணைந்தார், நாம் தமிழர் கட்சி காளியம்மாள் - பழனிசாமி முன்னிலையில் ஐக்கியம்!
இவா ஊழல் மோசடி வழக்கில் வெளியே வந்த போது சீமான் அன்பாக சென்று சந்தித்தவர்😂- சுவிட்சர்லாந்தில் பேருந்து தீ விபத்து : யாழ் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!
ஆறு பேர கூட்டிப்போனால் 72 கன்னி இலவசம்.- ஈரானுக்கு எதிரான போர் - அமெரிக்காவுக்கு ஏற்பட்ட செலவு
மேற்கின் கதை முடிந்தது. எல்லாரும் பெட்டி படுக்கையோடு ஈரான், ரஸ்யா பக்கம் போங்கோ😂. #வெளிக்கிடடி விளாடிவாஸ்டொக்குக்கு😂- ஈரானுக்கு எதிரான போர் - அமெரிக்காவுக்கு ஏற்பட்ட செலவு
அமெரிக்கா / மேற்றுகின் ஆயுத உற்த்தி / கொள்வனவு மற்றும் அதன் செலவு / பொருளாதார model ஐயே புதைகுழியாக மாற்ற்றும் வியூகத்தை இரான் பாவிக்கிறது.- அதிமுகவில் இணைந்தார், நாம் தமிழர் கட்சி காளியம்மாள் - பழனிசாமி முன்னிலையில் ஐக்கியம்!
பயிற்சியாளரை போலவே அதிகமாய் கூறப்படும் விலைக்கு விற்கப்படும் போதே பயிற்சியின் சீத்துவம் புரிகிறது😂 என்னது தென்ந்தோப்பு சின்னமா? கங்கை அமரன் வீட்டை ஆட்டயப்போட்டது போல் அடுத்த முறை யாரின் தோப்போ😂- சுவிட்சர்லாந்தில் பேருந்து தீ விபத்து : யாழ் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!
தனக்கு தீ மூட்ட முடிவு எடுத்த இவர் ஒரு விளையாட்டு மைதானத்திற்கு சென்றோ அல்லது றோட்டிலியோ தனக்கு தானே தீ மூட்டிக்கொள்ள வேண்டியது தானே சாக்குகளை தன்னுடன் தூக்கி கொண்டு பஸ்சில் ஏறினாராம்- அதிமுகவில் இணைந்தார், நாம் தமிழர் கட்சி காளியம்மாள் - பழனிசாமி முன்னிலையில் ஐக்கியம்!
காளியம்மாள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைய இந்த எடப்பாடி பழனிசாமி முன்பு தவழ்ந்து சென்று காலில் விழுந்த சசிகலா அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் எள்று ஒரு புதிய கட்சி ஆரம்பித்துள்ளார். கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறங்களில், நடுவில் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் இடம்பெற்றுள்ள கட்சி கொடியையும் அறிமுகப்படுத்தினார். Daily Thanthiபுதிய கட்சியின் பெயர், சின்னத்தை அறிவித்தார் சசிகலாமறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலா, அதிமுகவுக்கு உரிமை கோரி வந்தார். அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டாலும் தானே பொதுச்செயல - இரசித்த.... புகைப்படங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.