24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
அனைத்து நாடுகளும் அமைதி வாரியத்தில் இடம்பெற விரும்புவதாக டிரம்ப் கருத்து
- ஈரானை நோக்கி அமெரிக்கக் கடற்படை சென்று கொண்டிருப்பதாக ட்ரம்ப் தெரிவிப்பு!
- Today
- கருத்து படங்கள்
- ஈரானை நோக்கி அமெரிக்கக் கடற்படை சென்று கொண்டிருப்பதாக ட்ரம்ப் தெரிவிப்பு!
ஈரானை நோக்கி அமெரிக்கக் கடற்படை சென்று கொண்டிருப்பதாக ட்ரம்ப் தெரிவிப்பு! ஈரானை நோக்கி ஒரு பிரம்மாண்டமான அமெரிக்கக் கடற்படை சென்றுகொண்டிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது என்று நம்புகிறேன் என டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் போர் பதற்றத்துக்கு மத்தியில் ன அமெரிக்கக் கடற்படை சென்றுகொண்டிருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இந்த நகர்வை உலக நாடுகள் அச்சத்துடன் உற்று நோக்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் நாட்டின் நிதி நிலைமை மோசமாகி பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ‛முல்லா கண்டிப்பாக போ’ என்ற கோஷத்துடன் ஈரானின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு ஈரானின் பரமஎதிரிகளாக உள்ள இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஈரானின் அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் 3,117 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது ஆர்ப்பாட்டங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை குறித்து வெளியிடப்பட்ட முதல் அதிகாரபூர்வ அறிவிப்பாக இது அமைந்துள்ளது. நேற்று ஈரான் மீது ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்கு முழு சக்தியுடன் பதிலடி கொடுக்கப்படும் என ஈரானின் வெளியுறவு அமைச்சர் முதன்முறையாக அமெரிக்காவுக்கு நேரடி மிரட்டல் விடுத்திருந்தார் இவ்வாறான பின்னணியில், எதிர்வரும் நாட்களில் விமானம் தாங்கி போர்க்கப்பல், பல ஏவுகணை அழிக்கும் போர்க்கப்பல்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லுமெனவும் கூடுதல் வான் பாதுகாப்பு அமைப்புகள் தொடர்பில் பரசீலிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://athavannews.com/2026/1461114- உக்ரைன்-ரஷ்யா-அமெரிக்கா இடையே முதல் முத்தரப்பு பேச்சுவார்த்தை: ஐக்கிய அரபு அமீரகத்தில் சந்திப்பு
உக்ரைன்-ரஷ்யா-அமெரிக்கா இடையே முதல் முத்தரப்பு பேச்சுவார்த்தை: ஐக்கிய அரபு அமீரகத்தில் சந்திப்பு உக்ரைன் ரஷ்யா போர் தொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தை ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல் முறையாக நடைபெற உள்ளது. உக்ரைன் - ரஷ்யா போர் நிறுத்தம் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அரசு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் அலாஸ்காவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை நேரடியாக சந்தித்து போர் நிறுத்தம் தொடர்பாக டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். இருப்பினும் தீர்வுகள் எதுவும் எட்டப்படாத நிலையில், நேற்று சுவிட்சர்லாந்தின் தவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி சிறப்பு நேரடி சந்திப்பு ஒன்றை நடத்தினர். முதல் முத்தரப்பு பேச்சுவார்த்தை இந்நிலையில், போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் - ரஷ்யா - அமெரிக்கா இடையே முதல் முறையாக முத்தரப்பு பேச்சுவார்த்தை ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்க இருப்பதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார். இந்த சந்திப்பின் மூலம் அமெரிக்கா, உக்ரைன், ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளை சேர்ந்த அதிகாரிகள் முதன்முறையாக நேரடியாக அமர்ந்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இதற்கிடையில் அமெரிக்க அதிகாரிகள் இருவர் மாஸ்கோவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். முன்னதாக பொருளாதார மாநாட்டில் பேசிய ஜெலென்ஸ்கி, உக்ரைன் ஒரு சுழற்சியில் சிக்கி இருப்பதாகவும், ஐரோப்பிய நாடுகள் பேச்சுவார்த்தையில் ஆர்வம் காட்டுகிறதே தவிர வேறு எந்தவொரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். https://news.lankasri.com/article/trilateral-talks-for-ukraine-war-in-saudi-1769139699- பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை - மஹாபாரத கதைகளின் தொகுப்பு
அஸ்வத்தாமனின் கோபம் மூலம் : யமுனா ஹர்ஷவர்தனா தமிழாக்கம் : கார்த்திக் பாண்டவர்கள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த மத்ஸ்ய தேசத்தை கௌரவர்கள் தாக்கிய சமயத்தில் அவர்களை எதிர்கொள்ள மத்ஸய தேசத்துப் படைகளோ தளபதிகளோ அங்கே இல்லை. தேசத்தின் மற்றொரு எல்லையில் பகைவனை எதிர்த்து சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். எனவே அனுபவமற்ற இளவசரன் உத்திரகுமாரனே போர்க்களத்திற்கு செல்ல வேண்டி இருந்தது. ஒரு அலியாக உருமாறி அரசவை பெண்டிருக்கு நாட்டியம் கற்பித்துக் கொண்டிருந்த அர்ஜுனன் அவனுக்கு ரதமோட்டினான். உத்திரகுமாரனுக்கு தைரியம் ஊட்ட தான் யார் என்பதை அவனுக்கு கூறினான் அர்ஜுனன். அதன்பின், தான் மறைத்து வைத்திருந்த தேவதத்தம் என்ற தன் சங்கை எடுத்து சங்கநாதம் முழங்கி, தன் வில்லான காண்டீபத்தை நாணை சுண்டினான். இரு சப்தங்களையும் கேட்ட துரோணர் உடனடியாக அவற்றை கண்டுகொண்டார். துரியனை நோக்கி “துரியோதனா! நாம் கைப்பற்றிய கால்நடைகளை பாதுகாப்பாக ஒட்டிக்கொண்டு நாடு திரும்புவது நல்லது. இல்லையனில் அர்ஜுனன் நம்மை தோற்கடித்து இவற்றை மீண்டும் கைப்பற்றி சென்றுவிடுவான்” என்றார். “ஆச்சார்யரே! படையினரை மனம் தளர வைக்குமாறு ஏன் இப்படி பேசுகிறீர்கள்? கால்நடைகளைக் கைப்பற்றுவது நம் நோக்கமில்லை என்பது உங்களுக்கு தெரியும். முடிவதற்குள் நாம் அம்பலப்படுத்தினாலும் அவர்களை மீண்டும் பன்னிரெண்டு வருடம் வனவாசம் அனுப்பிவிடுவேன் . எனவே எதிர்காலத்தை உத்தேசித்து இப்பொழுது அர்ஜுனனை அவர்களை தாக்குவோம்” என துரியோதனன் வேண்டினான். அவர்களை இடைமறித்த கர்ணன் “வேண்டுமானாலும் ஆச்சார்யரின் வார்த்தைகளை கேட்டு மனம் தளரலாம். ஆனால், நான் பயப்படவில்லை. எதிரே இருப்பது இந்திரனாக இருந்தாலும் நான் தயாராக இருக்கிறேன். இந்த தருணத்திற்காக கடந்த பதிமூன்று வருடங்களாகக் காத்திருக்கிறேன். என் வில்லில் இருந்து அலையென கிளம்பும் அம்புகள் அவர்களை துளைக்கப் போவதை பார்க்கக் காத்திருங்கள்” என கர்வத்துடன் கூறினான். “போர் இன்றி நல்லது நடக்க வாய்ப்பிருக்கும் பொழுது, சண்டையிட நீ ஏன் இவ்வளவு ஆர்வமாக இருக்கிறாய்? தனி ஒருவனாக அர்ஜுனன் எதிரிகளை பலரை தோற்கடிக்க இயலும் என்பதும் உன்னால் அது இயலாது என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றே. கந்தர்வர்கள் துரியோதனனை பிடித்து சென்றபொழுது யார் விட்டுவிட்டு ஓடினார்கள் என்பதும் யார் அவனை காப்பாற்றினார்கள் என்பதும் உள்ளதா? நாம் அனைவரும் சேர்ந்து அவனை எதிர்ப்பதே வெற்றியை தரும்” என க்ருபாச்சாரியார் கூறினார். இது கர்ணனை கோபத்திற்குள்ளாகியது. “துரியோதனா! அர்ஜுனனை கண்டு க்ருபாச்சார்யார் பயந்து விட்டார் போல. சடங்குகளை செய்யும் பொழுதும், தானங்கள் கொடுக்கும் பொழுதும் மட்டுமே ப்ராமணர்களிடம் ஆலோசனை கேக்க வேண்டும். போரின் பொழுது ஆலோசனை கேக்கக் கூடாது !” என துரியனிடம் கர்ணன் கூறினான். இதை கொண்டிருந்த அஸ்வத்தாமன் மிகுந்த கோபத்திற்கு உள்ளானான். “துரியோதனா! பசுக்களை காக்க நீ எதுவும் செய்யவில்லை. கர்ணா! வெட்டி பேச்சு பேசாதே! ப்ரமாணர்கள் நல்லறிவும், அடக்கமும் கொண்டவர்கள். எனவே அவர்கள் தம்பட்டம் அடித்துக் கொள்வதில்லை. நீ இதுவரை என்ன செய்துவிட்டாய் என இப்படி பேசுகிறாய்?” “துரியோதனன் ராஜ்யத்தை என்ன போரிலா வென்றான்? தர்மரை பகடையில் சூழ்ச்சி செய்து வென்றான். அதுவும் அவன் ஆடவில்லை . அவனுக்கு பதில் சகுனி ஆடினார். அது சத்ரியனுக்கு அழகா? இப்பொழுது “அவன் ராஜ்ஜியம்” என பேசுகிறான்.” “எதிரிகளின் வலிமையை அங்கீகரிக்கக் கற்றுக் கொள். பாண்டவர்கள் உண்மையில் வலிமையானவர்கள்தான். மற்ற எவரின் துணையும் இன்றி, இந்திரனின் சேனையைக் கூட எதிர்கொள்ளக் கூடியவர்கள். அர்ஜுனனைப் பற்றி சொல்ல புதிதாய் ஒன்றுமில்லை. உனக்கே தெரியும் அவனை உன்னால் தோற்கடிக்க இயலாதென. வெறும் வாய்ச்சவடால் விடுவதை நிறுத்து!” “என் தந்தையும், மாமாவும் சொன்னது பயத்தினால் அல்ல. அவர்களின் வலிமையை அறிந்ததால். ஒருவரை புகழ வேண்டிய சமயத்தில் புகழ்வது தவறல்ல. கர்ணா! அவன் மேல் உனக்கு இருக்கும் பொறாமை அவனை சிறியவனாக்காது” என கோபத்துடன் கூறிய அஸ்வத்தாமன் வில்லைக் கீழே எறிந்து விட்டு ரதத்தில் அமர்ந்து கொண்டான். இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பீஷ்மர் தலையிட்டு “துரியோதனா! துரோணரும், க்ருபாச்சார்யரும் கூறியதெல்லாம் உண்மைதான்.அர்ஜுனனை தோற்கடிப்பது என்பது மிகக் கடினமான ஒன்றாகும். அஸ்வத்தாமனின் கோபமும் சரியான ஒன்றாகும். ஆனால், அஸ்வத்தாமா! படையினரை உற்சாகமூட்டவே கர்ணனும், துரியனும் அவ்வாறு பேசினார்கள். அதனால் கோபம் கொள்ளாதே! நாம் அனைவரும் இணைந்து போரிடுவோம்” என அனைவரையும் சமாதானப்படுத்தினார். இதனால் ஓரளவு சமாதானம் அடைந்த அஸ்வத்தாமன் “துரியோதனுனும், கர்ணனும் தன் தந்தையிடமும், மாமாவிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்” என வலியுறித்தினான். சூழ்நிலையின் அவசியத்தை உணர்ந்த துரியோதனனும், கர்ணனும் ஆச்சார்யர்கள் இருவரின் மன்னிப்பை வேண்டினார்கள். “பீஷ்மர் பேசியபொழுதே என் கோபம் போய்விட்டது. நாம் இப்பொழுது செய்யவேண்டியது அனைவரும் இணைந்து அர்ஜுனன் துரியோதனனை தாக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டியது அவசியம். ஏனென்றால், தற்பொழுது அவன் மேல் அர்ஜுனனின் கோபம் கட்டுக்கடங்காமல் இருக்கக் கூடும். அதேபோல் , அவர்கள் தலைமறைவாய் இருக்கவேண்டிய காலம் முடிந்துவிட்டது. எனவே , அவர்களை வெளிப்படுத்தினாலும் நாம் ஒன்றும் செய்ய இயலாது” என துரோணர் கூறினார். இதைக் கேட்டு குழப்பம் அடைந்த துரியன் பீஷ்மரை பார்த்தான். அவரும் துரோணர் கூறியதை ஆமோதித்தார். அத்துடன் துரியனின் படையெடுப்பின் நோக்கம் ஒன்றுமில்லாமல் ஆனது. கண் திறந்த தருணம் . .. பிறப்பிலேயே குருடனாக பிறந்த திருதராஷ்டிரனுக்கு மனைவியாக காந்தாரா நாட்டு இளவரசி காந்தரியை கேட்டு தூது அனுப்பினார் பீஷ்மர். காந்தார அரசனுக்கு தன் மகள் ஒரு குருடனுக்கு இல்லை. ஆனால், காந்தாரியோ குரு வம்ச இளவரசனான திருதராஷ்டிரனனை மனப்பூர்வமாக சம்மதித்தாள். திருமணம் முடிந்தவுடன் தன் கணவனின் கஷ்டத்தில் தானும் பங்கு கொள்ளவேண்டி தன் கண்களையும் துணியால் கட்டிக்கொண்டாள். அதன் பின், ஒரே ஒரு முறை மட்டுமே தன் கண் கட்டை அவிழ்த்தாள் . அவளுடைய இந்த தவத்தினால் அவளுடைய கண்களுக்கு விசேஷ சக்தி கூடியது. குருஷேத்திர போரின் பொழுது, துரியன் பீமனால் கொல்லப்பட்டுவிவிடுவானோ என்ற பயத்தில் அவனைக் காப்பாற்ற தன் சக்தியை உபயோகிக்க முடிவு செய்தாள். அவனை சந்திக்க முடிவு செய்து, கங்கையில் குளித்து ஈர உடலுடன் பிறந்தமேனியாக தன்னை சந்திக்க அனுப்பினாள். அந்த கோலத்தில் துரியனை காந்தாரி சந்தித்தால், துரியன் வீழ்த்தப்பட முடியாத அளவிற்கு பலம் பெற்றுவிடுவான் என ஊகித்த கிருஷ்ணன், கங்கையில் குளித்து அன்னையை சந்திக்க சென்றுக் கொண்டிருந்த துரியனை வழிமறித்தான். “துரியோதனா! உன் ஆடை எங்கே? ஆடைகளுடன் உன் வெட்கத்தையும் கழற்றி எறிந்து விட்டாயா? பிறந்தமேனியாக எங்கே சென்றுக் கொண்டிருக்கிறாய்?” “கிருஷ்ணா! என் அன்னையை காண அவர் இட்ட கட்டளைப்படி நிர்வாணமாக செல்கிறேன். அன்னை முன் நான் நாண வேண்டும்?” “துரியோதனா! நீ இப்பொழுது வளர்ந்த மனிதன். அன்னையே என்றாலும், அவள் முன் நிர்வாணமாக இருக்க முடியும்?” இதைக் கேட்ட துரியோதனனுக்கு வெட்கம் தோன்றியது. அருகே இருந்த வாழை மரத்தில் இருந்து வாழை இலையை வெட்டி, தன் இடுப்பை சுற்றிக் கட்டிக்கொண்டான். அவன் தொடைகளையும் அது மறைத்தது. தன் முன் துரியோதனன் வந்து நின்றவுடன் தன் கண் கட்டை அவிழ்த்து அவனைப் பார்த்த காந்தாரி, இடையில் அவன் வாழை இலை அணிந்து வந்ததால் அதிர்ச்சி அடைந்தாள். மேலும் , பீமன் துரியனின் தொடை பிளந்து கொல்வேன் என சபதம் எடுத்ததையும் அவள் அறிவாள். துரியனின் இந்த செய்கை, அவளது சக்தியை முறியடித்தது. இனி, தன் சக்தியால் அவனை காப்பாற்ற என்பதை புரிந்து கொண்டாள். https://solvanam.com/2025/09/15/அஸ்வத்தாமனின்-கோபம்/- கல் வியாபாரத்திற்காக அழிக்கப்படும் காதலியார் சமளங்குளம்
கல் வியாபாரத்திற்காக அழிக்கப்படும் காதலியார் சமளங்குளம் கட்டுரை | North East Narrative படம் | T.Ravikaran முல்லைத்தீவு மாவட்டத்தில், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் இருக்கிறது காதலியார் சமளங்குளம் எனும் கிராமம். வன்னிப் பெருநிலப் பரப்பிலிலிருந்து ஆங்கிலேயர்களோடு போரிட்டு வீரமரணமடைந்த குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியனின் வரலாற்றோடு தொடர்புபடும் இந்தக் கிராமானது விவசாயத்திற்கும், கால்நடை வளர்ப்பிற்கும் பெயர்பெற்றதாகும். இலங்கையின் வடமாகாணத்தில் இருக்கின்ற வன்னிப் பெருநிலப் பரப்பு இயற்கை வளங்களால் நிரம்பப்பெற்றது. வனமும் நிலமும், கடலும் குளமும், மணலும் மலையும், பெருநிலத்தின் அடையாளங்களாக இருக்கின்ற இயற்கை வளங்கள். வன்னிப் பெருநிலப் பரப்பை இலங்கை அரச படைகள் கைப்பற்றுவதற்கு முன்னர், தமிழீழ விடுதலைப் புலிகளே நிர்வாகம் செய்தனர். அக்காலப் பகுதியில் வன்னி பெருநிலப்பரப்பிலிருந்து அனைத்துவிதமான இயற்கை வளங்களும் எதிர்கால சந்ததிக்காகப் பாதுகாக்கப்பட்டன. வன்னிப் பெருநிலத்தின் பெரும்பகுதியை நிரப்பியிருக்கும் காட்டிலிருந்து ஒரு சிறு மரத்தைத் வெட்டுவதாயினும் புலிகளின் வனவளப் பிரிவினரிடம் அனுமதி பெறவேண்டியிருந்தது. அனுமதி பெறாது மரங்களை வெட்டியோர் சிறைத்தண்டனை வரை அனுபவிக்கவேண்டியுமிருந்தது. 2009 ஆம் ஆண்டில் போர் முடிவுக்கு வந்த காலத்திலிருந்து இற்றைவரைக்கும் வன்னி பெருநிலத்திலிருந்து அனைத்து இயற்கை வளங்களும் சூறையாடப்பட்டு வருகின்றன. அந்நிலத்தின் சுற்றுச்சூழல் அடையாளமே மாறிப்போகும் அளவிற்கு இயற்கை வள அழிப்பு இடம்பெற்று வருகின்றது. இப்பின்னணியில்தான் வன்னி பெருநிலத்தின் பல பாகங்களிலும் காணப்படுகின்ற சிறு மலைக் குன்றுகளும், பாறை மேடுகளும் கிரனைற் வியாபாரிகளால் அகழப்பட்டு வருகின்றன. உதாரணத்திற்கு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயச்சூழலில், பண்டைய கால இராசதானியொன்றின் கட்டட எச்சங்கள் காணப்பட்ட வாவெட்டி மலை சட்டவிரோமான முறையில் கிரனேற் வியாபாரிகளால் அழிக்கப்பட்டது. தொல்லியல் திணைக்களத்தினால் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டிய வாவெட்டி மலை அழிக்கப்பட்டதோடு, அங்கிருந்த தமிழர்களது வரலாற்றைக்கூறும் தொல்லியல் எச்சங்களும் அழிக்கப்பட்டன. வாவெட்டி மலைக்கு அடுத்தபடியாகத்தான், அம்மலைப் பகுதிக்கு அண்மித்த கிராமமான காதலியார் சமளங்குளத்தில் காணப்பட்ட கருங்கல் பாறை மேடும் 2018 ஆம் ஆண்டிலிருந்து கிரனேற் வியாபாரிகளால் அகழப்பட்டது. ஊர் மக்களின் எதிர்ப்பையடுத்து 2022ஆம் ஆண்டில் அகழ்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன. ஆனாலும் அகழ்வின்போது ஏற்பட்ட பாரிய குழி மண்ணிட்டு நிரப்பப்படாமல் இன்றும் அப்படியே இருப்பதை அவதானிக்கமுடியும். தற்போது மீண்டும் அவ்விடத்தில் கிரனேற் அகழ்விற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு காதலியார் சமளங்குள மக்கள் தம் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து கருத்துத் தெரிவித்த காதலியார் சமளங்குளப் பெண்ணொருவர், ”2018ஆம் ஆண்டின்ர ஆரம்பத்தில ஏஜிஏ (பிரதேச செயலாளர்) மட்டத்தில முடிவெடுத்த பிறகு நிற்பாட்டினது. நிம்மதியா இருந்தம். சரியான டஸ்ட் (தூசி). எங்கட வீடு இதிலயிருந்து நூறு மீற்றர் தூரத்திலதான் இருக்குது. நாங்கள் எங்கட வீட்டு யன்னலுகளுக்கு கண்ணாடி போட்டிற்றம். எங்கட வீட்டிலயும் கல் உடைக்கிற அதிர்வினால ரெண்டு யன்னல் கண்ணாடியளும் வெடிச்சி, சுவருகளும் வெடிச்சது. எங்களுக்குப் பக்கத்து வீட்டில இன்றை வரைக்கும் கண்ணாடியும் போடேல்ல. சுவருகளும் வெடிச்ச படியேதான் கிடக்கு”. என கல் உடைக்கும் நிறுவனத்தினால் தங்கள் கிராமம் எவ்வளவுதூரம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை விபரித்தார். “..போனகிழமை ரெண்டு வாகனங்களில ஆக்கள் வந்து இறங்கினவ. நாங்கள் றோட்டில வந்து நின்றிட்டம். யாரையும் கல்லுடைக்கிற இடத்துக்கு போக விடேல்ல. வந்த முழுப்பேரும் சிங்கள ஆக்கள். பிரதேச சபை ஆள் ஒருத்தரும் வந்தவர். ஜீ.எஸ்ம் (கிராம சேவையாளர்) வந்தவர். இன்னொரு தமிழ் பெடியனும் வந்தவர். தாங்கள் இடத்தைப் பார்க்க வந்ததாக சொல்லிச்சினம். நாங்கள் இடத்தைப் பார்க்க போக வேண்டாம் என்று சொல்லீற்றம். நாங்கள் எங்கட ஊருக்க கல்லெடுக்க விடமாட்டம். எங்களுக்கு இதால நிறையப் பாதிப்பு. எங்கட மாடுகளுக்கு மேய்ச்சல் நிலம் இல்ல. அந்த மாடுகளக் கொண்டுவந்து இந்தக் காடுகரம்பையாத்தான் மேய்க்கிறனாங்கள். இங்க மாடுகள் மேய்க்க வேற இடமே இல்ல. இந்தக் குழிகளுக்குள்ள மாடுகள் விழுந்து செத்தால் யார் பொறுப்பு? இதுக்க கொண்டுவந்து கல்லுக் கிரேசரைப் போட்டால் மாடுகளை நாங்கள் கட்டித்தூக்கிறதோ? மாடுகள விடுங்கோ. எங்கட வாழ்க்கையப் பாருங்கோ. இதுக்க கிரேசர் போட்டால் அதில இருந்து வாற டஸ்ட் எங்க போகும். 100 மீற்றருக்குள்ள தான் எங்கட வீடுகள் இருக்கு. ஏற்கனவே இருந்த கிரேசரால வீடுகள் உடைஞ்சு போய்தானே கிடக்கு. அதைத் திருத்தவே வழியக் காணேல்ல. இதில இருக்கிற மிச்சசொச்சத்தையும் இடிச்சழிக்க திருப்பி வருகினம்..” என்றார் மிகுந்த கோபத்தோடு. அக்கிராமத்தில் வசித்துவரும் இன்னொரு கிராமவாசி குறிப்பிடுகையில், ”உண்மையிலயே இங்க நிறைய வருத்தக்காரர் இருக்கினம். இதய வருத்தக்காரர், கிட்னி பெய்லியர் ஆகின ஆக்கள் இங்க அதிகம். இங்க கல்லுகள உடைக்கும்போது கேட்கிற சத்தம் அவையளப் பாதிக்கும். அதவிடவும் எங்கட வீடுகளுக்கு சரியான சேதம். சுவருகள், யன்னலுகள் எல்லாம் வெடிச்சிற்று. அதைத் திருப்பி எப்பிடி ஒட்டவைக்கிறது? கல்லுகள் உடைக்கும்போது வாற சத்தத்துக்கு சின்னப் பிள்ளையள் சரியா பயப்பிடுதுகள். எங்கட வீடுகள் கிரேசருக்குப் பக்கத்தில இருக்கிறதால சத்தம் காதைக் கிழிக்கும். எங்களுக்கு இந்தக் கிரேசர் வேண்டாம். ஏற்கனவே இதனால பட்டபாடுகள் போதும். திருப்பியும் யாரும் வந்தால் நாங்கள் போராட்டம்தான் செய்யவேண்டிவரும்” – என்றார். அக்கிராமத்தில் விவாசயத்தோடு கால்நடையும் வளர்த்து வருகின்ற ஒருவர் குறிப்பிடுகையில், ”கிணறுகளில தண்ணீர் இல்ல. குழாய்க்கிணறு கிண்டியும் பார்த்தம், அதிலயும் தண்ணியில்ல. ஆனால் அவையள் கிண்டின கல் குவாரியில பெரிய குளம் போல தண்ணி நிற்குது. எங்கட கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் போனதுக்கு அதுவும் காரணமோ தெரியேல்ல – என்கிற சந்தேகத்தையும் அவர் வெளியிட்டார். இந்தக் குரல்கள் சொல்லுவதெல்லாம் ஒன்றைத்தான். ”இயற்கையை நீ அழித்தால் இயற்கையால் நீ அழிவாய்” https://nenarrative.com/கல்-வியாபாரத்திற்காக-அழி/- கீரிமலை - தமிழர் மரபுரிமை சுற்றுலா
தமிழர் மரபுரிமை சுற்றுலா கட்டுரை மற்றும் படம்| North East Narrative நமது கடந்த காலத் தலைமுறைகள் நமக்காக விட்டுச்சென்றவைகள் மரபுரிமைகள் ஆகும். அவை நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் மதிப்புமிக்கவையாக இருக்கும். இதனைத் தொட்டுணரக்கூடிய மரபுரிமைகள் (Tangible Heritage) எனவும், தொட்டுணர முடியாத மரபுரிமைகள் (Intangible Heritage) எனவும் இரண்டாக வகுப்பர். நினைவுச்சின்னங்கள், பண்டைக்கால கட்டடங்கள், கலைப்பொருட்கள் போன்றன தொட்டுணரக்கூடிய மரபுரிமைகளாகவும், பண்டைக்கால தொழில்நுட்ப நுணுக்கங்கள், கலைநிகழ்ச்சிகள், சடங்குகள், பழக்கவழக்கங்கள், நாட்டார் கதைகள், மரபுவழிப் பாடல்கள் போன்றன தொட்டுணரமுடியாத மரபுரிமைகளாகவும் கொள்ளத்தக்கன. மரபுரிமைகள் என்ன செய்யும்? இத்தகைய மரபுரிமைகள், எதிர்கால சந்ததியினருக்கு வரலாற்றைக் கடத்தும் பணியை செவ்வனே செய்கின்றன. குறித்தவொரு பிராந்தியத்தின் வாழும் மக்களின் தனித்துவமான அடையாளக்கூறுகளைக் கட்டிக்காக்கின்றன. இனம்சார் உணர்வு மேலிடவும், தக்கவைக்கவும் உதவுகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக குறித்தவொரு மரபுரிமைச் சின்னம் காணப்படுகின்ற பிராந்தியத்தின் சுற்றுலாத்துறை விருத்தியடையவும், அதன்விளைவாக அப்பிராந்தியத்தின் வரலாறு உள்ளிட்ட பண்பாட்டுக்கூறுகள் உலகத்தவர்களுக்கு எடுத்துச்செல்லப்படவும், பொருளாதாரம் மேம்படவும் உதவுகின்றன. ஈழத்தமிழர் மரபுரிமைகள் எத்தகையன? இலங்கையின் வடக்கு கிழக்கு பாகங்களில் வாழுகின்ற ஈழத்தமிழர்களிடம் இருக்கின்ற மரபுரிமைகளை எந்த வகைக்குள் உள்ளடக்குவது என்கிற கேள்வி எழுவது இயல்பானது. இப்பிராந்தியத்தில் போரில் அழிக்கப்பட்டவைபோக, தற்போது எஞ்சியிருக்கின்ற மரபுரிமைகளுக்குள் அனேகமானவை பண்பாட்டு மரபுரிமைகள் (Cultural Heritage) என்கிற வகையறாவுக்குள்ளேயே உள்ளடக்கத்தக்கவை. அவற்றுள் தொட்டுணரக்கூடியவையும், தொட்டுணரமுடியாதவையும் அடங்கும். அண்மையில், சர்வதேச சுற்றுலாப் பயணங்களுக்கான விபரிப்பு சஞ்சிகையான Lonely Planet இவ்வருடத்தில் (2026) சுற்றுலாப் பயணிகள் உலகளவில் பயணம் செய்வதற்கெனத் தெரிவுசெய்யக்கூடிய சிறந்த 25 நகரங்களில் ஒன்றாக யாழ்ப்பாண நகரத்தைத் தெரிவுசெய்திருந்தது. அச்சஞ்சிகையில், யாழ்.நகரானது தமிழ் கலாசார விழுமியங்களைக் கற்க விரும்புபவர்களுக்குப் பொருத்தமான நகரம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச சுற்றுலா தொடர்பான பார்வையில் இப்படியோர் அடையாளத்தைப் பிடித்திருக்கும் யாழ்ப்பாணத்தைத் தமிழர் பண்பாட்டு மரபுரிமைசார் இடமாகக் காட்டுவது எப்படி என்பதற்கான எழுத்துவடிவிலான சுற்றுலா வழிகாட்டியாக இந்தக் கட்டுரைத்தொடர் அமையும். கீரிமலை யாழ்.குடாநாட்டில் இருக்கின்ற மிக முக்கியமான பண்பாட்டு மரபுரிமை மையங்களில் கீரிமலையும் ஒன்றாகும். யாழ்ப்பாண நகரிலிருந்து வடக்கே 19 கிலோமீற்றர்கள் தொலைவில் இக்கிராமம் அமைந்துள்ளது. ஆழமற்ற, சுண்ணக்கற்பாறைகளால் சூழ்ந்த அழகிய கடற்கரையும், யாழ்ப்பாண பாரம்பரிய கட்டடக் கலைமரபில் அமைந்த கட்டடங்களும் இந்தக் கிராமத்திற்கு எல்லையிட்டு நிற்கின்றன. கீரிமலையை அடைவதற்கான இலகு பயணம் யாழ்ப்பாண நகர மத்திய பேரூந்து நிலையத்திலிருந்து இக்கிராமத்திற்கு அரச மற்றும் தனியார் பேரூந்துகள் மூலமாகப் பயணம் செய்யலாம். அதேபோல தனியார் முச்சக்கர வண்டிகள் மூலமாகவும் பயணிக்கலாம். அரச, தனியார் பேரூந்துகளின் கட்டணம் 200 ரூபாவுக்குட்பட்டதாகவும், முச்சக்கரவண்டிகளின் கட்டணம் 2500 ரூபாவுக்குட்பட்டதாகவும் காணப்படும். யாழ்.நகரிலிருந்து புறப்பட்டால் 45 நிமிட நேரத்திற்குள் இவ்விடத்தினை அடையலாம். கீரிமலையில் பார்க்கவேண்டிய இடங்கள் கீரிமலையின் என்கிற இந்தக் கடற்கரை கிராமத்தில் பார்க்கவேண்டிய இடங்களில் முதன்மையானது நகுலேச்சரம் சிவன் கோயில் ஆகும். இலங்கையில் உள்ள மிகத் தொன்மையான ஐந்து சிவன் கோயில்களில் ஒன்றாக நகுலேச்சரம் காணப்படுகின்றது. இக்கோயிலின் வரலாறானது இராமயணக் காலத்திலிருந்தே ஆரம்பிப்பதாகக் குறிப்புகள் உண்டு. இறந்தோருக்கான பிதிர்க்கடன் ஆற்றுவதற்குப் பிரசித்தி பெற்ற நகுலேச்சர கோயிலின் உருவாக்கம் தொடர்பில் ஐதீகக் கதையொன்று உண்டு. 15ஆம் நூற்றாண்டில் இலங்கையைத் தம் காலனியாத்திக்கத்தின் கீழ் வைத்திருந்த போத்துக்கேயர்கள் மிகத் தொன்மையான இக்கோயிலை முதலில் அழித்தனர். பின்னர் ஆறுமுகநாவலர் எடுத்த முயற்சியின் பலனாக 1894 ஆம் ஆண்டில் மீண்டும் புனருத்தானம் செய்து திறக்கப்பட்டது. 1956 ஆம் ஆண்டு தொடக்கம் 2011ஆம் ஆண்டு வரை இலங்கை அரச படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த நகுலேச்சரம் முற்றாக சேதமடைந்தது. தற்போது மீளவும் புதுப்பொலிவுடன் கட்டியமைக்கப்பட்டு, வர்ணமிகு புதிய கோயிலாக நகுலேச்சரம் காட்சிதருகின்றது. நகுலேச்சரத்தின் வரலாறு முன்பொரு காலத்தில் சுதாமா எனும் முனிவர் மேரு மலையில் தவம் செய்துகொண்டிருந்தபோது, அவரின் தவத்தை குழப்பிய குற்றத்திற்காக யமத்கினி எனும் வேடன் முனிவரின் சாபத்திற்குள்ளானார். அச்சாபத்தினால் அவர் கீரி முகம் அமையப்பெற்றார். கீரிமுகம் பெற்ற வேடன் தற்போதைய நகுலேச்சரத்தை அண்மித்த கடலில் நீராடி தன் கீரிமுகத்தை நீங்கப் பெற்றமையால் அவர் நகுல முனிவர் என அழைக்கப்பட்டார். அதனால் அந்தக் கடற்கரை கிராமத்திற்கு கீரிமலை என்றும், நகுலகிரி என்றும் பெயர்பெற்றது. பின்னாளில் நகுல முனிவர் வழிபட்ட இடம் ஆனபடியால், அங்கு அமைந்த சிவ ஆலயமும் நகுலேச்சரம் எனப் பெயர்பெற்றது. கீரிமலை நகுலேச்சரம் கோயில் கீரிமலை தீர்த்தக் கேணி கீரிமலைக்கு வருகின்ற பக்தர்களையும், சுற்றுலாப் பயணிகளையும் அதிகம் கவருகின்ற இடமாக நீள்வட்ட வடிவான அழகிய தீர்த்தக்கேணி காணப்படுகின்றது. எக்காலத்திலும் நீர் வற்றாத, உப்புத் தன்மையற்ற இத்தீர்த்தக்கேணியில் பகல் வேளைகளில் நீராடுவது, உடலில் உள்ள நோய்களைத் தீர்க்கும் என நம்பப்படுகின்றது. கீரிமலை தீர்த்தக்கேணி சிறாப்பர் மடம் கீரிமலையில் அமைந்துள்ள சிறாப்பர்மடமானது யாழ்ப்பாணத்து பாரம்பரிய சமயம்சார் கட்டடக் கலை மரபின் எச்சமாக காணப்படுகின்றது. 1870ஆம் ஆண்டில் சுப்பிரமணியம் கதிரவேல் என்பவர் ”நகுலேசுவர சுவாமிகள் தண்ணீர் பந்தல்” எனும் பெயரில் இம்மடத்தினை அமைத்தார். அவர் அக்காலத்தில் பிரபலமான ”சிறாப்பர்” பதவியைப் பெற்றிருந்தமையால், பின்நாட்களில் சிறாப்பர் மடம் என அழைக்கப்பட்டது. கீரிமலைக்கு வருகின்ற யாத்திரிகர்கள் தங்கிநின்று ஓய்வு எடுக்கவும், தியானம் செய்யவும், சமயத் தேவைகளுக்காகவும் இந்த மடம் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதுபோல கீரிமலையை அண்மித்த பகுதிகளில் 13 மடங்கள் இருந்ததாகக் குறிப்பிடப்படுகின்றது. அவை அனைத்தும் இன்று அழிவடைந்துவிட்டன. சிறாப்பர் மடமும் போர்க்காலத்தில் மோசமாக சிதைவடைந்த போதிலும், அதன் கட்டட அமைப்பை இப்போதும் பார்வையிடலாம். மன அமைதி தரும் தியான மண்டபம் கீரிமலையின் கடற்கரையோரமாக அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான மண்டபம் தியானம் செய்வதற்கு மிகப் பொருத்தமான இடமாகும். வெளிநாட்டுப் பயணிகளும், உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும் அதிகாலை வேளையில் இந்த மண்டபத்திற்கு வருகைதந்து, மெல்லிய கடல் அலையின் ஓசையைக் கேட்படி மனதுக்கு அமைதி தரும் தியானத்தை மேற்கொள்ளக்கூடிய வகையில் தியான மண்டபமும், தியானம் மேற்கொள்வதற்கான கோயிலும் கீரிமலையில் அமைக்கப்பட்டுள்ளது. கீரிமலை கடற்கரையில் அமைந்துள்ள யாத்திரிகர்களுக்கான மண்டபம் கீரிமலையில் பார்க்கக்கூடிய சடங்கு கீரிமலை ஆலயச்சூழலில் இறந்தோர்க்கு பிதிர்க்கடன் செய்யும் வகையிலான சடங்குகளும் இடம்பெறும். அதிகாலை 3 மணி தொடக்கம் சூரிய உதயம் நிகழும் வரைக்கும் இந்தச் சடங்கினைப் பார்க்க முடியும். சைவ சமயத்தைப் பின்பற்றுகின்ற தமிழ் மக்கள் தம் குடும்பத்தில் இறந்த ஒருவரின் 16ஆம் நாள் கீரிமலைக்கு அதிகாலை வேளை வருகைதந்து, சமய முறைப்படி, இறந்தவர் குறித்த சடங்குகளைச் செய்வதோடு, இறந்தவரை எரித்த பின் எஞ்சிய சாம்பலையும் அக்கடலில் கரைத்துச் செல்வர். இதனைவிட இறந்தவர்களின் ஆத்ம ஈடேற்றத்திற்காக ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் இடம்பெறும் ஆடி ஆமாவாசை வழிபாட்டு நிகழ்வுகளும் இங்கு சிறப்பாக இடம்பெறும். நாடு முழுவதுமிருந்து பெருமளவிலான பக்தர்கள் இவ்விடத்திற்கு வருகைதந்து சடங்குகளைச் செய்வர். உணவு மற்றும் தங்குமிடம் கீரிமலைக்கு அண்மித்த தெல்லிப்பளை, காங்கேசன்துறை போன்ற இடங்களில் அதிகளவான தங்ககங்கள் உள்ளன. அதேபோல யாழ்ப்பாணத்தின் உணவுகளைப் பரிமாறும் உணவகங்களும் கீரிமலைக்குப் பயணிக்கும் சாலை ஓரங்களில் உள்ளன. கீரிமலையில் ”அம்மாச்சி உணவகம்” என அழைக்கப்படுகின்ற மலிவு விலை பாரம்பரிய உணவகமும் இயங்கிக்கொண்டிருக்கின்றது. அந்த உணவகத்தில் யாழ்ப்பாணத்தின் உணவுகளை சமைத்து, சுடச்சுட பெண்கள் வழங்குவர். அவ்வுணவுகளின் விலை மலிவானதாகவும் சுகாதாரமானதாகவும் காணப்படுகிறது. இது தவிர ஞாயிற்றுக் கிழமைகளிலும், விசேட தினங்களிலும் கீரிமலையில் அமைந்துள்ள சிவபூமி அறக்கட்டளை என்கிற அமைப்புக்குரிய அன்னதான மடத்தில் மதிய உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது. கீரிமலைக்கு சுற்றுலா வரும் பயணிகள்கூட குறித்த இந்த அன்னதான மடத்தில் உணவருந்தமுடியும். அன்னதானத்தைத் தாம் வழங்க விரும்பினாலும் அதனைச் செய்ய இயலும். முடிவாக, யாழ்ப்பாண பண்பாட்டின் மரபுரிமைகளைத் தரிசிக்க விரும்பும் சுற்றுலாப் பயணி ஒருவர் – மனதுக்கு அமைதியைத் தரக்கூடிய இடமொன்றைப் பார்வையிட விரும்பும் சுற்றுலாப் பயணி ஒருவர் தெரிவுசெய்யவேண்டிய முதன்மையிடம் கீரிமலை ஆகும். https://nenarrative.com/தமிழர்-பண்பாட்டு-மரபுரிம/- அனைத்து நாடுகளும் அமைதி வாரியத்தில் இடம்பெற விரும்புவதாக டிரம்ப் கருத்து
டொனால்ட் ட்ரம்ப் தொடங்கிய அமைப்பில் இணைய சீனா மறுப்பு Nishanthan SubramaniyamJanuary 22, 2026 6:54 pm 0 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடங்கிய ‘போடர் ஒப் பீஸ்’ Board of Peace என்ற அமைப்பில் இணைவதற்கான அமெரிக்காவின் அழைப்பை சீனா நிராகரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையை உறுதியாக ஆதரிப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட தகவலை இந்தியாவுக்கான சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் யூ ஜிங் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ‘அமைதி வாரியத்தில் இணைவதற்கான அமெரிக்காவின் அழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. சீனா எப்போதுமே உண்மையான பலதரப்பு வாதத்தைப் பின்பற்றுகிறது. சர்வதேச சூழல் எவ்வாறு மாறினாலும், ஐ.நாவை மையமாகக் கொண்ட சர்வதேச அமைப்பு, சர்வதேச சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச ஒழுங்கு, ஐ.நா சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் சர்வதேச உறவுகளை நிர்வகிக்கும் அடிப்படை விதிமுறைகளைப் பாதுகாப்பதில் சீனா உறுதியாக இருக்கும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் பங்கேற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் , உலக நாடுகளின் ஆதரவை திரட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில், அந்த வாரியத்தில் இணையப் போவதில்லை என்ற முடிவை உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாகத் திகழும் சீனா அறிவித்திருக்கிறது. சீனாவின் இந்த முடிவு, ட்ரம்ப்பின் முயற்சிகளுக்கு மிகப் பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. https://oruvan.com/china-refuses-to-join-the-organization-launched-by-donald-trump/- வவுனியா மாவட்டத்தில் அரசு முன்னெடுக்கவுள்ள கிவுல் ஓயா திட்டம் தமிழருக்கு ஆபத்து; பல்லாயிரம் ஏக்கர் காணிகளைப் பறித்து சிங்களக் குடியேற்றத்துக்கு முயற்சி
கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிராக பாரிய போராட்டம்; சுமந்திரன் தெரிவிப்பு கிவுல் ஓயா திட்டத்தை இலங்கை தமிழ் அரசுக் கட்சி வன்மையாக எதிர்த்து பாரிய போராட்டத்தை நடத்தும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழ் அரசுக் கட்சி வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை 20ஆம் திகதி அமைச்சரவை மாகாவலி கிபுல் ஓயா திட்டத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது. இத் திட்டம் எப்படியாக இனப்பரம்பலை மாற்றி அமைக்கும் என்றும் தமிழ் மக்களின் உரிமைகளை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதையும் எமது பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சத்தியலிங்கம் பாராளுமன்றத்தில் தெளிவாக விளக்கியுள்ளார். இந்த திட்ட அமுலாக்கலை தடுக்கும் வகையில் பாரிய எதிர்ப்புப் போராட்டங்களை நாம் நடத்த உள்ளோம். இந்தப் போராட்டங்களில் எம்மோடு இணைந்து கொள்ளுமாறு மற்றைய கட்சிகளையும் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். அடுத்தடுத்த நாட்களில் இது சம்பந்தமான கலந்துரையாடல்கள் வவுனியாவிலும் நாம் நடாத்த உள்ளோம். இவற்றிலும் கலந்து கொண்டு உங்களது கருத்துக்களையும் பகிர்ந்து இப் போராட்டங்களுக்கு வலுச் சேர்க்குமாறு சகலரையும் அன்பாக கேட்டுக்கொள்கிறோம் – என்றுள்ளது. https://akkinikkunchu.com/?p=357104- அனுமதியின்றி வைக்கப்பட்ட தொல்பொருள் அடையாளப் பலகைகளை அகற்ற தீர்மானம்
அனுமதியின்றி வைக்கப்பட்ட தொல்பொருள் அடையாளப் பலகைகளை அகற்ற தீர்மானம் January 23, 2026 மட்டக்களப்பு ஏறாவூர் பற்று செங்கலடி சபை பிரிவிற்குட்பட்ட பகுதிகளில், பிரதேச சபையின் எந்தவித அனுமதியுமின்றி தொல்பொருள் திணைக்களம் தன்னிச்சையாக அடையாளப் பலகைகளை நாட்டி வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதுடன் அனுமதிபெறப்படாமல் நடப்பட்ட பதாகைகளை சட்டத்தின் கீழ் அகற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆட்சியின் கீழுள்ள செங்கலடி பிரதேச சபையின் மாதாந்த அமர்வு வியாழக்கிழமை (22) தவிசாளர் மு.முரளிதரன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது வீதிப்பிரச்சினை, வடிகான் பிரச்சினை, தொல்பொருள் பொயர்ப்பலகை உனவிவகாரம் மற்றும் பன்குடாவெளி வட்டாரப்பகுதியில் சூரிய மின்சக்தி திட்டம் அமைத்தலுக்கான அனுமதியை மீள் பரிசீலனை செய்தல் உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. இதன்போது முக்கிய பிரச்சனைகள் மற்றும் குற்றச்சாட்டுகள் சபை அமர்வின் போது உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டன. அனுமதியற்ற செயற்பாடு 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்கச் சட்டத்தின்படி, உள்ளூர் அதிகார சபைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதேச சபையின் அனுமதி அவசியம். ஆனால், தொல்பொருள் திணைக்களம் எவ்வித ஆலோசனையுமின்றி இப்பணிகளை மேற்கொண்டுள்ளது. தொல்பொருள் இடங்களாகக் கூறி மக்களின் விவசாய நிலங்கள் மற்றும் பொதுச் சந்திகளிலும் பலகைகள் நாட்டப்பட்டுள்ளன. இதனால் 56 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் சபையில் சுட்டிக்காட்டப்பட்டது. தொல்பொருள் திணைக்களத்தினால் நாட்டப்பட்டுள்ள அடையாளப் பலகைகளில் தமிழ் மொழி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. வடக்கு-கிழக்கில் நிர்வாக மொழியாக தமிழ் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற விதியை மீறி, மொழி உரிமை மீறப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் செ.நிலாந்தன் கடும் கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக தொடர்பாக மேலும் தெரிவித்த நிலாந்தன் நில ஆக்கிரமிப்பு, மொழி உரிமை மீறலுக்கு தொல்லியல் திணைக்களம் துணைபோகிறது. வடகிழக்கில் உள்ள சிறுபான்மை இன மக்களின் நில ஆக்கிரமிப்பு மற்றும் மொழி உரிமை மீறலுக்கு சட்டரீதியாக துணைபோகும் திணைக்களமாக தொல்லியல் திணைக்களம் செயற்பட்டு வருகிறது . மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்லியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் குழப்பத்தையும், முரண்பாடுகளையும் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. வடகிழக்கில் உள்ள சிறுபான்மை இன மக்களின் நில ஆக்கிரமிப்பு மற்றும் மொழி உரிமை மீறலுக்கு சட்டரீதியாக துணைபோகும் திணைக்களமாக தொல்லியல் திணைக்களம் செயற்பட்டு வருகிறது. 1987, 15ம் இலக்க சட்டத்தின் பிரகாரம் பிரதேச சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை மீறி பிரதேச சபையின் அனுமதி இன்றி தொல்லியல் திணைக்களம் பெயர்ப் பலகைகளை இட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் தொல்பொருள் திணைக்களத்தினால் நடப்பட்ட பெயர் பலகைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள், பெயர் பலகைகளை அகற்றிய வர்கள் என்று கூறி 56 பேரை கைது செய்துள்ளனர். முன்னர் இருந்த எந்த அரசாங்கங்களும் செய்யாத செயற்பாட்டை தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் செய்துள்ளது. இதைவிட தொல்லியல் திணைக்களத்தின் ஊடாக நடப்பட்ட அனைத்து பெயர் பலகைகளிலும் மொழி உரிமை மீறப்பட்டுள்ளது. இந்த நாட்டின் அரச கரும மொழிகளாக தமிழ், சிங்கள மொழிகள் காணப்படுகிறது, அதேபோல் வடகிழக்கின் நிர்வாக மொழியாக தமிழ் மொழியே காணப்படுகிறது. இவ்வாறு இருக்கும் நிலையில் வடகிழக்கின் நிர்வாக மொழியான தமிழ் மொழியை முதலாவதாகவும், சிங்கள மொழியை இரண்டாவதாகவும் எழுதி இருக்க வேண்டும். ஆனால் தொல்லியல் திணைக்களத்தின் பெயர் பலகைகளில் மூன்றாவதாகவே தமிழ் மொழி அடையாளப்படுத்தும் பட்டுள்ளது. தமிழரசுக் கட்சியின் ஆட்சியின் கீழ் இருக்கும் பிரதேச சபைகளின் அதிகாரங்களை மீறி அரசியல் நோக்கங்களுக்காக, பிரதேச சபை சட்டங்களை மீறி தொல்லியல் திணைக்களம் செயற்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இதனை வன்மையாக கண்டிக்கிறேன். மேலும் இதன்போது இலங்கை தமிழரசுக் கட்சியின் செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் வ.வவாநந்தன் தமது கடும் கண்டனமான முறையில் தனது வாதத்தை அரசின் செயற்பாட்டிற்கு எதிராக முன்வைத்தார். மேலும் சபையில் தொல்பொருட்களைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு, நுணுக்கமான முறையில் நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், இது இனங்களுக்கிடையிலான ஒற்றுமையைச் சீர்குலைக்கும் செயல் என்றும் இதன்போது விமர்சிக்கப்பட்டது. முறையான வர்த்தமானி அறிவித்தல் மற்றும் ஆவணங்களின்றி நாட்டப்பட்ட பலகைகள் குறித்து விளக்கம் அளிக்க தொல்பொருள் திணைக்களத்திற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக் செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர் மு.முரளிதரன் தெரிவித்தார். வழங்கப்பட்ட காலக்கெடுவிற்குள் உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறினால், பிரதேச சபைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த அடையாளப் பலகைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சபையில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய அரசிற்கும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கும் உத்தியோகபூர்வமாக அறிவிப்பதோடு, தேவைப்படின் சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் சபை தீர்மானித்துள்ளது. தொல்பொருட்களைப் பாதுகாப்பதில் தங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை என்றும், ஆனால் அவை சட்ட ரீதியாகவும், மக்களின் உரிமைகளை பாதிக்காத வகையிலும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே சபையின் நிலைப்பாடாக உள்ளது என்றார். இதன் போது சட்ட ரீதியாக பெயர்ப்பலகைகளை அகற்றுவது தொடர்பாக உறுப்பினர்களது ஆதரவுடன் பிரேரணையும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு மூன்று உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://www.ilakku.org/resolution-to-remove-archaeological-signs-placed-without-permission/- அனைத்து நாடுகளும் அமைதி வாரியத்தில் இடம்பெற விரும்புவதாக டிரம்ப் கருத்து
அனைத்து நாடுகளும் அமைதி வாரியத்தில் இடம்பெற விரும்புவதாக டிரம்ப் கருத்து January 23, 2026 அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்துள்ள ‘அமைதி வாரியம்’ (Board of Peace) அமைப்பிற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நிகழ்வு, (ஜனவரி 22) ஸ்விட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்றது. அப்போது பேசிய டிரம்ப், “இது மிகவும் உற்சாகமான நாள், இதற்காக நீண்ட காலமாக திட்டமிடப்பட்டது” என்று கூறினார். “எல்லோரும் எனது அமைதி வாரியத்தில் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறார்கள். ஐக்கிய நாடுகள் சபை உட்பட பலருடன் தொடர்ந்து பணியாற்றுவேன்” என்றும் அவர் தெரிவித்தார். ‘அமைதி வாரியம்’ உருவாக்கப்பட்டவுடன், “நாம் செய்ய விரும்புவதை ஓரளவிற்குச் செய்ய முடியும். அமைதி வாரியம் மற்றும் ஐ.நா-வின் முயற்சிகளை இணைப்பது உலகிற்கு மிகவும் தனித்துவமானதாக அமையும். இது மத்திய கிழக்குப் பிராந்தியத்தின் ஒரு பிரகாசமான எதிர்காலத்திற்கான முதல் படி” என்றும் டிரம்ப் கூறுகிறார். தனது உரையை நிறைவு செய்யும் விதமாக, அமைதி வாரியத்திற்கான ஆவணத்தில் கையெழுத்திடுமாறு பஹ்ரைன் மற்றும் மொராக்கோ பிரதிநிதிகளுக்கு டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்தார். வாரியத்தின் மற்ற உறுப்பினர்கள் கையெழுத்திட அழைக்கப்படுவதற்கு முன்பு, அவர்கள் மூவரும் சிரித்துக் கொண்டே ஆவணங்களை உயர்த்திப் பிடித்தனர். டிரம்ப் தனது உரையின் போது, காஸாவைப் பற்றியும் பேசினார். அங்கிருந்துதான் அமைதி வாரியத்திற்கான திட்டம் தொடங்கியதாக அவர் கூறுகிறார். “ஹமாஸ் அமைப்பு அவர்கள் செய்வதாக உறுதியளித்ததை ‘அநேகமாகச் செய்வார்கள்’. அவர்கள் தங்கள் ஆயுதங்களை கைவிட வேண்டும், அதைச் செய்யவில்லை என்றால், அது அவர்களின் முடிவாக அமையும்” என்றார் டிரம்ப். ஹமாஸால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகத்தின் தகவல்படி, அக்டோபர் 10 அன்று இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர்நிறுத்தம் தொடங்கியதில் இருந்து காஸாவில் குறைந்தது 466 பாலத்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். https://www.ilakku.org/trump-says-all-countries-want-to-be-on-the-peace-council/- மட்டக்களப்பில் போலி வைத்தியர் கைது!
மட்டக்களப்பில் போலி வைத்தியர் கைது! Vhg ஜனவரி 23, 2026 வைத்தியர் என தன்னை அடையாளப்படுத்தி வீடு ஒன்றில் மருத்துவ கிளினிக் நிலையம் ஒன்றை கடந்த 3 வருடங்களாக நடத்தி வந்த போலி வைத்தியர் ஒருவர் நேற்று(23.01.2026) வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள செம்மண் ஓடை பிரதேசத்தில் வைத்து மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித்த கிளினிக் முற்றுகையிடப்பட்டது. இதன்போது குறித்த வைத்தியசாலை அனுமதி பத்திரம் மற்றும் வைத்தியர் அடையாள அட்டைகளை கேட்டு சோதனையில் ஈடுபட்ட போது அவரிடம் எந்தவிதமான பத்திரங்களும் வைத்தியராக அடையாளப்படுத்தும் காணப்படவில்லை என தெரிய வந்துள்ளது. குறித்த நபர் க.பொ.தர உயர் தரத்தில் மருத்துவ துறையில் கல்வி கற்று வந்துள்ளதாகவும் போதிய புள்ளிகள் இல்லாமல் மருத்துவ துறைக்கு தெரிவு செய்யப்படாமல் உள்ள நிலையில் கண்டிக்கு சென்று அங்கு மருத்துவ துறைக்கு கல்வி கற்று வந்த நிலையில் தனது சொந்த ஊரான செம்மண் ஓடையில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பி வந்து வைத்தியசாலையில் சத்திரசிகிச்சையில் ஈடுபடும் போது வைத்தியர்கள் அணியும் ஆடை போல உடையை அணிந்து கொண்டு தன்னை தானே புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும் தெரியவந்துள்ளது. பின்னர் அதனை தொடர்ந்து போலியாக முகநூல் கணக்கு ஒன்றை ஆரம்பித்து அதில் கண்டி பல்லேகல பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் போல போலியான தரவுகள் மற்றும் வைத்தியர் போல உடையணிந்த படங்களை தரவேற்றம் செய்து வீட்டில் ஒரு தனியார் வைத்திய கிளினிக் ஒன்றை ஆரம்பித்து கடந்த 3 வருடங்களாக நோயாளிகளுக்கு மருந்துகளை வழங்கி இயங்கி வந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து குறித்த போலி வைத்தியரைக செயற்பட்டு வந்த 33 வயதுடையவரை கைது செய்ததுடன் அங்கிருந்த சான்று பொருட்களை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் மீட்டு ஒப்படைத்துள்ளதாகவும் இவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை உடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு மற்றும் வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.battinatham.com/2026/01/blog-post_23.html- நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய வனப்பகுதியாக 'நீல்கல' உத்தியோகபூர்வமாக பிரகடனம் -அதிவிசேட வர்த்தமானி வெளியீடு
நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய வனப்பகுதியாக 'நீல்கல' உத்தியோகபூர்வமாக பிரகடனம் -அதிவிசேட வர்த்தமானி வெளியீடு 23 Jan, 2026 | 12:08 PM இலங்கையின் இரண்டாவது பெரிய வனப்பகுதியான 'நீல்கல' (Nilgala Forest) காப்பகம் உத்தியோகபூர்வமாக பாதுகாக்கப்பட்ட வன ஒதுக்கீடாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு அறிவித்துள்ளது. சுமார் 40,684.99 ஹெக்டேயர் பரப்பளவைக் கொண்ட இந்த வனப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வலயமாக்கும் நடவடிக்கை, 2025ஆம் ஆண்டு உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு தேசிய வனப்பரிபாலன திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டதாக சுற்றாடல் அமைச்சர் தம்மிக பட்டபெந்தி தெரிவித்துள்ளார். இந்த பிரகடனத்தின் முக்கியத்துவம் குறித்து அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்: நாட்டின் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதற்கும் சுற்றாடல் சீர்கேட்டைக் குறைப்பதற்கும் எடுக்கப்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாக இது அமையும். இலங்கை போன்ற வெப்பமண்டல நாடுகளுக்கு இவ்வாறான வனப்பகுதிகளைப் பாதுகாப்பது சுற்றாடல் சமநிலைக்கு மாத்திரமன்றி, வனவிலங்குகளுக்கான நிலையான வாழ்விடங்களை உருவாக்குவதற்கும் அவசியமானதாகும். மனிதர்களும் இயற்கையும் இணைந்து வாழக்கூடிய பசுமையான தேசத்தை நோக்கிய பயணத்தை இது மேலும் வலுப்படுத்துகிறது. எதிர்கால சந்ததியினருக்காக பசுமையான சூழலை உருவாக்குவதற்கும், நிலையான உயிர்ச்சூழலை கட்டியெழுப்புவதற்கும் இலங்கை கொண்டுள்ள அர்ப்பணிப்பை இந்த தீர்மானம் மீள உறுதிப்படுத்துவதாக அமைச்சர் தம்மிக பட்டபெந்தி மேலும் சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/236780- சுவிட்சர்லாந்து மற்றும் டாவோஸ் இலங்கை வர்த்தகச் சமூகத்தினருடன் பிரதமர் சந்திப்பு
சுவிட்சர்லாந்து மற்றும் டாவோஸ் இலங்கை வர்த்தகச் சமூகத்தினருடன் பிரதமர் சந்திப்பு 23 Jan, 2026 | 12:24 PM டாவோஸில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மன்றத்தின் World Economic Forum வருடாந்தக் கூட்டத்திற்குச் சமாந்தரமாக, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் சுவிட்சர்லாந்து வர்த்தகச் சமூகத்தின் உறுப்பினர்களையும், அந்நாட்டில் வசிக்கும் இலங்கை வர்த்தகத் தலைவர்கள் மற்றும் தொழில்சார் நிபுணர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார். இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் நீண்டகால அபிவிருத்திக்கு ஆதரவளிக்கும் நோக்கில், கூட்டுறவைப் பலப்படுத்துதல், நம்பிக்கையைக் கட்டியெழுப்புதல் மற்றும் ஒத்துழைப்புக்கான நடைமுறைச் சாத்தியமான வழிகளை ஆராய்தல் ஆகிய விடயங்கள் குறித்து இச்சந்திப்புகளின் போது கவனம் செலுத்தப்பட்டது. சுவிட்சர்லாந்தில் வசிக்கும் இலங்கை வர்த்தக மற்றும் தொழில்சார் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போது, வர்த்தகத் தொடர்புகளை வளர்ப்பதிலும், முதலீட்டு வாய்ப்புகளை இலகுபடுத்துவதிலும், சந்தை வாய்ப்புகளை உறுதிப்படுத்துவதிலும் அவர்கள் ஆற்றக்கூடிய முக்கிய பங்கினைப் பிரதமர் சுட்டிக்காட்டினார். அத்துடன், தொழில்முயற்சியாளர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் சர்வதேச வர்த்தக வலையமைப்புடன் இலங்கையின் ஈடுபாட்டைப் பலப்படுத்துதல் ஆகியவற்றிலும் அவர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுத் தருமாறு கேட்டுக்கொண்டார். அத்தோடு, சுவிட்சர்லாந்து வர்த்தகச் சமூகத்தினருடனான சந்திப்பில், இலங்கையின் தற்போதைய பொருளாதாரப் போக்கு, மறுசீரமைப்பு முன்னுரிமைகள் மற்றும் முதலீட்டிற்கான முக்கிய துறைகள் குறித்துப் பிரதமர் விளக்கமளித்தார். பொருளாதார ஸ்திரத்தன்மை, முன்கூட்டியே கணிக்கக்கூடிய கொள்கைக் கட்டமைப்புகள் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்ட நிர்வாகச் சீர்திருத்தங்கள் ஆகியவற்றில் அரசாங்கம் கொண்டுள்ள அர்ப்பணிப்பைப் பற்றியும் இதன்போது அவர் எடுத்துரைத்தார். சேவைத் துறை வளர்ச்சி, மூலதனச் சந்தைகள், நிதித் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய முன்னுரிமைத் துறைகளில் ஒத்துழைப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் இக்கலந்துரையாடல்களில் ஆராயப்பட்டது. அத்துடன், இந்த ஈடுபாடுகளை முதலீட்டு ஆர்வம், துறை சார்ந்த கூட்டுறவு மற்றும் நீண்டகால ஒத்துழைப்பு போன்ற உறுதியான பெறுபேறுகளாக மாற்றுவதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது. மறுசீரமைப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் சர்வதேசக் கூட்டுறவு ஆகியவற்றின் ஊடாகத் தொடர்ச்சியான பொருளாதார மீட்சியை உறுதிப்படுத்துவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்திய பிரதமர், சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை வர்த்தகத் தரப்பினரின் தொடர்ச்சியான ஈடுபாட்டை வரவேற்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/236782- வீட்டு திட்டங்களில் நிர்மாணப் பணிகள் நிறைவுற்ற குடியேற தாமதங்கள்: தீர்வு காண விசேட குழு நியமிப்பு - சுசில் ரணசிங்க
வீட்டு திட்டங்களில் நிர்மாணப் பணிகள் நிறைவுற்ற குடியேற தாமதங்கள்: தீர்வு காண விசேட குழு நியமிப்பு - சுசில் ரணசிங்க Published By: Vishnu 23 Jan, 2026 | 05:24 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) நாடளாவிய ரீதியில் நிர்மாணப் பணிகள் நிறைவுற்ற பெருமளவு வீட்டு திட்டங்கள் மக்கள் குடியேறாத நிலையில் காணப்படுகின்றன. அதற்கான காரணத்தை கண்டறியும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனதுடன் அவ்வாறான வீட்டுத் திட்டங்களில் காணப்படும் சிக்கல்களை இனம் கண்டு அவற்றுக்கு தீர்வு காண விசேட குழு வொன்றை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் திலின சமரக்கோன் எம்பி எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தமது கேள்வியின் போது, சரியான, தகுதியான நபர்களுக்கு வீடுகளை வழங்கத் தவறியுள்ளதால் நிர்மாணிப்பு நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்ட பல வீட்டுத் திட்டங்கள் இன்னும் மூடிய நிலையிலேயே காணப்படுகின்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் குடியிருப்புப் பிரச்சினைகள் காணப்படும் இக் காலகட்டத்தில் கட்டப்பட்ட வீடுகள் மக்கள் குடியேறாத நிலையில் மூடிக் கிடக்கின்றன. அந்த வகையில் அந்த வீடுகளை மீளப் பெற்று அரசாங்கம் தகுதியானவர்களுக்கு அதனைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமா என கேட்கிறேன் என்றார். அது தொடர்பில் தொடர்ந்து அமைச்சர் பதிலளிக்கையில், கடந்த அரசாங்க காலத்தில் வறுமை நிலையில் உள்ள மக்களுக்கான வீட்டுத் திட்டங்களில் பெரும்பாலானவர்கள் அன்றைய அரசியல்வாதிகளுக்கு நெருங்கியவர்களாகவும் சற்றும் பொருத்தமில்லாதவர்களுக்கு அந்த வீடுகள் வழங்கப்பட்டுள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை உட்பட பல மாவட்டங்களில் வீட்டுத்திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையிலும் மக்கள் அங்கு குடியேறாத நிலை காணப்படுகின்றது. அந்த வீட்டு திட்டங்கள் பொருத்தமற்ற இடங்களில் நிர்மாணிக்கப்பட்டிருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு வேறு இடங்களில் வீடுகள் இருப்பதன் காரணமாகவே அவர்கள் அந்த வீட்டுத் திட்டங்களில் குடியேறாமல் உள்ளனர் என்பதை ஊகிக்க முடிகிறது. உண்மையில் வீடு தேவையுள்ளோருக்கு இந்த வீடுகள் வழங்கப்பட்டுள்ளதா அல்லது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது தொடர்பில் ஆராய வேண்டியுள்ளது. அதேபோன்று கடந்த காலங்களில் வீடுகளை நிர்மாணிப்பதற்காக வீடமைப்பு அதிகார சபை பல்வேறு கட்டங்களில் கடன்களை வழங்கியுள்ளது. அவ்வாறு கடன் பெற்றுக் கொண்டவர்கள் அந்த கடனை மீள செலுத்த தவறியுள்ளதால் வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை நிதி ரீதியில் பெறும் வீழ்ச்சியடைந்துள்ளது. அந்த கடன்களை மீள அறவிடுவதில் பெரும் பிரச்சினைகள் காணப்படுகின்றன. அனுராதபுரம் மாவட்டத்தில் 1656 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு அதில் 973 வீடுகளின் நிர்மாணப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. எனினும் அந்த வீடுகளில் இதுவரை எவரும் குடியேற வில்லை. அதற்கு பல காரணங்கள் உள்ளன. சில வீட்டு திட்டங்கள் வனப் பகுதியில் அமைந்துள்ளன. வீடு ஒன்றை நிர்மாணிப்பதற்கு கடன் வழங்கும்போது சம்பந்தப்பட்ட நபர் உண்மையில் அவருக்கு வீடு இல்லாவிட்டால் அந்த இடத்தில் கிடுகு வீடு ஒன்றையாவது அமைத்துக் கொண்டு அங்கு குடியேற முயற்சிப்பார். அவ்வாறானால் வீடு கட்டி முடிந்தும் அங்கு ஏன் மக்கள் குடியேறவில்லை? அதற்கு காரணம் அவர்களுக்கு வேறு இடத்தில் வீடு இருப்பதால்தான் என்பது தெளிவாகிறது. இத்தகைய பிரச்சினைகள் அனுராதபுரம் மாவட்டத்தில் மட்டுமன்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படுகின்றன. ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இவ்வாறான பாரிய வீட்டுத் திட்டங்கள் காணப்படுகின்றன. நாம் தற்போது வீடமைப்பு அதிகார சபையில் அது தொடர்பான தகவல்களைக் கோரியுள்ளோம். அந்த தகவல்களைப் பெற்றுக்கொண்டு இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் குழுவொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது என்றார். https://www.virakesari.lk/article/236750- காணாமல் போன தொடர்பான 11 ஆயிரம் புகார்கள்: 2 ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும்
காணாமல் போன தொடர்பான 11 ஆயிரம் புகார்கள்: 2 ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும் காணாமல் போனோர் தொடர்பாக பெறப்பட்ட 11 ஆயிரம் புகார்கள் மீதான விசாரணைகள் இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும். தற்போதைய சட்டமா அதிபரை நீக்குவது குறித்து அமைச்சரவையில் எந்த விவாதமும் இல்லை. பாரிய புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளுக்குத் தேவையான அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது காணாமல் போனோர் அலுவலகத்தின் ஆரம்ப விசாரணைக் குழுக்களின் தலைவர்கள் மற்றும் விசாரணைக் குழுக்களின் முதல் குழு உறுப்பினர்களை உணர வைப்பதற்கான முதல் பயிற்சித் திட்டம் மற்றும் அவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல் நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் வழக்கறிஞர் ஹர்ஷன நாணயக்காரவின் பங்கேற்புடன் வவுனியா மாவட்ட செயலகத்தில் வியாழக்கிழமை(22) அன்று நடைபெற்றது. காணாமல் போனோர் அலுவலகத்தின் கட்டமைப்பிற்குள் விசாரணைகளின் நோக்கங்களைப் புரிந்துகொள்வது, விசாரணைக் குழுக்களின் பங்கு, காணாமல் போனோர் அலுவலகத்தின் நிறுவன ஆதரவு, விசாரணைச் செயல்பாட்டின் படிகள், விசாரணை நடவடிக்கைகள் மற்றும் ஆரம்ப விசாரணை வினாத்தாள் போன்ற பிரச்சினைகள் குறித்து விசாரணைக் குழுக்களின் தலைவர்கள் மற்றும் விசாரணைக் குழுக்களின் உறுப்பினர்களை உணர வைப்பதற்காக இந்தப் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. பயிற்சி நிகழ்ச்சிக்குப் பிறகு ஊடகவியலாளர்களிடம் பேசிய அமைச்சர், பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்: காணாமல் போனோர் அலுவலகம் பெறும் புகார்களை முறையாக விசாரிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு முக்கிய காரணம், இந்த அலுவலகத்தில் உள்ள பிரச்சனை அல்ல, அப்போதைய அரசியல் சூழ்நிலை. காணாமல் போனோர் அலுவலகத்தில் போதுமான ஊழியர்கள் இல்லாததால், 65 அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த அலுவலகத்தின் விசாரணைக் குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்க ரூ. 375 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. காணாமல் போனோர் தொடர்பான பதினொரு ஆயிரம் புகார்கள் இதுவரை இந்த அலுவலகத்திற்கு வந்துள்ளன. இந்த ஐயாயிரம் புகார்களின் விசாரணைகள் இந்த ஆண்டு நிறைவடையும் என்றும், அனைத்து புகார்களின் விசாரணைகளும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. புகார்களை விசாரிப்பதன் முதன்மை நோக்கம் காணாமல் போனவர்களுக்கு இழப்பீடு வழங்குவது மட்டுமல்ல. அவர்கள் தங்கள் உயிருக்கு நீதியை விரும்புகிறார்கள். போர் முடிந்து பல ஆண்டுகள் கடந்துவிட்ட பிறகும், காணாமல் போனவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. அவர்கள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளுக்குப் பிறகு, தேவைப்பட்டால் மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படும். கடந்த காலங்களில் ஏற்பட்ட வலிகளைத் தவிர்த்து, இந்த மக்களிடையே நம்பிக்கையை வளர்ப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும். கேள்வி - தற்போது புதைகுழிகள் அகழ்வாராய்ச்சி தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் என்ன? அகழ்வாராய்ச்சிகள் தொடர்பாக டி.என்.ஏ சோதனைகள் குறித்தும் விவாதங்கள் உள்ளன. இதுகுறித்த கருத்து என்ன? பதில் - இந்தப் புதைகுழிகள் அகழ்வாராய்ச்சி தொடர்பாக நாங்கள் சிறப்பு ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறோம். தேவையான ஏற்பாடுகளை முறையாக வழங்கவும், இந்த அகழ்வாராய்ச்சிகளை வெளிப்படையாக நடத்தவும் நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். வெளிநாடுகளிலிருந்து அறிவியல் உதவிகளைப் பெற்று தேவையான விசாரணைகளை நடத்த நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். விசாரணைகளின் போது தவறு செய்தவர்கள் தெரியவந்தால், அவர்களை தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் உதவியுடன் டி.என்.ஏ மற்றும் பிற தொழில்நுட்ப ஆய்வகங்களைப் பெறவும் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். கேள்வி - காணாமல் போனோர் அலுவலகத்திற்கு பெறப்பட்ட புகார்கள் தொடர்பாக இந்த பயிற்சி பட்டறையில் ஒரு தரவுத்தள அமைப்பு விவாதிக்கப்பட்டது. ஒரே காணாமல் போனவர் தொடர்பாக இரண்டு அல்லது மூன்று புகார்கள் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. பதில் - இந்த அலுவலகத்திற்கு ஒரு தரவுத்தள அமைப்பு அவசியம். இந்த அலுவலகம் 2018 இல் நிறுவப்பட்டது. காணாமல் போனவர்கள் தொடர்பாக பல ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்டுள்ளன. எனவே, ஒரு தரவுத்தள அமைப்பு தேவை. கேள்வி - இந்த விசாரணைகள் வடக்கு மற்றும் கிழக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பாக மட்டுமே நடத்தப்படுகின்றனவா, மேலும் தெற்கில் காணாமல் போனவர்கள் குறித்தும் விசாரணைகள் நடத்தப்படுகின்றனவா? பதில் - வடக்கு மற்றும் கிழக்கில் காணாமல் போனவர்கள் குறித்து மட்டுமல்ல. தெற்கிலும் காணாமல் போனவர்கள் குறித்து விசாரணைகள் நடத்தப்படுகின்றன. இந்த பயிற்சிகளுடன், தெற்கிலும் விசாரணைக் குழுக்கள் நிறுவப்படுகின்றன. 1988-89 இல் நடந்த காணாமல் போனவர்கள் குறித்தும் விசாரணைகள் நடத்தப்படுகின்றன. வடக்குக்கும் தெற்கிற்கும் இடையில் ஒரு பிரிவு இருக்கக்கூடாது. விசாரணைகள்நடத்தப்பட வேண்டும். விசாரணைகள் நடத்தப்படுகின்றன. கேள்வி - தற்போதைய சட்டமா அதிபரை பதவி நீக்கம் செய்வது குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு கதைகள் பரவி வருகின்றன. நீதி அமைச்சர் என்ற முறையில் உங்கள் கருத்து என்ன? பதில் - . தற்போதைய சட்டமா அதிபரை இன்று பதவியில் இருந்து நீக்குவது குறித்து பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமூக ஊடகங்களில் எந்த வகையான அறிக்கைகள் வெளியிடப்பட்டாலும், சட்டமா அதிபரை பதவி நீக்கம் செய்வது குறித்து அமைச்சரவையில் எந்த விவாதமும் நடத்தப்படவில்லை. சட்டமா அதிபர் பாதுகாக்கப்பட வேண்டும் என்று சமூக ஊடகக் கருத்துக்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. அவர் நீக்கப்பட வேண்டும் என்று சமூக ஊடகக் செய்திகள் வெளியிடப்படுகின்றன. சட்டமா அதிபரை மட்டுமல்ல, நீதி அமைச்சரையும் வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று சில சமூக ஊடகக் செய்திகள் வெளியிடப்பட்டன. இதைத்தான் நான் சொல்ல வேண்டும். நீதி அமைச்சர் அல்லது வேறு யாரையாவது பற்றி புகார்கள் இருந்தால், இந்த நாட்டில் உள்ள சட்டம் அனைவருக்கும் சமமாகப் பொருந்தும். நீங்கள்புகார் செய்யலாம். சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் விஷயங்களுடன் அரசாங்கத்திற்கு எந்த தொடர்பும் இல்லை. சட்டமா அதிபரை நீக்குவது அல்லது பதவி நீக்கம் செய்வது குறித்து அமைச்சரவையில் எந்த விவாதமும் இல்லை என்றும் அமைச்சர் கூறினார். https://www.tamilmirror.lk/செய்திகள்/காணாமல்-போன-தொடர்பான-11-ஆயிரம்-புகார்கள்-2-ஆண்டுகளுக்குள்-முடிக்கப்படும்/175-371404- 2026 யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு: யாழ்ப்பாண பல்கலைக்கழகம் – இந்தியாவின் சுரானா & சுரானா சட்ட நிறுவன இணைப்பு
2026 யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு: யாழ்ப்பாண பல்கலைக்கழகம் – இந்தியாவின் சுரானா & சுரானா சட்ட நிறுவன இணைப்பு Published By: Vishnu 23 Jan, 2026 | 04:31 AM யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறையானது இந்தியாவின் சுரானா மற்றும் சுரானா சட்ட நிறுவனத்துடன் இணைந்து 2026ம் ஆண்டின் யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாட்டை தை மாதம் 24ம் மற்றும் 25ம் திகதிகளில் நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளது. சுரானா மற்றும் சுரானா சட்ட நிறுவனத்துடன் 2024ம் ஆண்டில் முதல்முதலாக கரம்கோர்த்து முதலாம் யாழ்ப்பாண சட்ட மாநாட்டை ஒழுங்கு செய்த யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறையானது, 2025ம் ஆண்டில் சர்வதேச சட்ட நிபுணர்களை இணைத்து அதனை யாழ்ப்பான சர்வதேச சட்ட மாநாடாக பரிணாமிப்பதில் வெற்றி கண்டதுடன், தொடர்ந்து இவ்வாண்டு மூன்றாவது முறையாக இச்சர்வதேச சட்ட மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. அந்தவகையில் இம்மூன்றாவது சர்வதேச சட்ட மாநாடானது இரு தினங்களும் மருத்துவ பீடத்தின் ஹூவர் கலையரங்கில் காலை 9 மணி முதல் மாலைவரை இடம்பெறவுள்ளது. ஆய்வு, மறுவடிவமைப்பு. மீள்நிர்மாணம்” எனும் தொனிப்பொருளின் கீழ் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இவ்வருட மாநாட்டில் இலங்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளடங்கலாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்கள் பலர் கலந்துகொண்டு மாநாட்டின் தொனிப்பொருள் சார்ந்ததான பல்வேறு விடயப்பரப்புகள் தொடர்பில் உரையாடவுள்ளனர். மாநாட்டின் முதல் நாளன்று பிரதம விருந்தினராக உயர்நீதிமன்ற நீதிபதி சிதம்பரம்பிள்ளை துரைராஜாவும், கௌரவ விருந்தினராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தலைவர் நீதிபதி ரோகத்த அபேசூரியவும் சிறப்பு விருந்தினராக, வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் மேலதிக செயலாளருமான சரண்யா ஹசந்தி உருகொடவத்தே திசாநாயகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். மேலும் அன்றைய தினத்தின் பிரதம உரையாளர்களாக இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையத்தின் நிர்வாக இயக்குனரான கலாநிதி மரியோ கோமெஸிம், பாரிஸ்டர் ஸாரா மண்டிவல்லா அக்பரால்டும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். முதல்நாள் நிகழ்வின் மற்றுமொரு பிரதான அம்சமாக “சட்டத்தின் எதிர்காலம் ஆட்சி நிர்வாகம், தொழிநுட்பம், சமூகம் மற்றும் உலக பொருளாதாரம்” எனும் தொனிப்பொருளின் கீழான குழுக் கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலானது ஆட்சி நிர்வாகமும் சட்டவாட்சியும், சட்டமும் தொழிநுட்பமும், சமூக மற்றும் பண்பாட்டு பரிமாணங்கள், சூழலும் காலநிலை மாற்றமும், வணிகமும் எண்ணியல் பொருளாதாரமும் எனும் தலைப்புகளின் கீழ் நடைபெறவுள்ளதோடு குறித்த தலைப்புகள் தொடர்பில் முறையே சட்டத்தரணி லூவி கணேசநாசன், இலங்கை ஜிரிஎன் டெக்னாலஜிஸின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் ஜிரிஎன் குழுமத்தின் உலகளாவிய பகிரப்பட்ட சேவைகள் தலைவர் அர்ஜுன நாணயக்கார,கலாநிதி பகீரதி ரசனென், பேராசிரியர் அ.சர்வேஷ்வரன் மற்றும் ஷெலானி.சி.டயாஸ் ஆகியோர் உரையாற்றவுள்ளனர். அதனை தொடர்ந்து யாழ் மண்ணின் பண்பாட்டுச்சுவடுகளை பிரதிபலிக்கும் பண்பாட்டு நிகழ்வொன்றும் அன்றைய நாளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வானது, அன்றைய தினம் மாலை 6 மணி முதல் 9 மணி வரை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது. மாநாட்டின் இரண்டாம் நாளன்று பிரதம விருந்தினராக உயர்நீதிமன்ற நீதிபதி யசந்த கோதாகொடவும், கௌரவ விருந்தினராக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி கலாநிதி, பிராங்க் குணவர்தனவும், சிறப்பு விருந்தினராக அரசாங்கத் துணைத் தலைமை வழக்குரைஞர் ஹரிப்ரியா ஜயசுந்தரவும் பங்கேற்று சிறப்பிக்கவுள்ளனர். மேலும் அன்றைய நாளின் சிறப்புரைகளை ஜனாதிபதி சட்டத்தரணி விவேகானந்தன் புவிதரனும் பேராசிரியர் சாந்தி செகராஜசிங்கமும் வழங்கவுள்ளனர். இரண்டாம் நாளின் மற்றொரு பிரதான நிகழ்வாக ஆட்சி நிர்வாகமும் சட்டவாட்சியும், சட்டமும் தொழிநுட்பமும், சமூக மற்றும் பண்பாட்டு பரிமாணங்கள், சூழலும் காலநிலை மாற்றமும், வணிகமும் எண்ணியல் பொருளாதாரமும் எனும் தலைப்புகளின் கீழ் ஆய்வாரள்கள். தங்களின் ஆய்வுக்கட்டுரை சுருக்கங்களை முன்வைக்கவுள்ளனர். மாநாட்டின் ஓரங்கமாக “செயற்றிட்டங்களிலிருந்து பங்காளித்துவத்திற்கு தூண்டுகோலாக மக்கள் பங்கேற்பு” எனும் தொனிப்பொருளின் கீழான மாநாட்டு முன் சிறப்பு அமர்வு ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வானது தை மாதம் 23ம் திகதி பிற்பகல் 3மணி முதல் 6 மணி வரை யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் பிரதேச செயலாளர் இ.விஜயகுமார், பொறியியலாளர் அ. ரொபர்ட் பீரிஸ்,யாழ் பல்கலைக்கழக சமூகவியல் துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி அகிலன் கதிர்காமர் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆர்வலர் வைதேகி நரேந்திரன் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். ஆர்வமுள்ளவர்கள் பங்குபற்றி பயன்பெற்றுக்கொள்ளுமாறு மாநாட்டு ஒழுங்கமைப்புக்குழுவினர் கோரியுள்ளனர். https://www.virakesari.lk/article/236743- 🏏 யாழ்ப்பாணம் செல்கிறது T20 உலகக்கிண்ணம்! வடபுல கிரிக்கெட் ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி! 🏆
🏏 யாழ்ப்பாணம் செல்கிறது T20 உலகக்கிண்ணம்! வடபுல கிரிக்கெட் ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி! 🏆 adminJanuary 23, 2026 இலங்கை மற்றும் இந்திய நாடுகள் இணைந்து நடத்தும் 10-வது ICC T20 உலகக்கிண்ணத் தொடர் (2026) எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், அதன் உத்தியோகபூர்வ கிண்ணம் தற்போது இலங்கைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இலங்கையின் பல்வேறு பாகங்களுக்கும் கொண்டு செல்லப்படும் இந்த உலகக்கிண்ணம், வடபகுதி ரசிகர்களின் பார்வைக்காக யாழ்ப்பாணத்திற்கும் எடுத்துச் செல்லப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 📅 கடந்த 21-ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கொழும்பில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனவரி 21 முதல் 24-ஆம் திகதி வரை இலங்கையின் முக்கிய நகரங்களான கண்டி, தம்புள்ளை மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இக்கிண்ணம் கொண்டு செல்லப்படவுள்ளது. பெப்ரவரி 07, 2026 அன்று கொழும்பு SSC மைதானத்தில் நடைபெறும் பாகிஸ்தான் – நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டத்துடன் தொடர் ஆரம்பமாகிறது. 🏟️ இந்த உலகக்கிண்ணத் தொடரில் மொத்தம் 20 போட்டிகள் இலங்கையில் நடைபெறவுள்ளன. • கொழும்பு ஆர். பிரேமதாச மைதானம் (8 போட்டிகள்) • கொழும்பு SSC மைதானம் (5 போட்டிகள்) • கண்டி பல்லேகலை மைதானம் (7 போட்டிகள்) பாகிஸ்தான் அணி பங்கேற்கும் அனைத்து லீக் போட்டிகளும் இலங்கையிலேயே நடைபெறவு உள்ளதோடு, அவ்வணி இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறும் பட்சத்தில் இறுதிப்போட்டியும் கொழும்பிலேயே நடைபெறும் என்பது விசேட அம்சமாகும். யாழ். மண்ணுக்கு செல்லும் உலகக்கிண்ணத்தை நேரில் கண்டு மகிழவும், அதனுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இதுவொரு அரிய வாய்ப்பாகும்! 😍🔥 https://globaltamilnews.net/2026/227228/- இலங்கையில் கடந்த வருடம் 1,550 தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்!
நாட்டில் 1282 புதிய தொழுநோயாளர்கள் அடையாளம்; 10 சதவீதமானோர் சிறுவர்கள் Published By: Vishnu 23 Jan, 2026 | 04:36 AM (செ.சுபதர்ஷனி) சமூகத்தில் உள்ள ஒவ்வொரு 10 ஆயிரம் பேரிலும் ஒருவர் தொழுநோயாளியாகக் காணப்படுகின்றார். அந்த வகையில் கடந்த வருடம் மாத்திரம் நாட்டில் 1282 புதிய தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் 10 சதவீதமானோர் 15 வயதுக்கும் குறைந்த சிறுவர்கள் என தொழுநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் பிரதிப் பணிப்பாளர் சமூக வைத்திய நிபுணர் யசோதா வீரசேகர தெரிவித்தார். சர்வதேச தொழுநோய் தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் புதன்கிழமை (21) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை சர்வதேச தொழுநோய் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அந்த வகையில் எதிர்வரும் 25ஆம் திகதி சர்வதேச தொழுநோய் தினமாகும். தொழுநோய் இன்னும் சமூகத்திலிருந்து முற்றாக ஒழிக்கப்படவில்லை. கடந்த வருடம் மாத்திரம் நாட்டில் 1282 புதிய தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 10 சதவீதமானோர், அதாவது 123 பேர் 15 வயதுக்கும் குறைந்த சிறுவர்கள் எனத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. அடையாளம் காணப்பட்ட நோயாளர்களில் 8 சதவீதமானோர் நோயின் நாட்பட்ட நிலையில் அங்கவீணர்களாக அல்லது உடல் பலவீனமடைந்த நிலையிலேயே வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்தனர். தொற்றுக்குள்ளான ஒருவரிடம் நோய் தாமதமாகக் கண்டறியப்படும்போது, அவரிடமிருந்து ஏனையவர்களுக்கும் நோய் பரவுகிறது. நாட்டில் பரவி வரும் இந்தத் தொற்றைத் தடுக்கப் புதிய நோயாளர்களை விரைவாகக் கண்டறிய வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. தொற்றாளருடன் நீண்டகாலமாக நெருங்கிப் பழகும் குடும்பத்தினர், அயலவர்கள் மற்றும் பணிபுரியும் இடத்தில் உள்ளவர்களே இத்தொற்றுக்கு ஆளாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. தொழுநோய் தொடர்பாகச் சமூகத்தில் நிலவி வரும் தவறான புரிதல்கள் காரணமாக, தொற்றாளர்களைக் கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஆகையால், நோயாளர்கள் தயக்கங்களை விடுத்துத் தாமாக முன்வந்து சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வது அவசியமாகும் என்றார். இதேவேளை, சமூக வைத்திய நிபுணர் திலினி சிறிவர்தன குறிப்பிடுகையில், தொழுநோயை ஏற்படுத்தும் கிருமிகள் சருமத்தை மாத்திரமல்லாது நரம்பு மண்டலத்தையும் பாதிப்பதால், நோயின் நாட்பட்ட நிலையில் உடல் பலவீனமடைந்து நோயாளர்கள் அங்கவீனர்களாகின்றனர். ஒவ்வொரு வருடமும் சுமார் 1500 நோயாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்படுகின்றனர். தொழுநோயால் ஒருவர் உயிரிழப்பதில்லை என்றாலும், சாதாரண வாழ்க்கையை வாழ முடியாத நிலைக்கும் மன உளைச்சலுக்கும் தள்ளப்படுகின்றனர். இலங்கையில் மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் மட்டக்களப்பு, குருநாகல் ஆகிய 5 மாவட்டங்களிலேயே அதிகளவான தொழுநோயாளர்கள் கண்டறியப்படுகின்றனர் என்றார். https://www.virakesari.lk/article/236744- ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
பங்களாதேஷ் விளையாடுவது இன்னும் இழுபறியில் உள்ளது!- கிரீன்லாந்து - ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்கா விதிக்க இருந்த மேலதிக வரி நீக்கம்
இரஸ்சியா உக்கிரேன் போர் ஆரம்பித்த காலப்பகுதியிலேயே யாழ்களத்தில் விவாதிக்கப்பட்ட அந்த போரின் விளைவால் ஏற்ப்ட போகும் புதிய உலக ஒழுங்கு விவாதத்தில் கூறப்பட்ட விடயங்கள் அப்போது வெறும் சதிக்கோட்பாடாக பார்க்கப்பட்டது, 10 வருடங்கள் கூட இல்லை 4 வருடத்திலேயே உலக நிகழ்வுகள் கள யதார்த்தினை சொல்கிறது. ஐரோப்பாவில் இரஸ்சியாதான் ஒரு பலச்சமனிலை, அது வரலாற்று ரீதியாக தவிர்க்க முடியாத உணமை. இரஸ்சியாவின் நீண்ட கால நோக்கம் ஐரோப்பிய பிராந்தியத்தில் பிராந்திய வல்லரசாக தன்னை நிலை நிறுத்துவதே, அதற்கு சமமான ஒரு இரஸ்சிய முதன்மையான ஒரு ஐரோப்பிய பாதுகாப்பு பொறிமுறையினை உருவாக்கவேண்டும் என்பதே, கடந்த காலத்தில் நேட்டோ - இரஸ்சிய கவுன்சில் போன்றவையோ அல்லது சாதாரண கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பாணியிலான நேட்டோ உறுப்புரிமையினை இரஸ்சியா விரும்பவில்லை. இரஸ்சியாவின் எதிர்ப்பார்ப்பு நேட்டோ பொறிமுரையில் சாத்தியமாகாது என கருதியமையாலேயே 2008 இல் ஐரோப்பாவிற்கு தனியான பாதுகாப்பு பொறிமுறை வேண்டும் என புட்டின் கூறினார், தற்போது மேற்கு ஐரோப்பிய ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமை நாடுகளே கோருகிறார்கள். ஐரோப்பிய பிராந்திய பாதுகாப்பு, பொருளாதாரத்தில் இரஸ்சியா தவிர்க்க முடியாத சக்தி, தற்போது அமெரிக்காவிற்கு ஐரோப்பாவில் இருக்கும் துருப்பு சீட்டு இரஸ்சியா எனும் நிலையினை ஐரோப்பிய நாடுகள் வலிந்து உருவாக்கி விடக்கூடாது. ஐரோப்பிய ஒன்றியம் தனது அதிகாரப்பேணலிற்காக இரஸ்சியாவினை எதிர்த்தரப்பில் வைத்தால் ஐரோப்பாவிற்குத்தான் நட்டம், அல்லது மேற்கு எப்போதும் கனவு காணும் பொறிஸ் எல்சின் போன்ற ஒரு ஆட்சியாளர் ஒரு தற்கால தீர்வு மட்டுமே. இந்த பல்துருவ உலக ஒழுங்கில் ஐரோப்பிய நாடுகள் கூட்டணியில் இரஸ்சியா முதன்மை நாடாக வருவது இயல்பான விடயம், ஆனால் இரஸ்சியாவினை தவிர்த்து ஐரோப்பா; இரஸ்சியா அற்ற ஐரோப்பா என தற்போது போல செயற்பட்டால் அது ஒரு நெருக்கடி நிலையினை தொடர்ந்து காணப்படும் அது ஐரோப்பிய நலனிற்கு நீண்டகால அளவில் நல்லதல்ல. ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவுடன் ஒரு நெருக்கமான தொடர்பாடலை உருவாக்க முனைகிறது(அண்மைய நடவடிக்கைகள்), இது ஆசிய பிராந்திய வல்லரசான சீனாவிற்கான ஒரு பலச்சமனிலையினை மட்டும் பேணுவதற்கல்ல, இரஸ்சியாவினை பலவீனமாக்குவதற்கும், இனிவரும் காலங்களில் ஊசலாடும் பலமான இந்தியாதான் பிராந்தியத்தில் அரசியல் ரீதியான செல்வாக்கினை செலுத்த போகிறது. இதனாலேயே நாங்களும் இந்தியாவுடன் எமது தொடர்புகளை அதிகப்படுத்தவேண்டும் என கருதுகிறேன், இந்தியா ஆசிய பிராந்தியத்தில் தவிர்க்க முடியாத சக்தி, ஐரோப்பாவில் உக்கிரேன் தன்னை ஒரு ஊசலாடும் பலமாக (இந்தியா போல்) மாற்றினால் நிலமை மாறலாம் ஆனால் உக்கிரேன் வேண்டுமென்றே தவறினை செய்வது போல இருக்கிறது (அதற்கு பின்னால் ஏதாவது உள்குத்து இருக்கலாம்).- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
கம்பிகட்டி பிளேற் போட்ட சம்பளம் 18000 ரூபா (4பேர் செய்தவை) அசிட் போட்டு சுத்தமாக்கிய கூலி 5000 ரூபா பழைய கொமட் கழட்டி, புதிய கொமட் பூட்டிய கூலி 8000 ரூபா மொத்தம் 31000 ரூபா, மட்டமாக 30000 ரூபா தருவதாக கேட்டேன், சம்மதித்துள்ளார். 4 லீற்றர் அசிற் காசு 3200 ரூபா இன்று தெரிந்த பாமசி நண்பரின் வங்கிக் கணக்கிற்கு 32400 ரூபா மாற்றி பணத்தை பெற்றுக் கொடுக்கிறேன்.- 📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –
தமிழரசு கட்சியின் அருவருப்பான செயல்களால்… மக்கள் அவர்களை விட்டு விலகி தேசியக் கட்சியான, அனுரா கட்சிக்கு போய் சேர்ந்து… யாழ்ப்பாணத்தில் இருந்து மூன்று பாரளுமன்ற உறுப்பினர்களையும், ஒரு சுயேச்சை உறுப்பினரையும் தேர்ந்து எடுத்து விட்டார்கள். சும்மா கிடந்த வைத்தியர் அர்ச்சுனாவை… பாராளுமன்றத்துக்கு அனுப்பி விட்டதே இவர்கள் தான். அர்ச்சுனாவின் கௌசல்யா எடுத்த வாக்கை கூட…. சுமந்திரனால் எடுக்க முடியவில்லை. இதற்குள் மாகாண முதல்வர் கனவு வேறை. இப்படிப் பட்டவர்கள் பொங்கலுக்கு அழைப்பு விடுத்தால்… ஒருவரும் கலந்து கொள்ள மாட்டார்கள் என்பதால்.. பம்மிக் கொண்டு இருந்து விட்டு… அனுரா கொண்டாடும் பொங்கலைப் பார்த்து, வயிறு எரிகின்றார்கள். மக்கள் உசாராகி விட்டார்கள். இவர்களின் சுத்துமாத்து அரசியல் இனி… எடுபடாது. தனது தலையில் மண்ணை அள்ளிப் போட்ட கட்சி என்றால்…. சுமந்திரன், சிவஞானத்தின் தமிழரசு கட்சிதான்.- "வணக்க தலங்களில் மோதல்": பௌத்த விகாரைகள், தமிழர்கள் பற்றி இலங்கை ஜனாதிபதி கூறியது என்ன?
விகாரைக்குரிய காணியை தவிர்த்து, பொதுமக்களின் காணியில் விகாரை கட்ட வேண்டிய தேவை என்ன? அது இந மத நல்லிணக்கமா அல்லது அதிகார தோரணையா? தமிழ் மக்களை நிம்மதியாக வாழவிடுவதில்லை, எல்லாவற்றையும் அடித்து பிடுங்குவது என்பதே இவர்களின் அரசியல் கொள்கை. - ஈரானை நோக்கி அமெரிக்கக் கடற்படை சென்று கொண்டிருப்பதாக ட்ரம்ப் தெரிவிப்பு!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.