24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
நல்லிணக்கத்துக்கு தமிழ் தலைவர்கள் உதவ வேண்டும்; கரும்புள்ளியை ஏற்படுத்தி விடக் கூடாதென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த வேண்டுகோள்
நல்லிணக்கத்துக்கு தமிழ் தலைவர்கள் உதவ வேண்டும்; கரும்புள்ளியை ஏற்படுத்தி விடக் கூடாதென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த வேண்டுகோள் Published By: Vishnu 04 Feb, 2026 | 04:24 AM (எம்.மனோசித்ரா) நாட்டில் அனைத்து இன மக்களும் சுதந்திரமாக வாழக் கூடிய சூழலை நாம் ஏற்படுத்தியிருக்கின்றோம். எனவே நாட்டில் பரந்துபட்ட நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு சிறிதரன் உள்ளிட்ட அனைவரும் உதவ வேண்டுமே தவிர, அதில் கரும்புள்ளியை ஏற்படுத்தும் வகையில் செயற்படக் கூடாது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (3) வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இடம்பெற்றது. இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சுதந்திர தினத்தை துக்க தினமாக அனுஷ்டிப்பதாக தெரிவித்துள்ளமை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்மு ஊடகவியலாளர்களால் கேட்க்கப்பட்டது. அந்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், தேசிய சுதந்திர தினம் என்பது நாட்டிலுள்ள சகல மக்களுக்குமானதுமான தினமாகும். இதில் எவ்வித இன, மத, மொழி பேதமும் இல்லை. எனினும் சில அரசியல்வாதிகள் தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மக்கள் மத்தியில் குழப்பங்களை உருவாக்க முயற்சிக்கின்றனர். சுதந்திர தினத்தில் மக்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டியது அத்தியாவசியமானதாகும். அதற்காக ஒன்றிணையுமாறு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் சகலருக்கும் அழைப்பு விடுக்கின்றோம். சில சந்தர்ப்பங்களில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையில் காணப்படும் போட்டி அல்லது அரசியல்வாதிகளுக்கிடையிலான போட்டி , தலைமைத்துவம் தொடர்பான பிரச்சினை உள்ளிட்டவற்றை நோக்கமாகக் கொண்டு மக்கள் தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றனர். சுதந்திர தினம் அல்லது ஏனைய தேசிய நிகழ்வுகளின் போது நாட்டு மக்கள் ஒன்றிணையும் போது, இவ்வாறான கருத்துக்களை வெளியிடப்படுவதை தொடர்ச்சியாக அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இவை சில அரசியல்வாதிகளிடத்தில் காணப்படும் பிரச்சினையே அன்றி, அது நாட்டு பிரச்சினையல்ல. எனவே அவரால் அவ்வாறானதொரு கருத்து தெரிவிக்கப்பட்டிருக்குமானால் அது கவலைக்குரியதாகும். இந்நாட்டில் அனைத்து இன மக்களும் சுதந்திரமாக வாழக் கூடிய சூழலை நாம் ஏற்படுத்தியிருக்கின்றோம். எனவே நாட்டில் பரந்துபட்ட நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு சிறிதரன் உள்ளிட்ட அனைவரும் உதவ வேண்டுமே தவிர, அதில் கரும்புள்ளியை ஏற்படுத்தும் வகையில் செயற்படக் கூடாது என்றார். https://www.virakesari.lk/article/237756#google_vignette
-
78வது தேசிய சுதந்திர தின நிகழ்வு ஆரம்பம் (நேரலை)
78வது தேசிய சுதந்திர தின நிகழ்வு ஆரம்பம் (நேரலை) Feb 4, 2026 - 07:44 AM 78வது தேசிய சுதந்திர தின நிகழ்வு தற்சமயம் ஆரம்பமாகியுள்ளது. "இலங்கையை கட்டியெழுப்புவோம்" என்ற கருப்பொருளின் கீழ் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் இந்த நிகழ்வு இடம்பெறுகின்றது. சுதந்திர சதுக்க வளாகத்தில் இடம்பெறும் இந்நிகழ்வை நேரலையில் பார்வையிட, சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வின் நேரடி ஒளிபரப்பு இன்று காலை 7.45 மணி முதல் டிவி தெரண (TV Derana) மற்றும் அத தெரண (Ada Derana) ஊடாக ஒளிபரப்பப்படும். இன்று காலை சுமார் 7.50 மணியளவில் பிரதம நீதியரசர் திரு. பிரீதி பத்மன் சூரசேன சுதந்திர சதுக்கத்திற்கு வருகை தந்தார். இதேவேளை, சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்னவும் விழா நடைபெறும் வளாகத்திற்கு வருகை தந்துள்ளார். அத்துடன் பிரதமர் ஹரிணி அமரசூரிய சற்றுமுன்னர் வருகைத் தந்தார். https://adaderanatamil.lk/news/cml7e95a704sto29nfweznwp5
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் ........! இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் பெண் : நான் சீனியில் செய்த கடல் நான் சீனியில் செய்த கடல் வெள்ளை தங்கத்தில் செய்த உடல் வெள்ளை தங்கத்தில் செய்த உடல் பெண் : உன் காதலி நானே காதல் தானே ஆனதே பெண் : { நான் முத்தம் தின்பவள் ஒரு முரட்டு பூ இவள் நான் தினமும் தோற்பவள் அந்த ஆடை சண்டையில் } (2) பெண் : இனி குறையட்டும் திருவிளக்கு நீ இடம் சுட்டி பொருள் விளக்கு அட கடவுளை அடையும் வழியில் என் பேர் எழுதிருக்கு பெண் : மையா மையா நிலாவை வண்ணம் பூசி வைத்துக்கொள் மையா மையா என் உடலினில் ஒளி விட்ட மலர்களும் பொய்யா பொய்யா பெண் : நான் புன்னகை செய்தால் போதும் அட திசைகள் உடைந்திட கூடும் என் நற்பமே என் கீரீடமே பல அம்புகள் செலுத்திடும் பெண்மகள் நான் பெண் : என்னை பார்த்ததுமே என் கண்ணாடி என்னை காதலிக்கும் பல பெண்களை திருடும் பல ஆண்களை வெல்ல ஆறடி ஆயுதம் ஆனேனே பெண் : மென் காற்றில் என் மூச்சில் சில யுகமாய் வீசும் பெண் : இனி நாளும் என் குரலில் பல கூ கூக்கள் கூவும் பெண் : கமா கமா இது போதுமா…என் பார்வை ஒளியை காலங்கள் தேடும்..........! --- நான் முத்தம் தின்பவள் ---
-
சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல்!
'எமது வீட்டுக்குள் வந்து எங்களை தாக்குவது போன்றது' - அடையாளம் தெரியாத குழுவால் தாக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் கட்டுரை தகவல் பிபிசி சிங்கள சேவை 3 பிப்ரவரி 2026 ''இந்த சம்பவம் இலங்கை கடற்பரப்பிலேயே நடந்தது. காலி பிரதேசத்திற்கு நேராக மேற்கு கடற்பரப்பில் இந்த சம்பவம் நேர்ந்தது. இது எமக்கு புதுமையாகவுள்ளது. இந்த கப்பல் எமது நாட்டு ரேடார் கட்டமைப்பில் நிச்சயமாக பதிவாகியிருக்கும்'' ''எமது நாடு... எமது வீட்டுக்குள் வந்து, எம்மீது தாக்கியதை போன்றதொரு சம்பவம் தான் இது. எமது எல்லைக்குள் வந்து தாக்குதலை நடத்தியமையானது, எமது வீட்டுக்குள் வந்து தாக்கியதை போன்றது அல்லவா'' என இலங்கை மீனவர் சுரங்க நிசல் பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார். மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற இலங்கை மீனவர்கள் மீது நடுக்கடலில் வைத்து, வெளிநாட்டவர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவமானது நடந்துள்ளது. தம்மீது இந்திய பாதுகாப்பு பிரிவினரே தாக்குதல் நடத்தியதாக, தாக்குதலுக்கு இலக்கான இலங்கை மீனவர்கள் கூறி வருகின்ற நிலையில், இது ராஜீய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. 'ராஜீய ரீதியில் தீர்த்துக்கொள்ள வேண்டிய பிரச்னை' இது ராஜீய ரீதியில் தீர்த்துக்கொள்ள வேண்டிய பிரச்னை என கடற்றொழில் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார். ''29ம் தேதி இரண்டு படகுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 30ம் தேதி மற்றுமொரு படகில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 29ம் தேதி தாக்குதல் தொடர்பான தகவல் கிடைத்தவுடன், கடற்படைக்கு நாங்கள் அறிவித்து, படகொன்றை விரைவில் அனுப்பி அவர்களை காலிக்கு அழைத்து வந்தோம். அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சைகளின் பின்னர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்'' ''இந்திய பாதுகாப்பு பிரிவினர் தாக்குதல் நடத்தியதாக மீனவர்கள் கூறுகின்றார்கள். எனினும், எமக்கு அது தொடர்பில் உறுதியாக தெரியாது. அதனால், வெளிவிவகார அமைச்சுக்கும், கடற்படைக்கும் நாங்கள் அறிவித்தோம். தாக்குதலை நடத்துவதற்கு வருகைத் தந்த படகு இலங்கைக்கு சொந்தமானதா? அல்லது வெளிநாட்டுக்கு சொந்தமானதா என்பது தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காகவே நாங்கள் அவர்களுக்கு அறிவித்தோம்'' என்கிறார் ரத்ன கமகே. படக்குறிப்பு,இலங்கை மீனவர் சுரங்க நிசல் ''அது வெளிநாட்டுக்கு சொந்தமானது என்றால், அது அதிகாரப்பூர்வமானதா அல்லது அதிகாரப்பூர்வமற்றதா என்பது குறித்தும் ஆராயுமாறு கூறியுள்ளோம். அதன்பின்னர் போலீஸ் தரப்பிலும் விசாரணைகளை நடத்துமாறு நாங்கள் அறிவித்துள்ளோம். தாக்குதலுக்கு இலக்கான நபர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்து, அது தொடர்பிலான முழுமையான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளோம்'' என்கிறார் ரத்ன கமகே. எனினும், இந்த தாக்குதலை இந்திய தரப்பினால் மேற்கொள்ளப்பட்டது என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என கடற்றொழில் பிரதி அமைச்சர் குறிப்பிடுகின்றார். ''எனினும், இது வெளிநாடொன்றுடன் தொடர்புப்பட்டுள்ளமையினால், ராஜீய ரீதியில் இதற்கு தீர்வு காண வேண்டும்'' என அவர் கூறுகின்றார். படக்குறிப்பு,தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் நெடுநாள் மீன்பிடி படகின் உரிமையாளர் என்ன சொல்கின்றார்? இலங்கை கடல் எல்லைக்குள் மற்றும் சர்வதேச கடல் எல்லையில் இலங்கை நெடுநாள் மீன்பிடி படகிலிருந்த மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் 8 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் பலத்த காயமடைந்த நால்வர் காலி போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அனைத்து இலங்கை நெடுநாள் மீன்பிடி படகின் உரிமையாளர் சங்கம் தெரிவிக்கின்றது. வெல்லமன்கரய மீன்பிடி துறைமுகத்திலிருந்து தொழிலுக்கு சென்ற சிலாபம் - தொடுவாவ பிரதேசத்தின் 'தினிதி துவ' பெயரை கொண்ட இரண்டு படகுகள் மற்றும் 'சந்துன் புதா' ஆகிய மூன்று படகுகளில் சென்ற மீனவர்களே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக சங்கத்தின் செயலாளர் ருவன் பெர்ணான்டோ தெரிவிக்கின்றார். 'தினிதி துவ 1' மற்றும் 'தினிதி துவ 2' ஆகிய இரண்டு படகுகளில் சென்றவர்களும் ஒரு மாதத்திற்கு மேல் தொழில் செய்து, மீண்டும் வெண்ணப்புவ நோக்கி வருகைத் தந்துகொண்டிருந்த போது, கடந்த ஜனவரி மாதம் 29ம் தேதி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். அத்துடன், தியேகோ கார்சியா தீவுக்கு அருகில் வைத்து ஜனவரி மாதம் 30ம் தேதி சந்துன் புதா படகில் சென்ற மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் நடத்தப்படும் தருணத்தில் இந்திய பாதுகாப்பு பிரிவினருடன் சிங்கள மொழியை பேசிய இரண்டு நபர்கள் இருந்துள்ளதுடன், அவர்கள் மொழிபெயர்ப்பு உதவிகளை செய்துள்ள நிலையில், அவர்கள் கறுப்பு நிறத்திலான கடற்படை சீருடையை அணிந்திருந்ததாக தாக்குதலுக்கு இலக்கான இலங்கை மீனவர்கள், இலங்கை நெடுநாள் மீன்பிடி படகின் உரிமையாளர் சங்கத்திடம் கூறியுள்ளனர். இந்திய பாதுகாப்பு பிரிவினர் என கூறப்படும் தரப்பினர் இலங்கை மீனவர்களின் படகுகளை சோதனை செய்துள்ளதுடன், போதைப்பொருள் இருக்கின்றதா என வினவியுள்ளனர் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர். "இரான் படகு, போதைப்பொருள் குறித்து கேட்டார்கள்" இந்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்துமாறு இந்தியாவை கோர வேண்டும் என தாக்குதலுக்கு இலக்கான மீனவர்களின் உறவினர்கள் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கின்றனர். தொடுவாவ, மாரவில, குடா மடுவெல்ல, மாதம்பே, சிலாபம் உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த 18 பேரே இந்த மூன்று படகுகளில் பயணித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை நெடுநாள் மீன்பிடி படகின் உரிமையாளர் சங்கத்திடம், மீனவர்கள் வழங்கிய அறிவிப்புக்கு அமைய விசாரணைகளை ஆரம்பித்ததாக கடற்றொழில் திணைக்களம் குறிப்பிடுகின்றது. தாக்குதலுக்கு இலக்கான மீனவரான சுரங்க நிசல், பிபிசி சிங்கள சேவையிடம் கருத்து தெரிவித்துள்ளார். ''சிறிய ரக படகொன்றில் ஐவர் வருகைத் தந்தார்கள். படகை சோதனை செய்து, தாக்குதலை நடத்தினார்கள். சேட்டிலைட் தொலைபேசி, இரான் படகு, போதைப்பொருள் தொடர்பில் வினவினார்கள். நாங்கள் தெரியாது என கூறிய போதிலும், அவர்கள் தாக்குதலையே நடத்தினார்கள்.'' என்கிறார் சுரங்க நிசல். அதன்பின்னர், தன்னை கப்பலுக்கு அழைத்து சென்று மீண்டும் தாக்குதலை நடத்தியதாக அவர் குறிப்பிடுகின்றார். ''இந்த மூன்று பேரையும், படகையும் பணயக்கைதிகளாக எடுக்குமாறு ஒருவர் வந்து கூறினார். நீ என்ன கூறுகின்றாய் என கேட்டார். 'அவர்களை கொலை செய்தாலும், என்னை கொலை செய்தாலும் என்னால் இதை மாத்திரமே கூற முடியும்' என நான் கூறினேன். 'எனக்கு ஒன்றும் தெரியாது. நாங்கள் ஒன்றையும் கொண்டு வரவும் இல்லை. ஒன்றும் கிடைக்கவும் இல்லை.' என கூறினேன்'' ''அதிலிருந்த சிங்களவர்கள் இருவர் என்னிடம் மீண்டும் விசாரணைகளை நடத்தினார்கள். சிங்களவர்களும் எம்மீது தாக்கி விசாரணைகளை நடத்தினார்கள்'' ''எம்மீது மீண்டும் தாக்குதல் நடத்த முயற்சி செய்த சந்தர்ப்பத்தில், 'என்னால் கூறுவதற்கு இதற்கு மேல் ஒன்றும் இல்லை' என்று கூறினேன். அதன்பின்னர் 'இவர்களிடம் ஒன்றும் இல்லை' என கூறி விடுவித்தார்கள்'' தாக்குதலை நடத்திய கப்பலை அடையாளம் கண்டுக்கொள்ள முடியுமா என தாக்குதலுக்கு இலக்கான மீனவரிடம் வினவிய போது, ''கப்பலில் 55 என்ற இலக்கம் இருந்தது. ஆங்கில எழுத்துக்கள் இருந்தன. எனக்கு நினைவில்லை'' என குறிப்பிட்டார். ''அதில் இந்தியர்கள் இருந்தார்கள் என்பதை நூறு வீதம் உறுதியாக என்னால் கூற முடியும். இந்தியாவின் கப்பல் என என்னால் கூற முடியும். அதில் தமிழர்களும் இருந்தார்கள். தலையில் துண்டை கட்டிய பஞ்சாபியர்களும் இருந்தார்கள். ஹிந்தி மொழியிலும் கதைத்தார்கள். தமிழ் மொழியிலும் கதைத்தார்கள். சிங்களவர்கள் இருவரும் இருந்தார்கள். அந்த இரண்டு சிங்களர்களுமே என்னிடம் விசாரணை செய்தார்கள். இரண்டு சிங்களவர்களும் எம்மீது தாக்குதல் நடத்தினார்கள். கொண்டு வந்ததை கூறுமாறு சொல்லி தாக்கினார்கள். இல்லையென்றால் நிச்சயமாக கொலை செய்வோம் என அச்சுறுத்தினார்கள்'' இந்த கப்பலில் 75 முதல் 100 பேர் வரை இருந்தார்கள் என சுரங்க கூறுகின்றார். இலங்கை கடற்படை கூறுவது என்ன? கடற்றொழில் திணைக்களம் வழங்கிய தகவலுக்கு அமைய, மருத்துவ நடவடிக்கைகளுக்காக இந்த மீனவர்கள் கரைக்கு அழைத்து வரப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் புத்திக்க சம்பத் பிபிசி சிங்கள சேவைக்கு தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு கடற்படையினர் ஆதரவை வழங்குவதாகவும் அவர் கூறுகின்றார். ''இலங்கையின் தெற்கு பகுதிக்கு சென்றே இவர்களை நாங்கள் மீட்டெடுத்தோம். அவர்கள் கூறும் இடம், தாக்குதல் நடத்திய தரப்பினர் யார் என்பது குறித்து கடற்படையினர் உறுதிப்படுத்திய பின்னரே கூற முடியும்." ''ஒவ்வொரு தரப்பினர் வெவ்வேறு கருத்துக்களை கூறுகின்றனர். ஒரு சந்தர்ப்பத்தில் இந்திய கடலோர காவல்படை என கூறுகின்றனர். இன்னுமொரு தருணத்தில் இந்திய கடற்படை என கூறுகின்றார்கள்.'' ''நாங்கள் தொழில்நுட்ப ரீதியில் விசாரணைக்கு ஆதரவை வழங்குவோம். அந்த இடத்தில் யார் இருந்தார்கள் என்பது குறித்து உறுதிப்படுத்திய பின்னரே எங்களால் அதனை கூற முடியும்'' என கடற்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிடுகின்றார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கோப்புப்படம் கொழும்பு இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பதில் இந்த விடயம் தொடர்பில் பிபிசி சிங்கள சேவை, கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தை தொடர்புகொண்டு வினவியுள்ளது. இந்திய கடற்படை அல்லது இந்திய கடலோர காவல்படை பிரிவினால் இலங்கை மீனவர்கள் தாக்கப்படவில்லை என கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களின் ஊடாக வினவப்படுகின்றதே தவிர, அரசாங்கத்தினால் உரிய முறையில் இதுவரை தம்மிடம் அறிவிக்கப்படவில்லை என இந்திய உயர்ஸ்தானிகராலயம் பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cjrzwlpd713o
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
உறவுகள் தொடர்கதை ........! 😘
-
எதிர்பாராத காட்சிப்படுத்தல்களுடன் குறுங்காணொளிகள்
காணொளிகள் ஒவ்வொன்றும் அருமை . ...... நன்றாக இருக்கின்றன .........! 😀 நன்றி ஏராளன் ...........!
-
4 மணி நேர வீர நீச்சல் : தாய், சகோதரன், சகோதரியை உயிருடன் மீட்ட 13 வயது சிறுவன்
பெற்றோர்களே, பிள்ளைகளுக்கு நீச்சல் பயிற்சியை கட்டாயமாகப் பழங்குங்கள்.
-
ஜனாதிபதி தலைமையில் 78ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் இன்று: 4000 படை வீரர்களின் பங்கேற்புடன் மரியாதை அணிவகுப்பு; 2000 பேருக்கு அழைப்பு
ஜனாதிபதி தலைமையில் 78ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் இன்று: 4000 படை வீரர்களின் பங்கேற்புடன் மரியாதை அணிவகுப்பு; 2000 பேருக்கு அழைப்பு Published By: Vishnu 04 Feb, 2026 | 03:45 AM (எம்.மனோசித்ரா) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் 78ஆவது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகள் இன்று புதன்கிழமை இடம்பெறவுள்ளன. கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்க வளாகத்தில் காலை 6.30 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளன. இம்முறை சுதந்திர தின நிகழ்வுகள் 'இலங்கையைக் கட்டியெழுப்புவோம்' எனும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ளன. கொழும்பிலுள்ள வெளிநாடுகளின் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், அமைச்சர்கள், ஆளும் மற்றும் எதிர்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் என சுமார் 2000 பேருக்கு நிகழ்வுகளில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார். முன்னாள் ஜனாதிபதிகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும், அவர்கள் கலந்து கொள்வது குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். எவ்வாறிருப்பினும் இம்முறை வெளிநாடுகளிலிருந்து விசேட அதிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என பொது நிர்வாக அமைச்சர் ஏ.எச்.எம்.எச்.அபேரத்ன தெரிவித்தார். கடந்த ஆண்டு 70 மில்லியன் ரூபாவுக்குள் இந்த பிரதான நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இவ்வாண்டு இதற்காக 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், செலவுகளை 60 - 70 மில்லியன் ரூபாவுக்குள் மட்டுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். சுதந்திர தின நிகழ்வுகள் ஆரம்பமாக முன்னர் காலை 6 மணிக்கு காலி முகத்திடலில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி டீ.எஸ்.சேனாநாயக்கவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. சர்வமத வழிபாடுகள் அத்தோடு காலை 5.30 மணி முதல் சர்வமத வழிபாடுகளும் இடம்பெறவுள்ளன. பௌத்த மத வழிபாடுகள் கொள்ளுபிட்டி - தர்மகீர்த்திராம விகாரையிலும், இந்து மத வழிபாடுகள் மயூராபதி பத்திரகாளி அம்மன் கோவிலிலும், கத்தோலிக்க ஆராதனைகள் பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்திலும், கிருஸ்தவ ஆராதனைகள் கிரிமண்டல மாவத்தை மக்கள் தேவசபை தேவாலயத்திலும், இஸ்லாமிய வழிபாடுகள் கொழும்பு - ஜூம்மா மஸ்ஜித்திலும் இடம்பெறவுள்ளது. பிரதம அதிதிகள் வருகை நிகழ்வுக்கு அழைக்கப்பட்டவர்கள் காலை 7 மணி முதல் வருகைதரவுள்ளனர். தொடர்ந்து பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரது வருகையைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தேசிய கொடியை ஏற்றி நிகழ்வுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பார். அத்தோடு தாய் நாட்டின் சுதந்திரத்திலும், இறையான்மையிலும் மற்றும் ஆள்புல ஒருமைப்பாட்டின் நிரந்தர இருப்பிற்காக தமது உயிர்களைத் தியாகம் செய்த அனைத்து இலங்கை பிரஜைகளுக்காகவும் 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. 4000 வீரர்களின் பங்கேற்புடன் மரியாதை அணிவகுப்பு தொடர்ந்து ஜனாதிபதிக்கான மரியாதை வணக்கம் செலுத்தப்பட்ட பின்னர் அவரால் நாட்டு மக்களுக்கு விசேம உரையாற்றப்படும். காலை 8.45 மணி முதல் 9.30 மணி வரை முப்படைகள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படை, தேசிய மாணவர் படையணி என்பவற்றால் மரியாதை அணிவகுப்பு நடத்தப்படும். இதில் 1962 இராணுவத்தினர், 693 கடற்படையினர், 583 விமானப்படையினர், 352 பொலிஸார், 278 சிறப்பு பொலிஸ் பணிப்பிரிவினர், 183 சிவில் பாதுகாப்பு திணைக்களம், 507 தேசிய மாணவர் படையணி, 22 ஓய்வு பெற்ற பாதுகாப்பு படையினர் மற்றும் 22 அங்கவீனமுற்ற பாதுகாப்பு படையினர் உள்ளடங்களாக 4602 படைவீரர்கள் பங்கேற்கவுள்ளனர். மேலும் 7 ஆயுதமேந்திய வாகனங்களும் அணிவகுப்பில் பங்கேற்கவுள்ளன. நிகழ்வுகள் நிறைவடைந்த பின்னர் கடற்படையினரால் காலி முகத்திடலில் 25 மரியாதை பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்படவுள்ளன. போக்குவரத்துக்கு கட்டுப்பாடு சுதந்திர தின நிகழ்வுகளை முன்னிட்டு அதிகாலை 4.45 மணி முதல் சுதந்திர சதுக்க வளாகத்தை அண்மித்த வீதிகள் முற்றாக மூடப்படும் என பொலிஸ் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது. நிகழ்வுகள் நிறைவடைந்து பிரதம அதிதிகள் வெளியேறும் வரை குறித்த பாதையூடான போக்குவரத்து முற்றாக தடை செய்யப்படுத் என்பதால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளவாறு மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/237749
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
சாகும்வரை தனது சுயநலம் ஒன்றையே கொள்கையாக கொண்டு வீட்டுவசதி உட்பட அனைத்து அரச சலுகைகளையும் செத்த பின்பும் திருப்பி தர மறுத்த சுயநல அரசியல்வாதியை புலிகளுடன் ஒப்பிட்டு எழுதிவிட்டு நிம்மதியாக நித்திரை செய்ய முடியும் என்றால் தம்மையும் தமது குடும்பங்களையும் கொண்ட கொள்கைக்காய் ஈய்ந்து உயிர் கொடுத்தவர்களை சாகும்வரை குரல் கொடுத்தே நான் சாவேன்.
-
4 மணி நேர வீர நீச்சல் : தாய், சகோதரன், சகோதரியை உயிருடன் மீட்ட 13 வயது சிறுவன்
சிறுவனுக்கு பாராட்டுக்கள் + வாழ்த்துகள் ........! 👍 ஒரு தொழில் முறை நீச்சல் வீரர் கூட இது போன்ற சமயத்தில் மன உறுதியுடன் செயல்பட்டிருப்பாரா என்பது சந்தேகம் . .....!
-
4 மணி நேர வீர நீச்சல் : தாய், சகோதரன், சகோதரியை உயிருடன் மீட்ட 13 வயது சிறுவன்
4 மணி நேர வீர நீச்சல் : தாய், சகோதரன், சகோதரியை உயிருடன் மீட்ட 13 வயது சிறுவன் 04 Feb, 2026 | 12:30 PM மேற்கு அவுஸ்திரேலியாவின் குயிண்டாலப் (Quindalup) கடற்கரை பகுதியில், தனது குடும்பத்தினர் கடல் அலையால் ஆழ்கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், சுமார் நான்கு மணிநேரம் தொடர்ந்து நீந்திச் சென்று அவர்களது உயிரைக் காப்பாற்றிய 13 வயது சிறுவன் ஆஸ்டின் அப்பல்பீ (Austin Appelbee) தற்போது ‘மாவீரனாக’ பாராட்டப்பட்டு வருகிறான். கடந்த வெள்ளிக்கிழமை விடுமுறைக்காக குயிண்டாலப் பகுதிக்கு சென்றிருந்த ஆஸ்டின், அவனது தாய் ஜோவான் (Joanne) (47), சகோதரன் போ ( Beau) (12) மற்றும் தங்கை கிரேஸ் (Grace) (8) ஆகியோர் படகு மற்றும் துடுப்புப் பலகைகளில் (Paddle Boards) கடலில் விளையாடிக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் ஏற்பட்ட பலத்த காற்றும் கடல் சீற்றமும் காரணமாக அவர்கள் கரையிலிருந்து வெகுதூரம் ஆழ்கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். நிலைமை ஆபத்தானதாக மாறியதை உணர்ந்த தாய் ஜோவான், தனது மூத்த மகன் ஆஸ்டினிடம் உதவி கோரி கரையை அடைந்து தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தினார். ஆரம்பத்தில் ஒரு காற்றடைத்த சிறிய படகில் (Inflatable Kayak) செல்ல முயன்ற ஆஸ்டின், அதில் நீர் புகுந்ததைத் தொடர்ந்து படகை கைவிட்டு கடும் அலைகளுக்கு மத்தியில் நீந்தத் தொடங்கினான். சுமார் 4 மணிநேரம் தொடர்ந்து சீற்றமான கடலில் நீந்திய அவன், தொடக்கத்தில் அணிந்திருந்த உயிர் காக்கும் கவசம் (Life Jacket) நீந்துவதற்கு தடையாக இருந்ததால், பாதியிலேயே அதைக் கழற்றிவிட்டு நீந்தியதாக தெரிவிக்கப்படுகிறது. “அலைகள் ராட்சத வடிவில் இருந்தன. என்னிடம் உயிர் காக்கும் கவசம் இல்லை. ‘தொடர்ந்து நீந்து… நிறுத்தக்கூடாது’ என்று எனக்குள் சொல்லிக்கொண்டே இருந்தேன்,” என ஆஸ்டின் பின்னர் உருக்கமாக தெரிவித்துள்ளார். மாலை 6.00 மணியளவில் கரையை அடைந்த ஆஸ்டின், அங்கிருந்த மக்களிடம் உடனடியாக தகவல் வழங்கினார். இதனையடுத்து கடற்படை, காவல்துறை மற்றும் அவசர மீட்புப் பிரிவுகள் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்தன. இரவு 8.30 மணியளவில், கரையிலிருந்து சுமார் 14 கிலோமீட்டர் தொலைவில், ஒரு துடுப்புப் பலகையைப் பிடித்துக்கொண்டு தத்தளித்துக் கொண்டிருந்த தாய் ஜோவான் மற்றும் இரு பிள்ளைகளை மீட்பு படையினரின் ஹெலிக்காப்டர் கண்டுபிடித்து பாதுகாப்பாக மீட்டது. சுமார் 10 மணிநேரம் குளிரான கடலில் தத்தளித்ததால், அவர்கள் அனைவரும் கடுமையான நடுக்கத்துடன் இருந்தனர். குறிப்பாக 12 வயது சிறுவன் போ, தனது கால்களில் உணர்வை இழந்த நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், அனைவரும் உயிருக்கு ஆபத்தான காயங்களின்றி மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மீட்புப் படைத் தளபதி பால் பிரெஸ்லேண்ட், “ஒரு 13 வயது சிறுவன் காட்டிய துணிச்சல், அதிமானுடச் செயலுக்கு இணையானது,” என ஆஸ்டினின் வீரத்தை பாராட்டினார். இதுபோலவே காவல்துறை அதிகாரி ஜேம்ஸ் பிராட்லி, “அந்தச் சிறுவனின் மன உறுதியும் தைரியமுமே இன்று ஒரு குடும்பத்தின் உயிரைக் காப்பாற்றியுள்ளது,” என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம், வயதை விட மன உறுதியும் துணிச்சலுமே உண்மையான வீரத்தை நிரூபிக்கும் என்பதற்கான ஓர் உயிர்ப்பான உதாரணமாக உலகெங்கும் பேசப்பட்டு வருகிறது. https://www.virakesari.lk/article/237795
-
41வது திருமதி உலக அழகிப் போட்டியில் இலங்கைப் பெண் சபீனா யூசப்!
சபீனா யூசப் நாடு திரும்பினார் அமெரிக்காவில் நடைபெற்ற 41வது உலக அழகிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்டு மூன்றாவது இடத்தைப் பிடித்து, போட்டியின் மிஸ் ஃபோட்டோ ஜீனியாக முடிசூட்டப்பட்ட சபீனா யூசப், புதன்கிழமை (04) அதிகாலை நாடு திரும்பினார். உலகெங்கிலும் உள்ள 60 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்களின் பங்கேற்புடன், இப் போட்டி கடந்த ஜனவரி 22 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் (Las Vegas) நகரில் நடைபெற்றது. இப் போட்டியின் தேசிய இயக்குநர் சந்திமால் ஜெயசிங்க, தேசிய பயிற்சியாளர் ருக்மல் சேனநாயக்க உட்பட ஏராளமானோர் சபீனா யூசப்பை வரவேற்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். டி.கே.ஜி. கபில https://www.tamilmirror.lk/செய்திகள்/சபீனா-யூசப்-நாடு-திரும்பினார்/175-371977
- Today
-
📢 பிரித்தானியாவில் கொவிட் நிதி மோசடி: சிக்கலில் சிக்கிய சில தமிழ் வணிகர்கள்!
📢 பிரித்தானியாவில் கொவிட் நிதி மோசடி: சிக்கலில் சிக்கிய சில தமிழ் வணிகர்கள்! adminFebruary 3, 2026 கொவிட்-19 (Covid-19) பெருந்தொற்று காலத்தில், முடங்கிப்போன சிறு வணிகங்களை மீட்டெடுக்க பிரித்தானிய அரசாங்கம் ‘Bounce Back Loan’ போன்ற பல்வேறு நிதி உதவித் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. அன்று நலிவடைந்த வணிகர்களுக்கு நீட்டப்பட்ட அந்த உதவியை, இன்று சிலர் தவறாகப் பயன்படுத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 🔍 சமீபத்திய ஆய்வுகளின்படி, பிரித்தானிய அரசாங்கம் வழங்கிய இந்த சலுகைகளைப் பயன்படுத்தி, தகுதியற்ற முறையில் போலி ஆவணங்கள் மூலம் நிதி பெற்ற பலர் தற்போது பிடிபட்டு வருகின்றனர். இதில் துரதிர்ஷ்ட வசமாக சில தமிழ் வணிகர்களும் உள்ளடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 🚨 இவர்கள் மீது முக்கியக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இயங்காத நிறுவனங்களின் பெயரில் கடன் பெற்றது. அதிக கடன் பெறுவதற்காக நிறுவனத்தின் வருவாயை மிகைப்படுத்திக் காட்டியது. வணிக வளர்ச்சிக்காகப் பெறப்பட்ட பணத்தை தனிப்பட்ட ஆடம்பரத் தேவைகளுக்கும், சொத்துக்கள் வாங்கவும் பயன்படுத்தியது. ⚖️ இவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பிரித்தானிய அரசாங்கம் மற்றும் புலனாய்வுத் துறையினர் இந்த மோசடிகளைக் கண்டறியத் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் விளைவாக: பல வணிகர்களின் இயக்குநர் தகுதி (Directorship) ரத்து செய்யப்பட்டுள்ளது. மோசடி செய்யப்பட்ட நிதியைத் திரும்பப் பெற சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடுமையான குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகின்றன. ⚖️ சட்ட நடவடிக்கைகள் மற்றும் தண்டனைகள்: ஒரு விரிவான பார்வை கொவிட் காலத்தில் பெறப்பட்ட கடன்களை (Bounce Back Loans) வணிக வளர்ச்சிக்கு பயன்படுத்தாமல், சொந்த லாபத்திற்காகவோ அல்லது போலி கணக்குகள் மூலமாகவோ கையாடல் செய்தவர்களுக்கு எதிராக பிரித்தானிய அரசாங்கம் தற்போது “Zero Tolerance” கொள்கையை கடைபிடிக்கிறது. இயக்குநர் தகுதி நீக்கம் (Director Disqualification) இதுவே தற்போது மிக அதிகமாக எடுக்கப்படும் நடவடிக்கையாகும். மோசடியில் ஈடுபட்ட வணிகர்கள் 2 முதல் 15 ஆண்டுகள் வரை எந்தவொரு நிறுவனத்திற்கும் இயக்குநராக இருக்க முடியாது. 2024-25 நிதியாண்டில் மட்டும் சுமார் 736 இயக்குநர்கள் கொவிட் கடன் மோசடிக்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான சராசரி தடைக்காலம் 8 ஆண்டுகள் ஆகும். இவர்கள் புதிய தொழில் தொடங்கவோ அல்லது இருக்கும் தொழிலை நிர்வகிக்கவோ முடியாது. தடையை மீறினால் சிறைத்தண்டனை விதிக்கப்படும். கைது மற்றும் சிறைத்தண்டனை (Arrests & Imprisonment) கடுமையான மோசடிகளில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் வழக்குகள் (Criminal Cases) பதியப்படுகின்றன. தேசிய புலனாய்வு அமைப்பு (NATIS) மற்றும் திவால் சேவை (Insolvency Service) இணைந்து இதுவரை நூற்றுக்கணக்கான சோதனைகளை நடத்தி பலரைக் கைது செய்துள்ளன. சமீபத்திய தீர்ப்புகளில், போலி ஆவணங்கள் சமர்ப்பித்தவர்களுக்கு 18 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை (சில சமயங்களில் இடைநிறுத்தப்பட்ட தண்டனை – Suspended Sentence) மற்றும் கடும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சொத்து முடக்கம் மற்றும் நிதி மீட்பு (Asset Seizure) அரசாங்கம் இழந்த பணத்தை மீட்க புதிய சட்ட அதிகாரங்களைப் பெற்றுள்ளது. ‘Public Authorities (Fraud, Error and Recovery) Bill’ மூலம் மோசடி செய்தவர்களின் வங்கி கணக்குகளை முடக்கவும், அவர்களின் வீடுகள் அல்லது சொத்துக்களை சோதனை செய்து கைப்பற்றவும் அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் £1.8 பில்லியன் மதிப்பிலான நிதி பல்வேறு நடவடிக்கைகள் மூலம் மீட்கப்பட்டுள்ளது. கடனைத் திருப்பிச் செலுத்தாத நிறுவனங்களின் சொத்துக்களை விற்று அரசாங்கக் கடனை அடைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நிறுவனங்களை கலைக்கத் தடை (Blocking Dissolution) கடனைத் திருப்பிச் செலுத்தாமல் தப்பிப்பதற்காக பல வணிகர்கள் தமது நிறுவனங்களை மூடுவதற்கு (Dissolve) முயற்சி செய்கின்றனர். அரசாங்கம் தற்போது இத்தகைய நூற்றுக்கணக்கான நிறுவனங்களை மூடுவதற்கு தடை விதித்துள்ளது. கடன் முழுமையாகத் தீர்க்கப்படும் வரை அல்லது விசாரணை முடியும் வரை நிறுவனத்தைக் கலைக்க முடியாது. முக்கிய குறிப்பு: உங்கள் நிறுவனம் முறையாக இயங்கி, அரசாங்க விதிகளைப் பின்பற்றி கடன் பெற்றிருந்தால் நீங்கள் அச்சப்படத் தேவையில்லை. ஆனால், வருமானத்தை மிகைப்படுத்திக் காட்டியிருந்தாலோ அல்லது பணத்தை தனிப்பட்ட தேவைக்கு மாற்றியிருந்தாலோ உடனடியாக சட்ட நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது சிறந்தது. சமீபத்தில் ஜனவரி 2026-ல், இரண்டு கொவிட் கடன்களைப் பெற்ற ஒரு வணிகருக்கு 18 மாத சிறைத்தண்டனையும், £5,000 அபராதமும் விதிக்கப்பட்டது. அவர் பெற்ற பணத்தில் பெரும் பகுதியைத் திருப்பிச் செலுத்திய போதிலும் இந்த தண்டனை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நேர்மையாக வரி செலுத்தி வணிகம் செய்யும் சமூகத்தின் பெயருக்கு, இத்தகைய சிலரின் பேராசை பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது கவலைக்குரியது. https://globaltamilnews.net/2026/228331/
-
யாழ். மாவட்டத்தில் சுதந்திர தினம்!
யாழ். மாவட்டத்தில் சுதந்திர தினம்! adminFebruary 4, 2026 இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 வது சுதந்திர தின யாழ்ப்பாண மாவட்ட நிகழ்வு இன்றைய காலை 07.30 மணிக்கு மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் நடைபெற்றது. இந் நிகழ்வானது அணிவகுப்பு மரியாதையுடன் ஆரம்பமாகி – தேசியக் கொடி ஏற்றல், தேசிய கீதம் இசைத்தல், சர்வ மதத் தலைவர்களின் ஆசியுரை மற்றும் அரசாங்க அதிபர் அவர்களின் உரை உள்ளடங்கலாக சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை, கொக்குவில் இந்துக் கல்லூரி, பரியோவான் கல்லூரி மற்றும் யாழ் இந்து ஆரம்ப பாடசாலை ஆகிய பாடசாலை மாணவர்களின் பான்ட் (Band) வாத்தியக் குழுவின் அணிவகுப்பும், வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, யாழ் இந்து மகளிர் கல்லூரி மற்றும் கொக்குவில் இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளின் தேசிய மாணவர் படையணியின் (Cadet) அணிவகுப்பும், சாரணர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும், இன்றைய அணிவகுப்பில் பங்குபற்றிய மாணவர்களை கெளரவித்து மர நடுகை மற்றும் சிரமதானம் போன்ற நிகழ்வும் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பலாலி பாதுகாப்பு படைகளின் தலைமைப்பீடத்தினைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் ராசிக், காவற்துறை கடற்படை உள்ளிட்ட உயர் அதிகாரிகள் முப்படையின் அதிகாரிகள், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) உள்ளிட்ட மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர். https://globaltamilnews.net/2026/228339/
-
கடாபியின் மகன் லிபியாவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்!
🚨 லிபிய முன்னாள் ஜனாதிபதி மகன் சைஃப் அல்-இஸ்லாம் கடாபி படுகொலை! adminFebruary 4, 2026 லிபியாவின் மறைந்த முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபியின் மிகவும் செல்வாக்கு மிக்க மகனும், அவரது அரசியல் வாரிசாகக் கருதப்பட்டவருமான சைஃப் அல்-இஸ்லாம் கடாபி (53), துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 📍 மேற்கு லிபியாவில் உள்ள ஜின்தான் (Zintan) நகரில் உள்ள அவரது இல்லத்தில், முகமூடி அணிந்த நான்கு ஆயுததாரிகள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். தாக்குதலுக்கு முன்னதாக அந்த இல்லத்தின் பாதுகாப்புக் கேமராக்கள் செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும், நேரடி மோதலுக்குப் பிறகு அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அவரது அரசியல் ஆலோசகர் மற்றும் வழக்கறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். 🔍 கடாபி ஆட்சிக் காலத்தில் லிபியாவின் மிக முக்கிய அதிகார மையமாகத் திகழ்ந்தவர். 2011 புரட்சிக்குப் பிறகு பல ஆண்டுகள் சிறைவாசத்தில் இருந்தவர். சமீபகாலமாக லிபிய அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயாராகி வந்த இவர், அந்நாட்டு அரசியலில் மீண்டும் ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்து வந்தார். லிபிய அரசின் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் இந்தத் தாக்குதல் குறித்து முறையான விசாரணையைத் தொடங்கியுள்ளது. இது ஒரு திட்டமிட்ட படுகொலை என அவரது தரப்பு குற்றம் சாட்டியுள்ளது. லிபியாவின் தற்போதைய பதற்றமான சூழலில், இந்தச் சம்பவம் பெரும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. https://globaltamilnews.net/2026/228342/
-
சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி போராட்டம் ஆரம்பம்!
கிளிநொச்சியில் சுதந்திர தின கரிநாள் போராட்டம் ஆரம்பம்! இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினமான இன்றைய தினத்தை தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கில் கரிநாளாக அறிவித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்த வகையில், கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தற்போது கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் சிங்கள – பௌத்த மயமாக்கப்படுதல், இந்தப் பகுதிகளில் தமிழர்களைச் சிறுபான்மையினராக்கும் நோக்கில் திட்டமிட்ட குடியேற்றங்கள், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி, இறுதிப் போரின்போது நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலைக்கு நீதி, தமிழ் மக்களுக்கான நிலையான அரசியல் தீர்வு என்பவற்றை வலியுறுத்தியே வடக்கு – கிழக்கில் இன்று போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. குறித்த போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள், வடக்கு – கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம், பொது அமைப்புகள், வணிகர் சங்கங்கள், கடற்றொழிலாளர் அமைப்புகள், சமூக நிறுவனங்கள் எனப் பல அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. https://athavannews.com/2026/1463133
-
கருத்து படங்கள்
- ‘வளமான நாடு – அழகான வாழ்க்கையை’ கட்டியெழுப்ப கைகோர்ப்போம் – சுதந்திர தின வழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி
‘வளமான நாடு – அழகான வாழ்க்கையை’ கட்டியெழுப்ப கைகோர்ப்போம் – சுதந்திர தின வழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி. கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான நாடு – அழகான வாழ்க்கையைக்’ கட்டியெழுப்ப, ஒற்றுமை, உறுதிப்பாடு மற்றும் சகோதரத்துவத்துடன் கைகோர்க்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். நாட்டின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளதாவது, பல சவால்களுக்கு மத்தியில் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்து, நாடு முன்னேறி வரும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், 78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை நாம் கொண்டாடுகிறோம். இலங்கையர்களாகிய நாம் அனைவரும் இணைந்து போராடி, ஒன்றரை வருட குறுகிய காலத்தில் குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றத்தை அடைவதில் வெற்றி பெற்றுள்ளோம். சவால்களுக்கு மத்தியில், கூட்டாகவும் உறுதியுடனும் செயற்பட்டு நமது நாட்டை தூய்மையான அரசியல் கலாசாரத்திற்குள் கட்டியெழுப்பப்பட்ட அழகான இலங்கையாக சர்வதேச அளவில் முத்திரை பதிப்பதில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். நாம் பெற்றுள்ள பேரண்டப் பொருளாதார நன்மைகள் இலங்கையின் அனைத்து பிரதேசங்களிலும் உள்ள அனைத்து இன சமூகங்களுக்கும் சென்றடைவதை உறுதி செய்வதே எமது அடுத்த முக்கிய நோக்கம் ஆகும். அவ்வாறு இன்றி, புதிதாக கட்டியெழுப்பப்படும் அபிவிருத்தி செயல்முறையின் உண்மையான வெற்றியை அடைவது சாத்தியமில்லை என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அண்மைய காலத்தில் இடம்பெற்ற மிகப் பாரிய இயற்கை அனர்த்தத்தை நாம் சந்திக்க வேண்டியிருந்தது. அந்த அனர்த்தத்தின் அனுபவம் வேதனையாக இருந்தபோதிலும், கடந்த ஒன்றரை வருட குறுகிய காலத்தில் நாம் கட்டியெழுப்பிய உறுதியான அடித்தளங்கள் மற்றும் அனைத்து தரப்பினரின் ஆதரவுடன், மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் பணியில் வெற்றிகரமாக முன்னோக்கிச் செல்கின்றோம். சுதந்திரத்திற்குப் பின்னரான காலங்களில், நமது நாட்டை சரியான திசையில் வழிநடத்தவும், தேசிய ரீதியில் அடையவேண்டிய இலக்குகளை அடையவும், ஒற்றுமையாக வாழவும் வரலாற்றில் கிடைத்த பொன்னான வாய்ப்புகள் பெரும்பாலும் தவறவிடப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த முறை அந்தத் தவறை மீண்டும் செய்யாமல், நமது நாட்டை முன்பை விட மிகவும் முன்னேறிய, வலிமையான மற்றும் கௌரவத்துக்குரிய நாடாக மேம்படுத்துவதற்கு நாம் உறுதியுடன் செயல்படுவோம். நமது பெருமைமிக்க கலாசாரம், பண்டைய வரலாறு மற்றும் சிறந்த பாரம்பரியத்தைப் பாதுகாத்து, அதன் மேல் உறுதியாக நிலைத்து நின்று, இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்பதை இங்கே உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். இருபதாம் நூற்றாண்டில் பிறந்தவர்களின் ,பெருமைமிக்க நாடு பற்றிய கனவு கலைந்த போதும் , இருபத்தியோராம் நூற்றாண்டில் அந்தக் கனவை நனவாக்கி, நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் முன்னேறிய, வளமான மற்றும் சிறந்த நாடாக இலங்கையை கட்டியெழுப்பி, நாம் எதிர்பார்க்கும் புதிய சகாப்தத்தை உருவாக்க முடியும் என நான் திடமாக நம்புகிறேன். இதன்போது, இந்நாட்டின் அனைத்து மக்களின் வலிமை, ஒருமைப்பாடு மற்றும் உறுதிப்பாட்டில் நாம் வலுவான நம்பிக்கை கொண்டுள்ளோம். கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான நாடு – அழகான வாழ்க்கையைக்’ கட்டியெழுப்ப, ஒற்றுமை,உறுதிப்பாடு மற்றும் சகோதரத்துவத்துடன் கைகோர்ப்போம் என்று அனைவருக்கும் அழைப்பு விடுப்பதுடன், சுதந்திரத்தின் உண்மையான நோக்கங்களை அடைவதற்கு, ஊக்கமளிக்கும், அர்த்தமுள்ள தேசிய சுதந்திர தினத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் – என்றார். https://athavannews.com/2026/1463023- 2025 ஆம் ஆண்டில் ‘GovPay’ செயலி மூலம் 46,000க்கும் மேற்பட்ட போக்குவரத்து அபராதங்கள்!
2025 ஆம் ஆண்டில் ‘GovPay’ செயலி மூலம் 46,000க்கும் மேற்பட்ட போக்குவரத்து அபராதங்கள்! போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை செலுத்த அறிமுகப்படுத்தப்பட்ட ‘GovPay’ பயன்பாட்டைப் பயன்படுத்தி 2025 ஆம் ஆண்டில் 46,000க்கும் மேற்பட்ட வாகன சாரதிகள் தண்டப் பணம் செலுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, மொத்தம் 46,635 வாகன சாரதிகள் ‘GovPay’ செயலி மூலம் அபராதம் செலுத்தியுள்ளனர். இதற்கிடையில், இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஜனவரி 24 வரை போக்குவரத்து விதிமீறல்களைச் செய்த 11,715 சாரதிகள் ‘GovPay’ செயலியைப் பயன்படுத்தி அபராதம் செலுத்தினர். அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பிரிவினால் அதிக அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. https://athavannews.com/2026/1463152- சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி போராட்டம் ஆரம்பம்!
சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி போராட்டம் ஆரம்பம்! இலங்கையின் 78வது சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படும் போராட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது. தமிழர்களுக்கு இது சுதந்திர தினம் இல்லை என தெரிவித்து, இந் நாளை கரிநாளாக அனுஷ்டிக்குமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்தது. அந்த அழைப்புக்கு சமூக மட்ட சிவில் அமைப்புக்கள், தமிழ் தேசியம் சார் அரசியல் கட்சிகள் மற்றும் தென்னிந்திய பிரபலங்கள் ஆதரவை தெரிவித்திருந்தன. இவ்வாறான சூழ்நிலையில் கிளிநொச்சி – கந்தசுவாமி ஆலய முன்றலில் இந்த போராட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது. அங்கு ஆரம்பமான போராட்டம் தற்போது பேரணியாக கிளிநொச்சி நகரத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ் தேசியம் சார் அரசியல் கட்சிகள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சிவில் சமூக அமைப்புகள், தமிழ் தேசியவாதிகள், இளைஞர் – யுவதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர். https://athavannews.com/2026/1463127- ரஷ்ய – உக்ரைன் போர் நிறுத்த அமைதிப் பேச்சு இன்று ஆரம்பம்
ரஷ்ய – உக்ரைன் போர் நிறுத்த அமைதிப் பேச்சு இன்று ஆரம்பம். ரஷ்யாவுக்கும் யுக்ரைனுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இரண்டாம் கட்ட முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகர் அபுதாபியில் இன்று 04 ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது. இப்பேச்சுவார்த்தை நாளை 05 ஆம் திகதியும் நடைபெறும் என்று யுக்ரைன் ஜனாதிபதி வொல்திமிர் ஷெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் டெலிகிராம் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், யுக்ரைன் பேச்சுவார்த்தை குழுவிடமிருந்து எனக்கு அறிக்கை கிடைத்துள்ளது. இப்போருக்கு உண்மையாகவும், கௌரவமாகவும் தீர்வு காணும் நோக்கில் ஆக்கபூா்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட நாங்கள் தயாராக இருக்கிறோம். என்று குறிப்பிட்டுள்ளார். சுமார் 4 ஆண்டுகளாக நீடித்து வரும் இப்போரை நிறுத்த, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம் கடந்த ஓரண்டாகத் தீவிரமாகச் செயற்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அபுதாபியில் ரஷ்யா, யுக்ரைன், அமெரிக்கா ஆகிய 3 நாடுகளும் பங்கேற்கும் முத்தரப்புச் பேச்சுவார்த்தை இன்று ஆரம்பமாகவுள்ளது. https://athavannews.com/2026/1463017- கடாபியின் மகன் லிபியாவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்!
கடாபியின் மகன் லிபியாவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்! லிபியாவின் முன்னாள் தலைவர் கேணல் முஅம்மர் கடாபியின் மகன் சைஃப் அல்-இஸ்லாம் கடாபி (Saif al-Islam Gaddafi) சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு காலத்தில் தனது தந்தையின் வாரிசாக பரவலாக அறியப்பட்ட 53 வயதானவரின் மரணம், அவரது அரசியல் குழுவின் தலைவரால் செவ்வாயன்று (03) உறுதிப்படுத்தப்பட்டதாக லிபிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜின்டான் நகரில் உள்ள சைஃப் அல்-இஸ்லாம் கடாபியின் வீட்டில் “நான்கு பேர் கொண்ட கமாண்டோ” பிரிவு இந்த படுகொலையை நடத்தியதாக அவரது சட்டத்தரணிகள் AFP செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளனர். இருப்பினும் தாக்குதலுக்குப் பின்னால் யார் இருந்திருக்கலாம் என்பது தெளிவாகத் தெரியவில்லை. 1969 முதல் லிபியாவை ஆட்சி செய்த சைஃப் அல்-இஸ்லாம் கடாபி, 2011 இல் ஒரு எழுச்சியின் போது பதவி நீக்கம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அவரது தந்தைக்குப் பின்னர், சைஃப் அல்-இஸ்லாம் கடாபி நீண்ட காலமாக நாட்டில் மிகவும் செல்வாக்கு மிக்க நபராகக் காணப்பட்டார். 1972 ஆம் ஆண்டு பிறந்த இவர், 2000 ஆம் ஆண்டு முதல் கடாபி ஆட்சி வீழ்ச்சியடையும் வரை லிபியாவின் மேற்கு நாடுகளுடனான நல்லிணக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார். தனது தந்தை பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களை மிருகத்தனமாக அடக்குவதில் முக்கிய பங்கு வகித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சைஃப் அல்-இஸ்லாம் கடாபி, ஜின்டான் நகரில் ஒரு போட்டி போராளிக் குழுவால் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். 2011 ஆம் ஆண்டு எதிர்க்கட்சி போராட்டங்களை அடக்குவதில் அவர் வகித்ததாகக் கூறப்படும் பங்கிற்காக, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அவரை விசாரணைக்கு உட்படுத்த விரும்பியது. 2015 ஆம் ஆண்டில், நாட்டின் மேற்கில் உள்ள திரிப்போலியில் உள்ள ஒரு நீதிமன்றத்தால் ஒடுக்குமுறை நடவடிக்கையில் அவர் வகித்த பங்கிற்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது, அங்கு கட்டுப்பாடு ஐ.நா. ஆதரவு அரசாங்கத்தின் கைகளில் உள்ளது. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் கிழக்கில் உள்ள டோப்ருக்கில் உள்ள போராளிகளால் பொது மன்னிப்புச் சட்டத்தின் கீழ் அவர் விடுவிக்கப்பட்டார். கடாபி தூக்கியெறியப்பட்டதிலிருந்து, லிபியா பல்வேறு போராளிக் குழுக்களால் கட்டுப்படுத்தப்படும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது, தற்போது இரண்டு போட்டி அரசாங்கங்களுக்கு இடையில் பிரிக்கப்பட்டுள்ளது. அவரது தந்தை தலைவராக இருந்த காலத்தில், அரசாங்கத்தில் எந்த அதிகாரப்பூர்வப் பங்கும் இல்லாத போதிலும், அவர் கொள்கையை வடிவமைத்து உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினார். இதில் அவரது தந்தை தனது அணு ஆயுதத் திட்டத்தை கைவிட வழிவகுத்தவை அடங்கும். இத்தகைய ஒப்பந்தங்கள் வட ஆபிரிக்க நாட்டின் மீதான சர்வதேசத் தடைகள் நீக்கப்பட்டன, மேலும் சிலர் சைஃப் அல்-இஸ்லாம் கடாபியை மாறிவரும் லிபியாவின் சீர்திருத்தவாத மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய முகமாகக் கருதினர். தனது தந்தையிடமிருந்து அதிகாரத்தைப் பெற விரும்புவதாக அவர் எப்போதும் மறுத்து வந்தார். எனினும், 2021 ஆம் ஆண்டில், காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்ட தேர்தல்களில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதாக சைஃப் அல்-இஸ்லாம் கடாபி அறிவித்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1463108- “தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
இலங்கைக்கு ஒவ்வொரு வருடம் சென்று வருகின்ற வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் மட்டும் என்னவாம் அவர்களுக்கும் மகிழ்ச்சி தான். அதில் ஒரு பகுதியினர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படையாகவே காட்டி கொள்வார்கள். மற்ற பகுதியினர் அரசியல் கருதி மகிழ்ச்சியை வெளியில் காட்டி கொள்ளாமல் ஏதோ காணி வீடு உறவினரை பார்க்க போய் வருவதாக சொல்லி கொள்வார்கள்.- “தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
உலக சூழ்நிலை தனி ஈழத்துக்கு சாதகமாக இல்லை என்று நன்றாக தெரிந்து கொண்டும், உலக நாடுகள் எல்லாவற்றையும் பகைத்து தமிழீழம் அடையலாம் என்று மக்களை பேக்காட்டி, பல லட்சக்கணக்கான தமிழ் மக்களின உயிர்களை பலியிட்டதை விட சம்பந்தர் ஒன்றும் பெரிதாக மக்களை பேய்காட்டவில்லை புலவர். இன்று தாயகத்தில் வாழும் மக்களிடன் கேட்டால், யுத்தம் முடிந்தது தமக்கு மகிழ்சசி என்றே கூறுவர். இல்லையெனில், இப்போதும் தினமும் 10-15 எமது மக்கள் எந்த பிரயோசனமும் இன்றி இறந்து கொண்டே இருந்திருப்பர். நாமும் இனம் சிறுக சிறுக அழிவதைப் பற்றி கவலைப்படாமல் கிடைக்கும் சிறு சிறு வெற்றிகளை வைத்து, “ தூரம் அதிகம் இல்லை, இதோ தெரியுது எதிரி எல்லை என்று மக்களைப் பேக்காட்டி பாட்டுப்பாடி நினைவு தினங்களைக் அனுஷடித்துக்கொண்டிருந்திருப்போம். யுத்தம் முடிந்ததால் புதிய புதிய நினைவுதினங்கள் உருவாக்காமல் விட்டதென்பது நம் அனைவருக்கும் நிம்மதியே. எதிரிக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி இன்றைய நிலைக்கு காரணமான சூழ்நிலையை உருவாக்கிய பல தவறான அணைகுமுறைகளை எம்மவர்களே ஏற்படுத்தியதை மறைக்க இப்படி தனி நபர்களை மீது பழி சுமத்தி அரசியல் பிழைப்பு நடத்தலாமேயொழிய அதை விட தமிழ் மக்கள் விடயத்தில் எதுவுமே முன்னேற்றம் காணப்போவதில்லை. துரோகிகளாக சிலரை முத்திரை குத்தி அவர்களை வில்லன்களாக கட்டமைத்து அரசியல் நடத்து. அது போதாதெனில் நம்மவர்களுக்குளேயே சிலரை துரோகியாக முத்திரை குத்து. இதுவே தமிழ் தேசிய அரசியல் தாரக மந்திரம். இதை விட மேலதிகமாக அறிவு பூர்வமாக சிந்திக்ககும் அளவுக்கு தமிழ் தேசியர்களுக்கு……… ஆனால் தமிழ் தேசியத்தை வைத்து பிழைப்பு நடத்துவதில் தாயக புலம் பெயர் தேசியர் காட்டில் என்றும் மழை தான். அதை வெற்றிகரமாக செய்கிறார்கள். அதையாவது வெற்றிகரமாக செய்கிறார்களே என்று மகிழ்சசியடைய வேண்டியது தான்.- “தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
How India diplomatically handled TNA during the war (2006–2009) 1. India’s core strategic position By 2006, India had three fixed positions: LTTE must be eliminated (after Rajiv Gandhi assassination – 1991) Sri Lanka must remain territorially united (no separatism precedent in South Asia) Tamil political rights only after the war So India’s policy was essentially: 2. How India dealt with TNA leadership India maintained formal contact with TNA, but: Discouraged protests Discouraged international lobbying Discouraged war-time political agitation Advised patience and restraint Indian diplomats consistently told TNA leaders: So: TNA was allowed to exist But not allowed to mobilize politically This created a controlled silence. 3. Why India restrained TNA (a) Avoid Tamil Nadu political explosion If: TNA protested loudly Civilian casualties were highlighted internationally Then: Tamil Nadu politics would explode Indian central government would face internal crisis So: (b) Prevent LTTE diplomatic revival India feared: If TNA becomes politically active → LTTE gains international sympathy → Pressure grows to stop war → LTTE survives. So: (c) Strategic military coordination India provided: Radar intelligence Naval intelligence Satellite data Maritime tracking For this: Allowing Tamil political agitation would damage that trust. How Tamil political space was deliberately frozen until 2009 This was not accidental. It was structured political freezing. 1. Elimination of Tamil civil political life From 2006–2009: No meaningful elections in North-East No political mobilization allowed No protests permitted No international advocacy permitted Civil society crushed Result: 2. TNA forced into survival mode TNA MPs: Could not visit constituencies safely Could not mobilize people Could not speak openly They were: Their role became: 3. India’s diplomatic messaging to TNA India consistently communicated: Don’t internationalize the issue Don’t escalate civilian casualty claims Don’t destabilize Colombo Political process will come later So: What happened after 2009? Once LTTE was destroyed: India expected: 13th Amendment implementation Provincial devolution Power sharing Political reconciliation What Sri Lanka did: Militarization of North-East Land occupation Delayed elections No real devolution Constitutional stalling Result: This led to: Massive Tamil disillusionment Loss of trust in India Political vacuum Radical diaspora activism Strategic miscalculation by India India believed: But Sri Lanka used: India then: Lost leverage Lost credibility among Tamils Allowed China to gain strategic space Summary (Plain truth) ✔ India actively restrained Tamil political mobilisation ✔ TNA was diplomatically silenced ✔ Tamil political space was frozen deliberately ✔ Promised political settlement never truly came - ‘வளமான நாடு – அழகான வாழ்க்கையை’ கட்டியெழுப்ப கைகோர்ப்போம் – சுதந்திர தின வழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி
Important Information
By using this site, you agree to our Terms of Use.