24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக ஜப்பான் தூதுக்குழு
சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக ஜப்பான் தூதுக்குழு இலங்கைக்கு 14 Mar, 2026 | 05:26 PM இலங்கையின் முன்னணி சுற்றுலா நிறுவனமான Connaissance De Ceylan இன் ஒருங்கிணைப்பின் கீழ் சுற்றுலத்துறையை மேம்படுத்துவதற்காக இந்நாட்டிற்கு வருகை தந்துள்ள 11 பேர் கொண்ட ஜப்பான் தூதுக்குழு, இன்று (14) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தை பார்வையிடுவதற்காக வருகை தந்தது. இலங்கை மக்களின் வரலாறு, புத்த மதத்தின் வருகை மற்றும் வளர்ச்சி, பாரம்பரிய கலாசாரம், ஆயுர்வேதம், சம்பிரதாயபூர்வ பழக்கவழக்கங்கள், உணவு முறைகள், பொருளாதாரப் பயிர்கள் போன்றவற்றை ஆராய்ந்து, அது தொடர்பில் புரிந்து கொள்வதே இந்தக் தூதுக்குழுவின் நோக்கமாகும். அதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளக் கூடிய தலையீடுகள் குறித்து அவர்கள் கலந்துரையாடியதுடன், அவர்கள் பெற்ற அறிவை ஜப்பான் மக்களுடன் பகிர்ந்து கொள்வதாகவும் தெரிவித்தனர். அதேபோன்று, ஜப்பானில் முன்னணி சுற்றுலாத் தலமாக இலங்கையை பிரபல்யப்படுத்தல், கொழும்பு, அநுராதபுரம், சீகிரியா, மஹியங்கனை மற்றும் கண்டி ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்டு இலங்கையின் கலாசார மரபுகளை சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் செல்வது போன்ற விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டன. இந்நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். ஜனாதிபதி அலுவலகத்திற்கு மேலதிகமாக, சபுகஸ்கந்த புராண விகாரை, மிஹிந்தலை, அநுராதபுரம், சிகிரியா, தம்பான, மல்வத்து மகா விகாரை, துறைமுக நகர் உட்பட பல்வேறு சிறப்புமிக்க இடங்களுக்கும் தூதுக்குழுவினர் விஜயம் செய்தனர். https://www.virakesari.lk/article/240970
-
தாதியர் சேவைப் பயிற்சிக்கு 2918 பேருக்கு புதிய நியமனங்கள்
சுகாதார சேவையில் பாரிய விரிவாக்கம்: 2,918 புதிய தாதியர் பயிற்சியாளர்கள் நியமனம் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பங்கேற்பு! Published By: Digital Desk 1 14 Mar, 2026 | 05:02 PM இலங்கையின் சுகாதார சேவையை மேம்படுத்தும் நோக்கில், புதிய தாதியர் பயிற்சிக்காக 2,918 பேரை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (14) முற்பகல் அலரி மாளிகையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.இலங்கை செய்திகள் 2025ஆம் ஆண்டிற்குரிய, 2022ஆம் ஆண்டு தொகுதியைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள 15 தாதியர் பாடசாலைகளில் 3 ஆண்டு காலப் பயிற்சியினைப் பெறவுள்ளனர். நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் கருத்து வெளியிடுகையில், ஆரம்பத்தில் 2,625 பேரை மாத்திரமே இணைத்துக் கொள்ள அனுமதி இருந்தது. எனினும், உரிய நிறுவனங்களுடன் கலந்துரையாடி அந்த எண்ணிக்கையை 2,918 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. எதிர்வரும் 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் இவர்கள் தாதியர் பாடசாலைகளில் பதிவு செய்யப்படுவார்கள். ஏப்ரல் 06ஆம் திகதி பயிற்சிகள் ஆரம்பமாகும். இவர்கள் 2029 ஏப்ரல் மாதம் இறுதித் தேர்வை எதிர்கொண்டு, அதே ஆண்டு ஜூன் மாதளவில் நிரந்தர சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். தற்போது மத்திய அரசின் கீழ் 29,749 பேரும், மாகாண சபைகளின் கீழ் 13,804 பேரும் என மொத்தம் 43,553 தாதியர்கள் சேவையில் ஈடுபட்டுள்ளனர். இது சுகாதார சேவையின் மொத்த ஆளணியில் 30 சதவீதமாகும். பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டாலும் இல்லாவிட்டாலும், சுகாதார சேவை என்பது எப்போதும் ஒரு அத்தியாவசிய சேவையாகும். இது வெறும் வேலைவாய்ப்பு அல்ல, ஒரு புனிதமான சேவை" என அமைச்சர் சுட்டிக்காட்டினார். மேலும், இந்தச் சேவையில் ஏற்படும் ஏதேனும் தடங்கல் ஒட்டுமொத்த நாட்டையும் பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இந்நிகழ்வில் சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, மேலதிக செயலாளர்கள், பிரதிப் பணிப்பாளர்கள் மற்றும் தாதியர் பாடசாலை அதிபர்கள் எனப் பல முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/240961
-
இஸ்ரேல் - கட்டார் - துபாய் - அபுதாபி மீது ஈரான் தாக்குதல்
பாக்தாத்தில் அமெரிக்க தூதரகத்தை ஈரான் தாக்கியது: வெடிப்புகள், கரும்புகை பரவல் 14 Mar, 2026 | 01:22 PM ஈராக் தலைநகரான பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் நடத்திய தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூதரக வளாகத்தின் ஹெலிக்கொப்டர் இறங்குதளம் (Helipad) மீது ஏவுகணை விழுந்து வெடித்து, கட்டிடத்திலிருந்து கரும்புகை எழுந்து பரபரப்பை உருவாக்கியுள்ளது. இதன் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகின்றன. சில பாதுகாப்பு அதிகாரிகள் இந்த தாக்குதலை ட்ரோன் மூலமாக நடத்தப்பட்டதாகவும் சிலர் ஏவுகணை மூலம் நடந்திருக்கலாம் என்றும் கூறியுள்ளனர். இதுவரை அமெரிக்கத் தூதரகம் அதிகாரபூர்வமாக இதுகுறித்து எந்தக் கருத்தும் வெளியிடவில்லை. இதற்கும் முன்னர், சவூதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படைத்தளத்தில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அங்கு இருந்த 5 அமெரிக்க இராணுவ விமானங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இச்சம்பவம் காரணமாக பாக்தாத்தில் அமெரிக்கத் தூதரக வளாகத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இராணுவம் குவிக்கப்பட்டு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஈராக் மற்றும் ஈரான் இடையேயான நிலைமைகள், நடுநிலைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியவையாக உள்ளன. இந்நிலையில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான உறவுகள் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தும் அபாயத்தில் உள்ளன. https://www.virakesari.lk/article/240940
-
கங்குலியின் "ஒரு சதம் போதாது (A Century Is Not Enough)" என்ற நூலில் இருந்து முக்கிய தருணங்கள்!
இந்திய அணி பாகிஸ்தான் சென்றிருந்த போது முஷரஃப் செய்த டெலிபோனால் கங்குலி அஞ்சியது ஏன்? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் ரஷித் ஷகூர் மூத்த விளையாட்டு செய்தியாளர், கராச்சி 14 மார்ச் 2026, 02:54 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் 1992 உலகக் கோப்பை வெற்றி பெற்ற அணியின் கேப்டனுமான இம்ரான் கான் தற்போது சிறையில் இருக்கிறார். சிறையில் அவரது கண் பார்வை பாதிக்கப்பட்டிருப்பதாக வெளியான செய்தி கிரிக்கெட் உலகிலும் பலரையும் கவலையில் ஆழ்த்தியது. இம்ரான் கானுக்கு சிறந்த சிகிச்சை கிடைக்க வேண்டும் என்று குரல் எழுப்பியவர்களில் இந்தியாவின் முன்னாள் கேப்டன்களான சுனில் கவாஸ்கர் மற்றும் கபில் தேவ் உள்ளிட்ட14 முன்னாள் கிரிக்கெட் கேப்டன்களும் அடங்குவர். இதில் பெரும்பாலானவர்கள் இம்ரான் கானுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியவர்கள். கவாஸ்கரும், கபில் தேவும் இம்ரான் கானுடன் விளையாடியவர்கள் இருவருக்கும் இம்ரான் கானிடம் ஆழமான பிணைப்பு இருக்கிறது. இந்தியாவின் மற்றொரு முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலிக்கும் இம்ரான் கானிடம் தனி பிணைப்பு இருக்கிறது. கங்குலி கிரிக்கெட் மைதானத்தில் ஒருபோதும் இம்ரான் கானை எதிர்கொண்டதில்லை என்றாலும், அவர் மீது மனதில் எப்போதும் மரியாதை வைத்திருக்கிறார். அதனால்தான் இம்ரான் கானின் உடல்நிலை குறித்து அவரும் கவலை வெளிப்படுத்தினார். சிறையில் இருக்கும் இம்ரான் கானுக்கு சிறந்த சிகிச்சை கிடைக்க வேண்டும் என்று கங்குலி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது. "அவர் பாகிஸ்தானின் பிரதமராக இருந்தவர்; கேப்டனாக பாகிஸ்தான் கிரிக்கெட்டை உலக வரைபடத்தில் முக்கியமான இடத்தில் நிறுத்தியவர்" என்று கங்குலி குறிப்பிட்டிருந்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கங்குலியின் கருத்துப்படி, இம்ரான் கானின் ஒரு சாதாரண ஆலோசனை அவரது சிந்தனையையே மாற்றிவிட்டது (கோப்புப் படம்) வாழ்க்கையையே மாற்றிய ஒரு சந்திப்பு கங்குலி தனது "ஒரு சதம் போதாது (A Century Is Not Enough)" என்ற நூலில் இம்ரான் கானுடனான தனது சந்திப்பையும், அவர் சொன்ன அந்த விலைமதிப்பற்ற வார்த்தைகளையும் விரிவாக எழுதியிருக்கிறார். அதில் அவர், "ஈடன் கார்டன் மைதானத்தில் இம்ரான் கான் பந்து வீசியதை பார்த்திருக்கிறேன். அவரது போட்டிகளை தொலைக்காட்சியில் மிகவும் கவனமாகப் பார்ப்பேன்; அவரைப் பற்றி எது கிடைத்தாலும் வாசித்துவிடுவேன். 1997-ஆம் ஆண்டு லண்டனில் உள்ள இந்திய தூதரகம் நடத்திய விருந்தில்தான் இம்ரான் கானை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன்." எனக் குறிப்பிட்டுள்ளார். அந்த நேரம் கங்குலியின் வாழ்க்கையில் மிகவும் கஷ்டமான காலகட்டம். டொரான்டோ தொடரில் விளையாடும் அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்ததால் மிகவும் சோகத்தில் இருந்தார். பின்னர் கயானா டெஸ்ட் போட்டியிலும் சேர்க்கப்படாதது அவரது காயத்தில் உப்பைத் தடவியது போல்தான் இருந்தது. வெஸ்ட் இண்டீஸில் பார்படோஸை தவிர மற்ற போட்டிகளில் நன்றாக விளையாடியிருந்தும், கடைசி டெஸ்டில் ஒரு கூடுதல் பந்துவீச்சாளருக்காக அவரை அணியிலிருந்து நீக்கினார்கள். பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் தான் பயனுள்ளதாக இருப்பதாக கங்குலி நம்பியிருந்தார். அணியிலிருந்து தான் நீக்கப்பட்ட முடிவை ஏற்றுக்கொள்வது மிகவும் கஷ்டமாக இருந்தது என்கிறார் கங்குலி. அவர் அப்போது ஒரு புதிய மற்றும் அனுபவமற்ற கிரிக்கெட் வீரராக இருந்தததும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் இம்ரான் கானுடனான சந்திப்பும் உரையாடலும் அவரது மனதை மாற்றியது. இதுகுறித்து கங்குலி ,"இம்ரான் கானின் பேச்சு மிகவும் நேர்மையாகவும் நட்புடனும் இருந்தது. அவர் என்னிடம், 'உன் பேட்டிங்கை பார்த்தேன், நன்றாக விளையாடுகிறாய்' என்று சொன்னார். அந்த அன்பான வார்த்தைகள் என்னுள் இருந்த தயக்கத்தை போக்கின. அவர் சொன்னதை கவனமாகக் கேட்டேன். அவர் சொன்னதை என்னால் ஒருபோதும் மறக்கவே முடியாது", என்று எழுதியுள்ளார் . கங்குலியின் கூற்றுப்படி, இம்ரான் கான் அவரிடம் சொன்ன வார்த்தைகள்; "நீ உயரப் பறக்க வேண்டும். வானில் உயரப் பறக்கும்போது இருண்ட மேகங்களை பார்க்கிறாய் என்றால், அதை சமாளிக்க ஒரே வழி இன்னும் உயரப் பறப்பதுதான். நானும் அணியிலிருந்து வெளியே இருந்திருக்கிறேன். அதனால் அது எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியும். உன் எதிராளி பின்தங்கி விடும் அளவுக்கு உயரப் பறக்க வேண்டும். அதுவே உன் பிரச்னைக்கு தீர்வு." இம்ரான் கானின் வார்த்தைகளும் அதன் அர்த்தங்களும் மிகவும் எளிமையானவை எனக் கூறும் கங்குலி, ஆனால் அவர் அந்த கருத்துகளை மிகுந்த நம்பிக்கையுடன் வெளிப்படுத்தினார். இந்த வார்த்தைகளால் தான் மிகவும் ஈர்க்கப்பட்டதாகவும் அவை தனக்கு புத்துயிர் ஊட்டியதாகவும் கூறுகிறார் கங்குலி. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,தனது வாழ்க்கைப் பயணத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராகச் சவுரவ் கங்குலி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் (கோப்புப் படம்). அதற்கு சில மாதங்கள் கழித்து நடந்த தொடரில் கங்குலி நாட்டின் ஹீரோவாக மாறினார். அந்த தொடரில் 222 ரன்களும் 15 விக்கெட்டுகளும் எடுத்தார். அந்தத் தொடரை 4-1 என்கிற வென்றது மட்டுமல்ல, அது இம்ரான் கானின் சொந்த நாடான பாகிஸ்தானுக்கு எதிரானது என்பதைக் குறிப்பிடுவதும் இங்கே முக்கியமாகிறது. அந்த தொடரில் கங்குலி தொடர்ந்து நான்கு ஒருநாள் போட்டிகளில் "ஆட்ட நாயகன் (Player of the Match)" விருது வென்றார். கங்குலியைத் தவிர வேறு எந்த வீரரும் தொடர்ந்து நான்கு ஒருநாள் போட்டிகளில் இந்த விருதை வென்றதில்லை. அதே தொடரின் மூன்றாவது ஒருநாள் போட்டியில் 10 ஓவர்களில் 16 ரன்களுக்கு 5 விக்கெட் எடுத்தார் கங்குலி. பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் இந்திய பந்துவீச்சாளரின் சிறந்த பந்துவீச்சாக இது உள்ளது. இம்ரான் கானின் வார்த்தைகள் உண்மையிலேயே ஒரு மாயாஜாலம் என்றும் அதற்காக அவருக்கு அமைதியாக நன்றி சொன்னதாகவும் தனது புத்தகத்தில் தெரிவிக்கிறார் கங்குலி. நிச்சயமற்ற நிலையில் தடுமாறிக் கொண்டிருந்த ஒரு இளம் கிரிக்கெட்டருக்கு, கிரிக்கெட்டை மட்டுமல்ல வாழ்க்கையையே பார்க்கும் புதிய கண்ணோட்டம் கிட்டியது. சவுரவ் கங்குலி உடனான இரண்டாவது சந்திப்பு 2004-ஆம் இந்திய அணி பாகிஸ்தான் சென்ற போது நடந்தது. தனது வீட்டுக்கு உணவருந்த வருமாறு இம்ரான் கான் அவரை அழைத்திருந்தார், அவரின் விருந்தோம்பலால் மிகவும் ஈர்க்கப்பட்டார் கங்குலி. 2005-ஆம் ஆண்டு கங்குலியின் கிரிக்கெட் வாழ்க்கையில் மோசமான காலகட்டமாக அமைந்தது. மோசமான ஃபார்ம் காரணமாக கேப்டன் பதவி பறிக்கப்பட்டதோடு அணியிலும் தன்னுடைய இடத்தை இழந்தார். அவர் இந்திய அணிக்கு திரும்பியதில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஜாகீர் அப்பாஸ் முக்கியப் பங்கு வகித்தார். ஜாகீர் அப்பாஸின் உதவி பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சவுரவ் கங்குலியின் கருத்துப்படி, ஜாகீர் அப்பாஸின் ஆலோசனை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக விளையாடுவதற்குப் பெரிதும் உதவியது (ஜாகீர் அப்பாஸ்- கோப்புப் படம்) 2006-இல் நார்தாம்ப்டன்ஷையர் அணிக்காக கவுன்டி கிரிக்கெட் விளையாடினார் கங்குலி. அப்போது அவர் தனது பேட்டிங் நுட்பத்தில் சில சிக்கல்களைச் சந்தித்து வந்தார். இதனால் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதில் கஷ்டப்பட்டார். இந்தச் சந்தர்ப்பத்தில் தான் அவர் ஜாகீர் அப்பாஸை சந்திக்கிறார். அவரை மரியாதையாக 'ஸி பாய்' என அழைக்கிறார். "ஸி பாய் தனது விரிவான அனுபவத்தால் என் பிரச்னையை தீர்த்தார். வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளும் போது நேராக நிற்க சொன்னார். பக்கவாட்டில் திரும்பாமல் மார்போடு நேரே நின்று விளையாட சொன்னார். என் கிரிப்பும் (grip) தானாக மாறியது." "பேட்டிங் நிலை மாறியதை தகவமைத்துக் கொள்ள சிரமமாக இருந்தாலும் போகப்போக நான் மிகவும் வசதியாக உணர்ந்தேன். வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள நிறைய நேரம் கிடைத்தது, அதனைத் தொடர்ந்தவை எனது வாழ்நாளின் சிறந்த நாட்கள், அதற்கு ஸி பாய்க்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்" என கங்குலி தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். சலீம் மாலிக்கின் அச்சுறுத்தல் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சவுரவ் கங்குலி தனது பந்துவீச்சால் சலீம் மாலிக்கை இக்கட்டான நிலைக்கு உள்ளாக்கினார் (கோப்புப் படம்). இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் எப்போதும் விவாதப் பொருளாகவே இருக்கும். களத்துக்கு வெளியே நட்பும் மகிழ்ச்சியான தருணங்களும் இருந்தாலும் களத்தில் எதிரணி ஆதிக்கம் செலுத்த யாரும் விரும்புவதில்லை. ஸ்லெட்ஜிங் கடுமையாகவே இருக்கும். டொரான்டோ ஒருநாள் தொடரில் மொயின் கான் விக்கெட் கீப்பர் பொசிஷனில் நின்று கொண்டே தொடர்ந்து ஸ்லெட்ஜ் செய்தார்; சலீம் மாலிக் இன்னும் ஒரு படி மேலே போனார். இரண்டாவது போட்டியில் சலீம் மாலிக்கை கங்குலி அவுட் செய்திருந்தார். மூன்றாவது போட்டியில் கங்குலி பேட்டிங்கிற்கு வரும்போது சலீம் மாலிக் அவரிடம் வந்து மிரட்டல் தொனியில், "இன்று உன் பந்துவீச்சை அடித்தாடுவேன். நீ ஆச்சரியப்பட்டு போவாய்." என்று கூறினார். அந்தப் போட்டியில் கங்குலி சலீம் மாலிக்கை மீண்டும் அவுட் செய்தார். "அப்போது நான் இளம் வீரன், சலீம் மாலிக் பாகிஸ்தானின் ஸ்டார் பேட்ஸ்மேன் — அவருக்கு பதில் சொல்லும் தைரியம் எனக்கு இல்லை" என்றார் கங்குலி. அதே தொடரில் பாகிஸ்தான் கேப்டன் ரமீஸ் ராஜாவையும் கங்குலி ஆட்டமிழக்கச் செய்திருந்தார். "பாகிஸ்தான் அணியிலிருந்து நான் வெளியேற்றப்பட்டதற்கு நீ தான் காரணம்," என ரமிஸ் ராஜா நகைப்புடன் கங்குலியிடம் தெரிவித்துள்ளார். முஷரஃப் செய்த டெலிபோனால் கங்குலி அஞ்சியது ஏன்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஒருமுறை பாகிஸ்தான் சுற்றுப்பயணம் சென்றிருந்த சவுரவ் கங்குலிக்கு, அன்றைய அதிபர் பர்வேஸ் முஷாரப் தொலைபேசியில் அழைத்து அறிவுரை வழங்கினார். (கோப்புப் படம்) 2004-இல் இந்திய அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் சென்றிருந்த போது அணிக்கு பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது. லாகூர் ஹோட்டல் ஒரு கோட்டை போலவே இருந்தது என கங்குலி குறிப்பிடுகிறார். ஆனால் இந்திய அணி கேப்டன் நள்ளிரவில் அந்த கோட்டையை தாண்டி நண்பர்களுடன் சாகசம் செய்ய சென்றார் என்று யாரேனும் நினைத்துப் பார்க்க முடியுமா? சவுரவ் கங்குலி அதைத்தான் செய்தார். பாதுகாப்பு விதிகளை மீறுகிறோம் எனத் தெரிந்தும் அதைச் செய்தார். அந்த சூழலில் இருந்து விலகி இருக்க வேண்டும் என அவர் விரும்பினார். "ஒருநாள் தொடரில் வரலாற்றுக்குரிய வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இருந்தேன். கேட்ச் பிடிக்க முயன்றபோது எனக்கு காயமும் ஏற்பட்டது., மூன்று வாரம் ஓய்வெடுக்க மருத்துவர் சொன்னார். ஆனால் எனது மனநிலை நன்றாக இருந்தது. கொல்கத்தாவிலிருந்து வந்த நண்பர்களை பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன்" என்று எழுதியிருக்கிறார் கங்குலி. "ஒரு இரவு நண்பர்களுடன் வெளியே போக முடிவு செய்தேன். நாங்கள் வெளியே செல்வதை பாதுகாப்பு அதிகாரியிடம் சொல்லவில்லை, சொன்னால் போகவே விட மாட்டார்கள். அணி மேலாளர் ரத்னாகர் ஷெட்டியிடம் மட்டும் கூறிவிட்டு வெளியே சென்றேன். அமைதியாக பின் வாசல் வழியாகச் சென்றேன். என்னை யாரும் அடையாளம் காணக்கூடாது என்பதற்காக நழுவி, தொப்பி போட்டு முகத்தை மறைத்துக் கொண்டு கிளம்பினேன்." என்று கூறுகிறார். "குவாலியர்மண்டியின் பிரபலமான ஃபுட் ஸ்ட்ரீட் தான் எங்களின் இலக்காக இருந்தது. கபாப், தந்தூரி உணவு எங்களுக்காக காத்திருந்தது. ஆனால் திறந்த வெளியில் யாராவது அடையாளம் கண்டுபிடித்து விடுவார்கள் என்ற பயமும் இருந்தது. ஒருவர் என்னிடம் வந்து, "நீங்கள் சவுரவ் கங்குலியா?" என்று கேட்டார். ஆனால் நான் மறுத்தேன். அந்த நபர் ஏமாற்றத்துடன் சொன்னார், "ஆனால் நீங்கள் சவுரவ் கங்குலி மாதிரியே இருக்கிறீர்கள்!" எனக் கூறினார் என்று கங்குலி தெரிவிக்கிறார். இதைப் பற்றி மேலும் குறிப்பிட்ட அவர், "நாங்கள் எல்லோரும் சிரிப்பை அடக்க மிகவும் சிரமப்பட்டோம். இதற்கிடையே இன்னொருவர் வந்து 'சார், நீங்கள் இங்கு வந்துள்ளீர்களா? உங்கள் அணி என்ன சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது' என்று கூறினார். நான் அவரைத் தவிர்க்க முயற்சித்தேன். ஆனால் அவர் தலையை அசைத்துவிட்டு நடந்து சென்றார்." "நாங்கள் சாப்பிட்டு முடிக்கும் தருணத்தில் பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் என்னை அடையாளம் கண்டார். அவர் அப்போதைய இந்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன் அங்கே வந்திருந்தார். அவர் என்னைக் கண்டதும், "சவுரவ்! சவுரவ்!" என்று கூவ ஆரம்பித்தார். நான் சிக்கலில் இருக்கிறேன் என்பதை உணர்ந்தேன். இந்திய அணி கேப்டன் 'ஃபுட் ஸ்ட்ரீட்டில்' இருக்கிறார் என அனைவருக்கும் தெரிந்துபோனது." "அனைத்து திசைகளிலிருந்தும் மக்கள் கூட ஆரம்பித்துவிட்டனர். கடைசி கபாப் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன், நிலைமை இவ்வளவு வேகமாக மாறும் என்று எதிர்பார்க்கவில்லை. பணம் கொடுத்துவிட்டு செல்ல முயன்றேன். ஆனால் கடைக்காரர் வாங்கவே மறுத்தார்." "ஒரு போலீஸ்காரர் எங்களை காருக்கு அழைத்துச் சென்றார். ஹோட்டலுக்கு திரும்பும்போது ஒரு பைக் வேகமாக பின்தொடர்ந்தது. கண்ணாடியை கீழே இறக்க சொன்னார். என் உடன் வந்தவர்கள் மறுத்தனர். ஆனால் நான் கண்ணாடியை இறக்கினேன். அந்த நபர் கை நீட்டி சொன்னார்: "நான் ஃபுட் ஸ்ட்ரீட்டில் கடை வைத்திருக்கிறேன். உங்களின் மிகப்பெரிய ரசிகன் நான்!' எனக் கூறினார்" மறுநாள் காலை, அணி மேலாளரிடம் நடந்தவற்றை கங்குலி ஒப்புக்கொண்டார். ஆனால் அதற்குப் பிறகு நடந்தது அவரையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. "அறைக்கு திரும்பியதும் போன் அடித்தது. போன் எடுத்தேன் — அதிபர் பர்வேஸ் முஷாரஃப்பின் அலுவலகத்தில் இருந்து அழைப்பு! அதிபர் என்னுடன் பேச இருப்பதாக சொன்னார்கள். நான் திகைத்துப் போனேன். ஏன் பாகிஸ்தான் அதிபர் இந்திய கேப்டனிடம் பேசவேண்டும் என்று தெரியவில்லை." "முஷாரஃப் அமைதியாகவும் தெளிவாகவும் சொன்னார்: 'அடுத்த முறை வெளியே போக வேண்டும் என்றால் பாதுகாப்பு அதிகாரிகளிடம் சொல்லுங்கள். உரிய ஏற்பாட்டை நாங்கள் செய்கிறோம். ஆனால் தயவுசெய்து இதுபோன்ற சாகசங்களில் ஈடுபடாதீர்கள்.' என்றார். எனக்கு அசௌகரியமாக இருந்தது. வாசிம் அக்ரமின் ஸ்விங் பந்துகளை எதிர்கொண்டதை விட, முஷாரஃப்பின் அந்த அழைப்பு என்னை அதிகமாக பயமுறுத்தியது!" பதினைந்து ஆண்டுகள் கழித்து பாகிஸ்தானுக்குச் சென்றிருந்த சவுரவ் கங்குலியின் அணி ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடியிருந்தது. ஒருநாள் தொடரை 3-2 என்கிற கணக்கிலும் டெஸ்ட் தொடரை 2-1 என்கிற கணக்கிலும் இந்திய அணி வென்றது. சில ஆண்டுகளுக்கு முன்பு 2004 தொடர் பற்றிய தனது சிறந்த நினைவுகளையும் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல்-ஹக் உடனான தனது நட்பைப் பற்றியும் ஆஜ் தக் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார். "நான் ஒரு கிரிக்கெட்டராக இன்சமாம் உல்-ஹக்கின் ரசிகர் என்றாலும் அதை விடவும் அவருடைய குணங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்." என அதில் குறிப்பிட்டிருந்தார். இன்சமாம் உல்-ஹக்கும் கங்குலியுடனான தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். "2005 தொடருக்கு முன்பாக ஒரு விளம்பரத்துக்காக கொல்கத்தா சென்றிருந்தேன். நான் கொல்கத்தாவில் தங்கியிருந்த ஒட்டுமொத்த நேரமும் ஒரு விடுதியில் தங்கியிருந்தேன். ஆனால் எனக்கு உணவு கங்குலியின் வீட்டிலிருந்து வந்தது. கங்குலியின் விருந்தோம்பலை என்னால் எப்போதும் மறக்க முடியாது." என்றார். 2007இல் கங்குலி தனது கரியரின் இறுதிக் கட்டத்தில் இருந்த போது பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக பெர்ஃபார்ம் செய்திருந்தார். மூன்று டெஸ்ட் போட்டிகளில் 89 சராசரியில் 534 ரன்கள் எடுத்தார். அந்தத் தொடரின் அதிக ரன்கள் எடுத்த வீரர் கங்குலி தான். 239 ரன்கள் என்ற அவரது ஒரே இரட்டை சதம் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டிலேயே தனது சிறந்த ஸ்கோரை அந்தத் தொடரில் எடுத்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/c4g78e7vz1yo
-
இலங்கை - தாய்லாந்து பௌத்த உறவை வலுப்படுத்தும் நோக்கில் 108 ‘Phra Phuttha Metta’ புத்தர் சிலைகள் அன்பளிப்பு!
இலங்கை - தாய்லாந்து பௌத்த உறவை வலுப்படுத்தும் நோக்கில் 108 ‘Phra Phuttha Metta’ புத்தர் சிலைகள் அன்பளிப்பு! Published By: Digital Desk 1 14 Mar, 2026 | 03:43 PM இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கிடையிலான பௌத்த மத உறவுகளை மேலும் பலப்படுத்தும் நோக்கில், 108 ‘Phra Phuttha Metta’ சிலைகளை இலங்கைக்கு வழங்கும் விசேட கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தின் Maha Rattana Buddhist Association அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி 15 பேர் கொண்ட விசேட தூதுக்குழுவினர், நேற்று 13ஆம் திகதி வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்தனர். இதன்போது, 108 புத்தர் சிலைகளை இலங்கைக்கு வழங்கும் புண்ணியக் கருத்திட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சருடன் கலந்துரையாடப்பட்டது. இந்த சந்திப்பின் அடையாளமாக அமைச்சரிடம் தங்க முலாம் பூசப்பட்ட புத்தர் சிலை ஒன்றும் கையளிக்கப்பட்டது. இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கிடையிலான நீண்டகால மத மற்றும் இராஜதந்திர உறவுகளை உறுதிப்படுத்துவதே இந்த விசேட திட்டத்தின் நோக்கமாகும். மத நல்லிணக்கம் மற்றும் அமைதியை அடிப்படையாகக் கொண்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான ஆன்மீகப் பிணைப்பை வலுப்படுத்துவது இதன் முதன்மை இலக்காகும். இந்தத் திட்டத்தின் ஒரு கட்டமாக, நுவரெலியா மாவட்டத்திலுள்ள வசதிகள் குறைந்த விகாரைகளுக்கு புத்தர் சிலைகளை வழங்கும் பணிகள் அடையாள ரீதியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வரும் காலங்களில் இந்த திட்டம் நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்தப்படும் என அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/240950
-
ஈரானுக்கு எதிரான போர் - அமெரிக்காவுக்கு ஏற்பட்ட செலவு
ஈரான் மீதான போர்: அமெரிக்காவிற்கு நாளொன்றுக்கு 890 மில்லியன் டொலர்கள் செலவு Mar 14, 2026 - 05:34 PM ஈரானுக்கு எதிராக நடத்தப்படும் போருக்காக அமெரிக்கா நாளொன்றுக்கு 890 மில்லியன் டொலர்களை செலவிடுவதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வொஷிங்டனை தளமாகக் கொண்டு இயங்கும் மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, தினசரி வான்வழி நடவடிக்கைகளுக்காக 30 மில்லியன் டொலர்களும், கடற்படை நடவடிக்கைகளுக்காக 15 மில்லியன் டொலர்களும், தரைவழி நடவடிக்கைகளுக்காக 1.5 மில்லியன் டொலர்களும் செலவிடப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. யுத்தம் ஆரம்பமான முதல் ஆறு நாட்களில் மட்டும் 11.3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், "ஆபரேஷன் எபிக் பியூரி" எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, அமெரிக்கா இதுவரை மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளிலேயே அதிக செலவுமிக்க ஒன்றாக மாறியிருப்பது சிறப்பம்சமாகும். குறித்த அறிக்கையின்படி, பெப்ரவரி 28 ஆம் திகதி ஆரம்பமான தாக்குதல்களின் முதல் 100 மணிநேரத்திற்கு மட்டும் 3.7 பில்லியன் டொலர்கள் செலவாகியுள்ளது. முதல் வாரத்தில் மட்டும் அமெரிக்க வரி வருவாயில் இருந்து 11 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளதாக பென்டகன் காங்கிரஸிற்கு அறிவித்துள்ளது. முன்னதாக, 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஈரானின் அணுசக்தி நிலையங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட "ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்" நடவடிக்கைக்கு 2.26 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டது. அந்த நடவடிக்கை இரண்டரை மணிநேரம் மட்டுமே நீடித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன. https://adaderanatamil.lk/news/cmmq9z7dd000h356pgd9rfuts
-
வளைகுடா நாடுகள் மீதான தாக்குதலை நிறுத்த ஈரானுக்கு ஹமாஸ் வலியுறுத்தல்
வளைகுடா நாடுகள் மீதான தாக்குதலை நிறுத்த ஈரானுக்கு ஹமாஸ் வலியுறுத்தல் காசா: ‘அண்டை நாடுகளை (வளைகுடா நாடுகள்) இலக்கு வைப்பதை ஈரான் நிறுத்த வேண்டும். அதேவேளையில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக தன்னைத் தற்காத்துக்கொள்ளும் உரிமை ஈரானுக்கு உள்ளது’ என பாலஸ்தீனிய இஸ்லாமிய இயக்கமான ஹமாஸ் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல் நடவடிக்கைக்கு சர்வதேச விதிமுறைகள் மற்றும் சட்டங்களுக்கு இணங்க, சாத்தியமான அனைத்து வழிகள் மூலமும் பதிலடி கொடுக்கும் உரிமையை ஈரான் இஸ்லாமியக் குடியரசு கொண்டிருக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் அதேவேளையில், பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட அண்டை நாடுகளை (வளைகுடா நாடுகள்) இலக்கு வைப்பதைத் தவிர்க்குமாறு ஈரானில் உள்ள சகோதரர்களை எங்கள் இயக்கம் கேட்டுக்கொள்கிறது’ என்று தெரிவித்துள்ளது. காசா பகுதியில் இஸ்ரேலுடன் இரண்டு ஆண்டுகள் நீடித்த, மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்திய போரை நடத்திய ஹமாஸ் இயக்கம், தற்போது நடைபெற்று வரும் இந்தப் போரை உடனடியாக நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சர்வதேச சமூகத்தையும் வலியுறுத்தியது. முன்னதாக, ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி போரில் கொல்லப்பட்டதை, ஹமாஸ் இயக்கம் ‘ஒரு கொடுமையான குற்றம்’ என்று கண்டித்தது. அந்த கண்டனத்தில், ‘எங்கள் மக்களுக்கும், எங்கள் நோக்கத்திற்கும், எங்கள் எதிர்ப்புப் போராட்டத்துக்கும் தேவையான அனைத்து வகையான அரசியல், ராஜதந்திர மற்றும் ராணுவ ஆதரவையும் அவர் வழங்கினார்’ என்று தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது. அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே இன்று 14-வது நாளாக போர் நீடித்துள்ளது. வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. https://www.hindutamil.in/news/world/iran-must-stop-attacking-neighboring-countries-hamas-urges
- Today
-
ஈரானின் கார்க் தீவில் அமெரிக்கா குண்டு வீச்சு : உலக எண்ணெய் சந்தையில் பதற்றம் அதிகரிப்பு
‘‘எஞ்சியிருப்பதை காப்பாற்றிக் கொள்வதே புத்திசாலித்தனம்’’ - ஈரானுக்கு ட்ரம்ப் அறிவுரை வாஷிங்டன் டி.சி. : ‘‘ஈரான் முழுமையாக தோற்கடிக்கப்பட்டு விட்டது. ஈரான் ராணுவமும், அதன் ஆட்சியுடன் தொடர்புடையவர்களும் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு தங்கள் நாட்டில் எஞ்சி இருப்பதை காப்பாற்றிக் கொள்வதே புத்திசாலித்தனம். ஏனெனில், அங்கு எஞ்சி இருப்பது மிகக் குறைவே’’ என டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது கடந்த பிப். 28-ம் தேதி தாக்குதல்களைத் தொடங்கின. இந்த தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஈரானும் பதில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் ஈரான் முழுமையாக தோற்கடிக்கப்பட்டு விட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்ரூத் சமூக ஊடக பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், “ஈரானுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் எவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டுள்ளது என்பது குறித்த செய்திகளை வெளியிடுவதை போலிச் செய்தி ஊடகங்கள் வெறுக்கின்றன. அமெரிக்க ராணுவத்தால் ஈரான் முழுமையாக தோற்கடிக்கப்பட்டுவிட்டது; அது ஒரு ஒப்பந்தத்தை விரும்புகிறது. ஆனால் அது நான் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான ஒப்பந்தம் அல்ல என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம், ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்க ராணுவத்தின் நடவடிக்கை மீது தனக்கு இருக்கும் அதிருப்தியையும்” அவர் வெளிப்படுத்தி உள்ளார். ட்ரம்ப் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், “முழு மத்திய கிழக்கையும் கைப்பற்றவும் இஸ்ரேலை முழுமையாக அழித்தொழிக்கவும் ஈரான் திட்டமிட்டிருந்தது. அந்த திட்டங்கள் அனைத்தும் ஈரானைப் போலவே இப்போது அழிந்துவிட்டன” என தெரிவித்துள்ளார். இதற்கு முன்பாக அவர் வெளியிட்ட ஒரு நீண்ட பதிவில், “சில நிமிடங்களுக்கு முன்பு எனது வழிகாட்டுதலின் பேரில் அமெரிக்க மத்திய கட்டளை (அமெரிக்க ராணுவம்), மத்திய கிழக்கின் வரலாற்றில் மிகவும் சக்திவாய்ந்த தாக்குதல் ஒன்றை செயல்படுத்தியது. ஈரானின் கிரீடமான கார்க் தீவில் உள்ள ஒவ்வொரு ராணுவ இலக்கையும் அது முற்றிலுமாக அழித்துவிட்டது. எங்கள் ஆயுதங்கள் உலகம் இதுவரை அறிந்திராத மிகவும் சக்திவாய்ந்தவை மற்றும் அதிநவீனமானவை. எனினும், கண்ணியம் கருதி, அந்த தீவில் உள்ள எண்ணெய் உள்கட்டமைப்பை நான் அழிக்க விரும்பவில்லை. எனினும், ஈரான் அல்லது வேறு யாராவது ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் செல்வதில் தலையிட ஏதாவது செய்தால், இந்த முடிவை நான் உடனடியாக மறுபரிசீலனை செய்வேன். எனது முதல் பதவிக்காலத்தின்போது, அமெரிக்க ராணுவத்தை மிகவும் ஆபத்தான, சக்திவாய்ந்த, பயனுள்ள படையாக மீண்டும் கட்டியெழுப்பினேன். நாங்கள் தாக்க நினைக்கும் எதையும் பாதுகாக்கும் திறன் ஈரானுக்கு இல்லை. எங்கள் தாக்குதல்களுக்கு எதிராக அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. ஈரானிடம் ஒருபோதும் அணு ஆயுதம் இருக்காது. அமெரிக்காவையோ, மத்திய கிழக்கையோ அல்லது உலகையோ அச்சுறுத்தும் திறன் அவர்களுக்கு இருக்காது. ஈரான் ராணுவமும், அதன் ஆட்சியுடன் தொடர்புடைய மற்ற அனைவரும் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு தங்கள் நாட்டில் எஞ்சி இருப்பதை காப்பாற்றிக்கொள்வதே புத்திசாலித்தனம். அங்கு எஞ்சி இருப்பது அதிகம் இல்லை’’ என தெரிவித்துள்ளார். ‘‘எஞ்சியிருப்பதை காப்பாற்றிக் கொள்வதே புத்திசாலித்தனம்’’ - ஈரானுக்கு ட்ரம்ப் அறிவுரை
-
ஈரானுக்கு எதிரான போர் - அமெரிக்காவுக்கு ஏற்பட்ட செலவு
அவங்களை அசைக்கேலாது மட்டுமல்ல. அசையவும் மாட்டார்கள். அழிவது என்னவோ அப்பாவி மக்களே.
-
“ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க இந்தியா உட்பட உலக நாடுகளிடம் அமெரிக்கா கெஞ்சுகிறது” - ஈரான் அமைச்சர் அராக்சி
“ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க இந்தியா உட்பட உலக நாடுகளிடம் அமெரிக்கா கெஞ்சுகிறது” - ஈரான் அமைச்சர் அராக்சி தெஹ்ரான்: “ரஷ்யாவின் எண்ணெய் விஷயத்தில் அமெரிக்கா இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. முன்பு இந்தியா ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை குறைக்க அமெரிக்கா அழுத்தம் கொடுத்தது. ஆனால் இப்போது இந்தியா உட்பட உலக நாடுகளை ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய்யை வாங்க அமெரிக்கா வலியுறுத்துகிறது” என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறினார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்த இந்தியாவை மிரட்டுவதில் அமெரிக்கா பல மாதங்கள் செலவிட்டது. தற்போது ஈரானுடனான இரண்டு வாரப் போருக்குப் பிறகு, வெள்ளை மாளிகை இந்தியா உட்பட உலக நாடுகளிடம் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கக் கெஞ்சுகிறது. ஈரான் மீதான போரை ஆதரிப்பதால், ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்காவுக்கு ஆதரவு கிடைக்கும் என்று ஐரோப்பா நினைத்தது பரிதாபகரமானது” என்றார். கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவது ரஷ்யாவிற்கு பெரும் வருவாய் ஊக்கத்தை அளிப்பதாக ஒரு பத்திரிகை வெளியிட்ட தலைப்புச் செய்தியை பகிர்ந்த ஈரான் வெளியுறவு அமைச்சர் இந்தக் கருத்துக்களைப் பதிவிட்டுள்ளார். முன்னதாக, கடந்த வியாழக்கிழமை ட்ரம்ப் நிர்வாகம் கடலில் சிக்கித் தவிக்கும் ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்க நாடுகளை அனுமதிக்கும் வகையில் 30 நாள் விலக்கு அறிவித்திருந்தார். மத்திய கிழக்கில் போருக்கு மத்தியில், மிக முக்கியமான எண்ணெய் கப்பல் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதன் காரணமாக, கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 அமெரிக்க டாலர்களைத் தாண்டிய பின்னர், அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்தது. அமெரிக்காவின் கூற்றுப்படி, தற்காலிக உரிமம் மார்ச் 12-ம் தேதி வரை கப்பல்களில் ஏற்றப்பட்ட ரஷ்ய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை விநியோகிக்கவும் விற்பனை செய்யவும் அனுமதிக்கிறது. இந்த அனுமதி ஏப்ரல் 11-ம் தேதி வரை அமலில் இருக்கும். இந்தியா கடலில் சிக்கித் தவிக்கும் ரஷ்ய எண்ணெய் சரக்குகளை வாங்குவதற்கு கடந்த மார்ச் 5 -ம் தேதி அமெரிக்கா 30 நாட்கள் விலக்கு அளித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. “ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க இந்தியா உட்பட உலக நாடுகளிடம் அமெரிக்கா கெஞ்சுகிறது” - ஈரான் அமைச்சர் அராக்சி
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
‘அதிமுக கூட்டணிக்கு தவெக சென்றால்..?’ - சீமான் ரியாக்ஷன் திருச்சி: “என் வாக்காளர்கள் யார் எனத் தெரிந்துகொண்டே அதிமுக கூட்டணிக்கு தவெக சென்றால் எங்களுக்கு பாதிப்பு வருமா என கேட்கிறீர்கள்.பாதிப்புக்கு பயந்து நிற்பவன் ஒரு போர்வீரனாக இருக்க முடியுமா?” என்றார் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். திருச்சி விமான நிலையத்தில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகத்தில் கடந்த 15 நாட்களுக்குள் பல்வேறு கொலைகள், பாலியல் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. 6 வயது குழந்தையிலிருந்து 60 வயது முதியவர்களுக்குக் கூட பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற தொடர் குற்றச் செயல்கள் அதிகரிப்பு சமூகத்தின் ஒழுக்க சீர்கேட்டுக்கு காரணமாகிறது. குற்றங்களில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலானோர் மதுபோதையில் உள்ளது கவலைக்குரியது. இதைத் தடுப்பதற்கு அரசுக்கு மட்டுமல்ல, சமூகத்துக்கும் பொறுப்புள்ளது. சாதி அரசியலாக மாறி அதிகாரத்துக்கு வந்தால் சமத்துவம் அழியும். மதம் அரசியலாக மாறினால் மனிதம் அழியும். பணம் அரசியலாக மாறினால் பண்பாடு மற்றும் ஒழுக்கம் அழியும். நல்ல ஒழுக்கம் மற்றும் அறநெறி கொண்ட சமூகத்தை உருவாக்க அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். எதிர்காலத்தில் பத்திரமாக நம் குழந்தைகளை இந்த பூமியில் விட முடியுமா என்ற ஐயம் எழுகிறது. ஆட்சியாளர்கள் தவறு செய்கிறார்கள் என்றால் ஆட்சியாளர்களை தேர்வு செய்த மக்களும் பொறுப்பேற்க வேண்டும். தொடர்ந்து 60 ஆண்டுகளாக தவறு செய்யும் ஆட்சியாளர்களையே தேர்வு செய்து, இதே அதிகாரங்களே நிறுவப்பட்டு வந்தால் என்ன மாற்றம் நிகழும்? தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் குறித்து கருத்து கூற விரும்பவில்லை. அரசியலில் மாற்றம் வரவேண்டும் என்ற நோக்கத்தில்தான் அனைவரும் கட்சி தொடங்குகிறார்கள். அந்த வகையில் புதிய கட்சி தொடங்கி உள்ள சசிகலாவுக்கு வாழ்த்துகள். தனியார்மயம், தாராளமயம், உலகமயத்தை ஏற்றுக் கொண்ட நாட்டில் இருந்து கொண்டு தனியார்மயத்துக்கு எதிராக திமுக போராடுவதாக கூறுவது வேடிக்கை. தனியார்மயத்துக்கு கையெழுத்து போட்டதே திமுக தான். தூய்மைப் பணியாளர், கல்வி, மருத்துவம், போக்குவரத்து உள்ளிட்ட பல துறைகள் ஏற்கெனவே தனியார்மயமாகிவிட்டன. சாரயக்கடை தான் அரசிடம் உள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் போடும் குண்டை விட திமுக தனியார்மயத்துக்கு எதிராக போராடும் என்பது பெரும் குண்டாக இருக்கிறது. பெரிய பொருளாதார பின்னணி இல்லாத எளிய பிள்ளைகளான நாங்கள் முன்கூட்டியே ஓடத் தொடங்க வேண்டும். அவர்கள் செய்தித்தாள்களில் முன்பக்கம் விளம்பரம் கொடுப்பர். எங்களுக்கு அதற்கு வசதியில்லை. எனவே முன்கூட்டியே வாக்காளர்களை சந்தித்து அரசியல் நிலைப்பாடுகளை விளக்கி வருகிறோம். தமிழர் நலனுக்காக நடத்தப்படும் போராட்டங்கள் மக்களிடம் சென்று சேர வேண்டும் என்றும், அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பு ஊடகங்களுக்கு உள்ளது. உலக நாடுகள் தலையிட்டு ஈரான் – இஸ்ரேல் போரை நிறுத்த வேண்டும். என் வாக்காளர்கள் யார் எனத் தெரிந்து கொண்டே அதிமுக கூட்டணிக்கு தவெக சென்றால் எங்களுக்கு பாதிப்பு வருமா என கேட்கிறீர்கள். பாதிப்புக்கு பயந்து நிற்பவன் ஒரு போர்வீரனாக இருக்க முடியுமா? குடும்பத் தலைவிக்கு ரூ.2,000 தருவேன் என்கின்றனர். நான் கூட மாதம் மாதம் ரூ.50,000 தரலாம் என நினைக்கிறேன். எதையாவது சொல்லிவிட்டு போக வேண்டியதுதான்” என்றார் சீமான். https://www.hindutamil.in/news/tamilnadu/ntk-leader-seeman-on-aiadmk-and-tvk
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
ஆம். கண்டிப்பாக். பாதிக்கும். விஐய். முதல்வர். கதிரையில். அமர. முடியாது. என்னு. உறுதியாக. கூறலாம்.
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
இன்றைய லயலா காலேஜ் கருத்து கணிப்பு பார்தீர்களா? தவெக 17%. 50 சீட். 2ம் பெரிய கட்சி என சொல்லி உள்ளனர். @நிழலி @ஏராளன் @விளங்க நினைப்பவன் @கந்தப்பு @ரஞ்சித்
-
பிடித்த பாடல் வரிகள் - பாகம் 2
I'll Smile, I know what it Takes to fool this town I'll do it till the Sun goes down and All through the night time Oh yeah Oh yeah I'll tell You what you wanna hear Keep my sun glasses on While I shed a tear It's never the Right time, Yeah I put my Armour on, Show you how strong I am I put my Armour on, Show you how that I am I'm unstoppable, I'm a Porche with no brakes I'm invincible, Yeah, I win every single game I'm so powerful, I don't Need batteries to play I'm so confident, yeah, I'm unstoppable today Break down Only alone I'll cry out loud You'll never see What's hiding out Hiding out deep Down, yeah-yeah I know, i've heard that to Let your feelings show It's the only way to Make friendships grow But I'm too afraid now, yeah I put my Armour on, Show you how that I am I'm unstoppable, I'm a Porche with no brakes I'm invincible, Yeah, I win every single game I'm so powerful, I don't Need batteries to play I'm so confident, yeah, I'm unstoppable today...
-
ஈரான் உச்ச தலைவர் குறித்து தகவல் வழங்கினால் 10 மில்லியன் அமெரிக்க டொலர் பணப் பரிசு – அமெரிக்கா அறிவிப்பு
ஆருக்கும் தகவல் தெரிந்தால் நேரே அமெரிக்கனிடம் போக வேண்டாம்… ஏமாத்தி போடுவான்… என்னிடம் சொல்லவும்… 10 மில்லியன் காசை வாங்கி விடலாம்😂
-
சுவிட்சர்லாந்தில் பேருந்து தீ விபத்து : யாழ் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!
என்னுடைய மதவாத கருத்துக்கு மன்னிப்பை கேட்கிறேன்.
-
சுவிட்சர்லாந்தில் பேருந்து தீ விபத்து : யாழ் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!
செய்திகளின்படி, ஒரு 65 வயதான சுவிஷ் நாட்டவரே தனக்கு தானே தீ வைத்ததாக கூறப்படுகிறது. இவர் மனதளவில் பாதிக்கப்பட்டவர் எனவும் செய்திகள் கூறுகின்றன.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இல்லை, நீங்கள் சொல்வது உண்மையில் நடந்தால் மகிழ்ச்சியே... நீங்கள் என்ன சொல்கிறீர்கள்???
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இவ்வளவு காலமும்... "வனவாசம்" போயிருந்தீர்களா. 🤣
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஓகே ஸ்டார்ட் த மியூசிக்...
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
மியாவ்.... எனக்குத் தெரிந்தால், எல்லாருக்கும் தெரிந்த மாதிரித்தான். 😂
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எல்லாருக்கும் தெரியுமா, உங்களை போல் சில பேருக்கு மட்டும் தெரியுமா???
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நீங்கள் பதிந்த கருத்து, எனக்குத் தெரிகின்றது.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
கருத்து மற்றவர்களுக்கு தெரிகிறதா இல்லையா என்பது தான் பிரச்சனை...
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இ இந்த கருத்து யார் கண்களுக்காவது புலப்பட்டதா??? எனக்கு சந்தேகமாக உள்ளது... அந்த திரியை திறந்து தரவில்லை என்றாலும் பரவாயில்லை... இந்த கருத்து தெரிகிறதா இல்லையா என்பதற்கு ஆம் இல்லை என்று பதில் அளியுங்கள் போதும்... கருத்துக்களும் பிரச்சனைகளும்..