24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
கனடாவில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் பலி!
கனடாவில் கனரக வாகனம் மோதி - இலங்கை பெண் உயிரிழப்பு! ஜனவரி 09, 2026 கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரும், கனடாவில் வாழ்ந்து வந்தவருமான 3 பிள்ளைகளின் தாயான திருமதி.ராஜகாந் அனுஷா (வயது-35) உயிரிழந்துள்ளார். இன்று(09.01.2026) காலை Etobicoke Dixon வீதியில் வெள்ளைக் கோட்டின் ஊடாக வீதியைக் கடக்கும் போது கனரக வாகனத்தைச் செலுத்தி வந்த 26 வயதான சாரதி வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் குறித்த இளம் குடும்பப் பெண் மீது மோதியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. https://www.battinatham.com/2026/01/blog-post_634.html
-
வண்ணங்களோடும் வடிவங்களோடும் ஓர் கலைப்பயணி
மனதை விட்டு மறையாத ஓவியம் ரமணி நினைவாஞ்சலி ------------------------- 1972 ஆம் ஆண்டு என ஞாபகம் எழுத்தாளர் டானியலின் பஞ்சமர் நாவல் வெளிவருகிறது. பலரை ஒரு உலுப்பு உலுப்பிவிட்ட நாவல் அது’ பேசாமல் இருந்த ஒருசாரார் அதில் பேசினர், அந்த நூல் வெளியீட்டுக்கு டானியல் என்னை யாழ்ப்பாணம் அழைத்திருந்தார், அப்போது நான் கொழும்பில் வசித்துக் கொண்டிருந்தேன், அப்படிச்சென்றபோது டானியலின் ஸ்ரார் கரேஜில் நான் சந்தித்த ஒரு இளஞைர்தான் புதுவை இரத்தினதுரை, திருநெல்வேலியில் அதன் வெளியீட்டை ஒழுங்கு செய்தவர் புதுவை இரத்தினதுரை டானியலின் அபிமானி அப்போதுதான் அவரது காலம் சிவக்கிறது எனும் கவிதை நூல் வந்த காலம் என நினைக்கிறேன் பஞ்சமரின் அட்டைப்படம் வித்தியாசமாக இருந்தது பஞ்சமர் ஒருவரின் உடல் மொழி வெளிப்பட அது வரையப்ட்டிருந்த்து அந்த உடலினுள் அடக்க ஒடுக்கமும் காணப்பட்டது அதற்குள்ளால் மீறி எழுந்த அடக்குமுறைக்கு எதிரான ஒரு ஓர்மமும் காணப்பட்டது சமூக உணர்வுள்ள ஓர் ஓவியக் கலைஞனின் பார்வை அது அந்தப் அட்டைப்பத்தை வரைந்தவர் ஓவியர் ரமணி எனும் இளம் ஓவியர் என அறிந்தேன் ரமணியை நான் அறிந்த கதை இது ரமணி என் மதிப்புக்குரிய ஒருவர் ஆனார் ரமணியின் தொடர்பும் ஏற்படுகிறது ஏற்படக் காலாக இருந்தவர் டானியல் 1976 ஆம் ஆண்டு கொழும்பிலிருந்து மாற்றலாகி யாழ்ப்பாணம் வருகிறேன் கொழும்பில் கல்வி டிப்ளமோ கோர்ஸ் முடித்த கையோடு எனக்கு யாழ்ப்பாண த்திற்கு மாறுதல் கிடைக்கிறது மனைவி ஏற்கனவே மகனோடு அங்கு சென்று விட்டாள யாழ்ப்பாணப் பல்கலைக் கழக விரிவுரையாளராக நான் ஆசிரியராக மாற்றலாகி யாழ்ப் பாணக் கல்வி அலுவ லகம் செல்கிறேன் நகரில் உள்ள பாடசாலைகள் எல்லாம் பட்டதாரிகள் நிரம்பி வழிகிறார்கள் எந்த பாடசாலையிலும் இடம் கிடைக்க வில்லை ஒரே ஒரு இடம் இருக்கிறது ஒஸ்மானியா கல்லூரி அங்கு செல்லுங்கள் என்று நியமனக் கடிதம் தரப்படுகிறது ஒஸ்மானியாக் கல்லூரி செல்கிறேன் அதிபர் ஹமீம் அதிபர் அறையில் நியமனக் கடிதத்தைக் கொடுத்து உத்தியோகம் ஏற்கும் சடங்குகளை முடித்த பின்னர் ஆசிரியர் அறைக்குச் செல்கின்றேன் பலர் இருக்கிறார்கள் பேராயிரவர் பெயர் , ஞாபகம் வருகிறது. அவர்களோடு பத்மநாதன் , கவிதாயினி சிவரமணியின் அப்பா சிவான ந்தன் இன்னும் பல இஸ்லாமிய அசிரிய ர்கள் தமிழ் ஆசிரியரக்ள் தெரிந்த முகம் ஒன்றும் தென்படுகிறது ஏற்கனவே நான் அறிந்திருந்த ரமணி அவர்கள் வாருங்கள் வாருங்கள் என்று வாஞ்சையோடு வரவேற்கிறார் அங்கே அவர் ஓவிய ஆசிரியராக இருக்கிறார் நான்கு வருடங்கள் அவருடன் அங்கு பணியாற்றும் வாய்ப்புக் கிடைக்கிறது ஓரளவு முன்னரேயே அறிந்திருந்த ரமணி இப்போது மிக நெருக்கமாகி விடுகிறார் நாலு வருடங்கள் தினமும் அருகே இருந்து உறவாடி உணர்வுகளைப் பகிர்ந்து கொண்ட அந்தக் காலங்கள் ஞாபகம் வருகின்றன யாழ்ப்பாண வாழ்வில் மிக அருமையான காலங்கள் ஓஸ்மானியாக் கல்லுரியில் கற்பித்த அந்தக் காலஙக்ள் அக்காலத்தில் சிறுகதை நாவல் எழுதுவோர் கைலாசபதியிடம் ஒரு முன்னுரை வாங்குவதைப் பெறுமதியாகக் கருதினார்கள் . அதேபோல பல எழுத்தாளர்கள் ரமணி யிடம் ஒரு அட்டைப்படம் வாங்குவதையும் பெறுமதியாக க் கருதினார்கள் அவர் டானியல், செங்கை ஆழியான், தெணியான், போன்ற பிரபல எழுத்தாளர்களுக்கெல்லாம் படம் வரைந்தவர் அந்த அட்டைப் படங்களில் ல் வரும் கோடுகள் ரமணியின் அடையாளம். அவர் அட்டையில் வரையும் உருவங்களும் அவற்றின் பரிமாணங்களும் அவர் வரையும் நடனமிடும் எழுத்துக்களும் இந்த ஓவியம் ரமணியின் ஓவியம் என்பதை உடனே காட்டி விடும் மல்லிகை ஜீவாவின் ஆஸ்தான ஓவியர் போல அவர் அன்று செய்ற்பட்ட தாக ஞாபகம் அந்த காலத்திலேயே தான் நான் சங்காரம் நாடகம் போடுகிறேன் அந்த நாடகத்திலே ஒரு கட்டம் வருகிறது மனிதர் விலங்கோடு வேட்டையாடும் கட்டம் மிருக ங்களுக் க்கான வேட முகங்களைத் தயாரித்து எனக்கு தந்தவர் ரமணி அவர்கள் அந்த நாடகத்துக்கான உடை அமைப்பை நான் திட்டமிட்ட போது அவற்றை கோடுகளில்ல் வரைந்து காட்டி அதற்கான ஆலோசனைகளை வழங்கியவர் ரமணி அவர் வரைந்த ஸ்கெட்சுகளை நான் அரசையாவிடம் காட்ட அதனை அடிப்படையாக வைத்து சங்காரம் நாடகத்தில் வரும் இன மத சாதி வர்க்க அரக்ரக்ளுக்கான உடை தயாரித்தவர் அரசையா சங்காரம் நாடக் உருவாக்கலில் ரமணிக்கும் மிகுந்த பங்குண்டு அந்த நாடகத்தில் நான் தொழிலாளர் தலைவன் பாத்திரம் ஏற்று ஆடிப்பாடி நடித்தேன் அந்த நாடகம் பார்க்க வந்த அவர் என்னை அணைத்துக்கொண்டதும் பின்னர் நாம் அதுபற்றி ஆசிரிய அறையில் உரையாடியமையும் ஞாபகம் வ்ருகிற து எவ்வளவோ பேசுவோம் எல்லாம் பேசுவோம் அரசியல் இலக்கியம் ஓவியம் நாடகம் சமூகம் என அவ்வுரையாடல் விரியும் அவ்ர் ஒரு பரந்த வாசகரும் கூட மிக மிக மென்மையாக பேசுவர் அவர் முகமும் பேசும் பின்னால் நான் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆகிய பின்னரும் அந்த நட்பு தொடர்ந்தது அவர் உரையாடும் பாணி வித்தியாசமானது அது அவருக்கே உரியது அவர் வரையும் சித்திரங்களில் அவர் தெரிவார் அது அவருக்கான கோடுகளும் கோலங்களும் ரமணி ஸ்டைல் அதுதான் என்பது அது காட்டிக்கொடு காட்டிவிடும் பின்னால் அவர் அவர் பல ஓவியங்கள் வரைந்தார் புகழ் பெற்ற சிலைகளைச் செய்தார் புகழ் பெற்றவ்ரானார் அந்தச் சிலைகளில் அவர் வாழ்கிறார் இருவரும் 80 வயது தாண்டி விட்டோம் நான் இறக்கு முன்னர் சிலரை கண்டு பேச வேண்டும் என்று ஆவல் அடிக்கடி எனக்கு எழுவதுண்டு அதில் முக்கியமானவராக இருந்தவர் ரமணி அவர்கள் பேசாமலேயே சென்று விட்டார் இப்படிக் காணமலேயே பேசாமலேயே சென்று விடுவோர் அதிகம் நேற்றுத்தான் மதிப்பிற்குரிய பெரியவர் பஞ்சலிங்கத்தைப் பற்றி ஒரு பதிவிட்டேன் இன்று அன்பிற்குரிய ரமணி பற்ற எழுத வேண்டியது ஆயிற்று எழுத இன்னும் நான் இருந்துகொண்டிருக்கிறேன் இது துயரா மகிழ்ச்சியா என யோசிக்கிறேன் துயரமும் சோகமும் மகிழ்வும் கலந்த ஒரு மனோநிலையில் நண்பரை நினைக்கிறேன் நண்பரே சென்று வருக உங்கள் நினைவு நெஞ்சில் அழியாது நிலைத்து நிற்கும் அவர் அட்டை ஓவியங்கள் சிலவற்றை நண்பர் முகநூலில் பதிந்திருந்தார் அவருக்கு எனது நன்றிகள் -பேராசிரியர் சி. மௌனகுரு
-
ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான அவதூறு பிரசாரங்களை ஏற்க முடியாது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் கண்டனம்!
ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான அவதூறு பிரசாரங்களை ஏற்க முடியாது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் கண்டனம்! 10 Jan, 2026 | 02:05 PM கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக தற்போது அவருக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் முற்றிலும் ஏற்றுக்கொள்ளவேமுடியாத அவதூறு பிரசாரங்களை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது முகநூல் பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, பிரதமர் என்கிற ரீதியிலும் அவரது கட்சியின் ஒரு முக்கியஸ்தர் என்ற வகையிலும் கல்வி அமைச்சர் என்கிற ரீதியிலும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுடன் எமது அமைப்புக்கும் எனக்கும் மிக முக்கியமான தீர்க்கமான கொள்கை முரண்கள் இருக்கின்றபோதிலும் 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் ஏற்பட்ட சர்ச்சைக்குரிய விடயம் தொடர்பில் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் முற்றிலும் ஏற்றுக்கொள்ளவேமுடியாத அவதூறு பிரசாரங்களை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளார். https://web.facebook.com/profile.php?id=61567246753629 https://www.virakesari.lk/article/235661
-
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
என்ன செய்வது? இளமையில் அக்களிப்போடும் திமிரோடும் விதைப்பதை முதுமையில் கண்ணீரோடுதான் அறுவடை செய்யவேண்டியிருக்கிறது. "ஏழை அழுத கண்ணீர் ஏழுதலைமுறைக்கும்." என்பார்கள். "ஏழை விட்ட கண்ணீர் கூரிய வாளை ஒத்தது." என்றும் சொல்வார்கள். "அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்."
-
எனது அரசியல் பயணம் தடையின்றித் தொடரும்.. டக்ளஸ் தேவானந்தா
“அப்பன் குதிருக்குள் இல்லை” அத்தியடிக் குத்தியனும் குற்றவாளி இல்லை.🧐
-
விபுலானந்த அழகியற் கற்கைகள் மாணவர்கள் தொடர் போராட்டம்: 08 பேர் வைத்தியசாலையில்
விபுலானந்த அழகியற் கற்கைகள் மாணவர்கள் தொடர் போராட்டம்: 08 பேர் வைத்தியசாலையில் மட்டக்களப்பு, கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் நடன நாடகத்துறை மாணவர்கள், தமது விரிவுரையாளர் ஒருவரை மாற்றக் கோரி முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் மூன்றாவது நாளாகவும் நீடிக்கின்றது. நேற்றைய (09) நிலவரப்படி, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களில் நால்வர் மயக்கமடைந்தும், 04 பேர் வாந்தி எடுத்த நிலையிலும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிறுவகத்தில் நடன நாடகத்துறையில் நான்காம் ஆண்டில் (2019/2020 கல்வியாண்டு) பயிலும் மாணவர்கள், தமக்குக் கற்பிக்கும் விரிவுரையாளர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். குறித்த விரிவுரையாளர் முறையாக வகுப்புகளை நடத்துவதில்லை என்றும், மாணவர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டுவதுடன், சில மாணவர்களின் உடலமைப்பைக் கேலி செய்து அவமானப்படுத்துவதாகவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், முறையான காரணமின்றி விரிவுரை நேரங்களில் மாணவர்களை வகுப்பறையை விட்டு வெளியேற்றுவதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்த விடயம் தொடர்பாக கடந்த 2025 மார்ச் 4ஆம் திகதி, நிறுவகத்தின் பணிப்பாளர் பாரதி கெனடியிடம் மாணவர்கள் எழுத்துப்பூர்வமாக முறையிட்டனர். இதற்கான தீர்வை இரு வாரங்களில் பெற்றுத் தருவதாகப் பணிப்பாளர் உறுதியளித்த போதிலும், எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து, 2025 ஓகஸ்ட் 12ஆம் திகதி மீண்டும் கடிதம் மூலமாகவும் நேடியாகவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. மாணவர் ஒன்றியத்தின் ஊடாக முயற்சி செய்தும் நியாயமான தீர்வு கிடைக்கவில்லை என மாணவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில், குறித்த பாடத்திற்கான பரீட்சகராக அந்த விரிவுரையாளரை நியமிக்க வேண்டாம் என வலியுறுத்தி கடந்த புதன்கிழமை (07) முதல் 67 மாணவர்கள் பணிப்பாளரின் அலுவலகத்திற்கு முன்னால் அமர்ந்து போராட்டத்தை ஆரம்பித்தனர். தொடர்ந்து மூன்று நாட்களாக இரவு பகலாக கடும் மழை மற்றும் குளிர்காற்றுக்கு மத்தியில் இந்த அமைதிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன்போது உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும், ஏனைய மாணவர்கள் தமது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என உறுதியாக உள்ளனர். https://adaderanatamil.lk/news/cmk7p3rpo03qqo29npq6qq4wu
-
திருத்தப்பட்ட பயங்கரவாத பெயர் பட்டியல் வெளியானது
திருத்தப்பட்ட பயங்கரவாத பெயர் பட்டியல் வெளியானது 2026 ஜனவரி 09 , பி.ப. 09:00 பயங்கரவாதத்துடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் அமைப்புகளின் திருத்தப்பட்ட பட்டியல் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 1968 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சட்டத்தின் கீழ், பெயரிடப்பட்ட நபர்கள், குழுக்கள் மற்றும் அமைப்புகளின் திருத்தப்பட்ட பட்டியல் அதிவிசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளது. R https://www.tamilmirror.lk/செய்திகள்/திருத்தப்பட்ட-பயங்கரவாத-பெயர்-பட்டியல்-வெளியானது/175-370814
-
வண்ணங்களோடும் வடிவங்களோடும் ஓர் கலைப்பயணி
ஈழத்தின் ஓவிய சகாப்தம் ஒன்று ஓய்வு பெறுகிறது! oசிவகுமாரன் முதல் சிவசிதம்பரம் வரை தமிழர் அரசியல் வாழ்வில் தம் கலையால் இணைந்த கலைஞர். oதாம் படைத்த படைப்புகள் தம் கண் முன்னே அழிக்கப்பட்டதைக் கண்ட ஒரு கலைஞர். oதமது பெயருக்குள்ளேயே நவீனத்தைப் புகுத்திய கலைஞர். -------------------------------------------------------------------------- அறிமுகம்: சின்ன வயதிலிருந்தே நான் 'ரமணி'யின் இரசிகன். அப்பா கொண்டு வரும் சிரித்திரன் இதழ்களிற் தான் அந்த 'ரமணி' யைக் கண்டேன். படங்களின் கீழே 'ரமணி'அல்லது ' RAMANI' என்று எழுதப்பட்டிருக்கும் பெயரைத்தான் குறிப்பிடுகிறேன். அம்புலிமாமா வில் வரும் சித்ரா ( Chithra) சங்கர் ( Sankar) தினபதி- வீகே, தினகரன் மூர்த்தி போன்றவர்களின் ஓவியங்களை விட ரமணியின் ஓவியத்தில் எம்மைக் கவர்ந்த ஏதோ ஒன்று அப்போதிருந்தது. பாடசாலை நாட்களில் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தால் வெளியிடப்பெற்ற மாணவர் சஞ்சிகையான 'வளர்மதி' யில் அவர் வரைந்த ஓவியங்கள் எம்மை ஏனோ கவர்ந்தவை. துப்பறியும் தொடர் ஒன்றுக்கு வரைந்திருந்தார். பிற்காலத்தில் க.பொ.த உயர்தர மாணவர் பௌதிகம் என்ற கருணாகரரின் புத்தகத்திலும் அதன் அட்டைப்படத்தில் வந்தெமைக் கவர்ந்தார். இலங்கைத் தீவு முழுதும் பெயர் பெற்ற நூல் அது. பின்னர் அவரை 'ரமணி மாஸ்டராக' நேரில் சந்தித்தபோது இதனைச் சொன்னேன். அதற்கு அவர் சொன்ன பதில் நான் புதுமையாக ஏதும் செய்ய வேண்டும்; யாரையும் பிரதி பண்ணக் கூடாது என்று நினைத்து நினைத்து என் கைகள் அப்படியே உணரத் தொடங்கிவிட்டன...' பெயரிலும் நவீனம்: அவரது பெயரிலும் அந்த நவீனத்தைப் படைத்தார். பொதுவாக சிவசுப்பிரமணியம் சிவநாதன், சிவகுமார், சிவராஜா போன்ற பெயருடையவர்களை நாம் 'சிவா' என்றே அழைப்பது வழக்கம். ஆனால், நானறிந்த வரையில், சிவசுப்பி[ரமணி]யம் என்ற தமது பெயரில் உள்ள [ரமணி] யை எடுத்து, 'ரமணி' என்று மட்டும்- தமது ஓவியங்களின் கீழே இட்டு வந்தவர் ரமணி மாஸ்டர். அது பற்றியும் எனது முதற் சந்திப்பிற் கேட்டபோது ' அதுவும் ஒரு புதுமைதான்; கொழும்பில் அழகியற் கல்லூரியிற் படிக்கும் போது வெளியில் நாங்கள் வெளிப்புற, வெளிக்களச் சுற்றுலா போகும் போது 'ரமணி' என்று ஒவ்வொருவரும் கூப்பிடும் போது அறிமுகமில்லாதவர்கள் முதலில் 'சிங்களவர்' என்றுதான் உணர்ந்தனர் என்று சுவையாகச் சொன்னார். ரமணியின் ரசிகன் நான்:- 'நீங்கள் வரையும் பாத்திரங்கள் உங்களைப் போன்றே அடர்ந்த முடியுடன் மேவிச் சீவியிருப்பர் என்று நான் சொல்ல..' என் படங்களை உற்று இரசித்திருக்கிறீர்கள் ' என்று சொன்ன அவர், அப்படி வேறு பலரும் குறிப்பிட்ட தாகவும் அது ஒரு கலைஞர் உணர்ந்து ஊறிப் படைக்கும் போது அப்படி வரலாம் என்று மூத்த கலை உளவியலாளர் ஒருவர் சொன்ன தாகவும்- குறிப்பிட்டார். நான் பண்டாரவளையிலிருந்து கரவெட்டி வரை அவரது ஓவியங்கள் வந்த பக்கங்களைச் சேமித்த ஒருவன். அதனால் அவர் எனக்கு ஒரு வேலை தந்தார். அதனைப் பிறகு வேறு ஒரு தருணத்திற் தருவேன். தமிழ்த் தேசியப் பரப்பில் தமிழர் வரலாற்றில் இணைந்த பல நினைவுச் சின்னங்களையும் அடையாளங்களும் தலையங்கங்களையும் வரைந்தவரும் வடித்தவரும் எழுதியவருமான அவரது ஓவியங்களின் கீழுள்ள ரமணி என்பதும் RAMANI என்பதும் என்றும் எம்மில் நிற்கும் நினைவுச் சின்னங்களாகும். ரூபவாஹினியில் ரமணி:- எண்பதுகளில் நான் ரூபவாஹினியிற் பணியாற்றிய காலத்தில் 'டெலிதுட' என்ற ஓவிய நிகழ்ச்சித் தொடரின் தயாரிப்பாளரான காமினி அபேகோனுக்கும் அவரது சில நிகழ்ச்சிகளில் உதவியாளராகப் பணியாற்றும் வாய்ப்பை நான் பெற்றேன். அப்போது அவர் - காமினி- தெற்கின் பல ஓவியர்களை நேரிற் கண்டு ஒளிப்பதிவு செய்யும் அந்த நிகழ்ச்சியை இயக்கினார். அதனால் பல ஓவியர்களைச் சந்திக்கும்,ஊடாடும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. அவர்களில் சிலருக்கு ரமணி யைத் தெரிந்திருந்தது. அவர்கள் நுண்கலைக் கல்லூரியில் அவருடனும் அவரது கற்கைக் காலத்திலும் கற்றதனால் அந்த அறிமுகமிருந்தது. சர்வதேசக் கண்காட்சிகளில் பங்கேற்ற பிரபல ஓவியர் விமலசார ரமணி பற்றிக் குறிப்பிடும்போது - ' ரமணி ஒரு சிறந்த ஓவியர். நவீனத்துவம் விரைவு என்பன அவரிடமிருந்தவை. அபாரமான கலைஞன். ஆனால்.. commercial artist ஆகிவிட்டார். அவரிடம் நிறைய ஆற்றல் உண்டு.' என்றார். ' நல்ல சிற்பி ...ஆனால் அவர் வர்த்தக மயமான ஓவியராகிவிட்டார்' என்றும் ஒருவர் சொன்ன நினைவு. ஒருவர் சொன்னதல்ல இரண்டொருவர் சொன்ன விமர்சனம் அது. அவர்களும் இவருடன் ஸ்ரான்லி அபேசிங்க, கருணாரட்ன போன்ற தெற்கின் மூத்த ஓவியர்களிடம் பயின்றவர்கள்; ஓவிய உலகில் புகழ் மிக்கவர்கள். அவர்கள் அவரை 'வர்த்தக மயத்துக்குள் உள்ளான' ஒருவர் என்று கருதியது- அவர்கள் அன்று கண்ட ரமணியையே. அவர்களின் அளவுப் பரிமாணத்தில் நியாயமிருக்கலாம். அது எழுபதுகளிலான கணிப்பு. காரணம், ரமணி மாஸ்டர் ஜெர்மனிக்குப் போகும் வரையில் அட்டைப் படங்கள் , வர்த்தக விளம்பர அடையாளங்கள், விளம்பரப் பலகைகள், என Commercial sector இற்குள்ளேயே Commercial designs, Logos, Illustrations என்ற வரையறைக்குள் தமது கலைப் பயணத்தைக் கடந்துள்ளார். தியாகி சிவகுமாரன் சிலை தியாகி பொன்.சிவகுமாரனின் சிலையை அன்றைய இளைஞர்களான முத்துக்குமாரசாமி, தவராசா முதலானோர் அவர் மறைந்து சில நாட்களிலேயே நிறுவவேண்டும் என்று கேட்டபோது அதே அரசியற் சூழலின் சமாந்தர உணர்வுடனிருந்த இவரும் அதனை வடிவமைத்துக் கொடுத்துள்ளார். அடிமை விலங்குச் சங்கிலியை உடைத்தபடி நிற்பதுபோன்ற சிலை அது. அந்தச் சிலை உடைத்து நொறுக்கப்பட்டு, இரண்டு தடவை திருப்பி நிறுவப்பட்ட மை தமிழர் வரலாறு. சிவகுமாரனின் சிலை வரை,தமது பணியை ஒரு தொழில் சார் பணியாக இதழ்களுக்கும் இலக்கியவாதிகளுக்கும் வர்த்தகர்களுக்கும் மட்டுமே வழங்கிக் கொண்டிருந்தார். தேசிய நூதன சாலையிற் தொழில்:- தேசிய நூதன சாலையில் பணியாற்றிய காலத்தில் பகுதிநேரமாகவே சில வர்த்தக விளம்பரப் பணிகளைச் செய்தார். அதனாலேயே தெற்கின் ஓவியர்கள் எனக்கு அப்படிச் சொல்லியிருக்கக் கூடும். அங்கு பணியாற்றும் போதுதான் எழுத்தாளர் நடராசன் என்பவருக்கு முதலாவது அட்டைப் படத்தை வரைந்ததையும் பின்னர் சிரித்திரன் சுந்தரின் நட்பும் அவர்தம் பணிகளும் கிடைத்ததாகவும் சொல்லியுள்ளார். சிரித்திரன் சுந்தரும் கூட- இவர் அப்போது செய்யும் வேலைகளை விடவும் இன்னும் நிறையச் செய்யக்கூடிய ஆற்றல் உள்ளவரெனப் பாராட்டினாராம். ஓவிய இரசனையும் ஆதரவும் - வடக்கும் தெற்கும்: தென்னிலங்கையைப் போல அரச ஆதரவும் மக்களின் ஓவியம் மீதான அக்கறையும் புரிதலும் ஓவிய ரசனையும் தெற்கின் ஊடகங்கள் அந்த ஓவியர்களுக்குக் கொடுத்த மதிப்பும்- இருந்திருந்தால் அவர் அவர்கள் எதிர்பார்த்த 'ஓவியராக' அவர்கள் பார்வையிற் பரிமளித்திருக்கலாம். இந்த வகையில், இடதுசாரிகளுக்கும் ரமணிக்கும் உள்ள தொடர்பு கூட நீண்ட ஒன்றெனத் தோன்றும். தேசாபிமானி: இடதுசாரிப் பத்திரிகையான 'தேசாபிமானி' தான் அவரை முதன் முதலிற் பாவித்துள்ளது. சிரித்திரன் சுந்தரின் ஆசியும் நட்பும்:- பின்னர் சிரித்திரன் சிவஞான சுந்தரம் தமது சஞ்சிகையின் பட , தலைப்புகள் வேலைக்குப் பயன்படுத்தியுள்ளார்; தம்மை உற்சாகமூட்டி ஊக்குவித்தவர் அவர் என்பார் ரமணி. பின்னர் டானியல், டொமினிக் ஜீவா, செங்கை ஆழியான், தெணியான்,செம்பியன் செல்வன், கல்வயல் குமாரசுவாமி, கலாமணிஎனப் பல இலககியவாதிகளும் கல்விமான்களும் இவரின் கலைத்துவத்தைப் பயன்படுத்தியுள்ளனர். மல்லிகை ஜீவா மல்லிகை இதழின் முகத் தலைப்பு என்றும் ரமணியை நினைவூட்டும். ஆசிரியர் டொமினிக் ஜீவா ஆரம்பகாலம் முதல் அதன் ஆண்டு மலர்களிலும் ரமணி மாஸ்டரின் ஓவியங்களைப் பாவித்து வந்ததைக் காணலாம். திருமறைக் கலாமன்றம்:- அடுத்து அவர் குறிப்பிடுவது திருமறைக் கலா மன்றத்தின் காப்பாளரான கலாநிதி மரியசேவியர் அடிகளாரை. மன்றத்தின் இலச்சினை அட்டைப்படம் சஞ்சிகையான கலை முகத்தின் முகத்தலைப்பு( Masthead) யாவையும் ரமணியே வரைந்துள்ளார் ரஜனி வெளியீடு ஈழநாட்டில் அப்போது உதவி ஆசிரியராகப் பணியாற்றிய குகநாதன் அவர்கள் தமது ரஜனி வெளியீட்டகத்தின் கதைகளுக்கு ரமணியைப் பாவித்துள்ளார். செங்கை ஆழியானின் கிடுகுவேலி, மழைக்காலம் போன்றன நூல்களாக வந்தபோது ரமணியே அவற்றை அலங்கரித்தார். செங்கை ஆழியான் தமது கல்வி நூல்களின் அட்டைப்படங்களுக்கு ரமணியையே பெரிதும் பாவித்துள்ளார். ஈழமுரசு:- ஈழநாடு மட்டுமே பிராந்திய நாளிதழாகக் கோலோச்சிய காலத்தில் புரட்சிகரமாக ஈழமுரசு நாளிதழ் யாழ்ப்பாணத்தில் வெளிவந்தபோது அதன் ஆசிரியர் எஸ்.திருச்செல்வம ரமணி அவர்களிடமே அதன் Masthead ஐப் படைக்கும் வேலையை ஒப்படைத்தார். ஈழமுரசின் தாய் நிறுவனமான 'தமிழர் நிதியத்தின்' இலச்சினை முகப்புப் பலகை எழுத்தமைப்பு யாவும் ரமணியினுடையவை. ரமணி வரைந்த ஈழமுரசு முகஅடையாளமே இன்று அப்பெயர் வெளிவரும் உலக நாடுகளில் வருவது குறிப்பிடத்தகது. நிறங்களும் சுரங்களும்:- ரமணி மாஸ்டர் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் பணியாற்றியபோது நான் அவரை ஊடகர் என்ற வகையிலும் மாற்கு மாஸ்டர் மூலமாயுமிருந்த தொடர்பால் அறிவேன். அதுதான் அவருடனான எனது நேரடி அறிமுகம். அவ்வேளைகளில், எமது வீட்டுக்கு வந்தால் அம்மாவுடன் இசை பற்றி ஆர்வத்துடன் அளவளாவுவார். ஒரு முறை மேளகர்த்தா பற்றிக் கதை வந்தபோது எனது தாயார் மேலோட்டமாக 'தியறி' மூலமும் பாடியும் விளக்கினார். 'எங்களது வண்ணங்கள் போலத்தான். ஒரு ராகத்துக்குரிய சுரங்களை நாம் மாற்றினால் அது வேறாகிவிடும். அதுபோலத்தான் எங்கள் தூரிகை களும்.. மாறிக் கீறிக் கொஞ்சம் கூட வேறு நிறத்தை என்ன ஒரு நிறத்தையே கூடக் கொஞ்சம் சேர்த்தால் அது மாறிவிடும்.. சிறுவருக்கானது, தொழிலாளருக்கு, புரட்சி , சோகம் என்று எங்களுக்குள்ளேயே ஒரு ராகம் போய்க் கொண்டிருக்கும்.. அது சுருதி மாறாமல் போகும்போது தான் நல்ல படைப்பாக வரும்...மாறி வேறு நிறத்தை ...' என்று அவர் நகைச்சுவையுடன் குறிப்பிட்டார். இதைப் பின்னர் எமது தாயாரின் நினைவாக வெளியிடப்பெற்ற நூலின் அட்டைப்படம் தொடர்பாக அவரிடம் போனபோது நினைவுபடுத்தினேன். என்ன நிறத்தில் வேண்டும்? என்று அவர் கேட்ட போது இந்தக் கதையைச் சொன்னேன். அவரையே பொருத்தமான நிறத்தைத் தீர்மானிக்கும்படி சொன்னேன். சிரித்திரன், பாதுகாவலன், மல்லிகை, ஈழமுரசு ஈழநாதம் மட்டுமன்றி தினகரன், வீரகேசரி, உதயன், சஞ்சீவி என்பனவற்றிலும்,தொண்ணூறுகளில் தாயகத்தில் வெளிவந்த வெளியீடுகள் பலவற்றிலும் அவரது எழுத்தோவியங்களைக் காணலாம். சஞ்சீவியில் , செங்கை ஆழியான் தாம் எழுதிய தொடர் கதைக்கு இவரே வரைய வேண்டும் என்று கோரியபோது, பிரதம ஆசிரியர் கானமயில்நாதன் அதற்கான ஏற்பாட்டையும் செய்திருந்தார். முதலுதவி நூல். எண்பதுகளில், கட்டை வேலி நெல்லியடி பல்நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் அனுசரணையில், மருத்துவர் சுகுமார் அவர்களின் மூலம் எழுதப்பட்ட முதலுதவி நூலுக்கான பல செய்முறை ஓவியங்களை வரைய ரமணி மாஸ்டரை அணுகினோம். நான் அப்போது சென்.ஜோன்ஸ் முதலுதவிப் படையின் வடமராட்சி ஒருங்கிணைப்பு அலுவலர்( தன்னார்வலர்). ஏலவே ஓர் ஊடகராகப் பழகிய எனக்கு,அப்போது தான் அவருடன் மேலும் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. நான் எங்கள் குடும்பத்தவரால் எமது தாயாரின் நினைவு நூல் விடயமாகச் சென்றபோது நூலில் உள்ள அம்சங்களை மட்டும் சொன்னேன். வழக்கமாக இலக்கிய நூல்களுக்கு- நாவல்கள், சிறுகதைத் தொகுப்பு களுக்கு-அட்டைப்படம் வரையும் போது அவற்றைப் பல தடவை வாசித்த பின்னரே வரைவதாகச் சொன்னார். 'வாசிக்கத் தான் நேரம் போகும்; ஆனால் கவர் கை வைத்தவுடன் ஸ்கெட்ச் வந்துவிடும் ' என்றார். நான் நூலின் பிரதான கட்டுரையை பேராசிரியர் சிவத்தம்பி எழுதியிருந்தார். அதனை முழுமையாக அவரிடம் பெறப் பல மாதங்கள் பிடித்தன. சிவத்தம்பி சேரின் கட்டுரையை மட்டும் கொண்டு சென்றேன். ' எப்போ கொழும்பு திரும்புகிறீர்கள் ? என்றார். நான் நாளைச் சொன்னதும் அதற்கு இரண்டு நாள் முன்னதாக நாளைக் குறிப்பிட்டு வரச் சொன்னார். அட்டைப்படம் ' ரெடியாக' இருந்தது. சிவத்தம்பி சேரின் கட்டுரையையும் உங்கள் அம்மாவுடன் பழகியபோது பேசியவற்றையும் மனதில் வைத்து வரைந்தேன்' என்றார். அந்த நூலில் எனது தாயாருக்குள்ள ஆற்றல்களை எல்லாம் சுருக்கமாகப் பிரதிபலிக்கும் வகையில் அட்டைப் படமாக வரைந்து தந்தார். ஆவணமான ( விவரணமான) நூல் என்பதால் அட்டையின் பெயரை Notation- சுர வடிவிலான ( music score) கணினி எழுத்திலேயே அமைப்பதாகச் சொன்னார். 'நான் உங்கள் எழுத்தையே வரவேண்டும் என்று விரும்பினேன் சேர்' - என்றேன். நான் எழுதினாலும் அப்படித்தான் எழுதுவேன். அதைவிடக் கணினி எழுத்து அமைப்பானதாகவே இருக்கும்' என்றார். கணினிகளில் வெவ்வேறு எழுத்தமைப்புகள்( fonts) பல வர முன்னதாக, தசாப்தங்களுக்கு முன்னரேயே அவற்றைத் தமது கற்பனையிலிருந்து தந்த கலைத் தீர்க்கதரிசி அவர் என்பேன் . ரமணி மாஸ்டர் ஈழத்தமிழ் ஓவியத்தில் நாம் கண்ட விண்ணர்களின் வழி வந்த விண்ணர்களில் ஒருவர். ஆனால் அவர்களின் மரபு ஓவியப் பாணியிலிருந்து மாறியவர். சங்க காலப் பாடல்கள் படித்தவர்களுக்கு பாரதி தோன்றியது போலவே ரமணியின் வருகை எமக்கு அமைந்தது எனலாம். அப்படியான உணர்வையே அவரது கோடுகளும் தூரிகைகளும் ஏற்படுத்தின. யாழ் ஓவியப் பரம்பரை என்றால் நான் அறிந்தளவில் பெனடிகற் மாஸ்டரைக் குறிப்பிடலாம். சென் சார்ள்ஸ் மகாவித்தியாலயத்தில் பணியாற்றியபோது அவர் மாலை நேர வகுப்புகளை நடத்தியவர்.( எனது தந்தையாரும் அப்போது புனித சார்ள்சில் படிப்பித்தவர்; பெனடிக்ட் மாஸ்டரின் ஓவியங்கள் சில எங்கள் வீட்டிலுமிருந்தமை- நினைவு) பெனடிக்ற் மாஸ்டரின் வகுப்புகளில் மாணாக்கராயிருந்தவர்களில் ஒருவர் மார்க் மாஸ்டர். மார்க் மாஸ்டர் புகழ் பெற்ற ஓவியர் டேவிற் பெயின்ரரின் மாணவர்; அவரின் மதிப்பையும் பெற்றவர். ஐம்பதுகளில் அவர் தமது மாணாக்கரின் ஓவியங்களை வைத்து நடத்திய கண்காட்சிக்கு மார்க்கரின் இருபதுக்கு மேற்பட்ட ஓவியங்களை வைத்தார். ஏனைய மாணவர்களின் இவ்விரண்டு ஓவியங்கள் தான் வைக்கப்பட்டனவாம். அப்படிப்பட்ட மார்க் மாஸ்டரின் விடுமுறைக் கால வகுப்பு ( Holiday Painters Group )மாணவர்களில் ஒருவர் தான் ரமணி. மார்க் மாஸ்டர் அந்தக் குழுமத்தின் மூலம் யாழ் மாநகர சபை மண்டபத்திலும் யாழ் மத்திய கல்லூரியிலும் ஓவியக் கண்காட்சிகளை அறுபதுகளில் நடத்தியிருந்தாராம். ஆனால் பொதுமக்களினதும் பத்திரிகைகளினதும் ஆதரவு கிடைக்காமையால் அவற்றைத் தொடர்ந்து நடத்த முடிவில்லை என்பார். அதுபோல மார்க் மாஸ்டரின் கனவு யாழ்ப்பாணத்தில் தெற்கைப் போல ஒரு நுண்கலைக் கழகம் வந்து அதில் ஓவியம், சிற்பம் கைப்பணி போன்றன பயிற்றப்படல் வேண்டும் என்பதும் ஆகும். அந்தக் கனவை ரமணி மாஸ்டர் நனவாக ஏற்படுத்தியுள்ளார் என்று நினைக்கிறேன். ரமணி மாஸ்டர் அழகியலுக்கான உதவிப் பணிப்பாளராகப் பணியாற்றியதுடன், இராமநாதன் நுண்கலைப் பீடத்தில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக வருகை விரிவுரையாளராகப் பணியாற்றினார். மார்க் மாஸ்டர் இப்போதிருந்தால் சந்தோசப்படுவார் என்றும், பல சிற்பக் கலை ஆர்வலர்களான மாணவர்களும் உள்ளதாயும் ரமணி மாஸ்டர் என்னிடம் குறிப்பிட்டார். மரபு ஓவியம்:- ரமணி மாஸ்டர் மரபு ஓவியத்திலும் தமது கைவண்ணத்தை பல ஆலயங்களின் திரைச் சேலைகள் சிற்பங்களில் காட்டத் தவறவில்லை. சிலைகளில் நினைவாய் நிற்கிறார்:- அவரது கலைத்துவத்தைப் பேசும் படைப்புகளாக அவர் ஆக்கிய நினைவுச் சிலைகள் பலவும் அமைந்துள்ளன. நல்லை நகர் ஆறுமுகநாவலர், சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி வதிரி தேவரையாளி இந்துக் கல்லூரி தாபகப் பெரியார் சூரன் சேர். பொன். இராமநாதன் மருத்துவ நிபுணர் சுப்பிரமணியம் கந்தையா உபாத்தியாயர் என்பவற்றுக்கப்பால், விடுதலைப் போராட்ட காலத்தில் யாழ் குடாநாட்டிலிருந்து மாங்குளம் வரை தோன்றி நிமிர்ந்துநினற பல சிலைகள் அவர் தம் கைவண்ணத்தைக் காட்டி நின்றன. நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் முதன் முதலில் நிறுவப்பட்ட போராளி மில்லரின் சிலை, தீருவிலில் அமைக்கப்பட்ட மாவீரர் நினைவான எழுவர் என்பன அவரது உச்சகாலப் படைப்புகள். தீருவிலில் அமைக்கப்பட்ட சிலைகள் அவை அமைந்த மைதானத்தின் முன்னே உள்ள பாடசாலையில் அவர் பாட விளக்க அதிகாரியாகப் பணியாற்றிய நேரத்தில் அவர் கண் முன்னாலே உடைத்தழிக்கப்பட்ட காட்சியைக் கண்ட உளக் கொடூரத்தையும் தாண்டியுள்ளார். அது போல அழிப்பட்ட அவர் படைத்த சிலைகள் பல. கலைகளில் கண்களோடும் கரங்களோடும் உறவாடும் கலைஞர் ஓவியர் என்பர். அந்த உறவின் துயரைத் தம் வாழ்வில் அனுபவித்த ஒரு கலைஞர் அவர். தொடக்கமும் முடிவும்:- நெல்லியடியில் அமைக்கப்பெற்ற தமிழர் தலைவர் சிவசிதம்பரம் அவர்களது சிலையே ரமணி அவர்கள் கடைசியாகச் செதுக்கிய சிலை ஆகும். நான் முதலில் குறிப்பிட்டதுபோல தமது பெயரின் சுருக்கத்தில் அவர் பொதுமையான வழமைபோல சிவா என்று இடாமல்விட்டிருந்தாலும் அவரது கலையுலக வாழ்வில் அவருக்குப் பிடித்த சிற்பக் கலையில், அவர் வடித்த முதலாவது சிலை சிவகுமாரனுடையது. கடைசியாக வடித்ததும் உடுப்பிட்டி சிவா! இரண்டு சிவாக்கள்!! தொடக்கமும் முடிவும் சிவாவே! சென்று வாருங்கள் சேர்!! - வரதராஜன் மரியாம்பிள்ளை
-
எனது அரசியல் பயணம் தடையின்றித் தொடரும்.. டக்ளஸ் தேவானந்தா
பல காரணங்கள். அதில் ஒன்றையாவது சொல்லவேண்டியது, நாங்களும் தெரிந்துகொள்வோம் அவர் எப்படியான நல்ல மனிதர் என்று. ராஜபக்ச குடும்பத்தை காட்டிக்கொடுக்கிறேன் என்று பேரம் பேசியிருப்பாரோ, அல்லது காட்டிக்கொடுத்துவிட்டுதான் பிணையில் வந்தாரோ? "துரோகி துரோகத்தாலேயே அழிவான்." வெடிகொழுத்தியதை மறைக்கிறாரோ?
-
வடக்கு, கிழக்கு வானிலை குறித்த விசேட எச்சரிக்கை அறிவிப்பு
யாழ்ப்பாணத்தில் பலத்த மழை வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது வலுக்குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக இலங்கையின் பல பகுதிகளில் மழை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, பதுளை மற்றும் கண்டி ஆகிய இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அத்தோடு, வடக்கு மாகாணத்தில் மணிக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. https://www.tamilmirror.lk/செய்திகள்/யாழ்ப்பாணத்தில்-பலத்த-மழை/175-370826
- Today
-
வண்ணங்களோடும் வடிவங்களோடும் ஓர் கலைப்பயணி
ஓவியர், சிற்பக் கலைஞர் கலாபூஷணம் ரமணி (முன்னாள் வருகைதரு விரிவுரையாளர் - யாழ் பல்கலைக்கழகம்) கலைகளும், கலைப்படைப்புகளும், கலைஞர்களும் இல்லாமல் உலகைக் கற்பனை பண்ணிப் பாருங்கள்... வேண்டாம் அந்த விபரீதக் கற்பனை. மரணமில்லா வாழ்வு கலைஞனுக்கு மட்டும்தான். அதனால்தான் கவியரசு கண்ணதாசன் என்ற பன்முகக் கலைஞன் கம்பீரமாக நிமிர்ந்து நின்று தன்னை "மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் அவர் மாண்டுவிட்டால் அதைப் பாடி வைப்பேன் - நான் நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை" என உறுதிபடப் பாடியதோடு மட்டுமின்றி விடாது "பாமர ஜாதியில் தனிமனிதன் - நான் படைப்பதனால் என்பேர் இறைவன்" எனப் பிரகடனமும் செய்துவிட்டுப் போயுள்ளான். இது உண்மையான ஆற்றல்மிகு கலைஞரின் புவிசார் தகைமையை அர்த்தபூர்வமாகச் சொல்லும் யதார்த்த வரிகளாகும். ஒரு மனிதன் அவன் எப்படியானவனாக இருந்தாலும் அவன் ஒரு படைப்பியல் திறன் கொண்ட கலைஞனாகத் தன் சுயத்தை வெளிப்படுத்தி நிற்பவனேயானால் அவனது சாகாவரம் பெற்ற கலைப்படைப்புகள் தரும் பிரமிப்பும், ரசனையும் அவனது அனைத்துக் குறைபாடுகளையும் மறக்கவைத்து அவனை வணங்க வைத்துவிடும் என்பதே நிசம். "நாளும் நலியாக் கலையுடையோம்" என எம்மண்ணின் கவிஞனும் அத்தகைய ஒரு அமர கலைஞனுமான மஹாகவி உருத்திரமூர்த்தி அவர்கள் பாடிய வரிகள் இப்போது நினைவுக்கு வருகின்றமை தவிர்க்க முடியாத ஒன்றாகவே உள்ளது. "யாழ்பாடி" என்ற பார்வையற்ற இசைக்கலைஞனின் கலாகீர்த்தியைப் பாராட்டி அவருக்கு அன்பளிப்பாக வெகுமதியாக அரசனால் வழங்கப்பட்ட பிரதேசமே யாழ்ப்பாணம் என இன்று எம்மால் எம் தந்தையர் பூமியாகப் போற்றப்படுகிறது. எனவே யாழ்ப்பாணத்தின் தோற்றமே கலைஞனோடு தொடர்பு கொண்டதாக இருப்பது புளங்காகிதம் தரும் விடயமாகும். பழம்பெரும் தமிழ் பேரகராதி ஒன்றில் யாழ்ப்பாணம் என்ற பெயருக்கு (சொல்லுக்கு) "வீணாகான புரம்" என அழகான - கலைத்துவமான விளக்கம் கொடுக்கப்பட்டிருப்பதை இங்கு கூறவே வேண்டும். இலங்கை வேந்தன் தேவ கலைஞன் இராவணேஸ்வரன் வீணை வாசிப்பதில் நிகரற்றவன் என்பதை புராண, இதிகாச, மற்றும் தேவாரப் பதிகங்கள் பதிவு செய்துள்ளமையைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்தத் தசமுகவை வீணைக் கொடியுடை வேந்தன் எனவே இதிகாசம் வர்ணிக்கிறது. எனவே கலைகளுக்கும் ஈழத் தமிழனுக்கும் இடையேயான தொடர்பின் அடிப்படையில்தான் கவிஞர் "மஹாகவி" அவர்கள் "நாளும் நலியாக் கலையுடையோம்" எனப் பாடியிருக்கிறார் எனக் கருதலும் பொருத்தமேயாகும். எமக்கென்று தனித்துவமான கலை, பண்பாட்டு மற்றும் கலாசாரப் பாரம்பரியம் உண்டென்பது வரலாற்றுரீதியாக நிர்ணயமான விடயமாகும். மிகப்பெரிய அறிஞர்களை, கலாவிற்பன்னர்களை, இலக்கியப் பெருமக்களை உலகிற்கு குறிப்பாகத் தமிழுலகிற்கு வழங்கி வருகின்ற பெருமை ஈழ மண்ணுக்குண்டு. இத்தகைய மாண்புமிகு மனிதர்களுள் இன்று நம்மிடையே வாழ்ந்து தமிழுக்கும், தாய் மண்ணிற்கும் கௌரவம் பெற்றுத் தரும் கலைஞர்களுள் - சிற்ப, ஓவிய நுண்கலைத் துறையில் தனக்கென ஒரு தனித்துவமும் கலைத்துவமும் மிக்க இடத்தை வகித்து வரும் வாழ்நாள் சாதனையாளரான "ரமணி" என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு அமைதியும், ஆழமும் மிக்க கலைஞனாக நாம் பெருமைப்படக்கூடிய கலாவிற்பன்னராக விளங்கும் வைத்தீஸ்பரன் சிவசுப்பிரமணியம் ரமணி முக்கியத்துவம் பெறுபவராகிறார். நல்ல கலைஞன் மிகப்பெரிய அடையாளம் அவர் கலைச்செருக்கு, வித்துவக்கிறுக்கற்ற நல்ல மனிதனாகவும் அவர் விளங்குவதுதான். அந்தவகையில் ரமணி அவர்களின் அடக்கமும், அமைதியும் மிக்க மனிதநேயப் பண்புதான் அவரது கலாசிருஷ்டிகளின் கலைத்துவ தனித்துவத்திற்கும் மூலகாரணியாகும். முதலில் அவர் நல்ல மனிதர், நல்ல ஆசான், அது அவரது கலைப் படைப்புக்களின் ஆத்மாவாக வெளிப்பட்டு நிற்பதை அனைவரும் உணர்வர். அந்த கலைவளம் மலிந்த ஊரில் கல்வி, மற்றும் இசைக்கலைத் துறையில் பேரார்வம் கொண்டவரான அட்சலிங்கம் வைத்தீஸ்பரன் என்பவருக்கும் மங்கையற்கரசி என்பவருக்கும் மகனாகப் பிறந்தவர் ரமணி. அவரது இயற்பெயர் சிவசுப்பிரமணியம். இப்பெயரின் இடையே வரும் "ரமணி" என்ற பெயர் இவரது கலையுலக பெயராக இவரே வைத்துக்கொண்டதாகும். 1942 ஆவணி 3ஆம் நாளில் பிறந்த இவரிடம் பரம்பரை கலையார்வம் இயல்பாகவே இணைந்து கொண்டதில் வியப்பில்லை. இவர் மட்டுமல்ல இவர் குடும்பத்தவர் அனைவருமே கலைத்துவ ஆளுமை கொண்டவர்கள் தான். இவரது அண்ணா சச்சிதானந்தசிவம் மிகச்சிறந்த ஓவியர். அற்புதமான இலக்கியப் படைப்பாளி, ஞானரதன் என்ற பெயரில் சிறுகதைகள் - நாவல்கள் பலவற்றை படைத்தவர். திரைப்படத் துறையில் சாதனை படைத்த இயக்குநர். இந்தியாவில் இணையற்ற இயக்குநராக, ஒளிப்பதிவாளராக விளங்கும் பாலு மகேந்திராவின் பள்ளித்தோழர், பல பல்துறைக் கலைஞர்களை உருவாக்கிய நல்லாசான். "கலாகீர்த்தி" விருது பெற்றவர். ஏனைய சகோதரர்களும் சகோதரிகளும் கூட அவரவர் வாழ்வியல் தொழிற்றுறைகளுடன் மேலதிகமாக கலைத்துறை ஈடுபாடுகளையும் கொண்டவர்கள். அவர்களின் வாரிசுகளும் அப்படியே... வாழையடி வாழையாக கலைஞானம் கொண்டவர்களாக விளங்குவதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். ஆகவொரு பெரும் கலாவிருட்சத்தின் அங்கங்களாக அவரவர் தனித்துவத் திறனை வளர்த்துக்கொள்ள அந்தக் கலைக் குடும்பத்தில் தடையேதும் இருக்கவில்லை. தந்தையின் ஆதரவும், தமையனின் வழிகாட்டலும், சக நண்பர்கள், அயலவர்களின் உற்சாக ஊக்குவிப்பும் "ரமணி" அவர்களை அவர் துறையில் உச்சத்தை நோக்கி உயர வழிவகுத்தது. அளவெட்டி அருணோதயக் கல்லூரியில் தனது இளமைக் காலக் கல்வியை மேற்கொண்ட "ரமணி" அவர்கள் க.பொ.த சாதாரணப் பரீட்சையில் சித்தி பெற்று உயர்தரப் பேறு பெறுவதற்கான கல்வியைத் தொடர நினைத்த வேளை அவரது வாழ்வின் திருப்புமுனையாக அமைந்தது. கலைத்துறைசார் கல்வியை மேற்படிப்புக்காக தெரிவு செய்ய திரு.எஸ்.பொன்னம்பலம் (ஆதவன்) என்பவரின் வழிகாட்டல் ஊக்குவிப்பு காரணியாகியது. இவர் அக்காலத்தில் அளவெட்டியில் புகழ்பெற்ற பல்துறைக் கலைஞராகவும், சித்திர ஆசிரியராகவும் விளங்கியவர். இவரை ரமணி அவர்களுள் மிளிர்ந்து கொண்டிருந்த ஓவியக் கலையை துல்லியமாக இனங்கண்டு அவரைப் பாராட்டி ஊக்குவித்து உயர்தரப் பரீட்சையில் ஓவிய பாடத்தில் விசேட சித்தி பெற வழிவகுத்தார். தன் இன்றைய கலைசார் பெருமைகளுக்கான காரணகர்த்தா திரு. பொன்னம்பலம் அவர்களே என மிக நன்றியுடன் நினைவு கூறுகிறார் "ரமணி". 07.03.1978 இல் "கலைஞானக் கதிர்" என்ற விருதினை ஓவியம், சிற்பம் ஆகிய துறைகளில் இவர் ஆற்றும் சேவைக்காக பருத்தித்துறை பிரதேசசபை வழங்கிக் கௌரவித்தது. 01.10.2000 அன்று வடமராட்சி கலைஞர் வட்டம் சிறப்புக் கேடயம் வழங்கிக் கௌரவித்தது. 18.11.2001 ஆம் ஆண்டு வடக்கு அபிவிருத்தி புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு தமிழ் விவகாரங்களுக்கான அமைச்சினால் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினூடாக “கலைஞான கேசரி” என்ற கௌரவ விருது வழங்கப்பட்டது. 05.05.2002 இல் : யாழ்ப்பாணம் இந்து சமயப் பேரவையால் "சிவ கலா பூஷணம்" என்ற விருது வழங்கப்பட்டது. 22.05.2006 : கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் "கலாபூஷணம்" எனும் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். 2008 இல் இவருக்கு வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத் துறை அமைச்சால் "ஆளுநர் விருது" வழங்கப்பட்டது. 2010 இல் : மன்னார் தமிழ்ச்சங்கம் நடாத்திய செம்மொழி மாநாட்டில் கலாயோகி ஆனந்தக் குமாரசாமி ஞாபகார்த்த "வாழ்நாள் சாதனையாளர்" விருது வழங்கப்பட்டது. 2011 இல் : பருத்தித்துறை பிரதேச செயலக கலாசாரப் பேரவை "கலைப்பரிதி" என்ற விருதை வழங்கியது. 2012 இல் : வடமராட்சி கல்வி அலுவலகத்தினால் நடாத்தப்பட்ட நிறைமதி விழாவில் ஓவிய-சிற்பத் துறையில் இவர் ஆற்றிய பணிகளுக்காக "கலைவாரிதி" விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. விருதுகள், பட்டங்கள், பாராட்டுக்கள் அனைத்தும் "ரமணி" என்ற அற்புதமான கலைஞனுள் ஆளுமை பெருமிதச் செருக்கைப் புறந்தள்ளி அடக்கத்தையும், பணிவையும் மட்டுமே வளர்த்துள்ளமையை அனை வரும் ஆச்சரியத்துடன் நோக்குவது வழமை. நிறைகுடம் தளும்புவதில்லையே. ஓவியர்-சிற்பி என பன்முகத்திறன் கொண்ட ரமணி அவர்களை ஆரம்பத்திலேயே அவரது திறனை இனங்கண்டு ஊக்குவித்து அவரது வளர்ச்சியில் மகிழ்வும் நிறைவும் கொண்டு அவருக்குரிய அங்கீகாரத்தை வழங்கிய புகழ்பெற்ற ஓவியரும், கேலிச் சித்திர விற்பன்னருமான சிரித்திரன் சுந்தர் அவர்கள் "ரமணி" குறித்து கூறிய கருத்தை இங்கு முத்தாய்ப்பாகக் கூறமுடியும். "ரமணி இலங்கையில் அதுவும் தமிழ்க் கலைஞனாக பிறந்தபடியால் அவரது முழுமையான ஆளுமைதிறன் வெளிவராமல் இருக்கிறது. இவர் மட்டும் வெளிநாட்டில் பிறந் திருப்பாரேயானால் இவரது தூரிகையும், உளியும் பெரும் அற்புதங்களைப் படைத்திருக்கும்....." உண்மையில் இது ஓவிய, சிற்ப ஆளுமை மிகு "ரமணி" அவர்கள் பற்றிய சுந்தரின் துல்லியமான மதிப்பீடேயாகும். ஒரு பெரும் கலைஞனை இன்னொரு பெருங்கலைஞனால்தான் இனங்காணவும் மதிப்பிடவும் முடியும் என்பது உண்மை தான். -ராதேயன் [தமிழ் முற்றம் 2015] இம்மாபெரும் கலைஞன் கடந்த 29/12/2025 அன்று காலமானதைத் தொடர்ந்து இக்கட்டுரை பதிவேற்றம் செய்யப்படுகிறது.
-
இலங்கையில் பாலின அடையாள விவகாரம்: ஜனாதிபதிக்கு கிறிஸ்தவ சபைகள் அவசர கடிதம்
கிறிஸ்தவ சபைகள் அவசர கடிதம் | 🤣 இந்த மதவாதிகளின் செயற்பாடுகள் உலகில் மனிதர்களுக்கு எவ்வளவு இடையூறுகளை சேதத்தை விளைவிக்கின்றது என்பது நேரடியாக காண்கின்ற உண்மைகள்.
-
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
சிறப்பான கருத்து வசி 👍
-
உலகில் அதிக எண்ணெய் உற்பத்தி செய்தும் அமெரிக்காவுக்கு ஏன் இன்னும் எண்ணெய் தேவை?
உலகில் அதிக எண்ணெய் உற்பத்தி செய்தும் அமெரிக்காவுக்கு ஏன் இன்னும் எண்ணெய் தேவை? பட மூலாதாரம்,Getty Images ஒரு மணி நேரத்துக்கு முன்னர் உலகின் மற்ற எந்த நாட்டை விடவும் அதிக அளவிலான கச்சா எண்ணெயை உற்பத்தி செய்வது அமெரிக்காதான். அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகத்தின் கூற்றுப்படி, 2025-ஆம் ஆண்டில் அமெரிக்கா ஒரு நாளைக்கு 13.4 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை விற்பனை செய்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அடிக்கடி எண்ணெயைப் பற்றி பேசுகிறார். ஆனால் அவர் அமெரிக்க எண்ணெயைப் பற்றி மட்டும் பேசுவதில்லை. இத்தகைய சூழ்நிலையில், அமெரிக்காவே இவ்வளவு பெரிய அளவில் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்யும் போது, அதற்கு ஏன் இன்னும் கூடுதல் எண்ணெய் தேவைப்படுகிறது என்ற கேள்வி எழுகிறது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அமெரிக்க கச்சா எண்ணெயில் 80% இலகுரக எண்ணெயாகும். அமெரிக்காவிற்கு அதிக எண்ணெய் தேவைப்படுவது ஏன்? அமெரிக்கா தனது சொந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படும் எண்ணெயை நம்பி செயல்பட முடியாதா? எண்ணெய் வணிகத்துடன் வெனிசுவேலா எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது? உண்மையில் இதற்கான காரணம் கச்சா எண்ணெயின் வகையை அடிப்படையாகக் கொண்டது. பூமியிலிருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெய் அதன் அடர்த்தி, சல்பர் அளவு மற்றும் பாயும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் வெவ்வேறு தரங்களாகப் பிரிக்கப்படுகிறது. பரந்த அளவில் பார்த்தால், கச்சா எண்ணெய் இரண்டு வகைப்படும்: 1. இலகுரக கச்சா எண்ணெய் 2. கனரக கச்சா எண்ணெய் "உலகில் 160-க்கும் மேற்பட்ட கச்சா எண்ணெய் வகைகள் உள்ளன. உலகெங்கிலும் உள்ள வெவ்வேறு சுத்திகரிப்பு நிலையங்கள் வெவ்வேறு தரத்திலான கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கின்றன," என்று எரிசக்தி ஆய்வாளர் கௌரவ் சர்மா விளக்குகிறார். கனரக எண்ணெயை விட இலகுரக கச்சா எண்ணெயைச் சுத்திகரிப்பது எளிது. சுத்திகரிப்புக்குப் பிறகு, இது பெரும்பாலும் பெட்ரோல் மற்றும் ஜெட் எரிபொருள் (விமான எரிபொருள்) தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. கனரக எண்ணெய் கப்பல்களுக்கான எரிபொருள், சாலை அமைக்கும் பொருட்கள் மற்றும் லிப் பாம் போன்ற பல பொருட்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது. இலகுரக கச்சா எண்ணெய் கனரக எண்ணெயை விட அதிக மதிப்புடையது, எனவே அதன் விலையும் அதிகம். 2025-ல், அமெரிக்கா ஒரு நாளைக்கு 13.4 மில்லியன் பேரல் எண்ணெயை விற்பனை செய்தது. அதே சமயம், பிற நாடுகளிலிருந்து ஒரு நாளைக்கு சுமார் 2 மில்லியன் பேரல் எண்ணெயை வாங்கியது. இத்தகைய சூழ்நிலையில், அமெரிக்கா தான் உற்பத்தி செய்யும் எண்ணெயை ஏன் தனக்காக வைத்துக் கொள்வதில்லை என்ற கேள்வி இங்கே எழுகிறது. இதற்கெல்லாம் காரணம் இலகுரக மற்றும் கனரக எண்ணெய் விவகாரம்தான். அமெரிக்க பெட்ரோலிய இன்ஸ்டிடியூட்டின் தகவல்படி, அமெரிக்காவின் எண்ணெய் 80 சதவீதம் இலகுரக வகையைச் சேர்ந்தது. ஆனால், அமெரிக்காவின் பெரும்பாலான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் கனரக எண்ணெயைச் சுத்திகரிக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளன. 20-ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட பெரும்பாலான எண்ணெய் லத்தீன் அமெரிக்கா மற்றும் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கனரக கச்சா எண்ணெய் ஆகும். பின்னர் 2000-களின் முற்பகுதியில், அமெரிக்க எண்ணெய் உற்பத்தியில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்ததால், 'ஷேல்' பாறைகளிலிருந்து இலகுரக கச்சா எண்ணெயை அதிக அளவில் பிரித்தெடுப்பது சாத்தியமானது. இப்போது அமெரிக்கா எடுக்கும் கச்சா எண்ணெய் வகைக்கும், அதன் சுத்திகரிப்பு நிலையங்கள் கையாளும் கச்சா எண்ணெய் வகைக்கும் இடையே ஒரு பொருத்தமின்மை உள்ளது. அதாவது, அமெரிக்கா பெரும்பாலும் இலகுரக எண்ணெயை எடுக்கிறது, ஆனால் கனரக எண்ணெயைச் சுத்திகரிக்கும் திறனை கொண்டுள்ளது. "ஒருமுறை ஒரு சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டுவிட்டால், அதை மாற்றுவது மிகவும் கடினம். அதற்கு கோடிக்கணக்கான டாலர்கள் முதலீடு தேவைப்படும்," என்று கௌரவ் சர்மா கூறுகிறார். அதே நேரத்தில், கனரக எண்ணெயை விட இலகுரக எண்ணெயின் விலை அதிகம் என்பதால், அமெரிக்கா தனது இலகுரக எண்ணெயை அதிக விலைக்கு விற்றுவிட்டு, கனரக எண்ணெயை மலிவான விலைக்கு வாங்குகிறது. பட மூலாதாரம்,Getty Images எண்ணெய் விவகாரத்தில் அமெரிக்க-வெனிசுவேலா உறவுகள் வெனிசுவேலா, செளதி அரேபியா, இரான், கனடா, இராக், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ரஷ்யா, அமெரிக்கா மற்றும் லிபியா ஆகிய நாடுகள் உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்புக்களைக் கொண்டுள்ளன. இதில் பல நாடுகள் கனரக கச்சா எண்ணெயை எடுப்பதில் பெயர் பெற்றவை. இந்த பட்டியலில் உள்ள மூன்று நாடுகளான வெனிசுவேலா, இரான் மற்றும் ரஷ்யா ஆகியவை தற்போது அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்கு உள்ளாகியுள்ளன. இருப்பினும், வெனிசுவேலாவிலிருந்து சில எண்ணெய் விநியோகங்கள் தொடர்ந்து அமெரிக்காவை சென்றடைகின்றன. ஏனெனில், வெனிசுவேலாவில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, அந்நாட்டின் எண்ணெய் தொழில்துறையை கட்டமைப்பதில் அமெரிக்க நிறுவனங்கள் பெரும் பங்கு வகித்தன. 20-ஆம் நூற்றாண்டின் பெரும்பகுதி வரை, அமெரிக்கா அங்கிருந்து கனரக கச்சா எண்ணெயை எடுத்து வந்தது. நவர்ரா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் கார்மென் பீட்ரிஸ் பெர்னாண்டஸ் இதுகுறித்துக் கூறுகையில், "மற்ற லத்தீன் அமெரிக்க நாடுகளைப் போலன்றி, வெனிசுவேலா 1976-ல் எண்ணெய் தொழிலை தேசியமயமாக்கிய போதும் அமெரிக்காவுடன் நல்ல உறவைப் பேணி வந்தது. ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், அந்த உறவு எப்போதும் சீராக இருந்தது," என்கிறார். 1999-ஆம் ஆண்டு சோசலிசத் தலைவர் ஹியூகோ சாவேஸ் ஆட்சிக்கு வந்தபோது இந்த உறவில் மாற்றம் ஏற்பட்டது. குறிப்பாக, எண்ணெய் துறையின் மீதான அரசாங்க கட்டுப்பாட்டை அவர் வலுப்படுத்தினார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் லத்தீன் அமெரிக்க ஆய்வக மையத்தைச் சேர்ந்த முனைவர் கிரேஸ் லிவிங்ஸ்டோன் இதுகுறித்துக் கூறுகையில், "வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்கள் மீது அவர் கடுமையான நிபந்தனைகளை விதித்தார். இது அமெரிக்க அரசுக்கும் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கும் பிடிக்கவில்லை," என்கிறார். 2013-ல் ஹியூகோ சாவேஸ் மறைந்த பிறகு, நிக்கோலஸ் மதுரோ வெனிசுவேலாவின் அதிபரானார். அவர் சாவேஸின் கொள்கைகளையே தொடர்ந்து பின்பற்றினார். 2019-ஆம் ஆண்டில், உலக வங்கி தீர்ப்பாயம் வெனிசுவேலா அரசாங்கத்தை அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்குமாறு உத்தரவிட்டது. ஆனால் இதுவரை அந்தத் தொகை வழங்கப்படவில்லை. இதைக் குறிப்பிட்டு, அமெரிக்காவின் எண்ணெயை வெனிசுவேலா திருடிவிட்டதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டுகிறார். எனினும், வெனிசுலா இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது. 2025-ன் பிற்பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையிலான நிலைமை மேலும் மோசமடைந்தது. அமெரிக்க ராணுவம் எண்ணெய் டேங்கர்களைக் கைப்பற்றியதுடன், வெனிசுவேலா துறைமுகங்களையும் முற்றுகையிட்டது. போதைப்பொருள் கடத்தப்படுவதை ஒடுக்குவதற்காகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார். பட மூலாதாரம்,Getty Images அமெரிக்கா வெனிசுவேலாவின் எண்ணெய் விவகாரத்தில் தலையிடுமா? ஜனவரி 3, 2026 அன்று, அமெரிக்க ராணுவம் வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறைபிடித்தது. போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் தொடர்பான விசாரணையை எதிர்கொள்வதற்காக அவர்கள் அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த நடவடிக்கைக்குப் பிறகு டிரம்ப் கூறுகையில், "உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களை அங்கு பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்ய நாங்கள் அனுப்புவோம். அங்கிருந்து ஈட்டப்படும் பணம் அங்கேயே பயன்படுத்தப்படும், அதன் மூலம் வெனிசுவேலா மக்கள் அதிகபட்ச நன்மைகளைப் பெறுவார்கள்," என்றார். கடந்த பல ஆண்டுகாலமாக, வெனிசுவேலா மீது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதாரத் தடைகள் ரஷ்யா, இரான் மற்றும் முக்கியமாக சீனா ஆகிய நாடுகளுக்கு அங்கு இடமளித்தன. கிரேஸ் லிவிங்ஸ்டோன் கூறுகையில், "வெனிசுவேலாவுக்கு மட்டுமல்ல, பெரும்பாலான தென் அமெரிக்க நாடுகளுக்கும் சீனா ஒரு மிக முக்கியமான வர்த்தகக் கூட்டாளியாக மாறியுள்ளது. குறிப்பாக, அது எண்ணெய் மற்றும் பிற இயற்கை வளங்களை பெரிய அளவில் வாங்குகிறது" என்கிறார். வெனிசுவேலாவின் எண்ணெயில் சுமார் 90 சதவீதத்தை சீனா வாங்கி வந்தது. இதைத் தடுப்பதே டிரம்ப் நிர்வாகத்தின் நோக்கமாக இருந்தது. "நாங்கள் அங்கு பாதுகாப்பை விரும்புகிறோம். உலகெங்கிலும் உள்ள நமது எதிரிகளுக்கு அடைக்கலம் தராத அண்டை நாடுகளையே நாம் விரும்புகிறோம்" என்று அவர் கூறியிருந்தார். வெனிசுவேலாவில் உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்பு (சுமார் 303 பில்லியன் பேரல்கள்) உள்ளது. இருப்பினும், வெனிசுவேலா ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் பேரல்களுக்கும் குறைவான எண்ணெயையே ஏற்றுமதி செய்கிறது. இதற்குக் காரணம் பொருளாதாரத் தடைகள், பல ஆண்டுகாலமாக நிலவும் நிதிப்பற்றாக்குறை மற்றும் மோசமான நிர்வாகம் ஆகும். கௌரவ் சர்மா கூறுகையில், "பல இடங்களில் உள்கட்டமைப்புகளை மீண்டும் உருவாக்க வேண்டியிருக்கும். வெனிசுவேலா கச்சா எண்ணெய் விநியோகம் போதுமான அளவில் தொடங்க மூன்று முதல் நான்கு ஆண்டுகள் ஆகலாம்" என்கிறார். "கடந்த நூற்றாண்டில், எண்ணெய் தொழில் பல நாடுகளுக்கு மகத்தான செல்வத்தை ஈட்டித் தந்துள்ளது. இது பல நாடுகளின் தலையெழுத்தையே ஒரே இரவில் மாற்றியமைத்த பல டிரில்லியன் டாலர் மதிப்பிலான தொழில்துறையாகும்"என்கிறார் கௌரவ் சர்மா. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cdxjgnnjz9lo
-
கிரீன்லாந்தை கைப்பற்றுவதற்கு அமெரிக்காவுக்கு எந்த உரிமையும் இல்லை – டென்மார்க் பிரதமர்
ரஷ்யா - சீனா ஆக்கிரமிப்பைத் தடுக்கும் நோக்கில் அமெரிக்கா கிரீன்லாந்தை “சொந்தமாக்க வேண்டும்” - டிரம்ப் 10 Jan, 2026 | 12:19 PM ரஷ்யா மற்றும் சீனா கிரீன்லாந்தை ஆக்கிரமிப்பதைத் தடுக்க, அமெரிக்கா அந்தத் தீவை “சொந்தமாக்க வேண்டும்”** என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். “நாடுகள் உரிமையைக் கொண்டிருக்க வேண்டும், நீங்கள் உரிமையைத்தான் பாதுகாக்க முடியும்; குத்தகை ஒப்பந்தங்கள் போதுமானவை அல்ல. நாம் கிரீன்லாந்தைப் பாதுகாக்க வேண்டியிருக்கும்,” என்றும் டிரம்ப் கூறினார். மேலும், இதை “எளிதான வழியிலும், கடினமான வழியிலும்” முன்னெடுக்கும் எண்ணம் இருப்பதாக தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகை அண்மையில், டென்மார்க் நாட்டின் தன்னாட்சிப் பகுதியான கிரீன்லாந்தை வாங்குவது குறித்து தனது நிர்வாகம் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவித்தது. ஆனால், தேவையானால் பலப்பிரயோகத்தைப் பயன்படுத்தும் விருப்பத்தையும் அது நிராகரிக்கவில்லை. இருப்பினும், டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து அதிகாரிகள் தெளிவாக, “கிரீன்லாந்து விற்பனைக்கு இல்லை” எனக் கூறி இருக்கின்றனர். டென்மார்க் எச்சரித்தது, இதுபோன்ற இராணுவ நடவடிக்கை அட்லாண்டிக் பாதுகாப்புக் கூட்டணிக்கு (NATO) விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். உலகின் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட பகுதியாக இருந்தாலும், வட அமெரிக்கா மற்றும் ஆர்க்டிக் பகுதிகளுக்கிடையேயுள்ள கிரீன்லாந்து மூலோபாய ரீதியாக மிகவும் முக்கியமாகும். ஏவுகணைத் தாக்குதல்கள் குறித்து முன்னெச்சரிக்கை அமைப்புகளை நிறுவவும், அந்தப் பிராந்தியத்தில் செல்லும் கப்பல்களை கண்காணிக்கவும் இது சிறந்த இடமாகும். டிரம்ப் மீண்டும் மீண்டும் “கிரீன்லாந்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு மிக முக்கியம்” என்று கூறி வருகிறார். ஆதாரங்களை வழங்காமல், கிரீன்லாந்தில் “ரஷ்ய மற்றும் சீனக் கப்பல்கள் நிரம்பியுள்ளன” என்று குற்றச்சாட்டும் அவர் முன்வைத்துள்ளார். இரண்டாம் உலகப் போரிலிருந்து அமெரிக்கா இயக்கி வரும் பிட்டுஃபிக் (Pituffik) தளத்தில் 100-க்கும் மேற்பட்ட அமெரிக்க இராணுவ வீரர்கள் நிரந்தரமாக நிலைகொண்டுள்ளனர். தற்போதைய ஒப்பந்தங்கள் அமெரிக்காவிற்கு தேவையானளவு வீரர்களை கிரீன்லாந்திற்கு கொண்டு செல்ல அனுமதிக்கின்றன. ஆனால் டிரம்ப், “குத்தகை ஒப்பந்தங்கள் போதுமானவை அல்ல; உரிமை (Ownership) வேண்டும்” என்றும் கூறினார். டிரம்ப், “நான் சீன மக்களையும் ரஷ்ய மக்களையும் விரும்புகிறேன். ஆனால் அவர்கள் கிரீன்லாந்தில் என் அண்டை வீட்டாராக இருப்பதை நான் விரும்பவில்லை. அது நடக்கப்போவதில்லை,” என்று கூறினார். மேலும், “நேட்டோ இதை புரிந்துகொள்ள வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார். டென்மார்க் நாட்டின் நேட்டோ நட்பு நாடுகளான முக்கிய ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடா, இந்த வாரம் டென்மார்கிற்கு ஆதரவை தெரிவித்துள்ளனர். அவை, “டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து மட்டுமே தங்கள் உறவுகள் தொடர்பான விஷயங்களில் முடிவெடுக்க முடியும்” எனக் கூறியுள்ளன. மேலும், ஆர்க்டிக் பாதுகாப்பில் அமெரிக்காவைப் போலவே ஆர்வம் கொண்டுள்ள நாடுகள், இதை அனைத்து நட்பு நாடுகளும் ஒன்றாகச் சேர்ந்து சமாளிக்க வேண்டும் என்றும், ஐக்கிய நாடுகள் சபையின் ஈர்க்கூடல், பிராந்திய ஒருமை, எல்லைகளை மீறாமை ஆகிய கொள்கைகளையும் நிலைநிறுத்த வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளன. பிபிசி (BBC) செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/235670
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
உக்ரைனில் ரஷ்யாவின் ஒரேஷ்னிக் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்: 4 பேர் பலி, 23 க்கு மேற்பட்டோர் காயம் 10 Jan, 2026 | 11:48 AM ரஷ்யா-உக்ரைன் இடையிலான போராட்டத்தை முடிக்க முயற்சிகள் நடைபெற்று வந்தபோது, ரஷ்யா புதிய ஒரேஷ்னிக் பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. நூற்றுக்கணக்கான டிரோன்கள் மற்றும் 20 க்கு மேற்பட்ட ஏவுகணைகள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த தாக்குதலில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்து, 23-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உடனடியாக நடந்த தாக்குதலில், கீவ் நகரில் உள்ள கத்தார் தூதரகம் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்தார். கத்தார், ரஷ்யா-உக்ரைன் சிறைக்கைதிகள் பரிமாற்றத்தில் முக்கிய பங்காற்றிய நாடாகும். குறிப்பாக, ஒரேஷ்னிக் ஏவுகணை கடந்த ஆண்டு இறுதியில் உக்ரைன் பகுதியில் பரிசோதிக்கப்பட்டு, கடந்த வாரம் செயல்பாட்டுக்கு வந்ததாக ரஷ்யா அறிவித்துள்ளது. இதன்போது நடத்தப்பட்ட தாக்குதல் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/235667
-
ஈரானில் தீவிரமடையும் போராட்டம்: இணைய சேவைகள் முடக்கம்
ஈரானில் போராட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 62 ஆக உயர்வு : இணைய சேவை முடக்கம் ! 10 Jan, 2026 | 11:37 AM ஈரானில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து வெடித்துள்ள மக்கள் போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ள நிலையில், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், 2,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரானிய நாணயமான ரியால், அமெரிக்க டொலருக்கு நிகராக வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. கடந்த டிசம்பர் 28 ஆம் திகதி, ஒரு அமெரிக்க டொலருக்கு நிகரான ரியால் மதிப்பு 1.42 மில்லியனாக சரிந்தது. இந்த நாணய வீழ்ச்சி, பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனை எதிர்த்து, தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பொதுமக்களும் வியாபாரிகளும் வீதிகளில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களைக் கலைக்க பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப்புகை குண்டுகளை பயன்படுத்தினர். பல இடங்களில் ஏற்பட்ட மோதல்கள் வன்முறையாக மாறி நிலைமை மேலும் தீவிரமடைந்தது. நிலைமை கட்டுப்பாட்டை இழந்ததைத் தொடர்ந்து, மத்திய வங்கி ஆளுநர் முகமது ரெசா ஃபர்சின் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகள், தொடர்ச்சியான பணவீக்கம் மற்றும் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பெட்ரோல் விலை மாற்றம் ஆகியவையே இந்த நெருக்கடிக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன. தொடர்ந்து இடம்பெறும் போராட்டங்களால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நிலைமையை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் இதுவரை பலனளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, ஈரான் முழுவதும் இணைய சேவைகள் மற்றும் செல்போன் தொடர்பாடல்கள் முடக்கப்பட்டுள்ளன. ஈரானில் நிலவும் இந்த அரசியல் மற்றும் பொருளாதார பதற்றம், அடுத்தகட்டமாக எத்தகைய திருப்பத்தை எடுக்கும் என்பது குறித்து சர்வதேச சமூகம் கூர்ந்து கவனித்து வருகின்றது. https://www.virakesari.lk/article/235666
-
இலங்கைக்கு கடும் எச்சரிக்கை: வங்காள விரிகுடாவில் புயல் உருவாகுமா? நிலவரம் என்ன?
அது புயலாக வலுப்பெறுவதற்கான அறிகுறிகளும் இல்லை - இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் Published By: Vishnu 10 Jan, 2026 | 04:47 AM (எம்.மனோசித்ரா) தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழமுக்கம் நேற்று நாட்டுக்குள் பிரவேசிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் நகர்வு பாதையில் மாற்றம் அவதானிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அது புயலாக வலுப்பெறுவதற்கான அறிகுறிகளும் இல்லை. எனவே பெரும்பாலான பிரதேசங்களில் எதிர்பார்க்கப்பட்ட கன மழை வீழ்ச்சி குறைவாகவே காணப்படும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் அத்துல கருணாநாயக்க தெரிவித்தார். கொழும்பில் வெள்ளிக்கிழமை (9) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழமுக்கமானது நேற்று வெள்ளிக்கிழமை மாலை மட்டக்களப்புக்கு கிழக்காக சுமார் 200 கிலோ மீற்றர் தூரத்தில் நிலை கொண்டிருந்தது. இந்த தாழமுக்கம் நேற்று மாலை 5.30 - 11.30க்கு இடையில் நாட்டுக்குள் பிரவேசிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அது பயணிக்கும் பாதையில் மாற்றம் அவதானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய திருகோணமலை கரையோரத்தின் ஊடாக இப்பகுதி நாட்டுக்குள் பிரவேசிக்கக் கூடும். எனவே எதிர்பார்க்கப்பட்டளவு கடும் மழை வீழ்ச்சி பதிவாகாது. இத்தாழமுக்கம் புயலாக வலுப்பெறுவதற்கான அறிகுறிகள் இல்லை. எனவே வடக்கு, வடமத்திய, வடமேல் உள்ளிட்ட மாகாணங்களில் இடைக்கிடை மழை பெய்யும். இந்த மாகாணங்களிலுள்ள சில மாவட்டங்களில் 100 மில்லி மீற்றரை அண்மித்தளவில் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும். இவை தவிர ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். இம்மாகாணங்களில் 50 - 75 மி.மீ. மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும். ஏனைய மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யும். எவ்வாறிருப்பினும் காற்றின் வேகமானது அவ்வாறே காணப்படுகிறது. குறிப்பாக மத்திய மழை நாட்டை அண்மித்த பகுதிகளிலும், தென் மாகாணத்திலும் காற்றின் வேகம் அதிகரிக்கும் போக்கு குறைவடைந்துள்ள போதிலும், ஏனைய மாகாணங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 50 - 60 கிலோ மீற்றர் வரை காணப்படும். மீன்பிடி மற்றும் கடற்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறையிலிருந்து அம்பாந்தோட்டை வரையான கடற்பகுதிகளிலும் கடற்றொழில் நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்ளுமாறு தொடர்ந்தும் அறிவுறுத்தப்படுகிறது. இங்கு மாத்திரமின்றி ஏனைய கடற்பகுதிகளிலும் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவது பொறுத்தமற்றது. இன்று சனிக்கிழமையுடன் மழை வீழ்ச்சி படிப்படியாகக் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியும் படிப்படியாக பலவீனமடைந்து நாட்டைக் கடந்து செல்லும் என்றார். https://www.virakesari.lk/article/235641
-
தரையிறங்கும் போது விபரீதம்; நுவரெலியா ஏரியில் வீழ்ந்த விமானம்
நுவரெலியா கிரகரி வாவியில் விழுந்த விமானம் இரண்டு நாள் போராட்டத்தின் பின் மீட்பு! 10 Jan, 2026 | 10:16 AM நுவரெலியா, கிரகரி வாவியில் விபத்திற்குள்ளான நீர் விமானம் (sea plane) பல்வேறு சிரமத்திற்கு மத்தியில் இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை (09) மாலை 6 மணியளவில் மீட்டெடுக்கப்பட்டது. இலங்கை விமாப்படைக்குச் சொந்தமான அதி உயர் தொழில்நுட்பம் கூடிய பாரந்தூக்கி வாகனங்கள் மூலம் கரைக்கு இழுத்துச் தூக்கி எடுக்கப்பட்டது. எனினும் மீட்பு பணியின் போதும் விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்திலும் குறித்த விமானம் கடுமையாக சேதம் ஏற்பட்டுள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அதிகாரிகள் மேற்கொண்ட பரிசோதனையின் பின்னர் நுவரெலியா பொலிஸ் உயிர்காப்பாளர்கள், விமானப்படை அதிகாரிகள் , இராணுவ அதிகாரிகள் மற்றும் கிரகரி வாவி படகு சவாரி வீரர்கள் ஆகியோர் இணைந்து வாவியில் விபத்திற்குள்ளான விமானத்தை பல்வேறு சிரமத்திற்கு மத்தியில் மீட்டனர். நுவரெலியாவில் தற்போது நிலவி வரும் பனி மற்றும் மோசமான வானிலை காரணமாகவும் , கிரகரி வாவியில் சேறும் சகதியும் தேங்கி உள்ளதால் மீட்பு பணியை மேற்கொள்வதில் (08) வியாழக்கிழமை சற்று தாமதம் ஏற்பட்டிருந்தது. விமானம் விபத்திற்குள்ளானதற்கான உரிய காரணம் இதுவரை தெரிய வரவில்லை இதுபற்றி விசாரணை செய்வதற்கு தனிப்பட்ட குழு ஒன்று நியமனம் செய்யப்பட்டுள்ளது. நுவரெலியா, கிரகரி வாவியில் நீர் விமானம் (sea plane) ஒன்று புதன்கிழமை (07) ஆம் பிற்பகல் 12.30 மணியளவில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிலிருந்த 2 விமானிகள் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். நுவரெலியாவிற்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகள் குழுவொன்றை ஏற்றிச் செல்வதற்காக கட்டுநாயக்க பண்டார நாயக்கர், சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வந்தபோதே விமானம் வேகமாக தரையிறங்கும் போதோ விமானிகளின் கட்டுப்பாட்டை மீறி விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளையும், ஏரியில் படகு சவாரி செய்துகொண்டிருந்தவர்கள் உடனடியாக மீட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/235654
-
கிரீன்லாந்தை கைப்பற்றுவதற்கு அமெரிக்காவுக்கு எந்த உரிமையும் இல்லை – டென்மார்க் பிரதமர்
😂 🤣
-
கருத்து படங்கள்
- இன்று முதல் கல்வி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: கையொப்பம் திரட்டல்
இன்று முதல் கல்வி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: கையொப்பம் திரட்டல். கல்வி அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கான பொதுமக்களின் கையொப்பங்களைத் திரட்டும் நடவடிக்கை இன்று (10) ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான மக்கள் எதிர்ப்பை இதன் மூலம் வெளிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2026/1459245- வவுனியாவில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: குற்றவாளிக்கு கடூழிய சிறை
சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: குற்றவாளிக்கு கடூழிய சிறை Jan 10, 2026 - 11:07 AM வவுனியா, விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வல்லுறவு புரிந்த குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம்.மிஹால் தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு யூன் மாதம் 18 ஆம் திகதி வவுனியா, விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக அதே இடத்தைச் சேர்ந்த 33 வயது சந்தேக நபரை பொலிசார் கைது செய்து பி அறிக்கை மூலம் வவுனியா நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தி வழக்கு தொடரப்பட்டது. தொடர்ந்து 2023 டிசம்பர் 22 ஆம் திகதி, பாலியல் வன்புணர்வு புரிந்ததாக சந்தேக நபருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைககளத்தால் குற்றப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. குறித்த வழக்கு அரச சட்டவாதி ஸ்ரீ.சிவஸ்கந்தஸ்ரீ அவர்களால் நெறிப்படுத்தப்பட்ட நிலையில், குறித்த வழக்கின் சந்தேக நபரான வவுனியா விநாயகபுரம் பகுதியில் வசித்து வந்த 33 வயது நபர் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் வழக்கு விசாரணையின் போது உறுதி செய்யப்பட்டது. குறித்த வழக்கு தீர்ப்புக்காக நேற்றைய தினம் (09) திகதிடப்பட்டிருந்த நிலையில் வழக்கு விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பினை வவுனியா மேல் நீதிமன்றம் வழங்கியது. இதன்போது, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம்.மிஹால் திறந்த நீதிமன்றில் தீர்ப்பினை வாசித்துக் காட்டினார். குறித்த குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கியதுடன், 10 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும், தவறின் 2 மாதகால சாதாரண சிறைத் தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு இலட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் தவறின், ஒரு வருட சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டது. -வவுனியா தீபன்- https://adaderanatamil.lk/news/cmk7vicnv03qwo29nud96yvrj- கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / [பத்து பகுதிகள்]
கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / பகுதி 1 🏡 பாகம் 01 – வெல்வின் கார்டன் சிட்டியில் ஏற்பட்ட முதல் ஆரவாரமும் ஆச்சரியமும் காலைக் கதிரவன் மெதுவாக எழுந்து, வெல்வின் கார்டன் சிட்டியின் [Welwyn Garden City] வீதிகளைத் தங்க நிற ஒளியால் அலங்கரித்தது. ஐந்து வயதிற்கும் சற்று குறைவான 'நிலன்', அரை உறக்கத்தில் கண்களைக் கசக்கிக் கொண்டு, கார் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தான். இவ்வளவு சீக்கிரம் தாத்தா ஏன் அவர்களை காரில் கூட்டிக் கொண்டு போகிறார் என்பது அவனுக்குப் புரியவில்லை. குட்டி 'ஆரின்' தனது குழந்தை இருக்கையில் பாதி தூக்கத்தில் இருந்தான்; ஆனால் மூத்த அண்ணன் 'திரேன்' மகிழ்ச்சியுடன் துள்ளிக் கொண்டிருந்தான். உறக்கம் கலந்த குரலில், ஆர்வத்துடன், “தாத்தா, நாம் எங்கே போறோம்?” என நிலன் கேட்டான். “என் சிறிய ஆராய்ச்சியாளனே, அதை நீயே விரைவில் பார்ப்பாய்” என்று தாத்தா சிரித்தபடி “இது ஒரு பெரிய ஆச்சரியம்!” என்று சொன்னார். வெல்வின் கார்டன் சிட்டியின் தெருக்கள், ஒழுங்காக வெட்டப்பட்ட புதர்கள், அழகாக சுத்தமான வீடுகளுடன், ஒரு குழந்தைப் புத்தகக் கதையைப் போல் தோன்றின. பறவைகள் கீதம் பாட, மர இலைகள் மெதுவாக அசைந்தன. தாத்தா மெதுவாக காரை ஓட்டிச் சென்றார். வழியில், அங்கு காணப்பட்ட சிறிய, அழகான விவரங்களையும் மற்றும் மனதில் தோன்றிய சிறு சிறு விடயங்களையும் சுட்டிக்காட்டினார் – ஒரு தோட்டத்தில், சோம்பேறித்தனமாக கால்களைக் நீட்டிக் கொண்டிருக்கும் ஒரு பூனை, ஒரு வேலியுடன், அனாதரவாக சாய்ந்து நின்ற சிவப்பு மிதிவண்டி, மற்றும் நடைபாதையில் குறுக்கே வேகமாகச் செல்லும் ஒரு சிறிய அணில் போன்றவற்றைப் பார்த்துக் கொண்டு சென்றனர். தாத்தா கூட்டிக் கொண்டு போன இடத்தை அடைந்ததும் நிலனின் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன. "இது... ஒரு பூங்காவா?" அவன் தன் இருக்கையில் இருந்து துள்ளிக் குதித்துக் கொண்டு கிசுகிசுத்தான். “ஆம், ஆனால் இது சாதாரண பூங்கா அல்ல,” என்று தாத்தா கார் கதவைத் திறந்தார். குழந்தைகள் கற்களால் ஆன ஒரு பாதையில் ஒன்றாகப் பாய்ந்து ஓடினர். அங்கு உயரமான வேலிகளுக்குப் பின்னால் ஒரு இரகசிய தோட்டம் மறைந்திருந்தது. சிவப்பு, மஞ்சள், ஊதா நிற மலர்கள் வானவில் போல் மலர்ந்திருந்தன. லாவெண்டர் [lavender] மற்றும் ரோஜாக்களின் வாசனை காற்றை நிரப்பியது. திடீரென்று, ஒரு மென்மையான சிரிப்பு நிலனின் கவனத்தை ஈர்த்தது. “Welcome to Adventure Grove” ["சாகச தோப்புக்கு வருக"] என்று ஒரு சிறிய மர பலகையில் எழுதப்பட்டிருந்தது. அது அவர்களை புன்னகையுடன் பேசி வரவேற்றது. அதன் பின் சிறிய பாதைகள், பாலங்கள், ஓடைகள், விலங்குகளின் சிற்பங்கள் — எல்லாம் சேர்ந்து ஒரு கற்பனை உலகம் போல விரிந்து பரவி இருந்தது. “தாத்தா! பாருங்க!” என்று திரேன் கத்தினான். தோட்டத்தின் மையத்தில் உள்ள ஒரு சிறிய கோட்டையை சுட்டிக்காட்டினான். அதில் கோபுரங்களும், காற்றில் பறக்கும் சிறிய கொடிகளும் இருந்தன. "நாம் உள்ளே போகலாமா?” என்று கேட்டான். "நிச்சயமாக!" என்று தாத்தா பதிலளித்தார். அங்கு தான் முதல் அதிசயமான அனுபவம் அவர்களுக்கு ஆரம்பமானது. குழந்தைகள் வளைந்து நெளிந்து ஓடி, மறைந்திருக்கும் மூலைகளைக் கண்டுபிடித்தனர்: வாத்துக் குஞ்சுகள் மிதக்கும் ஒரு சிறிய குளம், ஒரு புதருக்குப் பின்னால் ஒளிந்திருந்து எட்டிப்பார்க்கும் ஒரு செதுக்கப்பட்ட மர நரி சிற்பம், மற்றும் அவர்களுக்காகவே செய்யப்பட்டதாகத் தோன்றும் ஒரு வில்லோ மரத்தின் [அலரி மரம் or காற்றாடி வகை மரம் / willow tree] கீழ் மறைந்திருக்கும் ஒரு ஊஞ்சல் என பலவற்றை மூலை முடுக்குகளில் கண்டு பிடித்தனர். எப்போதும் ஆர்வமுள்ள நிலன், ஒரு மலர் படுக்கையின் அருகே ஏதோ மின்னுவதைக் கவனித்தான். மண்டியிட்டு [குனிந்து] அவன் பார்த்த பொழுது, வண்ணமயமான கூழாங்கற்களால் [colorful pebbles] அமைக்கப்பட்ட சிறிய ரகசிய பாதை ஒன்றைக் கண்டான். "புதையல் வேட்டை!" என்று அவன் கூச்சலிட்டான். தாத்தா சிரித்துக்கொண்டே ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு சிறிய கூடையைக் கொடுத்தார். அவர்கள் கூழாங்கற்களைச் சேகரிக்கத் தொடங்கினர். அப்பொழுது அங்கே, அந்த ரகசிய பாதையில், ஒவ்வொரு முறையும் ஒரு பட்டாம்பூச்சி கலைந்து பறந்து செல்லும்போதும் அல்லது ஒரு பறவை கலைந்து குரல் கொடுக்கும் போதும் அவர்கள் விழுந்து விழுந்து சிரித்து மகிழ்ந்தார்கள். சிறிது நேரத்தில் அவர்கள் பசுமையான புல்வெளியில் அமர்ந்தனர். தாத்தா ஒரு சாப்பாட்டு கூடையை திறந்தார். அதில் சாண்ட்விச் [sandwich], பழங்கள், பிஸ்கட்டுகள் [Biscuits] என பல சிற்றுண்டிகள் இருந்தன. தாத்தா சிரித்தபடியே, “இது என் சிறிய சாகச வீரர்களுக்கான காலை விருந்து,” என்றார். நிலன் ஒரு ஸ்ட்ராபெர்ரி [strawberry] எடுத்து, அதன் இனிப்பை ருசித்தான். திரேன் "புதையல் வேட்டையின்" [“Treasure Hunt”] வெற்றியை பெருமையுடன் எல்லோருக்கும் விவரிக்க, குட்டி ஆரின் தாத்தாவின் மடியில் கைத்தட்டி கைத்தட்டி விளையாடிக் கொண்டு இருந்தான். ஆனால் அவர்களுக்கு இன்னும் ஒரு அதிசயம் [ஆச்சரியம்] காத்திருந்தது. தாத்தா குழந்தைகளை ஒரு மறைக்கப்பட்ட மூலையில், ஒரு சிறிய மர மேடைக்கு அழைத்துச் சென்றார். அங்கே ஒரு திரைக்குப் பின்னால் இருந்து, ஒரு பொம்மலாட்ட நிகழ்ச்சி தொடங்கியது - பேசும் விலங்குகள் மற்றும் மாயாஜால சாகசங்கள் பல அங்கு நிறைந்து இருந்தது. ஒவ்வொரு காட்சியும் அவற்றின் பெயர்களைச் சேர்த்து கவனமாக விபரமாக கொடுத்தது. ஒரு பொம்மை டிராகன் [a puppet dragon], அங்கே நிலனை வணங்கிய பொழுது, நிலன் மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டான். கூச்ச சுபாவமுள்ள குட்டி ஆரின் கூட தனது தாத்தாவின் கைகளிலிருந்து சிரித்தான். நேரம் செல்லச் செல்ல, கதிரவன் மேலே மேலே ஏறினான். குழந்தைகள் கதிரவனின் வெப்பத்தை, ஒரு வெதுவெதுப்பான அரவணைப்பை, உணர்ந்து, அதில் மகிழ்ச்சியிலும் அன்பிலும் மூழ்கினர் — உண்மையில் சூரிய ஒளியிலிருந்து மட்டுமல்ல, கண்டுபிடிப்பின் சிலிர்ப்பாலும், குடும்பத்தின் ஆறுதலாலும், அவர்கள் என்றென்றும் நினைவில் வைத்திருக்கும் காலையில் அனுபவித்த மாயாஜாலத்தாலும் மூழ்கி இருந்தனர். தாத்தா, சிரித்துக் கொண்டே, இவை தான் வாழ்க்கையின் உண்மையான செல்வம் என எண்ணினார். சாகச தோப்பை விட்டு, வீட்டிற்குத் திரும்பும்போது, குழந்தைகள் சோர்வாக இருந்தனர், ஆனால் மகிழ்ச்சியாக இருந்தனர், அவர்களின் மனம் அரண்மனைகள், ரகசிய பாதைகள் மற்றும் மறைக்கப்பட்ட பொக்கிஷங்களால் நிறைந்திருந்தது. "நன்றி தாத்தா," நிலன் மெதுவாக தனது இருக்கையில் சாய்ந்து அரைத்தூக்கத்தில் கூறினான். “இது என் வாழ்நாள் சிறந்த அதிசயம்." தாத்தா என்றான், சோம்பல் முறித்தபடி. தாத்தா மனம் நிறைந்த புன்னகையுடன் கூறினார். "சாகசம் இப்போதுதான் தொடங்கியுள்ளது, குழந்தைகளே. அது தொடரவேண்டும் என்றால், அடுத்த வாரம் தொடங்கும், உங்கள் கோடை விடுமுறை வரை காத்திருங்கள்." என்றார். இரகசிய தோட்டத்தையும் சிரிப்பின் எதிரொலிகளையும் ஒருபுறம் தள்ளி விட்டுவிட்டு, அவர்களின் அற்புதமான பயணத்தின் அடுத்த அத்தியாயத்திற்குத் தயாராக கார் வீடு நோக்கி மெதுவாகச் சென்றது. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பாகம்: 02 தொடரும் துளி/DROP: 1978 [கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / பகுதி 1 https://www.facebook.com/groups/978753388866632/posts/33171634115818475/? கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / பகுதி 2 🏡பாகம் 02 – வெல்வின் கார்டன் சிட்டியில் மீண்டும் ஒரு ஆச்சரியம் அது ஒரு ஒளிமிகுந்த, தென்றல் காற்று வீசிய சனிக்கிழமை காலை. மேகங்கள் கூட மகிழ்ச்சியாகத் தெரிந்த ஒரு காலைப் பொழுதாக வெல்வின் கார்டன் சிட்டி [Welwyn Garden City] இருந்தது. மார்பு சிவந்த சிறுபறவைகளான ராபின் [Robins] தோட்ட வேலியில் இருந்து பாட, தபால்காரர் விசில் அடிக்க, வீட்டிற்குள், மூன்று சிறுவர்கள் ஏற்கனவே ஹெர்ட்ஃபோர்ட்ஷையரில் [இங்கிலாந்தின் கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு மாவட்டமாகும் / Hertfordshire] உள்ள அனைத்து பறவைகளையும் விட அதிக சத்தம் எழுப்பிக் கொண்டு, அவர்களது கோடை விடுமுறையின் முதல் நாளைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். மூத்த பேரனும் மற்றும் பத்துவயது நிரம்பிய திரேன் ஒரு அறிவியல் பணியில் [scientific mission] தன்பாட்டில் விளையாடிக்கொண்டு இருந்தான். ஆர்சனல் கால்பந்து கிளப்பின் [Arsenal F.C] அதிதீவீர ஆதரவாளனான அவன், கையில் ஒரு டார்ச்சுடன் [torch] சோபாவின் கீழ் ஊர்ந்து சென்று, கிசுகிசுத்தான். “காணாமல் போன கால்பந்து இந்தக் காட்டில் எங்காவது ஒளிந்து கொண்டிருக்க வேண்டும்!” என்று காட்டில் தேடுவது போல பாசாங்கு செய்தான். ஐந்து வயது நிலன், ஒரு துணிச்சலான விண்வெளி வீரனாகத் தன்னை தயார் படுத்திக் கொண்டு, தலைக்கவசத்திற்குப் பதிலாக ஒரு பாத்திரத்தை தலையில் கவிழ்த்து போட்டுக் கொண்டு, ஒரு துணி துவைக்கும் கூடையில் அமர்ந்து, அதை விண்வெளி நோக்கி போகும் ராக்கெட் கப்பலாக கற்பனை செய்து, பெருமையாகக் சத்தம் போட்டு, “மூன்று… இரண்டு… ஒன்று… புறப்படு நிலா நோக்கி!” என்று கூவினான். இதற்கிடையில், ஒரு வயதான குட்டி ஆரின், தாத்தாவின் பழைய கம்பள சாக்ஸை [old woolly sock] கண்டு பிடித்து, அதைக் கடித்து மகிழ்ந்து கொண்டிருந்தான். இந்த மகிழ்ச்சிகரமான பேரப்பிள்ளைகளின் குறும்புகளுக்கு நடுவில், தாத்தா 'கந்தையா தில்லை' அமைதியாக தனது காலை தேநீரைப் பருகிக் கொண்டிருந்தார். மகிழ்ச்சியும் பெருமையும் கலந்த புன்னகையுடன் பேரப்பிள்ளைகளின் விளையாட்டை பார்த்துக் கொண்டிருந்த போது, அவரது கண்ணாடிகள் கூட மூக்கின் நுனி வரை நழுவி சென்று எட்டிப்பார்த்தது. வாழ்க்கை அவருக்கு பல சாகசங்களைக் கொடுத்திருந்தாலும், இந்த மூன்று சிறு புயல்களே அவருக்கு மிகப் பிரியமானவையாக இன்று இருந்தது “சரி என் சிறு சூறாவளிகளே,” என்று தாத்தா தேநீர் அருந்தியதும் மெல்லக் கூறி, “அனைவரும் தயாராகுங்கள் — நாம் இனி உடுப்புகளை அடுக்கி, பயணப்பெட்டிகளை [suitcases] தயார் செய்ய வேண்டும்" என்றார் மூன்று பேரப்பிள்ளைகளின் தலைகளும் ஒரே நேரத்தில் ஆச்சரியத்தில் மேலெழுந்தன. “உடுப்பு அடுக்குதல்?” — திரேன் ஆவலாக, தன் கண்களை அகல விரித்துக்கொண்டு தாத்தாவிடம் கேட்டான். “வீடு மாறப் போகிறோமா?” — நிலன் தன் கூடையில் இருந்து குதித்து எழும்பினான். “பா-பா!” [“Baa-ba!”] என்று ஆரின் கத்தினான் — தன்னுடைய பால் எங்கே என்று? தாத்தா சிரித்தார். “இல்லை இல்லை, நாம் வீடு மாறவில்லை — பயணம் போகப் போகிறோம்! நான் ஒரு அற்புதமான இடத்துக்கு ஆச்சரியமான சாகசத்தைத் திட்டமிட்டுள்ளேன், உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் [ஆச்சரியம் / surprise] ஆக" என்றார். வெப்பமாய் வெளிச்சமாய் இருக்கும் ஒரு நாட்டுக்கு, அங்கே நீங்கள் கடித்து சுவைத்து உண்ண நிறைய கூக்கீஸ்களும் ["பிஸ்கட்" அல்லது "இனிப்பு அப்பம்" / cookies] இருக்கும்!” “கூக்கீஸா?” என்று நிலனின் கண்கள் ஒளிர்ந்தன. “அது பாட்டியின் சமையலறையா?” என்று கேட்டான். “அதையும் விட சிறந்தது,” என்று தாத்தா கண் சிமிட்டினார். “மணல் தங்கமாக ஒளிவிடும் இடம், கோபுரங்கள் மேகங்களைத் தொடும் இடம், கடலும் நகரத்தைக் கட்டி அணைக்கும் இடம்!” என்று கூறிவிட்டு" சொல்லுங்கள் பார்ப்பம் என்றார். திரேன் முதலில் கத்தினான், “துபாய்?”. தாத்தா பெருமையாகத் தலைஅசைத்தார். “ஆம், துபாய் தான் — நம்முடைய அடுத்த குடும்ப சாகசம்!” என்றார். ஒரு கணம் திகைப்பூட்டும் அமைதி நிலவியது, அதைத் தொடர்ந்து அடுத்த கணமே வீடே குலுங்கும் அளவுக்கு சத்தம் கேட்டது! அந்த அலறலில், வேலியில் அமர்ந்து இருந்த ராபின் பறவைகள் பயம் கொண்டு அங்கிருந்து பறந்து சென்றன. திரேன் உலக வரைபடத்தை எடுக்க ஓடினான். நிலன் துள்ளிக் குதித்து, “துபாய்! துபாய்! துபாய்!” என்று ஏதேதோ சொல்லி சொல்லி கோஷமிட்டான். ஆரினும் தன் சிறு கைகளால்த் தட்டியபடி தாத்தாவின் முழங்காலில் முத்தம் கொடுத்து மகிழ்ந்தான். “இப்போ எல்லோரும் உங்கள் உங்கள் பயணப் பெட்டியை அடுக்க ஆரம்பியுங்கள்,” என்று தாத்தா மகிழ்ச்சியுடன் கட்டளை இட்டார். “ திரேன், உன் எக்ஸ்ப்ளோரர் தொப்பியை [ஆய்வுப்பயணத் தொப்பி / explorer hat] எடுத்து வா. நிலன், உன் பாத்திரத் தொப்பியை வீட்டிலேயே விட்டுவிட்டு வா — இல்லை யென்றால் விமான நிலையத்திலே, உன்னைச் சமையல் காரன் [குக் / chef] என நினைப்பார்கள்! ஆரின், நீ உன் புன்னகையை மறக்காமல் எடுத்துக்கொண்டு வா, அழாமல் மகிழ்வாக இருக்க.” என்று தாத்தா எல்லோருக்கும் அன்பான வேண்டுகோள் வழங்கினார். நேரம் செல்லச் செல்ல சாளரத்தின் [யன்னல்] திரைச்சீலைகள் வழியாக சூரிய ஒளி வீட்டுக்குள் பரவின. விமான நிலையம் போகும் நேரம் நெருங்குகிறது என்பதை இது நினைவூட்டியது. வெல்வின் கார்டன் சிட்டியில் உள்ள அவர்களின் வீடு இதனால், உற்சாகத்தால் சலசலத்தது. விமான நிலையத்திற்குப் புறப்படத் தயாராகும் இந்த வேளையில், சூட்கேஸ்கள் (சக்கரங்களுடன்) இழுக்கப்பட அல்லது தள்ளப்பட தொடங்கின. சாக்ஸ் [காலுறை / socks] மீண்டும் காணாமல் போயின, தாத்தா தனக்குள் மெதுவாகச் சிரித்தார். "இன்னொரு சாகசம் தொடங்குகிறது - இந்த முறை, என் மூன்று சிறிய ஹீரோக்களுடன் [கதாநாயகர்களுடன்]." என்று தாத்தா பெருமையுடன் அறிவித்தார் 🌞 நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பாகம்: 03 தொடரும் துளி/DROP: 1984 [கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / பகுதி 2] https://www.facebook.com/groups/978753388866632/posts/33216229664692253/?- இங்கிலாந்து முழுவதும் கடும் பனி; 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மின்தடை
இங்கிலாந்து முழுவதும் கடும் பனி ; 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மின்தடை 10 Jan, 2026 | 10:17 AM இங்கிலாந்து உட்பட மேலும் பல நாடுகளில் பனி மழை மற்றும் கடும் குளிர் காரணமாக மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், பத்தாயிரக்கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இங்கிலாந்து முழுவதும் கனமான பனி, மற்றும் பலத்த காற்று வீசியுள்ள நிலையில், மேலும் கடுமையான வானிலை எதிர்பார்க்கப்படுவதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஸ்கொட்லாந்து மற்றும் வட இங்கிலாந்திலுள்ள பகுதிக்கு பனி மற்றும் கடும் குளிர் காரணமாக மஞ்சள் எச்சரிக்கை ஞாயிற்றுக்கிழமை (11) வரை தொடரும் என அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு இங்கிலாந்தில் மட்டும் 34,000க்கும் மேற்பட்ட இடங்களில் இன்னும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மிட்லாண்ட்ஸ் மற்றும் வேல்ஸிலும் ஆயிரக்கணக்கான இடங்களில் மின்தடை தொடர்கிறது. மேற்கு மிட்லாண்ட்ஸில் சுமார் 2,000 இடங்களிலும், கிழக்கு மிட்லாண்ட்ஸில் 1,000-க்கும் மேற்பட்ட இடங்களிலும், வேல்ஸில் 130 இடங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை (09) காலை ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து புறப்படும் பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டன. பெரும்பாலானவை குறுகிய தூரப் பயண விமானங்களாகும். தேசிய ரயில்வே நிறுவனம், ஞாயிற்றுக்கிழமை (11) வரை ரயில் சேவைகள் பாதிக்கப்படலாம் என எச்சரித்து, பயணிகள் முன்கூட்டியே பயண விவரங்களை சரிபார்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. ஸ்காட்லாந்து மற்றும் வடகிழக்கு இங்கிலாந்தின் மலைப்பகுதிகளில் பனியுடன் கூடிய மழை தொடரும் என அந்நாட்டு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஞாயிறு பிற்பகலில் தென் மேற்கு பகுதிகளில் வெப்பநிலை 12°C வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. திங்கட்கிழமைக்குள் மிதமான வானிலை நாடு முழுவதும் பரவும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://www.virakesari.lk/article/235653 - இன்று முதல் கல்வி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: கையொப்பம் திரட்டல்
Important Information
By using this site, you agree to our Terms of Use.