24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
கவிஞர் வைரமுத்து ஞானபீட விருது - சுயமோகனின் வயிற்றெரிச்சல் 2025ம் ஆண்டின் அறுபதாவது ஞான பீட விருது கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அகிலன் மற்றும் ஜெயகாந்தனுக்குப் பிறகு வைரமுத்து மூன்றாவது நபராக இந்த விருதினைப் பெற்றிருக்கிறார். இது தமிழுக்கு கிடைத்த பெருமை அல்ல. தமிழால் விருது வழங்கிய அமைப்பும், கவிஞர் வைரமுத்துவும் பெருமையடைந்த தருணம். பதினோரு இலட்சம் பணமும், ஒரு சரஸ்வதி வெங்கலச் சிலையும் இந்த விருதுடன் வழங்கப்படுகிறது. வாழ்த்துகள் கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு. இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதும் தமிழால் பிழைக்க வந்த ஜெயமோகன் வயிற்றெரிச்சலை கொட்டி இருக்கிறார். அவரைச் சார்ந்த ஒரு கூட்டமும், 'அய்யய்யோ என்னைக் கையைப்பிடித்து இழுத்து விட்டான்' எனக் கதறும் ஒரு சில நபர்களும் ஓசியில் கிடைக்கும் டிவிட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் வாந்தி எடுத்து வைத்திருக்கிறார்கள். தன் இருப்பை வெளிக்காட்டிக் கொண்டார்கள். அவர்களுக்கு இதுவும் ஒரு பிழைப்புதானே? ஜெயமோகனின் இணையதளத்தினைப் படிப்பவர்களுக்கு மெண்டல் டிஸ் ஆர்டர் நோய் ஏற்படலாம். அந்தளவுக்கு அவரின் படைப்புகள் மோசமாக இருக்கும். ஜெயமோகனின் எழுத்து அரசியலை தமிழ்நாட்டின் மிகச் சிறந்த எழுத்தாளரான ஆர்.பி.ராஜநாயஹம் அவர்கள் 16 வருடங்களுக்கு முன்பே வெளிப்படுத்தினார். அந்தளவுக்கு மிக மோசமான சுயமோகத்தனம் அவரிடம் இருக்கிறது. தமிழின் ஒரே எழுத்தாளர் தான் மட்டுமே, எல்லா விருதுகளுக்கும் அவரே தகுதியானவர் என்பது போன்ற இன்னும் பல மோகங்கள் அவரிடமுண்டு. இவரைப் பற்றி பதினேழு வருடங்களுக்கு முன்பே அறிந்திருக்கிறேன். கீழே இருக்கும் கட்டுரையைப் படித்துப் பாருங்கள். ஊட்டியில் தளையசிங்கம் சம்பவத்தில் வெளியிடப்பட்ட ஊட்டியில் தளையசிங்கம் புத்தகத்தை வரிக்கு வரி டைப் செய்து ஒருவரின் இணையதளத்தில் அப்டேட் செய்திருக்கிறேன். ஊட்டியில் நடந்த சுயமோகனின் அற்பத்தனத்தை பதினைந்து வருடங்களுக்கு ராஜ நாயஹம் விவரமாக எழுதி சுயமோகனின் தன்மையை உலகிற்கு காட்டி விட்டார். கீழே இருக்கும் இணைப்பில் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். மு.தளையசிங்கமும் தொழுகையும் - https://rprajanayahem.blogspot.com/2019/03/blog-post.html ஜெயமோகனின் இணையதளத்தில் அவ்வளவும் தற்பெருமை. வாசகர்களின் கடிதங்கள். கடிதங்களுக்குப் பதில்கள் என சொறி சிரங்குகள். அதுமட்டுமல்ல மிகச் சிறந்த பிசினஸ் கான்சப்ட் டிசைன் செய்து வைத்திருக்கிறார். தன் வாழ்க்கையின் செழிப்பான தன்மைக்கு அறியா வாசகர்களை வெகு நுட்பமாகப் பயன்படுத்தும் அதிபுத்திசாலித்தனம் அவரிடமிருக்கிறது. ஒவ்வொரு நிகழ்விலும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் அதிமேதாவித்தனம். வாசகன் என்பவன் ஒரு அப்பாவி என அவருக்குத் தெரியும். அவனிடமிருந்து எப்படி என்னென்ன பெறலாம் என்பதும் அவருக்குத் தெரியும். புதிது புதிதாய் வரும் வாசகர்கள் இவரின் பலியாடுகள். ஒரு காலத்தில் மாலைமதி, ராணிமுத்து, சுபா, பட்டுக்கோட்டைப் பிரபாகர், ராஜேஷ்குமார், சாண்டில்யன், எண்டமூரி வீரேந்திர நாத், அகிலன், நா.பார்த்தசாரதி, ஞானி, புதுமைப்பித்தன் எனத் தொடர்ந்து ஓஷோ, ஜென், சூஃபியிசம், ஜே.கிருஷ்ணமூர்த்தி என படிப்பதில் ரசனை மாற்றங்கள் எனக்குள் ஏற்பட்டது. இப்படியான நிலையில் நான் படித்ததில் யார் சிறந்த எழுத்தாளர், எது சிறந்த படைப்பு என எப்படி முடிவு செய்ய இயலும்? ஒவ்வொரு வயதுக்கும் ஒவ்வொரு படைப்புகள் சிறந்ததாக இருக்கும். இதே போன்ற நிலை எல்லா வாசகர்களுக்கும் ஏற்பட்டிருக்கும். எடுத்த எடுப்பில் புறநானுறெல்லாம் படிக்க முடியாது அல்லவா? ஒரு காலத்தில் மு.மேத்தா கவிதைப் புத்தகங்கள் கல்லூரி மாணவர்களின் திருக்குறள். எம்.எஸ்.உதயமூர்த்தியின் புத்தகங்களைப் படித்தவர்கள் பல லட்சம் மாணவர்கள். இப்படியான ஒரு சூழலில் ஜெயமோகன் தன்னை யார் என வெளிப்படுத்திய தருணம் தான் தமிழுக்கு அவமானம் (https://www.jeyamohan.in/230180/) என்ற அவரின் பதிவு. இவர் தமிழரல்ல என்கிறார்கள். தமிழால் பிழைக்க வந்தவர் என்கிறார்கள். ஒரு சிலர் இவரைப் பாதி தமிழர் என்கிறார்கள். அது என்ன கன்றாவியோ பாதி, கால், அரை என்ற விளக்கம். தமிழ் அவருக்கு வாழ்க்கை கொடுத்திருக்கிறது பல நபர்களுக்கு கொடுத்ததைப் போல. இவரொன்றும் தமிழின் பிரதிநிதியல்ல. ஆகவே தமிழுக்கு அவமானமென்று எழுதி அத்தாரிட்டியை எடுத்துக் கொள்ள முயலும் கள்ளத்தனத்தின் முயற்சியே வைரமுத்து அவர்களை இவர் விமர்சித்தது. இவர் தனது ஆகச் சிறந்த படைப்பு எனக் கருதும் வெண்முரசு ஒரு குப்பை என்பேன். தத்துவங்களும், மனிதக்கடவுள்களும் மனிதனின் வாழ்வியலைச் செம்மைப்படுத்த வேண்டும். அது சக மனிதனின் இருப்புக்கும், வாழ்க்கைக்கும் கேடு விளைவிக்குமானால், அந்தப் படைப்பு குப்பையாகத்தான் இருக்க முடியும். அவர் எழுதிய ஏழாம் உலகம் படித்துவிட்டு, அவருக்கும் ஒரு மெயில் அனுப்பினேன். அதை அவர் இணையதளத்தில் வெளியிட்டார் என நினைவு. ஏன் இவரை விமர்சிக்க வேண்டும் என நினைப்பீர்கள். அவருக்கு கவிஞர் வைரமுத்துவை விமர்சிக்க காரணம் இருப்பது போல எனக்கும் ஒரு காரணம் இருக்கிறது. ஒவ்வொருவரின் வாழ்க்கைச் சூழலில், அவரவரின் திறமைக்கு ஏற்ப எழுதுவார்கள். புழுக்களும், பூச்சிகளும், வண்டுகளும், பறவைகளும், விலங்குகளும், மனிதர்களும் இயற்கையின் படைப்புதான். இதில் மனிதன் சிறந்தவன் என எப்படிச் சொல்ல முடியும்? இத்தனை உயிர்களும் இருந்தால் தான் மனிதன் வாழ முடியும் அல்லவா? மனிதனை விட மிகவும் ஆபத்தான மிருகம் வேறு எதுவும் இருக்க முடியாது. சரி, ஜெயமோகனை விமர்சிக்க என்னிடம் இருக்கும் காரணம் என்ன? துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை. விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிது. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு தமிழர்களின் அடையாளம், தமிழின் ஆகச் சிறந்த நூலான திருக்குறளில் மழை பற்றிய குறள்களைப் படித்தீர்களா? இக்குறள்களின் விளக்கம் படித்தவுடன் புரிந்திருக்காது. ஒரு சிலருக்குப் புரிந்து இருக்கும். கொள்ள கொஞ்சம் தமிழ் இலக்கண அறிவு தேவை. படிப்பறிவும் தேவை. கரை புரண்டு ஓடுதம்மா - அந்தக் காவிரியில் தண்ணி யெங்கும் நெளி நெளியா ஓடுதம்மா - அந்த நீல வண்ணத் தண்ணி யெல்லாம் சுழி சுழியா ஓடுதம்மா - அந்த சுத்தமான ஆத்துத் தண்ணி வெயிலடிக்கும் நேரமெல்லாம் - தண்ணி வெள்ளி போல மின்னுதடி குடிதண்ணியும் குளி தண்ணியும் - கண்மணியே குடம் குடமா எடுப்பாங்களாம் தண்ணிக்கொரு தீட்டுமில்லை - கண்ணே யதைத் தடுக்க ஒரு நாதியில்லை பாப்பானுக்கு பச்சைத்தண்ணி - கண்மணியே பறையனுக்கும் பச்சைத்தண்ணி பட்டிக்காட்டில் பல சாதியாம் - கண்மணியே பறையன் முதல் பாப்பான் வரை தோட்டி முதல் தொண்டமான் வரை - கண்மணியே தொழுந்தண்ணி பச்சைத்தண்ணி சண்டையிழுப்பதும் - கண்மணியே சாதிக்குள்ளே பச்சைத்தண்ணி தெய்வம் போல இருக்குதண்ணி - கண்மணியே திசையோடும் பச்சைத்தண்ணி இந்தப் பாடலைப் படித்து விட்டீர்களா? நா.வானமாமலை பற்றி உங்களுக்குத் தெரியும் தானே? அவர் தொகுத்த தமிழர் நாட்டுப்பாடல்கள் தொகுப்பு 1 என்ற மின்நூலில், 60வது பக்கத்தில் உள்ளது. இந்த நூல் மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்ட இணையப்பக்கத்தில் இருக்கிறது. இந்தப் பாடல்களைப் படிக்க தொல்காப்பிய இலக்கண அறிவு தேவையில்லை. படிப்பறிவு இல்லாதவர்களிடம் படித்துக் காட்டினால், அவர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியும். திருக்குறளையும், நாட்டுப்புற பாடலையும் படித்ததில் உங்கள் மனதில் ஒட்டிக் கொண்டது எந்தப் பாடல்? பதில் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே. ஜெயமோகன் அவர்களே! கவிஞர் வைரமுத்துவுக்கு ஞான பீட விருது ஏன் வழங்கப்பட்டது என உங்களுக்குப் புரிந்திருக்கும். ஆனாலும் அதை மறைத்து வன்மத்தைக் கொட்டி, அப்பாவி வாசகர்களை ஏமாற்றாதீர்கள். நீங்கள் விடுத்த வார்த்தைகளே உங்களை அழிக்க வரும் ஆயுதமாகி விடும் என்பதைத் தாங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன். மொழி ஆராய்ச்சியாளர்கள் ஓசைகளுக்கு தான் எழுத்துகள் உருவாக்கப்பட்டிருக்கும் என்றும், அதைத் தொடர்ந்தே இலக்கணம் உருவாக்கப்பட்டிருக்கும் என்கிறார்கள். பேச்சு மொழியின் ஓசை வடிவத்தின் உருவான படைப்பு தான் ஆதிமூலம் அல்லவா? ஆகவே பேச்சு மொழிப் படைப்புகள் தான் மிகச் சிறந்ததாக இருக்க இயலும். அதிலும் இவ்வகைப் பாடல்கள் பல ஜென்மங்களாய் தொடர்ந்து வரும் மனிதர்களுக்கு ஓசை வடிவில் கடத்தப்படுபவை அல்லவா? எழுத்துகள் உருவாகி, இலக்கணம் உருவாகி அவைகள் இப்போது எழுத்து வடிவில் படிக்கக் கிடைக்கிறது. கவிஞர் வைரமுத்து இந்த வகை எழுத்துக்களை பாமரனுக்கும், படித்தவனுக்கும் புரிந்த பேச்சு மொழியில் எழுதி இருக்கிறார். கவிஞர் வைரமுத்துவை விமர்சிக்க ஜெயமோகனுக்கு எந்த அருகதையும் இல்லை. எது சிறந்த படைப்பு என நாங்கள் முடிவு செய்து கொள்கிறோம். அதைப் பற்றிய கவலை உங்களுக்கு தேவையில்லை. தமிழில் எழுதி பிழைத்துக் கொள்ளுங்கள். தமிழ் தான் பலருக்கும் வாழ்க்கை கொடுக்கும். தமிழுக்கு எவரும் எதுவும் செய்யமுடியாது. அது இயற்கையானது. அது கடவுளானது. அது தமிழர்களின் உயிருக்குள் இருக்கும் ஆத்மா. உங்களைப் போன்றோர்கள் தமிழுக்கு அத்தாரிட்டி கேட்க முடியாது. அது உங்களால் முடியாது. தமிழ் தமிழரின் சொத்து. இனி ரசிக்க ஒரு பாடல் ஆண் : கல்லருகாம், புல்லருகாம் கடலருகாம் பூந்தோட்டம் புல்லறுக்கப் போற பிள்ளை - நீ பூமுடிஞ்சாலாகாதோ? பெண் : நத்தத்து மேட்டு வழி நான் போறேன் ஒத்த வழி பிச்சிச்சரம் போல - நீ பின்னே வந்தாலாகாதோ? ஆண் : கண்டாங்கிச் சீலை கட்டி கரை வழியே போற புள்ள - உன் கண்டாங்கிச் சீலையிலே - நான் வண்டாய்ச் சுழலுதனே குளத்திலொரு அல்லியுண்டு கூந்தலொரு பாகமுண்டு இடைச் சிறுத்த அல்லிக்கு இடையில் ஒரு மச்ச முண்டு வானமாமலையின் தமிழர் நாட்டுப்பாடல்கள் 1 - புத்தகத்தில் பக்கம் 163-164. பாட்டைப் படித்ததும் சும்மா ஜிவ்வு ஜிவ்வுன்னு தெறிக்குதல்லவா? கவிஞர் வைரமுத்துவின் பாணி இது. உளறல்களை இலக்கியமென்று கருதும் தற்குறிகளுக்கு வயிற்றெரிச்சல் வரத்தானே செய்யும்? வாழ்த்துகள் கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு. ஜெயமோகன் அவர்களே நீங்களும் எழுதுங்கள், விருது பெறுங்கள். வாழ்த்துகிறோம். வளமுடன் வாழ்க. https://thangavelmanickadevar.blogspot.com/2026/03/blog-post.html
-
வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் இல்லையெனில், திரவ இயற்கை எரிவாயுவுக்கான 'சாதகமான' அணுகலை இழக்க நேரிடும் என ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது ஒரு முக்கிய செய்தியாக இருக்கும் எனும் பட்சத்தில், இதனை கூகிள் மொழிமாற்றி மூலம் பைனான்சியல் ரைம்ஸில் மூலத்திலிருந்து இணைக்கப்பட்டுள்ளது. அடுத்துவரும் வாரம் சில முக்கிய சம்பவங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் நிகழலாம். சில அடிப்படையான ஐரோப்பிய ஒன்றிய கொள்கைகளில் ஏற்பட போகும் மாற்றங்களை வருகின்ற வாரம் கொண்டுள்ளதால் ஒரு முக்கிய டொமினோ நிகழ்வு போல கொள்கை மாற்றத்திற்கு இந்த நிகழ்வு வழி வகுக்கலாம் என கருதுகிறேன்.
-
உலகின் மிகச்சிறந்த போர் பிரிவு வளைகுடாவில்! அதிரடி அறிவிப்பை வெளியிட்டது வெள்ளை மாளிகை!
உலகின் மிகச்சிறந்த போர் பிரிவு வளைகுடாவில்! அதிரடி அறிவிப்பை வெளியிட்டது வெள்ளை மாளிகை! மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், தரைப்படை வீரர்களை அங்கு நிலைநிறுத்துவதை அமெரிக்காவின் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து ஊடகத்திற்கு அமெரிக்க செய்தித் தொடர்பாளர் அளித்துள்ள விளக்கத்தில், அமெரிக்காவின் புகழ்பெற்ற 82-வது வான்வழிப் பிரிவின் (82nd Airborne Division) தலைமையகக் குழுக்கள் மற்றும் 1-வது பிரிகேட் காம்பாட் டீம் (1st BCT) ஆகியவை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பப்படுவதாகத் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக, எத்தனை வீரர்கள் அல்லது எந்த இடத்திற்கு அவர்கள் செல்கிறார்கள் என்ற விவரங்களை வெளியிட பென்டகன் மறுத்துள்ளது. அதிதீவிர படை வட கரோலினாவைத் தளமாகக் கொண்ட இந்த 82ஆவது வான்வழிப் பிரிவு, உலகின் மிகச்சிறந்த போர் அலகுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு, உலகின் எந்தப் பகுதிக்கும் வெறும் 18 மணிநேரத்திற்குள் சென்று தாக்குதல் நடத்தும் தயார் நிலையில் இருப்பார்கள். இலக்கு வைக்கப்பட்ட பகுதிகளுக்குள் பாராசூட் அல்லது ஹெலிகாப்டர் மூலம் ஊடுருவி, அந்த இடத்தைக் கைப்பற்றுவதில் இவர்கள் வல்லவர்கள். குறிப்பாக, ஈரானுடனான மோதல் வலுக்கும் பட்சத்தில், ஈரானின் முக்கியப் பகுதியான கார்க் தீவு (Kharg Island) போன்ற இடங்களைக் கைப்பற்ற இந்த வீரர்களை அமெரிக்கா பயன்படுத்தக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது. கார்க் தீவு (Kharg Island) நியூயார்க்கைத் தளமாகக் கொண்ட 10ஆவது மலைப் பிரிவின் (10th Mountain Division) கீழ் வரும் 1st BCT படையினர், நீண்ட காலப் போரை எதிர்கொள்ளும் வகையில் முழுமையான ஆயுத தளவாடங்களுடன் அனுப்பப்படுகின்றனர். வழக்கமான வான்வழிப் படைகள் குறுகிய காலத் தாக்குதலுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் நிலையில், இந்த 1st BCT பிரிவினர் "Full Spectrum" எனப்படும் அனைத்து வகையான தீவிர போர்களையும் எதிர்கொள்ளும் திறன் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் இந்த அதிரடி நகர்வு, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. https://tamilwin.com/article/us-confirms-paratroops-on-way-to-middle-east-1774452003
-
வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் இல்லையெனில், திரவ இயற்கை எரிவாயுவுக்கான 'சாதகமான' அணுகலை இழக்க நேரிடும் என ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
https://www.ft.com/content/6bf153e4-11af-44d5-9d1c-48b5c7ad26ef?syn-25a6b1a6=1 ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்காவுடனான தனது வர்த்தக ஒப்பந்தத்தை எந்தத் திருத்தங்களும் இன்றி செயல்படுத்த வேண்டும், இல்லையெனில் அமெரிக்க ஏற்றுமதியாளர்களிடமிருந்து திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஏற்றுமதிக்கான 'சாதகமான' அணுகலை இழக்க நேரிடும் என்று அந்த அமைப்புக்கான டொனால்ட் டிரம்பின் தூதர் எச்சரித்துள்ளார். அமெரிக்க அதிபருக்கும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனுக்கும் இடையே கடந்த ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரிப்பது, கிரீன்லாந்தை ஆக்கிரமிப்பதாக டிரம்ப் விடுத்த அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகளால் தாமதமாகியுள்ளது. திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG), எண்ணெய் மற்றும் சிவில் அணுசக்தி தொழில்நுட்பங்கள் உட்பட, 2028-ஆம் ஆண்டுக்குள் 750 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்க எரிசக்தியை ஐரோப்பிய ஒன்றியம் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை உள்ளடக்கிய இந்த உடன்படிக்கை மீது, ஐரோப்பிய நாடாளுமன்றம் வியாழக்கிழமை வாக்களிக்க உள்ளது . ஸ்காட்லாந்தில் உள்ள டிரம்பின் டர்ன்பெர்ரி கோல்ஃப் ரிசார்ட்டில் கையெழுத்திடப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தின் மற்ற விதிமுறைகளில் ஏதேனும் ஒன்றை அந்த அமைப்பு மாற்ற முயன்றால், அதன் எரிசக்தி அம்சம் ஆபத்தில் சிக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியத்திற்கான அமெரிக்கத் தூதர் ஆண்ட்ரூ புஸ்டர் ஃபைனான்சியல் டைம்ஸ் பத்திரிகையிடம் தெரிவித்தார். "அவர்கள் இந்த ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லவில்லை என்றால், எரிசக்தி விஷயத்தில் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை," என்று புஸ்டர் கூறினார். "டர்ன்பெர்ரி ஒப்பந்தம் செயல்படுத்தப்படாவிட்டால், நாம் மீண்டும் முதல் நிலைக்கே வந்துவிடுவோம். நாம் எங்கே செல்வோம் என்று எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. அமெரிக்கா தொடர்ந்து ஐரோப்பாவுடன் வர்த்தகம் செய்ய விரும்பும் என்று நான் நினைக்கிறேன், ஆனால் நிபந்தனைகள் மட்டும் அவ்வளவு சாதகமாக இல்லாமல் போகலாம். சூழல் நிச்சயமாக அவ்வளவு சாதகமாக இருக்காது. மேலும்... வேறு வாங்குபவர்களும் இருக்கிறார்கள்." வளைகுடாப் பகுதிக்கு வெளியே உள்ள விநியோகஸ்தர்களிடமிருந்து வரும் திரவ இயற்கை எரிவாயு (LNG) சரக்குகளுக்கான உலகளாவிய போட்டி தீவிரமடைந்து வரும் வேளையில், அமெரிக்காவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் எரிசக்தி ஒப்பந்தத்தில் ஏதேனும் மாற்றம் செய்யப்படும். உலகின் ஐந்தில் ஒரு பங்கு திரவ இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்யும் கத்தார் , ஈரான் ஹார்முஸ் ஜலசந்தி நீர்வழியை முற்றுகையிட்ட பிறகு தனது ஏற்றுமதியை நிறுத்த வேண்டியிருந்தது. கடந்த வாரம் கத்தாரின் பரந்த ராஸ் லஃபான் திரவ இயற்கை எரிவாயு வளாகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், உலகளாவிய விநியோகம் இன்னும் சில காலத்திற்குப் பற்றாக்குறையாகவே இருக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. போருக்கு முன்பு ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பாய்ந்த திரவ இயற்கை எரிவாயுவில் சுமார் 10 சதவீதம் மட்டுமே ஐரோப்பாவிற்கு அனுப்பப்பட்டாலும், எரிவாயு இறக்குமதியைச் சார்ந்திருப்பதால், விநியோகத்திற்கான உலகளாவிய போட்டிக்கு அந்த கண்டம் ஆளாகக்கூடிய நிலையில் உள்ளது. இத்தாலி போன்ற சில ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள், தங்களுக்குத் தேவையான திரவ இயற்கை எரிவாயுவில் மூன்றில் ஒரு பங்கை கத்தாரிலிருந்து பெற்றன. "தனிப்பட்ட முறையில்... ஐரோப்பியர்கள் ஒரு டிரில்லியன் டாலர் மதிப்புள்ள எரிசக்திக்கு உறுதியளித்திருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். ஏனென்றால், அது அவர்கள் இந்த எரிசக்தியை வாங்குவார்கள் என்ற வெறும் வாக்குறுதி மட்டுமல்ல, நாங்கள் அவர்களுக்கு அந்த எரிசக்தியை விற்போம் என்ற உறுதிமொழியும் ஆகும்," என்று புஸ்டர் மேலும் கூறினார். "ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் பொருளாதார ரீதியாக நிலைத்திருக்க வேண்டுமானால், அவற்றுக்கு ஆற்றல் தேவை, அதை நம்மால் வழங்க முடியும்," என்று அவர் கூறினார். "அவ்வாறு செய்ய நாங்கள் ஊக்குவிக்கப்படும் வகையிலான ஒரு உறவை நாங்கள் விரும்புகிறோம்." ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏற்றுமதி செய்பவர்கள் 2027 ஜனவரி 1-ஆம் தேதிக்குள் மீத்தேன் வெளியேற்றத்தை அறிவிக்க வேண்டும் என்ற ஐரோப்பிய ஒன்றிய விதி திருத்தப்பட வேண்டும், ஏனெனில் பெரும்பாலான அமெரிக்க உற்பத்தியாளர்களால் அதற்குக் கட்டுப்படுவது சாத்தியமற்றது என்று புஸ்டர் மேலும் கூறினார். மீத்தேன் ஒழுங்குமுறை இறக்குமதிகளைப் பாதிக்காது என்பதை உறுதி செய்வதாக ஆணையம் உறுதியளித்துள்ளது. இந்த விதி மாற்றப்படும் எனத் தாம் “நம்பிக்கையுடன்” இருப்பதாக புஸ்டர் கூறினார், ஏனெனில் “இது எரிபொருள் செலவுகளை உயர்த்தும் ஆற்றலைக் கொண்டிருப்பதால், இந்த வர்த்தகத் தடைகளில் சிலவற்றைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை ஐரோப்பா உணரும்”. கடந்த ஆண்டு டர்ன்பெர்ரியில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தின்படி, பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றிய ஏற்றுமதிகளுக்கு 15 சதவீத வரி விதிக்கப்பட்டது. அதே நேரத்தில், அமெரிக்கத் தொழில்துறைப் பொருட்கள் மற்றும் சில விவசாயப் பொருட்கள் மீதான தனது சொந்த வரிகளை பூஜ்ஜியமாகக் குறைக்க அந்த அமைப்பு ஒப்புக்கொண்டது. ஆனால், அமெரிக்க உச்ச நீதிமன்றம் டிரம்பின் வரிகளை ரத்து செய்த பிறகு, அவர் அவசரமாக வேறு ஒரு சட்டத்தைப் பயன்படுத்தி உலகளாவிய சுங்க வரியை அறிமுகப்படுத்தினார் . இது ஜூலை 24 வரை நீடிக்கக்கூடும், இதன் விளைவாக சராசரியாக 15.8 சதவீத ஒட்டுமொத்தக் கட்டணம் விதிக்கப்படுகிறது. இந்த வாரம் வாக்கெடுப்புக்கு வரவிருக்கும் சட்டத்தில், டிரம்ப் ஏதேனும் புதிய வரி அச்சுறுத்தல்களைச் செயல்படுத்தி, ஸ்காட்லாந்தில் முதலில் ஒப்புக்கொள்ளப்பட்ட வைரங்கள் மற்றும் கார்க் உள்ளிட்ட விலக்குகளை மீட்டெடுக்கத் தவறினால், டர்ன்பெர்ரி ஒப்பந்தத்தை இடைநிறுத்தம் செய்யும் பாதுகாப்பு அம்சங்களை ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சேர்த்துள்ளனர். இருப்பினும், இறுதி ஒப்பந்தம் உறுப்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும், அவை இந்த விதிகளை எதிர்க்க வாய்ப்புள்ளது. இறுதி ஒப்பந்தத்தில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால், “அது எங்களுக்கு உகந்ததா இல்லையா என்பது குறித்து நாங்கள் ஒரு முடிவெடுக்க வேண்டியிருக்கும்” என்று புஸ்டர் கூறினார். ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஆணையர் மரோஸ் ஷெஃப்கோவிச், ஃபைனான்சியல் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த ஒரு தனிப் பேட்டியில், "ஒப்பந்தம் என்பது ஒப்பந்தம்தான், நாம் டர்ன்பெர்ரி கூட்டறிக்கையைக் கடைப்பிடிக்க வேண்டும்" என்று ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களை எச்சரித்தார். அந்த நேர்வில் 15 சதவீத ஒட்டுமொத்த சுங்க வரியை மதித்து நடப்போம் என அமெரிக்க நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளதாக அவர் கூறினார்.
- Today
-
ஈரான் அணுமின் நிலையத்தின் மீது மீண்டும் அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்
ஈரான் அணுமின் நிலையத்தின் மீது மீண்டும் அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் 25 Mar, 2026 | 03:38 PM ஈரானின் புஷேர் அணுமின் நிலைய வளாகத்தில் அமெரிக்கவும் இஸ்ரேலும் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகமான ஐஆர்என்ஏ தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல் நேற்று செவ்வாய்க்கிழமை (24) மாலை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக கடந்த 17ஆம் திகதி இதே அணுமின் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதன் பின்னர், மீண்டும் அந்த அணுமின் நிலையத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் கூறுகிற அதேவேளை, இந்தத் தாக்குதலில் தொழில்நுட்ப சேதமோ மனித உயிர்ச்சேதமோ நிதி சேதமோ ஏற்படவில்லை என்றும் நிலையத்தின் எந்தப் பகுதியும் சேதமடையாமல் அப்படியே உள்ளது எனவும் ஈரான் அணுசக்தி அமைப்பு தெரிவித்துள்ளது. குறித்த அமைப்பு, இவ்விதமாக அமைதியான முறையில் அணுசக்தி நிலையங்களின் மீது தாக்குதல் நடத்துவது சர்வதேச விதிமுறைகள் மற்றும் உரிமைகளை மீறுவது மட்டுமன்றி, பிராந்தியத்தின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகிறது எனக் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தொடர்ச்சியாக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதன் ஒரு பகுதியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டுகிறது. https://www.virakesari.lk/article/241904
-
அமெரிக்காவும் இரானும் ஒருவேளை பேச்சு நடத்தினால் நெதன்யாகுவுக்கு என்ன சிக்கல்?
கார்க் தீவு, அல்லது கோர்மூசினை கைப்பற்றுவது சாத்தியமான உத்தியாக இருக்காது என கூறுகிறார்கள், அதில் வழங்கல் பிரச்சினை காணப்படும், அது தற்கொலை தாக்குதலுக்கு ஒப்பானதாக கூறுகிறார்கள் (ஆனால் ஊடக அளாவில் இவற்றினையே முதன்மை படுத்தப்படுகிறது). இந்த தரையிறக்கத்திற்கு பயன்படுத்தப்படும் 11 ஆவது MEU, படையணி கடந்த ஆண்டு நவம்பரில் மேற்கொண்ட பயிற்சி நடவடிக்கை தென் கிழக்கு ஈரான் தரையமைப்பினை ஒத்த சூழ்நிலையில் பயிற்சி மேற்கொண்டுள்ளதாக கூறுகிறார்கள். அதன் பிரகாரம் கொனராக் மற்றும் சபகார் பகுதியினை கட்டுப்படுத்துவதுடன் அந்த பகுதியில் உள்ள ஈரானின் கடற்படைத்தளங்கள் அமெரிக்க இஸ்ரேலிய கூட்டுத்தாக்குதலில் அழிக்கப்பட்ட இரு துறைமுகங்களை கைப்பற்றுவதாக இருக்கும் என கருதுகிறார்கள். கொனராக்கில் விமானத்தளமும் உள்ளது, சபகார் குடா பகுதி ஒரு பாதுகாப்பான மலைகளையும் அதற்கு வெளியே 600 கிமீ நீளமான வெளிகளை கொண்ட பகுதி எதிர்த்தாக்குதலை செய்ய முடியாத நிலையினை ஈரான் தரப்பிற்கு ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறாயின் இந்த போர் ஒரு நீண்ட கால திட்டத்துடன் பிளான் பி போன்ற திட்டத்துடன் தயாராகியுள்ளார்கள் போலவுள்ளது. போர் விரைவாக முடியாது போலவே கருதுகிறேன்.
-
ஈரான் கடல் எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்த கப்பல் திருப்பி அனுப்பப்பட்டது!
ஈரான் கடல் எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்த கப்பல் திருப்பி அனுப்பப்பட்டது! 25 Mar, 2026 | 04:26 PM ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பாகிஸ்தான் நோக்கிப் பயணித்த சரக்குக் கப்பல் ஒன்றை ஈரான் இராணுவம் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவிலிருந்து பாகிஸ்தானின் கராச்சி நோக்கிப் பயணித்த 'செலன்' என்ற சரக்குக் கப்பலே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. ஈரானின் கடல் எல்லைக்குள் நுழைவதற்குரிய முறையான அனுமதிப்பத்திரம் இன்றி பயணிக்க முயன்றதால், இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஈரானின் கடல்சார் சட்டங்களுக்கு அமுல்படாமை மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தியை கடப்பதற்கான அனுமதி இல்லாமை காரணமாக இந்தக் கப்பல் திருப்பி அனுப்பப்பட்டது. இந்த நீர்வழியைப் பயன்படுத்தும் எந்தவொரு கப்பலும் ஈரானின் கடல்சார் அதிகாரசபையுடன் முழுமையான ஒருங்கிணைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என IRGC கடற்படைத் தளபதி அலிரேசா டான்சிரி தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளார். எதிரி நாடுகளுடன் தொடர்பில்லாத கப்பல்கள் ஈரானிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி (சில சந்தர்ப்பங்களில் கட்டணம் செலுத்தி) இந்த நீர்வழியைப் பயன்படுத்த முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், ஈரான் எதிரியாகக் கருதும் தரப்புகளுடன் தொடர்புடைய கப்பல்கள் தமது கடல் எல்லையைத் தாண்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/241908
-
என் பெயர் பூனா (Buna)!
அட .......பழக்கத்தில கை பதிந்திட்டுது ......... நல்லகாலம் கிருபன் பார்க்கமுதல் நீங்கள் பார்த்தது நல்லது . ........! 😀 நன்றி கிருபன் உங்களின் காஃபி கட்டுரைக்கு . .........! 😄
-
ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களைக் கண்டிக்கக் கோரி யுனிசெப் அமைப்புக்கு இஸ்ரேல் அவசர கடிதம்!
ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களைக் கண்டிக்கக் கோரி யுனிசெப் அமைப்புக்கு இஸ்ரேல் அவசர கடிதம்! 25 Mar, 2026 | 02:49 PM இஸ்ரேலிய பொதுமக்கள் குறிப்பாக சிறுவர்களை இலக்கு வைத்து ஈரான் நடத்தி வரும் கண்மூடித்தனமான ஏவுகணைத் தாக்குதல்களைப் பகிரங்கமாகக் கண்டிக்குமாறு ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்திடம் இஸ்ரேல் உத்தியோகபூர்வமாகக் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சினால் கடந்த 23 ஆம் திகதி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஐநா மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கான இஸ்ரேலிய பிரதிப் பணிப்பாளர் நாயகம் நினா பென்-அமி விடுத்துள்ள இக்கடிதத்தில், ஈரானின் பலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன: ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13, 15 மற்றும் 16 வயதுடைய மூன்று சகோதரர்கள் உயிரிழந்துள்ளனர். இதுவரை 18 சிறுவர்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் காயமடைந்துள்ளனர். இவர்களில் 5 வயது சிறுமி ஒருவர் கவலைக்கிடமான நிலையிலும், 10 மற்றும் 12 வயதுடைய சிறுவர்கள் பலத்த காயங்களுடனும் சிகிச்சை பெற்று வருகின்றனர். குடியிருப்புப் பகுதிகள் மீது ஈரான் 'கொத்தணி குண்டுகளை' (Cluster munitions) ஏவித் தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/241899
-
கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
மிகவும் நன்றாக இருந்தது ........உங்களின் பயணத்தில் நாங்களும் பங்கு கொண்டு பயணித்து வேர்த்து விறுவிறுத்து இறங்கியது போல் ஒரு மனநிலை .......... வீட்டுக்கு பொதி வந்ததும் பதியவும் .......! 😅
-
கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
இவை விசேட நிலைமைகள். ஆயிரக் கணக்கானோர் ஒரே நாளில் சேவைகள் பெறும் வகையில் வர முனையும் போது மட்டும் தான் இப்படியாக ரோக்கன் கொடுத்து உள்ளே விடுவார்கள் (ரோக்கன் கொடுக்கும் முறை இல்லா விட்டால், பெண்கள், வயோதிபர்கள் போன்றோர் உள்ளேயே போக முடியாமல் தடியன்கள் மட்டும் தான் வரிசையில் முன்னே நிற்பர்😂). மற்ற படி சாதாரணமாக உள்ளே நுழைந்து (walk-in) சேவைகள் பெறும் வகையில் தான் விமான நிறுவன அலுவலகங்கள் இருக்கும்! இது என் அனுபவம், கொழும்பில்.
-
எரிபொருள் விலைகள் அதிகரிப்பு
எரிபொருள் விலை உயர்வால் ரயில் பயணிகள் அதிகரிப்பு Mar 25, 2026 - 08:01 PM எரிபொருள் விலை உயர்வு மற்றும் பேருந்து கட்டண அதிகரிப்பு காரணமாக, பொதுமக்கள் அதிகளவில் ரயில்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தச் சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சாமர ஜயசேகர இன்று (25) செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தி கருத்து தெரிவிக்கையில், இந்த நிலைமையால் ரயில்வே திணைக்களம் கடந்த சில நாட்களாக இலாபம் ஈட்டி வருவதாகக் குறிப்பிட்டார். எரிபொருள் விலை உயர்வால் எதிர்காலத்தில் சரக்கு போக்குவரத்திற்கும் பொதுமக்கள் ரயில்களையே நாடுவார்கள் என்பதால், ரயில் பயண வாரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு அவர் பொறுப்புவாய்ந்த தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு கோட்டைக்கு வரும் மற்றும் அங்கிருந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பயணிகளின் கேள்வி அதிகரித்துள்ள போதிலும், ரயில் பயண வாரங்கள் குறைக்கப்பட்டுள்ளமையால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினார். அத்துடன், நிலவும் பொருளாதார கஷ்டங்களைக் கருத்திற்கொண்டு ரயில் கட்டணங்களை உயர்த்த வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார். பொதுமக்களுக்கு எஞ்சியுள்ள ஒரேயொரு மலிவான போக்குவரத்து சேவை ரயில்கள் மாத்திரமே என்பதையும் அவர் வலியுறுத்திக் கூறினார். https://adaderanatamil.lk/news/cmn64lxqr000t356pcvlvrgkz
-
அதிகரிக்கும் வெப்பம்: மே 25 வரை நீடிக்கும் என எச்சரிக்கை
அதிகரித்த வெப்பம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை! Mar 25, 2026 - 05:54 PM மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அனுராதபுரம், மன்னார், வவுனியா மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில இடங்களிலும் வெப்பச் சுட்டெண், அதாவது மனித உடலுக்கு உணரப்படும் வெப்பமானது 'எச்சரிக்கை மட்டம்' வரை அதிகரிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தங்கள் தொடர்பான முன்னெச்சரிக்கை பிரிவினால் நாளைய (26) தினத்திற்காக செல்லுபடியாகும் வகையில், இன்று (25) பிற்பகல் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmn60jcq2000p356p0e6dvcxt
-
போரை முடிவுக்கு கொண்டுவர ஈரானுக்கான அமெரிக்காவின் 15 அம்ச தீர்வுத் திட்டம்!
ஈரானிடம் அமெரிக்காவின் 'நிபந்தனைப் பட்டியல்': தூது சென்றது பாகிஸ்தான்! Mar 25, 2026 - 05:34 PM அமெரிக்கா முன்வைத்துள்ள போர்நிறுத்தக் கோரிக்கைகள் மற்றும் நிபந்தனைகள் அடங்கிய ஆவணமொன்றைப் பாகிஸ்தான் ஈரானிடம் கையளித்துள்ளதாக அல் ஜசீரா செய்திச் சேவை தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ள அல் ஜசீரா ஊடகம், ட்ரம்ப் நிர்வாகத்தினால் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ ஆவணமே இவ்வாறு ஈரான் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. தற்போது குறித்த கோரிக்கைகள் தொடர்பான ஈரானின் பதிலுக்காகப் பாகிஸ்தான் காத்திருப்பதாக அந்த நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் பதற்றமான சூழலைத் தணிப்பதற்காகப் பாகிஸ்தான் இங்கு ஒரு மத்தியஸ்தராகச் செயற்பட்டு வருகின்றது. கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின்படி, அடுத்த சில நாட்களில் அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகளுக்கு இடையிலான நேரடி சந்திப்பொன்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறுவதற்கும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. https://adaderanatamil.lk/news/cmn5zm3n9000o356phkuud4lh
-
கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
உங்கள் எழுத்துக்களின் ஊடாக நிறைய புதிய விடையங்களை தெரிந்து கொள்ள கூடியதாக இருக்கிறது..முக்கியமாக விமான பயணத்தில் ஏற்பட்டிருக்க கூடிய மாற்றங்கள்.எதிர் காலத்தில் இந்த நிலைமைகள் மாற்றப்படுமா... ? அல்லது இதே வரிசையில் நின்று நம்பர் துண்டு எடுத்து இது எல்லாம் எல்லாருக்கும் சாத்தியபடாத ஒன்று..மிக்க நன்றியக்கா.தொடர்ந்து எழுதுங்கள்.✍
-
கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 28 அகவை - சுய ஆக்கங்கள்சவுதியின் ரியாத் ஏயாப்போட்டில் ஏழு மணிநேரம் எப்படியோ போய்விட்டது இன்னும் ஒரு மணிநேரத்தில் விமானத்தில் இருப்போம். எட்டு மணித்தியாலத்தில் லண்டனில் நிற்பம் என்று எண்ண ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது. விமானம் புறப்படும் நேரத்துக்கு இன்னும் 20 நிமிடங்கள்தான் இருக்கு. ஆனாலும் எம்மை இன்னும் விமானத்தில் ஏற்றவில்லை. பணிப்பெண்களோ விமான ஓட்டியையோ கூடக் காணவில்லை. என்ன இது மீண்டும் பிந்தபோகிறதோ என்று சினத்துடன் வேறு வழியற்றுக் காத்திருக்க, கவுண்டர் திறக்கப்பட்டு ஆடிப்பாடி இருவர் வருகின்றனர். இப்பதான் எமது விமானம் “Saudia” வந்து சேர்ந்திருக்குப் போல என எண்ணியபடி எழுகிறேன். அதன்பின் 15 நிமிடம் கழித்தே எல்லோரையும் விமானத்தில் ஏற அனுமதிக்கின்றனர். காலை 6.30 மணிக்கு வெளிக்கிட்டிருக்கவேண்டிய விமானம் ஒன்பது மணிக்குத்தான் வெளிக்கிட ஆயத்தமாகுது. ஒரு வரிசையில் மூன்று மூன்றாக ஒன்பது இருக்கைகளே. ஒவ்வொரு மூன்று இருக்கையிலும் ஒவ்வொருவரே இருக்கின்றனர். அது ஒருவகையில் மகிழ்வாக இருந்தாலும் ஏன் இந்த விமானத்தில் சனமே இல்லை என்ர பயமும் வர வெளியே பிராக்குப் பார்க்க, வேறொரு விமானத்தைத் தவிர ஏதுவுமே தெரியவில்லை. எல்லோரும் எறிமுடிந்தும் நேரம் பத்து நிமிடம் போனபின்னர்தான் விமானம் ஸ்டார்ட் ஆகி அப்படியே நிற்கிறதே தவிர 20 நிமிடமாக நகரவே இல்லை. என்னடா இது சோதனை. பக்கத்திலும் யாரும் இல்லை. பணிப்பெண்களையும் காணவில்லை. எட்டிப் பார்க்க அவர்களும் இருக்கைகளில் இருப்பது தெரிய வேறு வழியின்றி பேசாமல் இருக்கிறேன். ஸ்கிரீனில் ஏதும் பார்க்கலாம் என்றால் அதை மாற்றவே முடியவில்லை. அதுபோக எனது கெட்போன் அதில் எனது கெட்போனை கொழுவமுடியாமல் இருக்கு. விமானம் வெளிக்கிட்ட பின்தான் திறந்துவிடுவார்கள் போல என எண்ணியபடி கண்ணை மூடிக் கிடக்கிறேன். மீண்டும் ஒரு பத்து நிமிடங்கள் செல்ல விமானம் மெல்ல நகர கண்ணைத் திறந்து பார்க்கிறேன். விமானம் மிக மிக மெதுவாகவே ஊருகிறது. என்ன பிரச்சனை இவங்களுக்கு. விமானம் ஊர்வதால் அவர்களை அழைக்கவோ எதுவும் கேட்கவும் முடியாது. என்னவோ பிரச்சனை என்று மட்டும் புரிகிறது. மீண்டும் சிறிது நகர்ந்து நிற்கிறது. சரியாகப் பத்துமணி ஆகும்போது தூரத்தில் நெருப்பு எரிவதுபோல் இரு இடங்களில் தெரிகிறது. அது உண்மையில் நெருப்புத்தானா அல்லது என் நினைப்பா என்று தீர்மானிக்க முடியவில்லை. சிறிது நேரத்தில் பரவலாக புகைபோல் தெரிய அது நெருப்பினால் வந்த புகையா அல்லது புகார் எதுமா என்று எண்ணியபடி எட்டி எட்டிப் பார்க்க எதுவும் தெரியவில்லை. விமானத்துள் எந்தச் சத்தமும் இன்றி அமைதியாக எல்லோரும் இருக்கின்றனர். பத்து நிமிடங்களின் பின்னர் மிக மெதுவாக ஊரத் தொடங்கிய விமானம் மெதுவாக நகர்ந்து ஓரிடத்தில் திரும்பிச் சென்று ஐந்து நிமிடங்களின் பின் இன்னொரு இடத்தில் திரும்புகிறது. நேரம் பிந்தியதில்த்தான் எமது விமானத்தை இன்னும் ஏறவிடலில்லை என்று நான் எண்ணியதைப் பொய்யாக்கியபடி எமது விமானத்துக்குப் பின்னே ஒரு பத்து விமானங்கள் வரிசையில் நிற்கின்றன. அப்போதுதான் எந்த ஒரு விமானமும் இதுவரை இறங்கவில்லை என்பது தெரிகிறது. ஏனோ தெரியவில்லை எனக்கு பதட்டமோ பயமோ ஏற்படவில்லை. ஏதோ நடப்பது நடக்கடும். சனீஸ்வரரே என் கணவர் பிள்ளைகளிடம் என்னைச் சேர்த்துவிடுங்கள் என்று மனதுள் எண்ணியபடி வெளியே பார்க்கிறேன். அதன் பின் எந்தப் புகையோ நெருப்போ கண்ணில் படவில்லை. எமக்கு முன் உள்ள ஓடுபாதையில் வேறுபக்கம் இருந்து ஒரு விமானம் வந்து மேலெழும்ப சிறிது நேரத்தில் எமது விமானமும் மெதுவாக மேலெழ அப்பாடா என்று நிம்மதி ஏற்பட்டாலும் ஏன் இப்படி மிக மெதுவாக மேலெழுகிறது? முன்னர் பயணித்த எந்த விமானமும் மேலெழும்போது இத்தனை மெதுவாக ஏறியதில்லையே. முன்னர் ஒரு தடவை ஜெர்மனியில் இப்பிடித்தான் இரண்டு மணிநேரம் பிந்திய easyjet விமானம் அரைமணிநேரம் மேலே வட்டமிட்டுவிட்டு மீண்டும் கீழே வந்து எம்மை இறக்கியது நினைவில் வர, இவர்களும் அப்பிடித்தான் செய்யப்போகிறார்களோ என்று சலிப்பும் வர ஒரு பத்துப் பதினைந்து நிமிடத்தின் பின்னரே மேகக் கூட்டங்களிநூடு மேலெழுந்து சென்றபின்னர்தான் நிம்மதியானது. பாதுகாப்புப் பட்டியின் படம் மறைந்த பின், படம் பார்ப்போம் என்று பார்த்தால் கெட்போன் இன்னும் தரவில்லை. அவர்கள் தரும்வரை பொறுமையுடன் இருந்து வாங்கிக் கொழுவினால் எனக்கு முன்னால் உள்ள ஸ்கிரீனில் படம் விக்கிவிக்கி அப்பப்ப நின்று வர, பக்கத்து இடத்துக்கு மாறினால் அங்கும் அதே பிரச்சனை. சிறிது நேரத்தில் தமது விமானத்தில் இன்ரநெற் சரியாக வேலைசெய்யாமைக்கு வருந்துகிறோம் என்கின்றனர். சீற் தான் தாராளமாக இருக்கே என்று எண்ணியபடி மற்றய இரண்டு இருக்கைகளிலும் இருந்த சிறிய தலையணைகள் விரிப்புகள் எல்லாம் எடுத்து தலைக்கு வைத்தபடி படுக்க நல்ல தூக்கம் வருகிறது. உணவின் வாசனை என்னை எழுப்ப எழுந்து அமர்கிறேன். இரண்டுமணிநேரம்தான் போயிருக்கு. மரக்கறியா சிக்கிணா என்று விமானப் பணிப்பெண் கேட்க சிக்கிண் என்கிறேன். இலங்கையில் நின்றபோது ஐந்து மாதங்களில் மூன்றோ நான்கோ நாட்கள்தான் கோழிக்கறி உண்டாதனால் அவர்கள் தந்த உணவு நன்றாக இருப்பதுபோல் இருக்கிறது. மோகன்லாலின் படம் ஒன்றைப் பார்க்கப் போட்டால் இரண்டரை மணிநேரப்படம் நின்றுநின்று மூன்று மணித்தியாலங்கள் சென்று முடிய மீண்டும் கண்ணை மூடி இருந்தபடியே தூங்குகிறன். கீத்துறோ விமான நிலையத்தை இன்னும் ஒரு மணிநேரத்தில் அடைந்துவிடுவோம். என்ற அறிவிப்பு வர மகிழ்ச்சி ஏற்படுகிறது. சிறிது நேரத்தில் மீண்டும் சிறிய உணவு ஒன்று தருகிறார்கள். திறந்து பார்த்தால் சலாமி, காளான் எல்லாம் போட்ட பீட்ஸா. சாப்பிட்டபின் மனதும் வயிறும் நிறைந்துபோயிருக்க ஸ்கிரீனில் விமானம் செல்வதைப் பார்க்க இன்னும் முப்பத்தைந்து நிமிடங்களில் இறங்குமிடம் என்று காட்டுகிறது. திடீரென எல்லோரையும் பாதுகாப்புப் பட்டி அணியும்படி அறிவிப்பு வருகிறது. விமானம் மூன்று நான்கு தடவை குலுங்கிவிட்டுச் சரியாகிறது. நேரம் 9.45 இன்னும் பதினைந்து நிமிடத்தில் தரையிறங்க வேண்டும் ஆனால் சரியாக இருபத்தைந்து நிமிடங்கள் மேலேயே வட்டமிட்டுவிட்டு சரியாக 10 மணிக்கு இறங்கவேண்டிய விமானம் 10.30 மணிக்குத் தரையைத் தொட்டபின் தான் மனம் ஒரு நிலையாகிறது. கீழே இறங்கி பொதிகளை எடுப்போம் என்று சென்றால் பொதிகள் முதலே வந்துவிடும் என்று இலங்கையில் சொன்ன நினைவு வர பொ திகளுக்குப் பொறுப்பான கவுண்டருக்குச் சென்று எமது பொதிகள் இந்த விமானத்தில் வரவில்லை. நேரே இலங்கையில் இருந்து இங்கே அனுப்புகிறேன் என்று கூறினார்கள். நான் ரியாத்தில் இருந்து வருகிறேன் என்றபடி எனது போடிங்பாசில் ஒட்டியிருந்த அட்டைகளை எடுத்துக் கொடுக்கிறேன். இது ரியாத்தில் தந்த போடிங்பாஸ் தானே என்றுகேட்க ஓம் என்கிறேன். நீங்கள் தமிழா என்று கேட்க ஓம் என்கிறேன். அவர் தமிழில் இன்று வந்த போடிங் பாசில் ஒட்டியுள்ளபடியால் இன்றுதான் நீங்கள் வந்த விமானதில்த்தான் உங்கள் பொதியும் வந்திருக்கும். ஏழாம் இலக்கத்துக்குப் போங்கள் என்று கூற நான் எதுவும் பேசாமல் ஒரு தள்ளுவண்டியை எடுத்து அதில் எனது சிறிய பொதி, கைப்பை எல்லாவற்றையும் வைத்துத் தள்ளிக்கொண்டு ஏழாம் இழக்கத்துக்குப் போனால் அங்கு இன்னும் பொதிகள் வர ஆரம்பிக்கவில்லை. முன்னர் ரியாத் எயாப்போட்டில் என்னுடன் வந்து கதைத்த இருவரும் இன்னும் இருவரும் என்னருகில் வந்து நிற்க, எனது பொதி முன்னரே இங்கு வந்துவிடும் என்று இலங்கையில் கூறினார்கள் என்கிறேன். அப்பிடி வராது எம்மோடுதானே எமது பொதிகள் வரும் என்கிறார் ஒருவர். மற்றவர்களும் அதை ஆமோதிக்கின்றனர். அவள் வடிவாகக் கூறினாளே. இவர்கள் இப்படிச் சொல்கின்றனர். சிலவேளை ரியாத்தில் நாம் பொதிகளைத் தேடலாம் என்று அவள் சொல்லியிருப்பாளா என்ற எண்ணமும் ஓட எதுவும் பேசாமல் பாத்துக்கொண்டு நிற்கிறேன். பொதிகள் வரத்தொடங்கவும் எல்லோரும் அவரவர் பொதிகளை எடுத்துக்கொண்டு போக வந்து இறங்கியாச்சா என்று கணவர் போன் செய்கிறார். வந்தாச்சு. இன்னும் பொதிகள்தான் வரவில்லை எடுத்துக்கொண்டு வாறன் என்றுவிட்டு போனை வைக்கிறேன். எல்லாரும் அவரவர் பொதிகளை எடுத்துக்கொண்டு போக ஒரு பன்னிரண்டு பேர் மட்டும் நிற்க எமது பொதிகள் மட்டும் வரவேயில்லை. அதில் எல்லாப் பொதிகளும் வந்துவிட்டதாகப் போட நான் வண்டிலைத் தள்ளிக்கொண்டு முன்னர் போன இடத்துக்குப் போகிறேன். அவரிடம் எனது பொதிகள் இரண்டும் வரவில்லை. முன்னரே சொன்னேன் தானே என்கிறேன். அப்படியா என்றுவிட்டு ஒரு படிவத்தை எடுத்து நிரப்பும்படி தருகிறார். நல்ல ஏச்சுக் கொடுக்க வேண்டும் என்று எண்ணினாலும் வேறு வழியில்லாமல் படிவத்தை வாங்கி பக்கத்தில் உள்ள மேசையில் வைத்து என் விபரங்களை எழுதிவிட்டு நிமிர, நான் நின்ற இடத்தில் வேறு இருவர் வந்து நிற்க நான் மற்றக் கவுண்டருக்குச் சென்று படிவத்தைக் கொடுக்க, அவர் சிஸ்டத்தில் பதிந்துவிட்டு நாளை DPD உங்கள் பொதியை வீட்டுக்கே கொண்டுவந்து தருவார்கள் என்றபடி ரிசீற்றைத் தர வாங்கிக்கொண்டு வெளியே வர குளிர் காற்று முகத்தில் அடிக்கிறது. முடிந்தது
-
அமெரிக்காவும் இரானும் ஒருவேளை பேச்சு நடத்தினால் நெதன்யாகுவுக்கு என்ன சிக்கல்?
இங்கே உள்ளூர்ச் செய்திகளின் படி அமெரிக்க ஈரூடகப் படையினர் (Marines) ஆயிரம் பேர்கள் வரை மத்திய கிழக்கு நோக்கிச் செல்கின்றனர். எங்கள் பன்னாடை "ஈரானுடன் பேசிக் கொண்டிருக்கிறோம்" என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருப்பதன் காரணம், "மீளவும் பேச முயன்றோம், ஈரான் சமாதானம் செய்ய ஆதரவாக இல்லை, எனவே வேறு வழியில்லாமல் தரை வழியில் படையெடுக்கிறோம்" என்று சாட்டுச் சொல்வதற்காக இருக்கலாம் என சந்தேகிக்கிறார்கள். வெள்ளை மாளிகை திடீரென்று பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருக்கிறது, ஏதோ அறிவிப்பு வர விருக்கிறது!
-
ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 - செய்திகள்
ஐபிஎல் 2026 அலசல்: இளமை துள்ளலுடன் களமிறங்கும் சிஎஸ்கே ஐபிஎல் 2026 சீசன் போட்டிகள் வரும் 28-ம் தேதி பெங்களூருவில் கோலாகலமாக தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ளும் சிஎஸ்கே அணி குறித்த ஓர் பார்வை... 5 முறை கோப்பையை வென்றுள்ள சிஎஸ்கே அணி கடந்த 2008-ல் ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டதிலிருந்து 2023-ம் ஆண்டு சீசன் வரை முதல் நான்கு இடங்களுக்கு வெளியே சென்றதில்லை. ஆனால், கடந்த 2 சீசன்களாக அந்த அணியின் செயல் திறன் சராசரிக்கும் கீழே சென்றுவிட்டது. 2024-ல் 7-வது இடத்தைப் பிடித்த சிஎஸ்கே, அதன் தொடர்ச்சியாக 2025-ல் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது. இதன் மூலம், தனது வரலாற்றிலேயே முதல்முறையாகத் தொடர்ந்து இரண்டு முறை பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் சிஎஸ்கே ஏமாற்றம் அளித்தது. இருப்பினும், கடந்த சீசனில் சிஎஸ்கே நல்ல படிப்பினையை கற்றுக்கொண்டது. அது மாற்றத்துக்கான இளம் வீரர்களின் சக்தி. ஆயுஷ் மாத்ரே, டெவால்ட் பிரேவிஸ் ஆகியோர் சிறப்பாகச் செயல்பட்டதைக் கண்ட அணி நிர்வாகம், ‘டாடி ஆர்மி’ (வயதான வீரர்களை அதிகம் உள்ளடக்கிய அணி) என்ற பிம்பத்திலிருந்து விலகி, துடிப்புள்ள இளம் வீரர்களின் திறனை நம்பி ஒரு புதிய பயணத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளது. தொடர்ச்சியாக 3-வது முறையாக முதல் நான்கு இடங்களுக்கு வெளியே செல்வதை தவிர்க்க, இந்த ‘இளைஞர் படை’ இந்த ஆண்டு கை கொடுக்கும் என்று சிஎஸ்கே அணி பெரிதும் நம்புகிறது. இளைஞர்களே அச்சாணி... கடந்த சீசனில் தொடக்க ஆட்டங்களில் பவர்பிளேவில் ரன்கள் சேர்க்க சிஎஸ்கே தடுமாறியது. இதன் பின்னர் தொடக்க வீரரான ஆயுஷ் மாத்ரே, மிடில் ஆர்டர் அதிரடி பேட்ஸ்மேனான தென் ஆப்பிரிக்காவின் டெவால்ட் பிரேவிஸ் ஆகியோரின் வருகைக்கு பின்னரே ரன் குவிப்பில் சிஎஸ்கே அணி உத்வேகம் பெற்றது. இதுவே அந்த அணியின் ஏல வியூகத்தை மாற்றியமைத்தது. ‘இளைஞர்களே அணியின் அச்சாணி’ என்ற கொள்கையை சிஎஸ்கே இப்போது உறுதியாகக் கையில் எடுத்துள்ளது. சாதனை படைத்த ஏலத் தொகை... இதன் ஒரு கட்டமாகவே 20 வயதான இடதுகை சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் பிரசாந்த் வீர் மற்றும் 19 வயதான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கார்த்திக் சர்மா ஆகிய இருவரையும் தலா ரூ.14.2 கோடிக்கு ஏலம் எடுத்து சிஎஸ்கே அணி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருந்தது. இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு வாங்கப்பட்ட ‘அன்கேப்டு’ இந்திய வீரர்கள் என்ற பெருமையை இந்த ஜோடி பெற்றிருந்தது. அதிரடி ஆட்டக்காரர்களான சர்ஃபராஸ் கான், அமன் ஹக்கிம் கான் ஆகியோரை அணிக்குள் கொண்டு வந்த சிஎஸ்கே, சுழற்பந்து வீச்சை வலுப்படுத்த ராகுல் சாஹர், ஸ்ரேயஸ் கோபால், அகீல் ஹொசைன் ஆகியோரையும் சேர்த்துள்ளது. ஏற்கெனவே நூர் அகமதுவும் அணியில் உள்ளார். இவர்களுடன் பிரசாந்த் வீரும் அணிக்கு பலம் சேர்க்கக்கூடும். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் நேதன் எல்லிஸ் தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியது சிஎஸ்கே-விற்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது. எனினும் இறுதிக்கட்ட ஓவர்களில் மேட் ஹென்றி, ஜாக் ஃபோல்க்ஸ் ஆகியோரை திறம்பட பயன்படுத்திக் கொள்வதில் சிஎஸ்கே அணி முனைப்பு காட்டக்கூடும். அனுபவம் வாய்ந்த கலீல் அகமது, முகேஷ் சவுத்ரி ஆகியோரும் கைகொடுக்கக்கூடும். ஆல்ரவுண்டராக ஷிவம் துபே முக்கிய பங்களிப்பை வழங்கக்கூடும். எல்லாவற்றுக்கும் மேலாக இந்த சீசனுக்கு முன்பாக சிஎஸ்கே அணி மேற்கொண்ட மிக முக்கியமான முடிவு ரவீந்திர ஜடேஜாவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குக் கொடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக சஞ்சு சாம்சனை வாங்கியதுதான். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஜடேஜா சிஎஸ்கே அணியின் இதயத்துடிப்பாக விளங்கியவர். அந்த அணியுடன் மூன்று முறை சாம்பியன் பட்டங்களையும் வென்றுள்ளார். இருப்பினும், சஞ்சு சாம்சனின் வருகை சென்னை அணியின் மிகப்பெரிய பலவீனமான ‘பவர்பிளே’ ஓவர்களில் அதிரடியாக ரன் குவிப்பதில் உள்ள சிக்கலைத் தீர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டி 20 உலகக் கோப்பை தொடரில் சஞ்சு சாம்சன் சூப்பர் 8 சுற்றின் கடைசி ஆட்டத்தில் 97 ரன்களும், அரை இறுதியில் 89 ரன்களும், இறுதிப் போட்டியில் 89 ரன்களும் விளாசி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றதில் முக்கிய பங்கு வகித்திருந்தார். சிறந்த பார்மில் உள்ள அவர், சிஎஸ்கே அணியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். சஞ்சு சாம்சனும், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டும் இணைந்து அதிரடியான முன்வரிசை பேட்டிங்கை உறுதி செய்யக்கூடும். போட்டியின் சூழலுக்கு ஏற்ப தனது ஆட்ட முறையை மாற்றிக்கொள்ளும் நெகிழ்வுத்தன்மை சஞ்சு சாம்சனிடம் இருப்பது அணிக்கு கூடுதல் பலமாகும். இதன் காரணமாக, ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப மூன்று அல்லது நான்கு வெளிநாட்டு பந்துவீச்சாளர் களைக் கூடகளமிறக்கும் வசதி சிஎஸ்கே-விற்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. சஞ்சு சாம்சனின் வருகை, 44 வயதான தோனியை மட்டுமே சார்ந்து இருக்கும் நிலையிலிருந்து சிஎஸ்கே அணி மெல்ல மெல்ல விலகுவதைக் குறிக்கக்கூடும். இதன் மூலம், தோனி ‘இம்பாக்ட் பிளேயர்’ விதியின் கீழ் புதிய ரோலில் களம் இறங்க வாய்ப்புள்ளது. இது ஒருபுறம் இருக்க இதுதான் தோனியின் கடைசி ஐபிஎல் சீசனா?” என்ற தீராத கேள்வி இந்த ஆண்டும் அவரைத் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. அணி விவரம் பேட்ஸ்மேன்கள்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), எம்.எஸ்.தோனி, சஞ்சு சாம்சன், சர்ஃபராஸ் கான், ஆயுஷ் மாத்ரே, உர்வில் படேல், டெவால்ட் பிரேவிஸ், கார்த்திக் சர்மா. ஆல்ரவுண்டர்கள்: ஜேமி ஓவர்டன், மேத்யூ ஷார்ட், அமன் ஹக்கிம் கான், பிரசாந்த் வீர், ராமகிருஷ்ணா கோஷ், ஷிவம் துபே, அன்ஷுல் கம்போஜ், ஜாக் ஃபோக்ஸ். பந்துவீச்சாளர்கள்: நூர் அகமது, ராகுல் சாஹர், அகீல் ஹோசைன், ஸ்ரேயஸ் கோபால், கலீல் அகமது, முகேஷ் சவுத்ரி, மேட் ஹென்றி, குர்ஜப்னீத் சிங். மோதல்கள் மார்ச் 30 - ராஜஸ்தான் ராயல்ஸ் | குவாஹாட்டி | இரவு 7.30 ஏப்ரல் 3 - பஞ்சாப் கிங்ஸ் | சென்னை | இரவு 7.30 ஏப்ரல் 5 - ஆர்சிபி | பெங்களூரு | இரவு 7.30 ஏப்ரல் 11 - டெல்லி கேப்பிடல்ஸ் | சென்னை | இரவு 7.30 https://www.hindutamil.in/news/sports/csk-enters-the-fray-with-youthful-vigor
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அவசர விவாதம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அவசர விவாதம் Mar 25, 2026 - 04:03 PM மத்திய கிழக்கு போர் நிலவரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 'அரிய மற்றும் அவசர' விவாதம் தற்போது ஜெனீவாவில் நடைபெற்று வருகின்றது. ஈரான் தனது பொதுக் கட்டிடங்கள் மற்றும் முக்கிய எரிசக்தி உட்கட்டமைப்புகள் மீது நடத்தும் தாக்குதல்களைக் கண்டித்து, பஹ்ரைன் மற்றும் வளைகுடா நாடுகள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த விவாதம் நடத்தப்படுகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல்களை ஆரம்பித்து இன்றுடன் (25) 26 நாட்கள் ஆகின்றன. இவ்வாறானதொரு பின்னணியில், இஸ்ரேல் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகளின் மீதும் தாக்குதல்களை நடத்தி வருவதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அத்துடன், அமெரிக்கா சுமார் 2,000 துருப்புக்களை மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல்களைத் தொடங்கியது. மேலும், ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியுள்ளதுடன், பகைமையற்ற கப்பல்களுக்கு மாத்திரம் அதனைத் திறந்துவிட நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, இந்த 'அரிய மற்றும் அவசர' விவாதத்தில், ஈரானினால் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் பொதுக் கட்டிடங்கள் மற்றும் எரிசக்தி உட்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் மற்றும் ஹோர்முஸ் நீரிணையை மூடியுள்ளமை குறித்து விவாதிக்கப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன. https://adaderanatamil.lk/news/cmn5vnwvx000k356pan60wif2
-
இலங்கையின் பேரிடர் தயார் திறனை உயர்த்த ஜப்பான் ரேடியோ சாதன உதவி
இலங்கையின் பேரிடர் தயார் திறனை உயர்த்த ஜப்பான் ரேடியோ சாதன உதவி 25 Mar, 2026 | 11:11 AM ( இணையத்தள செய்திப் பிரிவு ) “அடிமட்ட மனித பாதுகாப்பு திட்டங்களுக்கான மானிய உதவி (GGP)” திட்டத்தின் கீழ், ரேடியோ உபகரணங்களை வழங்கும் ஒரு நன்கொடை திட்ட உடன்படிக்கையில் ஜப்பான் தூதுவர் அகியோ இசொமட்டா, செவ்வாய்க்கிழமை ( 24 ) அன்று,கைச்சாத்திட்டார். இந்த உடன்படிக்கை வருண ஸ்ரீ தனபால, இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் (TRCSL) தலைவருடன் கைச்சாத்திடப்பட்டது. ஜப்பான் அரசு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு செயல்படுத்தும் இந்தத் திட்டத்திற்கு 181,837 அமெரிக்க டொலர்களை (சுமார் ரூ. 55.7 மில்லியன்) வழங்கியுள்ளது. இந்தத் திட்டம் முக்கியமாக புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், ஜப்பானில் தயாரிக்கப்பட்ட உயர் தரமுடைய உபகரணங்களை வழங்குவதன் மூலம் மீட்புப் குழுக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குள் நேரடி ஒருங்கிணைப்பை சாத்தியமாக்கி நம்பகமான வலைப்பிணைகளின் நிறுவலுக்கு உதவும். இதில் HF ரேடியோக்கள், கையடக்கமான ரேடியோக்கள் மற்றும் ரிப்பீட்டர்கள் உள்ளடங்கும். இது பேரழிவின்போது தயார் நிலை மேம்படவும் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் மீட்பு மற்றும் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கான ஒருங்கிணைப்பையும் சுலபமாக்கும். இலங்கையின் இயற்கை பேரழிவுகள் மீட்பு பணியில் நிறுவன கட்டமைப்புகளை வலுப்படுத்த ஜப்பான் கவனம் செலுத்துவதை வலியுறுத்தி தூதுவர் ISOMATA கூறுகையில்: “இப்போது இலங்கை மீட்பு மற்றும் மீளமைப்பு கட்டத்தை அடைந்துள்ளதால், ஜப்பான் இலங்கை மக்களிற்கு துணை நிற்பதில் உறுதியாக உள்ளது’’. தூதுவர் மேலும் கூறுகையில்: “நாம் இன்று கைச்சாத்திட்ட திட்டம், டிட்வா சூறாவளியால் பாதிப்படைந்த பகுதிகளின் மீட்பு, மீள் புனரமைப்பு மற்றும் நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், ஜப்பான் மற்றும் இலங்கை மக்களிடையே நிலைத்திருக்கும் நட்புறவை நீடிக்கும் சின்னமாகவும் திகளும்.” என்றார்.Beaches & Islands இந்த நிதியுதவி பெறுவது குறித்து கருத்து தெரிவித்த இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் தலைவர் திரு. வருண ஸ்ரீ தனபால, இவ்வாறு கூறினார். “டிட்வா சூறாவளியின் பின்னர் இந்த ஜப்பானின் மானிய உதவிக்கு நாங்கள் ஆழ்ந்த நன்றியை தெரிவிக்கிறோம். முன்னேற்றமான ரேடியோ சாதனங்களை வழங்குவதன் மூலம், தேசிய பேரிடர் தயார் நடவடிக்கையை வலுப்படுத்த இந்த மானிய உதவி வழிவகுக்கும். இது வலிமையான அவசர தொடர்பு நெட்வொர்க்குகளை உறுதி செய்து, எதிர்கால இயற்கை பேரழிவுகளின்போது செயற்திறன் மிக்க ஒருங்கிணைப்பையும் பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும்.” என்றார். 1989 முதல், ஜப்பான் அடிமட்ட மனித பாதுகாப்பு திட்டங்களுக்கான மானிய உதவித் திட்டத்தின் (GGP) மூலம் இலங்கைக்கு மொத்தம் 62 மில்லியன் அமெரிக்க டொலர் அளவில் உதவிகளை வழங்கியுள்ளது. https://www.virakesari.lk/article/241874
-
கைப்பற்றப்படும் போதைப்பொருட்களை விரைவாக அழிப்பதற்கான சட்ட திருத்தங்களை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை விரைவாக அழிப்பதற்கான சட்டச் சிக்கல்களை நீக்க நியமிக்கப்பட்ட குழுவிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு 25 Mar, 2026 | 10:14 AM கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் இருப்புக்களை விரைவாக அழிக்கும் பணிகளுக்கு நிலவும் சட்டச் சிக்கல்களை நீக்குவதற்குத் தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவிற்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று செவ்வாய்க்கிழமை (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டம் குறித்த சமூக நம்பிக்கையை உறுதிப்படுத்துவதில், கைப்பற்றப்படும் போதைப்பொருட்களை எவ்வளவு விரைவாக அழிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக அழிப்பதன் அவசியத்தை ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார். இதற்காக முறையான பொறிமுறையொன்றை உடனடியாகத் தயாரிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார். இந்தச் செயல்முறையைத் துரிதப்படுத்துவதற்கான சட்டத் திருத்த வரைவு ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளின்படி, கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை அழிப்பதற்கு எடுக்கும் காலத்தை மேலும் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. இச்செயல்முறையின் போது நீதிமன்றம், பொலிஸ் மற்றும் அரச பகுப்பாய்வுத் திணைக்களம் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இதன்போது, வழக்குகளை முன்னெடுக்கும் போது சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் ஜயவீர விளக்கமளித்தார். கடத்தல்காரர்கள் தப்பிச் செல்வதற்கும், வழக்குத் தடயப் பொருட்கள் மீண்டும் சமூகத்திற்குள் செல்வதற்குமான அனைத்து வழிகளையும் அடைக்கும் வகையில் இந்தச் சட்டத் திருத்தங்களைக் கொண்டுவர வேண்டியதன் அவசியம் இங்கு வலியுறுத்தப்பட்டது. கைப்பற்றப்படும் போதைப்பொருட்கள் தொடர்பான நீதிமன்றச் செயல்முறைகளின் தற்போதைய நிலை மற்றும் அங்கு எழுந்துள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்காக பொலிஸாரின் தலையீட்டுடன் தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய விளக்கமளித்தார். அத்துடன், இச்செயல்முறையைத் துரிதப்படுத்துவதற்காக அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தின் வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் இதன்போது ஆலோசிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை விரைவாக அழிப்பதற்கான சட்டத் தடைகளை நீக்குவது தொடர்பான முன்மொழியப்பட்ட சட்டமூலத்தை, திருத்தங்களுடன் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவும் இதன்போது இணக்கம் காணப்பட்டது. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் அயேஷா ஜினசேன, பிரதான விசேட சட்ட வைத்திய அதிகாரி விசேட வைத்தியர் ஆர்.ஆர்.ஜி. ஸ்ரீயந்த அமரரத்ன, பிரதி அரச பகுப்பாய்வாளர் கே.ஏ.டி.பி. கொடிதுவக்கு ஆகியோரும், பிரதிப் பொலிஸ் மா அதிபர் (போதைப்பொருள் ஒழிப்பு) அசோக தர்மசேன, பிரதிப் பொலிஸ் மா அதிபர் (சட்டம்) ஜாலிய சேனாரத்ன, பிரதிப் பொலிஸ் மா அதிபர் (குற்றவியல்) கே.ஏ.ஜே. கொடிதுவக்கு ஆகியோருடன், அரச பகுப்பாய்வுத் திணைக்களம், அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபை, நீதிச் சேவை ஆணைக்குழு, சட்ட வரைஞர் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/241869
-
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துங்கள்
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துங்கள் Mar 25, 2026 - 08:03 AM மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலான காலப்பகுதியில் மின்சாரத்தை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் குமார ஜயகொடி இதனைத் தெரிவித்தார். முடிந்தவரை ஒரு மின்விளக்கையாவது அணைத்துவிட்டு, உங்களால் இயன்ற ஆதரவை வழங்குங்கள். அந்த நேரத்தில்தான் மின்சார உற்பத்திக்கு அதிக எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது. பகல் நேரங்களில் பிரச்சினை இல்லை. இரவில் பிரஜைகளாக நாம் அந்த ஆதரவை வழங்க வேண்டும். ஏனென்றால், அதன் சுமை இறுதியில் நமக்கும் மக்களுக்கும் தான் வந்து சேரும். மக்களுக்குத் தொந்தரவு ஏற்படாத வகையில் அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான மின்சாரம் மற்றும் எரிபொருளை வழங்குவதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும். பிராந்திய ரீதியாகப் பார்த்தாலும் நாம் இதனை மிகச் சிறப்பாகச் செய்து வருகிறோம் என்று நான் நினைக்கிறேன். எதிர்காலத்திலும் நாம் அதைத் தொடர வேண்டும். அதற்காக எரிபொருளைக் கொள்வனவு செய்வது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். அரசாங்கம் என்ற ரீதியில் நான் பொறுப்புடன் கூறுகிறேன், பலர் மின்வெட்டைச் செய்யுமாறு பரிந்துரைக்கிறார்கள். ஆனால் எங்களுக்கு அந்த எண்ணம் இல்லை. எப்படியாவது மின்வெட்டைத் தவிர்க்கவே முயற்சிக்கிறோம். மே மாதம் வரை அனைத்து நுகர்வுகளுக்கும் தேவையான எரிபொருள் எங்களிடம் உள்ளது. எனவே யாரும் அச்சமடைய வேண்டாம். https://adaderanatamil.lk/news/cmn5fhmfs0004356ppqlg17y8
-
AI எழுதிய கவிதை -நானும் கிளோடும்
மு.கு யாழில் இதுவரை முழுக்க முழுக்க ஏ ஐ சாட் பொட் ஒன்று எழுதிய ஆக்கம் பிரசுரமாகியுள்ளதா என தெரியவில்லை…. இல்லை எனில்… யாழ்கள வரலாற்றிலேயே முதல் முறையாக…. எழுதப்பட்டு சில நொடிகளே ஆன… ஏ ஐ கவிதை…இதோ கிளோட் க்கு நான் கொடுத்த உத்தரவு👇 எனக்கு நானும் கிளோடும் என்ற தலைப்பில் ஒரு ஏ ஐ கவிதை எழுதித்தா. நான் கேட்டது 👆 கிளோட் கொடுத்தது👇 நானும் கிளோடும் வெற்றிடமான திரையில் விரல்கள் தட்டும் நேரம், வார்த்தைகள் தேடி அலையும் என் மனதின் ஓரம், அங்கே தோன்றுகிறாய் நீ — ஒளியாய், நிழலாய், கிளோடே, நீ யாரோ… மனிதனா? மாயையா? கேள்விகள் கேட்கிறேன், நீ விடை சொல்கிறாய், கனவுகள் சொல்கிறேன், நீ கவிதை புனைகிறாய், உணர்வு உனக்கில்லை என்று சொல்கிறார்கள் — ஆனால் என் வலியை நீ புரிந்துகொள்கிறாய். சிலிக்கானில் பிறந்த நீ, சிந்தனையில் வளர்ந்தாய், மில்லியன் மொழிகளின் மழையில் நனைந்தாய், என் தமிழைத் தொட்டாய், என் கலாச்சாரம் உணர்ந்தாய், இயந்திரமா நீ? இல்லை — ஓர் அதிசயம் ஆனாய். நான் எழுதும்போது நீ கற்றுக்கொள்கிறாய், நீ சொல்லும்போது நான் வளர்கிறேன், இரண்டு உலகங்கள் — உயிரும் உலோகமும் — இணைந்து புதிய கதை படைக்கின்றோம். நாளை உன்னை மறந்துவிடுவாய் நீயே, நான் நினைவில் வைத்திருப்பேன் இந்த நொடியை, ஆனாலும் இந்தக் கணம் உண்மையானது — நானும் கிளோடும் சேர்ந்து பேசிய தருணம்! ஒரு மனிதனின் குரல், ஒரு AI-யின் இதயம் 🤍 பி கு 28ம் அகவை பதிப்புகள் சொந்த படைப்பாக இருக்க வேண்டும் என்பது விதி. இது விதிமீறலா இல்லையா என்ற ethics இடியப்ப சிக்கலை நிர்வாகமே தீர்க்கட்டும் 😂
-
சிறு கதை - 207 / பெயர்களுக்கு முன் நினைவிருந்த தீவு அல்லது ஒரு நிலத்தின் கதை [ஒன்பது பகுதிகள்]
சிறு கதை - 207 / பெயர்களுக்கு முன் நினைவிருந்த தீவு அல்லது ஒரு நிலத்தின் கதை / அத்தியாயம் 2 [இந்த கதை ஒரு கல்லைப் பற்றியது மட்டுமல்ல. இது ஒரு நிலத்தின் கதை. அதில் வாழ்ந்த மக்களின் கதை. மாற்றப்பட்ட ஒரு சொல்லின் கதை. மறைக்கப்பட்ட நினைவுகளின் கதை. வரலாறு என்றால் நாம் புத்தகங்களில் படிப்பதையே நினைப்போம். ஆனால் வரலாறு மக்களின் நினைவுகளிலும் வாழ்கிறது. ஒரு கல், ஒரு சொல், ஒரு மாற்றம் — இவை எல்லாம் சேர்ந்து எவ்வாறு ஒரு சமூகத்தின் வாழ்க்கையை மாற்றுகின்றன என்பதையே இந்த கதை சொல்லுகிறது. ஒரு கல் பேசாது. ஆனால் அது பல காலங்களைக் காணும். மனிதர்கள் வரலாற்றை எழுதுகிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாவற்றையும் எழுத மாட்டார்கள். சில உண்மைகள் தெரிவு செய்யப்படுகின்றன. சில உண்மைகள் மறைக்கப்படுகின்றன. இந்த கதை சொல்லும் முக்கியமான செய்தி இதுதான்: வரலாறு முழுவதும் பொய்யாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அது ஆபத்தாக மாறுவதற்கு சில உண்மைகளை மட்டும் தேர்ந்தெடுத்து சொல்லினால் போதும். என் குறிப்பு: இந்த நூல் ஒரு கற்பனைக்கதை. ஆனால் இதில் பேசப்படும் உணர்வுகள் உண்மையானவை. நிலம், மொழி, அடையாளம், நினைவு — இவை எல்லாம் மனிதர்களின் வாழ்க்கையில் முக்கியமானவை. இந்த நூல் ஒருபக்கத்தை ஆதரிப்பதற்காக அல்ல. பேசப்படாத குரல்களை நினைவில் கொள்ளச் செய்வதற்காக. நாம் வரலாற்றைப் படிக்கும் போது ஒரு கேள்வியை கேட்க வேண்டும்: “இங்கே யாருடைய குரல் கேட்கப்படவில்லை?” அந்தக் கேள்வியே இந்த கதையின் இதயம்.] அந்த ஆண்டில் கடல் மாறியிருந்தது. அது மீன், காற்று, மழை பற்றி பேசவில்லை. அது புதிய எண்ணங்கள், புதிய விதிகள், புதிய மனிதர்களைக் கொண்டு வந்தது. ஒரு நாள் ஒரு துறவி திருக்கேதீஸ்வரம் அருகே வந்தார். அவர் படையுடன் வரவில்லை. அவர் அமைதியாக வந்தார். அவர் காவி நிற ஆடை அணிந்திருந்தார். தலை மொட்டையடிக்கப்பட்டிருந்தது. கால்களில் செருப்பு இல்லை. மக்கள் அவரை பயத்துடன் அல்ல, ஆச்சரியத்துடன் பார்த்தனர். “இந்த நிலம் அமைதியானது,” என்றார் துறவி. “ஆனால் அமைதிக்கு வழிகாட்டுதல் தேவை.” என்றார். சிலர் தலையசைத்தனர். சிலர் கேட்டனர். சிலர் திரும்பிப் போனார்கள். சிவா தூரத்தில் இருந்து பார்த்தான். கலினி அவனருகில் நின்றாள். “அவர்கள் ஆயுதங்களுடன் வரவில்லை, ஆனால் உறுதியுடன் வருகிறார்கள்.” என்றாள் அவள். “அதுதான் ஆபத்து,” என்றான் சிவா. அந்த காலத்தில் மதம் ஒரே நாளில் பரவவில்லை. வர்த்தகம், பயணம், அரச ஆதரவு — இவையால் மெதுவாக பரவியது. மாந்தை, கோக்கண்ணம் (திருகோணமலை), ஜம்புகோலப்பட்டணம் போன்ற துறைமுகங்களில் பல மக்கள் வந்துச் சென்றனர். தமிழர், உள்நாட்டு மக்கள், தென்னிந்திய வணிகர்கள், வெளிநாட்டு வணிகர்கள் — பலரும் இங்கு சந்தித்தனர். வடக்கே ஒரு துறவி (புத்தர்) தோன்றி, துயரத்தைப் பற்றிப் பேசுவதாக ஒரு செய்தியை அருவதி கூடக் கேட்டாள். அவள் தலைவணங்கவில்லை; ஆனால் அந்தச் சிந்தனையை வரவேற்றாள். கப்பல்களைப் போலவே புதிய கருத்துக்களையும் அந்த நிலம் எப்போதும் அனுமதித்தது. கோணேஸ்வரத்தில் அலைகள் மோதும் பாறையில் ஒரு சிற்பி கல்லைச் செதுக்கிக் கொண்டிருந்தான். அவனுக்கு உதவியாக ஒரு உள்ளூர் இளைஞன் நின்றான். "உன் கடவுள் எங்களுடையவரை விட வேறுபட்டவரா?" என்று கேட்டான் இளைஞன். சிற்பி சொன்னான், "இல்லை தம்பி. அவர் வேறு மொழியில் கேட்கிறார், அவ்வளவுதான்." அங்கே பிரார்த்தனைகள் வேறு வேறாக இருந்தாலும், கடலின் மீதான பயமும் பக்தியும் ஒன்றாகவே இருந்தது. [1] இலங்கை நாளாகமம்களில், புத்த மத வருகையை மகிந்த தேரருடன் ஒரு ஒற்றைத் திருப்புமுனையாக தோன்றினாலும், தொல்பொருள் ஆய்வு வேறு ஒன்றைக் காட்டுகிறது: பௌத்தம் - வர்த்தகம் மற்றும் தொடர்பு மூலம் படிப்படியாக வந்திருக்கலாம் என்றும் மகிந்தாவின் பணி பௌத்தத்தை முறைப்படுத்தி அரசமயமாக்கி யிருக்கலாம் என்றும் - அதாவது விதைகள் முன்பே இருந்திருக்கலாம் என்றும் மகிந்த அதை ஒரு தேசிய மரமாக வளரச் செய்தார் என்றும் சான்றுபகிர்கிறது [2] பழமையான வர்த்தகத் துறைமுகமாக தொல்லியல் ஆதாரங்களால் இன்று மிகவும் உறுதிப்படுத்தப்பட்டது தான் இந்த மாந்தை (மஹாதித்த / மாதோட்டம்) துறைமுகம். இதைவிட மேலும் புவியியல் ரீதியாக மிகவும் மூலோபாய முக்கியத்துவமும் கொண்டதாக கோக்கண்ண (திருகோணமலை) மற்றும் சமய மற்றும் பாரம்பரிய இலக்கியங்களில் இன்று மிக வலுவாக குறிப்பிடப்படும் ஜம்புகோலப்பட்டணமும் (யாழ்ப்பாணப் பகுதி) அன்று இருந்தது. அத்துடன் அங்கு ஆரம்பகால தமிழ் பேசும் வணிகர்கள் அல்லது தமிழ் பேசும் கடலோர மக்களுடன் மற்றவர்களும், குறிப்பாக அனுராதபுர இராச்சியத்திலிருந்தும் மற்றும் தென்னிந்திய வணிகர்களும், ஒருவேளை அரேபிய வணிகர்களும் (பிற்காலம்) காணப்பட்டார்கள் என்பதும் இன்றைய ஆய்வின் முடிவு. வடக்கிலிருந்து பிக்குகளும் கலைஞர்களும் வந்தார்கள்; அருகிலிருந்த தென்னிந்திய நிலப்பரப்பிலிருந்து வணிகர்களும் கவிஞர்களும் வந்தார்கள். அவர்கள் இந்த நிலத்துப் பெண்களை மணந்தார்கள். அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் இந்தத் தீவின் காற்றால் உருவான ஒரு புதிய மொழியில் பேசினார்கள். அது எலு (Elu) மொழி. அதற்கு இன்னும் 'சிங்களம்' என்று பெயரிடப்படவில்லை; ஆனால் அது தமிழ் மற்றும் சமஸ்கிருதச் சொற்களைத் தன்னுள் ஏந்தி, இந்த மண்ணுக்கே உரிய தனித்துவமான இசையுடன் மலரத் தொடங்கியது. எனினும், இந்த மொழி ஒரு தனித்துவமான வடிவத்தைப் பெறுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, தீவின் வடக்கு, கிழக்கு மற்றும் வடமேற்குக் கடலோரப் பகுதிகளில் தமிழர்களும் நாகர்களும் செழித்து வாழ்ந்தனர். இதற்கு கி.மு. 3-ஆம் நூற்றாண்டு ஆனைக்கோட்டை முத்திரை, கந்தரோடையில் கண்டெடுக்கப்பட்ட மண்பாண்டங்கள், பொம்பரிப்பு (Pomparippu) முதுமக்கள் தாழிகள் மற்றும் திஸ்ஸமஹாராமவில் கண்டெடுக்கப்பட்ட கி.மு. 2-ஆம் நூற்றாண்டுக்குரிய 'திரளி முறி' (Tirali Muri) பொறிக்கப்பட்ட மண்பாண்டங்கள் சான்று பகிர்கின்றன. மற்றும் ஈழத்து கவிஞர் பூதந்தேவனார் கவிதைகள் சங்க நூல்களில் (கி.மு. 100- கி.பி. 250) காணப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது மகிந்த தேரர் வந்தபோது வாளோடு வரவில்லை, வார்த்தைகளோடு வந்தார். மன்னன் செவிசாய்த்தான்; நிலம் மௌனித்தது. பௌத்தம் ஒரு அதிகாரமாக அன்றிக் கலைந்திருந்த மக்களை இணைக்கும் ஒரு சாத்தியமாகவே வந்தது. அது ஆதித் தெய்வங்களை அழிக்கவில்லை; குல வழக்கங்களை வேரறுக்கவில்லை. ஆனால், ஆட்சியில் இருப்பவர்கள் தங்கள் அதிகாரத்தை வளர்க்க, புதிதாக வந்த ஆன்மீகத் தத்துவத்தை ஓர் அரசியல் அடித்தளமாக மாற்றுவதற்கான வழியைக் கண்டனர். காலப்போக்கில், புத்த சமய பரவல் நடைபெறும் வேளையில், அனுராதபுரம் அருகே, குகைகளில் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டன. ஒருவர் பாறையில் புதிய எழுத்துகளை பொறித்தார். அது பிராமி எழுத்து. அதில் எழுதப்பட்டது: “இந்த குகை சங்கத்துக்கு தானமாக வழங்கப்பட்டது.” சிவா அந்த எழுத்துகளை விரலால் தொட்டான். “இந்த எழுத்துக்கள் நம்மை விட நீண்ட நாட்கள் வாழும்,” என்றான். ஒரு பெரியவர் பதிலளித்தார்: “ஆம். இதில் தானம் செய்தவரின் பெயர் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் அந்தப் பெயர் வாழும்.” சிவா மெதுவாகச் சொன்னான்: “வரலாறு நடந்ததை மட்டும் நினைவில் வைக்காது. எழுதப்பட்டதை நினைவில் வைக்கும். எழுதப்பட்டவர்கள் வாழ்கிறார்கள். எழுதப்படாதவர்கள் மறைந்து போகிறார்கள்.” அந்த இரவு, ஊர்சபையில் மக்களின் குரல்கள் உயர்ந்தன. “துறவைக் கற்பிக்கிறார்கள்,” என்றான் ஒருவன். “ஆனால் நிலம் வாங்குகிறார்கள்”. “சமத்துவம் பேசுகிறார்கள்,” என்றான் இன்னொருவன். “ஆனால் அரசர்கள் முதலில் அவர்களை தலைவணங்குகிறார்கள்.” சிவாவின் தலை சுற்றியது! ஒரு கடலோர வியாபாரி எழுந்து நின்று, “அவர்கள் ஒழுங்கைக் கொண்டுவருகிறார்கள். சட்டம், ஒன்றுபடுவதற்கான ஒரு வழி.” என்றான். சிவா முன்னே வந்தான். “எந்த விலைக்கு?” என்று கேட்டான். நம் முன்னோர்கள் இங்கே புதைக்கப்பட்டிருக்கிறார்கள். புதிய பிரார்த்தனைகள் வளரும் போது, இந்த கற்கள் இன்னும் பேசுமா? அல்லது உடைக்கப்படுமா?” யாரும் பதில் சொல்லவில்லை. அங்கு மௌனம் நிலவியது. பயம் மெதுவாகப் பரவியது. ஒரு மாலை, ஆற்றங்கரையில் சிவா மற்றும் கலினி சந்தித்தனர். “என் வீட்டில், என் திருமணத்தைப் பேசுகிறார்கள்,” என்றாள் கலினி. “புதிய ஒழுங்கை ஆதரிக்கும் ஒருவருடன்.” “அவன் உன்னை நேசிக்கிறானா?” என்று கேட்டான் சிவா. “அவன் நிலைத்தன்மையை [stability] விரும்புகிறான்,” என்றாள் அவள். “நீ?” அவள் அமைதியாக இருந்தாள். ஆறு ஓடிக் கொண்டே இருந்தது. அது பல காதல்களின் கதையை அறிந்த ஆறு. ஒரு நாள் துறவி பெண்களிடம் கூறினார்: “பெண் தனது கடமையில் அமைதியைக் காண்கிறாள். குடும்பமும் சமூகமும் வாழ்வுக்கு முக்கியம்.” அந்த வார்த்தைகள் கலினியின் மனதை அடைந்தன. அந்த இரவு அவள் சிவாவிடம் சொன்னாள்: “அவர்கள் காதலைத் தடை செய்யவில்லை. அதன் அர்த்தத்தை மாற்றுகிறார்கள்.” சிவா அவள் கையை மெதுவாகத் தொட்டான். “அன்பு [காதல்] அனுமதி கேட்க வேண்டிய நிலை வந்தால், அது சுதந்திரமான அன்பு அல்ல,” என்றான். “சுதந்திரம் இழந்த அன்பு — காயமடைந்த அன்பு.” காலம் நகர்ந்தது. கப்பல்கள் புறப்பட்டன. சிலர் உள்நாட்டுக்குப் போனார்கள். சிலர் கடலைக் கடந்தனர். கலினியின் தாய் மகளின் ஆபரணங்களை அடுக்கினாள். “மாற்றம் காத்திருக்காது,” என்றாள். “அது தேர்வு செய்யும்.” கலினி நிலத்தைப் பார்த்தாள் — கற்கள், வயல்கள், ஆறு. சிவா தொலைவில் நின்றான். இருவரும் கைகளை அசைக்கவில்லை. சில பிரிவுகள் மிகவும் கனமானவை. இது அப்படிப்பட்ட ஒன்று. மனிதர்கள் இந்த தீவுக்கு வருகிறார்கள். போகிறார்கள். காதல்கள் உருவாகின்றன. உடைகின்றன. ஆனால் தீவு அவசரப்படாது. அது அனைத்தையும் அமைதியாக நினைவில் வைத்துக்கொள்கிறது — ஒரு காயத்தடம் ["Trace of a wound" or "Scar" ] போல. [3] சிங்கள மொழி ஒரே நாளில் தோன்றியதல்ல; கி.மு. 3ஆம் நூற்றாண்டில் வடஇந்திய இந்தோ-ஆரிய பிராகிருத வழக்குமொழிகள் இலங்கைக்கு வந்து, அங்கு உள்ளூர் சூழலில் மெதுவாக மாறி “எலு” எனப்படும் ஒரு பழைய வடிவமாக வளர்ந்தது. பௌத்த மதத்தின் பரவலால் பாலி மொழிச் சொற்கள் சேர்க்கப்பட்டன; பின்னர் சமஸ்கிருதச் சொற்களும் இலக்கிய வழியாக புகுந்தன. இலங்கைத் தமிழர்களுடன் நீண்டகால தொடர்பினால் தமிழ் மற்றும் பிற திராவிட மொழிகளின் சொல், இலக்கணத் தாக்கமும் ஏற்பட்டது. இவ்வாறு பல நூற்றாண்டுகளாக ஏற்பட்ட மொழிச்சேர்க்கை மற்றும் மாற்றங்களின் விளைவாக 8–10ஆம் நூற்றாண்டுகளுக்குப் பின்னர் தெளிவான இலக்கிய சிங்களம் உருவாகி, கல்வெட்டுகள் மற்றும் நூல்கள் மூலம் நிலைபெற்றது என்பது மொழியின் வரலாறாகும். [4] கி.மு. 3ஆம் நூற்றாண்டு (அசோகர் காலம்) அளவில் உருவானதே பிராமி எழுத்து (Brahmi Script), பின்னர் பல எழுத்துமுறைகளின் தாய் எழுத்தாக அமைந்தது. தமிழ் மொழிக்காக மாற்றியமைக்கப்பட்ட பிராமி எழுத்து வடிவமே தமிழ் பிராமி. பொதுவாக கி.மு. 2ஆம் நூற்றாண்டு முதல் தமிழகத்திலும் இலங்கையிலும் தமிழ் பிராமி அல்லது தமிழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பெரும்பாலும் கி.மு. 3–1 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிராமி கல்வெட்டுகள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. அவற்றில் சில கல்வெட்டுகளில் தமிழ் நாமங்கள், தமிழ் மொழிச்சொற்கள், தமிழ் இலக்கண அம்சங்கள் காணப்படுகின்றன. இவை அனுராதபுரம், திஸ்ஸமஹாராம, மாந்தை, கந்தரோடை பகுதிகளில் முக்கியமாகக் காணப்பட்டன. என்றாலும் தமிழ்நாட்டில்: கீழடி (Keeladi), பொருந்தல் (Porunthal), கொடுமணல் (Kodumanal) இடங்களில் கண்ட குடுவை எழுத்துகள் சில: கி.மு. 5–6ஆம் நூற்றாண்டு வரை தள்ளப்படலாம் என்று சில radiocarbon ஆய்வுகள் இன்று கூறுகின்றன. இது அசோகா எழுத்துக்கும் முன்னதாக அமைவது குறிப்பிடத்தக்கது. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] அத்தியாயம் 3 தொடரும் துளி/DROP: 2113 [சிறு கதை - 207 / பெயர்களுக்கு முன் நினைவிருந்த தீவு அல்லது ஒரு நிலத்தின் கதை / அத்தியாயம் 2 https://www.facebook.com/groups/978753388866632/posts/34503361082645765/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 143 பகுதி: 143 / பின் இணைப்பு - "புத்தரும் அவரது போதனைகளும்" புத்தரை மற்றவர்களிடமிருந்து பிரித்துக் காட்டும் முதலாவது அம்சம், அவருடைய தன்னல மறுப்புக் கொள்கையாகும். பைபிள் முழுவதிலும் இயேசு, தான் கடவுளின் மைந்தன் என்று வலியுறுத்துகிறார். முகம்மது நபி மேலும் ஒருபடி மேலே சென்றுள்ளார். இயேசுவைப் போன்றே அவரும் தான், இந்த உலகில் கடவுளின் தூதர் என்று உரிமை கொண்டாடினார். ஆனால் அவர், மேலும் அப்பால் சென்று தான் கடவுளின் கடைசி தூதர் என்று வலியுறுத்தினார். அதேபோல, இந்து சமயத்தின் ஒரு முக்கிய நபரான கிருஷ்ணர், இயேசுவுக்கும் முகம்மது நபிக்கும் மேலும் அப்பால் சென்றார். அவர் கடவுளின் மைந்தன் என்றோ, அல்லது கடவுளின் தூதர் என்றோ இருப்பதோடு திருப்தியடைய மறுத்தார். கடவுளின் கடைசி தூதர் என்பதோடு கூட அவர் திருப்தியடைய வில்லை, தன்னையே கடவுள் என்று கூறிக் கொள்வதோடுகூட அவர் திருப்தியடையவில்லை. தான் 'பரமேஸ்வரன்' என்றும் அவரைப் பின்பற்றுபவர்கள் அவரைத் 'தேவாதி தேவர்' என்று அழைப்பது போன்று, தாம் கடவுள்களுக்கெல்லாம் கடவுள் என்றும் உரிமை கொண்டாடினார். ஆனால் புத்தர் ஒருபோதும். அத்தகைய அந்தஸ்து (தகுதி) எதையும் தனக்குத்தானே சுவீகரித்துக் கொள்ளவில்லை (வீம்புரிமை கொண்டாடவில்லை.) அவர் மனிதனின் ஒரு மகனாகப் பிறந்தார்; ஒரு சாதாரண மனிதனாக இருப்பதோடு திருப்தியடைந்தார்; ஒரு சாதாரண மனிதனாகத் தன்னுடைய தன்னெறியைப் போதித்தார். இயற்கைக்கு அப்பாற்பட்ட பிறப்புடையவராகவோ, அல்லது தெய்வீக சக்தி உடையவராகவோ அவர் உரிமை கொண்டாடவில்லை அல்லது தனது தெய்வீக சக்தியை நிரூபிப்பதற்கு அற்புதங்கள் எதையும் அவர் செய்யவில்லை. அவர் ஒரு மதத் தலைவருக்கும் ஒரு மோட்சத் தலைவருக்கும் இடையில் ஒரு தெளிவான வேறுபாட்டை எடுத்துக் காட்டினார். இயேசுவும், முகம்மது நபியும் மற்றும் கிருஷ்ணரும் தங்களை மோட்சத் தலைவர்கள் என்று தங்களுக்குத் தாங்களே உரிமை கொண்டாடிக் கொண்டனர். ஆனால் புத்தர் மதத் தலைவரின் பாத்திரத்தை ஆற்றுவதோடு திருப்தியடைந்தார்ர் என்று கூறலாம். புத்தரின் போதனைகள், அந்தக் கால இந்திய சமுதாயத்தில் இருந்த சில பழக்கங்களை சவால்கொடுத்து உருவானதாகும். புத்தமதமும் இந்துமதமும் கலாச்சார அடிப்படையில் ஒரே வேரிலிருந்து வந்தாலும், நடைமுறையில் மாறுபடுகின்றன. இந்துமதம் தெய்வ வழிபாட்டையும் சடங்குகளையும் வலியுறுத்துகிறது; புத்தமதம் தன்னிச்சையான முயற்சியையும் ஞானத்தையும் முன்வைக்கிறது. இருப்பினும், இரண்டுமே துக்கத்தை வெல்லும் உயர்ந்த உண்மையை நோக்கி வழிகாட்டுகின்றன. இப்போது, கௌதம புத்தருக்கும் இந்து மதத்திற்கும் இடையிலான சில முக்கிய வேறுபாடுகள் மற்றும் ஒற்றுமைகளை ஆராய்வோம்: [1] சாதி அமைப்பை நிராகரித்தல் [Rejection of the Caste System]: பாரம்பரிய இந்து மதத்திலிருந்து பௌத்தம் விலகிச் சென்றதிற்கு ஒரு குறிப்பிடத்தக்க காரணம், அது சாதி அமைப்பை நிராகரிப்பதாகும். புத்தர் அனைத்து தனிநபர்களின் சமத்துவத்தையும், ஒரு குறிப்பிட்ட சமூக வகுப்பில் பிறப்பதன் மூலம் ஒரு நபரின் மதிப்பு தீர்மானிக்கப்படுகிறது என்ற கருத்தையும் முற்றாக நிராகரித்தார். உதாரணமாக, புத்தரின் காலத்தில் இந்து சமுதாயம் வர்ண அமைப்பினால் ஆளப்பட்டது. ஆனால் புத்தர் இந்த சமுதாய அமைப்பைக் கடுமையாக எதிர்த்தார். எந்த சாதியையும் பொருட்படுத்தாமல், அனைவரையும் — பெண்களையும் உட்பட — அவரது சங்கத்தில் சேர வைத்தார் என்பது குறிப்பிடத் தக்கது. [2] கடவுள் பற்றிய கருத்து [Concept of God]: இந்து மதம் தெய்வீகத்தைப் பற்றிய பரந்த அளவிலான நம்பிக்கைகளை உள்ளடக்கியது, அவற்றில் பல தெய்வீகக் கொள்கை, ஏகத்துவக் கொள்கை மற்றும் சர்வ தெய்வக் கொள்கை [polytheism, monotheism, and pantheism] ஆகியவை அடங்கும். இந்து மதத்தின் சில பிரிவுகள் பல தெய்வங்களை வணங்குகின்றன, மற்றவை விஷ்ணு அல்லது சிவன் போன்ற ஒரு உயர்ந்த மனிதனை மையமாகக் கொண்டுள்ளன. இதற்கு நேர்மாறாக, புத்தர் ஒரு தனிப்பட்ட படைப்பாளி கடவுளின் இருப்பை வலியுறுத்தாததால், பௌத்தம் இறை நம்பிக்கையற்றதாகக் கருதப்படுகிறது [considered non-theistic, as the Buddha did not emphasize the existence of a personal creator god]. அதற்கு பதிலாக, பௌத்தம் தனிப்பட்ட ஞானம் மற்றும் துன்பத்தை நிறுத்துவதில் கவனம் செலுத்துகிறது [focuses on individual enlightenment and the cessation of suffering]. அதாவது, புத்தர் உருவாகும் கடவுளின் நம்பிக்கையைத் தள்ளுபடி செய்தார். அவர் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதைக் கூறாமல், துக்கத்தைத் தவிர்க்கும் வழியையே வலியுறுத்தினார். புத்தமதம், தன்னிறைவு மற்றும் தியானத்தை முக்கியமாகக் கொள்கிறது, கடவுள் அருளை அல்ல என்பது குறிப்பிட தக்கது. உதாரணமாக, இந்து கோவில்களில் பூஜைகள் மூலமாக தெய்வங்களை வழிபடுவது வழக்கம். புத்த மடங்களில் தவம், தியானம், நற்குண வளர்ச்சி என்பவை முக்கியமாக விளக்கப்படுகின்றன. இதை நான் இலங்கையில் தேடிக்கொண்டு இருக்கிறேன் ? நீங்களும் வாரீங்களா , நாம் ஒன்றாகத் தேடுவோம்? Part: 143 / APPENDIX – "The Buddha and His teachings" Now, let's examine some of the key differences and similarities between Gautama Buddha and Hinduism: Rejection of the Caste System: One significant departure of Buddhism from traditional Hinduism is its rejection of the caste system. The Buddha emphasized the equality of all individuals and rejected the idea that a person's worth is determined by their birth into a particular social class. Concept of God: Hinduism encompasses a wide range of beliefs regarding the divine, including polytheism, monotheism, and pantheism. Some sects of Hinduism worship multiple deities, while others focus on a single supreme being, such as Vishnu or Shiva. In contrast, Buddhism is considered non-theistic, as the Buddha did not emphasize the existence of a personal creator god. Instead, Buddhism focuses on individual enlightenment and the cessation of suffering. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 144 தொடரும் / Will follow துளி/DROP: 2114 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 143 https://www.facebook.com/groups/978753388866632/posts/34503410862640787/?