24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
இந்திய- தமிழீழப் போர் மூள முன்னர் இந்தியப்படை செய்த நாசங்கள்
சரியான தகவல். நேர்த்தி 👍
-
உதவி தேவை: இந்தியக் கடற்படையால் குருநகர் "துறைமுகம்" தாக்கப்பட்டதா?
https://www.google.com/search?q=ipkf+operation+gurunagar&oq=IPKF+&gs_lcrp=EgZjaHJvbWUqBggBECMYJzIGCAAQRRg5MgYIARAjGCcyFAgCECMYExgnGIAEGIoFGPAFGJ4GMgYIAxBFGDsyBggEEEUYQDIJCAUQABgTGIAEMgkIBhAAGBMYgAQyCQgHEAAYExiABNIBCzUwODQ4M2owajE1qAIIsAIB8QXbeXB0ATCm7PEF23lwdAEwpuw&sourceid=chrome&ie=UTF-8
-
இந்திய- தமிழீழப் போர் மூள முன்னர் இந்தியப்படை செய்த நாசங்கள்
இந்தியன் ஆமி காலத்தில் நடந்ததை எழுதினேன்.
- Today
-
இந்திய- தமிழீழப் போர் மூள முன்னர் இந்தியப்படை செய்த நாசங்கள்
சுழிபுரத்தில் நடந்த அறுவர் படுகொலையைக் குறிப்பிடுகிறீர்களா அண்ணை? https://padippakam.com/padippakam/document/ltte/fallencadres/Chulipuram01.pdf
-
ஆறாம் தர ஆங்கில பாடக் கையேட்டில் ஓரினச்சேர்க்கை உள்ளடக்கம்: ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம்
ஆசிரியர் சங்கத்துடன் இணைந்து நானும் என்னுடைய கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
-
இலங்கையில் பிறந்த தமிழ் கல்வியாளருக்கு இங்கிலாந்தில் கெளரவ பட்டம்!
https://fb.watch/El82RWLnNI/
-
இந்திய- தமிழீழப் போர் மூள முன்னர் இந்தியப்படை செய்த நாசங்கள்
சுழிபுரத்திலும் அரியாலையிலும் போட்டுத் தள்ளியது புளட் தான். மற்றைய விபரங்கள் தெரியவில்லை.
-
'Rebuilding Sri Lanka' ஜனாதிபதி செயலணி ஸ்தாபிப்பு
'Rebuilding Sri Lanka' ஜனாதிபதி செயலணி ஸ்தாபிப்பு Dec 31, 2025 - 10:00 PM 'டித்வா' புயலைத் தொடர்ந்து பேரழிவுக்குப் பின்னரான மீட்பு, புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக 'Rebuilding Sri Lanka' ஜனாதிபதி செயலணியை நிறுவி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (31) மாலை அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட 25 பேர் கொண்ட குழுவை இந்தச் செயலணி உள்ளடக்கியுள்ளது. இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 33 ஆவது உறுப்புரையின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்தச் செயலணி நிறுவப்பட்டுள்ளது. https://docs.google.com/viewerng/viewer?url=https://ada-derana-tamil.s3.amazonaws.com/news-articles/cmju8fbj703czo29nxseozku9/documents/2469-09_T.pdf https://adaderanatamil.lk/news/cmju8fbj703czo29nxseozku9
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
@கிருபன் , @புலவர் - புலவரின் 41 தொடக்கம் 73வரையான விடைகள். 76 மற்றும் 81க்கான விடைகளை புலவர்தான் சொல்ல வேண்டும். அவரின் விடைகளான வீரத் கோலியும் கேன் வில்லியம்சனும் அணியில் இடம்பெற மாட்டினம். முதல் சுற்று குழு A: 41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND Select IND IND PAK Select PAK PAK USA Select USA Select NED Select NED Select NAM Select NAM Select 42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு A: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக IND குழு A: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக PAK 43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! NAM முதல் சுற்று குழு B: 44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS Select AUS AUS SL Select SL SL IRE Select IRE Select ZIM Select ZIM Select OMA Select OMA Select 45) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு B: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக AUS குழு B: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக SL 46) முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! OMA முதல் சுற்று குழு C : 47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG Select ENG ENG WI Select WI WI BAN Select BAN Select NEP Select NEP Select ITA Select ITA Select 48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு C: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக ENG குழு C: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக WI 49) முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! ITA முதல் சுற்று குழு D : 50) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) NZ Select NZ NZ SA Select SA SA AFG Select AFG Select CAN Select CAN Select UAE Select UAE Select 51) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு D: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக NZ குழு D: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக SA 52) முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! CAN சுப்பர் 8 சுற்றுப் போட்டி கேள்விகள் 53) முதல் 64) வரை. 53) சுப்பர் 8: குழு 2:சனி 21 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y2 எதிர் Y3 NZ PAK PAK 54) சுப்பர் 8: குழு 2:ஞாயிறு 22 பெப்: 9:30 AM, பல்லேகல, Y1 எதிர் Y4 ENG SL ENG 55) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 22 பெப்: 1:30 PM, அஹமதாபாத், X1 எதிர் X4 IND SA IND 56) சுப்பர் 8: குழு 1:திங்கள் 23 பெப்: 1:30 PM, வாங்கெடே, X2 எதிர் X3 AUS WI AUS 57) சுப்பர் 8: குழு 2:செவ்வாய் 24 பெப்: 1:30 PM, பல்லேகல, Y1 எதிர் Y3 ENG PAK ENG 58) சுப்பர் 8: குழு 2:புதன் 25 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y2 எதிர் Y4 NZ SL SL 59) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 9:30 AM, அஹமதாபாத், X3 எதிர் X4 WI SA SA 60) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 1:30 PM, சென்னை, X1 எதிர் X2 IND AUS AUS 61) சுப்பர் 8: குழு 2:வெள்ளி 27 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y1 எதிர் Y2 ENG NZ NZ 62) சுப்பர் 8: குழு 2:சனி 28 பெப்: 1:30 PM, பல்லேகல, Y3 எதிர் Y4 PAK SL SL 63) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 9:30 AM, டெல்லி, X2 எதிர் X4 AUS SA AUS 64) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ், X1 எதிர் X3 IND WI IND சுப்பர் 8 குழு 1: 65) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND Select IND IND AUS Select AUS AUS WI Select WI Select SA Select SA Select 66) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) சுப்பர் 8: குழு 1: முதலிடம் - ? (3 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக AUS சுப்பர் 8: குழு 1: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக IND 67) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! WI சுப்பர் 8 குழு 2: 68) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG Select ENG ENG NZ Select NZ Select PAK Select PAK Select SL Select SL SL 69) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 68) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) சுப்பர் 8: குழு 2: முதலிடம் - ? (3 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக ENG சுப்பர் 8: குழு 2: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக SL 70) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! PAK அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 66)க்கும் 69) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 71) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: புதன் 04 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ்/கொழும்பு (RPS), AUS SL AUS 72) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: வியாழன் 05 மார்ச்: 1:30 PM, வாங்கெடே, ENG IND IND இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 71)க்கும் 72) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 73) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு 08 மார்ச்: 1:30 PM, அஹமதாபாத்/கொழும்பு (RPS) அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி AUS IND AUS
-
இந்த ஆண்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்: 60 பேர் உயிரிழப்பு
இந்த ஆண்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்: 60 பேர் உயிரிழப்பு Dec 31, 2025 - 09:18 PM இந்த ஆண்டு நிறைவடைவதற்கு இன்னும் சில மணித்தியாலங்களே எஞ்சியுள்ள நிலையில், கடந்த 8 மணித்தியாலங்களுக்குள் நாட்டின் இரு வேறு பகுதிகளில் இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதற்கமைய, இந்த ஆண்டில் இதுவரை 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், அவற்றில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 57 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று (30) இடம்பெற்ற இந்த இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களினால் வழிநடத்தப்பட்டவை என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கொஹுவலை, போதியவத்தை பகுதியில் நேற்று இரவு 10.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிதாரி தப்பிச் செல்லும் காட்சி அங்கிருந்த சிசிடிவி (CCTV) கெமராவில் பதிவாகியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 16 வயது சிறுமி ஒருவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். துப்பாக்கிதாரி தனது இலக்கைத் தவறவிட்டு சிறுமி மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். விசாரணைகளின் படி, குறித்த சிறுமி வசிக்கும் வீட்டிற்கு அருகில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய ஒருவர் வசிப்பதுடன், அவர் 'படோவிற்ற அசங்க' எனும் குற்றவாளியின் தரப்பைச் சேர்ந்தவர் என்பதும், தற்போது சிறையிலிருப்பதும் தெரியவந்தது. கடந்த 22ஆம் திகதி நுகேகொடையில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்திற்கு இவர் உதவியதாக, படோவிற்ற அசங்கவின் எதிர்தரப்பான 'அவிஷ்க ஏஷான்' என்பவர் சந்தேகித்துள்ளார். இதன் காரணமாகவே அவரது தாய் மற்றும் மைத்துனரை இலக்கு வைத்து நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூடு நடத்திய போது, "படோவிற்ற காரர்களுக்கு நீங்கள்தான் தகவல் கொடுக்கிறீர்கள்" என துப்பாக்கிதாரிகள் தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. குறித்த நபர் ஒருகாலத்தில் ஏஷான் என்பரின் தரப்பில் இருந்துவிட்டு, பின்னர் அத்தரப்பை விட்டு விலகி அவர்களின் வியாபாரத் தகவல்களை படோவிற்ற அசங்கவிற்கு வழங்கியதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். இதேவேளை, களுத்துறை நாகொடை போதனா வைத்தியசாலையில் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர் மீது இன்று (31) காலை இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் திலீப் சதுரங்க என்ற 'ரஜவத்தே சதுவா' என பொலிஸார் தெரிவித்தனர். இவர் கடந்த 13ஆம் திகதி ஹெரோயின் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். களுத்துறை சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த அவர், கடந்த 29ஆம் திகதி ஏனைய கைதிகள் சிலரால் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். ரிவோல்வர் (Revolver) ரக துப்பாக்கியால் தாக்குதல் நடத்திவிட்டு துப்பாக்கிதாரி தப்பிச் சென்றுள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் 'களுத்துறை நவீன்' எனும் குற்றவாளியின் தரப்பைச் சேர்ந்தவர் என்பதுடன், துப்பாக்கிச் சூட்டில் அவரது வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. https://adaderanatamil.lk/news/cmju6xyhz03cyo29ntnu66mvb
-
2025-ல் மறக்க முடியாத 15 விளையாட்டு புகைப்படங்கள்
2025-ல் மறக்க முடியாத 15 விளையாட்டு புகைப்படங்கள் பட மூலாதாரம்,Getty Images ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 2025-ல் விளையாட்டு உலகில் பல முக்கியமான தருணங்கள் அரங்கேறியிருக்கின்றன. வெற்றிகள், தோல்விகள், சாதனைகள் என பல்வேறு தருணங்களில் பல்வேறு உணர்வுகள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. கிரிக்கெட், கால்பந்து, தடகளம் என பல்வேறு போட்டிகளில் ரசிகர்களைக் கவர்ந்த சில புகைப்படங்களின் தொகுப்பு இங்கே பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த ஒருநாள் போட்டியில் ரோஹித் ஷர்மா சதம் அடித்ததும் எடுக்கப்பட்ட புகைப்படம். இந்தியாவின் இரண்டு முன்னணி வீரர்கள் இருக்க, பின்னால் ஸ்கிரீனில் 100 என்ற மிகப் பெரிய எண்கள் தெரிவது போன்று எடுக்கப்பட்ட படம் இரு வீரர்களின் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானது பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,செளதி ப்ரோ லீக் தொடரில் அல் கலீஜ் அணிக்கெதிராக பைசைக்கிள் கிக் மூலம் கோலடித்தார் 40 வயது கிறிஸ்டியானோ ரொனால்டோ. இந்தப் போட்டியில் 4-1 என ரொனால்டோவின் அல் நசர் அணி வெற்றி பெற்றது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,முதல் முறையாக பெண்கள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், அந்த கோப்பையை வென்றதும் தனித்துவமாகக் கொண்டாடினார். நவி மும்பையில் நடந்த இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,உலக தடகள சாம்பியன்ஷிப்பின்போது போல் வால்ட்டில் 6.3 மீட்டர் தூரம் தாண்டி, தன்னுடைய முந்தைய உலக சாதனையை மீண்டும் முறியத்தார் ஸ்வீடன் வீரர் அர்மாண்ட் டுப்ளான்டிஸ். அந்த சாதனை படைத்ததும் கேலரியில் இருந்த ரசிகர்களோடு அவர் அதைக் கொண்டாடினார் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,பல ஐபிஎல் கோப்பையை ஏந்த காத்திருந்த கோலி, அந்தக் கனவு நனவானதும் தன் உணர்ச்சியை இவ்வாறு வெளிப்படுத்தினார். இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி முதல் முறையாக ஐபிஎல் சாம்பியன் ஆனது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,டெல்லியில் நடந்த பாரா உலக சாம்பியன்ஷிப் தடகளத்தில் F46 ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்றார் கியூபாவைச் சேர்ந்த கியார்மோ வரோனா கொன்சாலஸ். எறிவதற்கு முன்பாக அவர் இப்படித் தன்னைத் தயார்படுத்திக்கொண்ட விதம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்தப் போட்டியில் அவர் வெண்கலப் பதக்கம் வென்றார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியின்போது பாரிஸ் செயின்ட் ஜெர்மைன்(பிஎஸ்ஜி) அணியின் ரசிகர்கள் வைத்த பேனர் இது. அந்த அணி மேனேஜர் லூயிஸ் என்ரீக்கேவின் மகள் ஜானா 2019-ஆம் ஆண்டு இறந்தார். 9 வயதான ஜானா, புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஜானா பிஎஸ்ஜி அணியின் ஜெர்ஸி அணிந்திருப்பதுபோன்று வடிவமைத்து தங்கள் மேனேஜரை ரசிகர்கள் நெகிழவைத்தனர். இந்த இறுதிப் போட்டியில் இன்டர் மிலன் அணியை வீழ்த்தியது பிஎஸ்ஜி. அவர்களின் நீண்ட நாள் லட்சியத்தை, என்ரீக்கே பதவியேற்ற பிறகே அவர்களால் அடையமுடிந்தது பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,14 வயதில் சதம் அடித்து, மிக இளம் வயதில் ஐபிஎல் சதமடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வைபவ் சூர்யவன்ஷி. ஐபிஎல் தொடரின் இரண்டாவது அதிவேக சதத்தையும் அன்று பதிவு செய்திருந்தார் வைபவ். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ராஞ்சியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சதமடித்ததைக் கொண்டாடும் விராட் கோலி. இது கோலியின் 52வது ஒருநாள் போட்டி சதம். இதன்மூலம், ஒரு ஃபார்மட்டில் அதிக சதங்கள் அடித்தவர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை (டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்கள்) கோலி முறியடித்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,உலக தடகள சாம்பியன்ஷிப்பின் ஸ்டீபிள் சேஸ் தகுதிச் சுற்றின்போது நியூசிலாந்து வீரர் ஜார்டி பீமிஷ் தடுமாறி கீழே விழ, பின்னால் ஓடிவந்த வீரரின் ஷூ அவரது முகத்தில் பட்டது. இருந்தாலும், மீண்டும் எழுந்து ஓடி தகுதி பெற்ற பீமிஷ், இறுதிப் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கமும் வென்றார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,பெண்கள் உலகக் கோப்பை அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சேஸிங்கில் உலக சாதனை படைத்து வெற்றி பெற்றது இந்தியா. கடினமான அந்தப் போட்டியில் சதமடித்து இந்தியா வெற்றி பெறக் காரணமாக இருந்தார் ஜெமிமா ரோட்ரிக்ஸ். அந்தத் தொடரின் பாதியில் அணியிலிருந்தே நீக்கப்பட்டிருந்தவர், அதன்பிறகு மீண்டும் வாய்ப்பு பெற்று இப்படியொரு ஆட்டத்தையும் கொடுத்தார். இந்தியாவை வெற்றி பெற வைத்த பிறகு கண்ணீர் மல்க அனைவருக்கும் நன்றி கூறினார் ஜெமிமா. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அமெரிக்காவில் நடந்த முதல் கிளப் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் செல்சீ சாம்பியன் பட்டம் வென்றது. வழக்கமாக கோப்பையை அணியிடம் அளிப்பவர்கள், அதன்பிறகு விலகிவிடுவார்கள். ஆனால், செல்சீ அணிக்குக் கோப்பையைக் கொடுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அங்கேயே சில நேரம் இருந்து அந்த அணியின் கொண்டாட்டத்தோடு பங்கெடுத்தது பரவலாகப் பேசப்பட்டது பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,வெகுகாலம் ஐசிசி கோப்பைக்காகக் காத்திருந்த தென்னாப்பிரிக்க அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது. கேப்டன் டெம்பா பவுமா தலைமையில் தோல்வியே அடையாமல் ஆதிக்கம் செலுத்தி தங்கள் நீண்ட நாள் கனவை பூர்த்தி செய்தது தென்னாப்பிரிக்க அணி. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,லிவர்பூல் அணிக்காக விளையாடி வந்த டியோகோ ஜோடா, ஜூலை மாதம் நடந்த ஒரு விபத்தில் மரணமடைந்தார். அவருடைய முன்னாள் அணியான வோல்வர்ஹாம்ப்டன் வாண்டரர்ஸுக்கு எதிரான போட்டியின்போது ஜோடாவின் குழந்தைகளை மைதானத்துக்குள் அழைத்து வந்தார் லிவர்பூல் அணியின் கேப்டன் வேன் டைக். இரு தரப்பு ரசிகர்களும் அவர்களுக்கு தங்கள் அன்பை வெளிப்படுத்தினார்கள். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,லார்ட்ஸில் இந்தியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியின்போது பந்து ஸ்டம்பை நோக்கிச் செல்ல, அதைத் தடுக்க கால்பந்து வீரரைப் போல் காலை நீட்டி உதைத்தார் இங்கிலாந்து பேட்டர் ஜேமி ஸ்மித். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crrkryxpr5zo
-
புது வருட சிரிப்புகள்.
நான் போய் கத்தினா தான் புது வருசமே பிறக்கும் - சகலகலா வல்லவன் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
-
நாட்டை கட்டியெழுப்பும் தேசிய நிதியத்திற்கு ‘Rebuilding Sri Lanka’ பல்வேறு அமைப்புகள் நன்கொடை
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை வங்கி 500 மில்லியன் ரூபா நன்கொடை Published By: Vishnu 31 Dec, 2025 | 08:00 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையையும், பேரழிவால் பாதிக்கப்பட்ட நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்ப உதவும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை வங்கி 500 மில்லியன் ரூபா நன்கொடையாக வழங்கியுள்ளது. இதற்கான காசோலையை இலங்கை வங்கியின் தலைவர் காவிந்த டி சொய்சா ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார். இலங்கை வங்கியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பதில் பொது முகாமையாளர்/பிரதான நிறைவேற்று அதிகாரி வை.ஏ. ஜயதிலக, பிரதான நிதி அதிகாரி எம்.பி. ருவன் குமார மற்றும் பிரதான சந்தைப்படுத்தல் அதிகாரி சமீர தில்ஷான் லியனகே ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/234890
-
யாழில் 3012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை!
ஊர் ஒன்று கூடியிருக்கிறது. அடுத்தது என்ன தேரை ஓன்று கூடி இழுப்பதுதானே. குமாரசாமி, நீங்கள் குறிப்பிட்ட நூறு பேர்களோடு நூற்றியொன்றாக என்னையும் சேர்ததுக் கொள்ளுங்கள். “நாட்டுக்குத் தேவையெல்லாம் நாம் தேடலாம்”🙏
-
இந்திய- தமிழீழப் போர் மூள முன்னர் இந்தியப்படை செய்த நாசங்கள்
@goshan_che @Sasi_varnam @ஈழப்பிரியன் நீங்கள் மூவரும் கூறியதை வைத்து மாவீரர் பட்டியலினுள் தேடிப் பார்த்தேன். மொத்தம் 16 போராளிகள் புளட், இ.என்.டி.எல்.எஃவ்., மற்றும் ரெலோ ஆகிய தேசவிரோத கும்பல்களால் வீரச்சாவடைந்துள்ளனர். அவர்களில் புளட் என்ற கூலிப்படையைச் சேர்ந்தவர்களாலையே அதிகளவான போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஓகஸ்ட் 5ம் திகதி புலிகள் தமது ஆயுதங்களை ஒப்படைத்த பின்னரே - ஆயுதமற்றவர்களா பயணித்த போது - இவ்விந்திய கூலிப்படைகளால் தேசத்திற்கு விரோதமான முறையில் கொல்லப்பட்டனர். புலிகள் ஆயுதங்களைக் களைந்த பின்னர் இவர்களிற்கு இந்தியப் படையினர் ஆயுதங்களை வழங்கி புலிகளைக் கொல்ல தூண்டிவிட்டுள்ளனர். ஆக மொத்ததில் இந்தியா நரி வேலை செய்துள்ளது. இதையும் அறியாமல் இந்த இந்தியக் கூலிப்படைகள் தமது சொந்த இனத்தின் விடுதலைக்காகப் போராடிய வீரர்கள் ஆயுதமற்றவர்களாக இருந்தபோது கொன்றுள்ளனர். வெட்கித் தலைகுனிய வேண்டிய செயல்! இவர்களை பின்னாளில் புலிகள் வேட்டையாடியதில் எந்தத் தவறும் இல்லை. (இவர்கள் தவிர இன்னும் 6 போராளிகள் இதே காலகட்டத்தில் வீரச்சாவடைந்துள்ளனர். எனினும் அவர்களில் நால்வர் எதிர்பாராத வெடி நேர்ச்சிகளிலும் இருவர் தமிழீழக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற்படையுடனான சமரிலும் வீரச்சாவடைந்துள்ளனர். மொத்தம் 22, ஈழப்பிரியன் அவர்களின் கணக்குச் சரியே.) இந்திய நரிவேலையால் மாவீரரான போராளிகள்: வீரவேங்கை யோகன் - 16.08.1987 வேப்பங்குளம் பகுதியில் புளொட் கும்பலுடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு வீரவேங்கை அருச்சுனா, வீரவேங்கை ரஞ்சன், வீரவேங்கை கில்மன் - 26.08.1987 நானானட்டான் பகுதியில் புளொட் கும்பலின் வெறியாட்டத்தில் வீரச்சாவு வீரவேங்கை டென்சில் - 02.09.1987 பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் புளொட் கும்பலின் வெறியாட்டத்தில் வீரச்சாவு கப்டன் தனம், 2ம் லெப்டினன்ட் கண்ணன் - 04.09.1987 குருமன்காட்டுச் சந்தியில் புளொட் கும்பல் நடத்திய தாக்குதலில் வீரச்சாவு 2ம் லெப்டினன்ட் கைலை, வீரவேங்கை இரத்தினம் (சிவகுமார்) - 04.09.1987 பன்றிக்கெய்தகுளம் பகுதியில் புளொட் கும்பல் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் வீரச்சாவு வீரவேங்கை அமீர் (அமல்) - 07.09.1987 குளவிசுட்டான் பகுதியில் புளொட் கும்பல் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் வீரச்சாவு லெப்டினன்ட் கொலின்ஸ் (லூக்) - 07.09.1987 தம்பனை பகுதியில் புளொட் கும்பல் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு வீரவேங்கை ராஜேந்தர் - 12.09.1987 கிளிநொச்சி பகுதியில் ஈ.என்.டி.எல்.எவ் கும்பல் நடத்திய தாக்குதலில் வீரச்சாவு வீரவேங்கை அமலதாஸ் - 26.09.1987 ரெலோ கும்பல் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் வீரச்சாவு வீரவேங்கை தாஸ் - 02.10.1987 கற்கபுரம் பகுதியில் புளொட் கும்பலின் தாக்குதலில் வீரச்சாவு வீரவேங்கை பாபு - 07.10.1987 கற்கபுரத்தில் புளொட் கும்பல் மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு 2ம் லெப்டினன்ட் விக்கி - 08.10.1987 10ம் வாய்க்கால் பகுதியில் ஈ.என்.டி.எல்.எவ் கும்பல் மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு
-
ஆறாம் தர ஆங்கில பாடக் கையேட்டில் ஓரினச்சேர்க்கை உள்ளடக்கம்: ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம்
ஆறாம் தர ஆங்கில பாடக் கையேட்டில் ஓரினச்சேர்க்கை உள்ளடக்கம்: ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம் 31 Dec, 2025 | 07:24 PM நாட்டின் ஒழுக்க விழுமியங்களையும் கலாசாரத்தையும் சீரழிக்கும் வகையில், ஆறாம் தர மாணவர்களுக்கான ஆங்கில மொழிப் பாடக் கையேட்டில் ஓரினச்சேர்க்கை தொடர்பான விடயங்கள் சூட்சுமமாகப் புகுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பூஜ்ய யெவெல பஞ்ஞாசேகர தேரர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கொழும்பில் அமைந்துள்ள அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கத்தின் தலைமை காரியாலயத்தில் இன்று புதன்கிழமை (31) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் ஊடகங்களுக்கு மேலும் கூறியதாவது, ஒரு ஒழுக்கமான நாட்டில் நிலவ வேண்டிய நற்பண்புகள் மற்றும் கல்வி முறைமை குறித்தே நான் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றேன். கடந்த காலங்களில் திட்டமிட்ட முறையில் பாலினக் கல்வி என்ற பெயரில் ஓரினச்சேர்க்கையை ஊக்குவிக்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்களால் பலமுறை குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இவ்வாறான நிலையில், தற்போது ஆறாம் தர மாணவர்களுக்கான ஆங்கிலப் பாடக் கையேட்டை வெளியிட்டு, அதனை இணையத்தில் பதிவேற்றியுள்ளனர். அத்துடன் மேலதிகக் கற்றலுக்காக 'சமதியாவ' எனும் இணையத்தளத்தைப் பயன்படுத்துமாறு ஒரு வழிகாட்டி இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த இணையத்தளத்தின் ஊடாகச் சிறுவர்களுக்கு ஓரினச்சேர்க்கை கல்வி தொடர்பான கருத்துக்களே திணிக்கப்படுகின்றன. இதன் பின்னணியில் பாரிய பொருளாதார இலாபங்கள் இருக்கலாம் எனவும், சிறுவர்களை இவ்வாறான விடயங்களில் ஆர்வம் கொள்ளச் செய்யும் ஒரு நுட்பமான தந்திரமே இது எனவும் நாம் கருதுகின்றோம். இது எமது நாட்டின் பண்பாட்டுக்கும் ஒழுக்க விழுமியங்களுக்கும் முற்றிலும் முரணான செயலாகும். ஆகவே, குறித்த பாடக் கையேட்டை உடனடியாக மீளப்பெற வேண்டும். முறையான தெளிவுபடுத்தல்கள் இன்றி மாணவர்களை இவ்வாறான தளங்களுக்கு வழிநடத்தியவர்கள் யாரென உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும். 'நாங்கள் இதனை வேறொரு நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட்டோம்' என்று கூறிவிட்டுப் பொறுப்பில் இருந்து எவரும் நழுவிவிட முடியாது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/234877
-
50 இந்திய ரோலர்கள் வந்தால் கடற்படையினர் ஒரு ரோலரையே பிடிக்கின்றனர்!
மீன் வருகின்ற பாதையை தடுப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது - மீனவர் சங்க பிரதிநிதி தெரிவிப்பு! 31 Dec, 2025 | 05:00 PM ஊர்காவற்துறைக்கு செல்கின்ற நீரோட்டம் கீழ் கடலில் இருந்து தங்குவாய்க்கால் ஊடாகத்தான் வரும். அவை எல்லாம் தற்போது தடைப்பட்டுள்ளது. இந்த தடைகளை நீக்கினால் தான் மீன் உற்பத்திகள் அதிகரிக்கும் என நாங்கள் பலமுறை கூறினோம். அதற்கான நடவடிக்கைகள் இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை என அம்பாள் கடற்றொழிலாளர் சங்கத் தலைவர் இராஜச்சந்திரன் தெரிவித்தார். நேற்றையதினம் நடைபெற்ற காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இம்முறை இறால் உற்பத்தியானது 10 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. வழமையாக மாரி காலத்தில் வாழ்வாதாரத்தை பெருக்கிக்கொள்ளுகின்ற எங்களுக்கு இம்முறை எதுவும் கிடைக்கவில்லை. இதற்கு காரணம் தடை செய்யப்பட்ட தொழில் முறைகளே. தடை செய்யப்பட்ட தொழில் முறைகள் குறித்து பலமுறை கடற்றொழில் அமைச்சரிடம் கூறினோம். 2026ஆம் ஆண்டுக்குள் தடை செய்யப்பட்ட தொழில்களை அகற்றுவதாக அவர் உத்தரவாதமளித்தார். ஆனால் இன்னமும் அது தீர்க்கப்படவில்லை. எங்கள் பகுதியில் 10 கடற்றொழில் சங்கங்கள் உள்ளன. அவற்றில் 4 சங்கங்கள் தரவைக் கடலை நம்பியும், 10 சங்கங்கள் ஆழ்கடலை நம்பியும் தொழில் செய்கின்றன. ஆழ்கடல் தொழில் செய்யும் மீனவர்களின் வலைகள் உள்ளிட்ட தொழில் முதல்கள் இந்தியன் இழுவைப் படகுகளால் நாசம் செய்யப்படுகின்றன. 50 ரோலர்கள் வந்தால் கடற்படையினர் ஒரு ரோலரையே பிடிக்கின்றனர். அவர்களது கப்பல் பெரிய கப்பல்கள் என்றும், அதனை பிடிப்பதற்கு பெரிய கப்பல்கள் தங்களிடம் இல்லை என்றும் கடற்படையினர் கூறுகின்றனர். இவ்வாறான பிரச்சினைகளால் படிப்படியாக கடற்றொழிலாளர்கள் எண்ணிக்கை குறைவடைதல், அவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லல், அந்த பிரதேசங்களை விட்டு செல்லல் போன்ற துன்பியல் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. கடற்றொழிலாளர் வர்க்கமே இல்லாமல் போகின்ற சூழல் ஏற்படுத்தப்படுகிறது என்றார். இது குறித்து நீரியல்வள திணைக்கள அதிகாரி கருத்து தெரிவிக்கையில், அந்த பாலத்தில் இருந்து 50 மீட்டர்கள் தொலைவில் கொடி கட்டினோம். அதற்குள் எவரும் வலை விட வேண்டாம் என்று நாங்கள் சங்கங்களுக்கு கடிதமும் வழங்கினோம். அப்படி இருந்தும் அதற்குள் வலைகளை விடுகின்றார்கள். நவம்பர் மாதம்தான் பருவகாலம். ஆகையால் நவம்பர் மாதம் அங்கு இருக்கின்ற வலைகளை அகற்றுவதற்கு திட்டமிட்டோம். இருப்பினும் டித்வா புயலால் அந்த வலைகளை அகற்ற முடியவில்லை. ஜனவரி அல்லது பெப்ரவரிக்குள் இவற்றை சீர் செய்வோம் என்றார். https://www.virakesari.lk/article/234873
-
2026 புத்தாண்டு நிகழ்வுகள்
நியூசிலாந்து அவுஸ்திரேலியா Australia New Year Cerebration: Sydney Welcomes 2026 with Jaw-Dropping Midnight Fireworks | AQ1G சிட்னி துறைமுகத்தில் கொண்டாடப்பட்ட புத்தாண்டு பட மூலாதாரம்,EPA ஆஸ்திரேலியாவின் சிட்னி துறைமுகத்தில் வானவேடிக்கைகளோடு புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றன. சமீபத்தில் சிட்னி கடற்கரைத் தாக்குதலைத் தொடர்ந்து நகரம் முழுவதும் ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் விதமாக புத்தாண்டு பிறப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு மக்கள் அஞ்சலி செலுத்தினார்கள். பட மூலாதாரம்,DAN HIMBRECHTS/EPA/Shutterstock பிரதமர் ஆன்டணி ஆல்பனீஸி தனது 'நியூ இயர்ஸ் ஈவ்' உரையில், வழக்கமாகப் புத்தாண்டின் தொடக்கத்தில் உணரப்படும் மகிழ்ச்சியானது, கடந்த ஆண்டின் சோகத்தால் தணிக்கப்பட்டதாக அவர் கூறினார். https://www.bbc.com/tamil/live/c70r0qyrrk7t?post=asset%3A9f37d491-1247-4e44-b997-22459aa626d3#asset:9f37d491-1247-4e44-b997-22459aa626d3
-
தையிட்டியில் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படவுள்ள காணிகள்!
தையிட்டியில் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படவுள்ள காணிகள்! Dec 31, 2025 - 03:57 PM தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுடன் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் இன்று (31) மு. ப 10.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள். இக்கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த அரசாங்க அதிபர், தையிட்டி காணி தொடர்பாக, நீண்டகாலமாக தீர்க்கப்படாத விடயங்களுக்கான ஆரோக்கியமான கலந்துரையாடலாக அமைய வேண்டும் என்பதே இக் கலந்துரையாடலின் நோக்கம் எனத் தெரிவித்து, கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுடன் அடுத்த கட்டம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடினார். இதன்போது கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் - ஏகமனதாக திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணியின் மட்டுப்பாடான அளவில் எல்லையிட்டு, அதனைத் தவிர்த்து ஏனைய காணிகளை முதல் கட்டமாக விடுவிக்க இணக்கப்பாட்டினை தெரிவித்தனர். இதன்போது அரசாங்க அதிபர் கட்டம் கட்டமாக காணிகளை விடுவிக்க, விகாராதிபதியின் ஒருமித்த சம்மதத்துடன் விடுவிக்க முடியும் எனத் தெரிவித்து, காணி உரிமையாளர்களுடன் விடுவிக்கக் கூடிய காணிகளின் சாத்தியப்பாடுகள் மற்றும் எல்லைகள் தொடர்பாக ஆராய்ந்தார். இக் கலந்துரையாடல் ஆக்கபூர்வமான நடைபெற்றதுடன், கட்டம் கட்டமாக காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்க அதிபர் தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்கு காணி உரிமையாளர்கள் ஏகமனதாக சம்மதம் தெரிவித்தார்கள். இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), தெல்லிப்பளை பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmjtvgj3y03cfo29nwqune9sh
-
உலக மேசைப்பந்து தரவரிசையில் முதலிடம் பெற்று தாவி சமரவீர வரலாற்றுச் சாதனை
சர்வதேச மேசைப்பந்தாட்ட தரவரிசை: முதலிடத்தைப் பிடித்தார் இலங்கையின் இளம் நட்சத்திரம் டாவி Published By: Vishnu 31 Dec, 2025 | 06:56 PM (நெவில் அன்தனி) சர்வதேச மேசைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் கடைசியாக டிசம்பர் மாதம் 29ஆம் திகதி வெளியிடப்பட்ட மேசைப்பந்தாட்ட வீரர்களுக்கான உத்தியோகபூர்வ தரவரிசையில் 11 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பிரிவில் கல்கிஸ்ஸை சென். தோமஸ் மாணவன் டாவி சமரவீர முதலாம் இடத்தைப் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இலங்கை மேசைப்பந்தாட்ட வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாத வகையில் இந்த மைல்கல் சாதனையை டாவி சமரவிக்ரம படைத்துள்ளார். எந்தவொரு வயது பிரிவிலும், எந்தவொரு பாலினத்திலும் உலக தரவரிசையில் இலங்கை வீரர் ஒருவர் உயரிய இடத்தை எட்டிப் பிடித்துள்ளது இதுவே முதல் தடவையாகும். இத்தாலியின் பெல்லா இத்தாலியா EFA விலேஜ் ஸ்போர்ட்ஸ் மண்டபத்தில் அண்மையில் நடைபெற்ற உலக மேசைப்பந்தாட்ட இளைய போட்டியாளர் லிஞ்ஞானோ 2025 போட்டியில் (WTT Youth Contender Lignano 2025) சகல போட்டிகளிலும் வெற்றியீட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரித்ததன் மூலம் டாவி சமரவிக்ரம தரவரசையில் முதலாம் இடத்தைப் பிடித்துள்ளார். இந்த வெற்றியுடன் டாவி சமரவிக்ரம 200 தரவரிசை புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தில் இருக்கிறார். கடந்த மாதம் வெளியிடப்பட்ட உலக மேசைப்பந்தாட்ட தரவரிசையில் டாவி சமரவிக்ரம 3ஆம் இடத்தில் இருந்தார். அப்போது, 'நான் அடுத்து வருடம் உலக தரவரிiசியல் முதலிடத்தைப் பிடிப்பேன்' என டாவி சமரவிக்ரம நம்பிக்கையுடன் கூறியிருந்தார். அவர் 11 வயதுக்குட்பட்ட பிரிவுக்கான உலக தரவரிசையில் முதலிடத்தில் இருந்தவாறு புத்தாண்டை ஆரம்பிக்கவுள்ளார். இப்போது 2 இடங்கள் முன்னேறி முதலிடத்தை அடைந்து சென். தொமஸ் கல்லூரிக்கும் இலங்கைக்கும் பெருமை தேடிக்கொடுத்துள்ளார். சென் தோமஸ் கல்லூரியில் இந்த வருட முற்பகுதியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வருடத்தின் மிகச் சிறந்த விளையாட்டு சாதனையாளர் என்ற விருதை டாவி சமரவிக்ரம வென்றெடுத்தார். இப் பாடசாலையின் வரலாற்றில் மிக இள வயதில் இந்த விருதை வென்றெடுத்த முதலாவது வீரர் டாவி சமரவிக்ரம ஆவார். https://www.virakesari.lk/article/234886
-
'முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு' - 971 சந்தேக நபர்கள் கைது
“முழு நாடுமே ஒன்றாக” போதைப்பொருள் சுற்றிவளைப்பில் 885 பேர் கைது! 31 Dec, 2025 | 02:25 PM ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாடளாவிய ரீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (30) மேற்கொள்ளப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாட்டின் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 885 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 888 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்போது, 767 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 527 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 01 கிலோ 056 கிராம் கொக்கேயின் போதைப்பொருளும், 25 கிலோ 808 கிராம் கஞ்சா போதைப்பொருளும், 16591 கஞ்சா செடிகளும், 066 கிராம் ஹசீஸ் போதைப்பொருளும், 1210 போதை மாத்திரைகளும், 101 கிராம் 320 மில்லிகிராம் மதனமோதக மாத்திரைகளும், 060 கிராம் மாவா போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்டவர்களில் 18 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/234837
-
2026 புத்தாண்டு நிகழ்வுகள்
புத்தாண்டை வரவேற்றது நியூசிலாந்து உலகின் பல்வேறு பகுதிகள் புத்தாண்டை வரவேற்கத் தொடங்கியிருக்கின்றன. பசிஃபிக் பெருங்கடலில் அமைந்திருக்கும் கிரிடிமதி (Kritimati) தீவு முதல் இடமாக 2026-ஆம் ஆண்டை வரவேற்றது. இந்த இடம் கிரிபட்டி குடியரசின் ஒரு பகுதி. இங்குதான் எப்போதுமே புத்தாண்டு முதலில் பிறக்கிறது. படக்குறிப்பு,கிரிடிமதி தீவு தான் முதலில் புத்தாண்டை வரவேற்றது அதேபோல், நியூசிலாந்தும் கோலாகலமாக புத்தாண்டை வரவேற்றது. ஆக்லாந்து, வெல்லிங்டன் ஆகிய நகரங்களில் வானவெடிகள் வெடித்து மக்கள் புத்தாண்டைக் கொண்டாடினார்கள். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,ஆக்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டம் பட மூலாதாரம்,Andy Corson படக்குறிப்பு,நியூசிலாந்தின் தீவுகள் விரிகுடாவில் (Bay of Islands) புத்தாண்டு வரவேற்கப்பட்டது https://www.bbc.com/tamil/live/c70r0qyrrk7t?post=asset%3A8cdf8463-159c-4819-84f3-d39b73349b57#asset:8cdf8463-159c-4819-84f3-d39b73349b57
-
உதவி தேவை: இந்தியக் கடற்படையால் குருநகர் "துறைமுகம்" தாக்கப்பட்டதா?
தகவலுக்கு நன்றி ஐயனே...
-
'ரிலீஸ் அதிகம், வெற்றி குறைவு': 2025-ஆம் ஆண்டு தமிழ் சினிமா பற்றிய ஒரு மீள் பார்வை
'ரிலீஸ் அதிகம், வெற்றி குறைவு': 2025-ஆம் ஆண்டு தமிழ் சினிமா பற்றிய ஒரு மீள் பார்வை பட மூலாதாரம்,PradeepRanganathan/Facebook படக்குறிப்பு,டியூட் கட்டுரை தகவல் மீனாட்சி சுந்தரம் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 2025-ஆம் ஆண்டு தமிழில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 285 திரைப்படங்கள் வெளியாயின. பல ஆண்டுகள் தேங்கியிருந்த படங்களும் இந்த ஆண்டு வெளியாயின. சிறிய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு, தயாரிப்பாளர்கள் காட்டிய ஆர்வம், சிறிய படங்களை ரிலீஸ் செய்ய திரையரங்குகள் கிடைத்தது என்பன போன்ற பலவும் இதற்கு காரணமாக அமைந்தது என்று திரைத்துறையினர் கூறினர். 2025-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு எப்படி இருந்தது? வசூல் ரீதியில் வெற்றி பெற்ற படங்கள் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள் பிபிசி தமிழிடம் பகிர்ந்த தகவல்களின்படி பின்வரும் திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக பார்க்கப்படுகின்றன. மதகஜராஜா கூலி டூரிஸ்ட் ஃபேமிலி குட் பேட் அக்லி ஆண்பாவம் பொல்லாதது பறந்துபோ டிராகன் டியூட் மாமன் குடும்பஸ்தன் தலைவன் தலைவி பைசன் மிடில்கிளாஸ் மர்மர் 3 பிஹெச்கே திரையரங்குகளில் சில படங்கள் மட்டுமே வெற்றிகரமாக ஓடின. பல படங்கள் ஓடிடி, மற்ற மொழிகள், சாட்டிலைட் உரிமம் போன்றவற்றால் தயாரிப்பாளர்களுக்கு லாபகரமான படங்களாக அமைந்தன. எதிர்பார்த்த வெற்றியை தராத படங்கள் இந்த ஆண்டு எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாதவை என்று திரைத்துறையினர் குறிப்பிட்ட திரைப்படங்கள். தக் லைஃப் வீரதீர சூரன் விடாமுயற்சி கிஸ் மாஸ்க் ரெட்ரோ குபேரா இட்லிக்கடை மதராசி காதலிக்க நேரமில்லை நேசிப்பாயா ஏஸ் அகஸ்தியா கேங்கர்ஸ் மாரீசன் படைத்தலைவன் கொம்புசீவி ஃபீனிக்ஸ் தேசிங்குராஜா 2 பிளாக்மெயில் பாம் டீசல் காந்தா கும்கி 2 பட மூலாதாரம்,@MadrasTalkies_ படக்குறிப்பு,தக்லைஃப் வரவேற்பு பெற்ற சிறிய பட்ஜெட் படங்கள் சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி, மணிகண்டனின் குடும்பஸ்தன், சூரியின் மாமன், சரத்குமார்-சித்தார்த் நடித்த 3 பிஹெச்கே, விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன், ரியோவின் ஆண்பாவம் பொல்லாதது, விக்ரம் பிரபு நடித்த சிறை ஆகிய படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. வணிக ரீதியாக ஹிட் ஆகாவிட்டாலும் லிஜோமோல் நடித்த காதல் என்பது பொதுவுடமை, புதுமுகங்களின் மாயகூத்து, டேனியல் பாலாஜியின் பிபி 180, காந்தி கண்ணாடி, அதர்ஸ், வெள்ளக்குதிர, ஒண்டிமுனியும் நல்லபாடனும், அங்கம்மாள், ஹவுஸ்மேட்ஸ், பாலாவின் வணங்கான், எமகாதகி, வேம்பு, லெவன், லவ் மேரேஜ், டிஎன்ஏ, மார்கன், கெவி, வானரன், பேட் கேர்ள், தண்டகாரண்யம், ஆரோமலே, மெட்ராஸ் மேட்னி, ஓஹோ எந்தன் பேபி, பெருசு, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், ஆர்யன், லவ் மேரேஜ் ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டன. பட மூலாதாரம்,X/@MillionOffl படக்குறிப்பு,டூரிஸ்ட் ஃபேமிலி பிரதீப் ரங்கநாதன், சாய் அபயங்கர் 2025-ஆம் ஆண்டில் பிரதீப் ரங்கநாதன் டிராகன், டியூட் என 2 வெற்றி படங்களை கொடுத்தார். இசைத்துறையை பொறுத்தவரையில் சாய் அபயங்கர் வரவை திரைத்துறையினர் குறிப்பிட்டு சொல்கிறார்கள். அவரது இசையில் வெளியான டியூட் படத்தில் பாடல்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டன. இந்த ஆண்டின் புதுமுக இயக்குநர்களில் அபிஷன் ஜீவிந்த் (டூரிஸ்ட் ஃபேமிலி), ராஜேஸ்வர் காளிசாமி (குடும்பஸ்தன்), கீர்த்தீஸ்வரன் (டியூட்), கலையரசன் தங்கவேல் (ஆண்பாவம் பொல்லாதது), மிடில் கிளாஸ் (கிஷோர் முத்துராமலிங்கம்), சுரேஷ் ராஜகுமாரி (சிறை) ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள். பட மூலாதாரம்,AGS Productions படக்குறிப்பு,டிராகன் 'சினிமா வியாபாரமே மாறி விட்டது' 2025 தமிழ் சினிமா குறித்து பிபிசி தமிழிடம் பேசிய தயாரிப்பாளர் தனஞ்செயன், ''சினிமா வியாபாரமே இப்போது மாறி விட்டது. ஓடிடி மூலமாக 38 சதவிகித வருமானம், திரையரங்கம் மூலமாக 21 சதவிகித வருமானம், சாட்டிலைட் 12%, ஆடியோ 5% மற்றும் பிற வருமானம் என நிலைமை மாறியுள்ளது. சிறிய பட்ஜெட், நடுத்தர பட்ஜெட் படங்கள் இந்த ஆண்டு அதிகம் வெற்றி பெற்றுள்ளன. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பெரிய படங்கள் இந்த ஆண்டு ஓடாதது மைனஸ்." என்றார். டூரிஸ்ட் ஃபேமிலி, தலைவன் தலைவி, 3 பிஹெச்கே, மாமன், குடும்பஸ்தன் உள்ளிட்ட குடும்ப படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றதாக அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,@Manikabali87 படக்குறிப்பு,குடும்பஸ்தன் '1,163 தியேட்டர்கள் இருக்கிறது, ஆனாலும்' தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க செயலாளர் திருச்சி ஸ்ரீதர் பேசுகையில், ''2025-ஆம் ஆண்டு 285 படங்கள் வந்துள்ளதாக கணக்கு சொல்கிறார்கள். அதில், மதகஜராஜா, குடும்பஸ்தன், குட் பேட் அக்லி, மாமன், டியூட், டிராகன், பைசன், தலைவன் தலைவி, காந்தாரா சாப்டர் 1 போன்ற சில படங்களே திரையரங்க உரிமையாளர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுத்தன." என்றார். பெரிய நடிகர்கள் படங்களை விட, நல்ல கதைதான் ஜெயிக்கும் என்பதை 2025-ஆம் ஆண்டு நிரூபித்துள்ளது என்று அவர் தெரிவித்தார். "தமிழகத்தில் இப்போது 1,163 திரையரங்குகள் இருக்கின்றன. பழைய திரையரங்குகள் மூடப்படும் அதேநேரத்தில் புதுப்பொலிவுடன், நவீன தொழில்நுட்பத்துடன் பல திரையரங்குகள் திறக்கப்படுகின்றன. ஆனாலும், வெற்றி படங்களின் எண்ணிக்கை குறைவு" என்றார் அவர். இயக்குநர் பாண்டிராஜ் கருத்து பட மூலாதாரம்,Sathyajothi films இந்த ஆண்டின் வெற்றிப்படங்களில் ஒன்றாக கூறப்படும் 'தலைவன் தலைவி' படத்தின் இயக்குநரானபாண்டிராஜிடம் பிபிசி தமிழ் பேசியது. அவர் கூறுகையில் ''இந்த ஆண்டு வெற்றி படங்களின் பட்டியலில் தலைவன் தலைவி தவறாமல் இடம்பெறுகிறது. இந்த படத்தின் வெற்றிக்கு மக்கள் குடும்பத்துடன் திரையரங்கிற்கு வந்து படம் பார்த்ததுதான் காரணம்." என்றார். 'சத்தம் அதிகம்' என சில விமர்சனங்கள் வந்தாலும் கணவன், மனைவி, மாமனார், நாத்தனார், கொழுந்தன், அப்பா, அம்மா என திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்ட பல 'உறவுகளை' படம் பார்த்தவர்கள் தங்கள் வாழ்க்கையுடன் இணைத்து பார்த்தனர் என்றார் அவர். "எப்போதுமே உணர்வுப்பூர்வமாக, குடும்ப கதைகளை சொல்லும் படங்கள் தோற்பதில்லை. ஒரு படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், டிரைலர் வரும்போதே இந்த படத்தை திரையரங்கில் பார்க்கலாம், இந்த படத்தை ஓடிடியில் பார்க்கலாம் என பார்வையாளர்கள் முடிவு செய்துவிடுகிறார்கள். திரையரங்க அனுபவத்தைப் பெறவே சில படங்களை மக்கள் திரையரங்குகளில் பார்க்கின்றனர். சில படங்கள் ஓடிடி-யில் பெரிய ஹிட் ஆகும். அதுவும் வெற்றி படம்தான். சினிமா இன்று மாறிவிட்டது.'' என்றார் இயக்குநர் பாண்டிராஜ். 'பல படங்களின் தலைப்பு கூட மனதில் பதியவில்லை' திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் பேசுகையில், ''இந்த ஆண்டு 25 படங்கள் மட்டுமே தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என 3 தரப்புக்கும் லாபம் கொடுத்தன. 60 படங்கள் தப்பிவிட்டன. அதாவது, இந்த படங்கள் பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தவில்லை. மீதமுள்ள 200 படங்கள் ஏமாற்றம் தந்தவை. தக்லைஃப், இட்லி கடை, விடாமுயற்சி, ரெட்ரோ போன்ற பெரிய படங்கள் இழப்பை ஏற்படுத்தின. இந்த ஆண்டு வெளியான பல திரைப்படங்களின் தலைப்பு திரைத்துறையினர் மற்றும் ஊடகத்துறையினரின் மனதில் கூட பதியவில்லை" என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx232zp8pjvo
-
இந்திய- தமிழீழப் போர் மூள முன்னர் இந்தியப்படை செய்த நாசங்கள்
தகவலுக்கு மிக்க நன்றி ...