24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
“சிங்ஹிந்தியா சமாதான நடைபயணம்”: யாழிலிருந்து கொழும்பு வரை
வடமாகாணத்திலை சிங்களவனுக்கு... தெருவுக்கு தெரு விகாரை இருக்கு, எல்லா இடமும் இராணுவ முகாம் இருக்கு காவல் துறைகளில் 90 வீதமானவர்கள் சிங்களவர்கள் நினைத்த இடத்தில்... குடியேறி சிங்கள கிராமமாக மாற்ற அரச ஆதரவு இருக்கு. இனி சிங்களவனுக்கு என்ன பிரச்சினை. உழைத்து சாப்பிடுங்க(டா) "சிங்ஹிந்தியா" என்ற பெயரை பார்க்க... இந்தியாவின் வழமையான சகுனி விளையாட்டு நடைபெறுகின்றது போலுள்ளது.
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
லிங் என மொட்டையாக கேட்டது என் தவறுதான். அரசியல் கருடன், அரசியல் குருடன் என தம்மை தாமே அழைத்து கொள்ளும் அநாமேதய யூடியூபர் அல்லாமல் … நமபகமான லிங் ஏதும் உள்ளதா ஐயா😂
-
இந்துக்களுக்கு பைபிள் வழங்க முயற்சித்தால் கொளுத்துவோம் - சிவ சேனை எச்சரிக்கை..
பாடசாலைகளுக்குள் வெளிநபர்களோ , அமைப்புகளோ நேரடியா சென்று நூல் வழங்க முடியாது – வட மாகாண ஆளுநர் திட்டவட்டம்! பாடசாலைகளுக்குள் வெளிநபர்களோ அல்லது அமைப்புகளோ நேரடியாகச் சென்று மத நூல்களை விநியோகிக்கும் நடைமுறை முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும் என வடமாகாண ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார் இது குறித்து ஆளுநர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வடக்கு மாகாணப் பாடசாலைகளில் மாணவர்களுக்கு பைபிள் விநியோகிக்கப்படவுள்ளது தொடர்பில் அண்மைய நாட்களாக எழுந்துள்ள சர்ச்சைகள் மற்றும் கரிசனைகளைக் கருத்திற்கொண்டு, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இவ்விடயத்தில் விசேட கவனம் செலுத்தியுள்ளார். இது தொடர்பில் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் வை.ஜெயசந்திரனுக்கு ஆளுநர் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். வெளிநாட்டுத் தொண்டு நிறுவனமொன்றால் பாடசாலை மாணவர்களுக்கு பைபிள் வழங்குவது தொடர்பில் மாகாணக் கல்வித் திணைக்களத்தால் ஆரம்பத்தில் வழங்கப்பட்ட அனுமதி கடிதம் தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டது. குறித்த அமைப்பு தமக்குரிய கிறிஸ்தவ மாணவர்களுக்கு மாத்திரம் வழங்குவதற்கே அனுமதி கோரியிருந்த போதிலும், கல்வித் திணைக்களத்தின் ஆரம்பக் கடிதத்தின் வாசகங்கள் அனைத்து மாணவர்களுக்கும் விநியோகிக்கப்படவுள்ளதாக புரிந்துகொள்ளப்பட்டு சர்ச்சைகள் எழுந்தன. இதனையடுத்து, குறித்த விநியோகமானது ரோமன் கத்தோலிக்கர் அல்லாத கிறிஸ்தவ மாணவர்களுக்கு மாத்திரமே என மாகாண மேலதிகக் கல்விப் பணிப்பாளரால் திருத்தப்பட்ட கடிதம் ஒன்றின் மூலம் பின்னர் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், இவ்விடயம் தொடர்பிலான சர்ச்சைகள் தொடரும் நிலையில், பாடசாலைக் கட்டமைப்புக்குள் மத நல்லிணக்கத்தைப் பேணுவதும், தேவையற்ற குழப்பங்களைத் தவிர்ப்பதும் மிகவும் அவசியமானது என்பதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர், இதற்கான உரிய ஒழுங்குவிதிகளை நடைமுறைப்படுத்துமாறு மாகாணக் கல்விப் பணிப்பாளருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். இதற்கமைவாக, பாடசாலைகளுக்குள் வெளிநபர்களோ அல்லது அமைப்புகளோ நேரடியாகச் சென்று மத நூல்களை விநியோகிக்கும் நடைமுறை முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும் என ஆளுநர் பணித்துள்ளார். மேற்படி பைபிள்களை விநியோகிக்க விரும்பும் குறித்த நிறுவனம், அவற்றை வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்திடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் நூல்களை, கிறிஸ்தவ பாடத்துக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ், அந்த நூல் அவசியமான மற்றும் அப் பாடத்தைக் கற்கும் மாணவர்களுக்கு மாத்திரம் வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஆளுநர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்த முறையான நிர்வாக நடைமுறையின் ஊடாக, பாடசாலைகளில் சகல மத மாணவர்களிடையேயும் நல்லிணக்கம் பாதுகாக்கப்படுவதுடன், தேவையற்ற முரண்பாடுகள் தவிர்க்கப்படும் என நம்புவதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2026/1469178
-
இந்துக்களுக்கு பைபிள் வழங்க முயற்சித்தால் கொளுத்துவோம் - சிவ சேனை எச்சரிக்கை..
இந்த இரு பந்திகளும் என்ன நடந்தது என தெளிவாக காட்டுகிறன. எப்போதும் பைபிளை புரெட்டஸ்தாந்து மாணவருக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதே மத அமைப்பின் வேண்டுகோள். கல்வி அலுவலகத்தின் முதல் கடிதம் இதை தெளிவாக சொல்லவில்லை. இந்த மயக்கத்தை அதே அலுவலகத்தின் இரெண்டாம் கடிதம் விளக்கி சொல்லி விட்டது. அத்தோடு முடிந்திருக்க வேண்டிய உள்ளக விடயம் இது. இரெண்டு சங்கிகள், ஒரு சம்பந்தமே இல்லாத பொலிஸ் உத்தியோகத்தர், கடைசியாக ஜனநாயக விரோத ஆளுனர், மூவரும் இதை ஊதி பெரிதாக்கி தமக்கு ஊடக வெளிச்சம் பாய்ச்சி உள்ளார்கள். சும்மா நாங்களும் நேரத்தை வீணடித்துள்ளோம். பிகு மேலே கொடுக்கப்பட இருப்பது கிங் ஜேம்ஸ் பைபிள் என நினைக்கிறேன். இதை கத்தோலிக்க மாணவருக்கே கொடுக்க முடியாது, இப்படி இருக்க இதை சைவ, இஸ்லாமிய அனைத்து மாணவருக்கு கொடுப்பார்கள் என்பது நம்பகூடியதல்ல, ஆரம்பத்தில் இருந்தே.
-
ஈரான் போருக்காக 200 பில்லியன் டொலரை கோரும் பென்டகன்!
ஈரான் போருக்காக 200 பில்லியன் டொலரை கோரும் பென்டகன்! ஈரான் போருக்கு நிதியளிப்பதற்காக 200 பில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையை அமெரிக்க காங்கிரஸிடம் கோருவதற்கு ஒப்புதல் அளிக்குமாறு பென்டகன் வெள்ளை மாளிகையைக் கேட்டுக்கொண்டுள்ளதாக ஒரு மூத்த நிர்வாக அதிகாரியை மேற்கோள் காட்டி வொஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானுக்கு எதிரான போருக்கு அமெரிக்க மக்களின் ஆதரவு மந்தமாக இருப்பதாலும், ஜனநாயகக் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருவதாலும் இந்த நிதிக் கோரிக்கை காங்கிரஸில் ஒரு பெரிய அரசியல் போராட்டத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அந்தப் பத்திரிகை விளக்கியுள்ளது. இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், பெப்ரவரி 28 அன்று தொடங்கிய அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கு இந்தப் போர் நிதி வலு சேர்க்கும் என்றும், மோதலின் போது பயன்படுத்தப்படும் ஆயுதங்களின் உற்பத்தியை அதிகரிக்கும் என்றும் ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையின் அறிக்கை தெரிவிக்கிறது. அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானுக்கு எதிரான வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கி கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் ஆகின்றன. இதுவரை அமெரிக்கப் படைகள் 7,800-க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியுள்ளன, 8,000-க்கும் மேற்பட்ட போர் விமானப் பயணங்களை மேற்கொண்டுள்ளன, மேலும் 120-க்கும் மேற்பட்ட ஈரானியக் கப்பல்களைச் சேதப்படுத்தியுள்ளன அல்லது அழித்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை கூறியுள்ளது. போரின் முதல் வாரத்திலேயே, அமெரிக்கா தனது இராணுவ நடவடிக்கைகளுக்காக 11 பில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையை செலவிட்டிருந்தது. தற்போது மேலதிகமாக செலவிடப்படும் 200 பில்லியன் டொலருடன் சேர்த்து, போருக்கான அமெரிக்காவின் மொத்தச் செலவினம், 2025 ஆம் ஆண்டில் 356.51 பில்லியன் டொலர்களாக இருக்கும் ஈரானின் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) பாதியை விட அதிகமாக இருக்கக்கூடும் என ‘World Meters‘ அமைப்பு தெரிவித்துள்ளது. 2026 நிதியாண்டிற்கான பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டிற்காக 838.5 பில்லியன் டொலரை காங்கிரஸ் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளதாகவும் செனட் நிதி ஒதுக்கீட்டுக் குழு தகவல்கள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2026/1469194
-
ஈரான் மக்களை இஸ்ரேல் கிளர்ச்சிக்கு தூண்டுகிறது.
உவரின் மருமோன் யுதர். மற்றது புட்டின்னை போலவே, இஸ்ரேலிடமும் தம்பரின் எப்ஸ்டீன் லீலை வீடியோக்கள் இருக்கலாம் என நினைக்கிறேன். வேறு வழியில்லாமல் அவர்களின் டுயூனுக்கு ஆடுகிறாரோ?
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
நன்றி அண்ணா, பாரதியை பவுடர் டப்பாவுடன் நான் ஒப்பிடவில்லை. அது எத்தகைய அபத்தம் என்பதை நான் அறிவேன். நான் சொல்ல வருவது இரெண்டு விடயங்கள்: Beauty is in the eyes of the beholder என்பார்கள். எது இலக்கியம், அதிலும் எது நல்ல இலக்கியம் என்பதுவும் இப்படியே. மேலே ஹாப்பர் லியின் ஆங்கில நாவலை சுட்டி இருந்தேன். செங்கை ஆழியனின் சில (அனைத்தும் அல்ல) நாவல்கள் அந்த தரத்தை எட்டி பிடிக்க முயல்வன. எனது பார்வையில். ஆனால் பலருக்கு அப்படி இல்லை. மேலே சொன்னதன் அடிப்படையில்தான் விருதுகளும் அமையும். நான் விருது குழுவில் இருந்தால் - செங்கை ஆழியனை பரிந்துரைப்பேன். இத்தோடு பழதட்டு கலாச்சாரமும் சேர்ந்து கொள்ள - இதுதான் விருது வழங்கும் முறை. இதுதான் காலகாலமான நடைமுறை. ஞானபீடம் மட்டும் அல்ல அத்தனை கலை விருதுகளும் இப்படியே. விளையாட்டு விருதுகள் போன்றவை objective ஆக ஓட்ட போட்டியில் யார் முன்னுக்கு வந்தார் என்பதை வைத்து கோல்ட் மெடல் கொடுக்கப்படும். கலை விருதுகள் subjective ஆனவை. அதுதான் அதன் இயற்கை (nature of the beast).
- Today
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- வீதியோரம்.
இவ்வளவு வேகமாகத் தொடரை எப்பிடித்தான் எழுதி முடிச்சியளோ அண்ணா. நன்றாக இருக்கிறது. ஆனாலும் பலரையும் காணவில்லை. யாழை விட்டுப் போய்விட்டார்களா என்ன? கருத்திடாவிட்டாலும் மனம் சலிக்காது எழுதியமைக்கு வாழ்த்து அண்ணா.- “சிங்ஹிந்தியா சமாதான நடைபயணம்”: யாழிலிருந்து கொழும்பு வரை
“சிங்ஹிந்தியா சமாதான நடைபயணம்”: யாழிலிருந்து கொழும்பு வரை வியாழன், 19 மார்ச் 2026 06:55 AM வடக்கு மாகாணத்தில் வாழும் சிங்கள மக்களின் உரிமைகள் மற்றும் அவர்கள் எதிர்கொண்டுள்ளதாக கூறப்படும் இழப்புகள் தொடர்பாக அரசாங்க அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் “சிங்ஹிந்தியா சமாதான நடைபயணம் மற்றும் வாகன ஊர்வலம்” ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நடைபயணம் யாழ்ப்பாணத்தில் இருந்து தொடங்கி கொழும்பு வரை தொடரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிகழ்வு மூலம் வட மாகாணத்தில் வாழும் சிங்கள சமூகத்தின் பிரச்சினைகள், பாதுகாப்பு, நில உரிமைகள் மற்றும் வாழ்வாதார சிக்கல்கள் குறித்து தேசிய மட்டத்தில் கவனம் செலுத்தச் செய்வதே முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டது. https://jaffnazone.com/news/55670- இயலாமையுடைய நபர்களுக்கான நிதி ஒதுக்கீடு: 12 அமைச்சுக்களுடன் பாராளுமன்ற ஒன்றியம் விசேட பேச்சு!
இயலாமையுடைய நபர்களுக்கான நிதி ஒதுக்கீடு: 12 அமைச்சுக்களுடன் பாராளுமன்ற ஒன்றியம் விசேட பேச்சு! 19 Mar, 2026 | 01:06 PM இயலாமையுடைய நபர்களுக்காக 2026ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒதுக்கீடுகள் மற்றும் அவற்றின் முன்னேற்றங்கள் குறித்து பன்னிரண்டு அமைச்சுக்களுடன் இயாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் கலந்துரையாடலை முன்னெடுத்தது. இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது. இயலாமையுடைய நபர்களின் போக்குவரத்துத் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் ஏப்ரல் முதல் முன்னோடியாக இரண்டு வழித்தடங்களில் 10 தாழ்தள பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தவிருப்பதாக போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகள், இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தில் தெரிவித்தனர். ஆறு வழிடத்தடங்களில் இவ்வாறான பஸ்களை சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்த்தபோதும், சக்கரநாற்காலிகளுடன் சென்று ஏறக்கூடியமை போன்ற வசதிகளைக் கொண்ட பஸ் தரிப்பிடங்களை அமைக்க வேண்டிய தேவை இருப்பதாகவும், இந்த வசதிகளைப் பூர்த்திசெய்யும் பட்சத்தில் ஏனைய வழித்தடங்களிலும் இச்சேவையை விஸ்தரிக்க முடியும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். அத்துடன், இயலாமையுடைய குறைந்த வருமானத்தைப் பெறும் பிள்ளைகளைப் பாடசாலைகளுக்கு அனுப்புவது மற்றும் அவர்களுக்குக் கல்வி வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுப்பதற்கான விசேட திட்டத்திற்காக 2026ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் ரூ 50 மில்லியன் ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்கல்வி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பாதுகாப்பு அமைச்சைப் பிரதிநிதித்துவப்படுத்தி வருகை தந்திருந்த ரணவிரு சேவை அதிகாரசபையின் அதிகாரிகள், 30 வருட யுத்தத்தில் இயலாமையுடைய நபர்களாக்கப்பட்ட முப்படையினர் மற்றும் பொலிஸார் 23,192 பேர் தமது அதிகாரசபையின் கீழ் பராமரிக்கப்படுவதாகக் குறிப்பிட்டனர். இவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் ரூ.864 மில்லியன் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர். கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் அதிகாரிகள் குறிப்பிடுகையில், 16-35 வயதுக்கிடைப்பட்ட இயலாமையுடைய நபர்களுக்கான தொழிற்பயிற்சிகளை வழங்குவதற்கு 2026ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் ரூ 80 மில்லியன் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், பார்வைக் குறைபாடுள்ளோருக்கான மறுவாழ்வு அறக்கட்டளை நிதியின் மூலம் பார்வைக் குறைபாடுள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் உதவி சாதனங்கள் வழங்குவதற்காக ரூ. 17.4 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர். மேலும், சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சை பிரதிநிதித்துவப்படுத்தி வருகைதந்திருந்த அதிகாரிகள் கருத்துத் தெரிவிக்கையில், 2026 முதல் 2035ஆம் ஆண்டு வரையில் முதல் 2035 வரை செயல்படுத்தப்படவுள்ள புதிய பத்தாண்டு சுகாதாரக் கொள்கை அடுத்த ஏப்ரல் மாதம் வெளியிடப்படவிருப்பதாகவும், இந்தக் கொள்கையில் "அனைவருக்குமான சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின்" (Universal Health Coverage) கீழ் இயாமையுடைய நபர்கள் உள்ளடங்கலாக நலிவடைந்த நபர்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டனர். தொழில் அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இயலாமையுடைய நபர்களுக்கான விரிவான வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு அமைய, 2022 முதல் 2025-ஆம் ஆண்டு காலப்பகுதியில் 750 இயலாமையுடைய நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 2026-ஆம் ஆண்டில் இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு ரூ. 5.75 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தொழில் அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். டிஜிட்டல் பொருளாதார சட்டத்தில் இயலாமையுடைய நபர்களை உள்ளடக்குவதற்காக விசேட பிரிவொன்று உருவாக்கப்பட்டிருப்பதாகவும், இயலாமையுடைய சமூகத்தினருக்கான அணுகக்கூடிய அனைத்துத் தரவுகள் மற்றும் தகவல்களையும் உள்ளடக்கிய தனியான இணையத்தளம் உருவாக்கப்படும் என்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். 2026ஆம் ஆண்டுக்காக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் கீழ் இயலாமையுடைய நபர்களுக்காகன கொடுப்பனவுகளை மேற்கொள்ள ரூ.19,000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் ஒன்றியத்திடம் தெரிவித்தனர். அத்துடன், இயலாமையுடைய நபர்களுக்குக் காணப்படும் அணுகலுக்கான உரிமையை உறுதி செய்வதற்காக ரூ. 1,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஏற்பாடுகளைப் பயன்படுத்தி பிரதேச செயலகங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், நீதிமன்றங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்கள் போன்ற பொது வசதிகளுக்கான அணுகல்கள் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவது குறித்து மாவட்ட செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். மேலும், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு ஆகியவற்றின் அதிகாரிகளும் 2026ஆம் ஆண்டில் தமது அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகளின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் குறித்து ஒன்றியத்திற்கு விளக்கமளித்தனர். இந்தக் கலந்துரையாடலில் இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் ஒன்றியத்தின் உறுப்பினர்களான சுசந்த தொடாவத்த, பத்மசிறி பண்டார, சந்திம ஹெட்டியாராச்சி, சுசந்த குமார நவரத்ன மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். அத்துடன், ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா அவர்களின் அழைப்பின் பேரில் பார்வையாளர்களாக இயலாமையுடைய நபர்களின் பிரதிநிதிகளும், தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IFES) அதிகாரிகளும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/241350- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
https://www.youtube.com/watch?v=WGLsM32b5gw&t=529s- நம்பிக்கையீனங்கள் உருவாதல்
நம்பிக்கையீனங்கள் உருவாதல் இஸ்ரேல் - அமெரிக்க கூட்டு பெப்ரவரி 28ஆம் திகதி ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயத்துல்லா அலி கொமினியை கொன்று தன்னுடைய தாக்குதலை ஆரம்பதித்தது முதல் அனைவருடைய பேச்சும், எழுத்தும் வளைகுடாவை பற்றியதாகவே இருந்து வருகிறது. அதே நேரத்தில் தத்தமது நாடுகளின் எரிபொருள் தட்டுப்பாடும் இருக்கிறது. இருக்கின்ற பிரச்சினைகளுக்குள் ஏற்படுகின்ற பிரச்சினைகளை எப்படி எதிர் கொள்வது என்பதற்கான வழிகளைத் தேடுவதே இப்போதுள்ள நெருக்கடியாகிவிட்ட நிலைதான் காணப்படுகிறது. எரிபொருள் பிரச்சினை, பொருளாதார நெருக்கடிகளுக்குள் பல்வேறு பிரச்சினைகளால் அடிப்படையான பல விடயங்கள் மறைக்கப்பட்டு விடுகின்றன. அல்லது நினைவுக்குவராமல் போய்விடுகின்றன. இது வழமையானதே. அது காலங்கடத்தல்களுக்கே காரணமாகிப் போய்விடுகின்றன. அதில் ஒன்றுதான் இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டம். இப் போராட்டம் ஆரம்பமாகி பல தசாப்தங்கள் கடந்துவிட்டன. தற்போதும் வடக்கு கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமை பாதுகாவலர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பெண்கள் வலையமைப்புக்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கங்கள், சிவில் அமைப்புக்கள், வடக்கு கிழக்கு சமூக இயக்கங்கள். ஊடகவியலாளர்கள் என அனைவரும் தமது கோரிக்கைகளை தத்தமது வழிகளில் முன்வைப்பதிலேயே காலஙகடக்கிறது. அதேநேரத்தில் அச்சுறுத்தலான நெருக்கடிகளும் உருவாகாமலில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்னர், நான் சாகும் போதாவது என் சகோதரன் எனது தலைமாட்டில் இருக்க வேண்டும் என்று ஜனாதிபதியிடம் மன்றாடிய தமிழ் அரசியல் கைதி ஒருவரின் சகோதரி மரணமானார். 31 வருடங்களாக சிறையில் வாடும் கைதி ஒருவரின் குடும்பத்தின் நிலை அவ்வாறாக இருக்கிறது. அது போன்று பல கதைகள் வடக்கு கிழக்கில் காணப்படுகின்றன. ஏக்கங்களும், ஏமாற்றங்களும், சந்தேகங்களும், கவலைகளும் தினம் தினம் தமிழ் மக்களை ஆட்கொள்ளுகின்றன. அதே போன்று காணாமலாக்கப்பட்ட, இராணுவம் பொலிசாரிடம் கையளிக்கப்பட்டவர்களின் நிலைமைகளை கேட்ட வண்ணமே பல உறவுகள் உயிரை விட்டவண்ணமிருக்கிறார்கள். வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு எதிராக வரலாற்றுக் காலந்தொட்டே இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்குஎதிரான குற்றங்களை ஏற்றுக் கொள்ளவோ திரு;வு, நீதி வழங்கவோ முடியாமல் இலங்கையில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் இன்று வரை தோற்றுப்போயே இருக்கின்றன. மாறாக இலங்கையில் ஆயுதப் போராட்டம் நிறைவுற்று 16 வருடங்கள் கடந்த நிலையிலும் நீதியை எதிர்பார்த்திருக்க வேண்டிய கட்டாயமே தமிழ் மக்களுக்கு காணப்படுகிறது. அரசாங்கங்கள் மாற்றம் பெற்றாலும் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் உள்ள தமிழ் மக்கள் பாதுகாப்பு சார் அச்சத்தினை கைவிட முடியாத நிலை தொடர்கிறது. அதே நேரத்தில் எதிர்பார்ப்புகள் நிறைவேறாதா என்ற கவலையையும் சேர்த்தே நகர வேண்டியும் உள்ளது. காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான கடந்த வாரத்தில் கருத்து வெளியிட்டுள்ள நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள், சகோதரர்கள் எங்கே என்று கேள்வி கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு. நாங்கள் இதை மறுதலிக்கவில்லை. காணாமல் போனோர் விவகாரத்தில் சர்வதேச கட்டமைப்பு அல்லது சர்வதேச பொறிமுறை ஊடாக நீதியை பெற்றுக்கொள்ள முடியாது. காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் ஊடாக மாத்திரமே தீர்வு காண முடியும். காணாமல் போனோரின் உறவுகளில் பெரும்பாலானோர் இழப்பீடு கோரவில்லை. நீதியையும், தமது உறவுகளுக்கு நேர்ந்தது என்னவென்பதையுமே கேட்கிறார்கள். இந்த விடயம் தனித்துவமானதுடன், உணர்வு பூர்வமானது என்று தெரிவித்திருக்கிறார். அமைச்சருடைய இந்தக் கருத்தானது கடந்த அரசாங்கங்களால் முன்னெடுக்கப்பட்டு காணாமலாக்கப்பட்ட உறவுகளினால் ஏற்றுக் கொள்ளமுடியாது என நிராகரிக்கப்பட்ட, தற்போதைய அரசாங்கத்தாலும் தொடரப்படுகின்ற காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக கொண்டு நடத்துவதற்கான கருத்தாகவே பார்க்கப்படுகிறது. காணாமல் போனோருக்கான அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் போன்றனவற்றின் மூலம் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கு அரசாங்கம் முனைகிறது என்ற குற்றச்சாட்டு வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட உறவுகளிடம் காணப்படுகின்ற நிலையில் தான் அரசாங்கம் தமது இந்தச் செயற்பாடுகளை முன்னெடுக்கிறது என்பது இந்த இடத்தில் நினைவில் கொள்ளப்படவேண்டியதாகும். 2009ஆம் ஆண்டு மே மாதத்தில் யுத்தம் முடிக்குக் கொண்டுவரப்பட்டாலும் யுத்தத்தில் காணாமலாக்கப்பட்டவர்களுடைய பிரச்சினைகள், தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம், போன்றன முடிவுக்கு வரவில்லை. அத்துடன், தொடர்ச்சியாக பேசப்படுகின்ற ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச நாடுகள் போன்றவற்றிடம் தமிழ் மக்கள் நீதியைக் கோருகின்றவைகளாகவே இருந்தும் வருகின்றனர். இந்த நிலையில் இப்போதும் இவ்விவகாரங்களுக்கு சர்வதேச பொறிமுறையினால் எதுவும் நடைபெறாது என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கூறுவதானது காலங்கடந்தும் ஞானம் கிடைக்காத தன்மையாகவே சொல்ல முடியும். அதே நேரத்தில், காணாமல் போனோர் விவகாரம் தனித்துவமானது. என்றும் அதற்கு அரசியல் ஒத்துழைப்பு மற்றும் நிதி ஒத்துழைப்பு போதுமானதாக இருக்கவில்லை என்றும் தெரிவித்திருக்கின்ற நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் முழுக்க முழுக்க அரசாங்கத்தின் உள்நாட்டுப் பொறிமுறை நிலைப்பாட்டை வலுப்படுத்துவதற்கான முயற்சியில் இருக்கிறார் என்பதனையே வெளிப்படுத்துகின்றது. அதே நேரத்தில் காணாமலாக்கப்பட்ட உறவுகளின் போராட்டங்களை கொச்சைப்படுத்துவதாகவும் அமைந்திருக்கின்றது எனலாம். பயங்கரவாத தடை சட்டம் முழுமையாக இரத்து செய்யப்படும். மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றப்படும் என வாக்குறுதியளித்திருந்த மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், முந்தைய அரசாங்கங்கள் முன்னெடுத்திருந்த விடயங்களை தொடர்வதானது தமிழ் மக்களை ஏமாற்றும் செயற்பாடு என்பதற்கப்பால் அவர்கள் கோருகின்ற சர்வதேச நீதி என்பதனை வலுப்படுத்துவதாகவே இருக்கிறது எனவும்கூறலாம். அதே நேரத்தில், நாட்டில் இனவாதம் மற்றும் பிரிவினைவாதத்துக்கு இனியொரு போதும் கிடையாது எனக் கூறும் அரசாங்கம் முரண்பாடுகளை களைவதற்கு முயற்சிக்காமல் இருப்பதனை அவ்வாறே வைத்துக் கொண்டு நகர முயல்வதானது ஆபத்தான நிலைமையே. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக உறுதியளித்து விட்டு அதனைவிட மோசமானதொரு சட்டத்தை உருவாக்குவதும், புதியட அரசியலமைப்பு கொண்டுவரப்படும் என்று கூறிவிட்டு அதற்கு நீண்ட காலம் எடுக்கும் என்று கருத்து வெளியிடுவதும் பொருத்தப்பாடில்லாச் செயற்பாடுகளாகவே காணப்படுகின்றன பொதுமக்கள் மத்தியில் பார்க்கப்படுகின்றன. இவையெல்லாம், காணாமலாக்கப்பட்ட உறவுகளின் வலி மற்றும் உணர்வுகளை உணராமல் நகர்தல், தமிழ் அரசியல் கைதிகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமை, தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இன அழிப்புச் செயற்பாடு, வட கிழக்கு தமிழ் மக்களின் சுயநிர்ணய போராட்டத்திற்கான தீர்வை வழங்காமல் காலத்தை வீணடித்தல் போன்றவைகள் நம்பிக்கையீனங்களையே ஏற்படுத்தும் என்பதனைத் தவிர வேறொன்றில்லை. அந்தவகையில்தான், இலங்கையில் யுத்த காலத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டன, இன அழிப்புகள் நடைபெற்றன, மனித குலத்திற்கு எதிரான பல்வேறு செயற்பாடுகள் நிகழ்ந்திருக்கின்றன. இவற்றுக்கான பொறுப்புக்கூறல் அவசியம் தேவை என்பது தொக்குகிறது. அது மாத்திரமின்றி சர்வதேச வடிவமைப்புகளை மீறுவதாக ஒரு உள்நாட்டுப் பொறிமுறைக்குள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை புகுத்த நினைப்பதும் தவறானதாக இருக்கிறது. அவ்வேளையில் இராணுவம் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரை தண்டிக்கும் பொறிமுறைக்கு ஒருபோதும் இடமளியோம் என்ற உறுதிமொழியுடன் ஆட்சிக்கு வந்த அரசாங்கத்திடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும் என்பதுடனேயே முடிவு கிடைக்கவே வாய்ப்புள்ளது என்பது மாத்திரம் நிச்சயம். இஸ்ரேல்- அமெரிக்காவால் ஆரம்பித்து வைக்கப்பட்டு, ஈரான் நடத்தும் யுத்தம் முடியும் வரையில் காத்திருப்போம். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/நம்பிக்கையீனங்கள்-உருவாதல்/91-374144- வேலணையில் மாணவிகளை அவதூறு பரப்பிய மாணவனுக்கு நேர்ந்த கதி!
இலஞ்சம் வேலை செய்கிறதோ?!- உங்களுக்கு தெரியாத வட கொரியா
உங்களுக்கு தெரியாத வட கொரியா உலகம் தொழில்நுட்பத்திலும் சுதந்திரத்திலும் உச்சத்தை தொட்டுள்ள இந்த யுகத்தில், இன்னும் ஒரேயொரு குடும்பத்தின் சர்வாதிகார ஆட்சிக்கு உட்பட்டு, வெளி உலகத்திலிருந்து முற்றாக தனிமைப்படுத்தப்பட்ட ஒரு நாடு தான் வட கொரியா. பெயரில் 'ஜனநாயகம்' என்று இருந்தாலும், அந்நாட்டு மக்கள் கிம் ஜொன் உன்-னின் கடுமையான ஆட்சியின் கீழ் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு கைதிகளை போன்ற வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். 1. தெய்வமாக வணங்கப்படும் "கிம்" குடும்பம் வட கொரியாவின் ஒவ்வொரு வீட்டிலும், பாடசாலையிலும், அலுவலகத்திலும் முன்னாள் தலைவர்களான கிம் இல் சுங் மற்றும் கிம் ஜொன் இல் ஆகியோரின் புகைப்படங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். அந்தப் படங்களின் தூசியை துடைப்பதற்கு கூட ஒரு விசேட துணி இருக்க வேண்டும். ஒருவேளை தீ விபத்து ஏற்பட்டால், அந்தப் புகைப்படங்களே முதலில் காப்பாற்றப்பட வேண்டும். தற்போதைய தலைவர் கிம் ஜொன் உன் "உன்னதத் தலைவர்" என்று அழைக்கப்படுகிறார். அவருக்கு எதிராக ஒரு வார்த்தை பேசினால் கூட, அது மரண தண்டனை அல்லது மூன்று தலைமுறைகள் சிறையிலிருக்க வேண்டிய பாரதூரமான குற்றமாக கருதப்படுகிறது. 2. சொங்புன் முறை: பிறப்பிலேயே தீர்மானிக்கப்படும் விதி வட கொரியாவில் ஒரு நபரின் மதிப்பு அவரது திறமையால் அல்ல, மாறாக அவரது குடும்பம் அரசாங்கத்திற்கு காட்டும் விசுவாசத்தை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. இதுவே 'சொங்புன்' முறை என அழைக்கப்படுகிறது. விசுவாசமான வகுப்பு: அரசாங்கத்திற்கு நெருக்கமானவர்கள். இவர்களுக்கு தலைநகரமான பியாங்யாங்கில் வசிக்கவும், நல்ல கல்வி மற்றும் உணவை பெறவும் வாய்ப்பு கிடைக்கிறது. எதிர்ப்பு வகுப்பு: அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள். இவர்களுக்குக் சிரமமான பகுதிகளில் கூலி வேலைகளும், கடுமையான ஒடுக்குமுறைகளும் மட்டுமே மிஞ்சும். 3. தொழில்நுட்பம் மற்றும் தகவல் தடை நமக்கு இணையம் (Internet) இல்லாமல் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது. ஆனால், ஒரு சாதாரண வட கொரிய குடிமகனுக்கு இணையம் என்றால் என்னவென்றே தெரியாது. அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படும் "க்வான்ம்யோங்" (Kwangmyong) என்ற உள்நாட்டு வலையமைப்பு மட்டுமே அங்கு உண்டு. அதில் அரசாங்கத்தின் பிரச்சார செய்திகள் மட்டுமே இருக்கும். அவர்களிடம் ஸ்மார்ட்போன்கள் இருந்தாலும், அவற்றின் மூலம் வெளிநாடுகளுக்கு அழைக்க முடியாது. அனைத்து செய்திகளும் அரசாங்கத்தால் கண்காணிக்கப்படும். தென்கொரிய நாடகங்களையோ அல்லது ஹொலிவுட் திரைப்படங்களையோ பார்ப்பது ஒரு "புரட்சிக்கு எதிரான" குற்றமாகும். இதற்காக பகிரங்கமாக சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 4. குவான்லிசோ (Kwanliso): பூமியிலுள்ள நரகம் வட கொரியாவில் உள்ள அரசியல் சிறை முகாம்கள் உலகின் மிக கொடிய இடங்களாக கருதப்படுகின்றன. ஒருவர் தவறு செய்தால், அவரது பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் கூட சிறையிலேயே பிறந்து சிறையிலேயே இறக்க வேண்டிய நிலை ஏற்படும். ஒரு நாளைக்கு 15 மணித்தியாலங்களுக்கும் மேலான கடின உழைப்பு, பட்டினி மற்றும் மனிதாபிமானமற்ற சித்திரவதைகள் அங்கு சாதாரணமானவை. பெரும்பாலான கைதிகள் ஊட்டச்சத்து குறைபாட்டாலேயே உயிரிழக்கின்றனர். 5. இருளில் மூழ்கிய தேசமும் பஞ்சமும் விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்க்கும்போது, சீனாவும் தென்கொரியாவும் ஒளியால் பிரகாசிக்கின்றன, ஆனால் வட கொரியா ஒரு கருந்துளை (Black hole) போலத் தெரியும். தலைநகருக்கு வெளியே உள்ள பல பகுதிகளுக்கு ஒரு நாளைக்கு சில மணிநேரங்கள் மட்டுமே மின்சாரம் கிடைக்கும். மேலும், 1990களில் ஏற்பட்ட பெரும் பஞ்சத்தில் இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இன்றும் அந்நாட்டு மக்களில் பெரும்பான்மையானோர் முறையான ஊட்டச்சத்து இன்றி வாழ்கின்றனர். இருப்பினும், அரசாங்கம் தனது நிதியை அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை தயாரிக்கவே செலவிடுகிறது . 6. தப்பிச் செல்வதில் உள்ள ஆபத்து இந்தச் சிறைச்சாலையிலிருந்து தப்பிச் செல்வது என்பது மரணத்தை வரவேற்பதற்கு சமம். பலர் சீன எல்லை வழியாக தப்ப முயல்கின்றனர். ஆனால் சீனாவில் பிடிபட்டால், அவர்கள் மீண்டும் வட கொரியாவிற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள். அங்கு அவர்களுக்கு மரண தண்டனை காத்திருக்கும். தென்கொரியாவை அடைய முடிந்த ஒரு சிலரே தாங்கள் அனுபவித்த அந்த துயர கதைகளை கூறுகின்றனர். சுதந்திரமாக சுவாசிப்பது எவ்வளவு பெரிய வரம் என்பதை அவர்கள் உலகிற்கு உணர்த்துகின்றனர். வட கொரியாவை பார்க்கும்போது, நாம் அனுபவிக்கும் சுதந்திரம், கருத்து தெரிவிக்கும் உரிமை, தகவல்களை அறியும் உரிமை மற்றும் விரும்பிய மதத்தை பின்பற்றும் உரிமை ஆகியவை எவ்வளவு பெறுமதியானவை என்பது புரிகிறது. அரசியல் நிலைத்தன்மை என்ற பெயரில் மனித உரிமைகள் நசுக்கப்படும்போது, ஒரு நாடு எவ்வளவு பெரிய அதலபாதாளத்தில் விழும் என்பதற்கு வட கொரியாவே சிறந்த உதாரணம். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/உங்களுக்கு-தெரியாத-வட-கொரியா/91-374150- இலங்கையின் விவசாயக் கழிவுகளிலிருந்து எரிவாயு உற்பத்தி: நோர்வே ஆர்வம்
இலங்கையின் விவசாயக் கழிவுகளிலிருந்து எரிவாயு உற்பத்தி: நோர்வே ஆர்வம் Mar 19, 2026 - 12:12 PM இலங்கையிலுள்ள விவசாயக் கழிவுகள் அதிகம் உள்ள பகுதிகளை அடையாளம் கண்டு, அங்கிருந்து எரிவாயு உற்பத்தி செய்யும் செயன்முறையை முன்னெடுப்பதற்கு நோர்வே அவதானம் செலுத்தியுள்ளது. விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த மற்றும் நோர்வே தூதரக அதிகாரி ஸ்டர்ல் ஹரால்ட் பீடர்சன் (Sturle Harald Pedersen) ஆகியோருக்கு இடையில் நேற்று (18) நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்போது, விவசாயத் துறைக்காக மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்துப் பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. பல்வேறு வழிகளில் எரிசக்தியை உற்பத்தி செய்வது தொடர்பாக நோர்வே தூதரக அதிகாரி இதன்போது கருத்துக்களை முன்வைத்தார். காற்றுச் சக்தி, சூரியச் சக்தி மற்றும் கடலின் அலைச் சக்தி ஆகியவற்றைப் பயன்படுத்தி எரிசக்தியை உற்பத்தி செய்வதற்கு இலங்கைக்கு உதவ முடியும் என அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர்கள் தயாரித்த திட்ட அறிக்கை ஒன்றும் இதன்போது அமைச்சரிடம் கையளிக்கப்பட்டதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் பகல் நேரங்களில் சூரிய சக்தி அதிகமாக உற்பத்தி செய்யப்படுவதை அவதானித்துள்ளதாகக் குறிப்பிட்ட தூதரக அதிகாரி, அந்த மேலதிக சூரிய சக்தியைப் பயன்படுத்தி நீரைப் மின்னாற்பகுப்பு (Electrolysis) செய்வதன் மூலம் ஹைட்ரஜனை உற்பத்தி செய்து, அதனை எரிபொருளாகப் பயன்படுத்த முடியும் எனச் சுட்டிக்காட்டினார். இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் ஹைட்ரஜனை விவசாயத் துறை உட்பட அனைத்துத் துறைகளிலும் எரிபொருளாகப் பயன்படுத்த முடியும் என ஸ்டர்ல் ஹரால்ட் பீடர்சன் மேலும் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmmx3o1gx000j356pb7d8yhxt- வேலணையில் மாணவிகளை அவதூறு பரப்பிய மாணவனுக்கு நேர்ந்த கதி!
சமூக வலைத்தள அவதூறு: மாணவன் மற்றும் தந்தை கைது – தாக்குதல் சம்பவம் பரபரப்பு adminMarch 17, 2026 பாடசாலை மாணவிகள் மற்றும் மாணவி ஒருவரின் தாயார் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் கீழ்த்தரமான பதிவுகளை மேற்கொண்ட சக மாணவன் தொடர்பில் , நியாயம் கேட்டு சென்றவர்களை கூரிய ஆயுதங்களால் தாக்கி படுகாயங்களுக்கு உள்ளாக்கிய மாணவனின் தந்தையும் அவதூறு பரப்பிய மாணவனையும் காவல்துறையினா் சுமார் 20 நாட்களின் பின்னர் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியுள்ளனர். நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட மாணவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், கூரிய ஆயுதங்களால் தாக்கிய மாணவனின் தந்தையை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வேலணைப் பகுதியில் உள்ள பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் சாதாரண தர கணித பாடத்தில் சித்தி பெறாதமையால் , கணித பாடத்திற்கு தோற்றுவதற்காக சாதாரண தர கணித வகுப்பிற்காக தனியார் வகுப்பில் கல்வி கற்றுள்ளாா். அந்த கணித வகுப்பில் கற்கும் மாணவர்களின் வாட்ஸ் அப் குழுவில் உள்ள மாணவிகளின் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக இரு மாணவிகளின் (profile) புகைப்படங்களை எடுத்து , மற்றுமொரு மாணவி தனது தாயாரின் தொலைபேசி இலக்கம் ஊடாகவே வாட்ஸ் அப் குழுவில் இணைந்திருந்தமையால் மாணவியின் தொலைபேசி இலக்கம் என மாணவியின் தாயாரின் தொலைபேசி இலக்கத்தை எடுத்து , இரு மாணவிகளின் புகைப்படங்களுடன் அவர்களை தவறானவர்களாக சித்தரித்து , மாணவியின் தாயரின் தொலைபேசி இலக்கத்தை குறிப்பிட்டு , அந்த இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு போலி “ரிக் ரொக்” தளத்தில் பதிவிட்டுளளார். அதனால் மாணவியின் தாயாரின் இலக்கத்திற்கு பல தொலைபேசி இலக்கங்களில் இருந்து தவறான நோக்குடன் தொலைபேசி அழைப்புக்கள் வந்த நிலையில் , மாணவியின் மூத்த சகோதரன் அது தொடர்பில் விசாரித்த வேளை , ரிக் ரொக் தளம் ஒன்றில் இருந்தே இலக்கத்தை பெற்றதாகவும் , குறித்த தளத்தின் இணைப்பினையும் தொடர்பு கொண்டவர்கள் கூறியுள்ளனர். அதன் அடிப்படையில் குறித்த ரிக் ரொக் தளம் தொடர்பில் ஆராய்ந்த வேளை அது தனது சகோதரியுடன் கணித வகுப்பில் கற்கும் மாணவனுடையது என்பதனையும் , மாணவன் வேலணை பகுதியை சேர்ந்தவர் என்பதனையும் கண்டறிந்து மாணவனின் வீட்டிற்கு நியாயம் கேட்க தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அங்கு சென்று மாணவனின் தகப்பனிடம் மாணவனின் செயற்பாடுகள் குறித்து தெரிவித்து , மாணவனின் தொலைபேசியை பரிசீலித்த வேளை மாணவனே , அந்த ரிக் ரொக் தளத்தினை இயக்கி வருவதனை கண்டறிந்து தகப்பனிடம் காட்டி, மாணவனின் தொலைபேசியுடன் , காவல் நிலையத்திற்கு சென்று முறையிட போவதாக பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரன் கூறிய வேளை , தந்தை அவர்களுடன் முரண்பட்டு வீட்டிற்கு சென்றவர்கள் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளார். அதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், கூட சென்றவர்கள் அவரை மீட்டு வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற வேளை , ரிக் ரொக் தளத்தில் அவதூறு ஏற்படுத்திய மாணவனும் , தந்தையும் ஊர்காவற்துறை காவல் நிலையம் சென்று தனது மகனை மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த 06 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடாத்த முற்பட்டதாக முறைப்பாடு வழங்கியுள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய ஊர்காவற்துறை காவல்துறையினா் மாணவனின் வீட்டிற்கு சென்ற இளைஞன் ஒருவனை கைது செய்ததுடன் , ஏனையவர்களை கைது செய்ய தீவிர நடவடிக்கையும் எடுத்து இருந்தனர். கைது செய்யப்பட்ட இளைஞனை மறுநாள் ஊர்காவற்துறை நீதிமன்றில் மாணவனின் தந்தையின் முறைப்பாட்டின் அடிப்படையில் முற்படுத்தினர். அதனை அடுத்து இளைஞனை நீதிமன்று விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது. மறுநாள் சட்டத்தரணி நகர்த்தல் பத்திரம் ஊடாக கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு எதிராக பொய்யான முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் , மாணவிகள் தொடர்பில் ரிக் ரொக் தளத்தில் பரப்பப்பட்ட தகவல் தொடர்பில் நியாயம் கேட்க சென்ற வேளை வாள் வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்டு , இளைஞன் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் விடயம் மன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு , விளக்கமறியலில் உள்ள இளைஞனுக்கு பிணை விண்ணப்பம் செய்யப்பட்டதை அடுத்து , பிணையில் இளைஞன் விடுவிக்கப்பட்டார். அதேவேளை , மாணவிகளின் புகைப்படத்தினை பயன்படுத்தி , மாணவி ஒருவரின் தாயின் தொலைபேசி இலக்கத்தை பதிவிட்டு , ரிக் ரொக் தளத்தில் தவறான தகவல்களை பரப்பிய சம்பவம் தொடர்பில் ஏன் பாதிக்கப்பட்ட தரப்பினர் ஊர்காவற்துறைகாவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யவில்லை என மன்று கோரிய வேளை , முறைப்பாடு அளிக்க சென்ற தம்மை மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரையில் காவல் நிலையத்தில் காவல் காக்க வைத்திருந்தும் முறைப்பாட்டை காவல்துறையினா் ஏற்காது , தவறான தகவல்களை பரப்பிய மாணவனின் தந்தையின் முறைப்பாட்டை மாத்திரமே பெற்றுக்கொண்டனர் என பாதிக்கப்பட்ட தரப்பினர் மன்றில் தெரிவித்தனர். அது தொடர்பில் சத்திய கடதாசி முடித்து தருமாறு பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு மன்று அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் , பாதிக்கப்பட்ட தரப்பினர் மீண்டும் முறைப்பாடு செய்ய சென்ற வேளை இது சைபர் க்ரைம் பிரிவில் முறையிட வேண்டும் என யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் உள்ள சைபர் க்ரைம் பிரிவினர் “ரிக் ரொக்” தளம் தொடர்பில் தாம் முறைப்பாட்டை ஏற்க மாட்டோம் என திருப்பி அனுப்பியுள்ளனர். இந்நிலையில் மீண்டும் ஊர்காவற்துறை காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினர் பெப்ரவரி மாதம் இறுதியில் முறைப்பாடு செய்த நிலையில் , காவல்துறையினா் சுமார் 20 நாட்களின் பின்னர் மாணவனையும் அவரது தந்தையும் கைது செய்து, தந்தையை மீது கூரிய ஆயுதங்களால் தாக்கினார் என்ற குற்றச்சாட்டின் கீழும் , மாணவனை சமூக ஊடகத்தில் அவதூறு ஏற்படுத்தினார் என குற்றச்சாட்டின் கீழும் இரு வேறு வழக்குகள் பதிவு செய்து நீதிமன்றில் முற்படுத்தினர். வழக்கினை விசாரித்த மன்று தந்தையை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன் , மாணவன் 18 வயதினை பூர்த்தி செய்யாதமையால் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் தடுத்து வைக்கவும் உத்தரவிட்டதுடன் வழக்கினை எதிர்வரும் 2ஆம் திகதிக்கு திகதியிட்டது. மாணவிகளின் புகைப்படங்களை தவறான நோக்குடன் பயன்படுத்தி சமூக வலைத்தளத்தில் அவதூறு தவறான தகவல்களை பகிர்ந்த மாணவனுக்கு எதிராகவும் , வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு நபர் ஒருவருக்கு கடும் காயங்களை ஏற்படுத்திய மாணவனின் தந்தைக்கும் எதிராக முறைப்பாடு பதிவு செய்து சுமார் 20 நாட்களின் பின்னர் அவர்களை காவல்துறையினா் கைது செய்துள்ளமையும் சந்தேகநபர்கள் முன்னர் செய்த முறைப்பாட்டிற்கு உடனடியாக கைது நடவடிக்கையையும் மேற்கொண்டமை காவல்துறையினருக்கும் அவர்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2026/230611/- இந்துக்களுக்கு பைபிள் வழங்க முயற்சித்தால் கொளுத்துவோம் - சிவ சேனை எச்சரிக்கை..
மாணவர்களுக்கு எத்தனையோ தேவைகள் இருக்கின்றன. தேவையான சமய நுhல்களைத்தவிர எனைய பாடங்களுக்கான நுhல்களக் கொடுக்கலாமே. அது ஏன் வடமாகாணத்தின் அனைத்துப்பாடசாலைகளுக்கும் கொடுக்க வேண்டும்.அங்குள்ள மக்கள் மதவெறிபிடித்து சண்டை போடுகிறார்களா?இலங்கை முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு கொடுக்க முடியுமா?எனது கிராமத்தில் சைவசமயத்தவர்களும் கிறிஸ்தவர்களும் நீண்ட காலமாக எந்தப் பிணக்குகளும் இல்லாமல் வாழுகிறார்கள்.சைவமக்கள் தங்கள் வீட்டுக்கருகில் கிறிஸ்தவப் பாடசாலைகள் இருந்தால் அங்குதான் சென்று கல்வி கற்கிறார்கள். அதே நேரம் கிறிஸ்தவ மக்கள் சைவப் பாடசாலைகளில் படிப்பது ஒப்பீட்டளவில் குறைவு. உயர்தரப்பாடசாலைகளில் இருசமயத்தவர்களும் படிக்கிறார்கள்.இல்லாத பிணக்கை ஏன் தேலையில்லாமல் உருவாக்குகிறார்கள்.- நான் சொன்னதை கேட்டிருந்தால் அழிவுகளும் இழப்புக்களும் ஏற்பட்டு இருக்காது – டக்ளஸ்
நான் சொன்னதை கேட்டிருந்தால் அழிவுகளும் இழப்புக்களும் ஏற்பட்டு இருக்காது – டக்ளஸ் adminMarch 18, 2026 கிடைத்த சந்தர்ப்பங்களில் எமது மக்களுக்கு பெற்றுக்கொடுத்த ஒவ்வொன்றையும் சேவையாக அல்லாது நான் கடமையாகவே முன்னெடுத்திருந்தேன். மாறாக அவற்றை ஒருபோதும் சுயநல அரசியலுக்காக முன்னெடுத்திருக்கவில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ் பல்கலைக் கழக ஜனநாயக ஊழியர் சங்கத்திற்கான புதிய நிர்வாகம் குறித்த தொழிற் சங்கத்தின் ஸ்தாபகரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தாவின் பிரசன்னத்துடன் இன்றைய தினம் யாழில் உள்ள தனியார் மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப போராளிகளில் ஒருவனாக இருந்தவன். போராட்டம் பலவீனப்பட்டு திசைதிரும்பிய போது இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு அதனூடாக13 ஆவது திருத்தச் சட்டத்தை உருவாக்கி மாகாண சபை முறைமையை கொண்டுவரப்பட்டது. போராட்டம் பலவீனமடைந்து போன நிலையில் உருவாக்கப்பட்ட இந்த மாகாணசபை முறைமைக்கு ஊடாகத்தான் நாம் எமது நகர்வுகளை முன்கொண்டு செல்ல வேண்டும் என அன்றிலிருந்து இன்றுவரை நான் வலியுறுத்தி வந்து கொண்டிருக்கின்றேன். ஆனால் எனது அந்தக் கருத்துக்கள் மக்கள் மத்தியில் முழுமையாகக் கொண்டு செல்லப்படாத நிலை காணப்பட்டது. மாறாக வன்முறையுடனான கருத்துக்களே வலுவாக முன்கொண்டு செல்லப்பட்டுருந்தது. ஆனால் நான் அன்று சொன்ன கருத்துக்கள் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலை காணப்படுகின்றது.இதை அன்றே ஏற்றுக்கொண்டிருந்தால் இத்தனை அழிவுகளும் இழப்புக்களும் உருவாகியிருந்திருக்காது என்பதுதான் எனது வலுவான கருத்து. இதேநேரம் நான் முன்வைத்திருந்த அரசியல் இலக்கு மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதாகும். இதுதான் சமஸ்டியும் கூட. இந்த கருத்துக்கு தென்னிலங்கையில் எந்த எதிர்ப்பும் கிடையாது. இதை அடைவதே எமது நோக்கமும் ஆகும்.வரலாற்று கற்பிதங்கள் மூலம் நான் கண்ட அனுவங்களின் ஊடாகவே அரசியல் கருத்துக்களை நான் திரும்பத் திரும்ப கூறி வருகின்றேன். ஆனால் இதை சிலர் எனது குறைபாடாக கருதலாம். ஆனால் அவ்வாறு கூறுவது, ஜதார்த்தமான நடைமுறைச் சாத்தியமான விடையங்கள் மக்களிடம் ஆழமாகப் பதிந்து செயலுருவம் பெறவேண்டும் என்பதற்காகவே என மேலும் தெரிவித்தார். https://globaltamilnews.net/2026/230647/- இந்துக்களுக்கு பைபிள் வழங்க முயற்சித்தால் கொளுத்துவோம் - சிவ சேனை எச்சரிக்கை..
வடக்கில் பாடசாலை மாணவர்களுக்கான பைபிள் விநியோக சர்ச்சைகளுக்கு ஆளுநர் முற்றுப்புள்ளி 19 Mar, 2026 | 10:40 AM வடக்கு மாகாணப் பாடசாலைகளில் மாணவர்களுக்கு பைபிள் விநியோகிக்கப்படவுள்ளது தொடர்பில் அண்மைய நாட்களாக எழுந்துள்ள சர்ச்சைகள் மற்றும் கரிசனைகளைக் கருத்திற்கொண்டு, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இவ்விடயத்தில் விசேட கவனம் செலுத்தியுள்ளார். இது தொடர்பில் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் வை.ஜெயசந்திரனுக்கு ஆளுநர் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். வெளிநாட்டுத் தொண்டு நிறுவனமொன்றால் பாடசாலை மாணவர்களுக்கு பைபிள் வழங்குவது தொடர்பில் மாகாணக் கல்வித் திணைக்களத்தால் ஆரம்பத்தில் வழங்கப்பட்ட அனுமதி கடிதம் தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டது. குறித்த அமைப்பு தமக்குரிய கிறிஸ்தவ மாணவர்களுக்கு மாத்திரம் வழங்குவதற்கே அனுமதி கோரியிருந்த போதிலும், கல்வித் திணைக்களத்தின் ஆரம்பக் கடிதத்தின் வாசகங்கள் அனைத்து மாணவர்களுக்கும் விநியோகிக்கப்படவுள்ளதாக புரிந்துகொள்ளப்பட்டு சர்ச்சைகள் எழுந்தன. இதனையடுத்து, குறித்த விநியோகமானது ரோமன் கத்தோலிக்கர் அல்லாத கிறிஸ்தவ மாணவர்களுக்கு மாத்திரமே என மாகாண மேலதிகக் கல்விப் பணிப்பாளரால் திருத்தப்பட்ட கடிதம் ஒன்றின் மூலம் பின்னர் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், இவ்விடயம் தொடர்பிலான சர்ச்சைகள் தொடரும் நிலையில், பாடசாலைக் கட்டமைப்புக்குள் மத நல்லிணக்கத்தைப் பேணுவதும், தேவையற்ற குழப்பங்களைத் தவிர்ப்பதும் மிகவும் அவசியமானது என்பதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர், இதற்கான உரிய ஒழுங்குவிதிகளை நடைமுறைப்படுத்துமாறு மாகாணக் கல்விப் பணிப்பாளருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். இதற்கமைவாக, பாடசாலைகளுக்குள் வெளிநபர்களோ அல்லது அமைப்புகளோ நேரடியாகச் சென்று மத நூல்களை விநியோகிக்கும் நடைமுறை முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும் என ஆளுநர் பணித்துள்ளார். மேற்படி பைபிள்களை விநியோகிக்க விரும்பும் குறித்த நிறுவனம், அவற்றை வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்திடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் நூல்களை, கிறிஸ்தவ பாடத்துக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ், அந்த நூல் அவசியமான மற்றும் அப் பாடத்தைக் கற்கும் மாணவர்களுக்கு மாத்திரம் வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஆளுநர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்த முறையான நிர்வாக நடைமுறையின் ஊடாக, பாடசாலைகளில் சகல மத மாணவர்களிடையேயும் நல்லிணக்கம் பாதுகாக்கப்படுவதுடன், தேவையற்ற முரண்பாடுகள் தவிர்க்கப்படும் என நம்புவதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/241336- இந்துக்களுக்கு பைபிள் வழங்க முயற்சித்தால் கொளுத்துவோம் - சிவ சேனை எச்சரிக்கை..
வடமாகாணப் பாடசாலைகளில் பைபிள் விநியோகம் – ஆளுநர் நடவடிக்கை adminMarch 19, 2026 வடக்கு மாகாணப் பாடசாலைகளில் மாணவர்களுக்கு பைபிள் விநியோகிப்பது தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சைகளைத் தொடர்ந்து, ஆளுநர் நா. வேதநாயகன் முக்கியமான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அது குறித்து ஆளுநர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பாடசாலைகளுக்குள் வெளிநபர்கள் அல்லது அமைப்புகள் நேரடியாகச் சென்று மத நூல்கள் விநியோகிப்பது முற்றிலும் தடை செய்யப்படுகிறது. பைபிள் வழங்க விரும்பும் அமைப்புகள், அதை நேரடியாக மாணவர்களுக்கு வழங்காமல் மாகாணக் கல்வித் திணைக்களத்திடம் ஒப்படைக்க வேண்டும். பின்னர்: அந்த நூல்கள் கிறிஸ்தவ பாடம் கற்கும் மாணவர்களுக்கு மட்டும்அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ்வழங்கப்பட வேண்டும் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் வை.ஜெயசந்திரனுக்கு ஆளுநர் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். வெளிநாட்டுத் தொண்டு நிறுவனமொன்றால் பாடசாலை மாணவர்களுக்கு பைபிள் வழங்குவது தொடர்பில் மாகாணக் கல்வித் திணைக்களத்தால் ஆரம்பத்தில் வழங்கப்பட்ட அனுமதி கடிதம் தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டது. குறித்த அமைப்பு தமக்குரிய கிறிஸ்தவ மாணவர்களுக்கு மாத்திரம் வழங்குவதற்கே அனுமதி கோரியிருந்த போதிலும், கல்வித் திணைக்களத்தின் ஆரம்பக் கடிதத்தின் வாசகங்கள் அனைத்து மாணவர்களுக்கும் விநியோகிக்கப்படவுள்ளதாக புரிந்துகொள்ளப்பட்டு சர்ச்சைகள் எழுந்தன. இதனையடுத்து, குறித்த விநியோகமானது ரோமன் கத்தோலிக்கர் அல்லாத கிறிஸ்தவ மாணவர்களுக்கு மாத்திரமே என மாகாண மேலதிகக் கல்விப் பணிப்பாளரால் திருத்தப்பட்ட கடிதம் ஒன்றின் மூலம் பின்னர் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், இவ்விடயம் தொடர்பிலான சர்ச்சைகள் தொடரும் நிலையில், பாடசாலைக் கட்டமைப்புக்குள் மத நல்லிணக்கத்தைப் பேணுவதும், தேவையற்ற குழப்பங்களைத் தவிர்ப்பதும் மிகவும் அவசியமானது என்பதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர், இதற்கான உரிய ஒழுங்குவிதிகளை நடைமுறைப்படுத்துமாறு மாகாணக் கல்விப் பணிப்பாளருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். இதற்கமைவாக, பாடசாலைகளுக்குள் வெளிநபர்களோ அல்லது அமைப்புகளோ நேரடியாகச் சென்று மத நூல்களை விநியோகிக்கும் நடைமுறை முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும் என ஆளுநர் பணித்துள்ளார். மேற்படி பைபிள்களை விநியோகிக்க விரும்பும் குறித்த நிறுவனம், அவற்றை வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்திடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் நூல்களை, கிறிஸ்தவ பாடத்துக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ், அந்த நூல் அவசியமான மற்றும் அப் பாடத்தைக் கற்கும் மாணவர்களுக்கு மாத்திரம் வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஆளுநர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்த முறையான நிர்வாக நடைமுறையின் ஊடாக, பாடசாலைகளில் சகல மத மாணவர்களிடையேயும் நல்லிணக்கம் பாதுகாக்கப்படுவதுடன், தேவையற்ற முரண்பாடுகள் தவிர்க்கப்படும் என நம்புவதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தத்தில், இந்த நடவடிக்கை பள்ளி சூழலில் மத சார்ந்த விஷயங்கள் கட்டுப்பாட்டுடனும் சமநிலையுடனும் நடத்தப்பட வேண்டும் என்பதைக் குறிக்கிறது. https://globaltamilnews.net/2026/230657/- இரானின் போர் பதிலடியை முன்னெடுத்த லரிஜானி மரணம் - இனி என்ன நடக்கும்?
இரானின் போர் பதிலடியை முன்னெடுத்த லரிஜானி மரணம் - இனி என்ன நடக்கும்? பட மூலாதாரம்,Anadolu via Getty Images படக்குறிப்பு, இரான் நாட்டின் மிகவும் செல்வாக்கு மிக்க அரசியல் பிரமுகர்களில் ஒருவராக லரிஜானி நீண்டகாலமாகக் கருதப்படுகிறார். கட்டுரை தகவல் அமீர் அசிமி பிபிசி பாரசீக சேவை 18 மார்ச் 2026 வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில், இரானிய பாதுகாப்பு தலைவர் அலி லரிஜானி கொல்லப்பட்டார். ஒரு முக்கியமான தருணத்தில் இஸ்லாமிய குடியரசின் மிகவும் அனுபவம் வாய்ந்த செல்வாக்கு மிக்க கொள்கை வகுப்பாளர்களில் ஒருவரை இஸ்ரேல் கொன்றுள்ளது. லரிஜானி ஒரு ராணுவத் தளபதி அல்ல, ஆனால் அவர் இரானிய அரசின் உத்தி ரீதியான முடிவுகளை வடிவமைப்பதில் ஒரு மையமான நபராக இருந்தார். தேசிய பாதுகாப்பு உயர் கவுன்சிலின் செயலாளராக போர், ராஜதந்திரம் மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்த முடிவெடுக்கும் மையத்தில் அவர் அமர்ந்திருந்தார். அவரது குரல் இந்த அமைப்பு முழுவதும், குறிப்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான இரானிய அரசின் மோதலை நிர்வகிப்பதில் அதிக மதிப்பைக் கொண்டிருந்தது. பட மூலாதாரம்,Getty Images பிப்ரவரி 28 அன்று அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி கொல்லப்பட்ட பிறகு, லரிஜானி எதிர்ப்பு தொனியை வெளிப்படுத்தினார். இரான் ஒரு நீண்ட மோதலுக்குத் தயாராக இருப்பதாக குறிப்பால் உணர்த்தினார். அவரது மரணம், ஒரு சில வாரங்களுக்குள் பல மூத்த இரானிய அதிகாரிகள் மற்றும் தளபதிகள் கொல்லப்பட்ட ஒரு விரிவான தாக்குதல் நடவடிக்கைக்கு மத்தியில் நிகழ்ந்துள்ளது. இந்த முறைமை, போர்க்காலத்தில் இரானிய அரசுத் தலைமை அமைப்பை பலவீனப்படுத்தும் ஒரு தொடர்ச்சியான முயற்சியைக் காட்டுகிறது. மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த போதிலும், லரிஜானி பெரும்பாலும் இரான் நாட்டிற்குள் ஒரு யதார்த்தவாதியாக விவரிக்கப்பட்டார். அவர் சித்தாந்த விசுவாசத்தை ஒரு நடைமுறை ரீதியான அணுகுமுறையுடன் இணைத்தார். பேச்சு மூலம் தாக்கத்தை ஏற்படுத்துவதை விட கணக்கிடப்பட்ட உத்திகளுக்கு முன்னுரிமை அளித்தார். மேற்கத்திய சக்திகளுடனான பேச்சுவார்த்தைகளில் அவர் மிகுந்த சந்தேகத்துடனேயே இருந்தார், ஆனால் சீனாவுடனான இரானிய அரசின் நீண்டகால ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் ஒரு தூதராகச் செயல்படுவது உட்பட, முக்கிய ராஜ்ஜீய முயற்சிகளிலும் அவர் ஈடுபட்டிருந்தார். பட மூலாதாரம்,Anadolu via Getty Images படக்குறிப்பு,அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களின் முதல் சுற்றில் கொல்லப்பட்ட இரானிய முன்னாள் அதி உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயி உடன் லரிஜானி (இடமிருந்து நான்காவது) இருக்கும் படம். மூன்று முக்கிய பொறுப்பு அவரது மரணம் குறித்த செய்தி வந்த நேரத்தில், லரிஜானி மூன்று முக்கிய நெருக்கடிகளை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்தார். போர்தான் அதில் முதலாவது நெருக்கடி. இரான் ஒரு நீண்ட போராட்டத்திற்குத் தயாராக வேண்டும் என்றும், ஹோர்மூஸ் நீரிணையை மூடுவது உட்பட, பிராந்தியம் முழுவதும் மற்றும் அதற்கு அப்பாலும் போரை விரிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் வாதிட்டார். இரண்டாவது, உள்நாட்டு அமைதியின்மை ஆகும். இது பொருளாதார பிரச்னைகளுடன் தொடங்கியது. ஆனால் விரைவில் இஸ்லாமியக் குடியரசை வீழ்த்துவதை நோக்கமாகக் கொண்ட பரந்த போராட்டங்களாக மாறியது. இவை நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களைக் கொன்ற ஒடுக்குமுறையைச் சந்தித்தன. மூன்றாவது, இரானிய அரசின் அணுசக்தித் திட்டம் மற்றும் முடங்கிப்போயுள்ள அமெரிக்காவுடனான மறைமுக பேச்சுவார்த்தைகள் ஆகும். இவை இரண்டுமே ராணுவத் தாக்குதல்களால் ஏற்கெனவே சீர்குலைக்கப்பட்டிருந்தன. அவர் கொல்லப்பட்டது இந்த விவகாரங்களைத் தீர்க்கப்படாமல் விட்டுள்ளதுடன், மிகவும் பலவீனமான சூழ்நிலையை எதிர்கொள்ளும் இன்னும் அறியப்படாத ஓர் அடுத்த தலைமைக்கு இவற்றை மாற்றுகிறது. உலகளாவிய எரிசக்தி சந்தைகளைச் சீர்குலைப்பதன் மூலம் இரான் ஓரளவு மீண்டு வரும் தன்மையைக் காட்டினாலும், அது தொடர்ச்சியான வான் தாக்குதல்களை எதிர்கொண்டு வருகிறது. எந்தவொரு புதிய மூத்த பிரமுகரும் உடனடியாக இலக்கு வைக்கப்படும் அபாயத்தை எதிர்கொள்வார். பட மூலாதாரம்,Getty Images எதை நோக்கி செல்லும்? இது அதிகாரத்தை ராணுவத்தை நோக்கி மேலும் நகர்த்தக்கூடும். அதிபர் மசூத் பெசெஷ்கியனின் சமீபத்திய கருத்துக்கள், மூத்த தலைமைச் செயலிழந்தால் நடவடிக்கை எடுப்பதற்கான விரிவான அதிகாரம் ஆயுதப்படைப் பிரிவுகளுக்குத் தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளதை உணர்த்துகின்றன. நடைமுறையில், இது முடிவுகள் விரைவாக எடுக்கப்படுவதைக் குறிக்கலாம், ஆனால் குறைந்த மத்திய ஒருங்கிணைப்புடன் இருக்கும். அடுத்த தலைமைகளை தேர்ந்தெடுத்து நிர்வகிப்பதில் தலைமை சிரமப்படுவதற்கான அறிகுறிகளும் உள்ளன. இரானிய அரசு பொது அறிவிப்புகளைத் தாமதப்படுத்தியுள்ளதுடன், புதிய அதி உயர் தலைவர் மொஜ்தபா காமனெயி உள்ளிட்ட சில பிரமுகர்களைப் பெரும்பாலும் வெளி உலக கண்ணில் படாமல் வைத்துள்ளது. இது பாதுகாப்பு காரணங்களுக்காகவா அல்லது உள் நிச்சயமற்ற தன்மையாலா என்பது தெளிவாகத் தெரியவில்லை. குறுகிய காலத்தில், இதன் விளைவு மிகவும் நிலையற்ற ஒரு சூழ்நிலையாக இருக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக போரில் கடினமான ராணுவ நிலைப்பாடு மற்றும் உள்நாட்டில் கடுமையான ஒடுக்குமுறை போன்றவற்றுக்கு வழிவகுக்கலாம் இருப்பினும், காலப்போக்கில், மூத்த தலைவர்களைத் தொடர்ந்து இழந்து வரும் ஓர் அமைப்பு, குறிப்பாக 90 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்ட ஒரு நாட்டில், திறம்படச் செயல்படுவது கடினமாக இருக்கும். லரிஜானியின் மரணம் ஒரு தனி தலைவரின் இழப்பு மட்டுமல்ல. இது போரின் போக்கு மற்றும் இரானிய அரசின் நிலைத்தன்மை ஆகிய இரண்டையுமே பாதிக்கக்கூடிய ஒரு தலைமைத்துவ நெருக்கடியை தீவிரப்படுத்தும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvg8gv84yklo- அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்!
வலுசக்தி அமைச்சருக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்படும்! Published By: Digital Desk 1 19 Mar, 2026 | 07:42 AM (எம்.மனோசித்ரா) வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களினால் கையெழுத்திடப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று வியாழக்கிழமை சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட 17 எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திட்டுள்ளனர். நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின்நிலையத்திற்குத் தேவையான போதுமான மற்றும் தரமான நிலக்கரியைப் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தும் தனது முதன்மைக் கடமையை வலுசக்தி அமைச்சர் நிறைவேற்றத் தவறியுள்ளதாகவும், ஒரு முக்கியமான தேசிய வலுசக்தி சொத்தை மேற்பார்வை செய்வதில் இத்தகைய பாரதூரமான அலட்சியம் காட்டியிருப்பது ஒரு அமைச்சரின் அடிப்படைப் பொறுப்பை மீறும் செயலாகும் என்றும் அந்தப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இலங்கை உரக் கூட்டுத்தாபனத்தின் கொள்வனவு முகாமையாளராக பணியாற்றிய காலத்தில் ஊழல் புரிந்தமைக்காக, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இலஞ்ச சட்டத்தின் 70ஆவது பிரிவின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அமைச்சருக்கு எதிராக உத்தியோகபூர்வமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதையும் அவர்கள் அதில் சுட்டிக்காட்டியுள்ளனர். https://www.virakesari.lk/article/241325- ஈரானுக்கு எதிரான போர் - அமெரிக்காவுக்கு ஏற்பட்ட செலவு
ஈரான் போர்: 200 பில்லியன் டொலர் நிதியை கோருகிறது பென்டகன் Mar 19, 2026 - 10:33 AM ஈரான் உடனான போர்ச் சூழலை எதிர்கொள்வதற்காக 200 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான நிதியை அங்கீகரிக்குமாறு அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் வெள்ளை மாளிகையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வொஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையை மேற்கொள் காட்டி நிர்வாகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், இந்தத் தொகையானது ட்ரம்ப் நிர்வாகம் இதுவரை முன்னெடுத்த இராணுவ நடவடிக்கைகளுக்காக செலவிடப்பட்ட தொகையை விட அதிகமானது எனக் குறிப்பிட்டுள்ளார். தற்போது போருக்காகப் பயன்படுத்தப்படும் தீர்மானமிக்க ஆயுதங்களின் உற்பத்தியை உடனடியாக அதிகரிப்பதே இந்த நிதி கோரிக்கையின் முக்கிய நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வார காலப்பகுதியில் பென்டகன் பல்வேறு நிதி ஒதுக்கீட்டு கோரிக்கைகளை முன்வைத்துள்ள நிலையில், இந்த புதிய கோரிக்கையானது அமெரிக்க காங்கிரஸில் கடும் அரசியல் நெருக்கடியை உருவாக்கும் என வொஷிங்டன் போஸ்ட் சுட்டிக்காட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. https://adaderanatamil.lk/news/cmmx01rwj000c356pfmduxs6h- நாட்டில் வேகமாக பரவும் காசநோய்! கொழும்பு, கம்பஹா, களுத்துறையில் அதிகளவானோர் அடையாளம்!
இலங்கையில் வருடாந்தம் 9,500 வரை காசநோயாளிகள் அடையாளம் Mar 19, 2026 - 10:13 AM இலங்கையில் வருடாந்தம் 8,500 முதல் 9,500 வரையான காசநோயாளிகள் பதிவாவதாக காசநோய் மற்றும் மார்பு நோய் தடுப்பிற்கான தேசிய திட்டம் தெரிவித்துள்ளது. இவர்களில் சுமார் 45 சதவீதமானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என சமூக சுகாதார விசேட நிபுணர் மிசாயா காதர் தெரிவித்துள்ளார். மார்ச் 24 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள உலக காசநோய் தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்: "உலக சனத்தொகையில் நான்கில் ஒரு பங்கினர் காசநோய்த்தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இலங்கையில் கடந்த 25 ஆண்டுகளாக வருடாந்தம் பதிவாகும் நோயாளிகளின் எண்ணிக்கையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. கடந்த ஆண்டில் 8,726 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் 93% பேர் முதன்முறையாக நோய் பாதிப்புக்குள்ளானவர்கள். இவர்களில் 75% பேருக்கு நுரையீரலில் காசநோய் ஏற்பட்டுள்ளதுடன், சுமார் 5,500 பேர் மற்றவர்களுக்கு நோயைப் பரப்பக்கூடிய நிலையில் உள்ளனர். புவியியல் ரீதியாக மோதரை, மட்டக்குளி, பொரள்ளை, வனாத்தமுல்ல மற்றும் கிராண்ட்பாஸ் ஆகிய பகுதிகள் அதிக அவதானம் மிக்க இடங்களாகக் காணப்படுகின்றன." இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட காசநோய் தடுப்பு மற்றும் மார்பு நோய் தேசிய திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் பிரமிதா சாந்திலதா கருத்து தெரிவிக்கையில்: "காசநோய் முக்கியமாக சுவாசப் பாதை வழியாகவே பரவுகிறது. நோயாளி ஒருவர் இருமும்போது, தும்மும்போது அல்லது பலமாக சிரிக்கும்போது வெளியேறும் பக்டீரியாக்கள் மூலம் மற்றவர்களுக்கு இந்நோய் பரவுகிறது. இது நுரையீரலைப் பாதித்து, பின்னர் உடலின் ஏனைய பாகங்களுக்கும் பரவக்கூடும். நோய் தீவிரமடைவதற்கு முன்னரே நோயாளிகளைக் கண்டறிவதன் மூலம் இதனைக் கட்டுப்படுத்த முடியும்." https://adaderanatamil.lk/news/cmmwzhcin000a356pa731yd8d - வீதியோரம்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.